Share:
Notifications
Clear all

உன் கணவனாக நான் வரலாமா-1

 

(@vrushaa-novels)
Member Moderator
Joined: 5 months ago
Messages: 5
Thread starter  

அத்தியாயம்-1

அட கால் ஊனமா இருந்தா என்ன சதீஷு.. நல்ல அரசாங்க வேலையில இருக்குறா தெரியும்ல.. பேசாம வாய மூடிட்டு அவள கட்டிக்க..”என்று அந்த அறையே அதிர சதீஷின் அன்னை கத்த.. அவனோ முகத்தை சுருக்கியவனாக..

ம்ச் ம்மாவ்வ்.. சும்மா என்ன காண்டாக்காத.. இவள கட்டிக்கிறதுக்கு நான் அந்த மாடில இருந்து விழுந்து செத்து போலாம்.. சும்மா கட்டிக்க கட்டிக்கனு பாடாபடுத்துற.. காசு மட்டும் இருந்தா ஆச்சா.. நான் போற ஸ்பீடுக்கு அவளால வர முடியுமா..”என்றான் சதீஷ் கத்தலாக..

இதனை எல்லாம் காதில் வாங்கிக்கொண்டு சிலை போல நின்றிருந்தாள் காதம்பரி.. அவள் முகமோ இறுக்கத்தை தத்தெடுத்தது போல இறுகிப்போய் இருக்க.. அவள் பக்கத்தில் நின்றிருந்த அவளின் தங்கை அர்ச்சனாவோ அக்காவின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டாள். ஆனாலும் காதம்பரி அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை..

எலேய் நீ நெனைக்கிற மாதிரி இல்லடா அந்த பொண்ணு… ஏதோ கொஞ்சம் கால அதிகமா ஊனி நடக்குது.. அதுக்குனு அத ஊனத்துல போய் சேத்துக்காதடா..”என்றார் அம்புஜம்.. அவருக்கு எப்படியெனும் அரசாங்க வேலையுடன் வரும் பெண்ணை விட மனமில்லாமல் தன் மகனை ஒற்றுக்கொள்ள வைக்க போராடிக்கொண்டிருந்தார்.

அட முடியாதுன்றேன்.. வேற மாப்ள வேணா பாத்துக்க சொல்லு.. அவளோட சம்பளக்கவருக்காக இவள காலம் ஃபுல்லா சுமையாட்டம் சுமக்க முடியாது..”என்றவனின் பார்வையோ காதம்பரிக்கு அருகில் நிற்கும் அர்ச்சனாவின் மீது பட.. அவன் முகமோ சட்டென்று பளப்பளத்து போனது..

ம்ம் வேணும்னா நானு ஒரு ஐடியா தரென்..”என்றவன் அர்ச்சனாவை நோக்கி கைக்காட்டியவனோ.. “வேணும்னா அவ தங்கச்சிக்கு வாழ்க்க குடுக்குறேன்.. தங்கச்ச கட்டிக்கிட்ட பாவத்துக்கு வேற முடமோ, இல்ல பார்வை இல்லாதவனையோ பார்த்து காதம்பரிக்கு வேணா கட்டிக்கொடுப்போம்..”என்றான் திட்டம் தீட்டியவனாக சதிஷ்..

அதுவரை அமைதியாக இருந்த காதம்பரியோ அர்ச்சனாவை பற்றி பேசியதும் கண்கள் அனலாக சிவக்க நிமிர்ந்து அவர்கள் இவரையும் முறைத்து பார்த்தவளோ.. “அதான் பொண்ண புடிக்கலன்டிங்க இல்ல.. பின்ன இங்க இன்னும் நின்னு என்ன செய்ய போறீங்க.. கிளம்புங்க உங்க வீட்டுக்கு..”என்று ஆத்திரமாக கத்தியவளோ.. “அம்மா, அப்பாவ கூப்டு அச்சு..”என்று தன் தங்கையை பார்த்து அழுத்தமாக கூறியவளை பார்த்த அந்த அம்மா, மகன் இருவரும் திருத்திருவென விழித்தார்கள்.

அர்ச்சனா சரி என்று தலையாட்டியவள் சிட்டாக பறந்து சென்று ஹாலில் உட்கார்ந்திருந்த அவர்களின் பெற்றோரான காசிநாதன் மற்றும் வாசுகியை கூட்டி வந்தார்கள்.

