அழகர் பேசிய பேச்சில் அண்ணன் தங்கை இருவரும் சேரனை பார்த்தனர் அழகர்போனதும் அமைதியாக தோட்டத்தை பார்த்துவிட்டு வந்துவிட்டனர்
இப்போல்லாம் முகம்கொடுத்து பேசுறதில்ல இவளுக்கு என்னாச்சுனே தெரியல அவர்கிட்ட கேட்கணும் வீட்டில் அப்பா இல்லாதநேரம் பார்த்து அந்த வீட்டுக்குள் நுழைந்தான் அண்ணன் தம்பி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்
அழகர் உள்ளே செல்ல வீபீஷ் தடுத்தான்
எதுக்கு உள்ளபோறீங்க மிஸ்டர் அழகர்
என் சிஸ்டர் ரூமுக்குள்ள பர்மிஷன் கேட்காம போயிட்டிருக்கீங்க என்ன நினைச்சுட்டு ருக்கீங்க உங்கமனசுல உங்க வீடா இருந்தா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்களா
ஐயோ சூர்யா இருப்பான்னுதான் நினைச்சேன் இந்த கரடிவேற இங்க இருக்கானா தலையைசொறிந்தவன் அது ஒன்னுமில்ல மனிஷாகிட்ட முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்
வந்த வேகத்தில் கவனிக்காம உள்ள போயிட்டேன் சாரி இப்பபோய் பேசலாமா ரொம்ப எமர்ஜென்சி
விபீஷணன் அண்ணனை பார்க்க சூர்யா வேண்டாம் என்றான்
இல்ல வேணாம் எதுசொல்றதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நாங்கசொல்றோம் வயசுபொண்ணு அவகிட்ட என்ன பேசபோறிங்க யாரைநம்பியுவிட முடியாது விபீஷணன் கோபமாககூறியதும் எதிர்த்துபேச முடியவில்லை
இருடா உன்னை பார்த்துக்கிறேன் கோபமாக முறைத்துவிட்டு வெளியே சென்றான்
மனிஷா வெளியே வந்தவள் வீபீ சொன்னதை கேட்டு எதுவும் சொல்லவில்லை அமைதியாகத்தான் இருந்தாள் நான் அவங்ககிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லையே . இதுக்குமேலயும் பேசவேண்டிய அவசியமில்லை இனி வந்தா நீங்களே பாத்துக்கோங்க ப்ரோ
கூறிவிட்டு வெளிவந்தவள் காளியம்மா ஓரமாக சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து அவருக்கு அருகில் அமர்ந்தாள்
கதை பேசியபடியே அவர் மகளை பற்றியும் விசாரித்தாள்
ஓடிபோனவ என்ன பண்றா எங்க இருக்காங்க எப்படிஇருக்காங்கன்னு ஒண்ணும் தெரியல
எங்களைபத்தி எந்தகவலையும் இல்லை
பெத்து 18 வருஷம் தோள்லபோட்டு வளர்த்தேன் எங்களை லெட்டிவிட எப்படித்தான் மனசு வந்துச்சோ தெரியல
அவளோட நினைப்பு மனசவிட்டுபோக மாட்டேங்குது ஆனா அவ எங்களை ஈஸியா மறந்துட்டா பாத்தியா
நீயே சொல்லு பெக்தவங்க பேச்சை கேட்காம ஓடிபோனதுதப்புதானே
ஆமா பாட்டி தப்புதான் அந்தம்மாவோட விருப்பமில்லாம கல்யாணம் பண்ணி வச்சுருந்து அவங்க வ பிடிக்காமல் செத்துருந்தா என்ன பன்னுவிங்க
