அழகர் இரவெல்லாம் தூங்கவில்லை குடும்பமாகசேர்ந்து கழுத்தை அறுத்துவிட்டார்களே என்று உச்சகட்ட ஆத்திரத்தில் இரவெல்லாம் கண்மூடவில்லை
கோபம் அவ்வளவு கோபம்
கூடவே இருந்து குழி பறித்துவிட்டாளே
என்னென்ன சொல்லி எப்படியெல்லாம் பேசி தன்குடும்பத்தை ஏமாற்றி திசைதிருப்பி கழுத்தை அறுத்துவிட்டார்களே
ஆத்திரம் பற்றிகொண்டு வந்தது
மனிஷாவை அடிக்கமுடியவில்லை
மனம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறாளே
அவளுக்கு ஏதாவது ஆனால் அவன்தான் துடிப்பான்
அவன் மனம் அவள் காலடியில் விழுமளவுக்கு தன்னைமாற்றி கழுத்தறுத்துவிட்டாள்
அவளை எதுவும் செய்யமுடியாதே
அந்த கோபமும் சேர்ந்துகொண்டது
இரண்டாம் மாடியில் இரவுமுழுவதும் அமர்ந்திருந்தான்
காலையில் கண்ணெல்லாம் சிவந்து போய் கொடூரமாக காட்சியளித்தான் மாடிக்கு துணிகளை காய போடுவதற்கு வந்த அருந்ததி பேய்போல அமர்ந்திருந்தவனை பார்த்து பயந்துதான் போனாள்
ஒருவேளை என்கிட்ட பேசுறதுக்காக இங்க வந்து உட்கார்ந்துருக்காரோ
எனக்காக காத்திருக்காரோ
ஆசையோடு அவன்முகம்பார்க்க அந்தமுகத்தில் அவள் நினைப்பிற்கான எந்த தடயங்களும் இல்லை உச்சகட்ட வெறுப்பில் அமர்ந்திருப்பதுபோல் இருந்தது
வலியபோய் பேசுவும் பயமாக இருந்தது
பயத்தோடு துணிகளை காயபோடாமல் அப்படியே நின்றிருந்தவளுக்கு மனிஷா நினைவு வரவும் அவளிடம் கூறலாமென ஓடினாள்
இரவெல்லாம் அழுது கண்கள் சிவந்து முகம்சோர்ந்து போயிருந்த மகளை பார்த்து பெற்றவர்கள் காரணத்தைகேட்டு இம்சிக்க
அவள் வாய் திறக்கவில்லை
ஏசி இல்லாமல் தூங்க முடியல அடிக்கடி இப்படித்தான் ஆகும்
எதையோ கூறி சமாளித்தவள் வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கும் போதே வேகமாக உள்ளேவந்தாள் அருந்ததி
உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சீக்கிரம் வா அவளை கையைபிடித்து இழுத்துக்கொண்டு போக இருவரும் அடிக்கடி இப்படிபேசி பார்த்து பாட்டிக்கு பழக்கமானதால் அவர்தான் தன் மகளை சமாதானப்படுத்தினார்
தனியாக இழுத்துக்கொண்டு போனவள்
அவருக்கு என்னாச்சு தெரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவர் முகம் சரியில்லை கண்ணெல்லாம் சிவந்துபோயிருக்கு அவருக்கு என்னாச்சு தெரியல
மாடிக்குபோகும்போது அவர் அங்கதான் இருந்தாரு
என்னைபாக்க வந்திருப்பார் நினைச்சா அவர் முகம் ரொம்ப கொடூரமா இருக்கு அவரை அந்தநிலைமையில பார்க்க பயமா இருக்கு என்னாச்சு தெரியல
