அரன் 23

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 23

 

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு…

 

“ஏய்‌ மித்து.. மித்து…” என்று‌ அரவிந்த் ஏலம் போட்டுக் கொண்டிருக்க மாடியில் ஏற முடியாமல் தனது பெரும் வயிற்றை தூக்கிக் கொண்டு ஏறி வந்த மனைவியை பார்த்தவன் அதற்கும் திட்டினான்.

 

“இதோட ஏண்டி ஏறி வர மேல.. நான் கீழ வர மாட்டேனா?” என்று!

 

“நான் பிரக்னண்டா இருக்கனா இல்ல நீ பிரக்னண்டா இருக்கியானு எனக்கு தெரியல அர்வி?” என்றதும் அவன் புரியாமல் பார்க்க “பிரக்னன்ட் லேடிக்கு தான் மூடு ஸ்விங் வரும்னு சொல்லுவாங்க.. ஆனா உனக்கு தான் இருக்கு. ஏன்‌டா இப்படி இருக்க நீனு?” அவள் திட்ட..

 

"அது என்னவோ நீ இவ்ளோ பெரிய வயிற தூக்கிட்டு வரும்போது எனக்கு பார்க்க பயமா இருக்குடி மித்து" என்று மனைவியின் கழுத்தில் புதைந்து இவன் ஆறுதல் தேடினான்.

 

"சரி சரி டைம் ஆகுது எதுக்கு கூப்பிட்ட?"

 

“இந்த டிரஸ் காம்பினேஷன் உதைக்குது டி” என்று அவன் எடுத்து வைத்ததை காட்ட.. தலையில் அடித்துக் கொண்டவள் “மாத்தி மாத்தி ஏன் வைக்கிற நீ. நான் சரியாக தான் அடுக்கி வைத்தேன்” என்று அவன் அணிவதற்கான உடையை தேர்வு செய்து கொடுத்ததும் தான் அவனுள் நிம்மதி.

 

உடை அணிந்து வந்தவனை பார்த்தவள் “கலக்குற டா அர்வி” என்று அவனை ரசித்து கன்னம் வழித்து திருஷ்டி எடுத்து சொல்ல… அதில் மெல்லிய வெட்கப் புன்னைகை அவனிடம்.

 

“இப்ப நீங்க என்னோட வைஃப் மேடம். இப்படி ரசிச்சு சொல்றதை எட்ட நின்னு சொல்லாமல் என் கிட்ட நின்னு சொன்னா நல்லா இருக்கும் தானே” என்று அவளை அணைக்க முயல.. இடையில் பெரும் வயிறு பெரும் தடையாக இருக்க இருவரும் சிரித்துக் கொண்டனர்.

 

“அப்படித்தானே அணைக்க முடியாது இப்படி பண்ணலாமே” என்று பின்பக்கமாக வந்து அவளை அணைத்துக் கொண்டு அவள் தோளில் தாடையை வைத்தவன்…

 

“ஏன் மித்து உன்னை நான் சந்தோஷமா வச்சுக்குறேனா? நல்லா பாத்துக்குறேனா?” என்று எப்பொழுதும் போல கேட்டவன் தலைமுடியைப் பிடித்து தன் முன்னால் அவன் முகத்தை இழுத்தவள் “எத்தனை வருஷமா இதையேடா கேட்ப? முடியல என்னால..” என்றதும் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி.. மூக்கோடு மூக்கு உரசியவன் “ஏன்னா.. நம்ம ஹிஸ்டரி அப்படி டி. பாரு மூணு வருஷம் ஆயிருக்கு நம்ம மூணு பேர் ஆகுறதுக்கு..” என்றதும் அவள் வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

 

"போ டா..."

 

“சரி சரி வா டைம் ஆகுது” என்று மெல்ல அவள் கையை பிடித்து அழைத்து வந்த மகனையும் மருமகளையும் கண் மற்றும் மனது நிறைய பார்த்தனர் விஸ்வநாதன் கோதாவரி தம்பதியினர். இருவரிடமும் ஆசி வாங்கிக் கொண்டிருக்கும்போதே சொக்கலிங்கமும் மல்லிகாவும் வந்துவிட..

