அசுரன் 18

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அசுரன் 18

 

 

“ஆரு..” என்று அலறி இருந்தான் சுக்ரேஷ், ராவண்னின் இதழணைப்பில் இருந்தவளை பார்த்து அதிர்ந்து..!

 

சுக்ரேஷன் அதிர்ந்த குரலில் ஆருஷி திடுக்கிட்டு ராவண்னை தள்ளிவிட முனைய, அவனோ வெகு சாதாரணமாக அவளை விட்டு பிரிந்தாலும்.. அவளை தன் கையணைப்பிலே வைத்துக்கொண்டு “ஹாய் சுகரேஷ்.. என்ன திடீர் விஜயம்?” என்றான் கேஷூவலாக..!

 

சுக்ரேஷ் தங்கள் இருவரையும் அவன் முறைத்து பார்ப்பதை பார்த்து,

 

“அது வேறு ஒன்னும் இல்லை.. நீ பாட்டுக்கு இவ உன் ஃபியான்ஸினு சொல்லிட்டு உன் ஊருல போய் உக்காந்துட்ட.. பட் அவ வயித்துல ஒரு குழந்தை இருக்கு இல்லையா? அதை பத்திரமா பாத்துக்கற பொறுப்பு அப்பனா எனக்கு இருக்கு இல்லையா?” என்றான் ஏதோ சுவாரசியமாக கதை சொல்வது போல,

 

“அதுக்கும் இப்ப நீ பண்ணிட்டு இருக்குற வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் சுக்ரேஷ்.

 

“இது ஒரு நல்ல கேள்வி..!” என்றவன் தன் வலது கையில் இருந்த ஜூசை அவன் முன்னால் காட்டி “பாரு எவ்வளவு சத்தான மாதுளை ஜூஸ். இத கொடுத்து குடிக்க சொன்னா குடிக்க மாட்டேன் என்கிறா.. ஏற்கனவே ஒரு கிளாஸ தள்ளிவிட்டு உடச்சிட்டா..” என்று திரும்பி அவளது பின்னந்தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டியவன்,

 

“அதுதான் என் ஸ்டைலில் புகட்டி விட்டேன்.. என்ன இருந்தாலும் வயத்துல உள்ள குழந்தை என்னது இல்லையா?” என்றதும் சுக்ரேஷ் இப்பொழுது ஆருஷியைத் தான் முறைத்தான்.

 

‘இதெல்லாம் உனக்கு தேவையா?’ என்பது போல..!

 

ஆருஷின் தலையோ சுக்ரேஷின் கேள்வியில் தானாகக் கவிழ்ந்தது.

 

“இந்த லூசு இப்படி பண்ணுவானு தெரிஞ்சி இருந்தா நான் அப்பவே அந்த ஜூஸ குடிச்சிருப்பேன்.. இப்படி சுக்ரேஷ் முன்னால என் மானத்தை வாங்கிட்டான்.. அவன் என்ன பத்தி என்ன நினைப்பான்? அவன பிடிக்கல பிடிக்கல வேண்டாம்னு சொல்லிட்டு அவன் கூடவே.. ஐயோ ஆண்டவா..!” என்று அவள் தலையைப் பிடித்துக் கொள்ள..

 

“ஹேய் பாப்பா.. என்ன தல சுத்துதா?” என்றவன் அவளை சோபாவில் அமர வைத்து சட்டென்று நாடி பிடித்து பார்த்தான். 

 

“முதல்ல இத குடி..!” என்றான் அதட்டலாக..!

 

இம்முறையும் மறுத்தால் சுக்ரேஷ் முன் மீண்டும் அவ்வா அவ்வா தான் என்று நினைத்தவள் வாங்கி கடகடவென்று குடித்து முடித்தாள். அவனை முறைப்புடன் வெறுப்புடன் பார்த்தவாறு..!

 

“ஓகே என் கடமை முடிந்தது..! பை பாப்பா.. டேக் கேர்” என்று அவள் கன்னத்தில் தட்டியவன்,

 

சுக்ரேஷிடம் “பாய் ப்ரோ..” என்றபடி வெளியில் சென்றான்.

