அரன் 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 22

 

ஏன் அர்வி உனக்கு என் மேல் லவ் வர்ல? நீ ஏன் அந்த கண்ணோட்டத்தில் என்னை பார்க்கல?” என்று யாழினி கேட்டதும் முதலில் அதிர்ந்தவன், இப்போது யோசித்துப் பார்த்தான், அது என்னவோ சிறு வயதிலிருந்து இவளோடு சேர்ந்து மற்ற பெண்களை சைட் அடித்திருக்கிறானே ஒழிய.. இவளிடம் அம்மாதிரியான எண்ணம் வரவில்லை!! ஒருவேளை நம்ம தங்கச்சியா பார்த்தோமோ என்றாலும் அதுவும் இல்லை. 

 

அவள் மீது அன்பு பாசம் அதைத் தாண்டிய அரணாக இருந்திருக்கிறான்.. இன்னமும் இருப்பான். 

 

ஆனால் காதல்??? வாழ்க்கைக்கு அது முக்கியமல்லவா? என்று யோசித்துக் கொண்டிருந்தவன் தண்ணீர் தாகம் எடுக்க.. எழுந்து கீழே செல்ல, அங்கே தூக்கம் வராமல் கூடத்தின் சாய்வு நாற்காலையில் அமர்ந்திருந்த சொக்கலிங்கத்தை பார்த்ததும் அப்படியே நின்று விட்டான்.

 

“மாமா தூங்கலையா??” 

 

“தூக்கம் வரல டா! என்னவோ மனச அடிச்சுக்கிட்டே இருக்கு.. பேசாம வெளியில மாப்பிள்ளை பார்த்ததுக்கு பதில் உனக்கே அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கலாம்னு தோணுது! ஆனா இப்ப வந்து உன்கிட்ட கேட்டா?? அது சரி இல்ல தானே?” என்று மனதில் அழுத்தி இருந்த வார்த்தையை பாரத்தை அவனிடம் விட்டுவிட்டார் சொக்கலிங்கம்.

 

அதானே… ஒருவேள பெற்றோர்களாக பார்த்து வைத்த திருமணம் ஆக இருந்திருந்தால்.. அன்பு பாசம் கொண்ட நம்பிக்கை அதை தாண்டிய காதல் என்பது திருமணத்திற்கு பின் வந்திருக்கும் அல்லவா? “ஆம்.! சரிதான்..!” என்று சிரித்துக் கொண்டவன் “நாளை பொழுது நல்ல பொழுதாக தான் விடியும்! போய் நிம்மதியா தூங்குங்க மாமா.. உங்க அர்வி இருக்கான் தானே.. போங்க” என்றான் அவரை அணைத்து.

 

அவனைப் பார்த்து முறுவலித்தவர், “நீ சொன்னா சரிடா!” என்றவாறு கூடத்தில் படுத்திருந்த விஸ்வநாதன் அருகிலேயே படுத்துக்கொண்டார். பெண்கள் இருவரும் அறையில் உள்ளே படுத்திருந்தார்கள்.

 

அந்த முடிவு எடுத்தவுடன் அதன் சாதக பாதகங்களை யோசித்தான். கூடவே அதிரதன் ஏதாவது செய்தால்.. பேசினால்.. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டே இருந்தவன் விடியும் தருவாயில் தான் உறங்கினான்.

 

அதிரதன் நினைத்தது போலத்தான் காலையில் சொக்கலிங்கத்தின் சொந்த பந்தங்கள் எல்லாம் அவரைத் தாக்கியது. ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. அவர் அப்படி காட்டி இருந்தால் மகனது எண்ணம் பலிக்கும் என்று அவர் ஊகித்திருக்க அதனாலேயே விஷயத்தை மாற்றி கூறிவிட்டார்.

 

சுப்ரமணியம் கூறியதும் அதிரதனுக்கு அடுத்து அதிரடியாக அவளை படைப்பரிவாரங்களுடன் நிச்சயம் செய்யவே வந்து விட்டான் ஏனென்றால் சொந்த பந்தங்களுக்கு ஏற்கனவே பெண் கொடுத்து பெண் எடுக்க போகிறோம் என்று இவன்‌ பரப்பி இருந்ததால்.. அதில் இப்பொழுது உறுதி செய்து தங்கையின் திருமணத்தின் போது முதல் நாள் இவர்களுக்கு எங்கேஜ்மென்ட் என்றும் பொதுவாக அறிவித்திருந்தான்.

 

எப்பொழுதும் அதிரதனை பேச்சு சரியாக தான் இருக்கும் என்று அவன் பெற்றோர்களும் சம்மதித்திருக்க.. இப்போது அனைவரையும் அழைத்து வந்தவனை சுப்பிரமணியம் ஆர்ப்பாட்டமாக “வாங்க.. வாங்க.. மாப்பிள்ளை” என்று வரவேற்றான்.

