10
கற்றை மீசையின் குறுகுறுப்பும், வெகு அருகே நிற்பவனின் உடல் வெம்மையும் பெண்ணவளுக்கு உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, சடுதியில் அவனை விட்டு விலகியவளை பார்த்து அவனின் குறும்பு புன்னகை விரிந்தது. அத்தோடு அவளை விட்டால் அவன் வினய் அல்லவே!!
வர்த்தினி நிமிர்ந்து அவனைப் பார்க்க.. அதரங்களில் மிளிரும் குறும்புப் புன்னகையை உதடுக்குள் மறைக்க மீசையின் ஓரம் துடித்தது அவனுக்கு.
"என்ன மாமி.. இன்னைக்கு கோட்டா முடிச்சாச்சா? இது தான் நேத்து கனவில் வந்ததா?" என்று ஒற்றை புருவத்தை தூக்கி சன்ன சிரிப்போடு அவன் கேட்க.. வர்த்தினியோ தன் கீழ் உதட்டை பற்களால் கடித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அத்தோடு விடுவானா வினய் என்ன!! "என்னை சொல்லிட்டு நீயே எல்லாம் பண்றேளே மாமி.. அதுவும் விதவிதமா.. வித்தியாசமா" என்று தன் மீசையை நீவி விட்டு கொண்டே அவன் கூற..
வர்த்தினிக்கு தான் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்ளுவது என்று தெரியவில்லை. அவன் சொல்வதெல்லாம் உண்மை தானே!!
இப்போதைக்கு இவனிடம் வார்த்தை ஆடுவது விட விலகிச் செல்வதே மேல் என்று எழுந்து அவள் அவனை சுற்றிக் கொண்டு செல்ல முயன்றாள்.
சட்டென்று அவள் கையை பிடித்து அவன் தடுத்து நிறுத்த.. "என்னை அப்படி எல்லாம் தவிர்த்துவிட்டு நீ செல்ல முடியாது மாமி" என்று குரல் என்னவோ இலகுவாக இருந்தாலும் அதில் இருந்த அழுத்தம் அவளை திகைக்க வைத்தது. மெல்ல அவளின் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள். ஆனால் முடியவில்லை, அவனது முகத்தில் உள்ள இலகுத்தன்மை கைகளில் இல்லை. அது உடும்பு பிடியாக அவளது கையை பற்றி இருந்தது.
"இந்த அறையில் நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் மாமி. நானா அத்துமீறி உன்னை ஏதும் செஞ்சேனா? இல்லை தானே.. சாதாரணமாக கேட்ட ஒரு கேள்விக்கு உன்னால பதில் கூறமுடியல. பார்க்கறதுக்குத்தான் பயந்த சுவாபி நீ.. ஆனா உள்ளுக்குள்ள நீ பயங்கர அழுத்தம் மாமி" என்ற அவனது குரல் தீவிரத்தில் தன் கைகளை விடுவித்துக் கொள்ள அவள் போராட.. "விடுங்கோ.. வலிக்குது" என்று அழுதுவிடும் குரலில் அவள் கூறினாள்.
"இங்கே பாருங்கோ.. நான் அன்னைக்கே உங்களாண்ட சொல்லிட்டேன். உங்க கூட பழகுற மத்த பொண்ணுங்க மாதிரி நான் இல்ல.. எங்களாண்ட பணம் இல்லைனாலும், எங்க ஆத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்குறது. அதைக் கெடுத்துண்டு தான், நேக்கு இந்த மாதிரி வாய்ப்பு வரணும்னு இருந்தா.. நேக்கு அது தேவையே இல்லை..
அதனால என்னாண்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கோ" கண்களை உறுத்து விழித்து அவனை மிரட்டும் தொனியில் ஒற்றை விரலை நீட்டி அவள் கூற.. சிறகு போல விரிந்த அவள் இமைகளுக்குள் ஆழியென அவளது கண்கள் அவனை உள்ளிழுக்க... அதை சிறிது நேரம் உற்றுப் பார்த்தவன் பின் கண்களை திருப்பிக் கொண்டான். அவளின் இந்த அசட்டு தைரியம் அவனுக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.
