கோகிலமே 21

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  
21
"என்னது பத்மா மாமி பையனா?" என்று அதிர்ச்சியாக கத்தினாள்..
 
ஹம்சவர்தினி இல்லை ஹரிப்பிரியா!!
 
"நீ ஏண்டி கத்தற.. கல்யாணம் கட்டிக்க போறவளே அமைதியாக நிண்டு இருக்காளானோ.. உன்னை கட்டிக்க சொன்ன மாதிரி அதிர்ச்சியாகி இப்படி கத்தற" என்று மீனாட்சி கோபமாக கேட்க..
 
"வருவுக்குனால தான் இந்த கத்தலோட போச்சு.. இதே அந்த அம்மாஞ்சிய நேக்கு பாத்திருந்தேள்னா அவ்வளவுதான்" என்று அவள் கையை முறுக்கி காட்ட சுப்புவோ சின்ன பெண்ணின் செயலில் மனம் விட்டு சிரித்தார்.
 
"சிரிக்காதேள்னா.. எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான்" என்றவர் திரும்ப வர்த்தினியை பார்த்து "என்னடா அமைதியா இருக்க.. அன்னைக்கு உன்னாண்ட கேட்டுட்டு தான் நாங்க முடிவு பண்ணினோம்" என்று மீனாட்சி சொல்ல..
 
"என்னது?? என் கிட்ட கேட்டு முடிவு பண்ணிங்களா?" என்று அதுவரை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றவள், இப்போது அவர் சொன்ன செய்தியில் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி வாயைத் திறக்க...
 
"எப்போ?? எங்க?? என்னைக்கு??" என்று பிரியாவின் குரல் சேர்ந்து கோரஸ் பாட..
 
அக்காவும் தங்கையும் ஒருவருக்கொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர். ஏனெனில் ரயிலில் வரும்போது பத்மா மாமியை பற்றியும் அவரது பிள்ளாண்டான் பற்றியும் பக்கம் பக்கமாக சொல்லியிருந்தாள் வார்த்தினி மிக மிக நல்லவிதமாக..
 
"அவா வீட்ல ரெண்டு மாசம் இருந்ததே நேக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு ப்ரீ.. அவா வீட்டுக்கு வர மாட்டு பொண்ணு பாவம்" என்று அவள் சொன்ன நினைவு தற்போது இரண்டு பேருக்கும் வர.. அதைத்தான் கண்களாலேயே பரிமாறிக் கொண்டனர் சகோதரிகள் இருவரும்.
 
"நீ வாயை மூடுடி அதிகபிரசங்கி" என்று சின்ன பொண்ணை திட்டியவர்.. வர்த்தினியை பார்த்தவர், "நீ ஊருக்கு கிளம்பும் இரண்டு நாளுக்கு முன்ன பத்மா மாமி என்கிட்ட பேசினா.. அவா பையனுக்கு உன்னை பொண்ணு கேட்டா.. நேக்கு தான் உன்னை அவ்ளோ தூரம் கொண்டு போய் கொடுக்க இஷ்டம் இல்லை.. அதுக்கும் அவாவே உபயம் சொன்னா..
 
எப்படியும் உனக்கு சென்னையில் வாய்ப்பு கிடைக்கும் பாடுவதற்கு.. அதனால நீ சென்னைக்கும் லண்டனுக்கும் மாறி மாறி போயிட்டு வருவ.. அதனால சென்னை வரும்போதெல்லாம் திருவையாறு வந்துட்டு போகலாம். அதனால ரொம்ப எல்லாம் உன்னை பிரிந்து இருக்கிற மாதிரி இருக்காது என்று சொன்னா.. நேக்கும் நம்ம கனகா மாமி ஆம்படையானோட அண்ணன் குடும்பம் தானே.. அதனால பெருசா மறுப்பதற்கு ஒன்னுமில்ல. அப்பாவும் நானும் சேர்ந்து யோசிச்சோம். அதுக்கு அப்புறம் தான் நோக்கு போன் பண்ணி நாங்க சொன்னோம்" என்று அவர் கூறினார்.
 
