Thread starter 19/09/2025 11:58 am
11
அன்று திங்கட்கிழமை, வர்த்தினியை ஏற்றிச்செல்ல கேப் வந்து நிற்க.. அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வழக்கம் போல பின்பக்க கதவை திறந்து காரில் ஏறி அமர்ந்தாள் வர்த்தினி.
நம்ம ஊர் அதுவும் திருவையாறு பொண்ணுக்கு லண்டனில் கேப் பற்றிய ஞானம் அவ்வளவாக இல்லை. ஒரே நாள் தான் அவளை அழைத்து செல்ல கேப் வந்திருந்தது. முன்னமே, அவளுக்கு அந்த கேப் எண்ணை வினய்யின் அலுவலகத்திலிருந்து அனுப்பிவிடுவார்கள். விவரங்களை சரிபார்த்துக் கொண்டு அன்று ஏறினாள். இன்றும் எண் வந்திருக்க தன் வீட்டின் முன் நின்ற காரின் எண்ணை சரிபார்த்துக் கொண்டு உள்ளே ஏறி அமர்ந்து.. "கோ ப்ரோ" என்று நம்ம ஊரு அண்ணா பழக்கத்தை அவள் அங்கேயும் கடைபிடிக்க..
ஆனால் காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தது அண்ணா அல்லவே கண்ணா அன்றோ!!
அதுவும் விஷமக்கார குறும்புக் கண்ணன்!!
அவளின் அண்ணா விளிப்பில் திரும்பிப் பார்த்தவன் தன் உதடுகளை குவித்து பறக்கும் முத்தத்தை ஒன்றை அனுப்பி வைக்க அதிர்ச்சியில் உறைந்தாள் வர்த்தினி.
நேற்று அவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று முழுதாக அவளுக்கு விளங்க.. கையை பிசைந்தவாறு தவிப்புடன் அவனை பார்த்தாள். அது எதையும் கண்டுகொள்ளாதவன், "என்ன மாமி.. இனி டெய்லி உன்னோட காலை நேர ஆபீஸ் ஊர்வலம் என்னோடுதான். பயப்படாதேள் மாமி, நான் நன்னாவே கார் ஓட்டுவேனாக்கும். என்னாண்ட இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் இருக்கு மாமி. நீங்க ஹேப்பியா வரலாம் என் கூட" என்று கண்களில் சிரிப்புடன் கேலி குரலில் அவன் கூற..
'அடப்பாவி வாய தொறந்து பேசக்கூட விட மாட்டீங்குறானே.. எது பேசினாலும் அதற்கு ஆப்போசிட்டா தான் பேசுறான். இனி என் வாயை திறக்கவே கூடாது' என்று ஏகமனதாக முடிவெடுத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். "என்ன மாமி இனிமே வாயை திறக்கக் கூடாது என முடிவு பண்ணி இருக்கிற மாதிரி தெரியுது?" என்று அவன் கேலி குரலில் கேட்க, அதற்கும் பதில் சொல்லாமல் அவள் அமைதியாக அமர்ந்து இருக்க..
"ஓ.. அப்போ மாமி வாய திறக்க மாட்டேள் அப்படி தானே?" என்றவன், "திறக்க வைப்பேன் பாரு" என்று ஒற்றை கண்ணை அடித்து விட்டு அவனும் வண்டியை எடுக்காமல் முன்பக்க சாலையை பார்த்தவாரே அமர்த்தலாகவே அமர்ந்திருந்தான். இவன் ஏன் வண்டியை எடுக்காமல் என்னும் அமைதியாகவே அமர்ந்து இருக்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க.. அவனோ இரு கைகளையும் கட்டிக்கொண்டு அமைதியாகவே எதிர்புறம் பார்த்து அமர்ந்திருக்க... ஒன்றும் புரியாமல் விழித்தாள் வர்த்தினி.