"புள்ள பூச்சியெல்லாம் ரொம்ப பேசுது" என்று அவளை அசட்டையாக பார்த்தவன் இன்னும் தன் முன் நீட்டிக் கொண்டிருக்கும் அவளது ஒற்றை விரலையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அடுத்த கணம் அந்த ஒற்றை விரலை பிடித்து ஒரு சுழற்று சுழற்றி அவளது இடையோடு தன் கையை கோர்த்து தன்னுடன் இறுக்கி நிறுத்தினான். அவன் இடையை பிடிப்பான் என்று அவள் சிறிதும் நினைக்கவே இல்லை.
முதலில் அதிர்ந்தவள் பின் அவனிடம் இருந்து விலக முற்பட, கிஞ்சித்தும் அவளால் அவன் பிடியிலிருந்து விலகவே முடியவில்லை. அவள் விலக விலக அவளின் இறுக்கம் அதிகரித்தது. தன்னோடு இறுக்கி நிறுத்தியவன், அவள் தாடையை பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தினான்.
"நானா வந்து உனக்கு முத்தம் கொடுத்தேன் இல்லைல.. வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு நீயே தான் இப்போ ஒண்ணுன்னா பண்ணிக்கிட்டு இருக்க.. ஒரு வேளை பெண்கள் அகராதியில் வேண்டாம்னா வேணும்னு அர்த்தமோ" என்று கண்களில் சிரிப்புடன் குறும்பு மின்ன அவன் கேட்டான். அவனது குரலில் கேலி விரவிக் கிடந்தாலும் அதற்குள்ளே அழுத்தம் இருந்ததை உணர்ந்த வர்த்தினிக்கு நெஞ்சம் படபடக்க செய்தது.
"இவ்ளோ நீ பேசிய பிறகும் உன்னை இப்படியே சும்மா விட்டால்.. எப்படி?" என்றவன் அழுத்தமாக தனது அதரங்களை அவள் அதரங்களோடு உறவாட விட்டான். சில கணமே நீடித்த அந்த இதழணைப்பு அவளுக்கு பலமணித் துளிகளா நீண்டுக் கொண்டே செல்வதை போல தோன்றியது.
அடுத்த கணம் தன்னிடமிருந்து அவளை பிரித்தவன் "ஓடி போ" என்றுவிட்டு தனது இருக்கையை நோக்கி சென்று விட்டான்.
அவளுமே அவ்விடத்தை விட்டு உடனே சென்றுவிட்டாள். அடுத்து அவள் சென்று நின்ற இடம் அந்த ஃப்ளோரில் உள்ள ரெஸ்ட் ரூமில் தான். வழக்கம் போல தன் உதடுகளை மீண்டும் மீண்டும் தேய்த்து கழுவி விட்டு தான் ரெக்கார்டிங் ரூமுக்கு வந்து சேர்ந்தாள்.
அன்று இன்னொரு பாடலும் அழகுறவே வர்த்தினியின் தேன் குரலாலும் குழுவினரின் ஒட்டுமொத்த முயற்சியாலும் பதியப்பட்டது. இம்முறை வினய் தன் சிஸ்டத்திலிருந்து மட்டுமே அவளை கண்காணிக்க செய்தானே ஒழிய, நேரில் சென்று அவளை சங்கட படுத்தவில்லை.
அவளின் இரண்டு பாடல்களையும் ஒரு சிடியில் பதிந்து கொண்டு தன் தாய்க்குக் கொடுக்க சென்றான்.
மாலை வீட்டுக்கு திரும்பிய வர்த்தினிக்கு தவிப்பாகவே இருந்தது. எப்படி நான் கண்ட கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இப்படி நிறைவேறுகிறது என்று தெரியாமல் குழம்பி தவித்தாள். இதை யாரிடமாவது கேட்டே தீர வேண்டும் இல்லை என்றால் இதை நினைத்து தவித்தே நாம் ஒரு வழி ஆகி விடுவோம் என்று நினைத்தவள் தன் தந்தைக்கு அழைத்து விட்டாள்.
"இப்பதாண்டா தங்கம்.. உன்ன நினைச்சுண்டே இருந்தேன். அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்ட" என்று சுப்பு பாசத்துடன் மொழிய..
"அப்பா இன்னைக்கு முதல் நாள் ரெக்கார்டிங் இரண்டு பாட்டு நல்லவிதமா பாடி முடிச்சிண்டு வந்துட்டேன்" என்று தந்தையிடம் கூறியவள் "அம்மா இருக்காளானோ பக்கத்துல" என்று கேட்டாள்.
