18
அந்திவேளை தாண்டிய இரவு நேரம்..
ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையின் ஓரம்..
இளம் கன்னியவளோ காளையின் நெஞ்சோரம்...
ஈர உதடுகள் முத்த மொழிகளில் சஞ்சாரம்..
உன்னில் நான் என்னில் நீயென காதல் பித்துகள்..
ஊண் உருக்கும் காதல் மொழிகள்..
எல்லைத் தாண்டா மோக விளையாட்டுகள்..
ஏந்திழையின் கிளுக்கு சிரிப்புகள்..
ஐந்திணை தலைவனின் வன் அணைப்புகள்..
ஒன்றுடன் ஒன்று பிணைந்த கைகள்..
ஓர் உயிராய் இரு மெய்கள்...
மலரினியின் மலர்ந்த இதழ்களில் வண்டென தேன் அமுதம் பருகிக் கொண்டிருந்தான் மன்னனவன்.. அவன் விலக விரும்பாத இடமது.. அவள் விரும்பி தொலையும் இடமது.. வர்த்தினியின் பலவீனமான எதிர்ப்புகள் எல்லாம் முறியடித்து தனது வெற்றிக் கொடியை அவள் இதழ்களில் நாட்டிக் கொண்டு இருந்தான் வினய். அவனின் தீண்டலில் பாகாய் குழைந்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் மீதான அவன் தேடல்கள் நெடும் தொடராய்.. நடுங்கிக் கொண்டிருக்கும் பெண்மையை இறுக்க அணைத்து.. அவனுக்குள் அவளை புதைத்து.. பின் கழுத்துகளில் அவன் இட்ட சூடான முத்தங்கள் அவளை கிறங்கிப் போக வைத்தது. அவளின் பெண் வாசனை அவனை தாபம் கொள்ள வைக்க.. அவனின் ஆண்மை ஸ்பரிசமோ பாவையவளுக்கு பித்த கொள்ள செய்ய.. தங்களை மறந்த நிலையில் ஆலிங்கணம் செய்தப்படி இரு காதல் புறாக்களும்...
அவளின் வெம்மை மூச்சு காற்று அவனின் மீசை உரசி செல்ல.. அதில் ஆடவனுக்கு மோக வெப்பத்தை கூட்ட..
"மாமீமீ" மென்மையாக அழைத்தவனின் குரலில் தான் என்னவொரு காதல்!!
"இரண்டு நாளா நான் நானாவே இல்லடி மாமீமீ.. எப்படி டி இந்த மாற்றம் சாத்தியமாச்சு.. இன்னும் என் கை வளைவில் நீதானானு எனக்கு நம்பிக்கையே இல்லடி"
என்று கேட்க..
வெட்கத்தில் சிவந்த முகத்தை உதட்டை கடித்து சமன்படுத்தியவள், "நம்பிக்கை தானே.. இப்போ வரும் பாருங்கோ" என்றவள் அவனின் இரண்டு நாள் மழிக்கப்படாத தாடியால் சூழ்ந்த கன்னத்தில் முத்தமிட வருபவள் போல சென்று அழுத்தமாக கடித்து வைத்து, "இப்போ வர்றதா நம்பிக்கை" என்று கூறி கிளுக்கி சிரிக்க..
அவளின் சிரிப்பில் தன்னை தொலைத்தவன், அவள் உதட்டின் மீதிருந்த மச்சத்தில் மென்மையாக முத்தம் வைத்தான்.
"சொல்லுடி.. அம்சா மாமீமீ.. இப்படி இந்த மாமன் மேல காதல் வந்துச்சு" என்று கேட்டான்.
அவளால் சட்டென்று பதிலுரைக்க முடியவில்லை. ஆனா மட்டும் அவளது மூளை பிரம்மபியத்தனம் செய்ய.. வினய்யின் அதீத நெருக்கம் அவளை எந்தவொரு சிந்தனையும் செய்யவிடவில்லை. அவள் விலகி அமர.. கண்களால் அதற்கு தடா விதித்தவன், ஆக்டோபஸ் போல தனது கரங்களால் அவளை பிணைத்து கொண்டான் அவளின் சிறு விலகல் கூட தாங்க முடியாதவனாய்...