நீ வந்து பாரு நீதான் மாமாகூட நல்லா பேசுவியே வந்து கேட்டு பாரு
கூறும்போதே அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது
இதுக்காகவா அழுவ என்னன்னு கேட்கலாம்
1008 வேலை இருக்கும் நிறையபிரச்சனையும் இருக்கும்
அதனால் அப்படி இருக்காரு நீஎதையாவது நினைச்சுட்டு அழுகாத அவளைசமாதானப்படுத்தி மாடிக்கு அழைத்துக்கொண்டு போக இன்னும் அதேநிலையில் தான் அமர்ந்திருந்தான்
சார் என்னாச்சு எதுக்காக இப்படி இருக்கீங்க உங்கமுகமே சரியில்ல அருந்ததி ரொம்ப பயப்படுற என்னாச்சு சார் எதுவும்தெரியாதவள்போல் கேட்க
கர்ணகொடூரமாக அவளை முறைத்தான்
விட்டாள் எரிந்து சாம்பலாகி விடுவாள்போல அவன்பார்வை அப்படிஅனலாக தகித்தது
ஒரு நிமிடம் பயந்து எச்சில்விழுங்கி இரண்டடிநகர்ந்துகொண்டாள்
பயத்தோடு அருந்ததியை பார்க்க
அவளும் பயத்தோடுஇருந்தாள்
ஒன்னுமில்ல நீ எதுக்கும் பயப்படாத அருந்ததிக்கு தைரியம் கூறிய மனிஷாவின் மேல் இருக்கும் பார்வையை அகற்றாமலேயே
" அருந்ததி கோபமாக அழைத்தான் ..
"மா....மா சொ..ல்லு..ங் எச்சில் விழுங்கியவாறு கேட்க
என்னோட ரூம் எல்லாம் ரொம்ப தூசியா இருக்கு நைட்டு தூங்கமுடியல மூட்டைபூச்சி தொல்லை எல்லாத்தையும் சுத்தமா கிளீன்பண்ணி வை நான் தூங்கனும் அவன் கூற தலையாட்டிவிட்டு சென்றாள்
அவள் போனபிறகு எனக்குஎன்ன வேலை என்பதுபோல் மனிஷாவும் நகரபோக அவளை இழுத்து தண்ணிடேங் அருகில் மறைவாக இழுத்துபோனவன் அவள் இதழை கடித்தான்
அவளை கைநீட்டி அடிக்க முடியவில்லை ஆனால் அவளை அப்படியே விடவும் மனமில்லை ஏமாற்றிவிட்டாளை என்ற கோபத்தை இப்படி காட்டினான்
கீழுதட்டை அழுத்திகடித்தான்
அவளோ திமிறினாள் வலிதாங்கவில்லை ரத்தமேவந்துவிட்டது அப்போதும் விடவில்லை
அவன் நெஞ்சில் அடித்தாள் வயிற்றில் குத்தினாள் முதுகில் பரண்டினாள் ஒருஇஞ்ச் கூட நகரவில்லை
வலி தாங்கமுடியாமல் அவன் தலைமுடியை பிடித்து இழுத்து அழுதாள்
ஏற்கனவே இரவெல்லாம் அழுது சிவந்துபோன கண்கள் இன்னும் சிவந்து போனது
உதடே தனியே வந்துவிடுமளவுக்கு கடித்தவன் கண்களை மூடவில்லை அவள்அழுகை கண்ணீரை வேதனையை கண்ணார பார்த்துக்கொண்டிருந்தான்
என்ன நினைத்தானோ கடிப்பதை நிறுத்திவிட்டு ரத்தத்தை சுவைத்தான் இதழால் ஒத்தடம் கொடுத்தான்
வலிதாங்காமல் கீழேசரியபோனவளை தாங்கிபிடித்தான்
அவள் பலம் எல்லாமே கண்ணீரோடு போனதால் பிடிப்பில்லாமல் அவன் மீது சரிந்தாள்