 

“நாங்க தான் அங்க வரேன்னு சொன்னே மா..” என்று யாழினி ஆரம்பிக்குது “எதுக்குமா உனக்கு அலைச்சல்.. பக்கம் தானே.. அதான் நாங்களே வந்துட்டோம்” என்றதும் அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். 

 

இன்று அவர்களது மூன்றாவது திருமண நாள். அது மட்டும் அல்ல சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை இந்த வருடம் அரவிந்த் பிரபாகரன் பெற்றிருக்கிறான். அந்த விழாவிற்கு தான் இருவரும் தயாராகிக் கொண்டிருந்தது.

 

“பத்திரம் ஜாக்கிரதையா போங்க.. நாங்களும் பின்னாடியே வந்துடுவோம்” இவர்கள் இருவரும் அரவிந்தன் காரில் ஏறிக்கொள்ள மற்றொரு காரில் டிரைவர் போட்டு இரு பெற்றோர்களையும் வரவழைத்திருந்தான் அரவிந்த்.

 

நினைத்தது போலவே ஆன்லைன் கல்வியில் இப்பொழுது முதல் இடத்தில் இருப்பது அரவிந்தின் உழைப்பிலும் யாழினியின் அறிவிலும் உருவான “ஹயக்ரிவாஸ்” தான்!!

 

அது மட்டுமல்லாமல் ஐந்து பேரோடு ஆரம்பித்து அவர்களது ஸ்கை கன்சல்டன்சி இப்பொழுது 500 பேரை தன்னகத்தைக் கொண்டு சிறு கம்பெனியாக வளர்ந்து வருகிறது. அதனால் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது இம்முறை அரவிந்த் பிரபாகரனுக்கு கிடைத்தது.

 

அதை தொழில்துறை அமைச்சர் கொடுக்க புன்னகையோடு வாங்கிக் கொண்டவன்.. “இதுல ஒரு பாதி மட்டும் தான் எனக்கு சொந்தம். மறு பாதி.. என் மறு பாதிக்கு..” என்று யாழினியை அறிமுகப்படுத்தியவன் அவளுடனே அந்த விருதினை வாங்கிக் கொண்டான்.

 

மேடை விட்டு இறங்கும்போது அவளை கண பத்திரமாக கையைப் பிடித்து அதுவும் புடவை அவளுக்கு தடுக்கவும் இவனே புடவையின் கொசுவத்தை மறு கையால் தூக்கிப் பிடித்து அவளை இறங்க சொல்ல.. “ஐயோ அர்வி.. என்ன பண்ற எனக்கு கூச்சமா இருக்கு.. எல்லாரும் பாக்குறாங்க டா" என்றவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் படி இறங்கும் வரை அப்படியே அழைத்து வந்தான்.

 

இதையெல்லாம் இரண்டு கண்கள் மிக கோபத்தோடு பார்த்திருந்தது வேறு யாருடைய கண்கள் ஆரத்தியா தான். சிறிது நாட்கள் அண்ணனோடு ஃபாரினில் இருந்தவள் அங்கே தொழில் செய்ய பிடிக்காமல் மீண்டும் இந்தியா வந்து அப்பாவோடு இணைந்து கொண்டாள்.

 

எத்தனை மாப்பிள்ளை பார்த்தும் இதுவரைக்கும் ஒன்றும் அவளுக்கு சரியாக அமையவில்லை. அவளுக்கு பிடித்தமில்லை. இப்பொழுது அவளுக்கு கண்களில் அத்தனை காழ்புணர்ச்சி. கூடவே ஒரு சிறு ஏக்கம்! அரவிந்தின் இன்றை வளர்ச்சியும்.. கூடவே மனைவியை அவன் தாங்குவதையும் கண்டு தான்..

 

தான் மட்டும் அவனுக்கு உண்மையாக இருந்தால்.. இன்று தான் இருக்க வேண்டிய இடம் அது என்று நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. அதிரதன் அதற்குப்பின் இந்தியாவுக்கே வரவில்லை. அவனது தொழிலை முற்று முழுதாக வெளிநாட்டிலேயே பார்த்துக்கொண்டான்.