இரு கால்களையும் விரித்து வைத்து அவன் அமர்ந்திருக்க கால்களுக்கு இடையில் அமர்ந்து அவனது மார்பில் தலை சாய்த்து இருந்தாள் வர்த்தினி.. அவன் முரட்டு கரங்கள் அவளை இறுக்கிப் பிடித்து அணைத்து இருந்தது. மெல்ல அவை கீழே இறங்கி அவள் மெல்லிடையில் வழுவழுப்பில் அழுத்தமாகப் பதிய.. ஸ்ஸ் என்ற மோகன குரல் பாவையிடத்தில்...
அவளது அந்த குரலில் கிளர்ந்தவன், அவளை இன்னும் இன்னும் தீண்டும் ஆர்வம் அதிகரித்தது. அவர்களின் காதலில் அவன் அவளிடத்தில் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் மறந்து போக.. அவளோ அவனிடத்தில் சொல்ல துடித்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குழியில் சிக்கி போக... இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து கொண்டிருந்தனர்.
புதிதாக காதல் கொண்ட காதலன் காதலியின் அழகினை விரல்களால் தீண்டி தீண்டி ஆட் கொள்ள முனைய.. காதலியோ அவனின் அத்துமீறும் விரல்களுக்கு அவ்வப்போது தடைவிதித்து தன் கைகளோடு பிணைத்துக் கொண்டாள்.
"ஏன் மாமீமீ" என்று காதுக்குள் கிசுகிசுத்தான். அவனுக்கு என்ன பதில் உரைப்பாள் அவள். வெட்கம் கொண்டு மன்னவன் மார்பிலேயே அவள் புதைந்துகொள்ள.. அவளை தன் மீது சரித்தவனின் முரட்டுத்தனமான அணைப்பு அவளுக்கு இன்னும் இன்னும் வேண்டுமாய்..
"மாமி என்னை கொல்லுறடி" என்று காது ஓரத்தில் கிசுகிசுக்கும் மீசை முடிகளின் ஸ்பரிசத்தில் தன்னை இழந்து கொண்டிருந்தாள் வர்த்தினி.
அவளோ "ம்ம்ம்" என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் உச்சரிக்கவே இல்லை.
"உன்னோட ஒற்றை சொல்லே எனக்கு போதை ஏத்துது டி தெரியுமா?" என்று அவன் கவிதையாய் கூற..
அவளோ "அது நான் ஓட்கா குடிச்சனோ, அதனால இருக்குமாக்கும்" என்று ஒற்றை கண்ணடித்து சிரித்தாள்.
"அடிப்பாவி நீ ஓட்கா எல்லாம் குடிப்பியா.. போதை ஏறலையா உனக்கு மாமி?" என்று அவன் அதிசயமாய் கேட்க..
"காதலே பெரும் போதை.. அதையே எனக்குள் எடுத்திண்டு நான் ஸ்டடியா இல்லையா?" என்றவளின் பேச்சில், கண்கள் மின்ன "அப்போ..." என்றவன் அவளின் காது ஓரத்தில் சென்று கிசுகிசுக்க..
அவளோ "ச்சீ.." என்று அவனின் வாயை மூட.. தன் மீசையால் அதில் குறுகுறுக்க வைக்க.. அவள் தன் கையை அகற்றி கொள்ள.. உரத்த குரலில் சிரித்தான் வினய். சிரிக்கும் அவனையே ஆசையுடன் அவளை பார்க்க..
"என்னடி மாமி சைட் அடிக்கிறியா?" என்று அவன் கண் சிமிட்ட..
"அதான் இந்த மூஞ்சியை போய் எப்படி நான் லவ் பண்ணேன் என்று யோசிக்கிறேன்" என்று அவள் வார...
"வாய்க்கொழுப்பு ஜாஸ்திடி மாமி உனக்கு" என்று குரல் சற்று கோபமாக கூறினாலும் அவன் கன்னங்களோ இவள் கன்னங்களுடன் இழைந்துக் கொண்டே இருந்தது.
