கோகிலமே 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

14

 

மயங்கும் மஞ்சள் மாலை வேளை.. நிலாப்பெண் உலா வரும் தருணம்.. 

நீலக் கடற்கரையோரத்தில்.. 

உடலை உரசி செல்லும் இளந்தென்றல்.. 

அந்தகாரமான தனிமையில் இளஞ்ஜோடி தனித்திருக்க..

அவர்கள் தனிமைக்கு ஜதி சேர்த்து பாடிக் கொண்டே வெள்ளி நீர் அலைகள் கால்கள் தழுவ..

சுற்றுப்புறத்தின் குளுமையும்.. மன்னவனின் உடல் வெம்மையும் ஒரு புதுவித சுகத்தை அள்ளி வழங்க.. தன்னை அந்த கோபியர் ரமணனிடம் ஒப்பு கொடுத்து.. அவனின் முத்த சஞ்சாரத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தாள் வர்த்தினி!!

 

சத்தமில்லாமல் ஒரு முத்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தான் வினய் விஸ்வேஸ்வரன்!!

இதுவரை அவசரமாக.. அலட்சியமாக.. ஆளுமையாக கொடுத்த முத்தத்தை.. 

 

இப்போதோ!! 

காதலில் கசிந்துருகி..

மோகத்தில் முக்குளித்து..

தாபத்தில் தத்தளித்து...

விரகத்தில் விருந்தளித்து..

காமத்தில் கரைந்தொழுகி..

கடைவாயில் அமுதத்தை..

ரசித்து ருசித்து பருகி கொண்டிருந்தான்!!

 

மன்னவன் கைகளில் உருகி, இன்பத்தில் திளைத்து, கண்களை மூடி.. அந்த சுக அனுபவத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள் வர்த்தினி.

 

அவள் நினைவுகளில் சட்டென்று இதுவும் கனவா என்று தோன்ற.. கண்களை திறந்து தன்னவனின் கண்களை காதலோடு பார்க்க.. அவளின் அந்த சிறு இடைவெளியை கூட விரும்பாதவனாய் இடையோடு இழுத்து அணைத்து.. இதழணைப்பில் அழுத்தம் கொடுத்து.. 

கனவல்லடி மோகனமே!! 

நினைவிலும் உன்னை ஆட்கொண்டு இருக்கிறேன் கோகிலமே!!

என்று உணர்த்தும் விதமாக மேலும் மேலும் அவனின் இதழணைப்பும் இடை அணைப்பும் இறுகியது. 

 

பெண்ணவளும் அதற்கு ஏற்றார்போல தன் தளிர் கரங்களால் அவனின் வன் முதுகை மாலையென தன்னோடு பிணைத்துக் கொண்டாள்.

 

இவ்வழகிய காதல் கிளிகளின் காதல் சரசத்தைக் கண்டு ஆதவனோ வெட்கம் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ள..

அலவனோ (நிலா) அவர்கள் சஞ்சாரத்திற்கு துணையென தன் பால் கதிர்களை அனுப்ப..

காதலர்களின் முத்த களியாட்டம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது.

 

என்னது!! இது கனவல்ல நிஜமா?

பெண்ணவள் தனது அகத்தினை கண்டுகொண்டாளா?

வேந்தனோ தன்னவளிடம் காதல் கொண்டானா? என்று நம் கேள்விகளுக்கு ஒரு பத்து நாட்கள் பின்னோக்கி செல்வோமே!!

 

வினய் அவுட்டோர் ஷூட்டிங் செல்லவேண்டும் என்று இசை குழுவினரிடம் கூறிவிட்டு, ஒரு அர்த்த புஷ்டி பார்வையை வர்த்தினி மீது செலுத்தி விட்டு தன் அறையை நோக்கி சென்று விட்டான்.

இந்த திடீர் ஷூட்டிங்கான அவசியம் என்னவென்று வர்த்தினிக்கு புரியவில்லை. ஆனாலும் மனதோ அவன் பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் ட்ரம்ஸ் சிவமணிக்கு டப் கொடுத்தார் போல அடித்துக் கொண்டது. மறுப்பதற்கு அவளுக்கு வழியே இல்லாமல் வினய் காய் நகர்த்தி இருந்தான்.