ஐயோ யாத்தே என்னவார்ந்தை சொல்ற அப்படி சொல்லாத தாயி பெத்தமனசு தாங்கமுடியல
அவளோ சிரித்தாள் நீங்கமனசு வச்சு அவங்க காதலிக்குறவங்களை சேர்த்துவைச்சுருந்தா அவங்க ஓடிருப்பாங்களா
ஏதோ தெரியாம போனதால அவங்க எங்கயோ உயிரோடுஇருக்காங்க இதுவே உங்கபேச்சு கேட்டு கல்யாணம்பன்னி உயிரைவிட்டிருந்தா என்ன பண்ணுவீங்க அவள் கேட்க
காளியாத்தா காதை முடிகொண்டார்
அப்படியெல்லாம் சொல்லாத என் பொண்ணு வீட்டைவிட்டுபோனாலும் அவ நல்லா இருந்தாபோதும் என்னைக்காவது ஒருநாள் வராமலா இருப்பா ஆனா புள்ள எங்க இருக்கான்னு கூட அட்ரஸ் தெரியாம தவிச்சுபோய்கெடக்கேன் பெத்தவங்கமேல் கொஞ்சம்கூட அவளுக்கு பாசமேஇல்லை
அவளுக்கு எங்கநெனப்பேஇல்லபோல அழுது வடிக்க
இதை போனில் கேட்டுக்கொண்டிருந்த அழகிக்கு கண்ணீர்வந்துவிட்டது
பாட்டி உங்களுக்கு ஒருரகசியம் சொல்லவா உங்க பொண்ணு எங்க இருக்காங்னு என்னாலகண்டுபிடிக்க முடியும்
மனிஷா கூறியதும் காளியாத்தா அதிர்ந்தார் இப்பவே கண்டுபிடிக்கமுடியுமா அவகிட்ட பேச முடியுமா
என்புளளய பாக்காம எத்தனை வருஷம் தவிச்சுபோய் கிடைக்கோம் தெரியுமா என்பிள்ளையை எப்படியாவது கண்டுபிடிச்சு சொல்லாத்தா கண்ணீர் விட
கண்டுபிடிச்ச சொல்லுவேன் அவங்க வந்தா ஆனா உங்கமகன் அவங்கள வீட்ல சேர்த்துக்கமாட்டாரே கொல்லுவேன் சொல்லிட்டு இருக்காரு அவரை எப்படி சமாளிப்பிங்க
அவனால என்னபண்ணமுடியும் சத்தம் போடுவான் எனக்கு என்பிள்ளை வேணும் அதுவந்தா எல்லாத்தையும் விட்டுட்டு என் பொண்ணுகூடவே போறேன் காடு கழறி நீரு நீச்சு நிலம் எல்லாமே எங்களோடபேர்லதான் இருக்கு அவளுக்கும் உரிமை இருக்கு என் பொண்ணு வந்தா போதும் எப்படியாவது சமாளிச்சிடுவேன்
கண்டுபிடிக்கமுடிஞ்சா எப்படியாவது கண்டுபிடிச்சு என்கிட்ட சொல்லுமா என்பேரன்பேத்தி கல்யாணத்துக்காவது அவ தலை காட்டட்டும் பெரியவர் தன் மகளை பார்க்க முடியாது ஏக்கத்தில் கூற
இல்ல பாட்டி எ உங்கபொண்ண சொந்தம்கொண்டாடாமல் இருந்தாலும் இங்கவரணும்னா உங்க மகன் அமைதியா இருக்கணும் அதுக்கு அவர்வாயாலயே தங்கச்சி வரட்டும்னு ஒரு வார்த்தை சொல்லவைக்கணும் அவர்சொல்லிட்டா அவங்கள நானே கூப்பிட்டு வறேன் நீங்கள் உங்கள்மகன்கிட்டபோய்
இதை பத்தி பேசுங்க இத்தனைவருஷம் உறவு முடிஞ்சு போயிருந்தாலும் பெரும் பேத்தியோட கல்யாணத்துக்காக உங்கபொண்ணு வரணும்னு நீங்க ஆசைப்படுறதை அவங்ககிட்ட சொல்லுங்க கண்டிப்பா உங்கமகன்யோசிப்பார்