 
"ஆனா.. அம்மா கல்யாணம் பத்தி எல்லாம் நீங்க எதுவுமே என்னாண்ட பேசலையே" என்று பதற்றத்துடன் கூறினாள் வர்த்தினி. எங்கே தன்னை அறியாமல் தன் பெற்றோரிடம் தான் வாக்கு கொடுத்து விட்டோமோ என்று பதறிக் கொண்டு..
 
"ஆமாண்டா அப்போதைக்கு நீ அவா ஆத்துல இருக்க.. அவா பையனுக்கே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதை எப்படி சொல்றது. அதனாலதான் 'நாங்க எது செஞ்சாலும் நன்மைக்குத் தானே செய்வோம் அதுல நோக்கு முழு நம்பிக்கை இருக்கு தானே' என்று நீ ஊருக்கு கிளம்பி வரும் முதல் நாள் நான் பேசினனோ இல்லையோ" என்று அவர் கேட்க..
 
தன் தலையைக் கொண்டு போய் எங்கேயாவது முட்டி கொள்ளலாம் போலிருந்தது வர்த்தினிக்கு.. எந்தக் கேள்வியைக் கேட்டு, அதை எதனுடன் அம்மா தொடர்பு படுத்திப் பேசி இருக்கிறார் என்று நினைக்க நினைக்க அவளுக்கு வருத்தமும் ஆதங்கமும் தான் அதிகரித்தது.
 
அன்னையின் சொல்லாடல் திறமையை பல நேரங்களில் அவள் ஆச்சரியத்துடன் புகழ்ந்திருக்கிறாள். இன்று அதுவே தனக்கு எதிராக.. தன் காதலுக்கு எதிராக திரும்பும் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.
 
அதேநேரம் பெற்றோரை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் வாயை மூடி தன் மனக் கொந்தளிப்பை வெளிக்காட்டாமல் அமைதியாக அவள் நிற்க..
 
அக்காவின் நிலையை சடுதியில் புரிந்து கொண்ட பிரியாவும் அன்னையை முன்னே தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு நின்று முறைத்து பார்த்தாள்.
 
"என்னடி?" என்று எரிச்சலுடன் கேட்டார் மீனாட்சி. வர்த்தினியின் வருத்தமான முகத்தைப் பார்த்தவர், பெண்ணிடம் இதைப் பற்றி முன்னமே பேசியிருக்க வேண்டுமோ? என்று அவரது உள்மனது சற்று குறுகுறுக்க செய்தது.
 
"ஏன்மா? ஏன்? உனக்கு வேற ஆளே கிடைக்கலையா மா.. அம்மா முந்தானை புடிச்சண்டு இருக்கிறவன பார்த்து அக்காக்கு கட்டிவைக்கிற. அந்த ஆத்துக்கு இவ மாட்டு போனா.. நிஜ மாடடாட்டமே தான் நடத்துவா அந்த மாமி. இவளோட வருமானத்தையும் சேர்த்து வைத்து ஆளப்போறா அவா.. இவ ஆல்பம் பாடல் பாடுறதுக்கு முன்னாடி, பங்ஷனுக்கு போயிருக்கும் போது அவா கேட்டு இருந்தானா.. ஓகே.. அதை விட்டுட்டு இவ்வளவு நாள் கழிச்சு கேட்கிறா. ஆனா அதுல உள்ள உள்ளர்த்தம் நோக்கு புரியலையா மா.. அந்த அளவுக்கா நீ பச்சை மண்ணு?" என்று தன் வாயை பொத்தி ஆச்சரியமாக அவள் கேட்க.
 
அப்படியும் இருக்குமோ தன் மகள் தற்போது பிரபலமாகி வருகிறாள் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் கேட்கிறார்களோ என்று சிறு எண்ணம் அவருக்கு உதிக்க.. அதே நேரம் இருந்தால் என்ன அவர்களும் நல்ல குடும்பம் தானே என்று நினைத்தவர்..
 