 

 

விஷயத்தை இவள் பத்மா வெங்கடேசனிடம் முதலில் சொல்ல.. வெங்கடேசன் யோசனையோடு அவளை பார்க்க பத்மாவோ எகிறி குதித்தார்.

 

"அது எப்படி திடீரென்று அவா இஷ்டத்துக்கு ஷூட்டிங் எல்லாம் அரேஞ்ச் பண்ணுவா? முதல்ல இத பத்தி எல்லாத்தையும் அக்ரிமென்டில் சொல்லணுமோ இல்லையோ? பாட்டு பாடுவதற்கும் மட்டும் தான் அவா அக்ரிமெண்ட் போட்டு இருக்கா.. இந்த மாதிரி ஷூட்டிங் நடத்த எல்லாம் இல்லை. அதுவும் நம்ம ஆத்து பொண்ணுக்கு இந்த மாதிரி ஷூட்டிங் எல்லாம் ஒத்து வரவே வராது. அதனால இதெல்லாம் வேண்டாம்னு அவங்களாண்ட போயி நீங்க சொல்லிடுங்கோ" என்று என்னவோ இவர் அவளை பெற்று சீராட்டி பாராட்டி வளர்த்து அருமை பெருமையாக பாட்டு கற்று கொடுத்த மாதிரி பேசிக் கொண்டே சென்றார்.

 

 

தொழில் துறை அக்ரிமெண்ட் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருந்த வெங்கடேசன் "பத்து.. நீ சொல்ற மாதிரிலாம் டக்குனு எதுவும் நாம முடிவெடுக்க முடியாதுடி.. எதா இருந்தாலும் நாளைக்கு போய் நான் அங்க பார்த்து பேசிண்டு வரேன். அதுவரை ஷெத்த பொறுமையா இரு" என்று அவர் கூற...

 

'என்னது பொறுமையா இருக்கனுமா? அதுவும் ஆத்துக்காரே என்றாலும் என்னைப் பார்த்து அந்த மாதிரி சொல்லலாமா?' என்று வீறு கொண்ட பத்மா, "நீங்க என்ன பார்த்து பேசுறது. உங்களையெல்லாம் அவா நன்னா ஏமாத்திடுவா. நானே நேர்ல வரேன் நாளைக்கு அவராண்ட பேச.. இந்த பத்து மாமி வெட்டு ஒன்று துண்டு இரண்டுனு அவா கிட்ட கேக்குற கேள்வில எல்லாரும் பதறி அடிச்சுண்டு போவா" என்று அவரும் புறப்பட தயாராவதை பார்த்த பிரதீபனுக்கு மனதில் திகில் அடித்தது. அது தனது அன்னையைப் பற்றி அல்ல. அன்று ஒரே நாளில் அக்ரிமெண்ட்காக தன்னை அவ்வளவு நேரம் அலைக்கழித்த வினய் மற்றும் வில்லியம்ஸின் அறிவை எண்ணி தான்..

 

இன்று தானாய் பலி ஆடாக போகும் தந்தையும் தாயையும் பாவமாக பார்த்தவன் மறந்தும் நானும் வருகிறேன் என்று கூறவில்லை. அவ்வப்போது தனக்கும் அறிவு வேலை செய்வதை நிருபித்து கொண்டான் பிரதீபன்.

 

ஆனால் இங்கே நடக்கும் சம்பாஷனைக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று அமைதியாக நல்ல பிள்ளையாக குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொண்டிருந்தாள் வர்த்தினி.

 

மறுநாள் வர்த்தினியோடு வெங்கடேசன் மற்றும் பத்மா அவ்வலுவலகத்திற்கு செல்ல.. வில்லியம்ஸ் ஆராய்ச்சி பார்வையோடு அவர்களை பார்த்து வரவேற்று விசாரணையை துவக்கினான். வர்த்தினியோ அவர்களிடம் சிக்காமல் தன் குழுவினருடன் சங்கமமாகி விட்டாள்.