மனிஷா கூறிவிட்டு செல்ல என்ன செய்யலாம் எப்படி மகனை சமாதானப்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தவர் ப்ர்ஷர் அதிகமாகி மயங்கி விழுந்துவிட்டார் யாரும் அவரைகவனிக்கவில்லை அந்தபக்கம் வந்த கண்ணகிதான் பார்த்து வீட்டிலிருக்கும் அத்தனைபேருக்கும் தகவல் சொல்ல அவரைஅள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்
ஓவர் பிரெஷர மனழுத்தம் அதிகமாகிதான் மயங்கிவிழுந்துவிட்டார் என்று டாக்டர் கூறி மருந்துமாத்திரைகள் கொடுத்து அனுப்பிவைத்தனர்
அம்மா பிபி ஏறி போறளவுக்கு அப்படி என்ன யோசிச்சிட்டு இருந்த என்னாச்சு உனக்கு யாராவது ஏதாவதுசொன்னாங்களா
நாங்க முன்னமாதிரி போனாங்க எந்த வம்பவழக்கும் வசிக்கிறதில்லையே அப்புறம் எதுக்கு மனசுக்கு கஷ்டமாஇருந்திருக்கும் எதுவாஇருந்தாலும் சொல்லுமா வீராசாமி கேட்க காளியம்மா கண் கலங்கினார் அம்மாவின் கண்ணீரை துடைத்துவிட்டு சொல்லுமா இத்தனைவருஷம் உனக்கு நான் நல்ல மகனா இருந்ததில்லையா எதுக்காககண்ணீர் விடுற
நான் உன்னை நல்லாபாத்துகிட்டேனா இல்ல கஷ்டபடுத்துறேனா
தம்புசெஞ்சா ஒரு வார்த்தை சொல்லு நான் திருத்திக்கிறேன் என்னை தவிக்கவிட்டுபோயிறாத ம்மா
அவர் பேரன் பேத்தி எடுக்கும் வயதில் சிறுகுழந்தோபோல் அழுதார்
எத்தனைவருடமானாலும் பேர் பேத்தி எடுக்கும்வயது வந்தாலும் பெற்ற அம்மாவுக்கு தன் மகன் குழந்தைபோலதானே தெரிவான்
இதோ பேரன்பேத்தியெடுக்கும் வீராசாமி காளியாத்தா கண்ணுக்கு குழந்தைபோல் தெரிந்தார்
என் ராசா
நீ என்னை நல்லாத்தான் பாத்துக்கிட்ட எந்தகுறையும்வைக்கல எனக்கு என்னமோ பயமாஇருக்குடா என் உசுரு போயிருமோனு ரொம்பபயப்படுறேன் எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் மனசை விட்டுபோக மாட்டேங்குது அந்தஒரு ஆசைய மட்டும் நிறைவேற்றி வைப்பியா கோரிக்கை விடுக்க
என்னம்மா இப்படியெல்லாம் பேசுற உனக்கு எதுவும் ஆகாது நாங்க இத்தனைபேர் இருக்கோம்ல என்னை விட்டுடுவோமா எதையும்நினைக்காத உனக்குநாங்க இருக்கோம் என் மவனுக்கு கல்யாணமாகி அவனோட புள்ளங்களை பாத்துட்டு நல்லா இருப்ப நீ உனக்கு என்ன வேணும் சொல்லும்மா
ஏழுமலைகடந்து தூரமாஇருந்தாலும் நான்கொண்டு வந்து சேர்க்கிறேன் என்னம்மாவேணும் அவர் கையைபிடித்துகொண்டு கேட்க
கண் கலங்கியவரே அவர் கையை பிடித்த காளியாத்தா என் மவன் எனக்கு எந்த குறையும் வைக்கலய்யா
என்னை ராணியாட்டம் பாத்துகிட்டான்
பெத்தவங்களை தெருவுல விடுற இந்த காலத்துல என் புள்ள எனக்கு வேணுங்குற எல்லாமே செய்றான்
இப்படி புள்ளையா பெத்ததுக்கு பெருமைபடுறேன்