 

வீட்டில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சி தான். என்னடா இவன் மொத்தமாக வந்திருக்கிறான் என்று!! மல்லிகாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “இவன் கடைசி வரை என் பெண்ணை விட மாட்டானா?” என்று கோதாவரியின் கையை அழுத்தமாக பிரித்துக் கொள்ள.. அவர் ஆறுதல் அளித்தார். ஆனால் சொக்கலிங்கம் நிர்மூலமான முகத்தோடு அவர்களை எதிர்கொண்டார். ஏதோ வீட்டுக்கு வந்த விருந்தாளி போல இவர் வணக்கம் மட்டும்தான் வைத்தார்.

 

அதற்கு அந்தக் கூட்டம் ஏதோ இவர்கள் சம்மதித்தது போல ஆர்ப்பாட்டமாய் அமர்ந்து பேச.. அப்பாவின் அறையில் இருந்த யாழினி இவர்கள் பேச்சு சத்தம் கேட்டதும் வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள்.

 

அவளைப் பார்த்ததும் ஒற்றை புருவத்தை உயர்த்தி “எப்படி என் வலை? வசமாக மாட்டிக் கொண்டாயா?” என்று கண்களால் கேட்டான் அதிரதன்.

 

அவளோ உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள். “இவ்வளவு செஞ்சும்.. உன் திமிரும் நிமிர்வும் அடங்கல.. ஆனா அதுதாண்டி புடிச்சிருக்கு எனக்கு” என்று நினைத்தவன், தந்தையை கண்காட்ட அவர்தான் யாழினியை பெண் கேட்டார். அதாவது ஏதோ பேசி வைத்திருந்து இப்பொழுது தட்டு மாற்றுவது போலவே அவரது பேச்சு இருக்க..

 

சுப்ரமணியத்துக்கு தான் சந்தோசம் பிடிப்படவில்லை. அவனும் தந்தையின் அருகே சென்று “இங்க பாருங்க பா.. ஏற்கனவே ஒருத்தன் வேணாம்னு சொல்லிட்டான். கூடவே இவ அரவிந்த் கூட சுத்துறது நம்ம சொந்தத்துக்கு எல்லாம் தெரிஞ்சு அவனவன் என்கிட்ட ஃபோன் பண்ணி உன் தங்கச்சி அப்படியாம்ல இப்படியாம்லனு கேட்டுகிட்டு இருக்கானுங்க..” என்று வராத ஃபோனை வந்ததாக கூறி அவன் பேச அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம் ஒரு வார்த்தை கூறவில்லை.

 

“என் மச்சானுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுங்க.. நாங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் வசதி வாய்ப்போட..” என்றவன் “என்ன மாப்பிள்ளை என் தங்கச்சி நல்லா பாத்துக்குவிங்க தானே??” என்றதும் “இந்த கிங்கோட குயின் அவள் சுப்பு!” என்றான் அதிரதன்.

 

“அப்படி சொல்லுங்க.. மாப்பிள்ளை!” என்று சுப்பு சந்தோசமாக கூச்சலிட அப்போதுதான் மாடியில் இருந்து இறங்கி வந்தான் அரவிந்த்.

 

“நான் இருக்கும்போது அவன் எப்படி உனக்கு மாப்பிள்ளை ஆக இருக்க முடியும் அறிவு கெட்ட சுப்பு..? ஃபாரின்ல போய் வேலை செஞ்சா நம்மளோட கல்ச்சர் எல்லாம் மறந்துடுவியா நீ?” என்று அவனை திட்டியவன் மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு சொக்கலிங்கத்தின் கண்களை ஆழ்ந்து பார்க்க.. அவருக்கு புரிந்து விட்டது. அரவிந்த் என்ன சொல்ல வருகிறான் என்று!!

 

அத்தனை மகிழ்ச்சியும் நிம்மதியும் அவர் முகத்தில்.. விஸ்வநாதனுக்கு தான் மகன் பேசியது புரியவே இல்லை. எனன் என்று அவர் நண்பனை பார்க்க “லிங்கம் முகத்திலேயே தவுசன் வாட்ஸ் பல்பு எரியுது?” என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

 

கோதாவரியும் மல்லிகாவும் கூட சற்று அதிர்ச்சியோடு தான் அரவிந்தை பார்த்தார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டு யாழினி நெருங்கியவன் “என்ன பொண்டாட்டி.. பசிக்குது சாப்பாடு எடுத்து வைக்க மாட்டியா எனக்கு? வா.. வா.. வந்து எடுத்து வை” என்றதும் மற்றவர்களை விட அதிகமாக அதிர்ந்தது என்னவோ யாழினிதான்.