"இல்லடா தங்கம்.. நான் இன்னும் கோவிலில் தான் இருக்கேன். நடையை ஷாத்திட்டு ஆத்துக்கு போனதுக்கு அப்புறமா அம்மாகிட்ட தரேன் சரியா?" என்று கூறினார்.
"அப்பா நேக்கு ஒரு சந்தேகம் தெளிவுபடுத்துறேளா?" என்று கேட்டாள் பெண்.
"கேளுடா மா" என்றார் சுப்பு..
"நமக்கு அடிக்கடி கனவு வர காரணம் என்ன பா.. அப்படி வர கனவுகளெல்லாம் ஏதேனும் அர்த்தம் இருக்கா? பலிக்குமா? பலிக்காதா? அப்படி பலிக்காமா இருக்கணும்னா நாம என்ன பண்ணனும்?" என்று கேட்டாள் வர்த்தினி.
"நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலனுண்டுடாமா. சிலர் கனவுகள் என்கறது நம்மோட நினைவுகளின் கற்பனை வடிவம்தான் சொல்லுறா. மனிதர்களோட ஆழ் மனசில இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகிறதாவும் பெரியவா சொல்லுவா.. கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது தான் வரும்.
நாம் காணும் எல்லா கனவுகளும் பலிக்கிறதில்லடாமா. மாறாக சில கனவுகள் வந்து மறைஞ்சுடும். சில கனவுகளை நம்மால் நினைவில் வைச்சுக்கவும் இயலாது. உடனடியாக மறந்திடுவோம். சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனசுல ஆழமாக பதிஞ்சிடும். இப்படி கனவை பத்தி நிறைய சொல்லிண்டே போலாண்டாமா.. திடீர்னு கனவு பற்றி கேட்கிறியே.. ஏதாவது கெட்ட கனவு கண்டியா தங்கம்?" என்று அவர் கடல் கடந்து இருக்கும் மகளின் நலத்தைப் பற்றி அக்கறையாக கேட்க..
"அச்சச்சோ.. அதெல்லாம் இல்லப்பா இன்னைக்கு நா அந்த இசைக் குழுவினராண்ட பேசிண்டு இருக்கிறச்சே கனவு பத்தி ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னா. அதுதான் நானும் உங்களாண்ட அதை பத்தி கேட்டேன். ஏம்பா நாம காணுகிற எல்லாம் கனவும் கண்டிப்பா பலிக்குமா?" அப்பாவின் பதில் என்னவாக இருக்குமோ என்று மனதில் ஒருவித பதட்டத்துடன் அவள் கேட்டாள்.
"சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி விடும் டா.. உதாரணத்துக்கு நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு" என்று அவருக்குத் தெரிந்த சில பேருடைய கனவுகள் பலித்திருப்பதை அவர் ஒவ்வொன்றாக கூறத் தொடங்கினார். ஏற்கனவே பயந்திருந்த வர்த்தினிக்கு சுப்புவின் பேச்சுக்கள் திகில் அடித்ததே ஒழிய சற்றும் அவளது மன குழப்பத்தை குறைக்கவே இல்லை.
"சரிப்பா நான் வெச்சுடுறேன்.. அம்மாண்ட நாளைக்கு பேசுறேன்னு சொல்லிடுங்கோ" என்று விட்டு அதே மன சுணக்கத்துடன் படுத்து உறங்கிவிட்டாள் வர்த்தினி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.. எப்பொழுதும் போல அதிகாலையிலேயே விழித்து விட்டாள் வர்த்தினி. அன்று ஓய்வு நாள் தான் அனைவருக்கும். காலையில் பத்மாவுடன் சிறிது நேரம் இவளும் சமையல்கட்டில் உதவி செய்ய..
"நீ ஏன் இங்க வந்து கஷ்டப்படுறடிமா.. நீ எங்க ஆத்துக்கு வந்து இருக்கிற கெஸ்ட் இல்லியோ.. நீ போடிமா.. இதெல்லாம் நா பார்த்துக்கிறேன்" என்று பத்மாவின் வாய் சொன்னாலும் அவளது உதவியை அவரது மனம் எதிர்பார்த்து தான் இருந்தது.