தொடர்ந்து இது போன்ற சின்ன சின்ன உரையாடல்களும்.. அவளின் கிளிக்கி சிரிக்கும் ஓசைகளும்.. கொஞ்சல் மொழிகளும்.. சிணங்கல் குரல்களும் என்று அந்த இடமே காதலால் வழிந்தது.
தன் மீது அதீத காதலும் மயக்கமும் கொண்ட இந்த பெண்ணிடம் எதை கொடுத்து தான் ஈடு செய்ய? இந்த உலகத்தையே கொடுத்தாலும் அது கொஞ்சமும் பத்தாது, என்று ஆசையோடு அவளை பார்த்தவன் ஒற்றை விரலால் அவளது முக வடிவை அளந்தான்..
அவளோ அவனது செய்கையில் அவனது முகம் பார்க்க முடியாமல், உதட்டை கடித்து நிலத்தை பார்த்து முகம் சிவந்தாள். அவ்வப்போது அவள் முகத்தில் மின்னல் கீற்றாய் வெட்க புன்னகை ஓடிக்கொண்டிருந்தது.
அவளின் வெட்கப் புன்னகையில் மயங்கியவன், கண்களில் காதல் வழிந்து ஓட அவள் காதில் கிசுகிசுப்பாக "ஐ லவ் யூ மாமி" என்று சொன்னான்.
புன்னகையுடன் பார்த்தவளை மொத்தமாக தனது மடிக்கு இழுத்து இருந்தான். தன் கரங்களுக்குள் அவளை பாதுகாப்பாக வைத்து சிறைப்படுத்த.. அவளோ விருப்பமுடன் அவன் மார்பில் முகம் பதித்து அந்த சிறையில் ஆட்பட்டு.. இருகைகளாலும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவள் காட்டிய இந்த நெருக்கத்தில் தன் மனதில் உள்ள அனைத்து கவலையும் வழிந்தோட, அவள் உச்சந்தலையில் மென்மையாக முத்தம் வைத்தவன் அதில் தாடையை பதித்தான்.
"வனி.." செல்லமாக சுருக்கி அவளை அழைக்க.. இம்மாதிரி யாரும் அவளை இதுவரை அழைத்ததில்லை, நிமிர்ந்து தன்னவனை பார்த்தாள்.
"இது எனக்கான பிரத்யேக அழைப்பு.. நான் மட்டுமே என்னோட மாமியை கூப்பிடும் ஸ்பெஷல் அழைப்பு" என்றவன் அவள் மூக்கோடு மூக்கு உரச..
அவளும் "வினு" என்று அழைத்து அவனின் நுனி மூக்கில் செல்லமாக முத்தம் வைத்தாள்.
"உன்கிட்ட நெறைய பேசனும் நிறைய சொல்லணும்.. எங்கிருந்து எதை ஆரம்பிக்க என ஒன்றுமே புரியலை மாமி" என்று அவன் அவளது தலையை மென்மையாக வருடிக் கொண்டே கூறினான்.
சொல்ல முடியுமா? எல்லாவற்றையும் அவளிடம் சொல்ல முடியுமா? தன்னுடைய கடந்தகாலத்தை அவளின் இந்த பூ முகத்தை பார்த்து எவ்வாறு சொல்ல முடியும்? இதைக் கேட்டால் அவளுடைய அந்த காதல் எங்கனம் சாத்தியமாகும்? தனக்குள்ளேயே மருகிக் கொண்டே அவன் அமர்ந்திருக்க..
இதை அறியாத வர்த்தனியோ சுகமாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தாள்.
தன் மார்பில் தலை சாய்த்து இருந்த
வர்த்தினியின் உச்சந்தலையில் தனது முகத்தை பதித்திருந்த வினய்யின் உள்ளமோ தன் எதிரே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகடலாய் வியாபித்திருந்தது. வர்த்தினியின் மனமோ ஆழ் கடல்போல அமைதியில் வியாபித்திருந்தது.