"இங்க பாரு பிரியா.. இன்னிக்கு அம்மாகிட்டே பாசமா இருக்கிறவன் நாளைக்கு ஆம்படையா கிட்டயும் பாசமா இருப்பான். தாய்க்கு பின் தாரம் நீ கேள்விப்பட்டதில்லையா? அதனால.. அந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். வர்த்தினிய நல்லா வச்சி பார்த்துப்பா. அந்த மாமியும் நம்ம கனகா மாமி மாதிரிதான். சட சட பேசினாலும் மனசு நல்ல தங்கமான மனசு.. நாம ஏற்கனவே வாக்கு கொடுத்துட்டோம் அவா கிட்ட.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. இனிமே இதப்பத்தி எந்த பேச்சும் கிடையாது. நீ சீக்கிரம் ரெடி ஆகுற வழியை பாரு" என்று வர்த்தினியை பார்த்து கூறியவர், பின் அதே டோனில் பிரியாவை பார்த்தது "சின்ன குட்டி நீ வாயை அடக்கு. முதல்ல குளிச்சிட்டு நீயும் அக்கா கூட போய் அவளுக்கு உதவி செய்" என்றவர், "நேக்கு அடுப்பிலேயே இன்னும் நிறைய வேலை இருக்கு. ஒருத்தி நான் எவ்வளவு வேலை தான் பார்க்கிறது" என்று தன் பாட்டில் புலம்பிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.
 
கண்கள் குளம் கட்ட மெல்ல தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் வர்த்தினி. 
 
சுப்புவும் வழக்கமாக பெண்கள் கல்யாணம் என்றால் தாய் தந்தையை பிரிந்து செல்ல நேரிடும் என்பதால் ஏற்படும் கலக்கம் என்று நினைத்து கொண்டவர் பெண்ணின் அருகே சென்று.. 
 
"வருமா.. என்னைக்கு இருந்தாலும் புக்ககம் போக வேண்டியது தானேடா? அதுக்கு போய் கலங்கலாமா? முன்ன மாதிரியா இப்போ.. எல்லாம் நினைச்சா போது வந்திடப் போற.. இதை நினைத்து கலங்கக் கூடாது.. சரியா? போய் சமத்து பொண்ணு ரெடியாயாகுவியாம்.. போடா" என்று வாஞ்சையாக கூறினார்.
 
அன்னை சற்று அழுத்தமாக கூறியதை தந்தை அன்பாக கூறினாலும் விஷயம் என்னவோ ஒன்றுதான்!! 
 
"இருவரும் சேர்ந்து அந்த அம்மாஞ்சி பிரதீபனை நேக்கு அத்திம்பேராக்க பார்க்கிறா?" என்றவாறு அங்கு நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள் ஹரிப்பிரியா.
 
வர்த்தினி தந்தையிடம் மெல்ல தலையசைத்துக் கொண்டு அவசரமாக தன் அறைக்குள் புகுந்து கதவை தாழிட்டுக் கொண்டாள். அக்காவை பார்த்து ஹரிப்பிரியாவுக்கு வருத்தமாக இருக்க.. திரும்பி தந்தையைப் பார்த்து, "ஏதோ அவ வாயில்லா பூச்சி அதனால நீங்க சொன்ன மாப்பிள்ளைக்கு தலையாட்டிண்டு போய்ட்டா.. அந்த மாதிரியெல்லாம் நீங்க என்னை நினைச்சு கூட பாக்காதீங்கோ" என்றவாறு ரஜினி ஸ்டைலில் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு குளியல் அறை நோக்கி சென்றாள் அவள்..
 
மகள் பேசியதை கேட்டவுடன் அவசர அவசரமாக சமையலறையை நோக்கி பார்த்தார் சுப்பு. எங்கே தன் மனைவிக்கு கேட்டு விட்டதோ என்று? பின்னே இவள் சொன்னதை கேட்டால் மனைவி சும்மா இருப்பாரா என்ன!!
 
 
தன் அறைக்கு வந்தவள் தொலைபேசியிலிருந்து வினய்யின் லண்டன் நம்பருக்கு அழைக்க.. தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று பெண்ணின் குரல் கேட்டது கோபமும் வேகமும் ஒருங்கே வந்தது..
 
ஐ வி ஆர் இன் வாய்ஸ் பெண்குரல் ஆகத்தான் இருக்கும் என்பதை மறந்தவள்.. "இதுல கூடவா இவனுக்கு பொண்ணுங்க வாய்ஸ்தான் வேண்டி இருக்கு?" என்று அதற்கும் தன்னவனையே திட்டிக் கொண்டு திரும்ப திரும்ப டயல் செய்து அப்பெண் குரலைக் கேட்டு எரிச்சலாகி போனை தூக்கி போட்டாள்.
 