காசிநாதனின் முகம் இறுகிப்போய் இருக்க, வாசுகியின் முகமோ ஒரு வித படப்படப்பில் இருந்தது.. “என்ன சம்மந்தி பாப்பாட்ட பேசனும்னு சொன்னீங்களே பேசியாச்சா..”என்று திணறலாக வாசுகி கேட்க..

அம்புஜமோ ஏதோ கூற வருவதற்கு முன்பு.. “அவங்க என்ன சொல்றது.. அம்மா, அப்பா நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. இந்த மாதிரியான ஆட்கள இனி மாப்ள கீப்ளனு அழைச்சிட்டு வந்தீங்க அப்புறம் கூட்டிட்டு வரவங்களுக்கு தான் செமத்தையா அடி விழும்..”என்று ஆக்ரோஷமாக கூறிய காதம்பரியோ கையில் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

தன் மகள் பேசிவிட்டு போவதையே காசிநாதன் யோசனையாக பார்க்க.. வாசுகிக்கோ தன் மகளின் பேச்சில் சினம் கொண்டவராக.. “ஏய் காதம்பரி இப்டியா பெரியவங்க கிட்ட பேசுவ..”என்று எகுற.

அதில் நடந்து சென்றவளோ.. “பெரியவங்களா நடந்தா நான் ஏன் இப்டி பேசனும்..”என்றவளோ தன் அறைக்குள் சென்று புகுந்துக்கொண்டாள். அதில் அர்ச்சனா பெரும்மூச்சை இழுத்துவிட்டவளோ.. “நான் போய் அக்காவ பாக்குறேன்ம்மா..”என்றவரே உள்ளே ஓடிவிட…

வாசுகி அம்புஜத்தை சங்கடத்துடன் பார்த்தவாறே.. “அது சம்மந்தி அவ ஏதோ கோவத்துல தெரியாத்தனமா இப்டி பேசிட்டு போறா.. நீங்க ஒன்னும் தப்பா நெனச்சிக்காதீங்க..”என்றவறோ.. “அது நாளைக்கி நம்ம பசங்களுக்கு நிச்சயம் இருக்கே அது சம்பந்தமா பேசுவோமா..”என்று அவர் ஆரம்பிக்க..

அட இன்னுமா அது நடக்கும்னு நெனைக்கிறீங்க..”என்ற சதீஷோ.. “இங்க பாருங்க உங்க நொண்டி பொண்ணுக்கு வாழ்க்க குடுக்கற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனசுக்காரன் இல்லங்க.. நானும் கிளி மாதிரி பொண்ண கட்டி மயில் மாதிரி ஆட வைக்க நினைக்கிறவன்.. அப்டி இருக்கும்போது இப்டி ஒரு பொண்ண கட்ட எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லங்க.. ஏதோ நான் இல்லாம எங்க அம்மா உங்க வீட்ல சம்மந்தம் பேசிட்டாங்களேன்ற பாவத்துக்காக உங்க ரெண்டாவது பொண்ண வேணா கட்டிக்கிறேன்.. அதுவும் முன்ன பேசுன வரதட்சனையோட தான். அதுல ஒன்னும் நான் காம்ப்ரைமைஸ் ஆக மாட்டேன்.. சரின்னா போன் போடுங்க..”என்றவனோ…

தன் அன்னையின் பக்கம் திரும்பியவன்.. “எல்லா உன்ன சொல்லனும் நா வர வரைக்கும் வெயிட் பண்ணாம பொண்ணா பாக்குற பொண்ணு… ம்கூம்.. கிளியாட்டம் இருந்து என்ன ப்ரோஜனம் காலுல்ல நொண்டியா இருக்கு..”என்று அவன் பாட்டிற்கு பேசியவாறே இருக்க..

போதும்..”என்று அந்த அறையே அதிர கத்தினார் காசிநாதன்.

அதில் சதீஷ் கொஞ்சம் அதிர்ந்தவனாக அவரை திரும்பி பார்க்க… அவரோ முகம் முழுவதும் சிவந்து ஆத்திரத்தில் நின்றிருந்தார்.. “அதான் பொண்ணு புடிக்கலைல.. பின்ன என்ன பேச்சி வேண்டி கெடக்கு கெளம்புங்க..”என்றார் கர்ஜித்தவாறே.

