வேலை செய்தவாறு சேரனையும் பார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா
இவனுக்கு என்தங்கச்சிகிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு அப்படி என்ன பேசிட்டுஇருக்கான் ஒன்றும் புரியாமல் வேலையாக அவனையும் கண்காணித்துக்கொண்டிருந்தான்
சூர்யாவை விட அழகருக்குதான் எள்ளும்கொள்ளுமாக கொதித்தது
அவன்கிட்ட அவளுக்கு என்னபேச்சு வேண்டிகிடைக்கு
கடுப்பாக பார்த்தான்
மனிஷா வெகுநேரம் சேரனிடம் பேசிவிட்டு சேரனைஅழைத்துக்கொண்டு சூர்யாவிடம் போக அவர்களைபார்த்தபடி வந்த அழகர் அருகில்வரவும்
நீங்க இங்க என்னபண்றீங்க நீங்கபோய் வேலையைபாருங்க ப்ரோகொஞ்சம் தனியா வாங்க உங்ககிட்ட பேசணும் சூர்யாவையும் கையோடு அழைத்துக்கொண்டுபோனாள்
ஒன்றும் புரியாமல் சூரியா மனிஷவோடு செல்ல அழகர்காதில் விழாதவாறு வெகு தூரம் அழைத்துச்சென்றாள்
இவனை எதுக்கு கூட கூட்டிட்டு போறா ஒருவேளை இவளைஸபுடிச்சு பொண்ணுபாக்குற ஐடியாவா இருக்காது நம்மவீட்லஏத்துக்கமாட்டாங்க மாமாவும் ஒத்துக்க மாட்டாரு வேற ஏதாவது விஷயமா இருக்கும் யோசைனையோடு அழகர் வேலைசெய்ய
தாராவோட ஹஸ்பண்ட் பாக்கனும்ம் சொன்னிங்களே தரவோட ஹஸ்பண்ட் இவர்தான் சூரிய பிரகாஷ் லண்டன் மெடிக்கல்....காலேஜ் டாக்டர்
சூர்யாவை அறிமுகப்படுத்தவும் அவளைஆங்கிலத்தில் பேசுவது கொஞ்சம் புரிந்தது முழுதாக புரியவில்லை ஆனால் பெரியடாக்டர் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது
லண்டனை விட்டுஇங்குவந்து எதற்கு வேவைபார்த்துக்கொண்டிருக்கிறார் ஆச்சரியமாகஅவனைப்பார்த்தான்
வணக்கம் சார் மாமாசொன்னதை கேட்டு எவனோ ஒரு அரசியல்வாதி அடியாள்தான் தாரவை கல்யாணம்பண்ணிருப்பாங்க நினேச்சேன்
எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிற நீங்கள் கல்யாணம் பண்ணிப்பீங்கனு நான்நினைச்சு கூட பாக்கல அதுவும் வெளிநாட்டிலருந்து எங்க ஊருவரைக்கும் வந்து இப்படி கஷ்டமான வேலலயெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க நிஜமாவேஉங்களை நினைச்சு ஆச்சரியமா இருக்கு
நீங்க பெரியடாக்டர்னு சொன்னாலே மாமா மறுப்புசொல்லாம ஏத்துக்குவாரே அப்புறம் எதுக்குசார்
இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க சேரன் கேட்க சூர்யா சிரித்தான்
எவ்வளவு பெரிய டாக்டராஇருந்தாலும் அவங்க னவீட்ல ஏத்துக்கணுமே என்னோட குடும்பத்தைபத்தி தெரிஞ்சாலே உங்க மாமாவுக்கு வேப்பிலைஅடிக்காம சாமிவரும் அதனாலதான் எதுவும் சொல்லாமலே இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் அதுவும் என்பொண்டாட்டிக்காக
