கள்ளம் கொண்டாயோ காதல் அரக்கா
அத்தியாயம் 1
மும்பை சென்றுக் கொண்டிருந்த ட்ரெயினில் அமர்ந்திருந்த கீர்த்தனாவின் முகமெல்லாம் அப்படியொரு பூரிப்பு.. அளவில்லா மகிழ்ச்சி..
முகமெல்லாம் மலர்ந்து, மெல்ல தோள் சாய்ந்தாள் தன் கணவனின் மேல்..
அவள் கணவன் தேவனும் மெல்ல திரும்பிப் பார்த்தான்.. அவனைப் பார்த்ததுமே அகமெல்லாம் மலர்ந்து சிறு புன்னகை செய்தாள்..
அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்தவன், ஜன்னல் அருகில் திரும்பிக் கொண்டான்..
“மாமாஆஆஆ..” என்றாள் சற்று முனகலாக..
“ம்ம்..” என்றவனின் முகவாயைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவள்,
“எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும் மாமா..” என்றாள் வாக்குமூலம் போல..
“ம்ம்.. தெரியும்..” என முடித்து விட்டான் ஒற்றை வரியில்..
“மாமா.. என்னைப் பாரு..” என்றாள் மறுபடியும் முகவாயைப் பற்றிக்கொண்டு,
“ப்ச்ச்.. கீர்த்தனா, உனக்கு என்ன வேணும்?.. இது ட்ரெயின்.. சின்னப்பசங்க எல்லாரும் இருக்காங்க..” என்றான் சற்று கரகரப்பான குரலில்..
அவன் கோபத்தை உள்ளடக்குகிறான் என்பது நன்றாக புரிந்தது..
“கோவிச்சுக்கிட்டீங்களா மாமா..” என்றாள் சற்று கம்மிய குரலில்..
ஏனோ அவன் கோபத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
அவள் முகம் வாடியதைப் பார்த்ததுமே, நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டான் தேவன்..
“இங்கே பாரு கீர்த்தனா.. எனக்கு வளவளன்னு பேசுனா சுத்தமா ஆகாது.. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா வா.. நீ வேணும்னா ஜன்னல் கிட்ட உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு வா..” என்று விட்டு எழ முயற்சிக்க.
“இல்லை மாமா.. நீயே உட்காரு.. காத்து வேகமாக வரும்.. எனக்கு விசிங் வரும்னு உனக்குத் தெரியும்ல மாமா..” என்றாள் தன் சீதன உடலை சுட்டிக்காட்டியபடி..
அவனோ எதுவுமே பேசவில்லை..
மறுபடியும் ஜன்னலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..
அவனின் பேச்சைக் கேட்டு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தாள்..
அதுவே பெரிது என்பதை போல் மறுபடியும் பேச ஆரம்பித்தாள்..
“இவளிடம் பேசினால் நம் நேரம் தான் வீண்..” என காதை மட்டும் அவள் புறம் திருப்பியவன், தன் யோசனையிலே உழன்றுக் கொண்டிருந்தான்..
அவன் தேவன்..
வயது 29
ஊரை விட்டு அவன் வரும் போது வயது 21.. மும்பை வரும் பொழுது அவன் கையில் இருந்தது ஒரு டிகிரி சர்டிபிகேட் மட்டும் தான்.. அதை வைத்து ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தான்..
மேல் படிப்பு வேலை பார்த்துக் கொண்டே தான் படித்தான்..
பி.ஹெச் டி வரை முடித்தான்..
இப்பொழுது பிரபலமான அருள்குமரன் கல்லூரியில் கணித ஆசிரியராக இருக்கின்றான்..
திடீரென்று தன் அன்னைக்கு உடல் சீராக இல்லை என அழைப்பு வந்தது..
அடித்து பிடித்து ஓடிச் சென்றவனுக்கு பேரதிர்ச்சி.. அங்கு மணவறை தான் அவனுக்காக காத்திருந்தது..
கீர்த்தனா 23 வயது பேரிளம் பெண்.. அவனின் அத்தை மகள் கூட..
பார்ப்பவர்களின் கண்களை கட்டியிழுக்கும் காந்தக் கண்ணழகி..
ஆனால் நம் தேவனை கட்டியிழுக்கவில்லை என்பது தான் மெய்..
அவளை கல்லையும், மண்ணையும் பார்ப்பது போன்று பார்த்தான் தேவன் முதல் தடவை..
கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தவனை, முழுக்க.. முழுக்க கட்டாயப்படுத்தி, மிரட்டி, உருட்டி தான் தாலி கட்ட வைத்திருந்தனர்..
வேண்டா வெறுப்பாக தான் தாலியைக் கட்டியிருந்தான் தேவன்..
அதற்காக வாழவில்லையா? என்று கேட்டால், அது தான் இல்லை.. வாழ்ந்து விட்டான்..
அவளுடன் பூரணமான தாம்பத்ய வாழ்க்கையை துவங்கி விட்டான்..
அவள் பேச, பேச அவளின் ஈர இதழ்களை தன் வசமாக்கி விட வேண்டுமென்ற ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் தான் அவள் புறம் திரும்பாமல் இருக்கின்றான் தேவன்..
ஆனால் அதைப் புரிந்துக் கொள்ளாத கீரத்தனா.. சிறு கோவத்துடன் வேகமாக திரும்பியவள், கண்கள் கலங்க சீட்டில் தலை சாய்த்து படுத்து விட்டாள்..
எப்பொழுது உறங்கினாள் என கேட்டால் அவளுக்கே தெரியவில்லை..
“கீர்த்தனா.. கீர்த்தனா..” என கீர்த்தனாவின் தோளை தட்டினான் தேவன்..
“குட்மார்னிங் மாமா..” என்றவளை முறைத்தவன்,
“மும்பை வந்துட்டோம்.. எழுந்து வா..” என்றான் சற்று அதட்டலான குரலில்..
“இதோ..” என தான் கொண்டு வந்த பையைப் பார்க்க.. அனைத்து பைகளும், தேவன் கையில் இருந்தது..
அதைப் பார்த்தவளின் மனதில் சிறு பூஞ்சாரல்..
“ஹை.. மாமான்னா மாமா தான்.. சும்மாவா இவரைக் காதலிச்சேன்.” என உள்ளுக்குள் சொன்னபடி, அவனோடு சேர்ந்து சென்னை மண்ணை மிதித்தாள் கீர்த்தனா..
முதல் முறை ஊரை விட்டு வருகிறாள்.. சிறு அச்சமும், அதனோடு சேர்ந்த படபடப்பும் அவளுக்கு அதிகமாக இருந்தது..
“கீர்த்தனா, இங்கே நில்லு..” என தாம்பரம் பாலத்தின் அருகில் ஓரிடத்தைக் காட்டினான்..
சலசல என ஓடும் நதியைப் போன்று, மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.. அதையே விழி விரித்துப் பார்த்தாள் கீர்த்தனா..
“மணி என்ன மாமா?..” என்றவளின் கேள்விக்கு, தன் கைகளில் கட்டியிருந்த வாட்சை திருப்பிப் பார்த்தான் தேவன்..
“மணி 5.45” என்றவனைக் கண்டு விழி விரித்தாள் கீர்த்தனா..
“என்ன மாமா சொல்லுறீங்க?.. அவ்வளவு தானா?.. இம்புட்டு சிக்கீரமா இவுங்க எல்லாரும் எங்கே போறாங்க..” என்றவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன்,
“அவுங்க எல்லாரும், வேலைக்குப் போறாங்க..” என்றவன், வழியில் வந்த ஆட்டோவின் அருகில் சென்று இடது கையை எடுத்து நீட்டினான்..
உடனே ஆட்டோ நின்றுக் கொண்டது..
“அண்ணா தாராவி போகணும்..” என ஹிந்தியில் மொழிந்தவன், அங்கிருந்தே
“கீர்த்தனா.. வா..” என்றதும், அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததை மறந்து கணவன் பின்னால் ஓடினாள் கீர்த்தனா…
முழுதாக முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு வந்து சேர்ந்தனர் தேவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு..
தனியாக இருந்தது அந்த வீடு.. அதன் அருகில் பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் இருந்தது..
“வாடகை வீடா மாமா?..” என்றாள் சற்று கம்மிய குரலில்.
“இல்லை.. லீஸ்க்கு இருக்கிறேன்.” என்றதும் தான் சற்று மூச்சே வந்தது அவளுக்கு..
“ஓஹ்..” என்றவளுக்கு, மும்பை மண்ணை மிதித்ததும், தங்களுக்கென்று சொந்த வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது..