கண்ணீர் மட்டும் நிற்காமல் வடிந்தது
உதட்டில் அவ்வளவு வலி
கண்ணை இறுக்கி மூடிகிட்டு இருந்தவன் நெஞ்சுசாய்ந்திருந்தவளை கீழே தள்ளிவிட தொப்பென கீழே விழுந்தவளுக்கு வலி தாங்காமல் தலையை பிடித்துக்கொண்டு சத்தமில்லாமல் கதறினாள்
அவளுக்கு அருகில் மண்டிபோட்டு அவள் அழுகையை ரசித்தான் என்னடி வலிக்குதா வலிக்கட்டும் இன்னும் நல்ல வலிக்கட்டும் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து விபூதி அடிச்சுருக்கீங்களா உனக்கு இது பத்தாதுடி
இதுக்குமேல சித்திரவதை படுத்தனும்டி
உன் அம்மாவை இந்த குடும்பத்தில் சேர்த்துட்டோம்னு சந்தோஷபடாத
உங்கம்மா இங்கருந்து போறவரைக்கும் அவங்களை எதுவும் பண்ணமாட்டேன் உனக்கு நரகத்தை காட்டுவேன்
உன்னோட அண்ணன்களை சும்மாவிடமாட்டேன் என் கோட்டைக்குள்ளே வந்துட்டு என்கிட்டயே நடிச்சு பச்சதுரோகம் பண்ணிட்டீங்க அவனுங்களை சும்மாவிடுவேன் நினைச்சியா
கொலைவெறியோடு கூறவும் மனிஷாவுக்கு அதிர்ச்சி
அழுகையை நிறுத்திவிட்டு அதிர்ச்சியோடு அவனைபார்த்தாள்
என்ன பாக்குற உன்னைவிரும்புனதால உன்னை எதுவும்செய்யமுடியல அதுக்காக நீ சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு உன்குடும்பத்தை சும்மாவிட்ருவேன் நெனச்சியா
துரோகியா இருந்து ஏமாத்துறவனைகூட நான் மன்னிச்சுடுவேன் ஆனா தெரிஞ்சே கூடஇருந்து குழிபறிச்சவங்களை சும்மாவிடமாட்டேன்
உன் பெரியண்ணன் இந்த நேரத்துலதானே வாக்கிங்போவான்
இந்நேரம் அவன் என்ன நிலமையில் எந்த ஹாஸ்பிடல்ல இருக்கானோ இளக்காரமாக சிரிக்க
சட்டென எழுந்தவள் அவன் சட்டையை பிடித்தாள்
என்னடா சொல்ற
என்ன பண்ணி வச்ச என் அண்ணன்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கு ஏதாவதுஆச்சு சத்தியமா உன்னை கொன்னுருவேன் உனக்கும் தங்கச்சி இருக்கா மறந்துடாத
உனக்கு மட்டும் வில்லதனம்தெரியும் நினைக்காதே உனக்குமேல நான்போவேன்
என் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது இருந்துச்சு
உன்னூ சும்மா விடமாட்டேன் ஆத்திரமாக கூறிவிட்டு வடிந்தரத்தத்தை துடைத்துக்கொண்டு ஓடியவள்
வீட்டுக்குள்போய் பார்க்க இரண்டு அண்ணன்களும் இல்லை
முகத்தை கழுவிகொண்டவள் வேகமாக வெளியே வர
அய்யா இங்க வேலை பார்த்துட்டு இருந்தானே சூரியானு ஒருத்தன் அந்தபையன் அடிபட்டு ரோட்டுல கிடந்தான் தூக்கி பெரியாஸ்பத்திரிகளில் சேர்த்து விட்டுருக்கேன் என்னாச்சு தெரியல ஒருவன் கைகட்டியவாறு வீராசாமியிடம் கூற
