தளிர் : 9
வேணுவை அவுட்டர் லொகேஷன் பார்க்க அனுப்பி வைத்த அருணன், அந்த மாதத்திற்கான ஷூட்டிங் ஷெடியுல் லிஸ்ட்டை தான் ராதிகாவுடன் இணைந்து தயாரித்துக் கொண்டிருந்தான்.
அன்றைய நாள் வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு விடிந்தது அருணனிற்கு. ஆனால் இப்போது அந்த வலி கூட அவனை வாட்ட அனுமதி கிடைக்காது காத்து கிடக்கும் அளவிற்கு அடுத்தடுத்த வேலைகள் அவனை அமிழ்த்தி கொள்ள, மூச்சு கூட விட முடியாது திணறி கொண்டு இருந்தது என்னவோ ராதிகா தான்.
ஆபீஸ் முழுவதும் ஒரு முறை பார்வையை சுழல விட்டவள், 'எனக்கு மட்டும் எப்போ தான் விடுதலை கிடைக்குமோ?' என்று தான் தன் கை கடிகாரத்தையும் அருணனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் என்னைக்கு அவளை நேரத்தில் அனுப்பி வைத்தான். சாதா நாட்களிலே செக்கு மாடு போல் சுற்ற வைப்பவன், இன்னைக்கு கேட்கவா வேண்டும். இன்னும் காலையில் அவனை வம்படியாக இழுத்து விட்டது உள்ளுக்குள் புகைந்து கொண்டு தான் இருந்தது.
தயார் செய்த லிஸ்ட்டை ரீ செக் செய்துக் கொண்டிருந்தவள், கண்களுக்கு எழுத்துக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக, 'கண்ணு தெரிய மாட்டேங்குது… மாலைக் கண் நோய் ஏதும் வந்துடுச்சா?' என்று தான் அரற்றிக் கொண்டே தலையை உலுக்கி கண்களை விரலால் தேய்த்து விட, எழுத்துக்கள் எல்லாம் காகிதத்தில் இருந்து பறப்பது போல் தான் தோன்றியது அவளுக்கு.
'ஹாங்… என்ன டா நடக்குது இங்க?' என்று எண்ணிக் கொண்டே கண்களை கசக்கிக் கொண்டே அமர்ந்திருந்தவளை பார்த்த அருணன்,
"ஏய் என்ன?" என்று அதிகார தொனியில் கேட்க, அவளோ "கண்ணு தெரில சார். தலை வேற பாரமா இருக்கு" என்று தலையை பிடித்துக் கொண்டே சொன்னவளை அழுத்தமாக பார்த்தவன்,
"நான் தெரியுறேனா?" என்று கேட்க, அவளும் தலையை உயர்த்தி அவனை பார்த்தவள், "நல்லா தெரியுறீங்க" என்று தான் ஒரு வார்த்தை சொன்னாள்.
"வேலை செய்யாம இருக்க நாடகம் போடுறீயா? ஒழுங்கா முடிச்சா வீட்டுக்கு போகலாம். இல்ல இன்னைக்கு நைட் ஸ்டே தான்" என்று மிரட்ட,
'அட பாவி' என்று இதழை சுழித்தவள், கண்கள் சிறிது நேரத்தில் தெளிவு பெற்றாலும், உடல் முழுதும் ஏதோ அசௌகரிகமாக தான் இருந்தது.
'என்ன டா இது இந்த ராதிகாவுக்கு வந்த சோதனை?' என்று எண்ணிக் கொண்டே, கொஞ்சம் நடந்துட்டு வரலாம் என்று எண்ணி அவள் எழுந்த சமயம், கரண்ட் கட் ஆகியிருக்க, மொத்த அலுவலகமும் இருளில் சூழ்ந்தது.
"அய்யயோ! எனக்கு மொத்தமாவே கண்ணு தெரியல" என்று ராதிகா கத்த,
"ஏய் லூசு… பவர் கட் ஆகிடுச்சு" என்று தான் திட்டினான் அருணன், இருக்கையில் இருந்து எழாது.