அதில் சதீஷும் அவன் அன்னை அம்புஜமும் முகமும் கறுத்து போக.. “ஏங்க என்ன இப்டி பேசுறீங்க..”என்றார் அம்புஜம்.

வேற எப்டிங்க பேச சொல்றீங்க.. எங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டு பொண்ணையே மட்டமா பேசுறான் உங்க பையன்.. அத கேட்க துப்பு இல்ல அவன் பேசுறத வேடிக்க பாக்குறீங்க..”என்று கத்தியவர்,.. “போங்க இங்க இருந்து உங்கள மாதிரி பேய் குடும்பத்துக்குலாம் என் பொண்ண குடுக்க முடியாது..”என்றார் கடுமையாக..

என்னங்க இப்போ தப்பா சொல்லிட்டான் என் பையன்.. அவன் சரியாதானே சொன்னான்.. ஏதோ நான் தான் பாவம்ன்னு உங்க பொண்ணுக்கு வாழ்க்க குடுக்கலாமேன்னு என் பையன சமாளிச்சி கல்யாணத்த முடிக்க பாத்தேன்.. அதுக்கு நான் கேட்ட அம்பது பவுன் நகையும், உங்க பொண்ணு ஜாலியா உட்கார்ந்துட்டு வர கேட்ட எட்டு லட்ச காரும், கோயம்புத்தூர்ல இருக்க உங்க ஆயிரம் சதுரடி இடமும் சின்ன தூசுமாதிரி தான்.. போனா போதுன்னு...”என்று அவர் மறுபடி ஏதோ ஆரம்பிக்க..

அட நிறுத்தும்மா..”என்று கத்திய காசிநாதனும்… "இதெல்லாம் என் பொண்ணுக்காக தான் நான் குடுக்கலாம்னு பாத்தேன்.. ஆனா உன்ன மாதிரி பணப்பேய் க்கிட்ட என் பொண்ணு மாட்டாம போய்ட்டான்னு நான் சந்தோஷம் தான் படுறேன்… கிளம்பு முதல இங்க இருந்து..”என்ற காசியோ தன் அருகில் எப்போதும் போல அழுதுக்கொண்டு நிற்கும் மனைவியை கண்களால் எரித்தவர்.. “சும்மா அழாம இதுங்கள வெளில தொறத்து..”என்றவர் தன் மகளை காண அவள் அறைக்குள் சென்றுவிட்டார்..

என்னது தொறத்தா..”என்று சதீஷ் எகுற… "அடேய் வாடா நாம போவோம்.. இந்த வீட்ல யாரு பொண்ணு எடுப்பான்னு நாமளும் பாப்போம்..”என்றவறோ தன் மகனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.. பின்னே காசிநாதன் அந்த பொள்ளாச்சியிலையே கொஞ்சம் பெரிய தலைக்கட்டாயிற்றே.

காதம்பரி தன் அறையில் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்திருக்க.. அவள் அருகில் வந்து உட்கார்ந்தார் காசிநாதன்.. காதம்பரி அப்போதும் தன் பார்வையை விலக்காமல் எங்கோ வெறித்தவாறே இருக்க.. அவளின் தோளில் கை வைத்தவறோ.. “சாரிடாம்மா..”என்றார் பரிதவிப்பாக..

அதில் மன இறுக்கம் கலைந்தவள் திரும்பி தன் தந்தையை பார்த்தவள்.. “போதும்ப்பா.. எனக்காக மாப்ள பாத்து பாத்து நீங்க தான் டையர்ட் ஆகுறீங்க.. கொஞ்சம் கேப் விடுங்க.. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்..”என்று அவளோ சமாதானப்படுத்த..

அதில் காசிநாதனோ தன் மகளையே வேதனையுடன் பார்த்தார்.

காதம்பரி, வயது இருபத்தி நான்கு ஆகிறது. பிஎட் கணிதம் படித்துவிட்டு பொள்ளாச்சி அரசினர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகின்றாள். நல்ல வெளுத்த வெள்ளை நிறம். நல்ல அடர்ந்த கறுப்பு நிற புருவம், முகமோ லட்சுமி கடாச்சத்துடன் அழகாக இருப்பாள். அவளுக்கு அழகு சேர்ப்பதே அவளின் உதட்டின் கீழ் இருக்கும் மச்சம் தான்.