“மாமா.. இதே மாதிரி நம்மளுக்குன்னு ஒரு சொந்த வீடு வாங்கணும் மாமா..” என்றபடி வலது காலை எடுத்து உள்ளே வைத்தாள் கீர்த்தனா..
அவளுக்கு நன்றாக தெரியும்.. உள்ளிருந்து யாரும் வந்து ஆர்த்தி எடுக்க மாட்டார்கள் என்று..
அதனால் அவளே சம்பிராதயம் எதையும் பார்க்காமல் உள்ளே நுழைந்து விட்டாள்..
“மாமா.. கேட்டைப் பூட்டாம வந்திருக்கீங்க?..” என்றாள் கீர்த்தனா, சற்று படபடப்பாக..
“செடிக்கு தண்ணீ ஊத்திட்டு, வீட்டு வேலை செய்யவும் ஒரு பாட்டி வருவாங்க.. அவுங்களுக்காகத் தான் கேட் திறந்து வச்சிருப்பேன்..” என்றபடி கதவை திறந்தான் தேவன்..
அவனோடு சேர்ந்து உள்ளே நுழைந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..
“என்ன மாமா?.. வீட்டை இப்படி துடைச்சி வச்சிருக்கீங்க?..” என அதிர்ச்சியாக கேட்டாள் கீர்த்தனா..
“எனக்கு சுத்தமா இருந்தா தான் பிடிக்கும்.. அந்தந்த பொருள் அந்தந்த இடத்துல தான் இருக்கணும்..” என்றவன், மெல்ல அருகில் இருந்தவளை நெருங்கினான்..
அவனின் கூர்விழி பார்வையோடு கலந்த நெருக்கம், அவளை தடுமாற வைத்தது..
“என்னாச்சி மாமா?..” என்றாள் ஹஸ்கி வாய்ஸில்,
“நிறைய வேணும்னு தோணுது.. தருவீயா?..” என்றான் அழுத்தமாக, அவளின் காதோடு உரசியவாறே..
இத்தனை நேரம் இருந்த சிடுமூஞ்சி சிங்காரம் இவன் இல்லை என்பது நன்றாக புரிந்தது..
“என்னஹ் வேணும்?..” என கேட்கும் போது நா தடுமாறியது கீர்த்தனாவிற்கு..
“நீதான்..” என்றவன், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் இதழ்களை களவாடிக் கொண்டான்..
முதலில் தடுத்த கரங்கள், அவனின் அழுத்தத்திலும், வன்மையிலும், மென்மையிலும், அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தது..
ரசித்தான்.. ருசித்தான்.. அவளை மொத்தமாக களவாட ஆரம்பித்தான்..
அவளும் ரசித்தாள்.. முத்தத்தில் பலவகை அறிய வைத்தான் சில நாட்களிலேயே..
கல்விப்பாடம் சொல்லிக் கொடுப்பவன், இப்பொழுது கலவிப்பாடம் படித்துக் கொண்டிருந்தான்..
மோகம் முனகலாக மாறியது. முத்தங்கள் இருவரிடத்திலும் பரிமாறப்பட்டது..
எச்சில்களை சுகமாக உணர்ந்தனர் இருவரும்.. அவள் வலியில் முகம் சுழிக்க.. நிதானமாக இயங்கினான்..
தன் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவனின் மேல் அளவற்ற காதல் தான் தோன்றியது..
அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகள் ஒவ்வொன்றிற்கும் அழுத்தமான முத்தங்கள் பரிசாக வந்து விழுந்தது அவளின் சிப்பி வயிற்றில்..
அவளுக்குள் கரைந்து காணாமல் சென்றுக் கொண்டிருந்தான் தேவன்..
இனிய இல்லறம் தான்.. அதில் தங்குதடையின்றி முன்னேறினான்..
செல்லமான இம்சைகளுடன் அவனின் உரசல்களும், முனகல்களும் பெண்ணவளை அதிகமாக வதைத்தது.. அதிகம் அவனை பிடிக்கவும் வைத்தது..
“மா..மாஆஆஆ..” என்றவளின் தாப சத்தங்கள், அவனை பித்தம் கொள்ள வைத்தது..
அவளுக்குள் கலந்து விலகி படுத்தவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி சரிந்தாள் கீர்த்தனா..
அவளின் தலையை மெல்ல கோதிக் கொடுத்தான் தேவன்..
‘கஷ்டமா இருக்கா?..’ என அவன் வாய் கேட்கவில்லை.. ஆனால் கைகள் தானாக அவளின் தலையை கோதி விட ஆரம்பித்தது..