பத்மா சொன்ன தொனியில் அவனுக்கும் கொஞ்சம் கோபம் எட்டி தான் பார்த்தது.

அவனும் முயன்று தனக்கு தெரிந்த வகையில்.. புரிந்த வரையில்.. பத்மாவுக்கு விளக்கம் சொல்லி சொல்லி பார்க்க.. அவனை எல்லாம் தன் கேள்விகளாலேயே சரமாரியாக பந்த் ஆடினார் பத்மா.

ஒரு கட்டத்தில் அவனே அலுத்து சலித்து போய் இவர்களை தன்னால் சமாளிக்க இயலாது பாஸிடம் தான் அனுப்ப வேண்டும் என்றும் முடிவு எடுத்தவனாய்..

 

"வெயிட் பண்ணுங்க சார்.. நீங்க கேட்ட உங்க கேள்வி சந்தேகம் எல்லாத்தையும் எங்க பாஸ் கிட்டேயே நேரா பார்த்து கேட்டுக்கோங்க" என்று விட்டு வினய்யின் அறையை நோக்கி அவசரமாக ஓடினான்.

 

அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த வில்லியம்சை பார்த்த வினய்.. "எயிட் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் கூட பத்தல வில்" என்று வில்லியம்ஸ் சொல்ல வரும் முன்னே இவன் பேச..

 

"சாரி பாஸ்.. நீங்க நூறு பேர சமாளிக்க சொன்னா கூட நான் சமாளிக்கிறேன். ஆனா அந்த சிங்கிள் லேடி வாய என்னால அடக்கவே முடியல" என்று தன் தோல்வியை ஒப்புக் கொள்ள...

 

கடகடவென்று சிரித்தான் வினய். இப்போது எதற்கு இவன் சிரிக்கிறான் என்று புரியாமல் வில்லியம்ஸ் பார்க்க.. "எதிரியோட பலத்தில் மோதி ஜெயிக்க முடியலனா அவங்க வீக்னெஸை கண்டுபிடித்து அதுல மோதி ஜெயிக்க பாக்கணும்.. தட்ஸ் அவர் பிசினஸ் லோகோ" என்று கூறியவன் அவர்களை உள்ளே அனுப்புமாறு பணித்தான்.

 

தன் அறைக்குள் நுழைந்தவர்களை தன்முன் உள்ளே இருக்கையில் அமர சொன்னவன், கையில் தாடையை பதித்தவாறு தீர்க்கமாக அவர்களைப் பார்த்தான்.

 

முதலில் வெங்கடேசன் ஆரம்பிக்க அவர் கையை பிடித்து தடுத்த பத்மா அவரே ஆரம்பித்தார்.

 

"சர் இங்க பாருங்கோ.. நீங்க எங்க ஆத்து பொண்ணுக்கு செஞ்சது ரொம்ப பெரிய உதவி தான் இல்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.. மறுக்க மாட்டோம். ஆனா இந்த ஷூட்டிங் போறது அதுவும் தனியா போறது எல்லாம் எங்க ஆத்துல வழக்கம் இல்லை. அவ்வளவு தூரம் எங்க ஆத்து பொண்ணை தனியா அனுப்ப எங்களுக்கு துளிகூட விருப்பம் இல்லை. நீங்க ஷூட்டிங் ஆல்பம் எது வேணா செஞ்சுக்கோங்க.. ஆனா எல்லாத்தையும் நம்ம ஊரிலேயே செஞ்சுக்கோங்க. காலையில பொண்ணு போனா நைட்டு வீட்டுக்கு வர மாதிரி பாத்துக்கோங்க" அவ்வளவுதான என்றவாறு தன் பேச்சை முடித்துக்கொண்டு வினய்யை பார்த்தார் பத்மா.