 

அவள் அருகே நெருங்கியவன் வா என்று அவளை சமையலறைக்கு இழுத்து சென்றான். “நேற்று நீ கேட்டது போல இதுக்கு முன்னாடி எனக்கு அந்த உணர்வு வரல தான். ஆனால் அளவுக்கு அதிகமான அன்பு பாசம் உன் உன் மேல எனக்கு இருக்கு மித்து. நீன்னா எனக்கு எப்பொழுதுமே பிடித்தம் தான்” என்றதும் அவள் முறைத்தாள்.

 

“புரியுது..! அந்த பிடித்தம் வேற இந்த பிடித்த வேற..” என்று சிகையை கோதியவன்,

 

“ஆனா இப்படி வச்சுக்கோயேன்.. லவ் தான் வரல. நம்ம ரெண்டு பேர் வீட்லயும் பேசி நமக்கு கல்யாணம் பண்ணி இருந்தா அப்ப பொண்டாட்டின்னு உணர்வு வரும் தானே?” என்றதும் அவள் திகைத்து பார்க்க..

 

“லவ்வர் என்கிறது வார்த்தை..

ஆனா பொண்டாட்டிங்கறது எமோஷன்..!” என்று அவன் கூற சிரிப்போடு அவன் தோளை தட்டியவளின் கையை பிடித்தவன்.. “இந்த கைய நான் எப்பவும் விட்டுட மாட்டேன். எங்கேயும் எப்போதும் உனக்கு அரணாய்… நம்மை எதிர்ப்பவர்களுக்கு அவர்களை அழிக்கும் அரனாய்..!!

இந்த அரன் கூட வாழ்நாள் முழுக்க உனக்கு வர சம்மதமா மித்து?” என்று அவன் கேட்க??

 

மகிழ்ந்து போனாள் யாழினி. இப்போ கூட தன்னுடைய நலத்தையே இவனால் எப்படி பேச முடிகிறது யோசிக்க முடிகிறது? இந்த முடிவுக்கு பின்னால் அவளது நலம் கண்டிப்பாக இருக்கிறது என்பது அவளுக்கு தெரியும்!

 

‘அன்பு இல்லை.. அதைவிட ஏதோ அதற்கு மேலே என்று சொல்வார்களே அதுபோலத்தான் எனக்காக.. எல்லாமுமாக.. இருக்கும் இவனை விடவா வேறு ஒருவன் என்னை புரிந்து கொள்ளப் போகிறான்? என்னை நன்றாக பார்த்துக் கொள்ளப் போகிறான்?” என்றவள் சிரிப்போடவே மறு கைலாலையும் அவனது கையை பற்றி கொண்டு “இந்த யாழினியின் ஆருயிர் எப்பொழுதும் இந்த அரன் வசமே..!” என்றாள் சிரிப்போடு.

 

இவர்கள் இருவரும் இங்கே சமையலறையில் நின்று பேசிக் கொண்டிருக்க.. அங்கே அதிரதன் சுப்புவை கண்களால் காட்ட யாழினி என்றபடி வந்தவன் பார்த்தது அரவிந்தன் மார்பில் தலை சாய்த்து இருந்த யாழினியை தான்!!

 

அவன் அதிர்ச்சியோடு “ஏய் யாழினி..!” என்று கத்த அவள் விலக முற்பட.. அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்ட அரவிந்த் “ஏன்டா உனக்குள்ள அறிவு இல்ல? இது தங்கச்சியும் அவ வீட்டுக்காரரும் தனியா இருக்கிறது வந்து பார்த்துட்டு கத்திட்டு இருக்க.. போடா அந்த பக்கம்!” என்று சத்தமாக சொல்ல…

 

ஏற்கனவே இவன் பொண்டாட்டி என்று அழைத்து சமையலறைக்கு சென்றது அதிரதனால் தாங்க முடியவில்லை. இப்போது அங்கே இருந்து சுப்புவம் தொங்கிய முகத்தோடு வருவதைப் பார்த்தவன் “என்ன சுப்பிரமணி?” என்று அதிகாரமாக கேட்க அவனோ உதடு பிதுக்கினான்.

 

சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்ட சொக்கலிங்கம் “இங்கே பாருங்க உங்க பொண்ணுக்கு நீங்க மாப்பிள்ளை பார்த்தது உங்க விருப்பம் அதேபோல என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது என் விருப்பம் என் உரிமை! அவளுக்கு என் சிநேகிதன் விசுவோட பையன் அரவிந்த தான் கட்டுறதா நாங்க சின்ன வயசுலயே முடிவு பண்ணியாச்சு” என்க.. விசு “இது எப்படா?” என்று அதிர்ச்சியுடன் பார்க்க.. “அதனால நீங்க வேற இடத்துல உங்க பையனுக்கு பொண்ணு பாத்துக்கோங்க!” என்றார்.

