கிளி 11

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 201
Thread starter  

11

 

 

"ஏய் அன்பு… என்ன மசமசன்னு நிக்குறவன்.. போ.. போய்.. என் பேர புள்ளைங்க மொத ராத்திரிக்கு எல்லா ஏற்பாடும் பண்ணு" என்று தன் வெங்கலக் குரல் கணீரென்று வீட்டின் நடுவில் நின்று கூவினார் அன்புவின் தாயார்.

 

 

"என்னது ஃபர்ஸ்ட் நைட் டா?" என்று வந்தவுடனே தனது அறைக்குள் புகுந்துகொண்டு தயாளன் ஒரு பக்கம் அதிர..

 

இங்கே பூஜையறையில் அம்மாவோடு வழக்கு அடித்துக்கொண்டிருந்த தாராவுக்கோ "ஃபர்ஸ்ட் நைட்டா?!!" என்று பேரதிர்ச்சி!!

 

"மாஆஆஆ… உன் அம்மாவ வாய மூடிட்டு இருக்க சொல்லு. எதுக்கு தேவையில்லாம என்னென்னமோ கிளப்பிவிடுது கெழவி. வந்தேன் என்ன பண்ணுவேன்னு தெரியாதுனு சொல்லு அந்த கெழவி கிட்ட" என்று அவள் பத்ரகாளியாக மாறி நிற்க.. ஆடலரசிக்குத்தான் எந்த பக்கம் பேசுவதென்று புரியவில்லை.

 

பொதுவாக கல்யாண இரவன்று பெரியவர்களால் ஏற்பாடு செய்யும் சடங்கு தான். ஆனால் இங்குதான் எல்லாம் கோணலாக இருக்கிறதே.. 

 

 

'ஏற்கனவே மகள் ஒருவித குழப்பத்தில் இருக்க, இதில் இதுவும் சேர வேண்டாம் அம்மாவிடம் கூறுவோம்' என்று நினைத்தவர் "சரி பாப்பா நான் அம்மாகிட்ட பேசுகிறேன். நீ இங்க வா" என்று அவளை தன் அம்மாவின் அறையில் அமர வைத்தார்.

 

 

"மா.. கொஞ்சம் வாயேன்" என்று அவரை தனியாக சமையலறை இழுத்துச்சென்றவர், "இப்ப எதுக்கு மா இதெல்லாம்? அவசியமா? ஏற்கனவே இரண்டும் எதிர் எதிர் துருவங்களா நிக்குது. கொஞ்ச நாள் போகட்டுமே" என்று பெண்ணின் மனதை அறிந்தவராக ஆடலரசி கூறினார்.

 

 

"இவ யாரடி கூறு கெட்டவ!! இரண்டும் எகனைக்கு மொகனையா இருக்கிறது தான் ஊரு அறிஞ்ச விஷயமாச்சே.. அதனால இவங்களை இப்படியே விட முடியாது. விட்டா அப்புறம் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். இப்பவே இதான் பொண்டாட்டி இதுதான் புருஷன்னு இரண்டையும் ஒரே ரூமுக்குள்ள தள்ளி விட்டுறனும்.. அடிச்சிக்கிறதோ பிடிச்சிக்கிறதோ அது அவங்க பாடு.." என்று வாழ்வியல் தத்துவங்களை வரிசையாக கூறினார் அவரின் தாயார் ராசாமணி.

 

 

"இல்ல மா.. பாப்பாவுக்கு வந்து.." என்று ஆடலரசி இழுக்க..

 

"என் பேத்திக்கு குளிக்கிற டைமா?" என்று கேட்டார்.

 

"அதெல்லாம் இல்ல மா.. அவ குளிச்சி பத்து நாளைக்கு மேல ஆகுது. இது அது இல்ல.. வந்து.."

