அசுரன் 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

அத்தியாயம் 21

 

 

“ஐ அம் ராவண் திரேந்திரன் மாறவேல்.. சன் ஆப் சிவேந்திரன் மாறவேல்.. சன் ஆப் அழகப்பன் மாறவேல்..” என்று அதிகாரமாய் அழுத்தமாய் தன் உரிமையை அங்கு அவன் கூற..

 

அதுவரை இவனை ஒரு அலட்சியமாக பார்த்து இருந்த மற்ற மூவரும் அதிர்ந்து எழுந்து விட..  நின்றிருந்த ரூபிணியோ அதிர்ச்சியில் பொத்தென்று அமர்ந்து விட்டார். 

 

“என்ன?”

 

“என்ன?”

 

“இந்த ட்விஸ்ட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று ராவண் அருகில் அமர்ந்திருந்த ஆருஷியை பார்த்தான் சுக்ரேஷ்.

 

அவள் தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்த விதமே சொன்னது அவளுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும் என்று..!

 

“அடி பாதகத்தி..! இப்படின்னு ஒரு இணுக்காவது கொடுக்கக் கூடாது? இப்ப மொத்த குடும்பத்தோட பாசமும் நேசமும் அவன் கிட்ட போயிடுமே.. நான் வேற அவன வாடா வட்டப்பாறைக்கு.. சண்டை போடுனு என்கிற ரேஞ்சுல எல்லாம் பேசி இருக்கேனே” என்று ஆருஷியைத்தான் உருத்து விழித்தான் கோபமாக சுக்ரேஷ்.

 

“சோ வாட்? நீ இந்த வீட்டு வாரிசாக இருக்கலாம்.;அதற்காக ஆருஷியை கஷ்டப்படுத்துவாயா?” என்பது போலத்தான் அவன் பார்வை இப்போது ராவண்னை வட்டமிட்டது.. 

 

கிரிதரனும் தனது அண்ணன் மகனை தான் பார்த்து இருந்தார். அண்ணனின் சாயல் எங்கேயாவது இருக்கிறதா என்று..! அவருக்கு அவர் அண்ணனையே மறந்து போய்விட்டிருக்க, அண்ணனின் சாயலை எப்படி அவர் மகனிடம் தேடுவார்? 

 

ரூபிணியோ ‘இன்னும் என்னென்னவெல்லாம் டா அதிர்ச்சிய கொண்டு வந்து கொடுக்க போறீங்க? ஒன்னு ஒண்ணா கொடுக்காதீங்கடா.. ஒட்டுமொத்தமா குடுங்கடா..! ப்ரஷர் பாடி டா’’என்பது போலவே அமர்ந்திருந்தார். 

 

வள்ளியம்மை தான் கண்கள் கலங்க பாசம் பொங்க பேரனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தார்.

 

“சிவா.. சிவா.. பையனா நீ?” என்று குரல் நடுங்க கைநீட்டி அவர் கேட்க..

 

ஆம் என்ற தலையசைத்தவன் முகத்திலோ எந்த உணர்ச்சியும் இல்லை கற்பாறை போல இறுகி இருந்தது.

 

“இவங்க எல்லாம் தொலைச்சு போன‌ வாரிசோடு புள்ள வந்திருக்கான்.. பேரன் வந்து இருக்கான்னு பாசமா பாக்குறாங்க. ஆனா இந்த கிறுக்கு பைய.. அதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டான். எப்பவோ தாத்தா பேசியத புடிச்சு தொங்கிக்கிட்டு இன்னும் கோபத்தை கட்டிக்கிட்டு இருக்கான்.

மூஞ்ச பாரு மூஞ்ச.. எப்படி வச்சிட்டு உட்கார்ந்திருக்கான்னு. இஞ்சி தின்ன குரங்கு போல்” என்று அருகில் இருந்தவனின் முக மாறுதலை கண்டு மனதுக்குள் அவனை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தாள் ஆருஷி.

 

“நீ மட்டும் பழசு விடாம.. எப்பவோ நான் சொன்ன வார்த்தையை புடிச்சுகிட்டு இன்னும் தூங்கிட்டு நிக்குற.. ஆனா நான் மட்டும் உங்க தாத்தா சொன்னது எல்லாம் மறந்துட்டு, ஆச்சி.. சித்தப்பா.. சித்தி தம்பின்னு போய் கொஞ்சிக்கிட்டு நிக்கணுமா?” என்றவனும் அவள் புறம் குனிந்து கேட்க,

 

‘அடப்பாவி..! எப்படி நம் மனசுல நினைச்சதை கேட்ச் பிடிபச்சான்?’’ என்று அவள் திகைத்து நோக்க..

 

“பாப்பா.. பாப்பா..! நீ இவ்ளோ நேரம் மைண்ட் வாய்ஸ் நினைச்சு எனக்கு கேட்கிற மாதிரி தாண்டி பேசிட்டு இருந்த” என்று அவள் தலையில் கை வைத்து ஆட்டி சிரித்தான் ராவண். 