பௌர்ணமி தினத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் வினய்யின் உள்ளம் மன எண்ணங்களின் எழுச்சியால் கொந்தளித்துக் கொண்டு இருக்க.. இதை எதையும் அறியாத வர்த்தனியோ தன் விரல்களோடு அவன் விரல்களை கோர்த்துக் கொள்ள... கோர்த்த கரங்களை அவன் இன்னும் இறுக்கிக் கொண்டான்.
"மாமி.. இப்போ நான் சொல்லுவதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல.. என்னை பத்தி என் கடந்த காலத்தைப் பற்றி சொல்லியே ஆகணும்.. இதை மறைத்து பொய் மேலே நம்மளோட காதலை அமைக்க எனக்குப் பிரியமில்லை.. என்றைக்கு இருந்தாலும் பொய்யான கட்டிய கூடு நிலைக்காது.. இன்னைக்கு உண்மை கசந்தாலும் அதுதான் நிலையானது" என்று அவன் பீடிகையோடு ஆரம்பிக்க..
வர்த்தனிக்கு தான் தெரியுமே அவனின் கடந்த காலத்தை.. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து அமைதியாக அவனது விரல்களுக்கு சொடுக்கு போட்டவாறு அமர்ந்திருந்தாள்.
விரல்களை அவளிடம் கொடுத்துவிட்டு மனதை அவனிடம் கொட்ட தயாரானான் வினய்.
"பிறப்பால் நான் ஒரு இந்தியன் தமிழனாக இருந்தாலும், வளர்ந்த விதம் முழுக்க முழுக்க இங்கே லண்டனில் ஒரு வெளிநாட்டு ஆளாக தான்.. அவங்களோட கல்ச்சர் எனக்குள் என்னை அறியாமலே வளர நானும் அது கூடவே அப்படியே வளர்ந்துட்டேன்"
விரலைச் சொடுக்கு கொண்டிருந்தவள் வினய்யின் விரல்களை விட்டு, நிமிர்ந்து சற்று நேரம் அவனை ஆழ்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையின் அர்த்தம் 'இந்த நாட்டில் வாழும் அனைவருமே உன்னைப் போல தானா?' என்று கேட்க..
மறு கையால் அவளது தலையை பிடித்து ஆட்டியவன் "என் கேடி மாமி கண்ணாலேயே கேள்வி கேட்கிற.. ம்ம்ம்" என்று சிரித்தவன்.. "உன் கேள்வி ரொம்ப சரியே.. இங்கே இருக்கிறவங்களும் ஒழுக்கமா இருப்பவர்களும் உண்டு.. ஆனா என்ன செய்ய? என்கிட்ட பணம் நிறைய இருந்ததே..
கூடா குறைக்கு எதிலும் வெற்றி மட்டுமே பார்த்துவிட்டு வந்த என்னோட ஆணவமாக கூட இருக்கலாம். ஏதோ ஒன்று என் வாழ்க்கையில் சில இடங்கள்ல நான் தவறுனது உண்டு.. அதுக்காக நான் தப்பான ஒன்னும் கிடையாது டி" என்று தன்னவளை பார்த்து கண்களால் அவன் யாசிக்க..
அவன் விரல்களை விட்டவள் இரு கைகளாலும் அவனது தாடைகளைப் பற்றி இழுத்து.. நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தாள். அது உன்னுடைய தவறுகள் என்னால் மன்னிக்க பட்டுவிட்டன, அவற்றை நான் மறந்துவிட்டேன் என்று செயலால் காட்ட உருகி தான் போனான் வினய்.
"நானும் என் மனதைப் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த வேணும்.. எல்லோருக்கும் காதல் கண்கள் வழி இதயத்தில் நுழைந்தது என்றால், எனக்கு இதழ் வழி இதயம் நுழைந்தது" என்று வெட்கத்தத்துடன் கூறினாள். அதில் அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் "சொல்லவே இல்லையே மாமி" என்று சிரித்தான்.