சொன்னபடியே பழிவாங்கிட்டானே பல்லைகடித்தவளுக்கு கண்ணீர் வந்தது தகவல்கூறியவனிடம் வேகமாகபோனவள் அவரிடம் விசாரித்து மருத்துவமனைக்கு கிளம்பபோக வீராச்சாமி அவள்பதற்றத்தை பார்த்து என்னம்ம நீ எங்கபோற இருமா
சார் அவரு என்கூட இருந்தவரைக்கும் என்னோட அண்ணனா நெனச்சிட்டேன் அவருக்கு ஒன்னுனதும் தாங்கிக்கமுடியல அவர் எனக்கு அண்ணன்தான் சார் அவருக்கு என்னச்சுன்னு தெரியணும் சார் என்னை தடுக்காதிங்க அந்தாளோடு பெரியாஸ்பத்திரிக்கு செல்ல வீராச்சாமி மகனை வரவழைத்து விஷயத்தைகூறி மருத்துவமனைக்கு வண்டியை எடுக்கசொல்ல அவனும் வண்டி ஓட்டினான்
தலையிலும் கையிலும் கட்டுபோட்டு படுத்திருந்தான்
ஈ எறும்பு கூட அண்டாமல் அம்மா வளர்த்தாள் அப்படிபட்ட அண்ணனை முதல்முறை இந்த நிலைமையில் பார்த்ததும் கதறிவிட்டாள்
எனக்கு ஒன்னும் இல்லடா சும்மா வாக்கிங்தான் போயிட்டு இருந்தேன் காளவாசலுக்கு மண் ஏத்திட்டுபோற லாரி
பிரேக் புடிக்காம இடிக்கவந்துருச்சு
கொஞ்சம் தப்பி கீழேவிழுந்துட்டேன் நான் விழுந்த இடத்தில் கல்லு இருந்துச்சுபோல அதான் தலையில காயமாகிருச்சு
வேற எதுவும் இல்ல அவன் தங்கையை சமாதானபடுத்த அவளுக்குதானே தெரியும்
எதனால் யாரால் இப்படிடி ஆனதென்று
இன்னும் தேம்பிகொண்டுதான் இருந்தாள்
அப்பா மகன் இருவரும் மருத்துவமனைக்குள் வர வீராச்சாமி சூர்யாவிடம் விசாரிக்க அழகர் ஏகத்தளமாக மனிஷாவை பார்த்தான் கொலைவெறியில் சிரித்தான் பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக இருப்பதுபோல தெரியும் அவன் பார்வை அவன் சிரிப்பு பழிவாங்கி விட்ட வெறியை காட்டியது
அழகர் வீராசாமி நலம்விசாரித்து விட்டு கையில் கொஞ்சம் பணத்தைகொடுத்து வெளியே செல்ல அழகர்வாங்கிவந்த பழத்தை கட்டிலில் வைத்துவிட்டு சூர்யாவின் தலை ..கையை பார்த்தான்
நான் என்னமோ நெனச்சேன் ஆனா இங்கேவேறமாதிரி நடந்திருக்கு இதை எதிர்பார்க்கவே இல்லை சொன்ன வேலைய உருப்படியா செய்யாதவன தூக்கிபோட்டு நாலு மிதி மிதிக்கணும் கடுப்பாக கூற சூர்யாவுக்கோ ஒன்றும் புரியவில்லை
என்ன பாக்குற மச்சான் குடும்பமே சேர்ந்து எப்படிநடிச்சு என்குடும்பத்தையே ஏமாத்திட்டீங்க உங்களை சும்மாவிட்டா எப்படி
நம்ம யாருன்னு காட்டவேணாமா அதான் சின்ன ட்ராயல் காட்டுனேன் பாரு உன்னோட பாசமலருக்கூ அழுது அழுது முகமெல்லாம் சிவந்து கண்ணெல்லாம் எப்படி வீங்கி போயிருக்குனு
பாப்பாவுக்கு அண்ணன்மேல ரொம்ப பாசம்போல