"பரவால்ல மாமி.. இன்னைக்கு நேக்கும் லீவ் தானே.. நீங்க மட்டுமே எவ்வளவு நேரம் தனியா சிரமப்படுவேள்.. கொஞ்சம் ஒத்தாசைக்கு நானும் செய்தால் சீக்கிரம் வேலை முடியும் தானே" என்றவாறு காலை சமையலுக்கு அவருக்கு உதவி கொண்டிருந்தாள் வர்த்தினி.
என்னதான் பத்மாவிற்கு பணத்தின் மீது ஒரு கண் இருந்தாலும் அதையும் தாண்டி வர்த்தினியின் இந்த குணங்கள் அவரை ஈர்க்கவே செய்தது. எந்தவித அலட்டலும் இல்லாமல் மிக சாதாரண பெண்ணாகவே வளைய வரும் வர்த்தினியின் குணங்கள்.. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் அவளது அழகு என்று பத்மாவையே ஈர்க்கிறது என்றால் அவரது மகனான பிரதீபனின் நிலையை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன!!
காலை உணவாக அவர் அடை செய்ய அதற்கு தோதாக வர்த்தினி அவியல் செய்திருந்தாள். வாயில் அடையையும் கண்களில் அவளையும் உண்டவாறே அமர்ந்திருந்தான் பிரதீபன். ஏனோ அவனது இந்தப் பார்வை வர்த்தினிக்கு பிடித்தம் இல்லாமல், எரிச்சல் வந்தது. அவன் பார்க்கும் போது இம்மாதிரியான எரிச்சல் எல்லாம் நமக்கு வரவே இல்லையே ஏன் என்று மனம் தன் போக்கில் வினய் பற்றி சிந்தித்தது.
தனக்கு சொந்தம் இல்லாதவன் பார்க்கும் பார்வை என்பதாலா?
"வர்ததினிமா.. நீ செஞ்ச அவியல் ரொம்ப நன்னா இருக்கு டா.. அடையோட சேர்த்து சாப்பிடும்போது அமிர்தம் தான் போ" என்று வெங்கடேசன் புகழ, பத்மாவும் வர்த்தினிக்கு நேராக ஒன்றும் சொல்ல முடியாதபடி "நன்னா இருக்கு" என்று தலையசைத்து கொண்டவர் தன் கணவனை முறைக்கவும் தவறவில்லை.
இவர்களின் இந்த குடும்ப அரசியலில் தான் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த வர்த்தினி அவசரமாக சாப்பிட்டு தன் அறையில் அடைந்து கொண்டாள். அப்போது லீனாவிடமிருந்து அவளுக்கு போன் வந்தது.
வர்தினி சுருக்கி வரு என்று ஆக்கிவிட்டாள் லீனா. "வரு.. நீ கூட இன்னிக்கு ஜஸ்ட் அவுட்ங் வரியா?" என்று கேட்க..
அன்று வினய் சொன்ன டேட்டிங் அசந்தர்ப்பமாக அவள் காதில் ஒலித்தது. ச்ச என்று தனது தலையை குலுக்கி கொண்டவள், இங்கே இருப்பதற்கு இவள் கூட சென்றால்தான் என்ன என்ற எண்ணமும் தோன்ற சரி என்று கூறினாள். மாலை வந்து அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு லீனாவும் போனை வைத்து விட்டாள்.
அதேபோல் பத்மாவிடம் வர்த்தினி சென்று கூற முதலில் நிஜமாக இவள் ஒரு பெண்ணுடன் போகிறாளா அல்லது பொய் சொல்லிவிட்டு வேறு யாரும் ஆண்மகனுடன் செல்கிறாளா என்று சிறு குறு குறுப்பு பத்மாவின் உள் மனதில் எழ, அதை முறியடிக்கும் விதமாக லீனாவே நேரடியாகவே வந்து அழைத்துச் சென்றதால் நிம்மதியாகவே அனுப்பி வைத்தார் அவர்.
லண்டனில் அதிகம் கூட்டம் குவியும் ‘ப்ரைமார்க்’ பல்பொருள் அங்காடிக்குச் வந்திருந்தாள் வர்த்தினி தன் புது தோழி லீனாவுடன். சென்னைக்கு சென்ற போது பார்த்த ‘சரவணா ஸ்டோர்ஸ்’ பல் பொருள் அங்காடியுடன் ஒப்பிடத்தக்க எல்லா விலையிலும் எல்லாம் உள்ள அங்காடி இது.