 

"வெல்.. நீங்க சொன்னீங்களே உங்க வீட்டு பொண்ணு.. உங்க வீட்டு பொண்ணுனு, ஹம்சவர்த்தினி என்ன உங்க வீட்டு பொண்ணா? மூணு மாசம் அவள் தங்குவதற்கு பணத்தை வாங்கிக்கிட்டு தான் அந்த பொண்ணை உங்க வீட்டுல அலவ் பண்ணியிருக்கீங்க" என்று முதல் அடியை அவன் ஆரம்பிக்க.. பத்மாவோ முழிக்க ஆரம்பித்தார்.

 

"தென்.. அதான் அக்ரிமெண்ட்டை பார்த்து தானே சைன் பண்ணுனாங்க, அதுவும் லீகல் அட்வைசர் வச்சு சரி பார்த்து தானே.. அதுல எல்லாமும் பக்காவா எழுதி இருந்ததே.. இப்போ அந்த அக்ரிமெண்ட் கேன்சல் பண்ணனுமா தாராளமா பண்ணிக்கோங்க.. ஆனா அதுக்கான காப்பன்ஷேஸன் நீங்க எனக்கு கொடுத்தே ஆகணும்" என்று அடுத்த அடியை அவன் வீச முற்றிலும் பயந்து போனார் பத்மா.

 

"நெக்ஸ்ட்.. இவ்வளவு பேசுற உங்ககிட்ட என்னோட அக்ரிமெண்ட் கண்டினியூ பண்ண எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. சோ அந்த பொண்ணு ரெண்டு மாசம் உங்க வீட்ல தங்கனதுக்கான அமௌன்ட் எடுத்துக்கிட்டு மீதி அமௌன்ட்டை போகும்போது ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ல கொடுத்துட்டு போயிடுங்க. இதுக்கு அப்புறம் இந்த டீலிங் அந்த பொண்ணு கூட நான் பார்த்துக்கிறேன். நவ் யூ" என்று வாசல் புறம் அவன் கையை காட்ட.. அரண்டு போனார் பத்மா.

 

"இல்ல சார்.. சின்ன பொண்ணு தனியா போய் தெரியாத இடத்தில் கஷ்டப்படுவாளேனு.. அவ மேல உள்ள அக்கறையில் தான் இவ்வளவு தூரம் வந்து பேசினோம். நீங்க தப்பா நினைக்காதீங்கோ" என்று விட்டால் போதுமென்று கணவனை அழைத்துக்கொண்டு எங்கே மீதி பணத்தை வாங்கி விடுவானோ என்று அவசரமாக வெளியேறி விட்டார்.

 

அதுவரை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வில்லியம்சை பார்த்த வினய் "அவங்களோட வீக்னஸ் மணி" என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

அவ்வளவு நேரம் தன்னால் சமாளிக்க முடியாதவரை பணம் என்ற ஒன்றை வைத்து ஈசியாக ஊதித்தள்ளிய தன் பாஸின் திறமையை மெச்சியவாறே தன் அறைக்கு சென்றான் வில்லியம்ஸ்.

 

பத்மாவும் வெங்கடேசனும் வந்து பேசி விட்டுச் சென்றதிலிருந்து அவனது மனம் கனன்று கொண்டே இருந்தது.

இரையை தூக்கும் பருந்தென சரியான தருணத்திற்காக காத்திருந்தான் வினய் வர்த்தினியை சந்திக்க.. அவளாகவே அந்த வாய்ப்பை தானாகவே வந்து வழங்கினாள் வர்த்தினி.. மதியம் அனைவரும் அவர்கள் குழுவில் ஒவ்வொரு வேலையில் மூழ்கி விட, இவளோ சும்மா இருக்க பிடிக்காமல் அங்குள்ள அலுவலர்களை கேட்டுக்கொண்டு தளத்தில் அமைந்திருக்கும் நூலகத்தை நாடி வந்தாள்.