 

இவர்கள் இருவரும் அமர்ந்ததும் அருகில் இருந்த தொழில்துறையை சேர்ந்த நண்பன் ஒருவன் அரவிந்திடம் கை குலுக்கி தனது வாழ்த்தை தெரிவித்து விட்டு “இரண்டு பேரும் ரொம்ப க்யூட் அண்ட் கேர்.. ப்யூட்டி ஃபுல் கப்பிள். லவ் மேரேஜ்ஜா?” என்று கேட்டான்.

 

“அப்படியும் சொல்ல முடியாது! ஆனாலும் கொஞ்சம் அப்படித்தான்..!” என்றதும் அவன் குழம்பி போய் பார்த்தான்.

 

“சரி வினோத் நாங்க கிளம்புறோம்! இன்னிக்கி எங்க த்தேடு வெட்டிங் அனிவர்ஸரி” 

 

“செகண்ட் பேபியா?” என்று யாழினியின் மேடிட்ட வயிற்றை பார்த்து கேட்க.. அரவிந்த்க்கோ சிரிப்பு “இல்ல ஃபர்ஸ்ட் பேபி. பவுண்டேஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா போட்டுட்டோம். அதுதான்..” என்று கண்ணடித்து சென்றவனை பார்த்து வெடித்து சிரித்தான் அந்த வினோத்.

 

மற்றவர்களுடன் இனிமையாக பழகும் அந்த குணமும்.. தன்னவளை அரணாய் தாயாய் பார்த்துக் கொள்ளும் பாங்கும்.. தொழில்துறையில் முன்னேறி ஒரு தொழிலதிபராக மிடுக்கோடு வளம் வந்த அரவிந்தை தான் கண் சிமிட்டாமல் பார்த்து இருந்தாள் ஆராத்யா. மீண்டும் ஆர்த்தி ஆகி அவனோடு சென்று விடமாட்டோமா என்று மெல்ல மனம் ஏங்கியது. ஆனால் நிதர்சனம் வேறாயிற்றே! அவளை எங்கேயாவது இம்மாதிரியான கூட்டத்தில் பார்த்தால் கூட வேண்டுமென்றே தவிர்த்து விட்டு சென்று விடுவான் அரவிந்த். அவன் அளவில் அவன் தெளிவாகத்தான் இருந்தான்.

 

உதய நேரத்தில் அரவிந்த் யாழினி தவப்புதல்வன் ஆரவ் யாஷ் பிறந்தான். அவன் பிறந்து ஆறு மாதம் கழித்து இருவரும் குலுமுனாளி வந்திருந்தார்கள்.

 

வந்தது முதல் முறைத்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவன் “சாரி டி.. என்ன பண்றது என்னால அப்போ கூட்டிட்டு வர முடியல. அதான் இப்ப கூட்டிட்டு வந்துட்டேனே!” என்று கெஞ்சுதலாக கேட்டான்.

 

“டேய் உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா? நான் கேட்டது ஹனிமூன்!! ஆனா நீ கொடுத்தது பாரு.. தன் பிள்ளையையும் அவர்கள் நிலைமையும் காட்டி “பேமிலி மூன்..!” என்று கோபமாக அவனைப் பார்த்தாள்.

 

“அப்படி இல்ல செல்ல குட்டி.. எந்த மூனா இருந்தா என்ன அதை நாம் எப்படி கொண்டாடுறது என்பதில் தான் இருக்கிறது..” என்றவன் அடுத்து மனைவியை கொண்டாட தயாரானான்..!!

 

அவளின் முகத்தை பார்த்தவனின் வதனத்தில் மெல்லிய புன்னகை இழையோட.. அவள் இடையை இறுக்கமாக பற்ற அதிலேயே அவனின் தாபம் புரிந்தது பெண்ணவளுக்கு. மெல்ல சாய்ந்தவனின் அதரங்கள் அவளது காது மடலை கவ்வி பிடிக்க... அதில் உணர்வுகள் பொங்க அவனை ஆரத் தழுவிக் கொண்டாள் யாழினி.. 