 

செல்லும் ராவண்னை வெறித்துப் பார்த்தவன் வேகமாக கதவடைத்துவிட்டு ஆருசி அருகில் அமர்ந்தவன், “என்ன ஆரு இதெல்லாம்? நான் பார்த்ததினால் பரவால்ல வேற யாராவது பார்த்து இருந்தா..” என்று ஆற்றாமையாக கேட்டான். 

 

அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் அவனை பாவமாக பார்த்தாள்.

 

அன்று ராட்ஷசனாய் அவன் கொடுத்த சுடு வார்த்தைகளை விட இப்பொழுது காதல் ராட்ஷசனாய் அவன் படுத்தும் பாட்டில் தான் சோர்ந்து துவண்டு போயிருந்தாள் ஆருஷி.

 

“மாமா..” என்று பாவமாக அழைத்து காலையில் அவள் அறைக்கே வந்து அவளிடம் பேசிச் சென்றது, இப்பொழுது வந்து இவ்வாறெல்லாம் நடந்து கொள்வது எல்லாவள்ளையும் கூறினாள். 

 

“ம்ஹூம்.. இதெல்லாம் சரிவராது ஆரு.. நீ கிளம்பு நாம நம்ம வீட்டுக்கே போகலாம். அங்க அவன் எப்படி வரான்னு பாக்கலாம்?” என்றான்.

 

ஒரு நிமிடம் அவளுக்கும் இந்நேரத்தில் அத்தை மற்றும் ஆச்சியின் அருகில் இருந்தால் தேவலாம் என்று தோன்றியது.

 

எப்படி இருந்தாலும் இதைப்பற்றி சொல்லித்தானே ஆக வேண்டும் அதை முன்னால் சொன்னால் என்ன? அதே நேரம் இவன் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் அல்லவா?

 

ஒரு பக்கம் ராவண் கொடுக்கும் இம்சைகள் மறுபக்கம் குடும்பத்தை வீண் அவமானத்திலிருந்து காக்க வேண்டும் என்று இரு கொல்லி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள் அவள். 

 

ஆருஷியின் முகத்திலிருந்து அவள் மனத்தை படித்தவன்,

 

“சென்னை கூட வேணாம் ஆரு... நம்ம சொந்த ஊருக்கே போயிடலாம். அங்க கேட்டா இது என் குழந்தை தான் சொல்லிக்கிறேன். ஒரு பிரச்சனையும் வராது” என்றதும் அவளோ பரிதவித்து போனாள். அவனின் வார்த்தையில்..!

 

ராவண்னிடம் திமிராக கெத்தாக சுக்ரேஷை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு கூறினாலும், அவனிடம் அன்பை தாண்டி நேசம் பிறக்கவில்லை இப்பேதை பெண்ணுக்கு. 

 

அதை தான் அவன் கொத்தாக கொள்ளை கொண்டு சென்று விட்டானே..!

 

அவனிடம் சென்ற மனது சென்றது தானே? அதை திரும்பவும் மற்றொரு இடத்தில் பிடித்ததோடு பிடித்து வைக்க இயலுமா என்ன? 

 

இங்கே ஆருஷியோ மிகவும் மன குழப்பத்தில் இருந்தாள்.

 

“சரி, நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று அவளை அனுப்பி வைத்தவன் சோபாவில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்..

 

 ராவண்னோ அதே மும்பையில் தான் அறை எடுத்து தங்கியிருந்தான். அவளது இன்ப நினைவுகளை சுமந்தபடி வலம் வந்தான் மும்பையை..! 

 

ஆன்லைனில் சில மாணவர்களுக்கு பகுதி நேரமாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். 

 

இப்போதெல்லாம் அவனால் ஒரு நிமிடம் கூட அவளை நினைக்காமல் இருக்க முடியவதில்லை. ஏனோ அன்று முழுவதும் அவள் நினைவாகவே இருந்தது. 

