Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 31

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 32
Thread starter  

சூர்யா மனிஷா அமைதியாக அமர்ந்திருக்க 

அம்மா அப்பாவும் பதறிபோய் விசாரிக்க மனிஷாதான் பொய்காரணம் சொல்லி அவர்களை சமாதானபடுத்தினாள் 

விஷயம் கேள்விப்பட்ட வைதேகி தாரா கதவை பூட்டிக்கொண்டு கணவனை கட்டிகொண்டு அழுதுகரைத்தாள் 

 

 

ஒண்ணுமில்ல டி லேசான காயம்தான் அவன் சமாதானபடுத்தியும் தாரா கேட்கவில்லை அழுது கரைந்தாள் 

அறைக்குள் கண்ணீர் விட வெளியே அப்பா அம்மாவோடு இருந்த மனிஷாவுக்கு விபீஷணன் நினைவு வந்தது 

 

 

 

மாம் விபி ப்ரோ காணோம் எங்க 

 

 

அவன் காலையில் போனவனை  காணோம்டி இந்த ஊர்ல எல்லா இடங்களிலும் பழக்கமானதுதானு சொல்லிட்டு போனான் 

உன் பாட்டி வருது பேசாம இரு 

வைதேகி நீயும் உள்ளபோய் அவளை அடக்கிவை அம்மாவுக்கு சந்தேகம்வந்துரும்  அழகி கூறவும்  வைதேகி உள்ளேபோய்  அவர்களை பிரித்துவைத்தாள்

 

 

பாட்டியும் தாத்தாவும் வந்து நலம்விசாரித்துவிட்டு  அவன் அருகிலேயே அமர்ந்துகொண்டனர் 

தாரா முகத்தை கழுவிக்கொண்டு வெளியேவர

அழகி கண்களால் சமாதானம் செய்தார்

மனிஷா விபீஷணனுக்கு போன்போட்டு ஓய்ந்துபோனாள் ஸ்விட்ஆப் என்றே வந்தது உள்ளுக்குள் பயமாக இருந்தது

அழகர் ஏதாவது செய்துவிடுவானோ என்று

தாராவிடம் அழகரை விசாரிக்க 

அவன் அப்பவே தோட்டத்துக்கு போயிட்டானே 

என்னாச்சு எதுக்கு அவனை தேடுற 

 

 

இல்ல விபீஷணன் காணோம் அவர்கூட போயிக்கான் தெரிஞ்சுக்கதான் சரி நான் பாத்துக்குறேன் கூறியவள் 

ஓட்டமும் நடையுமாக தோட்டத்திற்கு சென்றாள் 

 

மக்காச்சோளம் தலைவரை நீண்டிருந்தது இப்போதுதான் சோளம் விட்டிருந்தது அதற்கு தண்ணீர் பாய்ச்சிகொண்டிருந்தான் 

வரும்போதே அழுகையும் வந்துவிட்டது

தண்ணீர் போகும் வாய்காலில் இறங்கி நடந்தவள் அழகரை பிடித்துவிட்டாள் 

வெறும் பனியன் வேட்டிமட்டும் அணிந்து சிகரெட் பிடித்தவாறு பாயும் தண்ணீரை பார்த்தபடி அமர்ந்திருந்தான்

அவள் வந்து நின்றதும் சீகரெட்டை இழுத்து புகையை விட்டவன் நிரம்பிய தண்ணீரை மாற்றிகட்டினான்

 

 

என் அண்ணனை என்ன பன்னுன மூக்கு சிவக்க கோபத்தை இழுத்துபிடித்து கேட்க

 

 

உன் அண்ணனை நான் என்ன பனன்போறேன் 

அதான் ஒருத்தனுக்கு என்னாகும் சொல்லிட்டு பன்னிட்டேனே 

இன்னொருத்தனுக்கு என்ன பன்னலாம்னு யோசனைபன்னிட்டு இருக்கேன் பேசியவாறே தண்ணீரை திருப்பிவிட்டு மறுபடியும் சிகரெட் பிடிக்க 