"சீ போங்க" என்று அவனின் கைகளை தட்டி விட்டவள் தொடர்ந்தாள். "ஆனால் என்னாலையும் உங்க கடந்த காலத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டு, அதே நேரம் உங்கள மறக்க முடியாம திணறிக் கொண்டு தான் இருந்தேன்" என்று கண்கள் கலங்க அவள் சொல்ல, தன்னால் தன்னவள் கலங்கி தவித்தாள் என்று செய்தி கேட்டதும் அவளை இறுக்க அணைத்து "சாரி.. சாரி.. உன்ன போல ஒருத்தியை எதிர்காலத்தில் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லடி" என்று கதறியவனை முதுகை நீவி ஆறுதல் படுத்தினாள் வர்த்தினி.
"இதுக்கு மேல இந்த பேச்சு பேச வேண்டாம். நீங்க சொன்னேளேனோ, கிருஷ்ணனை உங்களால கும்பிட மட்டும்தான் முடியுமா.. ஆத்துக்காரனா வரிக்க முடியாதான்னு... என்னால இந்த கோகுல கண்ணனை என் ஆத்துக்காரர வரிக்க முடியும். நேக்கு ராமனை விட கிருஷ்ணனை தான் பிடிக்கும். ஆனால்.. இனிமேல் கிருஷ்ணா லீலை எல்லாம்.." என்று ஒரு விரல் பத்திரம் காட்டி அவனை முறைத்து பார்க்க...
இரு காதுகளையும் தன் விரல்கள் கொண்டு பிடித்தவன் "இனிமே நான் ஏக வர்த்தினி புருஷன் டி.." என்று பாவம் போல சொல்ல.. கிளுக்கி சிரித்தாள் அவனின் மாமி.
அவளிடம் தன் கடந்த காலத்தை பற்றி சொன்னதையும் தாண்டி தன் காதலில் உறுதியாக இருந்த அவளின் காதலில் அவனுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
யார் இவள்? என் வாழ்வில் வந்த யட்சினியா இல்லை தேவதையா? இரண்டு நாட்களாக மனதில் இருந்த அனைத்து கவலைகளும் நீங்க, சந்தோசமாக தன் இணையை அணைத்துக்கொண்டான் வினய். வர்த்தினியும் மறுமொழி கூறாமல் தன்னவனை தன்னோடு இன்னும் இறுக்கிக்கொண்டாள். அவனின் கடந்தகால சுவடிகளில் இருந்து மீட்பதற்காகவும்.. கடந்த சில நாட்களாக அவன் மனதில் ஏற்பட்டு அலைக்கலைப்புகளை நீக்கி அமைதி படுத்துவதற்காகவும்.. வர்த்தினியின் நெருக்கமும் சரஸமும் வினய்யை இன்னும் இன்னும் அவள் பால் ஈர்த்தது.
அப்போது அவனின் செல் அடித்தது. "வேறு யார் வில்லியம்ஸ் தான்" என்று அவளிடம் கூறிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தான்.
"சொல்லு வில்" என்று கேட்டவன் குரலே அவ்வளவு சந்தோஷமாக இருக்க, மறுபுறம் பேசிக்கொண்டிருந்த வில்லுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
"பாஸ் அல்ரெடி லேட் ஆயிடுச்சு. நான் இங்கு உள்ள எல்லாரையும் கூட்டிட்டு கிளம்புறேன்" என்று கூற..
"எல்லோரும்னா" என்று வினய் இழுக்க..
"ஷூட்டிங் குழுவினர் அப்புறம் நம்ம ஹயர் பண்ணுன மேடமோட இருக்கும் இசைக் குழுவினர் எல்லாரும் தான் பாஸ்" என்றான்.
"ஓ அப்படியா.. அப்ப ஓகே. எல்லாரும் கிளம்புங்க" என்று அவன் கூற, அதுவரை கேட்டுக்கொண்டிருந்த வர்த்தினி அவசர அவசரமாக அவனது கைகளை சுரண்டினாள்.
