ஆருயிர் 17
தலையின் அல்லகைகள் அரவிந்தை விட்டு சென்றதுமே அவனுக்கு வீட்டுக்கு செல்ல கொஞ்சம் கூட எண்ணம் இல்லை!!
இப்பொழுது சென்றால் ‘எங்கே போனாய் என்ன செய்தாய்?’ என்று தந்தை காரணம் கேட்பார். அதைவிட விஸ்வநாதன் உடனே ஃபோனை போட்டு யாழினிக்கு கூறி விடுவார்.
இவனை ஏற்கனவே தேடிக் கொண்டிருந்தவள் அர்த்த ராத்திரியிலும் அவசரமாக வர வாய்ப்புகள் அதிகம்! எனவே எதையும் கூறாமல்.. எங்கும் செல்லாமல் கோவிலில் ஒதுங்கியவன், யார் கண்ணிலும் படாமல் அமைதியாக அந்த தூண் மண்டபத்தில் படுத்துக்கொண்டான்.
‘இருட்டும் வரை இங்கே இருந்துவிட்டு கோவில் பூட்டும் நேரம் எழுந்து அப்படியே காலரா நடந்து அதன் பின் நடுராத்திரி வீட்டுக்கு செல்வோம், நடு இராத்திரி பொழுது மித்துவின் தூக்கத்தை கலைக்க மாட்டார் அப்பா’ என்று அவன் திட்டம் போட்டு இங்கே வந்து படுத்திருக்க.. அந்த வரதராஜனோ தான் ஒரு திட்டம் போட்டு இத்தனை நாளாக தேடித் திரிந்தவளின் தாகத்திற்கு தண்ணீராய்.. காரிருள் காட்டில் திரிந்தவளின் கண்களுக்கு பெரும் ஒளியாய் அவனை காட்டி மகிழ்வித்தார் வரதராஜன்.
முதலில் ஆர்த்தி காதல் என்கிற பெயரில் நடித்திருக்கிறாள் என்று தெரிந்த தான் மனசு சரியில்லாமல் ஏதோ சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று யோசித்து இருந்தாள் யாழினி. ஆனால் சொக்கலிங்கத்தின் பார்வை கோணம் வேறு மாதிரியாக இருக்க.. “அப்பா சொல்வதும் சரிதானே! இந்த விஷயத்துக்காக அவன் கோவித்துக் கொண்டு போகப் போகிறான்? வேறு என்னமோ நடந்திருக்கு!” என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்.
இதில் அதிரதன் வேறு தானாக அழைத்துப் பேச, அவளுக்கு கோபம் தான்! ‘எப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கிறோம் இவனுக்கு இப்பொழுது இந்த காதல் ஒன்னு தான் குறைச்சல்’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதில் அவன் சம்பந்தப்பட்டிருப்பான் என்று ஒரு துளி கூட நினைத்திருக்கவில்லை!!
“மழுப்பாம.. பேச்சை டைவர்ட் பண்ணாம.. சொல்லு அர்வி! யாரு உன்னை கடத்துனா சொல்லு??” என்று அவளின் வார்த்தை கொடுத்த அழுத்தத்தில்.. கண்களில் தெரிந்த பரிதவிப்பில்.. அவளிடம் உண்மையை சொல்ல அவனுக்கு துளியும் எண்ணமில்லை!
அதிரதனிடம் சண்டைக்கு செல்வாள் என்று ஆணித்தரமாக தெரியும் அவனுக்கு! அதனால் அவளிடம் சொல்லாமல் மறைத்து விடலாம் என்ற எண்ணம் தான் அவனுக்கு!
தன் கையை எடுத்து அவள் மீது சத்தியம் செய்ய சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை அர்விந்த்!
ஒரு திடுக்கிடல் அவனிடம்! அதை அவன் கை மூலமாக அவளும் உணர்ந்து இருந்தாள். ஆனால் அதனை மறைத்து அவன் இலகுவாக சிரித்து பேச்சை மாற்ற நினைக்க அவள் விடவே இல்லை அதற்கு.