 

அவன் உடல் வெம்மை மெல்ல மெல்ல அவள் உடலுக்கு கடத்தப்பட.. அவன் உடலின் கதகதப்பும் சூடும் அவளின் மெல்லிய தேகத்தில் பரவியது. அந்த காதல் கள்வனும் மேலும் அவளை சீண்டி விட எண்ணி.. தன் அதரங்கள் கொண்டு அவள் சங்கு கழுத்து முழுவதும் உரசி உரசி அவளை உசுப்பேற்றினான்.

 

அவனின் உதடுகளின் ஈரத்தில் உணர்ச்சி பெருக்கெடுக்க கேசத்திற்கு இருந்த அவள் கைகள், அவன் முடி கற்றைகளை பிய்த்து எடுப்பவள் போல பின்னி கொண்டன..

 

மெல்ல மெல்ல கழுத்தில் இருந்து பயணித்த அவனது அதரங்கள் ஒவ்வொரு இடங்களாக செல்லச் செல்ல கடிகளையும்.. குட்டி குட்டி முத்தங்களையும் இட்டுக் கொண்டே வர.. அவளோ உணர்ச்சி பிழம்பாகி துடித்தாள்.

அவளே அறியாமல் அவளது ஆடைகள் ஒவ்வொன்றாய் களையப்பட.. யாழினியோ பல்லவன் வடித்து வைத்த சிற்பம் போல் மன்னவன் அருகில்..

 

 

அர்வி எழுந்து அவள் அழகை ஆராய முற்பட.. அவளோ அவன் கழுத்தில் இருந்த கையை எடுக்காமல் இருக்க திரும்பவும் அவள் மேலே கவிழ்ந்தான் அவன். 

 

பின் அவள் மேல் படர்ந்து அவளை ஆள ஆரம்பித்தான் அந்த அவளின் அரன். ஒவ்வொரு அசைவிலும் சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருக்க.. அவளை இறுக்க அணைத்து படியே "கொல்றடி அழகி" என்றான் சுக வேதனையில்.. அவனின் அழுத்தம் காரணமாக அவள் மூச்சுவிடத் திணற.. இரு கைகளாலும் அவளது தலையை பிடித்து தனது மார்பில் அழுத்திக் கொண்டாள்.

 

அவள் எண்ணத்தை புரிந்தவன்.. அவளின் இரட்டை திமில்களின் திமிறை அடக்கிக் கொண்டிருந்தான் தன் நாவினால்.. அவனின் ஒவ்வொரு ஸ்பரிசத்திற்கும் தன்னுள் கனல் மூண்டது போல தகித்து துடித்தாள்‌ யாழினி.

அவர்களின் அந்த தாம்பத்திய பயணம் நொடிக்கு நொடி உச்சமடைந்து சொர்க்கத்தில் திளைத்தவர்கள்..‌ சில மணி நேரங்கள் சென்றே பூலோகம் வந்தனர்..

 

கலைந்த ஓவியம் போல தன்னருகே கிடந்தவளின் நெற்றியில் நிறைவான முத்தத்தை கொடுத்தவன், புரண்டு அவள் அருகில் படுத்து இறுக்க அணைத்துக் கொண்டான்.

 

சிறிது நேரம் அவளின் ஸ்பரிசத்தை உடலால் அல்லாமல் உணர்வுகளால் உணர்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனது வேட்கை தணிந்த பாடு இல்லை. வேண்டும் வேண்டும் என மீண்டும் மீண்டும் அவளை நாட.. அவனின் வேட்கை சூரியன் உதித்தும் குறையவில்லை..!

 

மறுநாள் தன்னை பார்த்தவள் “டேய் மீட்டிங்குனு நீ என்ன பொய் சொல்லி இங்க கூட்டிட்டு வந்திருக்க வரும்போது அம்மா அவ்வளவு சொல்லி அனுப்புனாங்க அடுத்து குழந்தை உருவாகிடாமல்னு! நீ செய்றத பார்த்தால்.. ம்ஹும்…” என்று விலகினாள்.

 

“அடியேய்.. மூன்றரை வருஷத்துக்கு ஒன்னே ஒன்னு தான் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இனி தீயா வேலை செய்யணும் டி” என்றான்.