 

அதற்குள் விஷயம் கோதாவரிக்கும் மல்லிகாக்கும் புரிந்து விட இருவரும் சந்தோஷத்தோடு ஒருவரை ஒருவர் தோளோடு அணைத்துக் கொண்டார்கள் “இனிமே நம்ம சம்பந்தி!” என்று!!

 

‘அரவிந்த் வேற நல்ல மருமகனை அவர்களால் கொண்டு வர முடியுமா?’ என்ன என்று மல்லிகா சிலாகிக்க.. ‘யாழினியை விட ஒரு நல்ல பெண் எங்களுக்கு மருமகளாக வந்து விட முடியுமா?’ என்று பெருமையோடு நினைத்தார் கோதாவரி.

 

“முதல்ல அவங்கள விரட்டிட்டு வருவோம்.. வா.. இல்லன்னா பாவம் கடைசி வரைக்கும் நினைச்சு நினைச்சு ஏமாந்து போய் இருப்பான்” என்றதும் அவள் சிரித்துக் கொள்ள அவள் கையைப் பிடித்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தவனை கண்டு இரு பெற்றவர்களின் மனதும் பூரித்தது.

 

“வாங்க மிஸ்டர் அதிரதன்.. என்ன கூப்பிடாமலே வந்து இருக்கீங்க? ஓஹ்.. உங்க தங்கச்சி வீட்டுக்காரரை பார்க்க வந்தீங்களா.. வந்தது தான் வந்துட்டீங்க அப்படியே ஒரு நல்ல விஷயத்தை கேட்டுட்டு போயிடுங்க எனக்கும் என் மித்துவுக்கும்…” என்று அவளை தன் அருகில் இழுத்து நிற்க வைத்துக் கொண்டவன் “கூடிய சீக்கிரம் கல்யாணம் மறக்காம வந்துருங்க! உங்களுக்கு ஏற்கனவே டைட் செடியூல் இருக்கும்.. ஆனாலும் கண்டிப்பா நீங்க வரணும்” என்றதும் “டேய்..!” என்று ஆத்திரத்தோடு அரவிந்த் சட்டையை பிடித்து அதிரதனை பார்த்து எள்ளலாக சிரித்த அரவிந்த் “கையை எடுடா.!” என்றான்.

 

“என்ன நீ கல்யாணம்னு சொன்னா அப்படியே விட்டுடுவேன் நினைக்கிறியா.. இவள கட்டுதுக்காக இத்தனை கட்டம் கட்டுன எனக்கு உன்னை தட்டி விட்டுட்டு இவளை தூக்கிட்டு போக எனக்கு தெரியாதா?” என்றும் “தூக்கிட்டு போய் என்ன பண்ண போறீங்க ஆபீசர்? அடைச்சு வைப்பீங்களா இல்ல? உங்கள மாதிரி ஆண்களுக்கு தானே ஒன்னு இருக்குமே கற்பை பறிக்கிறது!! அப்படி பறிச்சுட்டா அவங்க காலை சுத்துவானு நினைப்பு இல்ல.. அப்பவும் நான் அர்வி பொண்டாட்டி தான் இருப்பேன். நீ தான் சுத்தமா தோத்து போவ” என்றாள்.

 

“இல்ல என் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எங்களை வாழ விடாமல் ரிவேஞ்ச் எடுத்துட்டு போ.. எங்களுக்கு எந்த கவலையும் இல்லை உன்னை மாதிரி வேலையாட்கள் இத்தனை பேரு ஹைஃபை வாழ்க்கை ஸ்டைல் எனக்கு கிடையவே கிடையாது. எங்க அப்பாவோட பிரிண்டிங் ப்ரஸ் இருக்கு அதுல போய் உட்கார்ந்துக்குவேன்.‌ இல்ல அதை நீ மூடுனினா.. எங்க மாமனாரோடு டுடோரியல் சென்டர் இருக்கு அங்க போய் ஏதாவது ஒரு டியூஷன் எடுத்துப்பேன்.. அதையும் நீ மூடுனா இருக்கவே இருக்கு என் மாமனாரோட பழைய டெக்னிக்.. டியூஷன்!! என் பொண்டாட்டியும் டீச்சர் நானும் சுமாரா பாடம் எடுப்பேன்னு வச்சுக்கோயேன் அதை வைத்து பொழைச்சுக்குவோம் நாங்க.. ஏன்னா இப்ப ஸ்கூல் எல்லாம் ஒண்ணுமே சரியா நடத்துவது இல்லையாம். எல்லா பிள்ளைகளும் டியூஷன் தான் வந்துட்டு இருக்கு.. ஸ்கூல்ல விட டியூஷனுக்கு தான் இப்போ மார்க்கெட் கிராக்கி தெரியுமா?” என்றதும் அதிரதன் அவர்களை சீற்றமாக பார்த்தான்.