அதேநேரம் பத்மாவும் வர்த்தனி ஏறி அமர்ந்ததும் கார் இன்னும் எடுக்கப்படாமல் இருப்பதை தன் வீட்டில் இருந்து பார்த்தார்.
அவருக்கு வர்த்தினியை கவனிப்பதை தவிர, அதாவது கண்காணிப்பதை தவிர வேற என்ன வேலை இப்போது. கடல் தாண்டி வந்தாலும் சிசிடிவி கண்களையும் சன் நியூஸ் சேனல் வாயையும் அவரால் இதுவரை மாற்ற முடிந்ததில்லை.. இனியும் மாற்றுவார் என்பதும் சந்தேகமே!!
அவர்கள் இருப்பதோ அப்பார்ட்மெண்டில் ஆறாவது தளத்தில்.. அங்கிருந்து தனது மூக்கு கண்ணாடியை மேலும் கீழும் ஜூம் செய்து ஜன்னல் வழியே பார்த்தவர் வர்த்தினியின் கார் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து அவளுக்கு போன் செய்து விட்டார்.
"ஏண்டிமா வர்த்தினி நீ ஏறிதான் உட்கார்ந்துடியோனோ.. பின்னே ஏன் அந்த சண்டாளன் கார் எடுக்காம உட்கார்ந்திருக்கான். ஏதும் பிரச்சனை பண்றானா என்ன? என்னாண்ட சொல்லு நான் கிளம்பி உடனே வரேன் அங்க.. இந்த பத்மா மாமி யாருன்னு அவனுக்கு காட்டுறேன்" என்று அவர் பேசிக்கொண்டே செல்ல வர்த்தினிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
'ஏற்கனவே ஒரு பிரச்சனை முன்னால இருக்கு அதையே என்னால சமாளிக்க முடியல.. இப்போ இன்னோன்னு அதுவும் ஆறாவது மாடியிலிருந்து ஜங்கு ஜங்குன்னு ஆடிக்கிட்டே வேற வர போகுதா?... அச்சோ!! பெருமாளே!! மீ பாவம்.. வலிக்குது.. கொஞ்சம் கருணை காட்டுங்கள்' என்று அவள் மானசீகமாக பெருமாளை துணைக்கு அழைத்துக் கொண்டு இருக்க..
வேறு வழியில்லாமல் "இல்ல மாமி அவர் ஏதோ போன் பேசிண்டு இருக்கார். பேசிண்டு வண்டியை எடுப்பார். நான் பத்திரமாக போய்க்கிறேன். நீங்க இங்க வரவேண்டாம். சிரமப்படாதேள்" என்று போனை அவசரமாக அவர் பதில் பேசுமுன் கட் செய்து விட்டாள்.
"ப்ளீஸ் தயவுசெய்து காரை எடுங்கோ.. மேல இருந்து பத்மா மாமி பார்த்துண்டு இருக்கா. ஏன் இன்னும் கிளம்பலனு என்னாண்ட கேள்வியா கேட்டுண்டு இருக்கா.. ப்ளீஸ் காரை எடுங்கோ" என்று கண்களை சுருக்கி, உதட்டை சுழித்து தலையை ஒரு புறம் சாய்த்து அவள் கெஞ்ச.. திரும்பி பார்த்தவனின் இதயம் ஒருமுறை விட்டுதான் துடித்தது. அவள் அதரங்களில் படிந்த பார்வையை கஷ்டப்பட்டு திருப்பிக் கொண்டான். முத்தம் கொடுப்பதற்கு ஏதுவான பொசிஷனில் தான் இருந்தாள் வர்த்தினி. ஏன் என்று தெரியாமலேயே வலது கையால் தனது இதயத்தை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டான் வினய். பின் எதுவும் பேசாமல் முன் கதவை திறந்து விட..