“சோ.. அப்போ என்கிட்ட உண்மையை சொல்ல மாட்ட அப்படித்தானே..? என் மேல் சத்தியம் செய்ய சொன்னாலும் நீ சொல்ல மாட்ட.. அப்ப நீ யாரை காப்பாத்த நினைக்கிற? என்ன விட அந்த வேறு யாரோ உனக்கு முக்கியம் போய்ட்டாங்க இல்ல?” என்று இவள் பேச..
“ஐயோ..!” என்று ஆனது அரவிந்த்துக்கு.
‘இவளுக்காகத்தான்.! இவளின் வாழ்க்கைக்காக தான்..! நாம் மறைக்க நினைத்தால் இவளை விட வேறு யாரோ எனக்கு முக்கியம் என்று எண்ணுகிறாளே.. லூசு போடி!’ என்று நினைத்தவன் வேறு வழியின்றி கூறியிருந்தான்.
“உன்னை விட அவங்க முக்கியம் தான். நான் அவங்கள காப்பாற்ற நினைக்கிறது உண்மைதான்..” என்றதும் அவள் கண்ணில் ஒரு அதிர்ச்சி! அதனையும் தாண்டி என்னை விட வேறொருவர் உனக்கு முக்கியமா என்ற வலி.
ஒருவேளை ஆர்த்தி ஆக இருப்பாளோ என்ற எண்ணம் அவளுக்கு! ஏன் பெற்றோரை காட்டிலும் உற்றுத் துணையாக வருபவள் மனைவி தானே? எங்கும் எதிலும் முதலிடம் அவளுக்கே.. அதில் தோழிக்கு இடம் இல்லையே?’ என்று அவள் மனது புண்பட, அவனை அடிபட்ட வலியோடு பார்த்தாள் யாழினி. அவள் கண்களில் தெரிந்த வலியை காண சகிக்காதவன் “உன்னை விட முக்கியமானவங்க.. எல்லாம் உன் லவ்வர் தான்..” என்று அதை வேடிக்கை போல அரவிந்த் சொன்னான்.
“என்ன என்ன சொன்ன? லவ்வரா??
யாரு??” என்று இம்மையும் புரியாமல் மறுமையும் புரியாமல் அவனை பார்த்தாள் யாழினி.
“ஹே லூசு.. அப்போ அந்த அதிரதன் உன் லவ்வர் இல்லையா?” என்று அதிர்வது போல கேலியாக கேட்டான் அரவிந்த்.
“என்ன அதிரதனா?” இதை அதிரதனிடம் எதிர்பார்க்காமல் ஷாக் அடித்தது போல அதிர்ந்து நின்றாள் யாழினி!!
‘இவனை இந்த பக்கம் கடத்திவிட்டு.. மறுபக்கம் என்னை வேவு பாக்க ஆட்களை அனுப்பி.. இடையிடையே தன்னை நல்லவன் போல காட்டி.. என்னென்ன தகுடுதித்த வேலையெல்லாம் செய்திருக்கிறான் இவன்?’ என்று அதிரதன் மேல் அத்தனை கோபமும் திரும்பியது யாழினிக்கு.
“இருக்கு அவனுக்கு..” என்று அவள் முந்தானையை சொருகிக்கொண்டு வேகமாக கிளம்ப.. அவள் கைப்பிடித்து தடுத்தான் அரவிந்த்.
“என்னை விடுடா முதல்ல.. நான் போய் அவனிடம் ஒன்னுல ரெண்டு கேட்டுட்டு வரேன்” என்று அவள் ஆக்ரோஷமாக கத்தினாள்.
சற்றென்று அவள் வாயை பொத்தியவன் “கத்தாதே மித்து” என்று அவளை அடக்க வார்த்தையை முழுங்கிக் கொண்டாலும் கண்களில் அந்த சீற்றம் தெரிந்தது.
‘எப்படி என் அர்வியை அவன் கடத்தி வைக்கலாம்? கடந்த நான்கு நாட்களாக என்னென்ன அவஸ்தை பட்டு இருப்பான் இவன்?’ என்று அத்தனை கோபம் அதிரதன் மீது!!
“சரி.. அவன் கிட்ட இப்ப பேசல நீ வீட்டுக்கு வா போகலாம்” என்றதும் அவன் தன்னுடைய உடையை பார்க்க..