 

“உன் மனசுக்குள்ள இப்போ ஒரு திட்டம் ஓடணுமே.. என்னை எதையாவது பண்ணிட்டு யாழினிய தூக்கிட்டு போறது இல்ல இவங்கள வளர விடாம அடிக்கிறது. அது தானே?? இனி எத செஞ்சாலும் நீ தோத்து போயிட்ட.. ஏன்னா என் மித்து மனசுல நீ இல்ல! நான்.. நான்‌ மட்டும் தான்!! அதுல நீ மொத்தமா தோத்து போயிட்ட தான். ஏன்னா எனக்கு ஒன்னுனா என் மித்து என் கூடவே இருப்பா.. அவளுக்கு ஒன்று என்றால் நான் கூடவே இருப்பேன் அதை உன்னால என்னைக்கும் மாத்த முடியாது..” என்றான்‌ அர்விந்த் கர்வமாக..!!

 

ஒரு ஆணின் கர்வம் அவனின் இணையான பெண்ணை கொண்டு!! 

 

“ஏன் முடியாது!! என்னால் முடியும் ஒரு ரெண்டு நிமிஷம் இவ கிட்டு தனியே நான் பேசினாலே இவ மாத்திடுவேன்” என்று ஏளனமாக உரைத்தான் அதிரதன்.

 

அதில் மனது யாழினிக்கு அடிபட்ட அவளது கையை பற்றி அழுத்தி கொடுத்தான் அரவிந்த். அவளுக்குள் ஆகவே ஒரு நிமிர்வை தர.. “ஆமா

 நீ என்ன சுத்தி சுத்தி வந்து என்கிட்ட நீ லவ் சொன்ன போது எனக்குள்ள ஒரு சின்ன சலனம் இருந்துதான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்! ஆனால் அதுக்காக எல்லாம் இவ்வளவு வன்மத்தை குடோன் குடோனா வச்சிருக்குற உன்னை எல்லாம் கட்டிக்க முடியாது! எப்போ அரவிந்த நீ தூக்கினியோ அப்பவே என் மதிப்பில் இருந்து நீ அதல பாதாளத்துக்கு போயிட்ட…” என்றாள் யாழினி சீற்றமாக! வீட்டு பெரியவர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் புதிது அல்லவா எல்லாரும் அதிர்ந்து பார்த்தனர் அவர்களை ஆனால் குறிக்கிடவில்லை.

 

“அப்படியா? சலனம்.. ம்ம்ம் ஓகே உன் வார்த்தைக்கே வரேன். அது சலனமாகவே இருந்துட்டு போகட்டும். எப்படி நீ இவன் கூட சந்தோஷமா இருக்க முடியும்? இவன் தொடும் போது நான் தொடுவது போல இருக்காதா? என்றதும் ச்சீ என்று அவனை பார்த்து முகத்தை அருவருத்தவள் “நான் என்ன உன் தங்கச்சி நினைச்சியா?” என்பதும் இப்பொழுது சுப்பிரமணி அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

 

“பாக்குறவன் கிட்ட எல்லாம் லவ்வ சொல்லிட்டு.. அவன் கூட இளஞ்சி இளஞ்சிட்டு அப்புறம் அவன் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு இப்ப வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க போறாளே.. இதே கேள்வியை உன் தங்கச்சி கிட்ட கேட்பியா? எங்க அண்ணா தொடும் போது அரவிந்தன் ஞாபகம் வருமா இல்ல எங்க அண்ணன் ஞாபகம் வருமானு? என்று நெத்தியடியாக கேட்க..

 

“ஏய்..” என்று அவளின் கழுத்தை பிடிக்க வந்தான். யாழினிக்கும் அதிரதனுக்கும் இடையில் வந்து நின்ற அரவிந்த் “பேச்சு பேச்சோடு இருக்கணும் அவளை தொடுற வேலை எல்லாம் நீ வச்சுக்க கூடாது.. அப்புறம் கை இருக்காது..” என்று அவன் கையை தட்டி விட்டான்.

 

“வீட்டு பொண்ண சொன்ன உடனே உனக்கு வலிக்குது. அடுத்தவங்க வீட்டுக்கு பெண்ணுனா உனக்கு சீப்பா போயிட்டாளா?” என்று யாழினி கேட்கும் கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.

