அசுரன் 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

அசுரன் 19

 

ஆருஷி அதிர்ச்சி குறையாமல் அவனையே கண்ணெடுக்காமல் "இவன் எப்படி சரியாக இந்த விமானத்திற்கு வந்தான்?" என்று அவள் பார்க்க...

 

"எவ்ளோ நாளைக்கு தான் சென்னையில் ஹாஸ்பிடல் விட்டுட்டு மும்பைல வந்து இருக்கிறது டி பாப்பா.. சொல்லு நீயே? அதுதான் ஒரு சின்ன என்ட்ரி கொடுத்து சுக்ரேஷ்க்கு முன்னால ஒரு இஸ்கு இஸ்க்கு காட்சியை அரங்கேற்றினா.. உன்னை அவன் இழுத்துட்டு சென்னைக்கே போயிடுவானு ஜஸ்ட் பிளான் தான் பண்ணுனேன்.. ஆனா அவனோ அவ்வளவு அழகா எக்ஸிக்யூட் பண்ணுவானு எனக்கு தெரியவே தெரியாதுடி பாப்பா..!" என்று குறும்பாக கூறியவனை குறையா கோபத்தோடு பார்த்தாள் ஆருஷி..!

 

“யூ.. யூ.. யூ.. இடியட்..!” விமானத்தில் இருப்பதால் மெல்லிய குரலில் அவனை திட்டினாள்‌ ஆருஷி.

 

“எஸ்..எஸ்.. ஐ அம்..! த லவ்பிள் இடியட்..!” என்றவன் “என்ஃப்..! இப்போ நீ தூங்கு டி பாப்பா..” என்று அவளுக்கு பயணக் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக சீட்டை சாய்த்து அவளுக்கு சௌகரியமாக வைக்க.. அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக கண்ணை மூடி படுத்து இருந்தாள் ஆருஷி. 

 

அவள் முகத்தில் இருந்த அமைதி அகத்தில் இல்லை..!

 

அவளது அகமோ அலை கடலாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது..!

 

வீட்டிற்கு சென்றால்.. என்னை இந்த கோலத்தில் பார்த்தால்.. என்ன சொல்லுவார்கள்? இதை எப்படி நான் சமாளிக்க போகிறேன்? அத்தையுடைய நம்பிக்கை.. ஆச்சி உடைய வளர்ப்பு.. எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி விட்டேனே? 

 

‘அப்படி என்னடி உனக்கு காதல் பித்து தலைக்கேறிவிட்டது? அத்தனை ஒழுக்கு கோட்பாட்டோடு வளர்ந்தவள் நீ.. எப்படி அதை மீறி அவனுடன் இணைந்தாய்? அதுவும் திருமணத்திற்கு முன்னே.. உன்னை பழிவாங்கவென காதல் நாடகம் நடத்தியவனோடு? ஒவ்வொரு முறையும்.. ச்சீ..!’ என்று மீண்டும் மீண்டும் தன் தப்புக்கு தன்னையே வருத்திக்கொண்டு கண் மூடி இருந்தவள் முகமோ கசங்கி இருந்தது.

 

அதனை அருகில் இருந்து பார்த்தவன், அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவன், மெல்ல அவள் புஜத்தை தட்டிக் கொடுத்து “கண்டதையும் நினைக்காம தூங்கு பாப்பா..! எல்லாம் சரியாகும்..!” என்றான் அவளை ஆற்றுப்படுத்தும் நோக்கில்..!

 

சற்றென்று விழித்து அவனை முறைத்தவள் “எப்படி நினைக்காம இருக்க சொல்ற?” என்று கடுப்போடு கேட்க..

 

“இப்படியே நினைச்சுட்டு இருக்கிறதுனால நடந்தது எதுவும் மாறிட போகுதா? இல்லை தானே? அப்புறம் அது எதுக்கு வீணா அத நினைச்சு மனசையும் உடம்பையும் கஷ்டப்படுத்துற பாப்பா..! ஜஸ்ட் மூவ் ஆன் வித் ஃப்லோ பாப்பா..!” என்றான்.