 

 

பிசினஸ் மேனேஜ்மென்ட் இல் இருந்து பொழுதுபோக்கு வரை அனைத்து வித நூல்களும் அங்கே வரிசை வாரியாக தரம் வாரியாக பிரிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பேணப்பட்டு இருந்தது. மனதுக்குள் வினய்யின் இந்த செயலை பிரமித்தவாறு அவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டே.. அந்த நூலகத்தில் நுழைந்து ஒவ்வொரு ரேக்காக பார்த்துக் கொண்டே வந்தாள் வர்த்தினி.

 

இந்தப் புத்தகத்தில் எதை படிக்க? எதை பார்க்க? என்று புரியாமல் அவள் சுழன்று சுழன்று பார்த்துக் கொண்டே வர.. பல பிசினஸ் மேக்னட்டின் வாழ்க்கை வரலாறுகளும், பல நாட்டின் வரலாற்று புத்தகங்களும் ஒரு ரேக்கில் இருக்க.. மற்றவை காட்டிலும் இவை கொஞ்சம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எண்ணி அதன் அருகில் சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்துப் பார்த்தாள்.

 

 

சட்டென்று அவளுக்கு வினய்யின் வாசம் நாசியை துளைக்க, திரும்பிப்பார்க்க எண்ணியவளின், மொத்த மேனியையும் உரசியவாறு பின்னே வந்து நின்றான் வினய். அவள் கையில் இருந்த புத்தகத்தை இவனும் கையோடு சேர்த்து அவளை ஒரு இன்ச் கூட அசையவிடாமல் பிரித்து பார்த்தான். 

 

"ஹிஸ்டரி ஆஃப் லண்டன்.. இதெல்லாம் படிக்க உனக்கு ஆர்வம் இருக்கா?" என்று கேட்டவனின் மூச்சுக்காற்று அவள் வெண்ணிற முதுகில் சூடேற்ற...

 

"சும்மா.. பார்க்க வந்தேன்" என்று சொன்னவளின் வார்த்தை தந்தி அடித்தது.

 

"ஆமாம் நான் உன்னை என்ன செஞ்சிட்டுவேன்னு ஷூட்டிங் வர பயந்துகிட்டு, உனக்கு சிபாரிசுக்கு ஆளைக் கூட்டிட்டு வர மாமீமீமீ" என்று கேட்டவனின் மற்றொரு கை அவளது இடையை இறுக்கியது.

 

"இல்ல.. நான் அவாள கூட்டிட்டு வரல.. மாமி.. மாமியாதான் வந்தா" என்று கெஞ்சுதலாக அவளது குரல் ஒலிக்க.. அவளின் கெஞ்சுதல் எல்லாம் எங்கே அவன் காதில் விழ..

 

இடையே இறுக்கிய அவன் கை ஆவேசமாக அவளை தன் புறம் திருப்பியது. மூன்று நாட்கள் மழிக்கப்படாத தாடியினால் அவளது கன்னத்தோடு கன்னம் உரசியவன், "இப்படி முத்தம் கொடுப்பேனு நினைச்சு பயந்தியோ?" என்றவனின் உதடுகள் அவள் காது மடலில் பயணித்து சங்குக் கழுத்தில் வந்து நின்றது. பின் நிதானமாக அவளது ஷாலை மேலே ஏற்றி வெண்ணிற மார்பு பகுதியில் முத்த ஊர்வலங்களை அவன் தொடர... அவளுக்கோ நிலையில்லாமல் மேனி நடுங்க தொடங்கியது. "ப்ளீஸ் வேண்டாம்.. தள்ளுங்கோ" என்று அவள் வாய் பாட்டுக்கு ஜெபம் செய்ய.. கைகளோ அவனது கட்டுப்பாட்டில் இருக்க.. அவனால் தூண்டப்பட்ட உணர்வுகளை அடக்க முடியாமல் தவித்துப் போனாள் பெண்ணவள்.