அதை பிடுங்கி எறிந்தாள் 

 

என் அண்ணனை எங்கடா வச்சுருக்க 

என்மேல இருக்குற கோபத்தை

அவங்க மேல காட்டுறியா

வேணாம் 

என் அம்மா கல்யாணம் பன்னிககட்டதோட சரி 

அதுக்கப்புறம் உனக்கோ உன் குடும்பத்துக்கோ நாங்க எதுவும் கெட்டது செய்யல

தேவையில்லாம பழிவாங்கிட்டு இருக்க 

வேணாம் விட்ரு

எங்க அம்மாவ இந்த வீட்ல சேர்க்கறதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டுவந்தோம் நாங்கசேர்த்துட்டோம் நாங்க எங்க நாட்டுக்குபோறோம் என் அண்ணனை எதுவும்பண்ணாம விட்ரு 

அவனுக்கு ஏதாவது ஆச்சு உன்னை கொன்னுருவேன்டா அழுகையோடு கோபமாக கூற

அவளை பார்த்தவாறே பல்லைகடித்தான் 

 

 

நீ யாருக்கும் எந்தகெடுதலுய் செய்யலையா என்கிட்ட பொய்சொல்லி என்குடும்பத்தையே ஏமாத்தலயா நான் உன்னைவிரும்புறேன் தெரிஞ்சு அதை வச்சே  உன்னோட காரியத்தை  சாதிச்சிட்ட 

உன்னோட காரியத்தை சாதிக்கிறதுக்காக என்உணர்வோடவிளையாடிட்ட

அது தப்பா தோணலையா நான் அதுக்கு பதில் சொல்றது உனக்கு தப்பா தோணுதா நல்ல இருக்கே நீ பேசுறது 

சிரித்தவாறு பனியனிலிருந்த அவள் கையை விலக்கிவிட்டு அவளை தள்ளிவிட்டான் 

 

வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் பொத்தென விழுந்தாள்

புரிஞ்சிக்காம பேசாத நான் உன்னை விரும்புறேனு  ஒருதடவைகூட நான்சொல்லல 

நீயே வந்து சொல்லும்போதுதான் உங்கப்பாகிட்ட தைரியமா சொல்லமுடியுமான்னு கேட்டேன் மத்தபடி நானா உன்கிட்ட நெருங்கிபேசி பழகி உன்னோட மனசுல எந்தஆசையும் நான் வளர்க்கல உன்னை ஏமாத்தவும்  இல்லை

பழி வாங்குறதா இருந்தா நீ என்னோடு நிறுத்திருக்கனும்  என் குடும்பம்மேல கைவைக்குறது  கொஞ்சம்கூட சரியில்லை

என் அண்ணன் எங்கே இருக்கான் அவனைஎன்னசெஞ்ச

 

 

உன்னோட அண்ணன் வந்த வேலையை மட்டும் பார்த்துருக்கணும் ஆனா அவன் அப்படி செய்யலயே ஊருக்குள்ளே போயி எங்க ஊராளுங்களை தூண்டிவிட்டு எங்கப்பாவுக்கு எதிரா பேசவச்சதே அவன்தானே  போலீஸ்ஸ்டேஷன்வரை வக்கீல் வச்சு  பேசுவச்சதும் அவன்தானே 

என்னடா இதெல்லாம எனக்குஎப்படி தெரியும் யோசிக்குறியா

நீ எப்போ இங்க இருக்கிறது உன் குடும்பம்தான் சொன்னியோ அப்போருந்தே  ஆரம்பத்திலருந்து நடந்த அத்தனையும் யோசிச்சுபார்த்து யார் யாரை பிடிக்கனுமோ  அத்தனைபேரையும் பிடிச்சு கழுத்துல அருவாளை வச்சேன் மொத்தமா கொட்டிட்டானுங்க 

 

 