இருளை கண்டு அஞ்சி கண்களை மூடிக் கொண்டு நெஞ்சில் கை வைத்து நின்ற ராதிகாவோ "ஓஹ்…" என்றவள், மெதுவாக "மாமா இருக்கியா?" என்று தன்னவன் துணை தேட, முதல் முறை அவள் அழைப்பிற்கு பதிலின்றிப் போனது அவனிடமிருந்து.
இதயம் பட படக்க, ஒரு அடி கூட நகராது கண்களை மூடிக் கொண்டே தன்னவனை அழைத்தவள் மனமோ அவன் இல்லா நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது பரிதவிக்க, கண்கள் கண்ணீரை தாரை வார்க்க ஆரம்பித்தது.
நிழலாய் மாறி போனவன், இருளில் மறைந்து போனானோ!
பாவை நம்பிக்கை அவனாக இருக்க, அவனன்றி அவள் தைரியம் கூட தடம் புரண்டது.
அதே நேரம் போனை சரி செய்து விட்டு, அலுவலகத்திற்கு திரும்பிய சுவாதி லிஃப்ட்டில் மேல் தளத்திற்கு சென்று கொண்டிருந்த போது தான் இடையில் மின்சாரம் தடைப்பட்டிருக்க, சிறு பெண் அவளோ தனியாக லிஃப்ட்டில் மாட்டி கொண்டாள்.
போனில் டார்ச் அடித்து, தன் அன்னைக்கு அழைக்க, லிஃப்டிற்குள் சிக்னல் கிடைக்காது அழைப்பும் செல்லவில்லை.
லிஃப்ட்டை சுற்றி கண்களை அலைய விட்ட சுவாதிக்கோ அந்நேரம் அவள் பார்த்த பேய் படங்களில் லிஃப்ட்டிற்குள் நுழையும் பேய் காட்சிகள் எல்லாம் நினைவு வந்து கதி கலங்க வைத்தது.
"இன்னைக்குனு பார்த்தா இந்த அம்மா தனியா விட்டு போகணும்?" என்று பயத்தில் புலம்பிய படி மீண்டும் மீண்டும் அன்னைக்கு அழைக்க, "கீங்… கீங்…" சத்தம் தவிர்த்து போனில் எதுவும் கேட்கவில்லை, ஆனால் அருகே யாரோ நிற்பது போன்ற உணர்வில் "அம்மாஆஆஆ" என்று அலறி,
சுருண்டு கீழே அமர்ந்து, கால் முட்டியில் முகத்தை புதைத்து "முருகா முருகா" என்று பயத்தில் ஜெபிக்க ஆரம்பித்து விட்டாள்.
இங்கே மெல்லிய விசும்பல் சத்தத்தில் அருணன் தன் போனில் டார்ச் அடித்து பார்க்க, ராதிகா தான் காலை கட்டிக் கொண்டு முட்டியில் முகத்தை புதைத்த படி தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
"ராதிகா…" என்று அழைத்தபடி அவள் அருகே சென்றவன், "என்னாச்சு?" என்று முதல் முறை அவளிடம் தன்மையான குரலில் கேட்க,
தலை நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.
"ஒன்னுமில்ல" என்று தலையாட்ட, அவளை அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தவன், அவள் அருகே மண்டியிட்டு அமர, மெல்லிய விசும்பலுடன் தான் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
"என்னாச்சு? இருட்டுனா பயமா?" என்றவன் கேள்விக்கு, "இல்லை" என்று தலையசைத்தவள், எப்படி சொல்வாள்? நான்கு வருடம் முன்பு இறந்தவனுக்காக இப்போது அழுகிறேன் என்று.
"சரி நீ வீட்டுக்கு போ" என்று அவள் கையை பிடித்து தூக்கி விட்டவனுக்கும் மருந்து வேலை செய்ய ஆரம்பிக்க, நிலை இல்லாமல் தள்ளாடியவன் மேஜையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.
"கெட்டு போன பால்ல காபி போட்டு கொடுத்தியா டி… இப்படி கேர்ராகுது" என்று அந்த நிலையிலும் அவளை திட்ட,
ராதிகாவும் "தெரில சார், எனக்கும் அப்படி தான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே தடுமாறி விழ போனவளை தாங்கி பிடித்தது என்னவோ அருணன் தான்.