என்ன சார் சொல்றீங்க உங்ககுடும்பத்தை பத்தி தெரிஞ்சா மாமா எதுக்கு சாமியாடபோறாரு எல்லாபெத்தவங்களும் பொண்ணு வசதியான வீட்ல வாழனும்னுதான் நினைப்பாங்க நல்லாபடிச்சுருக்கீங்க டாக்டர்வேலையும் செய்றீங்க அப்புறம் எதுக்கு என் மாமா சாமியாடுவாரு ஒன்னும்புரியல
வீட்ல சம்மதிக்காட்டி நான் சம்மதிக்கவைக்குறேன்
அது இருக்கட்டும் உங்க மாமாவோட சிஸ்டர்
இந்த வீட்டுக்கு வந்தா உங்கமாமா என்னசெய்வாரு சூர்யா கேட்டதும் உச்சுகொட்டினான் சேரன்
அவங்களுக்கு அந்தம்மா மேல ரொம்பகோபம்
"அவங்கவந்தா வெட்டுவேன்குத்துவேன்" சொல்லிட்டு இருக்காரு
எப்படித்தான் ரெண்டுகுடும்பமும் சேரபோகுதோ தெரியல சோகமாக கூற
உங்க மாமா இப்படிசொன்னதால தான் நானும் என் குடும்பத்தை இங்ககூட்டிட்டுவராம இருக்கேன்
எப்படியாவது மாமராணுமனசை மாத்துனபிறகுதான் என்குடும்பத்தை கூட்டிட்டு வரணும் னு சூர்யா கூறியதும் அதுவரை வேடிக்கைபார்த்தவாறு கேட்டுக்கொண்டிருந்தவன் அதிர்ந்துபோய் சூர்யாவைபார்த்தான்
அய்யோ "சார்.....நீங்க . அப்போ அழகம்மாகவோட பையனா நீங்க உங்க தாய்மாமா பொண்ணதான் கல்யாணம்பண்ணிருக்கீங்க சேரன் அதிர்ச்சியோடு கேட்க சூர்யாதலையாட்டினான்
அதிர்ச்சியில் வாயைமூடிக்கொண்டு தூரத்தில் வேலைசெய்து கொண்டிருக்கும் அழகரை அதிர்ச்சியோடுபார்த்தவன் நீங்க யாருன்னு மாமாவுக்குதெரிஞ்சாலே அரிவாளை தூக்கிடுவாரே
தாலிவேற கட்டிருக்கீங்க ஐயோ இது வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும்
அதனாலதான் நான் யாருன்னுசொல்லாம இருக்கேன் இப்பசொல்லுங்க என்பொண்டாட்டிய அவபுருஷன் கூட எப்படி சேர்த்து வைப்பீங்க உங்களால சேர்த்து வைக்கமுடியுமா சிரித்தவாறு கேட்க
ரொம்ப கஷ்டம்தான்
ஆனா சேத்தேஆகணும் இல்லாட்டி என்வாழ்க்கைநாசமா போகும் எல்லாரும் சேர்ந்து என்வாழ்க்கையில் கும்மியடுச்சுருவாங்க
அது சரி நீங்க
இங்க இருக்குறது உங்கம்மா அப்பாவுக்கு தெரியுமா உங்ககூட பொறந்தவங்க எத்தனை பேர்
என்கூட பிறந்தது ரெண்டுபேர் ஒரு தம்பி ஒரு தங்கச்சி அந்ததங்கச்சியும் வேறயாருமில்ல இதோ இதுதான் மனிஷாவை காட்ட
இன்னும் அதிர்ந்துபோய் நெஞ்சை பிடித்துக்கொண்டான்
அப்போ வீட்ல இருக்குற அந்தவக்கீலு உங்க தம்பின்னு மட்டும் சொல்லிடாதீங்க என்னால அதிர்ச்சியைதாங்கமுடியாது அவன்கூறியதும் அதற்கும்சிரித்தான் சூர்யா
என் தம்பிதான் கூறியதும் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்
அடப்பாவிகளா மொத்தகுடும்பமும் இங்கதான்இருக்கா
ஐயோ நீங்க யாருனு மாமாவுக்கு தெரிஞ்சா பெரியபிரச்சினை வருமே ரெண்டுபேரையும் சேர்த்துவைக்காட்டி உங்கபொண்டாட்டியை என்தலையில் கட்டிருவாஙகளே நான்என்னபண்ணுவேன் எப்படி சேத்துவைப்பேன் சேரன் சோகமாக புலம்ப