 

“உனக்கு என்னடா நீ இதுவும் பேசுவ.. இதுக்கு மேலயும் பேசுவ? அடுத்தவளுக்கு வண்டி வண்டியா அட்வைஸையும் கொடுப்ப.. ஆனா இந்த சமூகத்தை எதிர்கொள்ளப் போறது நான் தானே? அது வயித்து புள்ளையோட.. தாலி இல்லமா.. புருஷன் இல்லாம..!” என்றதும் அவனுக்கு முதலில் மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்ந்தவனுக்கு அவள் சொல்ல வருவதின் அர்த்தம் புரியவில்லை..!

 

“இதுல என்ன இருக்கு? லவ் பண்ணும் பிரிஞ்சிட்டோன்னு சொல்ல வேண்டியதுதானே?” என்றான் தோளை குலுக்கி..! 

 

“லவ் பண்ணி பிரியறது வேற.. இப்படி..” என்று தன் வயிற்றைக் காட்டி “கல்யாணத்துக்கு முன்னாலேயே இப்படி ஒருத்தன் கிட்ட போறதுக்கு பேரு வேற?” என்றாள் முகம் கசங்க.. அந்த வார்த்தையே அவளை நிலைக் குழைய செய்தது.

 

இன்னமும் நம் சமூக வழக்கத்தில் உள்ள இம்மாதிரியான பேச்சுக்களும்.. அதற்கு குத்திக் காட்டும் உவமைகளும்.. அதற்கு பயன்படுத்தப்படும் கீழ்த்தரமான வார்த்தைகளும்.. அறியாத டாக்டரும் புரியாமல் விழித்தான்..!

 

அவனின் புரியா பார்வையை பார்த்தவளுக்கு இன்னும் கடுப்பேற.. 

 

அவனை பார்த்து “உனக்கு புரியவே புரியாது ராசா.. இது தான் உனக்கு புரிஞ்சிருக்கு..” என்று தன் வயிற்றை காட்டியவள், “பேரு மட்டும் மெத்த படிச்ச மேதாவி டாக்டரு.. ஆனா ஒரு எழவும் தெரியல..!” என்று கடுகடுத்தவள் கண்களை மூடி படுத்துவிட்டாள். 

 

“என்னடி பாப்பா குழப்புற? குழந்தை பெத்துக்கு எதுக்குடி கல்யாணம் பண்ணனும்? லவ்வர் இருந்தா போதும்..! எத்தனையோ பேரு லவ் பண்ணி குழந்தை பெத்துகிட்டு அதுக்கப்புறம் தான் அங்க கல்யாணமே பண்ணிக்கிறாங்க.. ஏன் உனக்கு புடிச்ச இந்த புட்பால் பிளேயர் கூட அப்படித்தானே பண்ணிக்கிட்டான். அப்ப மட்டும் வாவ் சூப்பருன்னே..” என்று கேட்டவனை,

 

இந்த ப்ளேனில் இருந்து இவனை தள்ளி விட்டால் என்ன? என்று தோன்றியே விட்டது. 

 

‘தெரியாத்தனமா இவன்கிட்ட நமக்கு புடிச்ச பேவரைட் எல்லாம் சொன்னது தப்பா போச்சு..!’ என்று மனதுக்குள் நொந்தாள் ஆருஷி.

 

அந்த கலாச்சாரத்திலேயே பிறந்து வளர்க்கப்பட்டவன்.. அதில் என்ன தவறு என்று கேட்பதில் தவறில்லை..!

 

ஆனால் நீயோ தமிழ் பண்பாட்டு முறைப்படி வளர்க்கப்பட்டவள், கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்தவள், அன்னை இல்லை என்றாலும் ஆச்சி மற்றும் அத்தையின் அன்பு அறிவுரைகளின் கீழ் வளர்ந்தவள்.. நீ ஏன் தவறு செய்தாய்? நீ ஏன் தவறி போனாய்? உனக்கு சொல்லிக் கொடுத்தார்கள் தானே?? நெறி தவறி போகக்கூடாது..! ஒழுக்கம் கெட வாழ கூடாது..! ஆண்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஏமாற கூடாது..! என்று பின் நீயே சென்று விட்டு அவனை ஏன் குற்றம் சொல்கிறாய்? என்று அவளின் மனசாட்சி அவளை கேள்வி கேட்டு வாட்ட..

 

‘சரிதான்..! வரவர நம்ம மனசாட்சி கூட நமக்கு ஃபேவரா பேச மாட்டேங்குது..!’ என்று கடுப்போடு அவள் பிரண்டு படுக்க.. சற்று என்று இடுப்புப் பிடித்துக் கொண்டது அவளையும் அறியாமல் ஆ என்று அவள் முணுக..