“நீ நேரா இப்போ நம்ம வீட்டுக்கு வா. காலையில அங்க போய்க்கலாம்” என்றதும் சரி என்று அவளோடு அவள் வீட்டுக்கு நடந்தான்.
“மாமா கிட்ட எதையும் நீ சொல்லாதே மித்து.. பாவம் அவர்” என்றதும் “அவருக்கும் தெரியும். என்னோட சேர்ந்து அவரும் ரோடு ரோடா அலைஞ்சார். அப்புறம் தான் ஸ்டேஷன் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கார். அத வேற போய் காலையில் வாபஸ் வாங்க சொல்லணும்” என்று பேசியப்படியே அவனோடு வீட்டுக்கு வந்தாள்.
வண்டி சத்தத்தில் சொக்கலிங்கம் எட்டிப்பார்த்தார். இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாளா மகள்? எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து தான் வருவாள் என்று எதிர்பார்த்து இருக்க.. சீக்கிரம் எப்படி வந்தாள் என்ற கேள்வியோடு காண சென்றவரின் கண்கள் அரவிந்தை கண்டதும் ஆனந்தத்தில் விரிந்தது. ஆனந்தத்தை விட அத்தனை ஆசுவாசம்.
“அர்வி.. எங்கடா போனா?” கலக்கத்துடன் கேட்டவர் அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள.. எத்தனை பேர் தன்னை நினைத்து தவித்து இருக்கிறார்கள்? எல்லாத்துக்கும் காரணம் அவனும்.. அவன் தங்கச்சியும்.. என்று பற்களை நறநறவென்று கடித்தான். ஆனால் வெளியில் புன்னகை முகமாக “அதான் வந்துட்டேன்ல மாமா.. ஃபீல் ஃப்ரீ! முதல்ல பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க” என்றான்.
அரவிந்த் விஷயங்கள் எதையும் மல்லிகாவுக்கு இவர்கள் சொல்லவே இல்லை அதனால் அவனை பார்த்ததும் “என்னடா அர்வி.. நாலு நாளா வீட்டு பக்கமே ஆள காணோம்? ஏதோ பேடண்ட் விஷயமாக அலையுறேன்னு மாமா சொல்லிக்கிட்டு இருந்தார்.. நல்லபடியா முடிஞ்சுதா?” என்றப்படி
மல்லிகா வர..
“ஆமா அத்த.. எல்லாமே முடிஞ்சுது! இனி மேலே போக வேண்டி இருக்காது” என்று ஒரு பெருமூச்சு விட்டவன் அமைதியாக அமர அவனிடம் எதுவும் பேசாமல் மற்றவர்களும் அமர்ந்து இரவு உணவை உண்டனர்.
இரவு வழக்கம் போல மாடியில் அமர்ந்து நிலவற்ற வானத்தை வெறித்து கொண்டு இருந்தவன் அருகில் அமர்ந்தாள் யாழினி.
“என்னடா பெரிய தேவதாஸ் மாதிரி சோகத்துல மூழ்கி இருக்க.. அவ ஒருத்தி தான் இந்த ஊர் உலகத்துல பொண்ணா? வேற பொண்ணே இல்லையா டா? போய் தொலையுறானு விட்றதை விட்டுட்டு இப்பதான் சோக கீதம் வாசிக்கிறான்” என்றாள். திரும்பி அவளை பார்த்தவனின் கண்களில் இருந்து தவிப்பு அவளுக்கு எதற்கு என்று தெரியாமல்.. காரணம் புரியாமல் “என்னாச்சு அர்வி??” என்று இரு கைகளால் அவன் கன்னத்தை தாங்கி கண்களை பார்த்து கேட்க.. ஒன்றும் இல்லை என்ற தலை ஆட்டியவன் “கொஞ்ச நேரம் படுத்துகிறேன் மித்து” என்று அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
நான்கு நாட்களாக தலையின் அரவணைப்பில் உண்டு உறங்கி உற்சாகம் போல காட்டிக் கொண்டிருந்தாலும் மனதில் அத்தனை வலி!! கஷ்டப்பட்டு கண்டுபிடித்தவற்றை களவாண்டு சென்று விட்டாளே என்று!!
