14
முதலில் கண் விழித்தது என்னவோ தயா தான்.
தாரிகாவுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமே கிடையாது. காலையில் அன்னையின் சுப்ரபாதமும் அபிஷேகமும் இல்லாவிடில் கண் விழிப்பதே சிரமம்.
அதுவும் நேற்று நடந்த கூடலின் சுக களைப்பில் இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
கண் விழித்த தயா வழக்கம் போல கைகளை தேய்த்து முருகா என்று கூற வந்தவன், வலது கை எங்கோ மாட்டி இருப்பதுபோலத் தோன்ற.. மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவனது கைவளைவில் தலையை வைத்து சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள் அவனின் மனைவி தாரிகா.
நேற்று நடந்த திருமணமும் மற்ற நிகழ்வுகளும் அந்த ஷணத்தில் அவனது ஞாபகத்தில் இல்லை. குழந்தை போல மேல் இதழை பிளந்து தூங்கும் அவளை தான் பார்த்தான். பிறை நெற்றி.. அடர்ந்த புருவங்களை வில் என திருத்தம் பண்ணியிருந்தாள்.. கூரிய மூக்கும் சிப்பி இதழ்களும் கனிந்த கன்னங்களுமாய் இயற்கையான அழகில் மிளிர்ந்தாள். கூடவே மொட்டாக இருந்தவள் நேற்று மலர்ந்திருக்க அது அவளின் அழகை சற்றே கூட்டிக் காட்டியது
அவனையும் மறந்து சற்று நேரம் அவளை ரசித்தவனின் இடது கையின் சுட்டு விரல் அவளின் முகவடிவை மென்மையாக அளந்தது.
மெல்ல மெல்ல அவளது நெற்றி மூக்கு கன்னம் என முகத்தில் ஊர்வலம் வந்த அவனது விரல் இதழ்களுக்கு இடையே வந்து சற்று நிதானித்தது.
சட்டென்று தூக்கி வாரி போட்டது போல் கை விரலை எடுத்தவனுக்கு அப்போதுதான் நேற்று நடந்த திருமண கூத்தும் அதன் பின்னே நடந்த மோக ஆலாபனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகத்திற்கு வந்தது.
இருவரும் இணைந்ததற்கான சாட்சியாக அவர்கள் இருக்கும் நிலையே உணர்த்த.. தலையிலடித்துக் கொண்டவன் "எப்படி? எப்படி இது நடந்தது?" என்று புரியாமல்.. அவள் முழித்து கேட்டால் என்ன சொல்லி விளக்குவது என்று விளங்காமல் நெற்றியை நீவிக் கொண்டான்.
"தயா.. தயா.. என்ன செய்து வைத்திருக்க?"
முதலில் இங்கிருந்து எழுந்து செல்ல வேண்டும் இந்த நிலையில் அவளை பார்க்க முடியாது என்று அவன் வேகமாக எழ முயற்சிக்க, அவளோ இன்னும் அவனை தலையணை எனக்கருதி இறுக்கமாக அணைத்துவாறு தூக்கத்தை தொடர்ந்தாள்.
"புள்ளைய பெக்க சொன்னா தொல்லையைப் பெத்து இருக்கு இந்த அரசி அத்த.. வயசு என்ன ஆகுது? இப்ப தான் சின்ன புள்ள மாதிரி தலையணைக்கு பதில் என்னை கட்டிப்புடிச்சு தூங்குறா?
ஆள் பார்க்க விடுத்தான் மாதிரி இருந்தாலும் வசம்பாட்டம் இருக்கு கை காலெல்லாம்.. நகர்த்த முடியுதா பாரு.. குள்ளச்சி" என்று புலம்பிக்கொண்டு மெல்ல தன்மேல் அவள் போட்டு இருந்த கை கால்களை அவள் தூக்கம் கலையாமல் மெதுவாகப் பிரித்து எடுத்தான்.
அவன் எங்கே அறிந்தான்? இவன் வேகமாக பிரித்தால் கூட அவளுக்கு தெரியாது என்றும்.. அவள் கும்பகர்ணனுக்கு தங்கையாக பிறக்க வேண்டியவள் என்றும்..