 

அன்று இரவு அவன் அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது வர்ஷாவும் இருந்தாள், அருகே சுக்கிரேஷும் அமர்ந்து இருந்தான். இருவரும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

‘இப்ப என்ன இங்க?’ என்று கேள்வியோடு முறைத்தான் சுக்ரேஷ்.

 

“என் பாப்பாவ பாக்க வந்தேன்” என்றதும் அவன் முறைக்க,

 

“பாப்பா.. பாப்பா..” என்று அவன் அழைக்க,

 

“அவ தூங்கிட்டு இருக்கா.. டிஸ்டர்ப் பண்ணாத..!”என்று கடுக்கடுத்தான் சுக்ரேஷ்.

 

“அதை நீ சொல்லாதே..!” என்று ரௌத்திரமாக அவனைப் பார்த்தான் ராவண்.

 

‘இவன் கிட்ட ஏகறத விட நயமா பேசி இவன அவாய்ட் பண்ணிட்டு ஆருசிய நம்ம கூட கூட்டிட்டு போய்டணும்’ என்ற முடிவில் இருந்தவன்,

 

“ப்ளீஸ் ராவண் புரிஞ்சுக்கோங்க நீங்களும் டாக்டர் தானே? அவ ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கா.. நீங்க இன்னும் ஸ்ட்ரெஸ் கொடுக்கிறது இந்த நேரத்தில் அவளுக்கு நல்லது இல்லை” என்றான் தண்மையாகவே சுக்ரேஷ்.

 

ஒரு மருத்துவனாய் அவளது மனநிலை அவனுக்கு புரிந்து இருக்க.. ஆனாலும் அவளை பார்க்காமல் செல்ல விருப்பமில்லாமல் அவளின் அறையை நோக்கி சென்றான் இராவண்.

 

சட்டென அவனின் கைப்பிடித்து தடுத்த சுக்ரேஷை கூர்ந்து பார்த்தவன் “அவள பாத்துட்டு போலாம் என்கிற ஐடியாவுல மட்டும் தான் வந்திருக்கேன். நீ ஏதாவது ஏடாகூடமா செஞ்சா நைட் இங்கேயே.. அதுவும் அவ ரூம்லயே.. ஸ்டே பண்ணிடுவேன். எப்படி வசதி?” என்றவனின் கையை விடுவித்தான் சுக்ரேஷ்.

 

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கே ஆருஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. மென்மையாக அவளது இரு கன்னங்களையும் பற்றி நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான். 

 

“குட் நைட் டி பாப்பா..” என்றவன் மெல்ல அவளது மணி வயிற்றை வருடி விட்டவன்,

 

“எப்ப டி நம்ம பேபிய பார்க்க விடுவ? ரொம்ப ஏக்கமா இருக்குடி பாப்பா.. உன் பெரிய அந்த மணி வயிர பேபியோடு இருக்குறப்ப பார்க்கணும்னு..” என்றவனின் கண்ணீர் துளிகள் அவள் கைகளில் பட்டு தெறிக்க, மீண்டும் அவளை கண்களை நிரப்பி கொண்டு வெளியேறி விட்டான்.

 

அன்று இரவில் அவளின் மணிவயிற்றை அவனால் சரியாக காண இயலவில்லை. முடிந்த அளவு முத்தங்கள் இட்டு நிரப்பினான் தன் ஜூனியருக்கு..!

 

அவன் சென்றதும் மெல்ல கண்களை திறந்த ஆருஷியோ அவள் கைகளில் பட்டு தெறித்த கண்ணீர் துளிகளை வெறித்துப் பார்த்தாள்.

 

இராவண் அன்று இரவு தூங்க மிகவும் கஷ்டப்பட்டான். அவள் நினைவால் அவனுக்கு இப்போதெல்லாம் தூக்கமே சரியாக வருவதேயில்லை. 

 

எந்த நேரமும் அவளை நினைத்து மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.

 

எத்தனையோ கர்ப்பிணி பெண்களை பேறுகாலங்களில் அழகாக கையாண்டு அவர்கள் பயத்தை போக்கியிருக்கிறான்..!