எங்க குடும்பத்தை சேர்க்கறதுக்கு நாங்களே அவ்வளவா ரிஸ்க் எடுக்கல நீஎதுக்கு சகல இவ்வளவு பீல்பண்றிங்க
என்னபண்ணசொல்றீங்கசார் நான் உங்க பொண்டாட்டிய கட்டிக்கிட்டா என்னை நெனச்சிட்டு இருக்குற என்பொண்டாட்டி செத்துப்போவா அவளுக்கு என்ன பதில்சொல்றது
என்ன பங்காளி சொல்றீங்க உங்க மனைவி இறந்துட்டதா சொன்னாங்க அப்புறம் எப்படி சூர்யா புரியாமல் கேட்க
அண்ணா அருந்ததியைபார்க்க ப்ரெண்டுனு சொல்லிட்டுவந்துச்சே மஞ்சுளானு ஒரு பொண்ணு அந்த பொண்ணுக்கும் இந்தப்ரோவுக்கும் கனெக்சன் ஆயிருக்கு அண்ணிய அவங்க புருஷன்கூட சேர்த்து வச்சுட்டா இவங்க ரூட் கிளியர் ஆயிடும் எப்படியாவது அவங்கப்பாட்ட பேசி சரிபன்னிருவாரு அதனால்தான் உங்க பொண்டாட்டிய பார்சல்பன்ன இவ்வளவு வேலை பார்த்துட்டு இருக்கார் சிரித்தவாறு மனிஷா கூற
அப்படியா என்பதுபோல் சூர்யா பார்க்க சேரன்தலையாட்டினான்
ஓகே ப்ரோ நாங்களும் நம்ம குடும்பத்தை சேர்க்கறதுக்குத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம் நீங்களும் ஹெல்ப்க்கு வந்தா எப்படியாவது சேர்த்துடலாம ஒன்னும் கவலைப்படாதீங்க உங்க மாமாபாய்சன் குடிச்ச சாகுறமாதிரி மிரட்டி தாலிகட்டவச்சாலும் அந்தபாய்சனை அவர் வாயில ஊத்தி கொன்னுட்டு கூட என் பொண்டாட்டிய கூட்டிட்டுபோவேனே தவிர யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன்
சூர்யா கூற
சேரன் சிரித்துவிட்டான்
" மாமாவோட உசுரைவச்சு ஊஞ்சலாடுறதுலயே குறியா இருக்கீங்க சார்"
அட என்ன ப்ரோ என்னைவிட ரெண்டு வருஷம் நீங்கமூத்தவர் அதுவும் நம்மசொந்தம் வேறுசாருமோருனு சொல்லாம உரிமையா அண்ணன் தம்பினு கூப்பிட்டுக்கலாம்
இங்க யாரும் சப்போர்டா இல்லையேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தோம் இப்போ நீங்களும் வந்துட்டீங்க எல்லாரும்சேர்ந்து பிரிஞ்ச குடும்பத்தை ஒன்னு சேர்த்துடலாம் சூர்யா கைநீட்ட சேரனும் சேர்ந்துகொண்டான்
தம்பி நான் அழகாம்மாகிட்ட பேசணும் அவனிடம் அனுமதிவாங்கி அழகம்மாவிடம் பேச அவரோகண்கலங்கினார் என்ன மன்னிச்சிடுப்பா உங்கப்பா ரொம்பநல்லவர்தான் ஆனா உங்க தாத்தாவை எனக்குசுத்தமா பிடிக்கல உங்கதாத்தா மாதிரிதான் உங்கப்பாவும் கெட்டவராஇருப்பாரோனு பயந்துட்டுதான் அவர்கிட்ட சொல்லாம வீட்டைவிட்டு வந்துட்டேன்
அதனால இவ்வளவு பிரச்சினையாகும் நினைக்கல என்னை மன்னிச்சிருப்பா இன்னும் வெள்ளச்சாமி மாமா என்மேல கோவமாதான் இருக்கார் போல
அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா அப்பா னகூட சாதாரணமாகதான் இருக்காரு மாமாதான் ரொம்ப கோபத்தில் இருக்காங்க எப்படியாவது சரிசெஞ்சு உங்களை இங்ககூட்டிட்டு வந்தாதான் என்வாழ்க்கை சரியாகும் ஒன்னும் கவலைப்படாதீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டு வர முயற்சி பண்றேன்
