கிளி 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

17

 

 

மருமகளை புது மணமக்களிடம் அண்டவிடாமல் அடை காத்துக் கொண்டிருந்தார் ராசாமணி. ஆனால் எத்தனை நாள் அப்படி காத்து விட முடியும் அவரால்?? 

 

 

முதல் இரண்டு மூன்று நாட்கள் தயாளன் கூடவே இருந்தாள். அதன்பின் அவ்வளவாக வெளியே வரவில்லை தாரிகா.. ஏதோ ஒரு மோன நிலையிலேயே இருந்தாள். சாப்பாடு சாப்பிடும் சமயத்தில் மட்டும் ராசாமணி வந்து அழைத்தால், அமைதியாக உண்டு விட்டு வந்து மீண்டும் அவர்கள் அறையில் ஐக்கியமாகி விடுவாள். தயாளனை அவளால் பார்க்கவே முடியவில்லை. எப்போது போகிறான்? எப்போது வருகிறான்? எங்கு போகிறான்? என்று எதுவுமே சொல்வதுமில்லை இவளும் கேட்பதும் இல்லை.

 

 

மறு வீட்டுக்கு அழைக்க போன் செய்த மகளிடம் இரண்டு மூன்று நாட்கள் போகட்டும் என்று கூறியிருந்தார் ராசாமணி. அங்கும் கதிரேசன் இன்னும் கோபம் தணியாமல் தான் இருந்தார். ஆனால் பேசிப்பேசியே அவரை கொஞ்சமாகக் கரைத்திருந்தார் ஆடலரசி.

 

 

மனைவி என்றால் கல்லாக இருக்கும் பெரும்பாலான கணவன்மார்கள் மகள் என்றதும் உருகி விடுவது உலக இயல்புதானே!! அதுவும் மனைவி அதிகாரத்தை விட மகளதிகாரமே அதிகம் செல்லுபடியாகும்!! 

 

இத்தனை நாளாக தனது மனதோடு தான் போராடிக் கொண்டிருந்தாள் தாரிகா.. இவளால் இந்த வாழ்வை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை இதிலிருந்து விடுபடவும் முடியவில்லை.

 

 

கல்யாணமான மறுநாளே பாட்டி எதுவும் சில்மிஷம் செய்திருக்கிறார் என்று புரிந்துகொண்ட தயாளன் அவரை தனியே அழைத்து, மிரட்டி கேட்க.. அவரோ சூடம் ஏற்றி சத்தியம் செய்துவிட்டார் தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று.

 

 

ஆனாலும் அவன் நம்பாமல் மறுநாள் அவர் கொடுத்த பாலை குடிக்கவில்லை. ஆனாலும் தன் கையருகிலும் கண்பார்வையிலுமே மனைவியை வைத்திருந்தான்.

 

 

இரண்டு நாட்களாக தன்னை அடை காத்தவன், இந்த மூன்று நாட்களாக எங்கே செல்கிறான்? என்ன செய்கிறான்? என்று ஒன்றும் புரியாது.. யாரிடமும் எதுவும் கேட்கப் பிடிக்காது.. தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தாள் தாரிகா.

 

 

தன்னைத் தானே சுய அலசல் செய்யும் பொழுதுதான் தாயை எப்படி எல்லாம் தான் அவமதித்து இருக்கிறோம்? அவர் பேச்சைக் கேட்காமல் எப்படி எல்லாம் வார்த்தைகளால் அவரை நோக அடித்தியிருக்கிறோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது அவளுக்கு.

 

 

கொஞ்சநாள் விட்டால் தானாகவே சரியாகி விடுவாள் என்ற நினைத்த ராசாமணி அவள் சரியாகாததை கண்டு, "என்னடா கண்ணு ஏன் இப்படி நீயே அடைந்து கிடக்கிற? ஏற்கனவே உங்க அத்தக்காரிக்கு இந்த கல்யாணம் பிடிக்காம.. எப்ப உங்கள அத்து விடலாம்னு பாத்துட்டு இருக்கா.. நீ இப்படி ஒட்டாமல் கொள்ளாமல் இருந்தால் என்னடா தங்கம்.. அம்மாவும் உங்க வாழ்க்கையை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறா இல்லையா?" என்று தாடையை பிடித்துக் கொஞ்சும் தன் அம்மாச்சியின் கைகளை தட்டிவிட்டாள் தாரிகா.

 

 

"இப்ப மட்டும் என்ன தங்கம் கண்ணு வந்து கொஞ்சுற.. இவ்ளோ நாளா உன் கண்ணுக்கு தெரியல தானே.. பிள்ளையும், அவர் பெற்ற பசங்களும் மட்டும் போதும்னு, எங்கள அம்மாவ கண்டுக்காம இருந்தது எல்லாம் எனக்கு தெரியாது நினைச்சியா? நீங்க செஞ்சது கூத்துனால தான் எனக்கு உங்களை எல்லாம் பிடிக்காம போச்சு என்ன தான் அப்பாவும் மாமாவும் சண்டை போட்டு கிட்டாலும் நீ எப்படி அம்மாவை விட்டு கொடுக்கலாம்? எப்படி அவங்கள பார்க்காமல் இருக்கலாம்?" என்று வெட்டுவெட்டு என்று கேள்வி கேட்கும் தன் பேத்தியை கண்கள் கலங்க பார்த்தார் ராசாமணி.