 

எத்தனையோ குழந்தை இல்லா பெண்களுக்கு செயற்கையாக கருவை வளர்த்துக் கொடுத்துள்ளான்..!

 

எத்தனையோ பெண்களுக்கு சிக்கலான பிரசவங்களையும் சர்வ சாதாரணமாக பார்த்து இருக்கிறான்..!

 

ஆனால் இன்றே.. தன்னவளின் பேறுகாலம் நெருங்க நெருங்க ஒரு வித திகிலில் தான் இருந்தான் ராவண்.

 

‘இந்நேரத்தில் தான் அவளோடு இருக்க வேண்டும். ஆனால் அவளோ விடமாட்டேன் என்கிறாளே.. வீம்புகாரி..!’ என்று அவளின் நினைப்பே அவனை வாட்டி வதைத்தது. 

 

புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் எல்லாம் தூரம் தான் போனது..!

 

அடுத்த நாள் காலையில் அவளைப் பார்க்க முடியவில்லை. இராவண் அவள் வீட்டுக்கு சென்ற பொழுது வீடு வெளியில் பூட்டி இருந்தது. சுக்ரேஷ் தான் ஏதோ விளையாடுகிறான் என்று புரிந்தது அவனுக்கு.

 

அவள் எங்கு இருக்கிறாள் என்று தேடிப்பிடித்து அவளை தூக்க அவனுக்கு வெகுநேரமாகி விடாது. ஆனாலும் அவளின் மனநிலையை பொறுத்து விட்டு பிடிப்போம் என்று அமைதியாக இருந்தான். 

 

மதியம் வரை வீட்டுக்கு திரும்பவே இல்லை.

 

ஆனால் அவள் எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? சரியாக உண்டாளா? என்று அவளைப் பற்றியே அவனுக்கு மிகவும் மன உளைச்சலாக இருந்தது.

 

மதியம் போல ஆருஷிக்கு ஃபோன் செய்தான். முதல் முறை அவள் எடுக்கவில்லை. இரண்டாவது முயற்சியிலும் அவள் எடுக்கவில்லை. 

 

“பிக் மை ஃபோன் டி பாப்பா.. அதர்வைஸ்..!” என்று அவன் அனுப்பிய மெசேஜை கடுப்புடன் பார்த்தாள் ஆருஷி. அவனின் அடுத்த முயற்சியில்தான் ஃபோனை எடுத்தாள், வேண்டா வெறுப்பாக..!

 

”பாப்பா..” என்ற அவனது இனிமையான குரலுக்கு 

”என்ன இப்போ? எதுக்கு இப்போ ஃபோன் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ற?” என்று எரிந்து விழுந்தாள் அவள்..

 

எப்பொழுது அவள் என்ன மாதிரி பேசுவாள் என்று நன்று உணர்ந்தவன்,

“நான் ராவண் டி..!” என்றான் மெல்லிய புன்னகையோடு..! 

 

”தெரியுது… அதுக்கு என்ன இப்போ..?” மெதுவாகவே பேசினாள்.

 

”ம்ம்ம.. எப்படி இருக்க? எங்க இருக்க? வீட்டுல ஆளையே காணோம்?”

 

“நீ எங்க போறன்னு உங்ககிட்ட அட்டனன்ஸ் கொடுத்துட்டு போனுமா என்ன?”

 

“ஓகே ஓகே கூல் டி பாப்பா.. சாப்பிட்டியா?” என்றான் மென்மையாக..!

 

”ஏன் சாப்பிடலைன்னா வந்து ஊட்டி விட போறியா?” என்றதும்,

 

“ஐ அம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்..!” என்றான் சிரித்துக் கொண்டே..

 

‘இவன தெரிஞ்சும் இப்படி பேசுறியே ஆருஷி?’ என்ற தன்னைத்தானே நொந்து கொண்டவள் “இப்ப எதுக்கு ஃபோன் பண்ண?” என்று அமைதியாக கேட்டாள்.

