அசுரன் 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

அத்தியாயம் 22

 

சரி செய்ய வேண்டிய காலத்தில் எதையும் சரி செய்யாமல் இப்பொழுது வந்து நான் அப்படி இருந்து விட்டேன்... இப்படி இருந்து விட்டேன்.. என் வளர்ப்பு அப்படி.. என் குடும்பம் இப்படி.. என்று அழுது புலம்பினால் போனதெல்லாம் சரியாகுமா? இல்லை மாண்டவர் தான் திரும்பி வர முடியுமா? என்று வள்ளியம்மை பேசு பேச அத்தனை கோபம் முகிழ்த்தது அவனுக்குள். 

 

கூடவே கிரிதரனும் “பெரியம்மா ரொம்ப பாவம் தம்பி.. அண்ணனை பிரிஞ்சு எப்படி எல்லாம் வருத்தப்பட்டாங்க தெரியுமா?” என்று அவரும் தன் பங்குக்கு வள்ளியம்மை மகனைப் பிரிந்து கஷ்டப்பட்டதையும், அதற்குப்பின் குலதெய்வ கோயிலுக்கு அவர் இதுவரை செல்லாததையும் குறிப்பிட்டு கூறினார்.

 

ரூபிணியும் ராவண்னின் முகம் கோபமாக இருப்பதை பார்த்து “கோபப்படாத தம்பி..! இப்போ உள்ள பெண்களுக்கு உள்ள சுதந்திரம்.. அது எதுவுமே அப்பெல்லாம் கிடையாது. கட்டுப்பட்டி தனம் தெரிஞ்சாலும் நாங்க கட்டுப்பட்டு தான் இருக்கோம். இவங்க கிட்ட முறுக்கிக்கிட்டு நாங்க எங்க போறது சொல்லு? பொறந்த வீட்டுல எங்களை யாரும் சேர்த்துக்க மாட்டாங்க.. அப்போ இவங்களை அனுசரிச்சு தான் செல்ல வேண்டிய நிலைமை எங்களுக்கு” என்று தங்கள் நிலைமையை புரிய வைத்துவிடும் நோக்கில் அவரும் பேச..

 

இப்படி மாறி மாறி அனைவரும் குடும்ப சூழ்நிலை வளர்ப்பு அதை மீற முடியாத தன்மை என்று திரும்ப திரும்ப பேச பேச.. ராவண்னுக்கு கோபம் அதிகமாக வந்தது.

 

“இவர்கள் எல்லாம் மனிதர்களா? இவர்களுக்கு எல்லாம் உணர்ச்சிகளே கிடையாதா? அப்படி எல்லாத்தையும் முடக்கி போட்டு விடும் குடும்ப பாரம்பரியம் தேவையா? தேவையா??” என்று அவர்களைப் பிடித்து உலுக்கும் ஆவேசம் வந்தது. 

 

ஓரளவு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால் ஆருஷியும் அவன் கையைப் பிடித்து “ஆச்சி பாவம்.. அழுவுறாங்க பாரு.. ஏதாவது பேசேன்” என்று சிறு குரலில் கூற,

 

அவனுள் அடக்கி வைத்திருந்த ஆவேசமெல்லாம் அணைத்தாண்டிய வெள்ளமாய் வெடித்து கிளம்பியது.

 

“என்ன பேசணும்? இவங்களுக்கு சமாதானம் சொல்லனுமா? பெரிய வளர்ப்பு.. பெரிய குடும்ப கவுரவம்..! ஜஸ்ட் யூஸ்லெஸ்.. பிள்ளையோட உசுருக்கு முன்னாடி இதெல்லாம் உங்களுக்கு பெருசா?” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிவர ராவண் அந்த வீடே அதிர கத்தினான்.

 

“என்ன?? என்ன? புள்ள உசுரா? என் பிள்ளைக்கு என்ன ஆச்சு? என் புள்ள உசுருக்கு என்ன பிரச்சனை?” என்று வள்ளியம்மை ஆவேசத்தோடு அவன் சட்டை காலரைப் பற்றி உலுக்க‌‌..