'அடப்பாவி இதுக்கா இவ்வளவு அலப்பறை முன்னாடி வந்து உட்காருனு சொல்லி இருந்தா.. நானே வந்து உட்கார்ந்து இருந்திருப்பேனே.. டிசைன் டிசைனா யோசிப்பான் போலயே என்னை வைச்சு செய்ய.. இவனைப் பெத்த அந்த புண்ணியவதி பாவம்' என்று விட்டு ஒரு சலிப்புடன் பின்புறம் இருந்து எழுந்து முன் புறம் சென்றவள் அவன் மேல் காட்ட முடியாத கோபத்தை கார் கதவில் காட்டினாள்.
மென் சிரிப்புடன் காரை வேகமாக ஓட்டிச் சென்றான் வினய். வர்த்தினியும் அவனிடம் வேறு ஏதும் வாய் கொடுக்காமல் அமைதியாகவே வர, வேற எந்தவித வழக்கும் இன்றி போய் சேர்ந்தனர் அலுவலகத்திற்கு..
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)
புன்னாகவராளி ராகத்தில் அமைந்த "கண்ணம்மா என் குலதெய்வம்" என்ற பாரதியார் பாடலை, கண்களை மூடி தன்னை மறந்து மெய்யுருக பாடிக் கொண்டிருந்தாள் வர்த்தினி.
இளங்காலை நேரத்தில் பாடத் தகுந்த ராகமிது. புன்னாகவராளி ஒரு பெண் பால் ராகமாகும். அதுவும் வர்த்தினியின் தேன் மதுர குரலில் இன்னுமே அங்குள்ளவர்களை கட்டிப் போட்டது என்றால் அதற்கு மிகை இல்லை. வழக்கம் போல அனைவரும் அவளது குரலிலும் லயத்திலும் கட்டுண்டு இருக்க ஒருத்தன் மட்டுமே அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
வழக்கம்போல பாடிக் கொண்டிருந்தவளின் கண்கள் சுழன்று அவன் கண்களோடு உரச..
அதுவரை சுவாரசியமின்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் திடீர் சுவாரசியம் பிறக்க.. முதலில் உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை சத்தமின்றி பறக்கவிட.. கண்களாலேயே அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள். அவளின் எந்த முறைப்பு அவனுக்கு இன்னும் சுவாரசியத்தை கிளப்ப.. அடுத்த கண்கள் தீண்டலுக்காக காத்திருந்தான் இந்த கள்வன். அடுத்த முறையும் அவள் கண்களெனும் ஆழி சூழலில் விரும்பியே மாட்டியவன், ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.
ஆனால் வர்த்தினியோ அதைக்கண்டு தனது இதயத்தில் லேசாக தட்டிக் கொண்டு எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்து தனது பாட்டை அழகாக பாடிக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக எப்போதும் இதயத்தின் பக்கம் தட்டினாள் என்று புரியாமல் குழம்பி பார்த்தான் வினய். தனக்குத்தானே தைரியம் கூறிக் கொண்டாளா? அல்லது அதை தனக்குக் கூறினாளா? என்று அவளைக் குழப்ப நினைத்தவன் தான் குழம்பி நின்றான். அவனின் குழப்பம் எல்லாம் சிறிது நேரம் தான் சரியாக கண்டுபிடித்து விட்டான் அவளை..