பின் அன்று மஞ்சுளா தன்னிடம் பேசியதை நினைத்தவள், சட்டென அந்த நம்பருக்கு இவள் அழைக்க.. அவர் ஃபோன் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூற விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டாள் வர்த்தினி.
 
எவ்வாறு அவளவனை தொடர்பு கொள்வது என்று தெரியாமல்.. தன்னுடைய இந்த விஷயத்தை எவ்வாறு தெரியப்படுத்த என்று புரியாமல்.. கண்கள் கரித்துக் கொண்டு வர இரு துளி கண்ணீர் முதலில் விழ.. அடுத்தடுத்து கரகரவென கண்ணீர் வழிந்து ஓடியது அவளது கன்னங்களை தாண்டி..
 
சிறிது நேரம் சென்று ப்ரியாவின் குரல் வெளியில் கேட்க.. அதோடு சேர்ந்து கதவு தட்டும் சத்தத்தில் தான் சுயத்திற்கு வந்தாள் வர்த்தினி.
 
அது இருவரும் சேர்ந்து உபயோகிக்கும் அறை.. தன் கண்ணை நன்றாக துடைத்துக்கொண்டு அவள் அவசர அவசரமாக கதவை திறக்க.. அழுது வீங்கிய இமைகளும்.. கலங்கிய கண்களும்.. செம்மை பூசிய கன்னங்களும் என அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை பிரியாவுக்கு தெளிவாக காட்ட.. தன் அன்னை தந்தை மீது அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது..
 
"அருமை பெருமையாக பெண்ணை வளர்ப்பார்களாம்.. அவள் விரும்பியது விரும்பாததை என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்களாம்.. சிறிது நாள் மட்டுமே உபயோகிக்கும் டிரஸ்ஸில் இருந்து நகைகள் வரை அவள் விருப்பப்படியே தெரிந்தெடுத்து கொடுப்பவர்களாம்... வாழ்நாள் முழுக்க கூட வரும் உற்றதுணை அதுவும் கஷ்டம் நஷ்டம் என அனைத்திலும் பங்கெடுக்கும் தன்‌ சரிபாதியை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டும் அவர்களுக்கு கிடையாதாம். இது எந்த வகையில் நியாயம்.. கேட்டால் நீ சின்ன பொண்ணு நோக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்லுவா.. ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணுக்கு எதுக்கு இவா கல்யாணம் பண்றா?" என்று தன் அக்காவிடம் நீண்டு சொற்பொழிவு ஆற்றி கடைசியாக கேள்வி கேட்க.. அந்த கேள்வியில் வர்த்தினிக்கு கூட சிரிப்பு வந்து மெதுவாகப் புன்னகைத்தாள்.
 
"ஹே அழுத பிள்ளை சிரித்ததாம்.. அய்யோ.. அடுத்தது மறந்து போச்சே.. எதையோ குடிச்சுன்னு சொல்லுவாங்களே.. ஆமாம் 
வரு எதை குடிச்சி.. ஆனா நீ எதையும் குடிக்கலையே?" என்று தன் அக்காவிடம் அவள் கேட்க.. 
 
அவளின் இந்த குறும்பு பேச்சில் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள் வர்த்தினி.
சிரிக்கும் தன் அக்காவையே ரசனையோடு பார்த்தவள், இரு கன்னங்களையும் தன் உள்ளங்கையால் தாங்கி "எப்போதும் இப்படி சந்தோஷமா இருக்கணும் வரு.. எந்த விஷயத்திற்காகவும் சுணங்கக்கூடாது கலங்கக் கூடாது. பீ ப்ரேவ் பேபி" என்று தன் தோளால் அவள் தோளில் ஒரு இடி இடிக்க தங்கையின் இந்த விஷமத்தில் மலர்ந்து சிரித்தவளுக்கு தன்னவன் நினைப்பே வந்தது.. 
 
அவனும் இவ்வாறு தானே!! ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி இருந்தாலும் அதில் ஒரு இலகுத்தன்மை இருக்கும்.. சிரிப்புடனே தன்னுடைய காரியத்தை அவன் சாதித்துக் கொள்வான் என்று நினைக்க நினைக்க மீண்டும் மனம் கலங்கியது அவளுக்கு.
 