 

“யாழினி என்ன சொல்ற? உனக்கு ஆராவ முன்னாடியே தெரியுமா? என்னென்னமோ சொல்ற? அவ.. அரவிந்த் அரவிந்த் காதலிச்சாளா?” என்று சுப்பிரமணியனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

“நான் சொல்றேன்டா மச்சான்! இங்கே வா.. இவன் தங்கச்சி ஆர்த்தி என்று பெயரில் யாழினி ஒர்க் பண்ற ஸ்கூல்ல ஒர்க் பண்ணா.. அதோட இல்லாம பார்ட் டைம்ய வேலை வேணும்னு என்கிட்ட வந்து நான் ஒரு ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கும்போது அவளும் வந்து சேர்ந்தா… அதோட மட்டும் இல்ல என்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லி சொல்லி இளைஞ்சிக்கிட்டே நின்னா நான் தான் வேலை முக்கியம்னு அவளை நெருங்க விடாமல் இருந்தேன். கடைசியாக பார்த்தால் நான் கண்டுபிடித்த சாஃப்ட்வேரை தூக்கிட்டு ஓடிட்டா.. அது என்னமோ இவன் தங்கச்சி கண்டுபிடித்ததா இவன் கொண்டாடுறான்! அவளே திருடிட்டு வந்தது..” என்றான் அரவிந்த். முகத்தில் அறை வாங்கியது போல உணர்ந்தான் அதிரதன்.

 

அவன் தன் தொழில் வெற்றிக்காக எத்தனையோ பேரை தன் பணத்தாலும் அதிகாரத்தாலும் ஆளுமையாலும் தூக்கிப்போட்டுக் கொண்டு செல்பவன் தான். ஆனால் மற்றவருடையதை திருடி தன்னோடு என்று சொல்லிக்க மாட்டான். அது அவனுக்கு.. அவன் ஆளுமைக்கு அழகு கிடையாது என்று நினைப்பவன். ஆனால் அவன் தங்கை அப்படி செய்தாளா? என்று யோசித்துக் கொண்டே இருந்தவனை பார்த்த அரவிந்த்..

 

“ரொம்ப யோசிக்காத மாமே.. நீ லான்ச் பண்ணுன சாஃப்ட்வேர்..” என்றவன் அதைப் பற்றி கடகடகட என்று அனைத்தையும் கூற புரிந்து போனது தன் தங்கை செய்த கீழான செயல்!! அழைத்து வந்த சொந்தங்களுக்கு மத்தியில் மிகவும் அவமானமாகி போனது அதிரதனுக்கு. 

 

யாழினி கிடைக்காதது ஒரு புறம் அவமானம் என்றால்.. தன் தங்கை செய்ததோ அதற்கு மேலாக இருந்தது. 

 

“இன்னமும் நான் செஞ்ச போது எடுத்த சின்ன சின்ன வீடியோஸ் வித் டேட்டோ இருக்கு. எல்லாமே எவிடன்ஸூம் என் கிட்ட இருக்கு. என்னால உன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது என்றாலும் இது என்னோடது தானே சொல்லி மார்க்கெட்ல இருந்து உன்னோடநை இறக்க முடியும். ஆனால் அது எனக்கு வேண்டாம்!! உன் தங்கச்சி எனக்கு நல்ல படிப்பினை கொடுத்துட்டு போனா.. அதுவும் இல்லாம உன்னால தான் இப்போ என் மித்து என் வாழ்க்கைக்குள்ள வந்திருக்கா..! சோ.. அதை உனக்கு நான் கிப்ட்டா கொடுத்ததா வச்சுக்கோ..” என்றான்.

 

அதாவது பிச்சை என்று நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொன்னான். இன்னும் செருப்பால் அடி வாங்கியது போல உணர்ந்தான் அதிரதன்.

 

கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி! கண்கள் கலங்க “டேய்.. நிஜமாவா.. அந்த சாப்ட்வேர் தான் அன்னைக்கு அவங்க ரிலீஸ் பண்ணியதா? அதுல நான்.. மேடையில்..” என்று அவளால் தாங்கவே முடியாமல் “அர்வி..” என்று யாழினி அழ..

 

“ நீ வேற ஏண்டி அப்பப்ப வாட்டர் பால்ஸ் தொறந்து விட்டுகிட்டே இருக்க.. கண்ணை தொட சென்றவன்” என்றவன் அவனே துடைத்து விட்டு “நீ சொன்னது போல தான் பழசு வேண்டாம்னு தூக்கி போட்டுட்டேன்.. மொத்தமா..! இனிமே நம்ம புதுசா ஆரம்பிப்போம், வாழ்க்கையையும் தொழிலலையும்..” என்றதும் அவன் கைகளோடு கைகோர்த்துக் கொண்டாள் யாழினி சிரிப்போடு தலையாட்டி!!