'எவ்வளவு சில்மிஷம் சீண்டல்கள் பண்ணியும் அவள் தன் நிலையில் இருந்து மாறாமல், லயம் பிறழாமல், ஸ்ருதி விலகாமல் அவ்வளவு அழகாக பாடுவதிலேயே என் மனோ வலிமையை நீ புரிந்துகொள்ள வேண்டுமட மடையா' என்று கூறுவது போலவே இருந்தது அவனுக்கு.. சன்னச் சிரிப்புடன் அவளை பார்த்தவன் உதட்டு அசைவில் "மாமி உனக்கு இருக்கிற இந்த தைரியம்.. மனோ தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி மாமி.. உன் கூட இன்னும் இன்னும் விளையாடனும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துது"
இந்த சீண்டல்கள் எல்லாம் அவனுக்கு இப்போது ஒரு சுவாரஸ்யம் மிகுந்த விளையாட்டு போலவே தோன்ற ஆரம்பித்தது. ஆனால் தானா இது? எப்படி? என்று அவனுக்குள் இருக்கும் அந்த பிசினஸ் மேக்னட் தலையை சிலுப்பிக்கொண்டு கேட்க... 'ஒவ்வொரு நொடியும் எனக்கு விலைமதிப்பில்லாதது மேன். பிஸ்னஸில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.. நீ இந்த சின்ன சின்ன சீண்டலில் சுவாரசியத்தை பார்த்துக் கொண்டிருக்கிற.. இப்படியே போனால் வாட்ச் மை வேர்ட்ஸ் ஒரே மாசத்துல உன்னோட கிரேடு குறைந்துவிடும் மேன்' என்று கவலை கொள்ள.. அதையெல்லாம் தூசு போல் தட்டி விட்டவனின் கண்கள் அவளிடம் இருந்து சிறிதும் பிரியவே இல்லை.
ஒருவழியாக அந்த பாடலும் அற்புதமாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடித்திருக்க இவனும் தன் அறைக்குச் சென்று விட்டான்.
"ஹாய் வரு.. சாரி நேத்து என்னோட லவ்வர் என்னை பார்க்க வந்தனால உன்னை பாஸ் கூட அனுப்பிட்டேன்" என்று நேற்று நடந்தவற்றுக்கு லீனா மன்னிப்பு வேண்ட..
" பரவாயில்லை லீனா.. நீ என்னை தனியா விடல தானே.. பாஸ் கூட தானே அனுப்பி வச்ச" என்று வினய்யினால் வந்த வினைகளை மறந்து தன் புது தோழி வருந்துவது பிடிக்காமல் அவளை சமாதானம் செய்தாள் வர்த்தினி.
"நாட் லைக் தட் வரு.. உன்னோட அந்த கேர் டேக்கரை கேட்டுட்டு வெளியே அழைச்சிட்டு வந்தது நான்தான். திரும்ப கண்டிப்பா போய் வீட்டுல விட்டு இருக்கணும். ஆனால் ஜேம்ஸ் வெளியூருக்கு போய் மூன்று நாள் ஆயிடுச்சு அதான் அவனுக்கு கொஞ்சம் கூட பேஸண்ட்ஸ் இல்லை" இலகுவாக லீனா தன் காதலனை பற்றி கூற முதலில் ஒன்றும் புரியவில்லை வர்த்தினிக்கு.
"உன் லவ்வருக்கு என்ன? அவரை ஏன் பேஷண்ட் சொல்லுற" என்று புரியாமல் அவளையே கேட்க..
லீனாவோ அவளுக்கு புரியவில்லை என்று நினைத்து நன்றாக புளி உப்பு போட்டு விளக்கினாள். "அது நாங்க லீவ்விங் டூகேதர் ரிலேஷன்ல இருக்கோம் வரு. ஒரு நாளு கூட என்னை விட்டு அவன் இருந்தது இல்லை.. ஐ மீன், லவ் மேக்கிங் செய்யாம இருந்தது இல்லை.. அதான் நேற்று என்னை மாலுல பார்த்தவுடன் அவனுக்கு அவ்வளோ அவசரம்.. அதனால் தான் உன்னை பாஸ் கூட அனுப்ப வேண்டியதா போச்சு" என்று சகஜமாக அவள் கூற.. கேட்டுக்கொண்டிருந்த வர்த்தினிக்கு அது ஜீரணிக்க முடியாமல் தொண்டையில் கசந்தது.
லீனாவுக்கு அவர்கள் வாழ்வில் நடைபெறும் சாதாரண ஒரு நிகழ்வே இது. ஆனால் குடும்ப ஆச்சாரம் அனுஷ்டானம் சமூக பழக்க வழக்கங்களால் முற்றிலுமாக வேறுபட்டிருந்த வர்த்தினிக்கு இவையெல்லாம் கேட்கவே உடல் நடுங்கியது.