மாற்றான் மனைவி என்று எப்போதும் விலகி நிற்கும் அருணன் கரங்களோ அவள் இடையை அழுந்த பற்றி தன்னுடன் இணைத்திருக்க, அவளும் அவனை விலக்கும் நிலையில் இல்லை.
"கொஞ்சம் உட்கார்ந்துட்டு போறேன் சார்" என்றவளை அவன் தான் அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான்.
வாழ்க்கையில் முதல் முறை அருணன் செல் என்று சொன்ன பிறகும், அவன் அருகே நிற்கிறாள்.
இருக் கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு ராதிகா குனிந்து அமர்ந்திருக்க, அவனோ கால்கள் இரண்டையும் அகல விரித்து அமர்ந்திருந்தவன், சோபாவில் தலையை சாய்த்து விட்டத்தை தான் வெறித்துக் கொண்டிருந்தான்.
சில நொடிகள் மெளனமாக கழிய, அந்த மெளனத்தை உடைத்தது என்னவோ ராதிகா தான்.
"சார் நீங்க எப்பவும் இப்படி தானா?" என்றவள் கேள்வியில் கண்களை தாழ்த்தி அவளை பார்த்தவன், "எப்படி?" என்று தான் கேட்டான்.
"இப்படி… உர்ருனு… காட்டு பூனை மாதிரி" என்று சொல்லிக் கொண்டே அவனை திரும்பி பார்க்க, மெலிதாக இதழ் வளைத்து சிரித்துக் கொண்டவன் "ஆமா" என்றான்.
"ஏன்? லவ் ஃபேலியரா?" முதல் முறை அவன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்க தோன்றியது.
"லைப்பே ஃபேலியர்" என்றவன் "கிளம்பு டி" என்று வாய் அவளை துரத்தினாலும், அவன் இட காரமோ அவள் வலக்கரத்தை அழுத்தி பிடித்து இருந்தது.
எப்போது அவள் கரம் நடுவே அவன் கரம் கோர்த்தது என்பது இருவரும் அறியா ஒன்று தான். பெண்ணவள் தொடுகை பிடித்து போனது.
யாராக இருந்தாலும் எட்டி நிறுத்துபவன், அவனாக இப்போது இல்லை என்பதே கசப்பான உண்மை.
வசிய மருந்து என்று கோசலை கொடுத்தது, மோகத்தை தூண்டும் இந்த விபரீத மருந்தை தான். பாஸ்கரிடம் அதை சொல்ல முடியுமா? அவரை பற்றி என்ன நினைப்பான்? அதான் அப்படி சொல்லி கலந்து கொடுக்க சொன்னார்.
அவர் மகள் மீது இருந்த நம்பிக்கை, இந்த ஜென்மத்தில் அவளாக அருணனை நெருங்க போவதில்லை என்று புரிந்துக் கொண்டவர், அவனாக அவளை நாடி செல்லவே இப்படி ஒரு வழி செய்தார். மகள் அரண்டு பயந்து எதையாவது தூக்கி அடித்து அவனை கொன்று விட கூடாது என்று தான் அவளுக்கும் வீடியோ எடுத்து கொடுத்து இறங்கி வேலை பார்த்தது. அவ்வளவும் செய்தவர் அறியவில்லை மருந்து ஆள் மாறி வேலை செய்துக் கொண்டிருக்கிறது என்பதை.
நான்கு வருட தவ வாழ்க்கைக்கு தீர்வாக பெண்ணுடல் தேடி ஆண் மனம் அழைப்பாய, முழுதாக சுயம் இழக்க தயாராக இல்லாதவன், இழுத்து பிடித்த கட்டுப்பாட்டில் அவளை தன்னை விட்டு தூரம் தள்ள முயல, விதி அவளுக்கும் அல்லவா சதி செய்து விளையாடுகிறது.
"ராதிகாஆஆஆ" கோபத்தில் அழைக்கும் அவள் பெயரை தாபத்தில் அவன் இதழ்கள் உச்சரிக்க, "ஹ்ம்ம்…" மெல்லிய முனங்கல் மட்டும் தான் அவளிடம்.