எழுந்து அமர்ந்தவன் குளியலறையில் குளிக்க செல்லும் பொழுது தான் தனக்கான மாற்று உடைகள் இங்கு இல்லை என்று அறிய.. ஐயோ என்றானது அவனுக்கு. இதோடு எப்படி கீழே செல்வது? அதை விட இவளை இந்த கோலத்தில் விட்டுவிட்டு செல்லவும் முடியாது.
"லூசு இவ.. எழுந்து பார்த்தா என்ன கத்து கத்த போகுதோ.. ஏன் டா தயா உனக்கு இவ்வளவு அவசரம்?" என்று நினைத்தவாறே நேற்று அமர்ந்து அதே ஒற்றை நாற்காலியில் அவள் விழிப்பதற்காக காத்திருந்தான்.
அதே நேரத்தில் எங்கேயோ போன் அடிக்கும் சத்தம் கேட்க சுற்றி முற்றி பார்த்தான். "நாமதான் நேத்து போனை கோவத்துல தூக்கி போட்டுட்டோமே இது யாருடைய போன்? ஒருவேளை இவளோடதாக இருக்குமோ? என்ன கலவரம் நடந்தாலும் இந்த பெண்கள் மட்டும் போனை கையோடு வைத்து இருப்பார்கள் போல!! விசித்திர ஜந்துகள்!!" என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது போன் சத்தம் அடங்கி மீண்டும் ஒலிக்க.. தூக்கக் கலக்கத்திலேயே கைகளால் மெத்தையில் தடவினாள் தாரிகா.
மெத்தையில் கிடைக்காமல் போக இடை வரை கீழே குனிந்து கட்டில் அடியில் கிடந்த ஃபோனை கைகளால் துழாவி துழாவி எடுத்தவள், அதை காதுக்கு வைத்தவாறு மீண்டும் கட்டிலில் படுத்தாள். அவள் செய்யும் குரங்கு சேட்டையை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.
காதுகளை வைத்தவள் "ஹலோ.." என்று கரகரத்த குரலில் பேச..
"ஏ பாப்பா இன்னும் எந்திரிக்கலையா நீனு? மணி எத்தன ஆகுது.. இன்னும் தூக்கத்தில் இருக்கியா? சீக்கிரம் எழுந்து கீழே போய் குளிச்சிட்டு விளக்கேத்து!!" என்று அம்மாவின் சுப்ரபாதத்தில் மெல்ல ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தவள்,
"என்ன மா புதுசா விளக்கேத்த சொல்ற? நான் என்னைக்குமா குளிச்சிட்டு பூஜைஅறைக்கு போய் விளக்கு ஏத்தி இருக்கேன்.. போய் அந்த அகிலனை ஏத்த சொல்லு" என்று போனை அணைத்து விட்டு தூக்கத்தை தொடர்ந்தாள்.
ஏதோ தோன்ற சட்டென்று விழித்து விழுந்தவள் தான் இருக்கும் நிலையை பார்த்து முதலில் அதிர்ந்து, பின் திரும்பி அவனைப் பார்க்க நேற்றைய போல் தாடையை உள்ளங்கையில் தாங்கியவாறு அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தயாளன்.
போர்வையை வாரி தன்னோடு சுருட்டிக் கொண்டு.. "ஏய்.. அய்யனாரு.. என்னடா பண்ணுன என்னை? யூ ராஸ்கல்.." என்று அவள் பாட்டுக்கு விசை பாட..
காதை குடைந்தவன் "இப்போ நீ பேச்சை நிறுத்த போறியா இல்லையா?" என்று கர்ஜிக்க.. அதிர்ந்து கட்டிலோடு ஒன்றி அமர்ந்தாள் மருண்ட மான்விழியாள்.
அதே நேரம் "ஐயா ராசா… கோவிலுக்கு போகணும் யா.. நேரத்தோட எழுந்து வா யா.." என்று ராசாமணி பாட்டி குரல் கேட்க..
அச்சோ என்றானது தயாளனுக்கு!!
தொடரும்..
தயா இஸ் ஆன் 🔥 🔥 🔥 🔥