 

ஆனால் அந்த சிரிப்பு எல்லாம் அவளிடம் மட்டும்தான். அதைத் தாண்டி எதிரே நிற்கும் அவர்களை பார்க்கும் போது அந்த இலகு தன்மை மறந்து முகம் இறுகிக் கொண்டது.

 

ஏனோ அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதி போலவும்.. இவன் இந்திய ராணுவம் போலவும், பார்வையாலேயே அவர்களை எரித்துக் கொண்டிருந்தான்.

 

மெதுவாக எட்டு வைத்து தள்ளாடியப்படியே அவனிடம் நடந்து வந்தார் வள்ளியம்மை. 

 

அப்பொழுதும் அமர்ந்திருந்த இராவண்னை கண்டு விழிகளை உருட்டி எழ சொன்னாள் ஆருஷி.

 

ஆருஷி என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தும், புரியாது போல “என்ன? என்ன பாப்பா?” என்று அவளிடமே கேட்டுக் கொண்டிருந்தான் இந்த பொல்லா ராவண்.

 

“யோவ்.. ஆச்சி பெரியவங்க உடம்பு முடியாதவங்க, அவங்களே நடந்து வந்து உன் முன்னாடி நிக்கிறாங்க.. நீ  என்னமோ பெரிய இவன் போல ஒக்காந்து இருக்க.. எழுந்திறு யா” என்று இவள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் அடமாக அமர்ந்திருக்கும் அவனின் தொடையில் நறுக்கு என்று கிள்ளி வைத்தாள்.

 

“ஆஆஆ‌‌.. அவுச்..!” என்று வலிக்காத தொடையை தடவிக் கொண்டவன் “வேம்பயர் மாதிரி நகத்தை வச்சிருக்க பாப்பா” என்று சிணுங்கலாக சொன்னவன், வேண்டா வெறுப்பாக எழுந்து நின்று அவரை பார்க்காமல் வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டான். 

 

மெல்ல நடுங்கும் விரல்களால் அவனது முக வடிவை அளந்தவர் “சிவா பையன்.. சிவா பையன்ல.. நீ சிவா பையன்ல..”  அவரது நடுங்கும் உதடுகளோ வேறு வார்த்தையை உச்சரிக்கவே இல்லை.

 

பார்த்திருந்த அனைவருக்குமே அத்தனை உணர்ச்சிகரமாக இருக்க..  இவனோ ஏதோ? யாரோ? எவரோ? என்பது போல வேடிக்கை பார்த்தான் சிறிதும் முகத்தில் உணர்ச்சியின்றி..!

 

மெல்ல நடுங்கும் விரல்களால் அவனின் இரு கன்னங்களையும் தாங்கி..

 

“அப்பா எப்படி இருக்கான்? அவனுக்கு என்னையெல்லாம் வந்து பாக்கணும்னு தோணவே இல்லையா? அப்பா என்னமோ பேசிட்டு போறாருனு இந்த வயாசான அம்மாவ வந்து பார்த்ததுண்டு போகாலாம்ல? நான் அவனையே தானே நினைச்சிட்டு இருப்பேன். அவனுக்கு என் நினைக்கவே இல்லையா? ஒரே ஒரு தடவை என்னை வந்து பார்த்துட்டு போய் இருக்கலாம் இல்ல.. நீ பொறந்தபயாவது உன்னை தூக்கி வந்து என் கண்ணுல காட்டி இருக்கலாம் இல்ல..?” என்று அழுகையோடு கேட்டவரை பார்த்தவன்,

 

“உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் தான் பெத்த பிள்ளையை விட அவரோட விருப்பத்த விட.. பணம் காசு குடும்ப கவுரவம் பாரம்பரியம் இதெல்லாம் முக்கியமாச்சே? இப்ப மட்டும் எதுக்கு உங்க புள்ளைய நீங்க தேடுறீங்க நீங்க?” என்று சற்று காட்டமாகவே அவன் கேட்க..

 

“ராவண் பெரியம்மா கிட்ட மரியாதையா பேசு பா.. என்ன இருந்தாலும் சிவா அண்ணனை பெத்தவங்க அவங்க இல்லையா? புள்ள மேல அம்மா வைக்கிற பாசம் இல்லைனா போயிடும்?” என்றார் கிரிதரன்.

 

“என்ன பெரிய அம்மா பாசம்? இத்தனை வருஷமா புள்ள எங்க இருக்கான்? என்ன பண்ணிட்டு இருக்கான் எதுவுமே தெரியாம அப்படி என்ன உங்க வீட்டுக்காரர தாண்டி நீ உங்க பிள்ளை கிட்ட பேச கூடாதுன்னு அத்தனை வீம்பு? பேசினா உங்க வீட்டுக்காரர் உங்களை டைவர்ஸ் பண்ணிடுவாரா? சொல்லுங்க? பண்ணா பண்ணட்டுமே..! உங்களோட விருப்பு வெறுப்பு மதிக்காத ஒருத்தரு கூட எதுக்கு இத்தனை வருஷமா நீங்க குடும்பம் நடத்தணும்?” என்று இந்திய பெண்களின் அதிலும் தமிழக பெண்களின் அப்போதைய மனநிலமையை புரிந்து கொள்ளாமல் அவன் பேசினான்.. 