என்னைபெத்த ஐய்யா எனக்கு ஒரே பேராசைய்யா நான்சாகுறதுக்குள்ள உன்னோட தங்கச்சிய பாக்கணும் அவளைவீட்டுக்கு வரசொல்லுய்யா
என் பேரன் கல்யாணத்துக்கு அத்தையா அவ முன்னாடி நிக்தனும்
என் புள்ளைங்க ரெண்டுபேரும் அவங்க புள்ளங்களோட இருக்குறதைபாத்துட்டா என் கட்டை வெந்துரும்யா
அவள பாக்காமலே செத்துப்போயிட்டா என் ஆத்மாகூட சாந்தி அடையாம அலையும் ஒரு தடவ மட்டும் அவளை பாத்துக்குறேன்யா
கண்கலங்க கூறியவரிடம் மறுத்துபேசமுடியவில்லை
வீராசாமிக்கு விருப்பமில்லை என்பதை அவர்முகமே காட்டியது
பரவாயில்லைய்யா உனக்கு விருப்பமில்லாததை செய்யவேணாம் என்னோட ஆசை என்னோட போகட்டும் உன்னை நீ வருத்திக்காதே கட்டாயப்படுத்தி செய்யவேண்டிய அவசியமில்லை நீ எதையும்நினைக்காத ஏதோ வயசானவா புள்ள பாசத்துல கேட்டுட்டேன்
உன்னை பெத்த இதே வயித்துலதானே அவளையும் பெத்தேன் புள்ளைங்க பெத்தவங்கள வெறுத்தாலும் பெத்தவங்க எப்படி பிள்ளைகளை வெறுக்கமுடியும் ஏதோபாசத்துல சொல்லிட்டேன் விடுய்யா
நீ போய் சாப்பிட்டு வேலையைபாரு எதையும் மனசுல வைக்காதே கூறிவிட்டு கண்ணை மூடிக்கொள்ள அம்மாமேல் பாசமாக இருந்த வீராச்சாமியால் தான் அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவித்து போனார்
வீடாக இருந்ததால் காளியாத்தா உள்ளேபடுத்திருக்க குடும்பஉறுப்பினர்கள் அவரைசுற்றி அமர்ந்திருக்க சூர்யா தம்பி தங்கை வெளியேநின்று அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர்
மனிஷா மொபைல் கேமராமூலம் அவர் அம்மாவை லைவாக அழகுக்கு காட்டிக்கொண்டிருக்க அந்தப்பக்கம் இருந்தவர் அம்மாவின் நிலைகண்டு கண்ணீர் வடித்தார்
அம்மா கோபமா இருந்திருந்தாலும் நானாவது போய்பேசிருக்கணும்
என்னை நினைச்சு அம்மா படுத்தபடுக்கையாகிருச்சு எல்லாம் என் தப்புதான் அழுதுவடித்தார்
வீராசாமி இரண்டு நாட்கள் மௌனமாகவே இருக்க காளியாத்தா உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது
ஏலே வீரா உனக்கு வேணும்னா உன்னோட அம்மா தேவையில்லாம இருக்கலாம்
எனக்கு என் பொண்டாட்டி வேணும்டா
தள்ளாடுற வயசுல தாங்கிபுடிக்க அவ வேணும்டா
என் மகளை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டுவரணும் உனக்குபிடிக்காட்டி நீ பேசாத
என் பொண்டாட்டியோட கடைசி ஆசையை நான் நிறைத்தனும்
தள்ளாட்டத்தோடு அப்பா கூற
வீராசாமிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரால் நிராகரிக்க முடியவில்லை