இது அவர்களுடைய கலாச்சாரம். அவர்கள் அன்பை காதலை அவர்கள் வழியில் காட்டுகிறார்கள் என்ற வினய்யின் பேச்சு காதில் கேட்க.. அப்படிதான் போல என்று தோளை குலுக்கி கொண்டவள், இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று தனக்குத் தானே முடிவெடுத்து அமைதியாகவே லீனாவை பார்த்தாள்.
லீனாவும் வர்த்தினியின் புரிதலில் அவள் கையை பிடித்து "வரு, இனி நாம் சந்திக்கும் நேரத்தில் அன்று போல சங்கடம் வராமல் பார்த்துக்கிறேன்" என்று கூறிய லீனா அறிவாளா.. இந்த வர்த்தினி தான் காதலனுக்கு இதே போல ஊரே திரும்பி பார்க்க இதழணைப்பு கொடுக்க போகிறாள் என்று!!
அன்று மதிய உணவு முடிந்து அனைவரும் தங்கள் ரெக்கார்டிங் அறைக்கு ஆஜராகி விட.. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது.. "ஒரே பாட்டா மட்டும் ரெக்கார்டிங் கொஞ்சம் போரடிக்குது. டிஃபரண்ட் ஏதாவது செய்யலாமா?" என்று ஜோன்ஸ் கேட்க..
அவர்கள் குழு தலைவன் ராபர்ட்டும் சரி என்று ஒத்து கொள்ள, லீனா தன் திறமையை
காட்ட ஆரம்பித்தாள் சாக்ஸஃபோனில்..
சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவி கிடையாது. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம். லீனாவின் கையில் அந்த சாக்கஸஃபோன் மேற்கத்திய இசையை வாரி வழங்க கேட்டு கொண்டு இருந்தோர் அனைவரும் அதில் மெய் மறந்து போயினர்.
அவள் இசைத்து முடிந்தவுடன் வர்த்தினி அவளை அணைத்து தன் மகிழ்வை தெரியப்படுத்தினாள். மற்றவர்களும் தங்கள் மகிழ்ச்சியை கரவோஷம் எழுப்பி வெளிப்படுத்தினர்.
அடுத்து ராபர்ட் தன் திறமையை கிட்டாரில் காட்டி அசத்த, ஒவ்வொருவருக்கும் உள்ள அவரவர் தனித்திறமையில் ஒவ்வொருத்தருக்கு சளைத்தவர்கள் இல்லை என்று வர்த்தினிக்கு விளங்கியது. வினய்யின் இந்த ஆட்கள் தேர்வை மெச்சி கொண்டாள் வர்த்தினி.
பணம் மட்டும் இருந்தால் போதாது. அதை சரிவர நிர்வகித்து, சரியான முறையில் முதலீடு செய்து, கூட இருப்பவர்களையும் தட்டி கொடுத்து வேலை வாங்கும் அந்த ஆளுமை அனைவருக்கும் அமைய பெறாது.. ஆனால் தரணீஸ்வரனின் தொழில் ஆளுமையும், மஞ்சுளாவின் நுண்ணியறிவும் வினய்க்கு இயற்கையில் அப்படி ஒரு திறமையை கொடுத்து இருக்க.. அவனும் அதை தன் வழியில் மெருக்கேற்றி தன்னிகரில்லா வெற்றியை தனக்குத்தானே கொடுத்து கொண்டிருக்கிறான். அது எல்லா இடங்களிலும் நேரங்களிலும் அவனுக்கு வெற்றியை தருமா?!
"அடுத்து நீ தான் வர்த்தினி" என்று ஜோன்ஸ் கூற..
"என்னது நானா?" என்று அதிர்ந்தாள் வர்த்தினி.
"ஆமாம் நீயே தான்!" என்று அவன் ஊக்க..