ஆக மொத்தம் உன் குடும்பமே எங்களுக்கு எதிரால வேலைசெஞ்சுருக்கு 

   எங்க ஊரையே எங்களுக்கு எதிரா திரும்பவச்சு எச்கப்பாவையே எதிர்த்துபேசவச்சு அசிங்கப்படுத்திருக்கீங்க 

பண்றதெல்லாம் பண்ணிட்டு  இப்போ உங்க குடும்பத்துக்கு கெட்டது எதுவும் செய்யலன்னு வேறசொல்ற எப்படிவாய்கூசாம உன்னாலசொல்லமுடியுது

 

 

ஐயோ கடவுளே சத்தியமா நாங்க கெட்டது நினைச்சு எதுவும் பண்ணல 

அடிதடிவெட்டுகுத்து  சாதினு நீங்க பன்ற தப்பானவேலலய நிறுத்துனோம் 

  மனச தொட்டு சொல்லு இந்த ஜாதி பிரச்சனையால  எத்தனைபேர் வாழ்க்கையிழந்து  நாசமாகிருக்காங்க  அவங்களோடு சாபம் வயிற்றெரிச்சல் உங்ககுடும்பத்தை சும்மாவிடும்மா 

நாங்களே எங்க புள்ளைங்க மனசறிஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கும்போது இவங்களுக்கு எதுக்குதேவையில்லாத வேலை

என் புள்ளைங்களோட வாழ்க்கையில் தலையிட இவரு யாருனு  எப்படிபேசுறாங்க தெரியுமா 

அடுத்தவங்க குடும்பத்தில அவங்க பிள்ளைகளோட வாழ்க்கையில தலையிட நீங்கயாரு உங்களுக்கு என்னஉரிமை இருக்கு 

அதனாலதானே எல்லாரும் உங்களுக்கு எதிராபேசினாங்க 

இதுல எந்த தப்பும் இல்லையே நீங்க செஞ்சது தப்புதானு அவங்க சொல்லிருக்காங்க 

கொஞ்சம்கூட புரிஞ்சுக்காம பேசாத அழகு

 

 

என் அண்ணன்  இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கலைன்னா

நீங்க ஜாதிவெறி புடிச்சு எத்தனை உயிரை காவுவாங்கிருப்பீங்க எத்தனைபேர் வாழ்க்கைய அழிச்சிருப்பீங்க அதனால உங்க குடும்பமும் உங்கவாழ்க்கையும் தானே நாசமாகும்

பெத்த புள்ளங்களை பறிகொடுத்தவங்க எப்படி உங்களை சும்மாவிடுவாங்க

 

 

என் அண்ணன் உங்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்கான்  ஏன் புரிஞ்சுக்கமாட்றீங்க என்அண்ணன் அப்படி வக்கீல்வச்சு எல்லாம் பேசி சரிபண்ணுனதாலதான் இப்போ உங்கப்பா இந்தமாதிரி எந்த பிரச்சினையிலும் சிக்கலயும் சிக்காம ஒதுங்கிருக்காரு 

முன்ன இருந்ததலவிட இப்போநிம்மதியா இருக்காரு

புரிஞ்சுக்கோ அழகு என்அண்ணன்‌ எங்க 

அவனை என்ன பன்னுன

 

 

என்னடி சமாதானம் பேசபார்க்குறியா? நீ என்னசொன்னாலும் சமாதானமாகி உங்களோட துரோகத்தை மறந்துடுவேன்  நினைச்சியா 

உன் அண்ணனுங்க  ரெண்டுபேரையும் நான் சும்மாவிட போறதில்லை

கோபமாக கூற

அவனை நிதானமாக பார்த்தவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது 

 

 

அழகி சொந்த ஊருக்கு வந்திருப்பதால் அதிகாலையிலேயே மாடல்உடைகள் எல்லாம் போடக்கூடாது என்று மகளுக்கு பார்த்து பார்த்து தாவணி கட்டிவிட்டிருந்தார்  தன் மகளை  பார்த்தாவது அண்ணன் மகன் மயங்கி திருமணம்செய்து கொள்வான் பிரிந்துபோன இரண்டுகுடும்பமும் ஒன்றுசேரும் என்று அவருக்கு நினைப்பு