ஏகத்தளமாக கூறியதும் சூர்யா அதிர்ந்துபோய் தங்கையைப் பார்த்தான் அவனுக்கு எப்படி தெரியும் என்பதுபோல்
ஷாக்கை குறை ஷாக்கை குறை ஓவரா அதிர்ச்சியாகி பி.பி ஏறி செத்துறத
ஆனா பாரு எந்த கதையும்இருந்தாலும் சரி வாழ்க்கையா இருந்தாலும் சரி கூட இருக்கிற மத்தவங்களவிட நம்ம யார்மேல நம்பிக்கை வைக்கிறோமோ அவனுங்கதான் கழுத்தை அறுக்கிறானுங்க
அதான் அண்ணன்களும் தங்கச்சியும் சேர்ந்து ஏமாத்திட்டிங்க
கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியுமாம்
குடும்பமே சேர்ந்து எங்களை கேனையனாக்கிட்டிங்க பல்லைகடித்தான்
ஆனா பாரு ஒரு தடவ ஏமாந்தவங்க எல்லா நேரமும் ஏமாந்துட்டே இருப்பாங்களா அதனாலதான் ரிவேஞ் எடுத்தேன்
உங்கம்மாவ என் வீட்டுல சேர்க்கணும்னுதானே இவ்வளவு பிராடுத்தனம் செஞ்சீங்க
கவலைப்படாதீங்க உங்கம்மாவுக்கு எந்தபிரச்சனையும் வராது எதுவும் பன்னமாட்டேன் உங்கம்மா அப்பா எப்பவும்போல என் வீட்டுக்கு வரலாம் போகலாம்
ஆனா நண்பன் சொல்லி ஏமாத்தி கழுத்தை அறுத்த நீங்க மூணுபேரும் இருக்ககூடாது
இருக்கவிடமாட்டேன்
முக்கியமா உன் தங்கச்சி அவள் தலைமுடியை பிடிக்க சூர்யா பதறிஎழுந்தான்
ஷ்ஷ்ஷ் எதுக்கு இந்த பதட்டம் பயப்படாத ஒன்றும் பண்ணமாட்டேன் சிரித்தவாறே அவளை சூர்யாவிடம் தள்ளிவிட அண்ணன் நெஞ்சில் சாய்ந்தவள் கதறியழுதாள்
இது இது இதைதான் நான் எதிர்பாத்தேன்
இந்த கண்ணுல எப்பவும் சந்தோசம் வரக்கூடாது இவளாலதானே நீ எல்லோரும் என் வீட்டுக்கு வந்தீங்க இந்தமுகத்துல எப்பவும் சிரிப்பு இருக்ககூடாது ஆத்திரத்தோடு கூறியவன்
நம்பவச்சு ஏமாதிட்ட என் மனசை கொன்னுட்ட
தேவைக்கு நெருங்கி தேவைமுடிஞ்சதும் கைகழுவிட்டல்ல கூறியவனுக்கு கண்ணுக்குள் கண்ணீர் தேங்கியது
வீராசாமி உள்ளேவரவும் வேறுபக்கம் திரும்பிகொண்டான்
தம்பி பயப்படுறளவுக்கு எதுவுமில்லம் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு டாக்டர் சொன்னாங்க
கிளம்புங்க போகலாம்
அழகா அந்த பையனை கூட்டிட்டு வா கூறிவிட்டு வீராச்சாமி செல்ல
இவ்வளவு வன்மத்தோடு இருப்பவன் வீட்டிற்குசெல்வதற்கு சூர்யாவுக்கு எப்படி மனம்வரும்
கலக்கமாக தங்கையை பார்க்க
என்ன மன்னிச்சிருங்க ப்ரோ நான்தான் தெரியாம சொல்லிட்டேன் சாரி ப்ரோ தேம்பி கொண்டு அழுக எதுவும் சொல்லாமல் தங்கையை அணைத்துகொண்டான்
கதையை படிச்சுட்டு பேஸ்புக்ல கமெண்ட் போடுங்கப்பா கமெண்ட் வாரததால எழுதவே பிடிக்கமாட்டுது