அவரிடம் பேசிவிட்டு போனைவைக்க அழகர்வந்தான்
என்ன ரொம்ப நேரமா மூணுபேரும் குசு குசுனு பேசிட்டு இருக்கீங்க என்னாச்சு புரியாமல் கேட்க
ஒன்னும் இல்ல இங்க வந்துஉட்காரு மச்சான் உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் சேரன் அழகரை இழுத்து அமரவைத்ததும் அண்ணன்தங்கை இருவரும் அதிர்ச்சியாகிவிட்டனர் இவனிடம் உண்மையைகூறினால் பேயாட்டம் போடுவானே போட்டு வைத்திருந்த திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகுமே
நல்லவன் என்று இவனிடம் மறைக்காமல் சொன்னது தவறோ என்றுகூடயோசித்தாள் மனிஷா கலக்கமாக சேரனின் கையை பிடிக்க அதை பார்த்த அழகருக்கு பிபி எகிறியது
ப்ரோ ப்வீஸ் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ளீஸ் வாங்க தவிப்போடு மனிஷா சேரன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போக அவன் இன்னொரு கையை அழகர் பிடித்துக்கொண்டான் தனியா போய் பேசுறளவுக்கு அப்படி என்ன ரகசியம் எதுவாஇருந்தாலும் இங்கே பேசலாம்
மாமா நீ என்னமோ சொல்ல வந்தியே என்ன சொல்ல வந்த
இப்போ சொல்லு
ப்ளீஸ் அழகு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நாங்கதனியா பேசணும் நாங்கபேசி முடிச்சபிறகு நீங்கபேசிக்கோங்க மறுபடியும் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போக இப்போது சேரன் கையைவிட்டுவிட்டு மனிஷாவின் கையை பிடித்துக்கொண்டான்
நீங்க வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் ரெண்டுமணி நேரமா பேசிட்டு இருக்கீங்க அப்படி என்னதான் பேசினீங்க
அவ்வளவுநேரம் பேசுறளவுக்கு அப்படி என்ன ரகசியம் என்னைஅனுப்பி னவச்சிட்டு யாருக்கும் தெரியாம என்னரகசியத்தை பேசுறீங்க
ஐயோ நாங்க எந்த ரகசியமும் பேசல சாதாரணமாத்தான் பேசபோறோம் தயவு செஞ்சு கையை விடுங்க
அதெல்லாம் முடியாது நீங்க ஏதோ பித்தலாட்டம் பண்றமாதிரி இருக்கு என்னை ஏமாத்தறீங்களா எது பேசுறதா இருந்தாலும் இங்கேயே பேசுங்க
மாமா என்னமாமா நீயும் அமைதியா இருக்க
இவங்க உங்ககிட்ட என்னபேசினாங்க நீங்கஎன்னசொல்ல வந்தீங்க இவங்க முழிக்கிறதை பார்த்தாலே சந்தேகமா இருக்கு என்னாச்சு மாமா
சேரன் தயக்கத்தோடு நிற்க அழகருக்கு முன்னால் எதையும் காட்டிக் கொள்ளமுடியாமல் மனிஷா கெஞ்சினாள் கண்களால் தயவுசெஞ்சு சொல்லிடாதீங்க கெஞ்சலாக கண்ணசைத்தாள்
சொல்லு மாமா என்கிட்ட என்னபேசணும் மனிஷா சூர்யாவை சந்தேகமாகபார்த்தவாறு அழகர் கேட்க
எல்லாம் கல்யாணவிஷயம்தான் கல்யாணம் ஏற்பாடு நடந்துட்டு இருக்குல .