"போ…" என்று பிடித்து தள்ள தான் நினைக்கிறான், ஆனால் அவன் உடலே அவனுக்கு சதி செய்ய, அவள் சேலை மறைத்த இடையில் கை விட்டு தன்னருகே நெருக்கி கொண்டவன், அதே வேகத்தில் மூளையின் சமிக்ஷை உணர்ந்து எழுந்து தலையை உலுக்கி நிலை கொள்ள முயன்ற படி நின்றான்.
"ரித்து" என்ற அழைப்பில் சட்டென்று திரும்ப, அவன் இளமையை தூண்டி விட்டு, இளைப்பாற காத்திருக்கும் அவன் ராட்சஸி மந்தகாச புன்னகையில், கண்கள் சிவக்க நின்றிருந்தவள், தாவி வந்து அவனை கட்டி கொண்டு முகம் முழுவதும் முத்தமிட, சில நாழிகை எதுவும் புரியாது நின்றிருந்த அருணனுக்கோ ரித்து என்ற அழைப்பே அவன் தாபத்தை முழுதாக தூண்டி விட்டிருந்தது.
அவன் இதழ்கள் "ஸ்வீட்டி" என்று உச்சரிக்க, மட்டற்ற மகிழ்ச்சி மங்கை முகத்தில்.
அவளாகவே அவனை அணைத்து தாடி அடர்ந்த கன்னத்தில் முத்தமிட்டு, அவன் கரத்திற்கு தன் பஞ்சு மேனியில் பாதையமைக்கும் வழி சொல்லிட, மொத்தமாக சித்தம் இழந்தவன் கரங்களும், இதழ்களும் பெண் மேனியை அணுவணுவாக ஆராய்ந்து ஆய்வு நடத்த பேரவா கொண்டு செயல்பட்டது.
காரிகை உடலோ குழைந்து சிவந்து போனது காளையவன் அழுத்தமான அச்சாரங்களில்.
கண்கள் சொருகி உடல் கருத்து நின்றவன் கரங்களோ, தன் தேடுதலுக்கு தடையாக இருக்கும் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்க முயல, ஆங்காங்கே கைகளில் இரத்த கீறல்கள் விழுந்தது தான் மிச்சம்.
அவள் தான் ஒவ்வொரு மடிப்பிற்கும் ஆயிரம் பின் குத்தி வைத்திருந்தாள் அல்லவா!
அனைத்தும் அவன் கைகளை பதம் பார்த்திருந்தது. "ஸ் ஆ ஆ " என்று பின் குத்தியதில் வலித்தாலும், உள்ளே எரியும் நெருப்பை அணைக்க பெண்ணுடலில் இரண்டற கலக்கும் முனைப்பில், எந்த வலியும் முதன்மையாக தெரியவில்லை.
நீக்க முடியா அவள் ஆடைகளை கிழித்து தான் எரிந்து இருந்தான். ஆசையாக தழுவி இதழ் பதிக்க பொறுமையில்லாது, அவள் இதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டு கவிப் பாட, நான்கு வருட தாபத்தை நங்கையிடம் தணித்து கொள்ளும் வேட்கையில் அவளை நாடியவன் வேகத்திற்கு மெல்லிய பஞ்சு பொதி தேகம் கொண்ட பெண்ணவள் ஈடு கொடுத்ததே பெரிய விசயம் தான்.
காதல் கடலில் மூழ்கும் முன்னமே கலவி காயலில் இவர்கள் உறவு இணைந்திருக்க, காதலன்றி மனங்கள் இணைந்து மாயம் செய்திட முடியுமோ!
அவளாக அவளை தொலைக்கவும் இல்லை, அவனாக அவளை வஞ்சிக்கவும் இல்லை.
குற்றம் செய்யா இருவரும் எதிரெதிர் திசையில் குற்றவாளி கூண்டில் நின்றாள் காலம் யாருக்கு நியாயம் சொல்லும்?
இனி ஒரு காதல் வேண்டாம் என்பது இருவரின் எண்ணம்…
இனி வரும் காலம் இருவரையும் காதல் இணைத்திடும் என்பது திண்ணம்….