சரி உங்களுக்காக இதுக்கு நான் ஒத்துக்குறேன் ஆனா வந்தா பேச்சு வார்த்தையோடு இருந்துக்கனும் அவங்களுக்கு புள்ளங்கஇருக்கு பொண்ணுஇருக்குன்னு சொல்லி தேவையில்லாம அவங்க குடும்பத்தை என் குடும்பம்கூட சேர்த்துவைக்கிற நினைப்புவரக்கூடாது
அந்தமாதிரி பேச்சுவார்த்தை வந்தால் அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்டைவிட்டு வெளியேபோய்கிறேன் நீங்க உங்க பொண்ணுகூடவே இருந்துக்கோங்க தடாலடியாக கூற
இதுவரை அவன்ஒத்துக்கொண்டானே என்று சந்தோசம் என்று நிம்மதியடைந்தனர்
எம்மா மனிஷா இங்க வா உனக்குத்தான் இங்கிலீஷ்எல்லாமே தெரியுமே
என் அம்மாவோட பொண்ணுபோட்டோவை கொடுக்கிறேன் அதை வைத்து கண்டுபிடிக்கமுடியுமானு பாக்குறியா வீராசாமி கூற
அதெல்லாம் அம்மாவோட பொண்ணு
உரிமையா என் தங்கச்சினு சொல்றதுக்கு என்னவாம் ரொம்பதான் பன்றாரு மாமா
உள்ளூக்குள் முறைத்துகொண்டு தலையாட்டினாள்
எங்க இருக்காங்கனு தெரிஞ்சா அவங்களை பேசசொல்லு அவங்க அம்மாவபாக்க வர்றதா இருந்தா அவங்களைமட்டும் வர சொல்லு அவங்கபுள்ளைங்க யாரும் தேவையில்லை
பேரன்பேத்திய பார்த்ததும் குட்டிகளை வைத்து என்ஆத்தா உறவு கொண்டாட ஆரம்பிச்சிடும்
அப்புறம் தலைவலியாகிரும் அவர் கூற மனிஷா சிரித்தாள்
மறுநாள் அவளாகவே கண்டுபிடித்தது போலவே அழகி விட்டு முகவரியோடு அவர்களுக்கு தகவல்கொண்டுவந்தாள் கூடுதலாக போன்போட்டே கொடுத்தாள்
அதான் சொல்லிட்டேனே அவங்கம்மாவுக்கும் உடம்பு சரியில்லைன்னு சொல்லிவரசொல்லும்மா அவர் வீராப்பாக கூற
உங்களுக்கு சிஸ்டருக்கும் நடுவுல நான்என்னபேசமுடியும் இது உங்களோட வீடு
உங்க வீட்டுக்கு அவங்களை வரசொல்லவேண்டியது உங்களோட கடமை
அவங்க வரணும்னா நீங்கதான் கூப்பிடனும்
கூறிவிட்டு போனை நீட்ட தயக்கமாக வாங்கி காதில் வைத்தார்
அந்த பக்கமோ கேவிகேவி அழுவது இந்தபக்கமிருந்தவருக்கு கேட்டது
தொண்டையை செருமியவர்
உன்னால மட்டும் அசிங்கத்தை எப்பவுமே மறக்கமாட்டேன் இப்போ உனக்கு போன்போட்டது கூட என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம கிடக்குறதாலதான்
மத்தபடி பாசம் பாயசம் எதுவுமில்லை
அம்மாவுக்காக வீட்டுக்குள்ள வர அனுமதிக்கிறேன்
உன்னோட புள்ளைங்களை கூட்டிட்டு வந்து
இங்க உறவு கொண்டாட நினைக்காத வந்தோமா அம்மாவை பார்த்தோமா இருந்தோமா போனோமானு இரு
அவ்வளவுதான் என்பதுபோல் முடித்துகொண்டார்
அவர் பெற்ற பிள்ளைகளை அழைத்து வர வேண்டாமென்று கூறுபவரின் மகள் அந்த குடும்பத்திற்க்கு மருமகளாகி விட்டால் என்பது தெரிந்தால் ??????