ஆனால் புத்தி உள்ளவன் பிழைத்துக் கொள்வான் அல்லவா? அது ஒன்று மட்டும்தான் சாஃப்ட்வேர் என்று இல்லை.. அதை தாண்டியும் இன்னும் சிறப்பாக அவனால் புதுசு புதுசா கண்டுபிடிக்க முடியும்!! ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தை எப்படி நேர் செய்வது? அதற்கு தேவையான பணம்.. என்று என்னென்னவோ எண்ணங்கள் சிதறடித்துக் கொண்டிருந்தன அரவிந்தை.
இவ்வளவு சிந்தனைகள் இருக்க எங்கிருந்து தூக்கம் அவனைத் தழுவும்? ஆனால் இப்பொழுது அவனின் மித்துவின் மடியில் படுக்க.. அவள் மென்மையாக அவனின் தலையைக் கோத.. மெல்ல மெல்ல அவனை தூக்கம் ஆட்கொள்ள.. நொடியில் உறங்கி போனான்.
தூங்கும்போது கூட முகத்தில் ஏதோ சிந்தனையோடு நெற்றி முடிச்சுயோடு உறங்கியவனை பார்த்துக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தாள் விடிய விடிய யாழினி.
காலையில் அர்வி எழுந்து பார்க்கும் போது யாழினி இல்லை! தலையணை தலையில் இருக்க போர்வை போர்த்து விட்டிருக்க.. ‘சரி தான் இரவு தூங்கியதும் எப்படி படுக்க வைத்து சென்று விட்டாள்’ என்று நினைத்திருந்தான். அவனுக்காக விடிய விடிய அவள் தூங்காமல் இருந்தது தெரியவில்லை. யாழினி பள்ளிக்கு கிளம்பி விட்டிருந்தால் என்று செய்தி கிடைத்தது.
சொக்கலிங்கம் தான் அவனுக்காக கடைக்கு சென்று வேறு உடை எடுத்து வந்திருக்க “இங்கே குளிச்சிட்டு.. சாப்டுட்டு அப்புறம் மேல் போகலாம் அர்வி” என்றதும் சொக்கலிங்கத்தின் பார்வையை படித்தவன் “சரி.. மாமா” என்று குளித்துவிட்டு வர மல்லிகா இருவருக்கும் உணவை எடுத்து வைக்க “நீங்களும் உட்காருங்க அத்த.. எப்ப பாத்தாலும் பரிமாறிக்கிட்டே தான் இருப்பீங்களா? சேர்த்து சாப்பிடுங்க மணி என்ன ஆகுது?” என்று அதிட்டி அவரையும் அமர வைக்கு மென் சிரிப்போடு அவரும் அமர்ந்தார் அவர்களோடு.
வெளியில் சொக்கலிங்கம் மல்லிகாவோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் “மித்து அங்க என்ன செய்றானு தெரியலையே? அதிரதனை ஏதாவது கேள்வி கேட்பாளா? இல்லை நாம சொன்னதுக்காக அமைதியாக விட்டுவிடுவாளா?” என்ற தவிப்பு அவனிடம்.
காலையில் சற்று சீக்கிரமாகவே அதுவும் உற்சாகத்தோடு வந்திருந்தான் அதிரதன். நேற்று அரவிந்த் வீட்டுக்கு சென்றது அவனுக்கு தெரிந்தது. தலை விட்டு விட்டோம் என்றதும் அரவிந்த் வீடு மற்றும் யாழினி வீட்டுக்கு அவன் போட்டு வைத்திருந்த ஆட்கள் இரவு யாழினியும் அரவிந்தும் வந்ததும் உடனே தெரிவித்து விட்டனர்.
அதனால் காலையில் தன் மனதை கூறி சீக்கிரம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெரும் பெரும் கனவுகளோடு பள்ளியை நோக்கி இல்லை யாழினி நோக்கி வந்து கொண்டிருந்தான் அதிரதன்.