 

”உன்ன பாத்து ஒரு நாளாச்சு டி பாப்பா.. ஐ மீன் என் பேபிய பார்த்து ஒரு நாளச்சு.. அதான் எப்படி இருக்கேன்னு….?” என்று அவன் இழுக்க..

 

”என் பேபிக்கென்ன சூப்பரா இருக்கு” என்றாள் மெல்ல வயிற்றை வருடியபடி..!

 

”ம்ம்.. உன் பேபி? சரி சரி..! கேட்டேன்ல சாப்பிட்டியா…?”

 

”ம்ம்…”

 

”என்ன சாப்பிட்டே..?”

 

”ம்ம்ம்.. எல்லா மனுஷங்களையும் போல நானும் சாப்பாடு தான் சாப்பிட்டேன்” என்றாள் கடுப்போடு.

 

ஹா.. ஹா.. என அந்த பக்கம் அவன் வெடித்து சிரிக்கும் சத்தம் கேட்டது.

 

“நீ விம்பு புடிச்ச ராட்சசி ஆச்சே, அதனால நீ மனுஷ ரத்தத்தை குடிப்பியோன்னு நினைச்சேன்” என்றான் நக்கலாக‌..!

 

”யோவ்.. என்ன.. நக்கலா..?”

 

“சத்தியமா இல்லனு சொல்ல மாட்டேன்டி பாப்பா..!” என்று அவளை கொஞ்சம் வெறுப்பேற்றினான்.

 

“அப்படி எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சா.. மொதோ வேளையா உன்னோட ரத்தத்தை தான்‌யா குடிப்பேன், அவ்வளோ இம்சை பண்ற என்ன.!” என்றாள் அவளும் விடாமல்..

 

“ஓஹ் மை ப்ளஷர்..! ப்ளட் என்ன? என் ஹோல் பாடியுமே உன் உன் பிராப்பர்ட்டி தான். இரு டி பாப்பா நேர்ல பாக்கும்போது மொத்தத்தையும் வச்சுக்கலாம்..?” என்றான் சற்றே ஹஸ்கி வாய்ஸில் அவன். 

 

”ஏய்.. ச்சீ போடா..” என்று அவள் கத்த..

 

”இப்படி நீ கோவமா ச்சீனு சொல்லும்போது.. நீ சொல்ற அந்த வெட்கத்தோடு ச்சீ ஆட்டோமேட்டிக்கா ஞாபகம் வருது டி பாப்பா..! அத நினைக்கும்போதே உடம்புக்குள்ள தானா கிக் ஏறுது டி பாப்பா” என்றான் மீண்டும் அதே ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சம் மோகத்தை ஏற்றி.. அவளுக்கு கோபத்தை ஏற்ற..!

 

அவளோ “வேணாம் ராவண்..! என்று பல்லை கடிக்க..

 

“இதே லிப்ஸ் தான் பல நாட்கள் இன்னும் வேணும் ராவணன்.. இன்னும் வேணும்னு சொல்லுச்சடி பாப்பா” என்று மீண்டும் அவர்களின் அந்தரங்களை அவள் காதுக்குள் சரஸமாக.. அழுத்தமாக.. கூறினான்.

 

என்ன சொல்லி இவனை சமாளிக்க என்று தெரியாமல் அவள் தடுமாற..

 

”ஐ லவ் யூ டி பாப்பா” என்றான் ஆழ்ந்த குரலில்..!

 

”வேணாம்.. அந்த வார்த்தையை நீ சொல்லாதே அதை சொல்ற தகுதி உனக்கு இல்லை..” என்று வெடித்தாள்.

 

”ஏன் டி சொல்ல கூடாது? நான் சொல்லுவேன் ஐ லவ் யூ டி.. ஐ லவ் யூ டி.. ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி..!” என்றான் உல்லாசமாக..!

 

”இன்னும் கொஞ்ச நாளுல நான் அடுத்தவன் பொண்டாட்டிடா..” என்று அவள்‌ சீற,

 

“நாட் இன் யுவர் ட்ரீம்ஸ் டூ..!” என்றான் எகத்தாளமாக..!