"ஜஸ்ட் எ மினிட் வில் .. திரும்ப கூப்பிடுறேன்"
என்றவாறு போனை அணைத்தவன், அவளை அனைத்து "ஏண்டி உனக்கு இவ்வளவு அவசரம்?" என்று கேட்க..
அவன் கைகளில் நறுக்கென்று கிள்ளிவள், "எப்ப பார்த்தாலும் அதே நினைப்புதான் உங்களுக்கு.. நான் சொல்ல வந்ததது எல்லோரும் கிளம்பிட்டாங்கனா நான் எப்படி போறது?" என்று கேட்க..
"நீ மாமா கூட போறது" என்று அவன் கூறி கண்ணடிக்க..
"மாமா கூட போனானேன்னா சிங்கிளா போகமாட்டேன், குடும்பமா தான் போய் இறங்க போறேன்" என்று அவளும் சேர்ந்து சிரிக்க..
"இந்த ஐடியோவும் நல்லாதானே இருக்கு மாமீமீ" என்று அவன் யோசிக்க..
"இருக்கும்.. இருக்கும்.. அதெல்லாம் நேக்கு தெரியாது. என்னோட இசைக்குழு போனால் எப்படியும் பத்மா மாமிக்கு மூக்கு வேர்த்து, அவர்களை கேள்வி மேல கேள்வியா கேட்டு படுத்திடுவா.. அதனால ஒன்னு அவங்களோட என்னை அனுப்பி வையுங்க.. இல்ல நம்ம போகும்போது எல்லாரும் சேர்ந்து போகலாம்" என்று அவள் கூற..
"ஓகே டன்.." என்றவன் திரும்பவும் வில்லியம்சை அழைத்தான்.
"வில்.. சூட்டிங் வந்த குழுவ மட்டும் அனுப்பி வைச்சிடு.. மத்த இசைக் குழுவினருக்கு இன்னும் ரெண்டு நாள் அவங்க இங்கே தங்குவதற்கு ஏற்பாடு பண்ணி கொடு.. உனக்கும் சேர்த்து தான்" என்று கூற.. "ஓகே பாஸ்" என்று வில்லும் கூறினான்.
"அதிலும் ஒரு சிக்கல் இருக்கு" என்று வர்த்தினி இழுக்க..
"இன்னும் என்னடி உனக்கு? உன்னாலதான் நான் எல்லாரையும் இன்னும் 2 நாள் இங்க தங்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். இதுல என்ன சிக்கல் இருக்கு?" என்று அவன் புரியாமல் கேட்க...
அது என்று லீனா தான் சோர்ந்திருந்த நேரங்களில் எவ்வாறு தனக்கு நம்பிக்கை ஊட்டினாள் என்பதை எல்லாம் அவனுக்கு விவரித்தாள். "பாவம் லீனா, ஏற்கனவே அவங்க லவ்வரை பத்து நாளா பிரிந்து இருக்கா.. இதுல இன்னும் ரெண்டு நாளா?"என்று அவள் யோசனையுடன் கேட்க..
"அன்னைக்கு பேசின அம்சா மாமியாடி நீ?" என்று ஆச்சரியமாக அவர்களின் உறவை மிகச் சாதாரணமாக பேசும் வர்த்தினியை பார்த்து அவன் கேட்க..
"அது காதல்னா என்னன்னு தெரியாத அம்சா மாமியாக்கும்.. எப்போ இருக்கிறவ காதலை உணர்ந்து புரிந்த இந்த வினுவோட வனியாக்கும்" என்று கூற.. அவளின் மாற்றத்தில் அவளின் முகம் முழுவதும் முத்தத்தால் அர்ச்சனை செய்தான். பின் ஃபோனை எடுத்தவன் சில பல ஏற்பாடுகளை செய்து விட்டு எழுந்தான்.
"இதுக்கு மேல இங்க இருந்தா நல்லதில்லை.. வா.." என்று அவளை அழைத்து, அவர்களது குடிலை நோக்கி சென்றான்.
அவளின் நெற்றியில் மெண்மையாக உதட்டைப் பதித்து "குட் நைட்" என்றவன் தன் குடிலை நோக்கி சென்றான் சந்தோஷமாக...