அசம்பிளி முடிந்து பிள்ளைகள் எல்லாம் தங்கள் வகுப்பறை நோக்கி சென்று கொண்டிருக்க.. அவர்களை அமைதியாக பார்த்து நின்று கொண்டிருந்தாள் யாழினி. தூரத்தில் அதிரதன் வருவது தெரிந்தது. தன்னிடம் தான் பேச வருகிறான் என்று அவளுக்கு புரிய.. வழக்கம்போல உயிர்ப்பே இல்லாமல் “ஒரு குட்மார்னிங்” வைத்துவிட்டு அவள் அமைதியாக நிற்க..
“உங்க கூட கொஞ்சம் பேசணும் வாங்க மிஸ் யாழினி” என்று அவன் சென்று விட்டான்.
இதோ இந்த தருணத்திற்காக தானே காத்திருந்தாள் அமைதியாக உள்ளே சென்றாள். சற்று படபடப்போடு எதிர் கொண்டவன் “அரவிந்த் வந்துட்டாரு போல” என்று கஷ்டப்பட்டு மரியாதையாக அவன் பேச..
இவள் ஒற்றைப்பருவத்தை தூக்கி அவனை ஒரு பார்வை பார்த்தவள் “அதானே கடத்த சொன்னவர் தானே விடவும் சொல்லணும்.. மிஸ்டர் அதிரதன்!” என்றதும் அவன் அதிர்ந்து “யார் யார்? நானா? வாட் அட்ராஷியஸ்?” என்று திடுக்கிட்டு பேச..
“ஜஸ்ட் ஷட் அப்! என்ன.. என்ன தெரியும் எங்களை பத்தி உங்களுக்கு? எதுக்காக அர்வியை கடத்த சொன்னீங்க? நாலு நாள் கடத்தி வைச்சதும் இல்லாம அவன போட்டு அடிக்க வச்சிருக்கீங்க..” ஏற்று பேசவுமே அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.
“அப்படி என்ன தப்பு செஞ்சான் சொல்லுங்க? அப்படி என்ன தப்பு செஞ்சான் அர்வி?” என்றதும் அவன் தன் கோபத்தை அடக்கியவாறு நின்றிருந்தான்.
இதுவரை யாரும் அவனிடம் ஒற்றை கேள்வி கேட்டதில்லை இன்று யாழினி நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“உங்க தங்கச்சினு தெரிஞ்சு அவன் ஒன்னும் காதலிக்கல.. இத்தனைக்கும் காதல்னா காத தூரம் போறவன இழுத்து பிடித்து காதலிக்க வச்சது உங்க தங்கச்சி தான்.. இதுல சொல்றா அவங்க ஸ்டேட்டஸ் அவ கேஷுவல் ஐ லவ் யூ சொன்னாளாம். ஒரு பெண் ஆணோடு எந்த நோக்கத்தோட பழகுறானு அந்த ஆணுக்கு தெரியாதா? ச்சச்… என்ன பிறவி இவ எல்லாம்?” என்று ஆரத்யாவை பற்றி பேசியதும் அதிரதனிடத்தில் கோபம்!
‘தப்பே செய்திருந்தாலும் அவள் தங்கை அல்லவா எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?’
“யாரை பத்தி பேசுற அவ என் தங்கச்சி!” என்று அதிகாரமாக உரைத்தவன் அவளை சீற்றமாக பார்த்தான்.
“ஓஹ் தங்கச்சி?? உங்க தங்கச்சி தப்பே செய்திருந்தாலும் அவளை நீங்க புரோடக்ட் பண்ணுவீங்க ஆனால் தப்பு செய்யாத என் அர்வியை நீங்கள் கடத்தி வைத்து ஆள விட்டு அடிக்க வைப்பீங்க? எவ்வளவு தைரியம் உங்களுக்கு?? யார் கொடுத்த தைரியம் இது? ஓஹ் பணம்??!!” என்று எள்ளலாக அவனைப் பார்த்து சிரித்தாள்.