பெரிதாக எந்த ஒரு ஆச்சரியத்தையும் கண்களில் காட்டாமல் சாதாரணமாகவே லீனாவுடன் அந்த அங்காடி முழுவதும் சுற்றிப்பார்த்து வந்து கொண்டிருந்தாள் வர்த்தினி.
வெறும் விண்டோ ஷாப்பிங் தான் பெரும்பான்மையான பெண்களைப் போல..
அது என்னவோ ஒரு பொருளை வாங்கும் போது இருக்கும் மகிழ்ச்சியை விட பலவிதமான பொருட்களை விண்டோ ஷாப்பிங் செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது தான்..
இருவரும் துணிகள் இருக்கும் பகுதிக்கு நுழைந்தனர். அங்கே இருப்பவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தாள் வர்த்தினி. ஆச்சரியமூட்டும் வகையில், அவள் கையில் எடுத்துப் பார்த்த எந்த ஒரு துணி, பொருளும் பிரிட்டன் தயாரிப்பு இல்லை. சீன, இந்திய, வங்கதேசத் தயாரிப்புகள் ஆக்கிரமித்திருந்தன.
"என்னடா அது வெளிநாட்டுக்கு துணி வாங்கலாம்னு பார்த்தால் அங்கேயும் எங்க தயாரிப்பாகவே இருக்கு" என்று லீனாவிடம் இவள் ஆச்சரியத்துடன் கேட்க..
“ஒரு உடையால் கிடைக்கும் லாபத்தைவிட, அந்த உற்பத்தியால் ஏற்படும் சுற்று சூழல் இழப்பு அதிகம் என்றால் அதைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு மேற்குலகம் வந்து வெகு நாட்கள் ஆகிறது" என்று சொன்னா லீனாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வர்த்தினி.
லீனா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தானே.. இன்று திருப்பூர் நூற்பாலைகளும், பனியன் கம்பெனிகளும் பெருகி விட்டாலும் அதனால் ஏற்பட்ட சுற்று சூழல் இழப்பை யாரால் தடுக்க இயலும். கூடவே அழகான நொய்யல் நதியின் சாவும் அனிச்சையாக அவள் கருத்துக்கு வந்து சென்றது.
இருவரும் விண்டோ ஷாப்பிங் முடித்து விட்டு ஏதாவது கொறிக்கலாம் என்று அருகில் உள்ள ஃபுட் கார்னர் செல்ல.. "வரு உனக்கு என்ன செய்ய ஆடர்?" என்று லீனா கேட்க..
"நேக்கு சான்விச் போதும்" என்றாள்.
"எக் ஆர் சிக்கன்?" என்று லீனா விசாரிக்க..
"என்னது எக் இல்ல சிக்கனா? என்று அதிர்ந்தவள்.. நோ எக்.. நோ நோ சிக்கன்.. நோ நோ நோ லம்ப்.. ஒன்லி வெஜிடபிள்ஸ்" என்று சிரிக்க..
"ஆர் யூ வெஜிடேரியன்?" என்று ஆச்சரியமாக லீனா கேட்க..
"எஸ் ஃபுல் வெஜிடேரியன்" என்று புன்னகையுடன் பதில் கூறியவளை பார்த்து தலையசைத்து கொண்டு, இருவருக்கும் வேண்டியதை வாங்கி வந்தாள் லீனா. இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தவாறே உண்டு முடித்தனர்.
பின் பேசிக்கொண்டே பார்க்கிங் ஏரியாவுக்கு வர அப்போது லீனாவின் பாய்பிரண்ட் ஜேம்ஸ் லீனாவை பார்த்து கையசைத்து விட்டு அருகில் வந்தவன் தன் காதலியை ஆழ்ந்து முத்தமிட, வர்த்தினியோ விதிர்விதிர்த்து போய் திரும்பிக் கொண்டாள்.
"சீ கருமம்.. கருமம்.. நட்ட நடு ரோட்டில பண்ற காரியமா இதெல்லாம்.. இவாளுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் பிரைவசி இருக்காதா?" என்று மனதுக்குள் பேசுவதாக நினைத்து அவள் வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருக்க...
"மாமி.. நீ மைண்ட் வாய்ஸூனு நெனச்சு சத்தமா பேசிண்டு இருக்கேள்" என்று கேலியான குரல் கேட்க..
ஏற்கனவே இருந்த படபடப்பு போய் இன்னும் பட படப்பு கூடியது அந்தக் குரல் யார் என்று அறிந்ததும்!!