"எனக்கு பாட்டு பாட மட்டும் தான் தெரியும்" என்று அவள் மறுக்க..
"உன்னை பத்தி வந்த அன்று நீ கொடுத்த இன்ட்ரோவில் உனக்கு ஆடத் தெரியும்னு எங்களுக்கு தெரியும்.. ஒரெ ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடு போதும்.. கிளாசிக் கூட வேண்டாம்.. கியஷூவலா ஆடு ப்ளீஸ்" என்று லீனா கூற.. மற்றவர்களும் அவளோடு சேர்ந்து கோரஸாக ப்ளீஸ் ப்ளீஸ் என்று கத்த.. வேறு வழியில்லாமல் தன் புடவை முந்தானையை சொருகி ஆடத் தயாரானாள் வர்த்தினி.
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா...
என்று பாடலுக்கு அவள் பாடிக் கொண்டே ஆட.. அவளின் அந்த விஷமக் கண்ணன், கண்களில் விஷம சிரிப்புடன் அவளின் நடன அசைவுகளை, நெளிவு சுழிவுகளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவள் கண்கள் பேசும் நயன பாஷைகளும், ஆடும் போதும் ஏறி இறங்கும் நெஞ்சுக் குழியும் வினய்யின் கண்களுக்கு விருந்தாக.. கண்களில் தாபம் மின்ன அவளை தான் பார்த்திருந்தான். ஆனால் பார்வையை யாரும் கண்டுபிடிக்காதவாறு கூலர் அணிந்து..
அவள் சுற்றி சுற்றி ஆட.. அந்த சிக்கென்ற சிற்றிடையில் சிக்கி சிக்கி தவித்தான் வினய். ஒரு கட்டத்தில் எல்லோர் முன் காட்சி பொருளாக இருக்கிறாளே என்று அவனுக்கு சிறிதாக ஆரம்பித்த கோபம் பெரிதாக கொழுந்து விட்டு எரிய.. தாங்காமல் எழுந்தே நின்று விட்டான்.
கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூறாய்!!
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்!!
என்று அவள் பாடி முடிக்க.. அவனுமே முற்றிலும் வேறாகி போனான். அவளுடைய எண்ணங்கள் அவனை அலைகழிக்க.. அதே சமயம் அவளின் அங்கங்கள் அவனை கூறாக கிழிக்க.. இனி இங்கிருந்தால் நிச்சயமாக அவளை அணைத்து முத்தமிட்டு விடுவோம் என்று உணர்ந்தவன், விரைந்து தன் அறைக்குச் சென்று விட்டான்.
ஆனால் வர்த்தினியோ இதை எதையும் அறியாமல், வழக்கமான நேரத்தில் தன் பணியினை முடித்து விட்டு கிளம்ப... அவளை அழைத்துச் செல்ல வேண்டியவனோ தனது அறையில் வர்த்தினியால் கிளர்ந்து எழுப்பப்பட்ட உணர்வு குவியல்களை அடக்க முடியாமல், இடது கையால் தன் சிகையினை கோதிக் கொண்டு, இருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்.
"சர்.. மேம் இஸ் வெயிட்டிங்" என்று வர்த்தினி காத்திருப்பதாக வில்லியம்ஸ் வந்து சொல்ல..
தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தவன், "அரெஞ்ச் சம் அதர் கேப் ஃபார் ஹர்" என்றான்.
வில்லியம்ஸ் புரியாமல் நேற்று தான் அவளை என்னை தவிர யாரும் அழைத்து செல்ல கூடாது என்று கட்டளையிட்டவன், இன்று இப்படி சொல்லுகிறானே என்று குழம்பியவாரே, வேறு ஒரு வண்டிக்கு அழைத்துச் சொன்னான்.
வர்த்தினியும் பெரிதாக ஒன்றும் நினைக்காமல், வில்லியம்ஸ் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் ஏறி சிறிது தூரம் தான் சென்றிருப்பாள், சட்டென்று அவளது வண்டி மறிக்கப்பட.. இவள் என்னவென்று டிரைவரிடம் கேட்க..