“யாழினி ஏதோ வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத.. அரவிந்த கடத்தி எனக்கு என்ன ஆகப்போகுது சொல்லு? அவன் என் தங்கச்சி லவ்வை அக்செப்ட் பண்றதும் அக்செப்ட் பண்ணாததும் அவங்களோட பர்சனல்! இதுல எனக்கு என்ன வந்துச்சு? அதுவும் இல்லாம என் தங்கச்சியோட ஷேர் நிறைய இருக்கு அவ ஒரு பணக்காரனா தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எதிர்பார்க்கல.. அவகிட்ட இருக்கிற பணமே போதும்!! ஆனா அவளுக்கு பிடிச்சிருக்குனுமே.. அவ ஏதோ வேலைக்கு வந்த இடத்துல பேசி பழகுனத காதல்னு இவர் நினைச்சி இருக்காரு.. அதுக்கு அவள் பொறுப்பு இல்ல!” என்று அப்பொழுதும் தங்கை மேல் இருந்த தப்பை அவன் ஒத்துக் கொள்ளவில்லை. அவனின் வளர்ப்பு முறையும் பணமும் ஆணவமும் அவனை ஒத்துக்கொள்ள வைக்க மறுத்தது.
“ஓ ஸ்டேட்டஸ்!! உங்ககிட்ட பணம் இருந்தா எங்க கிட்ட பணம் இல்லையென்றால் நாங்க உங்க கால்ல வந்து விழுந்துருவோம்னு நீங்க நினைக்கிறீங்க..!! குட்.! நல்ல எண்ணம். ஆனா அண்ணனும் தங்கச்சியும் ஒன்னு புரிஞ்சுக்கல அர்வியோ இல்லை நானோ இந்த பணத்துக்கு எல்லாம் மயங்காதவங்க! குறிப்பா அர்விக்கு இந்த பணம் தான் முக்கியம்னா இந்நேரம் சாஃப்ட்வேர் உலகத்துல அவன் கொடி கட்டி பறந்து இருப்பான். ஆனால் அவனுக்கு தேவையானது அது இல்லை! அதை சொன்னாலும் உங்களுக்கு புரிய போறது இல்ல.. இப்ப நான் எதுக்கு வந்தனா இன்னியோட எல்லாமே கிளியர் கட்! நான் இந்த ஸ்கூலுக்காக எந்த பாண்டுலையும் சைன் போடல.. அதனால எங்க இருந்து நான் போறேன்! இல்ல ஏதாவது பாண்டிங் ஏதாவது இருக்குன்னு நீங்க என்ன பிளாக்மெயில் பண்ணினால்…” என்று அவள் கூற “பண்ணினா..??” என்று அவனும் சுவாரசியமாக கேட்டான்.
“இப்பல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களிடம் பேச கோர்ட் போலீஸில் தேவை கிடையாது! ஒரு மொபைலும் அதில் இன்டர்நெட் facebook அக்கவுண்ட் இருந்தா மட்டும் போதும்! அதிலேயே கிழக கிழகனு நான் கிழிச்சிடுவேன். உங்க தங்கச்சி எங்க கூட எடுத்துகிட்ட போட்டோஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு.. அதையும் போட்டு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்!” என்று வேகமாக வெளியேறியவரின் முதுகை வெறித்து பார்த்தவனின் மனக்கண்களில் அடுத்து.. அடுத்து.. அடுத்து அதிரடியை செயல் படுத்த தொடங்கினான்.
இவ்வளவு பேசியும் யாழினியை அதிகம் பிடித்தது. அவளின் அந்த நேர்மை நிமிர்வு இரண்டையுமே..
யாழினியை தன்னருகே கொண்டு வந்து சேர்க்க திட்டம் தீட்டியது அதிரதனின் அதிரடி மூளை!!
அதன்படி.. இரண்டாம் நாள் யாழினி அண்ணனிடம் இருந்து ஃபோன் வந்தது. அவனுக்கு பெரிய கம்பெனியில் சிஇஓ போஸ்ட் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த கம்பெனியின் முதலாளி பெண்ணை மணக்கும் பாக்கியமும் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.
ஆனால் அந்த முதலாளியின் பெண் ஆரத்தி என்று தெரிந்தவுடன் இரண்டு குடும்பமே அதிர்ந்தது!!
அதிரதன் தன் ஆட்டத்தை துவங்கி
விட்டான். இனி அவனை தடுக்க அரவிந்த் என்ன செய்வானோ அரணாய் யாழினியை காப்பானா?? அரனாய் அவனை வெல்வானா??
தொடரும்..