 

“ஏய் என்ன ஆச்சு பாப்பா.. என்ன பண்ணுது?” என்று இவன் பதட்டத்தோடு கேட்க “லைட்ட வலிச்சது” என்றாள் மெலிதான குரலில்.

 

“சடனா திரும்பி படுக்க கூடாது பாப்பா..! எந்திரிச்சு உட்கார்ந்து லைட்டா திரும்பி படு இல்லன்னா. அப்படித்தான் புடிச்சுக்கும்..” இதமாக சொல்லிக் கொடுத்தவனே பார்த்தவளுக்கு மனதில் இருந்து அந்த பழைய காதல் துளிர்விட..

 

‘இவனை நல்ல முறையில் பார்த்து.. பழகி.. காதலித்து.. திருமணம் செய்து.. அதற்கு பின் இந்த குழந்தை வந்திருக்கக் கூடாதா?’ என்று ஏக்கம் படருவதை தடுக்க முடியவில்லை..!! தவிர்க்க முடியவில்லை..!

 

ஒரு பெரு மூச்சோடு ‘இனி இவனோடு பேச்சு வார்த்தையே வைத்துக் கொள்ளக் கூடாது..! என் மனசு அதுபாட்டுக்கு அவன் பின்னாலேயே போகுது..! கெடுகெட்ட மனசு..! இனி சென்னை வரும் வரை கப்சிப்..!’ என்று முடிவு எடுத்தவள் முக்கால்வாசி நேரத்தை தூங்கி கழித்தாள்.

 

அவ்வப்போது அவளுக்கு உண்ண குடிக்க என்று பார்த்து பார்த்து அனைத்தும் செய்தது ராவண் தான்..,!

 

பேசுறதெல்லாம் பேசுவானாம்.. 

 

செய்வதெல்லாம் செய்வானாம்..

 

ஆனா இப்ப தாங்கு தாங்குனு தாங்கவானாம்..

 

போடா டேய்.. நீயும் வேண்டாம்.. உன் கவனிப்பும் வேண்டாம்.. என்று அவனது செயலைக் கண்டு வெறுப்பு தான் வந்தது அவளுக்கு..!

 

அவள் கண்களைக் கண்டு கருத்தினை படித்தவன் “உனக்கு என் மேல வெறுப்பு வருவது சரிதான் பாப்பா.. ஆனா அதுக்குன்னு மூஞ்சியை எப்படி சுர்ருன்னு முறுக்கி வெச்சிட்டு உக்காந்து இருக்காத.. கொஞ்சம் பாக்க டிஸ்கஸ்டிங்கா இருக்கு..!” என்றதும் இவளுக்கு இன்னும் கோபம் வர,

 

“போடா..” என்று புஜத்திலேயே தன் பலம் கொண்டு மட்டும் குத்தினாள்.. அடித்தாள்.. கிள்ளினாள்.. கடித்தாள்..! 

 

அனைத்தையும் சன்ன சிரிப்போடு வாங்கிக் கொண்டவன், 

 

“ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க.. அவள் அமைதியாக பார்க்க..

 

“இது குடிச்சிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு.. அதுக்கப்புறம் படுத்து தூங்குவியாம் பாப்பா.. நீ என்ன அவாய்ட் பண்ண தான் தூங்கிட்டே வரேனு எனக்கு தெரியும். ஆனா தூங்கு பாப்பா..!” என்று அவள் தலையை வருடிவிட.. 

 

பட்டென்று அவனது கையை தட்டி விட்டவள், அவன் கொடுத்த ஜூசை குடித்துவிட்டு சிறிது நேரம் அவன் சொன்னது போல அமர்ந்து விட்டு பின்படுத்தாள்.

 

சென்னை வந்ததும் முதலில் சுக்ரேஷ் ஆருஷிக்காக காத்துக் கொண்டிருக்க.. ஆனால் அவளுடன் சேர்ந்து வந்த ராவண்னை கண்டதும் கண்கள் சுருங்க அவனை முறைத்தான்.

 

ஆனால் அதற்கெல்லாம் கவலைப்பட போகின்ற ஆசாமியா அவன்?

 

அவன் தான் இப்போது காதல் அரக்கனாயிற்றே..!

 

அந்த சூடு.. சொரணை.. அனைத்தையும் தன்னவளுக்காக துறந்து விட்டு அவள் பின்னே அலையும் நவயுக ரோமியோவாக மாறி பல மாதங்கள் ஆகின்றதே..! 

