மோகங்களில்… 23
அப்சரா பேசிய பேச்சில் திடுக்கிட்டது துருவ் மட்டுமல்ல அங்கு இருந்த மற்றவர்களும் தான். அனு தன் பேசுபவளை வெறுமையாக பார்த்தாலும் மனதில் தாள மாட்டாத வருத்தம்! அனைத்தையும் துருவின் புஜத்தை பிடித்து அதனில் காட்டினாள். அவனும் தன் புஜத்தை பற்றிய அவளது கையை ஆதரவாக பற்றிக் கொண்டான்.
“ச்சீ..” என்று அவள் முகத்தருகே வெறுப்பை உமிழ்ந்தவன் “கடந்த இரண்டு மாசமா நாங்க ரெண்டு பேரும் ஒரே அறையில் தான் இருக்கோம். ஆனால் மனச அளவில் மட்டும் தான் இவ என் பொண்டாட்டி.. உடல் அளவில் இல்லை!” என்று அந்த பொண்டாட்டியை அழுத்தமாக கூற உடைந்து அவன் புஜத்திலேயே முகத்தை வைத்து அழுதாள் அனு.
“ஏய் அனுமா.. யாரோ எவளோ பேசினால்.. நீ இப்படி அழுவியா?” என்று கடிந்தான் அவளை.
“அம்மா இங்கே நிற்கிறவங்களை கூப்பிட்டு வந்த வழியை திரும்ப போயிடுங்க.. இனி எக்காலத்திலும் இவங்க என் வாழ்க்கையில் கிடையவே கிடையாது. நுழையவே முடியாது. முடிந்து போன அத்தியாயம் இவங்க. இவங்களுக்கும் எனக்கும் சட்டபூர்வமா டிவோர்ஸ் ஆயிடுச்சு. இந்த ஆறு மாசமா கனடாவில் என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.. அதோடு கூட நீங்க காட்டுனீங்களே சிங்கப்பூர் பீச் ஃபோட்டோ.. அதையும் உங்க ஆச மருமக கிட்ட நோ நோ எக்ஸ் மருமக கிட்ட என்னன்னு பொறுமையா விசாரிங்க.. இதுக்கு மேல எனக்கு உங்களிட்ட நின்னு பேசு ஒன்னும் இல்ல.. என் பொண்டாட்டிய கூட்டிட்டு நான் ஹாஸ்பிடல் உடனே போகணும்” என்றவன் அவளை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு சென்றான்
சுகன் ரெடியாக காரை திறந்து வைக்க.. அதில் வசதியாக அனுவை அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டான். வைதேகி அனுவுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களோடு சென்று விட்டாள்.
இதுவரை மருமகளுக்கு துரோகம் செய்துவிட்டு மகன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து அதன் மூலம் வந்த குழந்தைகள் என்று சசிகலா நினைத்திருக்க.. அவன் கூறியவற்றில் அப்சராவின் பிம்பம் உடைந்தது.
“என்ன தைரியம் இருந்தால் இவள் வாடகை தாய்க்கு சென்று இருப்பாள்? அதிலும் அந்த பெண்ணை நட்டாற்றில் விட்டு சென்றேன் என்று மகன் கூறுகிறானே.. ஆனால் இவளோ அப்படி எல்லாம் இல்லை என்கிறாளே.. இது உண்மை எது பொய் என்று புரியாமல் அவர் தலையை பிடித்துக் கொண்டு நிற்க..
“அத்த.. என்ன த்தை.. இப்படியே நிக்குறிங்க.. வாங்க த்தை போகலாம். உங்க பையன் பொய் சொல்றார். அதெல்லாம் நான் வந்து நிரூபிக்கிறேன்.. அவ என் கிட்ட பத்து லட்சம் வாங்கியது உண்மை. உங்க பையன் பொய் சொல்லலைனா அவ தான் அவரை நம்ப வச்சு உங்க புள்ள கூட ஒட்டிகிட்டு இருக்கணும். எல்லாத்தையும் நான் தாரதி ஹாஸ்பிடல் நிரூபிக்கிறேன் வாங்க”
என்றாள் அப்சரா..