வினய் சென்றவுடன் லீனாவின் அறை கதவை தட்டிய வர்த்தினி, தூக்கக்கலக்கத்தில் வந்த லீனாவை இறுக்க அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, "எல்லாத்துக்கும் தாங்க்ஸ் லீனா டியர்.. நாளைக்கு காலைல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்று அவளை குழம்ப வைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
காலையில் வழக்கம் போல தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டவள், லீனாவை அழைத்துக்கொண்டு உணவு அருந்தும் இடத்தை நோக்கி சென்றவள், சட்டென்று லீனாவின் கண்களை பின்புறமாக இருந்து பொத்திக்கொள்ள..
"ஹே வரு.. என்ன இது விளையாட்டு?" என்று கேட்க, "நேத்து நைட் உன்கிட்ட சொன்னேன் இல்லையா.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு அதுதான்" என்றவள், அங்கே நின்ற ஜேம்ஸ் முன்னால் சென்று லீனாவின் கண்களில் இருந்து தன் கைகளை அகற்ற..
மெதுவாக கண்களைத் திறந்த லீனாவுக்கு எதிரே தன் காதலனை கண்டதும் மகிழ்ச்சியில் இரு துளி கண்ணீர் விழ, சுற்றுமுற்றும் பார்க்காமல் இரு காதல் கிளிகளும் தங்களுக்குள் முத்தமிட்டு காதலை அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
அன்று போல முகம் சுளிக்காமல் இன்று அவர்களது காதலை தானும் சந்தோசமாக வர்த்தினி பார்த்துக் கொண்டிருக்க.. அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தான் வினய்.
"தேங்க்ஸ் வினு" என்று கூறினாள். ஜேம்ஸை அழைத்து வந்ததற்காக..
"செல்லாது.. செல்லாது.. தேங்க்ஸ் எல்லாம் இப்படி சொன்னா செல்லவே செல்லாது" என்றவன் தனது உதடுகளை குவித்து காண்பிக்க..
இவளும் உதட்டைப் குவித்து பறக்கும் முத்தத்தை ஒன்றை அனுப்பி வைக்க ஆனந்த அதிர்ச்சியில் வினய்..
லீனா ஜேம்ஸ் வந்து இவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவிக்க..
"என்ஜாய் யுவர் டேஸ்" என்றவாறு அவர்களிடம் விடை பெற்றவன், தன்னவளை அழைத்துக்கொண்டு இரண்டு நாட்களாக சுற்றி அலைந்து திரிந்த அந்த தீவிற்கு அழைத்து சென்றான்.
முதல் நாள் அந்த தீவில் வர்த்தினி யோடு போட் ரைட் செல்ல.. உற்சாகமாக கழிந்தது அன்றைய தினம். மறுநாள் அந்தத் தீவை சுற்றி இருவரும் தங்கள் கைகளை பின்னிக்கொண்டு சுற்றி அலைந்தனர்.
அப்போது ஒரு மரத்தின் அடியில் இருவரும் ஓய்வுக்காக அமர..
"உன்னை மறக்க முடியாமல் ரெண்டு நாளா இந்த தீவில் இப்படித்தான் தனியா சுத்திகிட்டு இருந்தேன். போதாக்குறைக்கு எங்க அம்மா வேற.. போன் பண்ணி.. உன்னை தொந்தரவு செய்யக்கூடாது விருப்பமில்லாத பொண்ணை சீண்ட கூடாது என்று ஏகப்பட்ட அட்வைஸ்.. உனக்கு விருப்பம் இல்லாதபோது உன்னை தொந்தரவு செய்யக்கூடாதென நானும் முடிவெடுத்து இங்கே வந்துட்டேன். ஆனா நீங்க எல்லாம் உங்க ஊருக்கு போறீங்கன்னு தெரிஞ்சு, கடைசியாக உன்னை என் கண்களில் நிரப்பிக்கலாம்னு வந்து பார்த்தா.. என் அதிரடி மாமி எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தந்தா" என்றான் மலர்ந்த புன்னகையுடன்..