 

கையில் கிடைத்திருந்த மாணிக்கத்தை தொலைத்துவிட்டு இப்பொழுது வந்து என் பிள்ளை என் பிள்ளை என்று உரிமை கொண்டாடும் இவர்களை பார்த்து வெறுப்பு வந்தது அவனுக்கு. 

 

உரிய நேரத்தில் கிடைக்காத எதுவும் அதன் பின் கிடைத்தால் என்ன? கிடைக்காமல் போனால் தான்? என்ன அது உயிர் காக்கும் மருந்தாகட்டும்.. இல்லை உயிர் உருக வைக்கும் பாசமாக இருக்கட்டும்.. உயிரையே பிழிந்து எடுக்கட்டும் காதலாக தான் இருக்கட்டும்..! 

 

நேரம் தவறிய பின் கிடைக்கும் எதற்குமே மதிப்பு இல்லை..!

 

அவரின் கைகளை தனது சட்டை காலரிலிருந்து மெதுவாக பிரித்து எடுத்தவன், விரத்தியான சிரிப்போடு அவரைப் பார்த்து “என் அப்பா சிவேந்திரன் இப்பொழுது உயிரோடு இல்ல.. அவர் கடைசி காலத்துல கடைசியா ஒரு தடவையாவது உங்களையெல்லாம் பார்க்க விருப்பப்பட்டார். அவருக்கு தெரிஞ்சவங்க மூலமா உங்களுக்கு எத்தனையோ தடவை பாக்கணும்னு ஆள் அனுப்பினாரு.. பேச முயற்சித்தாரு.. ஆனா நீங்க‌. ம்ப்ச்..! அந்த டயத்துல உங்க புருஷனுக்கு பின்னால பதுங்கிட்டீங்க. இப்போ வந்து புள்ள எங்க? என் பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு கேக்குறீங்க? ரெடிக்குலஸ்..!” என்று அவனின் பேச்சில்…

 

“அப்போ என் புள்ள இப்ப உயிரோட இல்லையா? என் சிவா உயிரோட இல்லையா?” என்று கண்கள் சொருக மயங்கி சரிந்தார் வள்ளியம்மை..

 

“ஆச்சி..!”

 

“அத்த..!”

 

“பெரியம்மா..!”  பதறி அவரை பிடிக்கும் முன் கைகளில் அவரை தாங்கி இருந்தான் ராவண். 

 

அவனுக்குமே இன்னும் சில விஷயங்கள் புரியவில்லை. அப்படி என்ன பெரிய குடும்ப பண்பாடு பாரம்பரியம்? பிள்ளையோட மகிழ்ச்சியை காட்டிலும்.. அவர்களுடைய நலத்தை காட்டிலும்.. என்று கடுப்பாக இருந்தாலும் கருணைக் கொண்டே அவரை கைதாங்கி இருந்தான்.

 

அவரை உள்ளறையில் படுக்க வைக்க.. “மாமா டாக்டர் போன் பண்ணு” என்று அவசரமாக சுக்ரேஷிடம் கூறினாள் ஆருஷி. 

 

இப்பொழுது அனைவருமே ஆருஷியை ஒரு மாதிரியாக பார்த்து  வைக்க.. அப்பொழுதுதான் ராவண் மருத்துவன் என்பது அவள் ஞாபகத்திற்கு வர..  நாக்கை கடித்துக் கொண்டாள் அவன் அறியாமல்..!

 

“நீங்கதான் எங்க ஆச்சி மேல கோவமா இருந்தீங்களே. நீங்க மருத்துவம் பாப்பீங்களா என்னவோ? அதுதான் வேற டாக்டர் வர சொன்னேன்.. நீங்களே ஆச்சிக்கு என்னன்னு பாக்குறீங்களா?” முகத்தை வருத்தமாக வைத்து கேட்டவளை கண்டு இருபுறமும் தலையாட்டியவன்,  அவர் நாடி பிடித்து பார்த்து 

 

“வெறும் அதிர்ச்சி மயக்கம் தான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தாங்கன்னா சரியா போயிடும்.. வேறு எதுனா எனக்கு கால் பண்ணு” என்றவன் ஏற்கனவே அவன் சென்னையில் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று விட்டான் 

 

“நீயும் போய் உன் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு பாப்பா” என்று ரூபிணி ஆருஷியை அனுப்பி வைக்க..