சொந்தபந்தம் எல்லாருக்கும் சொல்ல வேணாம்மா அதான்மாமா பக்கம் இருக்கிற சொந்தம் அழகிஅம்மாதானே இத்தனை வருஷமும் ஏதோ கோவத்துல பிரிஞ்சுட்டாங்க இன்னும் எத்தனை நாளைக்கு கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இருக்கமுடியும் அதான் என் கல்யாணத்துக்கு அழகம்மாவை வரசொல்லலாமானு ரெண்டுபேரும் சொன்னாங்க அண்ணன் தங்கை இரண்டுபேரையும் சேரன் கோர்த்துவிட அவர்களோ ஏண்டா இப்படி செஞ்ச உனக்குஎன்னடா பாவம் செஞ்சோம் என்று ரீதியில் சேரனை முறைத்தனர்
அதுவரை அமைதியாகஇருந்த அழகர் அத்தை என்றுகூறியதும் கோவம்பொத்துக்கொண்டு வந்தது
அவனுக்குளளும் அப்பாவின் ரத்தம் ஓடுகிறதே
ஒரே நாளில் அனெப்படிமாறுவான்
மாமா இவங்கரெண்டு பேர்கிட்டயும் சொல்லிடுங்க
என்னோட குடும்பவிஷயத்தில் அவங்க தலையிட கூடாது
என குடும்பத்தைபற்றி இவங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்கிறதால மன்னிச்சு பொறுமையாபோறேன்
தேவையில்லாத ஆளுங்களை எல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு வரனும்னு யாராவதுபேசுனிங்க எவனும்தேவையில்லைனு எல்லாத்தையும் வெட்டிபோட்டுட்டுபோயிருவேன்
அவங்க எப்போ சிக்கினாலும் அந்த குடும்பத்தோடசாவு என்கையாலதான் நடக்கும் அவங்கள மட்டும் விடமாட்டேன் அவங்க புள்ளைங்க அத்தனைபேரையும் வெட்டிட்டு அவங்க வம்சத்தையே உருதகுலைச்சிட்டு தான் போவேன்
இதுதான் லாஸ்ட் வார்னிங் இனிம அந்த ஓடிப்போனா ஓடுகாளியை பத்தி பேசுனிங்க
பேசுறதுக்கு நாக்கு இல்லாம பண்ணிவிடுவேன்
ஆத்திரம் கோபம் ஒன்றுசேர
அண்ணன் தங்கை இருவரையும் முறைத்துவிட்டு செல்ல
அண்ணன் தங்கை இருவரும் அவன் போகும் வழியை பார்த்துக்கொண்டிருந்தனர்
என்ன பங்காளி பையன்கொஞ்சம் நல்லவனா இருப்பான் பார்த்தேன் அவங்கப்பனை விட பெரியகேடியா இருக்கான்போல சூர்யா அதிர்ச்சியோடு கூற
அட நீ வேற தம்பி எவனாவது சும்மா வாயில எச்சரிச்சிட்டுபோறான் இதுவே அவங்கப்பனுக்கு தெரிஞ்சா
தலையை எடுத்துட்டுதான் மறுபடியும் பார்ப்பாரு
எப்படி ரெண்டு குடும்பத்தை ஒன்னுசேக்குறதுன்னு எனக்கே தெரியல
பேசாம நீ கூப்பிட்டுபோய் தாலிகட்டி வீட்டோடவேவைச்சுருக்கலாம் எதுக்கு இப்படி இங்க விட்டுட்டு
அல்லோலபடுறிங்க
சேரன் கூற
எல்லாம் அம்மாவுக்காகதான்
கூறி சூர்யாவுக்கு அம்மாவை இங்குகொண்டு வர முடியுமா என்று சந்தேகம்தான் வந்தது