ஆனால் அன்று எவ்வாறு ட்ரெய்னில் தன் பின்னால் வந்தான் என்று யோசிக்க மறந்தாள்!! அவளவன் எப்பொழுதும் அவளை தன் கண் பார்வையிலேயே வைத்திருக்கிறான் என்பதையும் மறந்தாள்!!
 
 
"இப்போது ரெடியாகு மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ப்ரீயா கூற அன்னை தந்தையை எதிர்த்துப் பேசத் தெரியாத வர்த்தினியும் இப்போது சூழ்நிலையை சமாளிக்க வேண்டி தன்னை அலங்கரித்துக் கொள்ள தயார் ஆகினாள் தங்கையின் உதவியோடு..
 
ஒருவழியாக அலங்கரித்தவள், "நீ ரெஸ்ட் எடு.. நான் அம்மாகூட போய் அந்த அவாவை எப்படி வரவேற்குறேன்னு பாரு" என்று கண்ணடித்து விட்டு ஹாலை நோக்கி சென்றாள் பிரியா..
 
அப்போது புதிதாக ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வர யோசனையுடனே அதை பார்த்த வர்த்தனி, எடுத்துக் காதில் வைக்க.. அந்த புறமும் "என்னடி மாமி.. பூ வைக்க வர மாப்பிள்ளைக்கு உங்க அம்மா பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தயார் பண்ணிட்டாங்களா.. நீயும் சர்வ அலங்கார பூஷிதையாக ரெடி ஆகிட்டியா?" என்று நக்கல் குரலில் அந்தப் பக்கமிருந்து வினய் கேட்க..
 
அவனின் அந்த கேள்வியில் கலக்கத்துடன் அழுகையுடன் "வினு" என்று அலறினாள் வர்த்தினி.
 
"ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.. உங்களைத் தவிர நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்பேனா.. அப்படி ஒன்று நடந்தால் நீங்க என்னை உயிரோடவே பாக்க முடியாது" என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் கேவிக்கேவி அவள் அழ ஆரம்பிக்க..
 
 
"ஏ மாமி.. சும்மா தாண்டி உன்னை கலாய்ச்சேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதா? இப்போ அழுகையை நிப்பாட்ட போறியா? இல்ல நான் உன் வீட்டுக்குள்ள வந்து உன்னை கட்டிப்புடிச்சி கேவிக்கேவி அழுவுற அந்த வாயை புடிச்சி கடிச்சி வைக்கவா?" என்று கேட்க..
 
"ஹாங்.. அது எப்படி நீங்க வருவேள்?" என்று கேட்க.. "வெளியே உங்க வீட்ல இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிற சிவன் கோவில் நின்னு தான் பேசிக்கிட்டு இருக்கேன். என்ன வரவா?" என்று கேட்க.. "அச்சோ வேண்டாம்" என்றாள்.
 
அதுவரை கலங்கிய முகமாக இருந்தவள் துணைக்கு தன்னவன் அருகில் தான் இருக்கிறான் என்று தைரியத்திலும்.. அவன் மீதான நம்பிக்கையிலும் முகம் தெளிவடைய அறைக்குள் வந்த ப்ரியாவும் அவளின் முகப்பொலிவை பார்த்துவிட்டு "என்ன திடீர்னு ஆயிரம் வாட்ஸ் போல் உன் முகம் பிரகாசமாக இருக்கு" என்று கேட்க ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்துக் கொண்டாள்.
 
 
"அவா வந்துட்டா.. வா" என்று கூறிய பிரியா அவளை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.
 
அங்கே தன் சொந்தங்கள் புடைசூழ கூடவே கனகா மாமியும் நாராயண மாமாவும் இருக்க பத்மா வெங்கடேசன் பிரதீபன் நடுநாயகமாக அமர்ந்திருக்க.. அனைவரையும் பார்த்தவள் வேண்டாவெறுப்பாக வணக்கம் வைத்துவிட்டு அமைதியாக நின்றாள்.
 