 

 

"எதுக்கு இப்படி கண்ணுல தண்ணி வைக்கிற? உண்மையைத்தானே சொன்னேன்!!"

 

 

"இல்லடா கண்ணு.. இது வந்து சந்தோசத்துல வரது" என்று முந்தானையில் கண்களை துடைத்தவர் "நானும் அம்மாவும் பார்த்துக்கல பேசிக்கிலனு உனக்கு தெரியுமா? எதுக்கு கோவில் குளம் கல்யாணம் காட்சி எல்லாம் இருக்கு? வாரம் வாரம் தவறாமல் துர்க்கை அம்மன் கோயில் சந்திப்போம். யார் சொன்னாலும் என் பொண்ணை விட முடியுமாடா? ஒரு கட்டத்துக்கு மேல மாமியாரா நான் ஒதுங்கி தான் இருக்கனும். மகனே ஆனாலும் அவன் வாழ்க்கையில் தலையிட்டு குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்க கூடாது.. ஆனால் என் பேரன் பேத்திகள் வாழ்க்கை என்று வரும்போது மகனாவது மருமகளாக தூக்கிப்போட்டுவேன். இப்படி சோர்ந்து போய் உட்காராதே கண்ணு" என்று அவர் சென்று விட்டார்.

 

 

மதியம் சாப்பிட சாப்பாடு மேசையில் அமர்ந்திருந்த தாரிகாவை பார்த்ததும் வஞ்சனை புன்னகை வந்து அமர்ந்தது வந்தனாவின் வதனத்தில்..

 

வேண்டுமென்றே கையில் போன் எடுத்துக் கொண்டு வந்தவர் "அண்ணி எப்படி இருக்கீங்க? என் மருமகள் எப்படி இருக்கா? அவளை வருத்தப்பட வேணாம்னு சொல்லுங்க.. கொஞ்ச நாள் தான் வீட்டுக்கு வந்த பீடையே ஒட்டடை அடித்து துரத்திவிட்டு.. தங்கமாக தூக்கிவந்து நடு வீட்டில் வைத்து அழகு பார்ப்பேன் சொல்லுங்க என் மருமகளை"

 

 

……..

 

 

"ஆமா.. ஆமா.. நான்தான் போய் மருமகளை பார்த்துட்டு வரச்சொன்னேன்! வந்தானா இன்னைக்கு? அப்பாடி இப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு.. கூடிய சீக்கிரம் நல்லதே நடக்கும்" என்று மருமகளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே தன் அண்ணன் வீட்டிற்கு மகன் சென்றதை குறிப்பிட்டு பேசினார்.

 

"நல்லா கொட்டிக்கோ.. கொஞ்ச நாள் தான் டி.. அதுக்கப்புறம் உன்னை ஓட ஓட விரட்டிட்டு என் அண்ணன் பொண்ணை கொண்டுவரனேனா இல்லையான்னு பாரு" என்று தெனாவட்டாக பேசிய மாமியாரை பார்த்தவள் சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டு முடித்து எழுந்தார்.

 

"எங்க அப்பாவுக்கு பாதி சாப்பாடுல எழுந்தா புடிக்காது.‌. எங்க அம்மாவுக்கு சாப்பாடு வேஸ்ட் பண்ண பிடிக்காது.. அது தான் நீங்க பேசி முடிக்கட்டும் என்று வெயிட் பண்ணுனேன்.. அத்த"

 

 

"என்னது உங்க மருமகளை கூட்டிட்டு வந்து அழகு பார்ப்பீர்களா? என்னனு? உங்க பையனுக்கு பொண்டாட்டியாவா? அவ்வளோ தைரியம் இருக்கா உங்களுக்கு? முடிஞ்சா செய்யுங்க.. ஆனா அதுக்கப்புறம் நீங்க உங்க புள்ள அந்த பொண்ணு எல்லாரையும் உள்ள தள்ளி கம்பி எண்ண வைத்து களி திங்க வச்சுருவேன். ஆனா அவ்வளவு தூரத்துக்கு எல்லாம் போகாது.. அந்த பொண்ணை திரும்பிக்கூட பார்க்கமாட்டார் என் புருஷன். பார்க்க விட மாட்டேன் நானு" என்றவள், 

 

 

சமையலறையில் நின்றிருந்த ராசாமணியை பார்த்து "அம்மாச்சி அன்னைக்கு மாதிரி பாலை நல்லா சூடா காய்ச்சி எடுத்து வைங்க.. நைட்டுக்கு வேணும்" என்று கண்ணடித்து குறும்பு புன்னகையுடன் சென்றாள்.

 

"அய்யோ.. என் பேரன் நிலைமை" என்று

மருமகள் காதில் விழ சத்தமாக அலறினார் ராசாமணி!!

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top