 

ஆனால் வினய்யின் அதரங்களோ அவளின் ஆடை மேலே ஊர்வலம் நடத்த.. இரட்டைத் திமில்கள் இனியத் தடையாக மாற.. அதை தகர்த்தெறிய அவனது எண்ணம் அலையாய் புரட்ட.. சட்டென்று நிமிர்ந்தவன், மொத்தமாக உணர்வு புயலில் சிக்கி தவிக்கும் அவளையும் ஏறி இறங்கும் மென்மைகளையும் கண்டு, அவளை இறுக அணைத்து அவளின் காதுக்குள் "இனி இது மாதிரி என்னை சீண்டாதே.. அப்புறம் எல்லையை தாண்டவும் தயங்க மாட்டேன்" என்றவன் அவள் அதரங்களோடு தன் அதரங்களை சற்று அழுத்தமாகவே உறவாட விட்டு சென்றான்.

 

யாருமில்லாத நூலகம் தான், ஆயினும் அவனின் ஸ்பரிசமும் தீண்டலும் தன்னை ஏன் இப்படி நிலைகுலையச் செய்கிறது என்று புரியாமல் கண்களில் குளம் கட்ட உதடு கடித்து நின்றுகொண்டிருந்தாள் வர்த்தினி. அன்று கண்ட கனவு நனவானதில் பயம் பீடித்தது அவளுக்கு.

 

அடுத்த இரண்டு நாட்களில் வில்லியம்ஸ் தலைமையில் இசைக் குழுவினருடன் வர்த்தினி ஷூட்டிங்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த ரிசார்ட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தாள்.

 

கடல்களின் நடுவே இயற்கை சூழலில் குட்டி குட்டி குடில்களை கொண்டது அந்த ரிசார்ட். 

கடற்கரை ஓரத்திலும் அதனை ஒட்டி அமைந்த வன சூழலிலும் ஷூட்டிங் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ராபர்ட், வர்த்தினி, லீனா, ஜோன்ஸ் உடன் ஷூட்டிங்கென்று ரிச்சர்ட் தலைமையில் நால்வர் குழு வந்திருந்தது. கூடவே வர்த்தினி பாடல் பாடும் போது இரண்டு மாடல்கள் கொண்டு நடனம் ஆடுமாறு திட்டமிடப்பட்டு இருந்தது.

திட்டத்தின் நாயகனாக வினய் இருக்க.. அவனின் செயல் வடிவமாக வில்லியம்ஸ் இருந்தான்.

 

இரண்டு மாடல்களை இந்தியாவில் இருந்து வரவழைத்திருந்தான் வினய். பஞ்சாபி இளைஞனான அமர் சிங்கும், மும்பை மாடல் அழகியான ஸ்ரேயலும் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். இந்த ஆல்பத்தில் இயற்கை சூழலில் வர்த்தினி பாடுவது போலவும், சற்றே தூரத்தில் அதற்கு தகுந்தாற் போல இவர்களின் நடனம் ஆடுவது போலவும் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  

 

காலையில் கிளம்பிய குழு தனித்தனியாக மாலை போல அந்த ரிசார்ட்க்கு வந்து சேர்ந்தது. ஒரு பெரிய குடில்களில் அடுத்ததாக இரு அறைகளாக பிரிக்கப்பட்டு இருக்க.. குழுவினர் ஒவ்வொருவரும் தனித்தனி அறைகளை எடுத்துக் கொள்ள.. லீனாவும் வர்த்தினியும் ஒரே குடிலின் இரு அறைகளை எடுத்துக் கொண்டனர்.

இரவு அனைவரும் சாப்பிடும் போது மற்றவற்றை பேசலாம் என்று வில்லியம்ஸ் கூறி அனைவரையும் ஓய்வு எடுக்க பணித்தான். 

 

பலவித அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கியே பத்மா அனுப்பி வைத்திருந்தார் வர்த்தினியை.. கூடவே திருவையாறுக்கு ஃபோனை போட்டு சுப்புவிடமும் மீனாட்சியிடமும் வர்த்தினி முறையாக அனுமதி பெற்றே வந்திருந்தாள். மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்தவாரே சிறிது நேரம் படுத்திருந்த வர்த்தினி பயண களைப்பில் தூங்கி விட, கதவு தட்டும் சத்தத்தில் விழித்து எழுந்து பார்க்க.. இரவாகி இருந்தது. 