கனகா மாமியும் கடுப்பில் தான் அமர்ந்திருந்தார் பத்மாவின் செயலில்... பின்னே ஊரில் இருந்து வந்தவர், வர்த்தினியை பெண்கேட்டு இருப்பதாக அதற்கு அவள் வீட்டில் சம்மதித்திற்பதாக கூறியவர், "என் பையன கல்யாணம் பண்ணிக்க அந்த பொண்ணு குடுத்து வச்சிருக்கணும். அதுவும் வரதட்சனை சீர்வரிசை நகைகளுடன் வந்த எவ்வளவு பொண்ண நாங்கள் தட்டிக் கழித்துவிட்டு வந்தோம்னா.. இந்த பொண்ணு நம்ம ஊரா இருக்காளே என்கிற ஒரே காரணத்திற்காக தான், இவளை நான் என் மாட்டுப்பொண்ணா ஏத்துக்க சம்மதிச்சேன்... என்ன இருந்தாலும் இங்கே பொறந்துட்டு லண்டன்ல வாழ்வது என்றால் சும்மாவா.. லண்டன்ல...." என்று ஆரம்பித்தவர் அதன் அருமை பெருமைகளை வரிசையாகப் பட்டியலிட்டு, அங்கு தாங்கள் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தனியாக ஒரு சொற்பொழிவாற்றி முடிக்க நொந்துவிட்டார் கனகா மாமி...
 
அதுவும் அந்த இரண்டு நாட்களில் அவர் செய்த அலப்பறை வேறு.. சென்டர்லைஸ்ட் ஏசி பண்ணலையா? என்ன இது ஏசி கூலிங்கே வரவில்லை? என்றும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரையே படுத்தி எடுத்துவிட உச்சக்கட்ட கோபத்தில், தன் கணவர் நாராயணன் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தார் கனகம் மாமி..
 
ஒரு வழியாக வர்த்தினி வீட்டுக்கு அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தது, இங்கேயும் தன் அலப்பறையை கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை பத்மா மாமி..
 
எதையும் தாங்கும் இதயமான சுப்புவுக்கே ஒரு கட்டத்தில் அவரின் பேச்சுகள் சற்று அதிகப்படியாகவே தோன்ற.. பேச்சை மாற்றும் பொருட்டு தன் மனைவியை அழைத்தார். "மீனு எல்லாருக்கும் பலகாரத்தை பரிமாறிலமோனோ" என்று கேட்டு..
 
"இல்ல இல்ல அதெல்லாம் படாது.. முதல்ல நாம ரெண்டு ஆத்துலேயும் சம்பந்தியாகலாம். அதுக்கு அப்புறம் தான் உங்க ஆத்துலேயே நாங்க கை நினைப்போம்" என்று பத்மா மாமி முந்திக் கொண்டு செல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
 
 
சரியாக தட்டை மாற்றும் நேரத்தில் "ஸ்டாப் இட்" என்று சொல் வாயிலிருந்து கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர்..
 
வர்த்தினியும் ஆவலோடு அவளவனை எதிர்பார்த்து திரும்ப.. அங்கேயே நின்றவர்களைப் பார்த்து அவளும் குழம்பி போனாள்..
 
பின்னே வந்தது வினய் விஸ்வேஸ்வரன் அல்ல...
 
லண்டன் வாசியான கேத்தரின்.. அதுவும் 8 மாத சிசுவை வயிற்றில் சுமந்துக்கொண்டு.. அவளுக்குப் பின்னே அவளது தாய்.. அவள் தாயின் இரண்டாவது கணவர். இரண்டாவது கணவரின் மூன்றாவது மனைவியின் பிள்ளைகளும்.. இரண்டாவது மனைவி பிள்ளைகளும்.. (முதல் மனைவிக்கு குழந்தை இல்லை போலும்) கூடவே தனது நான்காவது மனைவியான கேத்தரினுக்கும் தனக்கும் பிறந்த பிள்ளை என அவர்கள் ஒரு மினி லண்டனை அழைத்து வந்திருக்க...
 
பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் பிரதீபனுக்கோ பேரதிர்ச்சி!!
 
சுப்பு என்னவென்று புரியாமல் அவர்களிடம் என்ன என்று விசாரிக்க இயலாமல் கையை பிசைந்து கொண்டே நிற்க.. அவ்வூரில் பெரிய தலையான நாராயணன் தான் அவர்களிடம் சென்று விசாரித்தார்.
 