தலைகூட வாராமல் அப்படியே ஓடிவந்திருந்தாள்‌

வெளிநாட்டில் வளர்ந்தவளுக்கு  இடுப்பு மாராப்பு  விலகுவதெல்லாம் சர்வசாதாரணமாக தோன்றியது

கண்கலங்கி அவள் நிற்பதே பார்த்தவன் பார்வை ஏதேட்சையாக அவள் இடுப்பில் விழுக 

எச்சில் விழுங்கினான் 

 

மானம்கெட்ட மனசே

இங்க என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கு

நீ என்ன பண்ணிட்டு இருக்க அவளை பார்க்கவேபார்க்காத  அவ பக்கம் உன்னோட பார்வைபோச்சு உன் கண்ண தோண்டிருவேன் அவனைஅவனே திட்டிக்கொண்டாலும்

பார்வை மறுபடியும் இடுப்புக்கும் அதற்கு மேலேயும் பயணித்தது

அவனால்கூட அந்தபார்வையை தடுக்கமுடியவில்லை

இருந்தாலும் வீராப்பாகத்தான் நின்றிருந்தான்  உன்னால் என்னடி செய்யமுடியும் என்று

 

 

கண்கலங்கியவள்   கடைசியா கேட்கிறேன் என் அண்ணன் எங்க இருக்கான்னு சொல்லமுடியுமா முடியாதா முடிவாககேட்க சொல்லமுடியாது என்னடிபண்ணுவ ஏகத்தளமாக கேட்டான்

 

 

கட்டியிருந்த தாவணியை கழட்டி தன் இரு கையையும் கட்டிக்கொண்டாள்

 

 

என்ன சோளகாட்டுக்குள்ள வச்சு உன்ன கெடுத்துட்டேனு ஊர் முழுக்க சொல்லபோறியா போ போய் சொல்லிக்கோ

விட்டேத்தியாக கூறியவனுக்கு தாவணியில்லாத அவள் கோலத்தை பார்த்து அடிவயிற்றில் ஏதோ குறுகுறுத்தது

 

அவ  என்னை ஏமாத்திருக்கா நான் வீராப்பா பேசிட்டுஇருக்கேன் ஏதாவது  ஏடாகூடமா செஞ்ச உன்னை செருப்பாலயே அடிப்பேன் டா

அவனுக்குள் அடங்காமல் எழ துடிக்கும் தம்பியை திட்டினான் 

 

 

 

கையை இரண்டு மூன்றுமுறை இறுக்கி சுற்றி வாயால் கட்டுபோட்டுக்கொண்டவள் வெளியே போக 

 

போடி போ அவனும் விட்டேத்தியாக இருக்க 

 

இவ எங்கபோறா 

 வீட்டுக்குபோற வழி 

இந்த பக்கம்தானே இந்தபக்கம் போகாம மறுபடியும் தோட்டத்துக்குள்ள போறாளே எதுக்குபோறா யோசனையோடு வெளியே வந்து எட்டிப பார்க்க அவள் கிணற்றை நோக்கிதான் நடந்து கொண்டிருந்தாள் 

ஒரு நிமிடம் பதறிபோனான் 

 

 

ஏய் மணி நில்லுடி எங்கபோற பின்னால் ஓடிவந்து அவளைஎட்டிப்பிடிக்க 

இரண்டு கையும் கட்டி பிணைத்திருக்கிறாளே அந்தகையால் அவன் நெஞ்சிலடித்து தள்ளிவிட்டாள்

 

 