 

“அதெல்லாம் முடியாது. இனி சேப்டியோடு தான் என்கிட்ட நீ நெருங்கற”

 

“அப்படியெல்லாம் முடியாதுடி எத்தனை பாக்கெட் வாங்குவது நானு?” 

 

“ஒரு மாசத்துக்கா டா? என்றவளை பார்த்து..

 

“ச்ச.. ஒரு நாளைக்கு டி!” என்றவனை துரத்தி பிடித்து கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தவள்..

 

“உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அவள், அவனது முகம் முழுக்க தனது பற்கள் கொண்டு ஆங்காங்கே கடித்து வைத்தாள்.

 

ஒரு மாத தாடியுடன் இருந்தவனை பார்த்தவள், "இந்த தாடி என்னை வைச்சு செய்யுது அர்வி.. இதை ஷேவ் பண்ணி தொலையேன் டா" அவனது தாடியை தன் இரு கைகளாலும் பிடித்து இழுத்தாள்..

 

அவனது காது மடல்களை கடித்தாள்.. பின் அவனது தலைமுடிக்குள் தன் விரல்களை நுழைத்து இறுக்க பிடித்து அவள் உலுக்க..

 

தன் கண் முன்னே தெரிந்து அவளது செழுமைகளின் நர்த்தனத்தில் கிறங்கி போய் படுத்திருந்தான் அர்வி. அவளின் ஒவ்வொரு செயல்களிலும் அவனை தண்டிப்பதற்கு பதிலாக தாபத்தை தான் ஏற்றுக் கொண்டிருந்தாள் அவளையும் அறியாமல்…

 

அவளின் செயல்களின் அவனுக்கு மோகம் பிரவாகம் எடுக்க வைக்க அவனது ஆண்மை விழித்துக் கொண்டது.  

 

யாழினியின் இதழ்களிலிருந்து தனது அதரங்களை ஒருவழியாக மீட்டெடுத்தவன் தன் மேலே அமர்ந்து இருந்தவளை சட்டென்று புரட்டி கீழே தள்ளினான்.

கீழே விழுந்த யாழினி.. மல்லார்ந்து படுத்தவாறு அவனை பார்த்தாள். அவளின் அங்க லவயங்கள் இவ்வளவு நேரம் அவள் ஆடிய ஆட்டத்தில் எக்குத்தப்பாக உடைகள் எல்லாம் விலகி அவனின் கண்களுக்கு விருந்தாக அமைய..

 

காதலும் மோகமும் கலந்த பார்வையுடன் தன்னவளை பார்க்க.. அவனின் கண்களில் அவளுக்கு வேட்கையை தெரிந்தது. 

 

"சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டி விட்டு விட்டோமோ?" என்று அவள் யோசிக்கும் முன் அவள் மீது படர்ந்தான். இதுவரை அவள் செய்து கொண்டிருந்த அனைத்து வேலைகளையும் தனதாக்கினான். அவளது அதரங்களை இப்பொழுது இவன் தன் வசமாக்க மெதுவாக ஒளித்து வைத்து சுவைத்து நீண்ட பெரும் முத்தமாக அது மாறி கொண்டே செல்ல அவள் மூச்சு விட சிரமப்பட அப்போதுதான் அவற்றை விடுவித்தான்.

 

எப்பொழுதும் மென்மையாகத்தான் அவர்களது கூடல் நடக்கும். ஆனால் இன்று தன்னவளைக் கோபப்படுத்தி அதன் மூலம் நடக்கும் இந்த சற்று முரட்டுத்தனமாக கூடல் கூட இருவருக்கும் பிடித்துதான் இருந்தது.

 

நீயா நானா என்ற போட்டியில் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தொலைந்து... இருவருமே தங்கள் இணையிடம் ஜெயித்தனர். நிறைவான கூடலுடன் தன்னவளை அணைத்துக் கொண்டு அவன் உறங்க, யாழினி மெல்ல அவனின் தலையை கோதி கொடுத்து நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் வைத்தவள்,

 

“என் ஆருயிர் இந்த

அரன் வசம்!!” என்றாள்..

 

பெரும் காதலோடு..!

நனி நேசத்தோடு..!

துளி தாபத்தோடு..!

வளர்‌ அன்போடு..!

 

 

சுபம்..!!

 


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top