தன் காரில் சாய்ந்து கொண்டு ஒரு கையில் தனது கார் சாவியை சுற்றியவாறு அவளைத்தான் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் வினய்.
அவனைப்பார்த்து இதுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அசட்டு சிரிப்பு சிரித்து வைக்க.. அவனோ "மாமி.. இதெல்லாம் இங்கே சகஜம்.. அவங்க அன்பை காதலை அவங்க வெளிப்படுத்துகிறாங்க.. உன்னை யார் போய் உத்து உத்து பாக்க சொன்னா?" என்று அவன் விஷமமாக வினவ..
"என்னது நா போய் பார்த்தேனா? அச்சோ.. பெருமாளே!!" என்று இரு கைகளாலும் தனது முகத்தை மூடிக்கொண்டாள்.
அதற்குள் தங்கள் காதல் முத்தங்களை பரிமாறிக் கொண்ட லீனாவும் அவளது காதலன் ஜேம்ஸ் இவர்கள் அருகில் வந்தனர். வர்த்தினியையும் வினய்யையும் பார்த்த லீனா, வினய்யிடம், "பாஸ் நான்தான் வருவ என்கூட ஷாப்பிங் அழைச்சிட்டு வந்தேன். இப்போ நான் என் லவ்வர் கூட போக வேண்டிய சுவிட்ச்வேஷன். நீங்க பத்திரமா வருவ அவங்க தங்கி இருக்கிற வீட்டில விடுறீங்களா?" என்று கேட்டாள்.
'என்னது இவன் கூடவா?' என்று முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சியை வர்த்தினி காட்ட.. அதை கண்ட வினய்க்கு மனதில் சுறுசுறுவென்று கோபம் முகிழ்ந்தது.
"யு டோன்ட் வொரி.. ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹர்" என்று லீனாவிடம் உரைத்தவன் திரும்பி அவளைப் பார்த்து "காருல ஏறு" என்றான் சற்று கோபம் கலந்த குரலில்.
முகத்தில் புன்னகையுடன் லீனாவிடம் விடைபெற்றவளுக்கு மனதில் தித்திக்கின்றது. 'நாம நினைச்சதை இவன் கண்டுபிடித்து இருப்பானோ' என்ற பயத்திலேயே அவள் அவன் அருகில் அமர்ந்திருக்க... அடுத்த நொடி வண்டி வினய்யின் கையில் பறந்தது.
சிறிது தூரம் சென்றவன் "அப்படி என்ன உன்னை செஞ்சிடுவேனு அவளுக்கு முன்னாடி முகத்தில் பயத்தை காட்டுற" என்று கோபமாக கேட்க.. அவன் கோபத்தில் இவனுக்கு உடல் பதறியது. "இதற்கு முன்னாடி நீ என் கூட தனியாக காரில் வந்ததே இல்லையா? பதில் சொல்லு?" என்று காரை ஓரமாக நிறுத்தினான்.
பெருமாளே என்று மானசீகமாக ஆபத்பாந்தவனாக அந்த கோவிந்தனை இவள் அழைக்க.. அந்த மாய கண்ணனோ இந்த விஷம கண்ணனின் சேட்டைகளை கண்டு கொள்ளவில்லை. மாறாக "உன்னுடையவன் தான் அவன்" என்று அவளுக்கு கூறும் விதமாக அமைதியாக இருந்துவிட்டார்.
அவள் புறம் திரும்பியவன் "இப்படி உன் ஜூரோ சைஸ் ஹிப்புல கை வைச்சேனா?" என்றவனின் கைகள் அவளது சிக்கென்ற சிற்றிடையின் மென்மையை ஆராயத் துவங்கியது. அதில் அவள் மிரண்டு போய் அவள் கையை தள்ள பார்க்க.. மற்றொரு கரத்தால் அவள் இருக்கைகளையும் மேல் தூக்கி சிறை செய்தவன்.. அவளது சங்கு கழுத்தில் முகம் புதைத்தவன், பச்சை நரம்புகள் ஓடும் வெளிறிய அழகான கழுத்தில் தன் மீசையினால் உரசி உரசி "இப்படி உன்னை உரசி உரசி டெம்ப்ட் பண்ணுனேனா?" என்று கேட்டான்.