"மேம்.. நீங்க அந்த வண்டிக்கு மாறிக்கோங்க" என்று காரோட்டி கை விரிக்க..
'என்னங்கடா நடக்குது இங்க.. கடங்காரன்.. கடங்காரன்' என்று திட்டிக்கொண்டே அவள் அந்த வண்டியில் ஏற.. ஒற்றை கண்ணடித்தலுடன் அவளை வரவேற்றான் வினய் விஸ்வேஸ்வரன்.
வண்டி அவன் கையில் பறந்தது. அந்த வேகத்தை தாங்க முடியாமல் சீட் பெல்ட் போடாத வர்த்தினி அவன் மீதே விழுந்தாள்.
பெண்களின் தொடுகை அவனுக்கு பரிச்சயம் அற்றது அல்ல. ஆனால் தன்னிச்சையாக வர்த்தினி அவனை தொடுவது இதுவே முதல் முறை. மாலையிலிருந்து அவனுள் பிரவாகமாக பொங்கி எழுந்த உணர்வு குவியல்களுக்கு இவளின் தொடுகை தூபம் போட.. அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அலையாய் அவனை சுருட்டி உருட்டி போட்டது. ஒரு பெருமூச்சை எடுத்து தன்னை சமாதானம் செய்து அவளை தள்ளி அமர வைக்க அவன் முயல... அவளோ கண்களை இறுக்க மூடி அவன் கையினை இறுகப் பற்றியிருந்தாள் பயத்தை போக்க..
பயத்தில் தான் தன்னை பிடித்து இருக்கிறாள் என்பதை அவன் அறிவு உணர்ந்தாலும், மூளை அந்த ஸ்பரிசத்தை இன்னும் வேண்டும் வேண்டும் எனக் கேட்க..
அதற்கு மேல் தாங்க இயலாதவன் மெல்ல அவள் சிற்றிடையில் கையை நுழைத்து அதன் மென்மைகளை ஆராய்ந்து கொண்டே தன்னை நோக்கி இழுத்தான்.
வர்த்தினி அதிர்ச்சி விலகாமல் தன் நயனங்களை விரிக்க.. வினய் அந்த நயனங்களில் தொலைந்தப்படி, அவளை மூச்சுக் காற்று உரசும் அளவிற்கு நெருங்க..
அவளின் பெருத்த அந்த மேல் அதரம் அவனை ஈர்க்க.. மெல்ல தன் நாவினால் அவளின் அந்தரங்களை அவன் அளக்க..
அவனின் குளிர்ச்சிமிகு அதரங்கள் பெண்ணவளுக்கு உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த... அவள் அதை உணரும் முன் அவளின் அந்த வெண் பஞ்சு உதடுகளை தன் உதடுகளுக்குள் அதக்கி சுவைத்து கொண்டு இருந்தான் வினய்.. கைகளோ அவள் மெல்லிடையின் வளைவு நெளிவுகளை ஆராய்ந்து.. ஆலியிலை வயிற்றில் வீற்றிருக்கும் அழகிய பதுங்குகுழியை தன் விரல்களால் மீட்டிட... பாவையவளோ அவனின் இசை மீட்டலில் ராகம் தப்பி, ஸ்ருதி ஏற்றி கத்த ஆரம்பிக்க.. தாபம் கொண்ட மாயவனோ, அவளின் இடை இறுக்கி தன் இதழணைப்பை விடாமல் அமிர்தம் உறிஞ்சி அமரனானான்.
பின் மெல்ல அவளை விட்டவன்.. "இனி புடவை கட்டாதே மாமி என் முன்னால்" என்று அவள் கன்னத்தோடு கன்னம் உரசி கூறியவன், காரை பறக்க விட்டான் அவள் தங்கி இருக்கும் இடம் நோக்கி
19/09/2025 12:50 pm
அச்சோ🙈🙈🙈🙈