9
அன்புச்செழியன் திடீரென்று வீரம் வந்தவராக நீதிடா. நேர்மை டா.. நியாயம் டா..!! என்று
தாரிகாவின் கையை பற்றி 'இவள்தான் என் வீட்டு மருமகள்!' என்று கூற.. எதற்கு பயந்து மகனுக்கு அவசர திருமணம் நடத்தினாரோ அதுவே நடந்துவிட.. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வாயை திறந்து தன் சேற்று வார்த்தைகளை வாரி இறைக்க துடித்த வந்தனாவை.. ஒற்றைப் பார்வையில் அடக்கினார் அன்புச் செழியன்.
"இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன் அம்மா வீட்டுக்கு பொட்டிய கட்டனும் நினைச்சினா தாராளமா வாய திற" என்றார்.
ஆக மொத்தம் வந்தனா வாய்க்கு வாஸ்து சரியில்லை..!!
கதிரேசனுக்கோ மனம் பொறுக்கவில்லை. .!
"செய்த தப்பை எல்லாம் நீங்க செய்து விட்டு ஏதோ போனா போகுது போல என் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கிறீங்களா? நீங்களும் வேண்டாம்!! இந்த கல்யாணமும் வேண்டாம்!! போங்கடா.. என் பொண்ணை புரிஞ்சு அவளை கண் போல பார்த்துக்க என் தங்கை மகன் இன்பரசு இருக்கிறான்" என்று நெஞ்சை நிமிர்த்தி பேசியவர் அன்புச்செழியன் அருகிலிருந்த மகளை கை பிடித்து தன் பக்கம் இழுத்து "வா தாரா நாம போகலாம்" என்று வெளியேற முயல..
'அப்பாடி போயிட்டாங்க!' என்று மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டார் காளிங்கன்.
"அப்படியெல்லாம் விட முடியாது தம்பி.. நீங்க இப்ப போயிடுவீங்க.. நாள பின்ன இந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இதே பிரச்சினை தலைதூக்கும். அப்போ உள்ள நடந்தது என்னன்னு தெரியாம.. அந்த பிள்ளையை காட்டினவன், புள்ளைய பாடாபடுத்தும் போது நீங்க என்ன பண்ணுவீங்க? சொல்லுங்க?" என்று ஒருவர் கேட்க அதிலிருந்து உண்மை லேசாக சுட்டது கதிரேசனை.
என்னதான் கங்கையின் மகன் என்றாலும் அவன் ஒரு ஆண்மகன் தான்! 'நீ அந்த ரூம்ல ஒருத்தன் கூட இருந்தவ தானே?' என்று ஒரு வார்த்தை நாக்கு மேல் பல் போட்டும் தன் மகளை பேசினால், ஐயோ என் செல்ல மகளின் வாழ்க்கை என்னாவது? என்று கண்கள் கலங்க அவர்களைப் பார்த்தார் கதிரேசன்.
அருமை பெருமையாய் வளர்த்த மகளின் நிலை இப்படியா ஆக வேண்டும் என்று பரிதவித்துப் போனார்.
அண்ணன் சொன்னதுமே ஆடலரசி மனதில் அதையே பிடித்துக் கொண்டார். என்னதான் காலம் கம்ப்யூட்டர் பின்னே ஓடினாலும்.. இன்டர்நெட்டோடு இணைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினாலும்.. நம் மனதில் ஊறிப் போயிருக்கும் சில கற்கால பழக்கவழக்கங்கள் என்றுமே மாறப்போவதில்லை..
இப்பொழுது சரித்திரம் படைக்கிறேன்.. அது இதுவென்று கூறி பெண்ணை மணந்துகொண்டு நாளை பின்னே அவளை கொடுமைப்படுத்தினால்?
உடலை புண் செய்தல் மட்டும்தான் கொடுமையா? வார்த்தைகளால் வாட்டி வதைத்து மனதை புண் படுத்தினாலும் அது வன்கொடுமையே!!
எனவே அண்ணன் சொல்றதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தவர், "ஒழுங்கா என் பொண்ணு கழுத்துல உங்க பிள்ளை தாலி கட்ட சொல்லுங்க!" என்று அதிகாரமாகவே கூறினார் அண்ணனை பார்த்து ஆடலரசி.
அன்புச்செழியனின் உதடுகளில் யாருமறியாமல் ஒரு புன்னகை பூத்து அடங்கியது தங்கையின் இந்த தைரியத்தில்..
இந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டா.. அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுறது?
கல்யாணம் வரை வந்து நின்னு போனா அந்த பொண்ணை யாரு அடுத்து கல்யாணம் பண்ணிக்கு வா?