பின் அவள் மடிமீது படுத்தவன் இருகைகளாலும் இடையை இறுக்கி அணைத்துக் கொள்ள.. காற்றின் ஜாலத்தால் அவளின் உடை நெகிழ இடைப்பட்ட மெல்லிடையில் தனது முகத்தை வைத்து தேய்த்தான் வினய். அதில் அவள் கூசி சிலிர்த்தாள்.
"விடுங்கோ வினு" என்று அவள் சிணுங்க..
அதில் வினய்க்கும் மனதில் சாரல் அடிக்க.. முரட்டு கைகளால் அவளின் தளிர் மேனியை இறுக்க.. இரு உள்ளங்களும் காதலால் நிறைந்து இருந்தது. என்றுமில்லாமல் இன்று அவனது மனது சந்தோசமாக அதேசமயம் புத்துணர்ச்சியோடு இருக்க..
ஒரு பெண்ணின் காதலுக்கு இத்தனை சக்தி இருக்க முடியுமா என்ன!!
காதலே ஆக்க பெரும் சக்தி என்றால்.. அர்த்தாங்கினியின் பங்கு மிகுதியே!!
எப்பேர்பட்டவனையும் தன் காதலால் மாற்றி விடும் சக்தி பெண்களுக்கு உண்டு!!
இது அவன் அறியாத உணர்வு காமம் மட்டுமே அறிந்த அவனுக்கு, காதலோடு மோகத்தையும்.. தாபத்தையும்.. காமத்தையும்
கொடுத்த தன்னவளை சுற்றி வளைத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டு, அவளுள் புதைய ஆரம்பித்தான்.
அத்து மீறி அவளது உடலில் பயணித்த அவனது கைகள் சொன்ன செய்தியில் அவள் அறியாத பல வித ரகசியங்கள் வெளிப்பட..
அவள் காதோரம் அவர் பேசிய கிசுகிசுப்பான மொழிகளில் தாபம் தூண்டப்பட...
அவள் காது மடல் உரசிய அவனது மீசை அந்தரங்கம் பேச...
அவளது வழவழப்பான வாழை தண்டு காலில் அவனது உரோமங்கள் ஓடியே முரட்டு கால்கள் பின்னி பிணைந்து கதைகள் பேச...
இந்த புதுவித மாய உலகில் தன்னவனோடு காதலில் மிதந்து கொண்டிருந்தாள் வர்த்தினி.
அந்த இன்பத்தின் தாக்கத்தை சுகிக்க முடியாமல் "வினு" என்று கிறக்கமாக அழைத்தாள் வர்த்தினி..
அப்போது அவளது கன்னத்தில் முத்தம் ஊர்வலங்கள் நடத்தி கொண்டிருந்த அவனது இதழ்கள், மெல்ல ஊர்ந்து அவளது இதழை நோக்கிச் சென்று இறுக்கமாக தன்னுள் கவ்விக் கொண்டது.
பெண்களை அறியாதவன் இல்லை வினய்..
பலமுறை பல பெண்களுடன் கூடிக் களித்திருக்கிறான்...
அப்போது எல்லாம் உணராத அந்த சுகத்தை தன்னவளோடு இதழ் யுத்தம் நடத்தும் போது மட்டும் அறிந்து கொண்டான்.
அந்த தருணத்தில் மற்றவர்களிடம் ஏற்படும் ஒரு ஒவ்வாமை தன்னவளின் இதழணைப்பில் ஏன் இல்லை என்பதற்கு காரணம் அவனுக்கு முற்றும் முதலாக புரிந்தது..
காதல்.. காதலால்.. காதலில் மட்டுமே இது சாத்தியம் என்று!!
மறுநாள் காலை வர்த்தினியை அழைத்து சென்ற இடத்தை பார்த்து அதிர்ந்து நின்றாள் அவள்...
ஆம்!! விஸ்வா'ஸ் நிவாஸ்..
வினய் விஸ்வேஸ்வரனின் வீடு..