 

“சரிப்பா.. நானும் நம்ம கடைக்கு போயிட்டு வரேன்” என்றவனை நிறுத்திய கிரிதரன்,

 

“கொஞ்சம் பேசணும் உன்கிட்ட” என்றவர் “ஏன் ஆருஷி மும்பைக்கு சென்றால் என்ன காரணம்?” என்று அனைத்தையும் கேட்டார். 

 

அதற்குப்பின் ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் கூறினான் சுக்ரேஷ்.

 

“ஆக மொத்தம்.. இவ வெளிநாட்டு படிப்புக்கு போல அங்க போய் இவர தான் லவ் பண்ணிட்டு சுத்திட்டு இருந்து இருக்கா. ஏதோ பிரச்சினையில இவ இங்க வந்து இருக்கா.. பின்னாடி அவரும் வந்துட்டாரு.. ஆனா இந்த கர்ப்பம் குழந்தை.. அதை மறைக்குறது இதெல்லாம் ரொம்ப ஈஸியா போச்சு இல்ல உங்களுக்கு? இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணா வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதெல்லாம்..” என்று சுக்ரோஷை பார்த்து கேள்வி மேல் கேட்ட தந்தையை கண்டு நொந்து போனான் அவன்.

 

“அப்பா.. இதுல நான் என்ன பண்றது? இவ என்கிட்ட லவ் பண்ணும் போதெல்லாம் எதுவுமே சொல்லல.. இங்க வந்ததுக்கு அப்புறம் எதுவும் சொல்லல.. திடீர்னு ஒரு நாள் இந்த மாதிரி நான் பிரக்னண்டா இருக்கேன். நான் இங்க இருக்க கூடாது. என்னை எங்கயாவது கூட்டிட்டு போன்னு அவ்வளோ அழுதா.. நான் முடியாது உங்க கிட்ட விஷயத்தை சொல்லணும் சொன்னா.. உங்க யாரு கண்ணமே படாமல் எங்கேயாவது போயிடுவேன்னு சொல்லி என்னை மிரட்டுனா.. நம்ம யாருக்குமே தெரியாம அவ எங்கேயாவது போய் கஷ்டப்படுவதை விட அட்லீஸ்ட் எனக்கு தெரிஞ்சு இடத்துல என்னோட பாதுகாப்புல ஆரு இருக்கிறது நல்லதுன்னு எனக்கு தோணுச்சு. அதனாலதான் அவ பிரண்டு மூலமா தங்க போறன போது அவளுக்கு நான் எல்லா ஹெல்ப்பும் பண்ணேன். இதுல என்ன தப்பு இருக்கு?” என்று அவனும் சற்று காரசாரமாகவே பேசினான். 

 

ஏனென்றால் தப்பு செய்தவள் அவள்..! அந்த தப்புக்கு காரணமானவன் ராவண்..! அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு ஏதோ அணில் போல சிறு உதவியை செய்த என்னை பிடித்து இந்த குடும்பமே இப்படி கேள்வி கேட்டு வதைக்கிறதே என்று அவன் கோபம் அவனுக்கு. 

 

“சரி சரி நீ போயிட்டு சீக்கிரம் வா” என்று கடைக்கு அனுப்பி வைத்தார் அவனை…

 

அவனுக்கும் இன்றைய நாள் மிக பெரிதாக அலச்சலாக அதிர்ச்சியாக இருந்தது தான். இந்த அதிர்ச்சி எல்லாம் ஜீரணிக்க சிறிது நேரம் இளைப்பாரி, அதன்பின் அவர்களது பாத்திரக்கடையை கவனிக்க சென்றால் நல்லா இருக்கும் என்றுதான் தோன்றியது சுக்ரேஷூக்கு.