‘எந்த பக்கம் பேசுவது என்று தெரியாமல்.. அப்சராவோடு அனு அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நோக்கி இவர்களும் விரைந்தனர்.
அப்சரா துருவின் மீது உள்ள கோபத்தை எல்லாம் கொட்டுவதற்காக அன்று திலீப் என்ற நபருடன் பழகினாள். பழகிய பத்தாவது நாளே அவர்களது பழக்கம் படுக்கை வரைக்கும் செல்ல.. “இதெல்லாம் நம்மள மாதிரி ஹைஃபை சொசைட்டியில பழக்கம். அப்பதான் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியும்!” என்று ஏதேதோ பேசி இவளை சரிகட்டி படுக்கையில் சரித்தான். அப்சராவும் சரிந்தாள்!!
அதன் பிறகும் அவன் லிவினில் வாழலாம் என்று அழைத்தானே ஒழிய முறையாக திருமணம் மனைவி என்ற அந்தஸ்து தர மறுத்து விட்டான். அவனிடம் கோபங்கொண்டு சிங்கப்பூரிலிருந்து மீண்டும் கனடாவிற்கு வந்தாள்.
அதற்குப் பின் அவள் பழகிய ஆண்கள் எல்லாம் வெறும் அவளது உடல் அழகை ஆராதிக்க மட்டுமே விரும்பினர் கட்டிலில்.. மாறாக குடும்பம் என்று அங்கீகாரத்தை தர மறுத்து நட்டாற்றில் விட்டு சென்றனர். இவள் எப்படி அனுவை நடுத்தெருவில் விட்டு சென்றாளோ அப்படி!! அதே மாதிரி அனுவுக்கு செய்த பாவம் தான் என்னவோ இவளுக்கே திரும்ப வந்தது.
ஆனாலும் திரும்ப துருவிடம் செல்லவே கூடாது என்று மீண்டும் முயன்று ஏற்கனவே விவாகரத்து ஆனவனுடன் நிச்சயம் வரை சென்று விட்டாள். அதற்கு அவளது அப்பா அம்மா துணை நின்றனர்.
அவர்களது ஹைஃபை சொசைட்டியில் மகள் தனியாக இருப்பதைவிட குடும்பம் என்று ஒருத்தனுடைய இருந்தாலே போதும் என்று நினைத்தனர். நிச்சயம் நல்ல விமர்சையாகவே நடத்த.. துருழ்வை வென்று விட்டோம் என்று இறுமாப்பில் இருந்தவளுக்கு பேரிடியாய் வந்தது அந்த செய்தி!
விவகாரத்து பெற்றவன் மீண்டும் தன் முன்னாள் மனைவியிடமே சென்று விட்டான். போகும்போது ஃப்ரீ அட்வைஸாக “நீனும் முடிந்தால் உன் பழைய கணவனிடமே போய்விடு! என்னால் அவளை மறக்க முடியல.. சாரி” என்று..
கனடாவில் அப்சரா பற்றிய பேச்சு எல்லாம் இருக்கு அங்கு இருக்க பிடிக்காமல் மன மாற்றத்திற்காக செல்கிறேன் என்று இவள் கோவா வந்திருந்தாள். அவள் நண்பர்கள் குஜாலாக தான்.
நண்பர்களோடு இருந்தாலும் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தவள் சசிகலாவை எல்லாம் அப்பொழுது கண்டு கொள்ளவே இல்லை.
ஆனால் இந்த குழப்ப நிலையில் சசிகலாவிடமிருந்து அவளுக்கு போன் வந்தது.
சசிகலாவோடு பேசும் போது தான் “நாம் ஏன் பழையபடி துருவோடு இருக்க கூடாது? எப்படியும் நம் நடவடிக்கைகளை அவன் கண்டு கொள்ள மாட்டான்.. அவனையும் நாம் கண்டு கொள்ள வேண்டாம்! இப்படி நண்பர்களோடு உல்லாசமாக இருந்து கொள்ளலாமே..” என்று முடிவு எடுத்தாள்.