அவனின் அக்கறையான அந்த தழுவலில், விழிகள் சொருக. தன் மாமனை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள் கீர்த்தனா..
மும்பைக்கு எப்பொழுதும் பல முகம் உண்டு.. அதில் ஒன்று இருளின் நிழலாய் இருக்கும் ஒரு முகம்..
அந்த இருள் பலரை அச்சுறுத்த வல்லது..
இன்றும் இருளைக் கண்டால் பலர் அஞ்சுவார்கள்..
அந்த இருளில் தன் கம்பீர நடையில் வந்துக் கொண்டிருந்தான் அவன்..
அசுராந்தகன்..
அவன் பெயரைக் கேட்டால் தெரியாத ஆட்கள் இல்லை..
ஒன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட ரெளடியில் இருந்து, பெரிய பெரிய தலைவர்கள் வரை அவன் பெயர் அடிபடும்.. அந்தளவிற்கு அவன் பிரபலம்..
அவனின் முகத்தை இதுவரை பார்த்தவர் எவரும் இல்லை..
இன்றும் யாரும் பார்க்க முடியாத வண்ணம்.. முகத்தை கருப்பு நிற கர்ச்சீப்பால் மறைத்துக் கொண்டு தான் வந்திருந்தான் அசுராந்தகன்..
நாலைந்து பேர் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரை சுற்றி வட்டம் போட்டு வைத்திருந்தனர்..
“வேண்டாம் அசுரா என்னை விட்டுடு.. ப்ளீஸ் என்னை விட்டுடு..” என கதறிக் கொண்டிருந்தார் அவர்..
கருப்பு நிற கூட்டமே தன்னை சூழ்ந்து நிற்பதில் புரிந்துக் கொண்டார்..
தன்னைக் கடத்தியிருப்பது அசுராந்தகனின் கூட்டம் என்று.. இனி தப்பிச்செல்ல ஒரே வழி.. அசுராந்தகனின் காலில் சரணாகதி அடைவது ஒன்று தான்..
வேறு வழியில்லாமல் தான் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தார்..
எதிரில் இருப்பவனின் அச்சம் கலந்த பார்வையை ரசித்தன அசுராந்தகனின் கண்கள்..
“விடலாமே..” என்றவன், தன் அடியாட்களை கண் காட்டிட, அவன் மேல் இருந்த பயத்தில் பின்னங்கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தவனின் முதுகில் சொருகிய பெரிய வாள், நெஞ்சு வழியாக வெளியே வந்தது..
“ஹக்க்க்..” என வலியுடன் முணங்கியவாறே தரையில் வீழந்தவரை சிரித்துக் கொண்டே பார்த்தான் அசுராந்தகன்..
அசுரனின் வேட்டை இருளில் தொடரும்..
தன் மேல் திடீரென்று படரும் பாரத்தினை தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை விரித்தாள் கீர்த்தனா..
அவளின் கணவன் தான், மீண்டும் அவளிடம் தேடலை துவங்கினான்..
“மாமாஆஆஆ..” என சிணுங்கிய அவளின் செவ்விதழ்கள், ஈரத்தில் மிணுங்க.. அப்படியே விழுங்கினான் தேவன்..
“ம்ம்.. ம்ம்.” என்றவளின் மறுப்புகள் கூட, “மாமாஆஆஆ..” என மோகமாக முனங்க ஆரம்பித்தது..
கூடல் பொழுதில் சிணுங்கல், அவனுக்கு உச்ச சுகத்தை அள்ளிக் கொடுத்திருந்தது..
கூடல் முடிந்து, அவளை விட்டுப் பிரிந்தவனின் இதழ்களில் அழகிய புன்னகை..
அவள் முகத்தில் வெட்கப்புன்னகை..
“கீர்த்தனா..” என அழைத்தவனின் நெஞ்சில், லேசாக தட்டியவள்,
“போ மாமாஆஆஆ.. நீ ரொம்ப மோசம்..” என வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்..
தன் தேகத்தில் விழுந்த நீர்த்துளிகள் காதல் காயத்தால் லேசாக எரிந்தது..
அவன் கொடுத்த காதல் காயங்களை கூட ரசித்தாள்..
குளித்து முடித்து டவலைக் கட்டியபடி வெளியே வர, அங்கு படுக்கையில் குப்புற படுத்திருந்தான் தேவன்..