என் மேல கைபட்டுச்சு செருப்பாலே அடிப்பேன் யார்டா நீ தொட்டுபேசிட்டுஇருக்க உனக்கும் எனக்கும் எந்தசம்பந்தமும் இல்லை சொல்லியாச்சு இல்லையா அப்புறம் எதுக்காக என்னை தொட்டுபேசுற என் அண்ணன்களை பழிவாங்கணுமா அவங்களை கொல்லனும்னா என்னைதாண்டிதான் அவங்கமேல கை வைக்க முடியும்

நான் ஒருத்தி இருக்கிறதாலதானே ஏமாத்திட்டேன் ஏமாத்திட்டேன் சொல்லி ஆடிட்டு இருக்க என் ஃபீலிங்ஸ் எங்கம்மாவோட வேதனைய கொஞ்சம் கூட நீ புரிஞ்சுக்கவே இல்ல 

இன்னும் எவ்வளவு ஆடணுமோ ஆடிக்கோ 

 

என் அண்ணனை பழி வாங்கிட்டேன் சொல்லி என்முன்னாடி சந்தோஷப்படுவியே அதைபாக்குறதுக்கு நான் இருக்கமாட்டேன்

கூறியவள் பின்னால் நடந்துபோக

 

 

ஏய் வேணா ... வேணா மணி உள்ள உள்ள பாம்பு மொதல்ல நிறைய இருக்கு யாரும் இந்தபக்கம் வரமாட்டாங்க 

போகாத வேணாம் ஒற்றைவிரவ் நீட்டி பயத்தோடே அருகில் வர 

 

என் அண்ணனா என்னடா செஞ்ச அவன் எங்கஇருக்கான்

மறுபடியும் அவள் அதையே கேட்க 

பல்லைகடித்தான் அழகர் 

 

அவன் பதில் சொல்லாமல் இருப்பதை பார்க்க அடுத்தநிமிடம் அவள் அந்தஇடத்தில் இல்லை கிணற்றுக்குள் குதித்திருந்தாள்  

 

 

ஐயோஓஓஓஓ மணீஈஈஈஈ துடித்துபோனவனாக அவனும் குதித்துவிட்டான்

அவன் தாத்தாவின் அப்பாகாலத்தில் தோன்டிய கிணறு 

பலமைல் ஆழத்திற்கு சென்றிருந்தாள் மனிஷா 

அழகரோ அவளை தேடி காணாமலபோக மறுபடியும் அடி ஆழத்திற்கு சென்றிருந்தான் 

மனிஷா தண்ணீரை குடித்துமயங்கிபோய் அடிஆழத்தின் மூலையில் ஒரு கம்பியில் பாவாடை சிக்கியிருக்க

அங்கேயே மயங்கி கிடந்தாள் 

பாவாடை நாடாவை கழற்றிவிட்டு அதை இழுக்க கிழிந்து கையோடு வந்தது 

அவளையும் தூக்கி மேலே வந்தவனோ நெஞ்சோடு அணைத்துகொண்டு அழுதான்

 

 

அறிவு கெட்டவளே ஏண்டிஇப்படி செஞ்ச உனக்கு ஏதாவது ஆனா 

நான் என்னடி பண்ணுவேன்

என்னை பாரு மனிமா பயமா இருக்கு அவள் கன்னத்தை தட்ட அவளோ கண்விழிக்கவில்லை

தூக்கி தோளில் போட்டுகொண்டவன் மேலேவந்து மோட்டார் ரூமுக்குள் இருந்த கட்டிலில் போட்டு  

அவள் வயிற்றை அழுத்தினான்

தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் வெளியேறியது 

அவள் வாயோடு வாய் வைத்து உறிஞ்சியதில் மீதி தண்ணீரும் வெளியேறியது 

தண்ணீர் மொத்தம் வெளியேவந்த பிறகு இருமலோடு கண்திறந்தாள் 

அழகரோ கண்கலங்கி அவளை தூக்கி நெஞ்சோடு அணைத்துகொண்டான் 

அவன் இதயம் இன்றே வெடித்துவிடுவதுபோல் அப்படி துடித்துக்கொண்டிருந்தது

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top