 

அதை பார்த்த அதிரதனுக்கு அதற்கு மேல் அங்க நிற்க முடியவில்லை உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டான்.

 

அதிரதன் ஆரத்தியாவிடம் சென்று கேட்க முதலில் அவள் திருடியதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதிரதனின் கடுமையில் ஒத்துக் கொண்டாள். அவனால் அதை ஏற்க முடியவில்லை. கண்டிப்பாக தங்கை செய்திருக்க மாட்டாள் என்று அவனின் நம்பிக்கை பொய்த்து போனது.

 

தொழிலில் தானாக முன்னேறி தன்னை தான் அனைவரும் திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு அடுத்தவரோடதை திருடி வந்தது தன்னோடு தான் என்று எப்படி சொல்ல முடிந்தது என்று அருவருப்பாக இருந்தது. அதனோடு கூட இனி ஆராவை சுப்புக்கு கட்டி வைப்பதால் என்ன பலன்? தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டான். இனி அரவிந்தையும் யாழினியையும் பார்த்தால் அவனுக்கு தங்கை செய்ததும்.. அவர்கள் பேசியதுமே நினைவு வரும். 

 

அதனால் இங்கிருக்கும் கருடா கேம்பஸ் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று விட்டான் உடன் தங்கையையும் அழைத்துக் கொண்டே…

 

அந்த வாரமே அரவிந்த் பிரபாகரனுக்கும் சங்கமித்திர யாழினிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. ‌

 

யாழினி அரவிந்த் வீட்டுக்கு வந்த நேரம் பல வருடங்களாக இழுத்து கொண்டிருந்த அவர்களது வீட்டின் வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி தங்கையின் சீர் கணக்குகளையும் இந்த வீட்டை விஸ்வநாதன் தான் எடுத்துக் கட்டியதையும் ஒத்துக் கொண்ட நீதிபதி… வசுந்தராவுக்கு சீராக செய்யப்பட்ட நகைகளின் கணக்கு முன்னாள் இருந்த வீட்டின் மதிப்பு எல்லாத்தையும் கணக்கீடு செய்து ஒரு சிறு பகுதி வசுந்தராவுக்கு கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து நிலையில் யாழினி தன் நகைகளை கொடுத்து உதவ அரவிந்தோ மறுத்தான்.

 

“இந்த கோர்ட்டு கேஸுக்காக எவ்வளவு செலவாகி இருக்கும் இனிமே அந்த செலவு இல்லாம இருக்கும் இல்லையா? மாமா அத்தை நிம்மதியா இருப்பாங்க! அதுவும் இல்லாம சுப்பு பய மறுபடியும் எங்க போவானோ என்ன பண்வானு தெரியாது அர்வி. அம்மா அப்பாவும் நம்ம பக்கத்தில் இருந்தால் நமக்கும் சந்தோசம் தானே?” என்றதும் ஒத்துக்கொண்டு நகைகளை அடகு வைத்து வசுந்தராவின் கணக்கை தீர்த்தார்கள். மீண்டும் வீட்டை சரி செய்து அந்த வீட்டிற்கு குடி வந்தார்கள்.

 

அவர்களது அறையை மாடியில் சற்று பெரிதாக இழுத்து கட்டிக் கொண்டான் அரவிந்த். அருகிலேயே அவன் வேலை செய்வதற்கு என்று ஒரு அறையும்..

 

யாழினி தன் அம்மா வீட்டு மாடியில் ஒரு டியூஷன் சென்டர் ஒன்றை ஆரம்பித்து வைக்க.. அரவிந்தும் அவனது புதிய சாப்ட்வேரை வெற்றிகரமாக முடித்தவன் பேட்டன் எடுத்து அதை சந்தையில் விட அவனுக்கு ஏறுமுகமானது..!!

 

இப்போதெல்லாம் யாழினிக்கு சிந்தனை முழுவதும் அவன் மீது கொண்ட காதல் மயக்கம் மட்டுமே.. ஸ்கூல்.. ஸ்டுடென்ட்.. கிளாஸ்.. சப்ஜெக்ட்.. ஏன் பெற்றோர்கள் கூட அச்சமயம் அவள் ஞாபகத்திற்கு வரவில்லை. முழுக்க முழுக்க அவன் நினைவுகள் அனைத்தையும் ஆண்டு கொண்டிருந்தான் எந்த மாயவனாய்..!

 

கணினியாளன் மீது கொண்ட காதல் அந்த மயக்கம்!!

போதை ஏற்றி சுற்றும் மறக்க வைக்கும் அந்த மயக்கம்!!

வசீகரமாக சிரிக்கும் மாதவன் தந்த மயக்கம்!!