வர்த்தினியோ மிகப்பெரிய அதிர்ச்சியில் இருந்தாள். காரணம் முதல் நாள் இரவு அவள் கண்ட கனவு தற்போது நனவாகிக் கொண்டிருக்கின்றது தான்!!
அந்தி மாலைப் பொழுதில்..
அழகிய பூஞ்சோலை நடுவே..
அழகியின் அருகில்..
அழகன் ஒருவன் நின்றிருக்க..
அவள் காதோரத்தில் நர்த்தனம் ஆடிய..
கல் ஜிமிக்கியை தன் நாவினால் சுண்டி..
காது மடல்களை கவ்வி..
சங்கை நிகர்த்த வெண்மை கொண்ட..
அந்த வெண்ணை கழுத்தில்..
அழுந்த முத்தமிட்டு கொண்டிருந்தான்..
வினய் விஸ்வேஸ்வரன்!!
தந்தையுடன் பேசிவிட்டு அவள் மன சுணக்கத்துடன் படுத்திருக்க, கனவில் கண்ட இந்நிகழ்வினால் அவள் பதறி எழுந்தாள்.
அதன் பிறகு தூக்கம் வராமல் தான் காலை பத்மாவுடன் சேர்ந்து கொண்டாள். 'எப்படியும் இன்று இவனை காண மாட்டோம் எவ்வாறு இந்த நிகழ்வு நடக்கும்' என்று மனதுக்குள் ஒரு நிம்மதி பரவ.. அதற்குப் பின்தான் இவள் லீனாவுடன் வெளியில் வந்தது.
ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் அந்த விதியின் செயலோ!! இல்லையென்றால் எப்பொழுதும் வாரக்கடைசியில் கெஸ்ட் ஹவுஸ் செல்பவன் சில நாட்களாக ஒரு பெண்ணின் அதரங்கள் கொடுத்த இன்பத்தினால் அவற்றையெல்லாம் துறந்திருப்பானா? இல்லை என்றால் தற்செயலாக இந்த மாலுக்கு வந்தவனின் கண்களில் அவள் தான் மாட்டியிருப்பாளா?
தன் கழுத்தில் புதைந்திருந்த அவன் முகத்தை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தவள் பொசு பொசு என்று மூச்சு வாங்க அவனை முறைத்து பார்த்தாள்.
"நான் உன்கிட்ட அத்துமீற கூடாதுன்னு இருந்தாலும் நீயே என்னை உசுப்பேத்தி விடுறேள் அம்சா மாமி.." என்று கூறி அவனை கேட்டு அவள் முகத்தை திருப்பிக்கொள்ள.. "ம்ஹூம்.. இதெல்லாம் எங்கிட்ட கூடாது மாமி" என்று அவள் தாடையைப் பிடித்து தன் பக்கம் முகத்தைத் திருப்பியவன் ஒற்றை விரலால் அவள் முகத்தை அளந்தவாறே, "என்கூட என் கார்ல அதுவும் தனியாக வந்துகிட்டு இருக்க.. ஆனாலும் உன் வாய் குறையவே இல்லை.. இந்த மாதிரி பேசும் உன் வாய்க்கு..." என்று அவன் இழுக்க அவசரமாக இரு கைகளாலும் தன் வாயைப் பொத்திக் கொண்டாள்.
"அந்த பயம் இருக்கட்டும்!!" என்று நமட்டு சிரிப்புடன் அவன் கூற.. "இனிய உங்களாண்ட இந்த மாதிரி கார்ல வரவே மாட்டேன்" என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர..
"ஆஹான் அப்படியா மாமி?" என்று தன் உதட்டை மடித்து அதரங்களுக்குள் சிரிப்பை மறைத்தவாறு அவளை பார்த்தான்.
இவன் சிரிப்பே சரியில்லையே என்றவாறு அவள் பயத்துடன் அவனை பார்க்க..
ஒன்றும் கூறாமல் அவளை, அவள் தங்கியிருந்த வீட்டின் முன் இறக்கி விட்டவன் "சீ யூ டுமாரோ மாமி" என்று கேட்டு பறந்தான்.
மறுநாள் காலை அவளை அழைக்க கேப் வந்திருக்க, அனைவரிடம் சொல்லிக்கொண்டு அதில் அமர்ந்தவள் அதிர்ந்துதான் போனாள்.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவாறு அவளைப் பார்த்து உதடுகள் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தான் வினய் விஸ்வேஸ்வரன்..