 

"வந்தும் இல்ல போயும் இல்ல.. இதுதான் சரியான நேரம். குளிச்சு பத்து நாள் வேற ஆகுது சொல்லுற

 இப்போ ஒன்னு சேர்ந்த பத்தாவது மாசத்துல என் கொள்ளுப் பேரனை நான் பாத்துறுவேன்" என்று ஆசையில் கண்களை விரித்தார் அவர்.

 

 

"எம்மா.. எம்மா.. நீ வேற மா. அவளே இப்போ வேணாம்னு சொல்லி என்ன உன்கிட்ட தூது அனுப்பி இருக்கா.."

 

 

"ஆமா நான் ஹீரோ உன் பொண்ணு ஹீரோயினி.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஊடலு, அவ தூது அனுப்பி இருக்கா. போடி பொசகெட்டவளே!! ஒழுங்கா போய் பொண்ண ரெடி பண்ணு. இல்லையா நீ கம்முனு இரு. நான் பாத்துக்குறேன். இதுநாள் வரைக்கும் என் பிள்ளை வாழ்க்கையில பிரச்சனையாக வர கூடாதுன்னு அந்த வந்தனா போட்ட ஆட்டத்துக்கு அமைதியாக இருந்தேன். ஆனா.. இது என் பேர புள்ளைங்களோட வாழ்க்கை.. அவ விளையாட நான் விடமாட்டேன்! நீ ஒதுங்கி நின்னு என் ஆட்டத்தை பாரு.. இல்லைன்னா கிளம்பு உன் வீட்டுக்கு. நாளைக்கு வந்து மறுவீட்டுக்கு அழைத்துப் போ!" என்றவர் முந்தானையை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு, "ஏலே.. முருகா அந்த தேக்கு மர கட்டிலை எடுத்து சுத்தம் செய் டா!" என்று சவுண்டு விட்டு கொண்டே சென்றார்.

 

 

"என்ன அம்மா இப்படி இறங்கிட்டாங்க??!! என்று அதிர்ச்சியாக பார்த்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே இருந்தது ஆடலரசிக்கு. மகளை இங்கு பார்த்துக்கொள்ள.. அன்னையும் அண்ணனும் இருக்க பயம் இல்லை என்று நிம்மதியோடு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டார்.

 

 

'ஆனாலும் இதுங்களுக்கு இவ்வளவு ஏற்பாடு செய்வது எல்லாம் வேஸ்ட் தான்! உள்ளே போய் இரண்டும் முட்டிக்கொள்ள தான் போகிறது!!' என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க..

 

 

"அதுக்கும் நான் வழி வைத்திருக்கிறேன்!!" என்று விவகாரமாக சிரித்தவாறு காய்ச்சிய பாலை பார்த்துக் கொண்டிருந்தார் ராசாமணி.

 

 

வந்தனாவோ அங்கே பிடி பிடி என்று படித்துக்கொண்டிருந்தார் மகனை. தன் ஜம்பம் மாமியாரிடமும் கணவரிடமும் வேகாது என்று புரிந்து கொண்டவர், இனி மகனை தான் தன் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து மகனின் அறைக்கு சென்றவர் தன் ஒப்பாரியை தொடங்கினார்.

 

 

"ஏன்டா.. என் அண்ண பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன் அவளுக்கு ஆசை காட்டி.. மொத்த குடும்பமும் ஏதோ டிராமா பண்ணி அந்த பொண்ண உன் தலையில கட்டி வெச்சுட்டாங்க.. சரி தாலி கட்டிட்ட தான். ஆனாலும் ஒரு மனசாட்சி வேண்டாம்.. அங்க கல்யாணம் நின்னு போச்சுனு என் அண்ணன் குடும்பம் வருத்தத்தில இருக்கு. உங்களுக்கு இங்கு கொண்டாட்டம் தேவையோ.. கொண்டாட்டம்!! அவங்கதான் மனசாட்சி இல்லாம இருக்காங்க நீயும் ஏன்டா இப்படி இருக்க? நீ எல்லாம் என் புள்ளையாடா? உனக்குன்னு ஒரு தங்கச்சி இருக்காளே அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா? வீட்டில வயசுக்கு வந்த பிள்ளையை வெச்சுக்கிட்டு இந்த சடங்கு எல்லாம் இப்ப தேவையா?" என்று மகனை கரைக்க முயன்று தோற்று குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த முயன்றார்.