 

"என்ன வரு.. தூங்கிட்டீயா? டின்னர் போகலாம், ரெடி ஆகிட்டு வா" என்றவாறு லீனா நிற்க..

 

இதோ என்றவள், அவசரமாக தன்னை சரிப்படுத்திக் கொண்டு அவளுடன் உணவருந்த சென்றாள்.

 

அங்கே உணவு மேசை பெரிதாக அமைத்திருக்க, சுற்றிலும் அனைவரும் அமர்ந்திருந்தனர்‌ உணவு உண்டப்படி..

 

 

"ஹலோ காய்ஸ்.. நாம இங்கு ஈஸ்வர் குழுமம் சார்பாக ஆல்பம் சூட் பண்ண வந்திருக்கோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்து வந்திருக்கீங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த ப்ராஜெக்ட்ல கோஆப்ரேட் செய்து, இந்த ஆல்பம் ஷூட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கனும்னு எங்க பாஸ் வினய் சார்பாக உங்களை கேட்டுக்குறேன்" என்று வில்லியம்ஸ் பேசினான். 

 

வில்லியம்ஸ் பேசியவுடன் தான் அங்கே வினய் இல்லை என்பதை உணர்ந்த வர்த்தினி அருகிலிருந்த லீனாவின் கையை சுரண்டி "ஏன் உங்க பாஸ் வரல லீனா" என்று குசுகுசுப்பாக வினவினாள்.

 

"அவர் உனக்கும் பாஸ் தான்.. மோஸ்ட்லி இந்த மாதிரி வேலைகளுக்கு எல்லாம் எம்டி எல்லாம் நேராக வர மாட்டாங்க.. அதுக்குனு இன்சார்ஜ் போட்டு பார்த்துக்குவாங்க வில்லியம்ஸ் மாதிரி" என்று கூறி தன் உணவில் கவனமானாள்.

 

ஓ என மீன் குஞ்சு போல வாயை குவித்தவளின் அதரங்கள் அப்படியே இருக்க கண்கள் நிலை குத்தி நின்றது எதிரே இருந்தவன் மேலே..

 

 இலகுவான ஷார்ட்ஸ் மற்றும் டீசர்ட்டில் காற்றில் கேசம் அலையென பாய.. வசீகர புன்னகையுடன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அவள் அதரங்களை தான் பார்த்துக்கொண்டிருந்தான் வினய்.

 

சட்டெனத் தன்னை சமாளித்துக் கொண்டு அருகிலிருக்கும் லீனாவை முழங்கையால் ஒரு இடி இடித்து "வரமாட்டார்னு சொன்ன.. அங்க பாரு" என்று வினய்யை அவள் காட்ட..

 

"வாவ்.. இட்ஸ் பிளேஸண்ட் ஸர்பிரைஸ்" என்று லீனா ஆச்சரியபட.. இவர்களின் சம்பாஷனை கேட்கவில்லை என்றாலும் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்தவன் லீனாவை நோக்கி ஹாய் என்று தனது கையை ஆட்டினான். அதில் இன்னும் குஷியான லீனா தானும் கையை ஆட்டி தனது சந்தோசத்தை தெரியப்படுத்தினாள்.

பார்த்துக்கொண்டிருந்த வர்த்தினிக்கு புசுபுசுவென்று கோபம் வர, அவர்கள் இருவரையும் தன் கண்களாலேயே பொசுக்கினாள். அவளின் பொறாமையை பார்த்துக்கொண்டிருந்த வினய்க்கு, அதில் எண்ணெய் ஊற்ற நேரம் பார்த்தவனின் கண்களில் அப்போது தான் உள்ளே நுழைந்த அமர் சிங்கும் ஸ்ரேயலும் கண்ணில் பட்டனர்.