 

ஆனால் இங்கு இருந்தால் ஏதாவது பிரச்சனை என்றால் தன்னை தான் நோண்டி நொங்கு எடுப்பார்கள் என்பதை புரிந்து கொண்டவன் “இவங்க கிட்ட இருக்குறதுக்கு நான் கடையிலேயே போய் நிம்மதியா இருப்பேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்று சென்று விட்டான். 

 

“ரூபி மனசே சரியில்ல.. கொஞ்சம் படுக்கிறேன். நீ கொஞ்சம் பெரியம்மா கூட இருந்துக்கோ” என்ற கிரிதரன், ஒரு முறை அழகப்பன் இருக்கும் அறை சென்று பார்த்தார். அவரும் மருந்து வீரியத்தால்  நன்கு உறங்கிக் கொண்டிருக்க.. இங்கு நடந்த எந்த கலேபுரமும் அவருக்கு தெரியவில்லை. 

 

சிறிது நேரம் பெரியப்பாவையை பார்த்துக் கொண்டிருந்தவர் “நீங்க கொஞ்சம் அமைதியா இருந்திருக்கலாம் பெரியப்பா. கொஞ்சம் புள்ளைங்களையும் யோசித்து இருக்கலாம்.. இன்னைக்கு எல்லாரும் ஒரே குடும்பமாக சந்தோஷமா இங்க இருந்திருப்போம்” என்று பெருமூச்சு விட்டவர் தன்னறைக்கு சென்று விட்டார். 

 

இரவு போல கண் விழித்த வள்ளியம்மையோ “எங்க என் பேரன்? அவன் பெயர் என்ன ஏதோ சொன்னானே.. திரேந்திரன் என்னவோ சொன்னானே? ஏய் ரூபி அவன் பேரு என்ன சொன்னான்?” என்று ரூபிணியை போட்டு உலுக்க..

 

அவருக்குமே ராவண் சொன்ன பேர் அப்பொழுது சரியாக ஞாபகத்தில் பதியவில்லை. “அத்த.. இருங்க த்தை நான் கேட்டு சொல்றேன்” என்றதும்,

 

“நீ என்ன கேட்கிறது? நானே போய் கேட்டுக்குறேன். எங்க என் பேரன் எந்த ரூம்ல தங்கி இருக்கான்? அவங்க அப்பா ரூம்மையா அவனுக்கு கொடுத்த.. இல்ல இல்ல புள்ளைக்கு அவங்க அப்பா ஞாபகம் வந்துவிடும். நீ வேற ரூமு கொடு இல்ல இல்ல.. ஆருஷி கூட தங்கிட்டும்” என்று ஏதேதோ அவர் பிணாத்திக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவர்,

 

அங்கிருந்த ஹாலில் நின்று கொண்டு கண்களால் துலாவி துலாவி பேரனை தேடினான். 

 

சோபாவில் அமர்ந்து சுக்ரேஷூம் ஆருஷியும் பேசிக் கொண்டிருந்தவர்கள், வள்ளியம்மை கண்டு விட்டு “ஆச்சி என்ன ஆச்சு?” என்றுகேட்க..

 

“என் பேரன் எங்கடா? அவன வரச் சொல்லு.‌.. அவன வரச் சொல்லு” என்று அதையே கூறிக் கொண்டிருந்தார்.

 

அச்சோ என்று ஆனது அவளுக்கு. 

 

“நான் செல்கிறேன்” என்ற போது கூட இவள் அமைதியாக இருந்துவிட அவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சென்று விட்டான்.

 

இப்பொழுது அவன் வந்தால் தான் ஆகும் என்று இவர் அடமாய் வம்பாய்

நின்று ஆர்ப்பாட்டம் செய்ய வேறு வழியின்றி அவனுக்கு அழைத்தாள் ஆருஷி. 

 

வருவான் அசுரன்..

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top