 

ராவண் பேசியதில் தப்பில்லை என்று ஆருஷிக்குமே தோன்றியது. 

 

‘தாத்தா பேச கூடாதுன்னு சொன்னா என் பிள்ளை கிட்ட நான் பேசுவேனு இவங்க பேச வேண்டியதுதானே? அட்லீஸ்ட் அவருக்கீ தெரியாமலையாவது பேசி இருக்கலாம் இல்ல? அப்பவே நம்ம வீட்ல எல்லாம் போன் இருந்துச்சு. அது மூலமாவது பேசி இருக்க கூடாதா? இல்ல வெளியில எப்படியாவது ஏற்பாடு பண்ணியாவது பேசியிருக்க கூடாது? ஏன் இந்த ஆச்சி மாமாவ தொடர்பு கொண்டு பேசவே இல்ல..! அப்படி பேசி இருந்தா நிறைய விஷயங்கள தெளிவு வந்திருக்குமே..! எனக்கும் இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது. மாமாவும் இறக்க போற சமயம் அம்மா அப்பாவை நினைச்சு வேதனையோட ஏக்கத்தோடு இறந்திருக்க மாட்டார்” என்று நினைத்துக் கொண்டாள்.

 

பேத்தியின் முகத்திலிருந்து பேத்திக்கும் அதே எண்ணம் தான் என்று புரிந்து கொண்ட வள்ளியமையோ, ஒரு கையால் பேத்தியின் கன்னத்தையும் மறு கையால் பேரனின் கன்னத்தையும் தாங்கி,

 

“உன் மனசுலேயும் பேரன் சொன்னது தான் ஓடுதுனு எனக்கு புரியுது. புருஷன் சொன்னா அது எப்படி புள்ளையை நீ விட்டுக் கொடுத்துடுவியானு கேட்கிறீங்க? ஆனா அந்த புள்ள மேலையும் சத்தியத்தை வாங்கினா.. நான் எப்படி அதை மீறுவேன்? அதை மீறி நான் அவன்கிட்ட பேசி.. அதனால அவனுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா? அத என்னால தாங்க முடியுமா?” என்று கேட்டதும் ஆச்சியின் மனநிலை இப்பொழுது ஆருஷிக்கு என்றாக  புரிந்தது. 

 

அவள் கன்னத்தில் இருந்த அவரது கையை இரு கைகளாலும் பற்றி கொண்டவள் “என்னை மன்னிச்சிடுங்க ஆச்சு. நான் அப்படி யோசிச்சீனு இருக்க கூடாது” என்றாள்.

 

“இதுல நீ மன்னிப்பு கேட்க என்ன தங்கம் இருக்கு? பொதுவா எல்லாருக்கும் தோன்ற விஷயம் தானே? குடும்ப கௌரவமா புள்ளையானு வந்தா.. புள்ள பக்கம் தானே நிக்கணும். கௌரவம் நம்ம கூட வரைக்கும் வருமானு எல்லாருக்கும் தோன்றது சாதாரண விஷயம் தானே?” என்றவர் இப்பொழுது பேரன் பக்கம் திரும்பி, 

 

“இப்ப உள்ள பிள்ளைகளுக்கு சில விஷயங்கள் கத்துப்பட்டித்தனமா ஏதோ மூடத்தனமா முட்டாள்தனமா இருக்கும். ஆனா சின்ன வயசுல இருந்து எங்கள அப்படியே வளத்துட்டாங்க.. அந்த விஷயத்திலேயே நாங்க ஊறி வளந்துட்டோம். இதுதான் குடும்பம்.. இதுதான் கட்டுப்பாடுனு வாழ்ந்தோமே தவிர இது கத்துப்பட்டித்தனம் எங்களுக்கு புரியல? முட்டாள் தனமா மூடத்தனமா இருந்தாலும் அதிலிருந்து முட்டி மோதி வெளிவர தெரியல? ஏன்னா எங்க வளர்ப்பு முறை அப்படி..!” என்று கண்ணீர் விட்டவரை பார்க்கவும் பாவமாக தான் இருந்து ராவண்னுக்கு.

 

ஆனாலும் இறக்கும் வரையிலும் “எங்க அம்மா என்கூட கடைசி வரைக்கும் பேசவேயில்ல.. ஒரு முறையாவது என்னிடம் பேசி இருக்கலாம் இல்ல” என்று நினைத்து நினைத்து ஏங்கிய படியே இறந்த தந்தையை‌ நினைத்தவனுக்கு இவர்களை மன்னிக்கவும் முடியவில்லை..! இவர்களை ஏற்கவும் முடியவில்லை..!

 

 

வருவான் அசுரன்..

 

இந்த கதை இனி தினமும் வரும் டியர்ஸ்.. முடிந்தளவு இந்த மாதத்தில் முடிக்க முயல்கிறேன்

 

 

 

 

பொறுமையாக படித்து மறக்காமல் கமெண்ட் செய்யும் அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏❣️💖💓🥰😍🫰

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top