 

இருவரையும் வினய் கைகுலுக்கி வரவேற்க.. போட்டோக்களில் மட்டும் பார்த்திருந்த தொழிலதிபர் ஐகானை நேரில் பார்த்த ஸ்ரேயலுக்கு அவனை விட மனசில்லாமல், வினய் கை கொடுத்ததே போதுமானதாக இருக்க.. அவன் அருகிலேயே சென்று அமர்ந்து கொண்டாள். முதலில் வர்த்தினியை இன்னும் வெறுப்பேற்ற வேண்டும் என அனுமதித்த வினய்க்கு போகப்போக ஸ்ரயேலின் நெளிவும் குழைவும் ஒருவித அருவருப்பையும் ஒவ்வாமையும் ஏற்படுத்த நெளிய ஆரம்பித்தான்.

 

பார்க்காதது போல பார்த்துக் கொண்டிருந்த வர்த்தினிக்கு மெல்ல சிரிப்பு எட்டிப்பார்க்க.. "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்றவாறு வினய்யை பார்த்து அவனை போலவே ஒற்றை புருவத்தை தூக்கி சிரித்தாள். "மாட்டுவலடி மாமி என்கிட்ட.. ‌அப்போ இருக்கு உனக்கு" என்று அவன் வாய் அசைவில் செய்தி அனுப்ப.. மிரண்டு விழித்தவளை கண்டு அவனுக்கு சுவாரஸ்யம் பொங்கியது.

 

 

அதேசமயம் அமர்சிங் வர்த்தினியின் அருகில் அமர்ந்து "வாட் அ கிளாசிக் பியூட்டி யூ ஆர்!!" என்று புகழ.. இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்க என்று புரியாத வர்த்தினி சன்னக்குரலில் தேங்க்யூ என்றுவிட்டு தலையை குனிந்து கொண்டாள். மெல்ல கண்களை மட்டும் உயர்த்தி எதிரில் இருப்பவனை இவள் பார்க்க.. அவளைத்தான் இரு கைகளையும் கட்டிக்கொண்டு உருத்து விழித்துக் கொண்டிருந்தான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

"சவுத் இந்தியன் கேல்ர்ஸ் ஆர் ஆவ்ஸம் பியூட்டிஸ்" என்று அவளின் அழகை புகழ்ந்து கொண்டே கண்களால் அவளை கபளீகரம் செய்து கொண்டே அமர்சிங் பேசிக் கொண்டே செல்ல வர்த்தினியோ அவஸ்தையாக நெளிந்து கொண்டிருந்தாள்.

 

அமர்சிங் பேசப்பேச பார்த்துக்கொண்டிருந்த வினய்க்கு இதுவரை உணராத ஒரு உரிமை உணர்வு வர்த்தினியின் மேல் ஏற்பட்டது. அமர் சிங்கின் ஆர்வமான பார்வை இவனுள் அனலை தோற்றுவித்தது. அவளை தன் பின்னால் வரவழைக்கிறேன் என்றவன் மெல்ல மெல்ல அவள் பின்னால் தடமே இல்லாமல் செல்ல துவங்கியிருந்தான் அவனையும் அறியாமல்... 

 

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் அவனின் ரசனைக்கு ஏற்ற ஒரு பெண் பிம்பம் மனதில் செதுக்கப்பட்டு இருக்கும். அதற்கு பெயர் உருவம் எல்லாம் இருக்காது. அவ்வாறு தான் வினய்க்குள்ளும் இருக்கும் அந்த பெண் பிம்பத்தின் புள்ளிகள் மெல்ல மெல்ல இணைய அங்கே கொள்ளை அழகுடன் தோன்றினாள் ஹம்சவர்த்தினி. அவனின் மனம் அறிந்த திடுக்கிடலுடன் நிமிர்ந்தான் வினய் விஸ்வேஸ்வரன்!!

 

வர்த்தினியின் ஆழ் மனதின் பொறாமையை கிளறி விட்டு

.. அதன் மூலம் அவளை தன் பக்கமாக இழுக்க நினைத்த வினய்யின் திட்டம் பலிதமாகுமா? இல்லை காதலின் முதல் தடமான பொறாமையில் இவன் கட்டுண்டு தன் காதலை உணருவானா?


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top