 

காலை குளித்து வந்து தன் அறையில் தலை துவட்டிக் கொண்டிருந்தாள் யாழினி. கண்கள் முழுக்க நேற்று தன்னை கொள்ளை கொண்ட கள்வனின் காதல் முகமே..!!

 

"என்ன டீச்சர் மேடம் காலையிலேயே ட்ரீமா?" என்றபடி அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான் அரவிந்த்.

 

அவள் தோளில் இருந்து இறங்கிய அவன் கைகள் அவள் இடுப்பில் ஊர அவளுக்குள் அந்தோ மின்சார பாய்ச்சல்!!

 

வசியம் செய்வதில் வசிய காரனாகவும்!!

பெண்ணை மயக்கும் மாயக் கண்ணனாகவும்!!

காதலை கையாளுவதில் வித்தகனாகவும்!!

மொத்தத்தில் மன்மதனின் மறு உருவமாக நின்றான் அவன். 

அவனின் ரதியை மயக்கியப்படி மாறனவன்..!!

 

அவன் இதழ்கள் யாழினியின் கன்னத்தில் அழுத்தமாக பதிய.. "லவ் யூ மித்து.. உன் மேல பித்து" என்றான் கிறக்கமாக..

 

அந்தக் குரல்!! அதில் வழிந்த காதல்!! பதில் பேச திராணியில்லாமல் மேலும் அவன் கைகளில் சரிந்தாள் சங்கமித்ர யாழினி. அவளை முழுவதுமாக தன் கையில் தாங்கிக் கொண்டான் இந்த காதலன். மெல்ல மெல்ல அவனது உதடுகள் கன்னத்தில் இருந்து உதட்டை நோக்கி பயணித்து அதை கவர்ந்து கொண்டது. செர்ரி பழம் போன்ற மெல்லிய சிவந்த உதடுகளை தன் அழுத்தமான உதடுகளுக்குள் ஒளித்து சுவைத்துக் கொண்டிருந்தான் இந்த கள்வன்.

 

ஆம் கணவனே கள்வன் ஆவது காதலில் மட்டுமே!!

 

கவர்ந்த காந்தனின் அதரங்களுக்குள் தன் அதரங்களை ஒப்புவித்தவள் விடுப்பட மனமில்லாமல்.. விடப்பட விரும்பாமல்.. சுழலுக்குள் சிக்கிய மலரென தள்ளாடினாள்.

நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு மெல்ல அவளை விடுவித்தவனின் கைகள், வெட்கத்தில் செங்காந்தள் மலர் என செம்மை பூசிய அவளது கன்னங்களை மிருதுவாக வருடியது. கன்னங்களை வருடிய அவன் விரல்கள் மெல்ல மெல்ல கீழே இறங்கி சங்கு கழுத்தில் கோலங்கள் போட..

கண் மூடி உதடுகளை கடித்து சுகித்தாள் பெண்ணவள். அவளின் நிலையை ரசித்துக் கொண்டே அவனது கைகள் இன்னும் சற்று கீழே இறங்கி நர்த்தனங்கள் ஆட துவங்க.. சட்டென்று அவனது கைகளை இறுக்கிப் பிடித்தாள் மாது.

 

"என்னடி தடா போடுற.. அதெல்லாம்.." என்று அவள் காதோரம் அவன் ரகசியம் பேச..

 

"சீச்சி.." என்று எல்லையில்லா லஜ்ஜையுடன் அவன் டீஷர்டை பிடித்து இழுத்து அவன் மார்பில் புதைந்தவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

"மித்து.. மித்து மா.. எப்பவும் முதலடி என்னுடையதா தான் இருக்கு" போலியாய் சலித்தான் அவன்.

 

"ஆமா எல்லாமே அதிரடி தான்!!" என்று அவள் வெட்கி சிவந்தாள் அவள்.

 

" அதே தான் டார்லிங்.. உன்னோட அதிரடி காண ஆவலாய் இருக்கிறேன் கண்மணியே!!" என்று அவன் கிறக்கமாய் பேச..

 

"நீ தாங்க மாட்ட மச்சான்" என்று அவள் கண்ணடித்து சிரிக்க..

 

"மச்சானா? என்னடி புதுச புதுச ஆரம்பிக்கிற?" என்று அவன் கேட்க..

 

"ஏன் பிடிக்கலையா?" முகம் பார்த்து தவிப்பாக யாழினி கேட்க..

 

"பிடிக்கல கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை..!!" என்றதும் யாழினி முகம் சோர்ந்து போனது.

"இங்க பாருடி லூசு கொஞ்சமா புடிக்கலைன்னு தான் சொன்னேன்.. நிறைய நிறைய பிடிக்குது. நீ எப்படி கூப்பிட்டாலும் பிடிக்கும்" என்றவன் அவளை இறுகத் தழுவிக் கொண்டான்.


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top