 

“இதோட உங்க எல்ல முடிஞ்சது..!ன இனிமே எங்கள் தொந்தரவு பண்ண மாட்டீங்க நினைக்கிறேன்..!” என்றவன் ஆருஷியை கவனமாக அழைத்துக் கொண்டு விடுவிடுவென நடந்தான் சுக்ரேஷ்.

அவளும் சுக்ரேஷிடம் கதை அளந்து கொண்டே நடந்து சென்றாள். அநேகமாக விமானத்தில் நடந்ததை எல்லாம் சொல்லி செல்கிறாள் என்று நினைத்தான் இராவண்.

 

கைகோர்த்து செல்லும் அவர்களைப் பார்த்து நின்ற ராவணன் முகத்திலோ கள்ளச் சிரிப்பு..!

 

அவர்கள் கைப்பிணைப்பில் இருந்தது என்னவோ அன்பும் பாசமும் தான்..!

 

“உன் பாசமும் அன்பும் யாருக்கு வேணாலும் இருக்கலாம்..! ஆனா.. காதல்.. நேசம்.. அது எனக்கு மட்டும் தான் டி பாப்பா..!” என்றே சென்றான்.

 

“வீட்டுக்கு போய் என்ன சொல்றதுனு ஒரே பதட்டமும் பயமுமா இருக்கு மாமா..” என்றாள் சுக்ரேஷின் கையை பிடித்தபடி ஆருஷி.

 

அவள் முகத்தில் அப்பட்டமான பயம் அதிலும் மற்றொரு கையால் அவள் சூழ் தாங்கிய வயிற்றை தாங்கி பிடித்தது. மிகவும் கவலையாக இருந்தது அவனுக்கு..!

 

“எல்லாப் நான் பாத்துக்க மாட்டேன் நான் ஆரு.. பாரு இப்பவே உனக்கு எப்படி வேர்த்து ஒழுகுதுன்னு டிரைவர் கொஞ்சம் வண்டி அந்த ஜூஸ் கடைக்கிட்ட நிப்பாட்டுங்க” அவளுக்கு மாதுளம் பழச்சாறு ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு வீட்டுக்கு ஃபோன் செய்தான்.

 

அவன் சொன்ன விஷயத்தை கிரகிக்க முடியாமல் அங்கே அவன் அன்னையின் ஆருஷியின் ஆச்சியும் விழி பிதுங்கி நின்றிருந்தனர்.

 

“ஆனது ஆகிப்போச்சு.. புள்ளைங்க போகும்போது தடபுடல வரவேற்கணும் ஆரத்தி எல்லாம் ரெடி பண்ணு” என்றார் ஆச்சி.

 

“என்ன இப்படி சொல்றீங்க.. நம்மள கேக்காம நம்மகிட்ட கலந்துக்காம அவங்களா ஒரு முடிவு எடுத்துட்டு வருவாங்க.. அதை நம்ம கண்டுக்காம அவங்கள இப்படி தடபுடலா வரவேற்க சொல்லுறீங்க?” என்று கோபப்பட்டார் சுக்ரேஷின் அன்னை.

 

“இந்த காலத்து பிள்ளைங்க இப்படித்தான் இருக்காங்க அட்லீஸ்ட் இப்பவாது நம்ம கிட்ட சொல்றாங்களேனு நம்ம சந்தோஷப்பட்டிருக்க வேண்டியது தான். சரி சரி எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணு..!” என்றவர்,

 

ஓய்வறையில் படுத்து இருந்த கணவனிடமும் இவ்விஷயத்தை கூற.. முதலில் கொஞ்சம் கோபம் வந்தாலும் “இதுவும் நலத்துக்கு தான்..! என் வரிசை மட்டுமல்ல என் சொத்தையும் காப்பாத்துறதுக்கு இவர்கள்தான் சரி” என்று மனைவியின் கூற்றை ஆதரித்தார் ஆருஷியின் தாத்தா.

 

அதன்படி சுக்ரேசையும் ஆருஷியையும் வரவேற்க குடும்பமே காத்திருந்தது பலத்த ஏற்பாட்டோடு..!

 

அவர்கள் வந்த கார் வீட்டு வாயில் உள்ளே நுழைந்ததும் “மாமா ரொம்ப பயமா இருக்கு” என்று அவன் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.