கூடவே எப்படியும் அந்த அபனு பெண் இன்னும் கர்ப்பமாகத்தான் இருப்பாள். குழந்தைகளையும் அவளிடம் வாங்கி அத்தையிடம் கொடுத்துவிட்டு நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்று தப்பு கணக்கோடு சசிகலா கூப்பிட்டவுடன் வந்து விட்டாள் சென்னைக்கு.
குழந்தை பிறந்தவுடன் அனுவை எப்படியாவது விரட்ட வேண்டும் என்ற நோக்கோடு தான் சசிகலாவை தன் கையிலேயே பிடித்து வைத்திருந்தாள் அப்சரா.
அனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் பயந்து கொண்டே வெளியில் நின்றிருந்தான் துருவ். சுகன் அவன் கூடவே இருக்க.. வைதேகி அனுவோடு லேபர் அறையில் தான் இருந்தாள்.
அவ்வப்போது தாரதி வெளியில் வரும் போதெல்லாம், அவளை பிடித்துக் கொண்டு அத்தனை கேள்விகள் கேட்டு.. அவளை ஒரு வழியாக்கி விட்டான் துருவ். கடைசியாக அவளை பார்த்ததும் வர.. சுகனை பார்த்த தாரதி “இவரை தயவு செய்து ஹாஸ்பிடல்ல விட்டு வெளியில கூட்டிட்டு போய்டுங்க சார். நான் டெலிவரி முடிஞ்ச உடனே ஃபோன் பண்றேன். அதுக்கு அப்புறம் கூட்டிட்டு வாங்க.. இவர் இப்படி என்ன டென்ஷன் பண்ணாருன்னா.. நான் எப்படி போய் அவளுக்கு ரிலாக்ஸ் டெலிவரி பார்க்கிறது?” என்றாள் அதில் கோபம் இருந்தாலும் அதற்கு பின்னே இவர்கள் அன்பை புரிந்து கொண்ட பாங்கு!
கடைசி ட்ரைமஸ்டர் செக்கப்புக்கு வரும் பொழுதே இவர்கள் இருவரின் பிணைப்பை பார்த்து முதலில் அதிர்ந்தாலும்.. இது தான் இறை கட்டளை என்று அமைதியாக ஏற்றுக் கொண்டாள் தாரதி. ஆனாலும்.. மனதின் ஓரம் அப்சராவை திட்டினாள் “இப்படி ஒரு அன்பான கணவனை விட்டு விட்டாயே.. அப்சரா” பலஎன்று!!
அடுத்த நான்கு மணி நேரம் துருவ்வை கலங்கடைத்து கதறடித்து வாழ்க்கையில் இப்படி ஒரு நிமிடத்தை கடக்க முடியாமல் கடக்க வைத்து தன் இரு குழந்தைகளையும் சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தாள் அனு. அவள் பேசியது போலவே இரண்டுமே ஆண் குழந்தைகள்!!
“துருவ் கங்க்ராட்ஸ்.. உங்களுக்கு ட்வின்ஸ்..” என்று தாரதி முடிக்கும் முன்னமே “அதுதான் தெரியுமே டாக்டர். அனு எப்படி இருக்கா?” என்று இவன் பதற்றத்தோடு கேட்க..
“என்ன குழந்தைகள்னு கூட கேட்க மாட்டீங்களா துருவ் சார்? அனு மட்டும் போதுமா?” என்று சிரிப்போடு கேட்டாள் தாரதி.
“அப்படி இல்லை.. எனக்கு.. எனக்கு
முதல்ல என் அனுவோட ஹெல்த் முக்கியம்! அதை சொல்லுங்க.. அவ எப்படி இருக்கா? பாருங்க என் ஹேண்ட்ஸ் எப்படி ஷிவராகுதுனு” என்று காட்ட..
“எப்படி இருந்த துருவ் இப்படியா?” என்று சுகனும் தாரதியும் விழி விரிய இந்த அதிசயத்தை பார்த்தார்கள்.