 

பின் “நேத்து நைட்லாம் எனக்கு தூக்கமே இல்ல தெரியுமா..?” என்றான் கிறக்கமாக..

 

அவளோ அந்த பக்கம் அமைதியாக இருக்க “இப்படி நான் சொன்னதும் ஏன்னு கேட்கணும் டி பாப்பா நீ” என்றவன், “எல்லாம் உன்னாலதான்… ” என்றான் அவள் கேட்காமலே கொஞ்சலாக..!

 

”ஹே.. நா.. நான் என்னடா செஞ்சேன்…?” என்றாள் கொதிப்பாக அவனின் கொஞ்சலில்..!

 

”என்னை ஏங்க வெச்சு கொல்றியே டி பாப்பா..!” என்றதும், 

 

ஆருஷியின் மனதோடு ஒரு எண்ணம் முகிழ்த்தது.

 

‘ஒரு நாளைக்கே இவன் கண்ணில் படாமல் நான் தள்ளி இருந்தால் இவ்வளவு ஏங்குகிறான் என்றால் வாழ்க்கை பூரா இவனை இஏங்க விட்டால்? எப்படி இருக்கும்? ஏங்கி ஏங்கி சாவுடா நீ..!’ என்ற அவள்,

 

“இனி வாழ்நாள் முழுதும் அதுதான் உனக்கு ஸ்வாசதம். இனியொரு முறை நான் உன் கைக்கு கிடைக்கவே மாட்டேன்.. உன் வாழ்க்கையில் நான் இல்லை..!” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல,

 

பிளைட்டுக்கு நேரம் ஆகிவிட்டது என்று சுக்ரேஷ் சைகை செய்து அழைக்க.. கண்ணாடி கதவுக்கு அந்த பக்கம் நின்றவள், சட்டென்று ஃபோனை அணைத்து அதிலிருந்து சிம்கார்டை உருவி அருகில் இருந்த குப்பை தொட்டியில போட்டுவிட்டு சுக்ரேஷோடு நடந்தாள்.

 

“அவசரத்துக்கு பிசினஸ் கிளாஸ்ல தான் டிக்கெட் கிடைச்சு கொஞ்ச நேரம் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றவாறு அவளை மெல்லமாக அழைத்து சென்றான் சுக்ரேஷ்.

 

அவளது டிக்கெட்டை‌ சரி பார்த்த பெண்மணி, “உங்களுக்கு ஃபஸ்ட்க்ளாஸ் அப்கிரேடா ஆகியிருக்கு மேம்” என்றதும் அவள் சுக்ரேஷை பார்க்க,

 

“பரவால்ல நீ அங்க உட்காரு நான் பிசினஸ் கிளாஸ்ல இருக்கேன்.” என்று அவன் சென்று அமர்ந்து கொண்டான்.

 

‘அப்பாடி.‌ எப்படியோ அவன்கிட்ட இருந்து ஆருவ கூட்டிட்டு வந்தாச்சு..” என்று நிம்மதியோடு கண் மூடினான் சுக்ரேஷ்.

 

விமானம் எடுக்கும் நேரம் பெல்ட் போட சொல்லி ஆறிவிப்பு கொடுக்கப்பட்டது. பெரிய வயிற்றில் அவளால் பெல்ட்டை மாட்ட முடியாமல் திணற..

 

“ஐ வில் பாப்பா..!” என்று அவளை இடித்துக் கொண்டு, கற்றை‌மீசை அவள் பட்டு கன்னத்தில் உரச உரிமையோடு பெல்ட் போட்டவனை அதிர்ந்து பார்த்தாள் ஆருஷி..!

 

அவளி

ன் மாறா இன்றி வேறு‌ யாராம்?

 

அவளைப் பார்த்து கண்ணடித்தவன் அவள் வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக அந்த பெல்ட்டை மாட்டி விட்டான், அதிர்ந்து பார்த்தவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..!

 

வருவான் அசுரன்..!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top