என்று ஒரு சாரார் தாரிகாவுக்கும் இன்னொரு சாரார் அந்த கல்யாணம் பெண்ணிற்கும் ஆதரவாய் பேசி வாக்குவாதம் செய்ய.. தயாளனை திரும்பிப்பார்த்த தாராவுக்கு அப்படி ஒரு அருவருப்பு முகத்தில்.
பட்டிக்காட்டானாக இருக்கும் இவனா என் புருஷன்? நான் யாரு? என் கனவுகள் என்ன? எனக்கு வரவேண்டிய கணவன் எப்படி இருக்கணும்? போயும் போயும் இந்த காட்டானா எனக்கு புருஷன்? நெவர் எவர்!! என்று முடிவெடுத்தவள், "எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்! இந்த ஆளைப் பார்த்தாலே எனக்கு அருவுறுப்பா இருக்கு.. பிடிக்கவே இல்லை!!" என்று இரு காதுகளையும் பொத்திக் கொண்டு அவள் கத்த..
"ஆமாண்டி உன்ன கல்யாணம் பண்ணிக்க தான் இங்க தவம் இருங்காங்க.. போவியா ஆளையும் சைஸையும் பாரு.. ச்சீ.. பே.. உன்னால தான் எவ்வளவு பிரச்சனையும்" என்று தாரிகாவை பார்த்து கோபப்பட்டான் தயாளன்.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால் தங்கை குடும்பத்தை தன்னோடு சேர்க்க முடியாது. கூடவே தன் மகனால் ஒரு அவப்பெயர் மருமகளுக்கு வந்திருக்க.. அதை சரி பண்ணும் தார்மீக பொறுப்பும் தாய்மாமனுக்கே என சிலிர்த்து எழுந்தார் சிங்கமென அன்புச்செழியன். "டேய் அந்த ஐயர கூப்பிடுங்க இங்கே!!" என்று கட்டளையிட..
அகிலனுக்கும் அன்னையும் மாமனும் செய்வதே சரி என்று தோன்றியது. அவன் பார்வைக்கு தயாளன் தப்பானவனாக தெரியவில்லை. அவன் சொன்னது தான் நிஜமான காரணமாக இருக்கும். அதுவும் தங்கையை பற்றி அறிந்தவன் ஆயிற்றே? வந்தனா மாதிரி ஒரு மாமியாரிடம் சென்றால்தான் இவளும் அடங்குவாள் என்று மனதுக்குள் நினைத்தவன்.
"பின்ன விட்டுடுவோமா? இது என் தங்கச்சியோட வாழ்க்கை. உங்க பையன் செஞ்ச தப்பை அவன் தான் சரி செய்யணும். ஒழுங்கா தாலியை கட்ட சொல்லுங்க!" என்றான் வீம்போடு..
இடையிடையே "இந்த கல்யாணம் வேண்டாம் நாம வேற மாப்ள பாப்போம் டா அகிலா!" என்று ஆரம்பித்த தந்தையை, "நீங்க சும்மா இருங்கப்பா.. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நாளைக்கு கஷ்டப்பட போறது என் தங்கச்சி தான். மத்தவங்களுக்கு வேணா தங்கச்சி வாழ்க்கை பெருசா இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு என் தங்கச்சி வாழ்க்கைதான் முக்கியம்!!" என்று பாசமலர் பார்ட் டூ படம் ஓடினான் அகிலன்.
அதை அவன் சொன்னது அன்பையும் தயாவையும் பார்த்து தான். அதுவரை அகிலன் மீது இருந்த நல்ல எண்ணம் தவிடு பொடியாக மச்சானை முறைத்தான் தயாளன்.
அதற்குள் யாரோ ஐயரை தாலியோடு அந்த அறைக்கு கடத்தி வந்து இருக்க..
மணமேடை இல்லை..
ஹோமகுண்டம் இல்லை..
மணமாலையும் இல்லை..
மன பொருத்தமும் இல்லை..
ஆனால் திருமணம் இனிதே நடந்தது சிலபல சச்சரவுகளோடு..
பல சில பொருமல்ளோடு..
"நீ என் வீட்டுக்கு தானே வருவ.. நீ எப்படி வாழுறனு பாக்குறேன்டி!!" என்று வன்மமாக புது மருமகளை முறைத்தார் வந்தனா!!
கல்யாணத்துக்கு வந்தவளையே கல்யாண பொண்ணா மாத்திட்டிங்களே டா.. உங்க எல்லாரையும் நிம்மதியா வாழ விட்டிடுவேனா.. நான் தாரிகா!!" என்று மொத்த குடும்பத்தையும் முறைத்
தாள் தாரிகா!!
மாமியார் வெர்சஸ் மருமகள்..
ஆட்டம் ஸ்டார்ட்..
தொடரும்..
come on தாரா
Come on வந்து
செம்ம ஃபன் இருக்க போகுது🤣🤣😁🤣🤣