 

“அதெல்லாம் நான் சமாளிச்சுட்டேன் அங்க நான் என்ன சொன்னாலும் என் வார்த்தைக்கு எதிர்த்து பேசாதே..!” என்றதும் சரி என்று வேகமாக தலையாட்டினாள். 

 

காரில் இருந்து இறங்கிய சுக்ரேஷ் பின் கையை நீட்டி ஆருஷியை பத்திரமாக இறக்கிவிட.. அவளின் நிலைக்கண்டு முதலில் அங்குள்ளவ அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி தான்..! ஆனாலும் அதில் சந்தோஷமும் கூட..!

 

“என் குடும்பம் தளச்சிட்டு.. என் கொள்ளப் பேர பிள்ளைகள நான் பார்க்க போறேன்..!” என்று ஆச்சிக்கு லேசாக கண்கள் கூட கலங்கியது.

 

ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க என்று இருவருக்கும் ஆரத்தி எடுத்தார் சுக்ரேஷன் அன்னை. அப்பொழுது அரிசி எடுத்தபடி அவளின் மறுபக்கம் வந்து நின்ற ராவண்னை கண்டு அனைவரும் அதிர..

 

“சுத்துங்க.. சுத்துங்க.. எனக்கும் சேர்த்து சுத்துங்க..” என்று அவன் இலகுவாக கூற..

 

ஆழம் கரைத்தவரோ என்ன செய்வது என்று புரியாமல் திரும்பி ஆச்சியைப் பார்க்க..

 

யாருடா இவன் புதுசா என்பது போலத்தான் அவரும் இவனை பார்த்தார். 

 

அவனோ பல நாட்களாக.. இல்லை இல்லை பல வருடங்களாக.. அவர் எதிர்பார்த்த தன் பிள்ளையின் வாரிசு தான் அவன் என்று அவருக்கு தெரியாது அல்லவா?

 

 அதனால் “யாருப்பா நீ? அவங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா நிக்கணும்.. அவங்களுக்கு தான் ஆலம் சுத்தி திருஷ்டி கழிக்கணும் அதுவும் இப்போ அவ கர்ப்பமாக இருக்கா.. நீயே வந்து அவங்களோட சேர்ந்து நிக்கிற? தள்ளி நில்லு..!” என்று அவர் கொஞ்சம் குரலை உயர்த்தி அதட்டலாக கூறினார்.

 

ஆம்.. ஜோடி தான்..!

 

ஆருஷி பழச்சாறு குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அன்னைக்கு அழைத்து வெகுநாளாக இருவரும் காதலித்து வந்ததாகவும்.. இப்பொழுது பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும்.. எங்களை மன்னிச்சி ஏத்துக்கோங்க.. என்று அன்னைக்கு ஃபோன் செய்து சொன்னவன் அடுத்து அதை ஆச்சிக்கும் சொல்லிவிட்டான் சுக்ரேஷ்.

 

எப்படியும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களும் “சரிதான் வரட்டும் வந்தவுடன் பெரிதாக ஒரு ரிசப்ஷனையும்.. நம் குலதெய்வ கோயில் தாலி கட்டி கல்யாணமும் செய்து வைக்கலாம்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 

அதனால் அவர்கள் ஜோடியாக வந்ததில் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவள் கர்ப்பம் தாங்கிய வயிற்றை பார்த்ததும் சற்று அதிர்ச்சி..! சரி அதையும் வீட்டுக்குள் சென்று பேசிக்கொள்ளலாம் என்று இருக்க.. இப்போது ராவண்னின் தரிசனம் அவர்களுக்கு இடைஞ்சலாய்..!

 

அவனோ அவரது அதட்டலையும்.. அவர் குரல் உசத்தலையும்.. அவரின் அமர்த்தலான தோற்றத்தையும் சற்றும் கண்டு கொள்ளாமல் “கண்டிப்பாக திருஷ்டி வரக்கூடாதுனு தானே இதை சுத்துறிங்க.. சரிதான் குழந்தைக்காக தானே சுத்துறீங்க? அப்போ அந்த குழ

ந்தையை கொடுத்தவனையும் சேர்த்து சுத்துங்க?” என்றானே பார்க்கலாம்..!

 

கந்தரவகோட்டை சமஸ்தானமே கலங்கி போயிருச்சு போ..!!!

 

 

அசுரன் வருவான்..!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top