 

 

"இவ்வளவுக்கும் காரணம் நீ ஏற்பாடு செய்த திருமணம் தான்! அப்போ என் பேச்சை காது கொடுத்து கேட்டால்தானே? ஆமா எனக்கு தங்கச்சி இருக்கிற ஞாபகம் இப்போதான் வந்ததா உனக்கு? உன் அண்ண பொண்ணு கல்யாணத்துக்கு பேசும் போதெல்லாம் எனக்கு ஒரு தங்கச்சி இருக்குறானு உனக்கு தோணல.. சரி உங்க பேச்சுக்கே வரேன்! இதே கல்யாணம் உன் அண்ண பொண்ணோட நடந்துயிருந்தா.. இப்போ அப்பத்தாவும் அப்பாவும் செய்ற வேலையை தானே நீயும் செய்திறுப்ப.. வந்துட்டாங்க பேச.. நானே மச கடுப்புல இருக்கேன் போயிடு மா.. எல்லா பிரச்சினைக்கும் காரணமே நீ தான்!!" என்று கட்டிலில் படுத்து கைகளால் கண்ணை மூடிக் கொண்டான்.

 

 

ஒரே நாளில் குடும்பம் மொத்தமும் தனக்கு எதிராகத் திரும்பியது தாங்கமுடியாமல், 'எப்படி இந்த முதலிரவு நடக்குதுனு நானும் பார்க்கிறேன்' என்று கோபத்தோடு திட்டத்தை தீட்டினார்.

 

 

ஆனால் இதை கேட்டுக்கொண்டிருந்த ராசாமணி "உனக்கே மாமியாருடி நானு!!" என்று எண்ணிக்கொண்டு தன் முந்தானையில் முடிந்திருந்த அந்த மருந்தை சூடான பாலில் கலந்தார்.

 

 

எப்படியும் இந்தப் பாலை பேத்தி கையில் கொடுத்து அனுப்பினால் இரண்டும் பேரும் குடிக்கவே மாட்டார்கள். ஒன்று கோபத்தில் இவள் தூக்கி உடைப்பாள் இல்லை என்றால் அவன் வாங்கி உடைப்பான். என்ன செய்வது? என்று யோசிக்க.. இருவரையும் அழைத்து பூஜை அறையில் வைத்து அவரே ஆளுக்கு பாதியாக பாலை வம்படியாக புகட்டினார்.

 

 

"இங்க பாரு ராசா.. இதுதான் உன் பொண்டாட்டி! இதுதான் இனி உன் வாழ்க்கை!! ஆனால் அதை எப்போ எப்படி ஆரம்பிக்கணும்னு உங்க கையில.. சடங்கு சம்பிரதாயத்தை நாங்க செஞ்சிட்டோம்.. அதுக்கு பின்னால உங்க பாடு!!" என்றவர் அங்கிருந்த உறவுக்காரப் பெண்மணியை அழைத்து இருவரையும் தயார் செய்து வைத்திருந்த அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சொன்னார்.

 

முன்னே தயாளன் செல்ல பின்னே தாரிகாவை அழைத்து விட்டுவிட்டு வந்து விட்டார் அவரும்.

 

 

"அப்பாடி மிஷின் கம்ப்ளீட்!!" என்று ராசாமணி சோபாவில் ஓய்வாக அமர, அதேநேரம் வந்தனாவோ "நெஞ்சு வலிக்குதே!!" என்று கத்தினார்.

 

 

தொடரும்...


   
Quote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 47
 

இந்த வந்து அடங்கவே மாட்டாளா?????

பாட்டி பிளான் அல்டி🤣🤣🤣🤣🤣


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top