அப்போது வந்திருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் ஆங்கிலத்தை குழைத்து வளைத்து பேசி நாராயணனையே நடுநடுங்க செய்ய... பார்த்திருந்து அனைவரின் கதியை என்னவென்று சொல்ல!!
 
பின் ஒருவழியாக அவர்களை எல்லாம் அடக்கியவர் "யாராவது ஒருத்தங்க பேசுங்க இப்படி எல்லாரும் பேசினா எங்களுக்கு என்ன புரியும்?" என்று சற்று அதிகாரமாகவே கேட்க..
 
கேத்தரினின் தாய் முன்னே வந்து பிரதீபன் கையைக் காட்டி "அவன் என் மகளை டேட்டிங்காக அழைத்து சென்று கர்பவதியாக்கி விட்டு, இப்போது இந்திய பெண்ணை மணந்து கொள்வதற்காக இங்கே வந்திருக்கான். என் மகளுக்கு பிரசவம் ஆவதற்கு முன் கண்டிப்பாக கல்யாணம் நடந்தே ஆக வேண்டும்" என்று அவர் ஆணித்தரமாகக் கூற..
 
பத்மா மாமியும் பத்ரகாளியாக உருமாறி சண்டைக்கு சென்றுவிட.. கேத்தரின் தாய் ருத்ர காளியாக மாறி பதிலுக்கு சண்டையிட..
ஒரு மினி உலகப் போரே வாய் வார்த்தைகளால் அரங்கேற்றிக் கொண்டிருந்தது அங்கே!!
 
பின் நாராயணன் இருவரையும் அமைதிப்படுத்தி விட்டு பிரதீபனிடம் "அந்த பெண்ணை தெரியுமா?" என்று கேட்க..
 
"தெரியும்.. ஆனால் அந்த குழந்தைக்கு அப்பா நான் இல்லை" என்றான்..
 
"டேட்டிங் போனியா?" என்று கேட்க..
 
"போனேன்.. ஆனா அந்த குழந்தைக்கு அப்பா நான் இல்ல" என்றான் திரும்பவும்..
 
அடுத்த கேள்வி கொஞ்சம் அந்தரங்கம் தான் ஆனால் கேட்க வேண்டிய கட்டாயம், வேறு வழியில்லை என்று விட்டு அவனை சற்று நெருங்கி நின்று மெதுவான குரலில் "அந்தப் பெண்ணோடு ஒன்றாக இருந்தியா?" என்று கேட்க..
 
உருத்து விழித்த தன் அன்னையைக் கண்டு ஜெர்கானவன் தன் சித்தப்பாவை நோக்கி..
 
"ஆமாம்.. ஆனால் அந்த குழந்தைக்கு அப்பா நான் இல்லை" என்றான் மீண்டும்..
 
உடனே அங்கிருந்த ஒரு பெரியவர் "என்னடா படையப்பா படத்தை எங்களுக்கே படம் போட்டு காட்டுறியா?" என்று கோபமாக கேட்க..
 
"இப்போ புரியுது நீங்க ஏன் லண்டனிலிருந்து இங்கே பொண்ணு தேடி வந்தீங்கன்னு. இந்த ஒரு பொண்ணு தானா? இன்னும் எத்தனை பொண்ணோ யாரு கண்டா?" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பேச.. கனகா மாமிக்கு ஏக குஷியாக இருந்தது.
 
 
அப்போது கனகா மாமி செல்லுக்கு அவர் வீட்டின் வேலைக்காரன் அழைப்பு விடுக்க.. அதை செவி மடுத்தவர், "அப்படியா? சரி சரி இது வந்தர்றேன்" என்றவர் தன் கணவன் அருகில் சென்று அவன் காதில் ஏதோ குசுகுசுக்க..
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் கனகமும் நாராயணனும் தங்கள் வீட்டை நோக்கி சென்று விட்டனர். பத்மா மாமி, வெங்கடேசன் மாமாவை அம்போ என்று விட்டுவிட்டு...
 