பின் புன்னகையோடு “அனு சோ லக்கி.. அனுவும் நல்லா இருக்கா.. குழந்தைகளும் நல்லா இருக்காங்க.. சுகப்பிரசவம் தெரியுமா? மூணு நாள் எழுந்து உட்கார்ந்து நடந்துருவா.. கவலைப்படாதீங்க! இன்னும் ஆஃப் அவர்ல நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க.. குழந்தைங்க மட்டும் ஒரு பத்து நாள் இன்குபேட்டர்ல இருக்குற மாதிரி இருக்கும்”என்று கூறினாள்.
“அதெப்படி முடியும் பத்து நாள் எல்லாம் ஜாஸ்தி.. என்னால விட முடியாது” என்று அதுக்கும் எகிறி கொண்டு வந்தவனை பார்த்த தாரதி அயர்ந்து போக…
“சார்.. ப்ரீமெச்சூர் பேபி சார்.. கூடவே வெயிட்டும் கொஞ்சம் கம்மிதான். அதனால பத்து நாள் இன்குபேட்டர்ல வைத்து தான் ஆகணும்! அப்பப்ப ஃபீட் பண்ண மட்டும் கொண்டு வந்து கொடுப்பேன் ஓகேவா..” என்று அகற்று காட்டாக கேட்டதும் தான் வேற வழி என்று தலையசைத்தான் துருவ் வல்லப்.
துருவை கடந்து போனாள் தாரதி இரண்டு அடி தான் சென்றிருப்பாள். மீண்டும் அவன் முன் நின்று துருவை பார்த்து “அடுத்த பிரசவத்துக்கு தயவு செய்து என்னிடம் வந்து விடாதீங்க.. வேற ஹாஸ்பிட்டல் பார்த்துக்கோங்க!” என்று விட்டு செல்ல.. துருவின் முகத்தில் மந்தகாச புன்னகை!!
செல்லும் தாரதியை பார்த்து “அப்படியெல்லாம் போக முடியாது டாக்டரே! கண்டிப்பாக உங்ககிட்ட தான் வருவோம். எங்களுக்கு நீங்க தான் ரொம்ப ராசியானவங்க.. ஏன்னா அடுத்தும் ட்வின்ஸ் தான்!” என்று கத்தி சொல்ல, ஒரு நிமிடம் அதிர்ந்த தாரதி “ஸ்ரீராமா என்னை காப்பாத்து..!” என்று வேகமாக ஓடிவிட்டாள்.
அனுவை சென்று பார்த்தான் துருவ். வதங்கி வாடிய மலரைப் போல படுக்கையில் கிடந்தாள் அனு. பின்னே.. பிரசவம் என்றால் சும்மாவா?
தன் உயிரை கொடுத்து புது உயிரை பிறக்க வைப்பது என்றால் சும்மாவா என்ன? இப்பொழுது டெக்னாலஜி பெருகி இருந்தாலும் பெண்களுக்கு அது மற்றொரு பிறப்பே!!
அனு ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க..
“கதறடிச்சிட்ட டி!” என்று அவள் கன்னத்தைச் செல்லமாக கடித்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான் பல நிமிடங்கள்!!
பின் அவள் அருகிலேயே அணைவாக அவளை அணைத்தப்படியே சிறிது நேரம் படுத்திருந்தான் துருவ்.
இருவரின் ஆழ்ந்த பிணப்பை பார்த்தவாறு கதவை சாற்றி விட்டு வெளியில் வந்து நின்றாள் வைதேகி அவள் அருகே வந்து நின்ற சுகன் அனுவை பற்றி விசாரித்தான்.
மெல்ல அவனைப் பார்த்த வைதேகி “லவ்வபிள் கப்பிள்ஸ் இல்ல.. சாரும் மேடமும்!” என்று கேட்க.. ஆமாம் தலையாட்டி ஆமோதித்தான் சுகன்.
ஆனால் இந்த லவ்வபிள் கப்பில் நாளைக்கு கதற போகிறார்கள் என்று யார் அறிவார்கள்??
Ahh….. so lovey dovey 🥰
Pirichu vida poringala😡😡
என்னடா பண்ணி வெச்சிங்க?????
இந்த பொறுக்கி பிள்ள, சொல்றதை நம்புதே இந்த அம்மா🤷🤷🤷🤷
பையனை நம்பமா🤦🤦🤦🤦😳