அழகும், அறிவும் ஒருங்கே பெற்றவள்.. ஆனாலும் கடவுள் திருஷ்டிக்காக ஏதோ ஒரு குறை வைக்க வேண்டும் அல்லவா.. அதனால் தான் அவளது வலது காலை கொஞ்சம் வளைத்திருந்தார். அதுதான் இப்போது அவளுக்கு பெரிய குறையாகவே போயிருக்கின்றது.

அதுவும் ஒன்றும் அவளுக்கு பிறக்கும்போதே வந்த குறை இல்லை. நான்கு வயது வரை நன்றாக ஓடியாடி திரிந்தவள் தான். திடீர் என்று ஏற்பட்ட விசக்காய்ச்சலால் தான் வலதுக்கால் கொஞ்சம் வளைந்து போயிருந்தது. அதனை எத்தனை மருத்துவர்களிடம் சென்று காட்டினாலும் அவர்களுக்கோ ஒன்றும் புரியாத நிலை தான்.

விஷக்காய்ச்சலோட தன்மை உங்க பொண்ண பயங்கரமா அஃபெக்ட் பண்ணிருக்கு.. அதனால தான் இந்த கால் அஃபக்ட் ஆகிருக்கு.. இதுக்கு மருந்தோ, இல்ல ஆப்ரேஷனோ இல்ல.”என்று கையை விரித்திருந்தனர்.

அதன் பின் காதம்பரி கொஞ்சம் குறும்புகளை மறந்த குழந்தையாக மாறிப்போனாள். அவளுக்கிருக்கும் நெருங்கிய தோழி என்றால் அது ஸ்வாதி தான். அவளும் அவளுடன் பள்ளியில் தான் பணிப்புரிக்கின்றாள்.

இப்படி அப்படி என்று வருடங்கள் ஓட.. இப்போது காதம்பரிக்கு வயது இருபத்தி ஆறு ஆகிருந்தது. இன்னும் அவளுக்கு திருமணம் தான் கூடிவரவில்லை.

ஆனால் ஒன்றுபோல் அவள் கனவில் தினம் தினம் அவளை அவமானப்படுத்திய நினைவுகள் வந்து அவளை பாடாய் படுத்தியது. எப்போதும் அதற்கு பயந்தே காலையில் நான்கு மணிக்கு எழுந்து அறையிலையே முடங்கி கிடப்பாள் பெண்ணவள்.

இன்றும் அதே நினைவுகள் அவளை பாடாய் படுத்த.. “ம்ச்...”என்று சலித்தவாறே படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தவளோ முன்பை விட இன்னும் அழகாய் மாறியிருந்தாள். கன்னங்கள் உப்பி அவளது சிவந்த இதழ்களையே இன்னும் அழகாக காட்டியிருந்தது. ஆனால் இன்னும் திருமணமாகவில்லை என்ற ஒன்றை தவிர வேறு ஒன்றும் குறை கூறிட முடியாது.

இன்றும் அந்த பொல்லாத கனவுகள் எழுப்பிருக்க.. மெல்ல எழுந்தவள் ஸ்டிக்கை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தி வந்தவளோ தன் அறை ஜன்னலில் இருந்து தெரியும் வானத்தையே வெறிக்க ஆரம்பித்திருந்தாள். இப்போது தான் சூரியன் தன் செங்கதிர்களை பூமியின் மீது பரப்பிக்கொண்டிருக்க.. காரிருள் மறைந்து மெல்ல மெல்ல பூமி வெளிச்சத்தை தன் மீது படியவைத்துக்கொண்டு இருந்தது.

பெண்ணவளோ ஜன்னல் வழியாக தெரியும் விடியலை வெறிக்க.. அவள் வாழ்க்கையில் தான் எப்போது விடியல் வரும் என்று தெரியாத நிலையாகி இருக்க.. இப்போது தெரியும் வெளிச்சம் அவள் வாழ்க்கையிலும் பரப்பப்படுமா என்பதனை யோசிக்க கூட அவள் தயாராக இல்லை. ஆனால் அவளின் வாழ்வில் வெளிச்சத்தை மட்டும் அல்ல பல பல வண்ணங்களை கூட பரப்ப ஒருவன் வருவான் என்று அவளுக்கு தெரியாமல் போயிருந்தது.

(வரலாமா..)

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top