அப்புறம் என்ன கேத்தரின் குடும்பம் பிரதீபனை அலேக்காக தூக்கிக் கொண்டு செல்ல.. வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு பத்மா மாமியும் வெங்கடேசன் பின்னே செல்ல..
 
தான் உட்கார்ந்த இடத்திலிருந்து பத்மா குடும்பத்தை விரட்டி இருந்தான் வினய்!!
 
வந்திருந்த கூட்டமும் "நல்லவேளை உங்க பொண்ண தப்பித்தா.. இந்த மாதிரி குடும்பத்தை நம்பி பொண்ணு கொடுக்க இருந்தீங்களே?" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மீனாட்சியின் வயிற்றில் நன்றாக புளியைக் கரைத்து விட்டு சென்றனர்.
 
 
அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்துவிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அன்னையை பாவமாக பார்க்க.. அவரோ 'அவசரத்தில் எப்படிப்பட்டவனை தன் ஆசை மகளுக்கு கட்ட இருந்தேன்.. நல்ல வேலை தலை தப்பியது தம்புரான் புண்ணியம்' என்று பெருமாளை சேவித்து கொண்டார்.
 
சொந்தங்கள் எல்லாம் கலைந்து செல்ல.. அந்த நேரத்தில் நாராயணன் உள்ளே நுழைந்தவர், "போங்கோ போங்கோ.. எல்லாரும் உள்ளே போய் உட்காருங்கோ" என்று அனைவரையும் அமர செய்ய புரியாமல் பார்த்தாலும் அனைவரும் சென்று அமர்ந்தனர்.
 
 
பின் வாயில் பக்கமாக திரும்பி "வாங்கோ வாங்கோ" என்று அவர் யாரையோ பவ்யமாக அழைக்க.. அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கே வந்தது தரணீஸ்வரன் குடும்பம்.
 
சுப்புவை அழைத்து "இவர் லண்டனில் பெரிய தொழிலதிபர். பெயர் தரணீஸ்வரன். அவரு அவங்களோட ஒரே பையன் வினய் விஸ்வேஸ்வரன். இவரு கம்பெனியில தான் நம்ம பொண்ணு பாடினா. நம்ம பொண்ணு குரலை மட்டும் இல்ல.. அவளையும் அவங்க ஆத்துல உள்ளவாளுக்கு பிடிச்சதால.. பொண்ணு கேட்டு வந்து இருக்கா. நேக்கு தெரிஞ்ச வகையில ரொம்ப நல்ல குடும்பம். நம்பி கொடுக்கலாம். நீ என்ன சொல்ற சுப்பு" என்று அவர் நேரடியாக கேட்க...
 
"அவ நம்மவாளா?" என்று ஒருவர் கேட்க.. "இல்லை" என்று ஆணித்தரமாக மறுத்தார் நாராயணன்.
 
"அதன்படி நம்மவா இல்லாத ஒருத்தனுக்கு நம்ம பொண்ணை நம்பி கொடுக்கிறது?* என்று மற்றவர் பாய்ந்து வர..
 
"இப்ப ஷத்த நேரத்துக்கு முன்னாடி நம்ம சமூகத்தை சேர்ந்த பிள்ளையாண்டான் லட்சணத்தை தான் பார்த்தோமோனோ.. ஆனா அதே சமயம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன் நம்ம பொண்ண விரும்பி வராங்க.. அதை நாம் தடுக்க வேண்டாம். கொடுப்போமே" என்று நாராயணன் அழுத்தமாக கேட்க.. சுப்புவும் மீனாட்சி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
 
பின் இருவரும் "ஷத்த பொறுங்கோ" என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குள் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வந்தனர்.
 
"எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை மாமா.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான். அதுக்கு இவங்க ஒத்துண்டா நாம மேல பேசலாம்" என்று சுப்பு கூற..
 
அவரின் கண்டிஷனை கேட்ட அவரின் சொந்தங்கள் முதல் தரணீஸ்வரன் வினய் விஸ்வேஸ்வரன் என அனைவரும் அதிர்ந்து போய் எழுந்து நின்றே விட்டனர்.
 
ஒருவரைத் தவிர அது மஞ்சுளா!!
 
அப்படி என்ன கண்டிஷன் போட்டு இருப்பார் நம்ம சுப்பு...

   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top