ஆருயிர் 16
அதிரதனுக்கு இப்போது வேற வழி தெரியவில்லை. எப்படியாவது அரவிந்தை விடுவித்தே ஆக வேண்டிய கட்டாயம்!!
“இவன் விஷயத்துல மட்டும் நாம் நினைக்கிறது எதுவுமே நடக்க மாட்டேங்குதே.. ச்ச..!! யாழினியை இவனிட்ட இருந்து பிரிக்க முடியல.. இவன் கெஞ்சி கதறி ‘என்னை வெளியே அனுப்புங்கனு’ அவன் துடிக்கிறது பாக்கணும் நினைச்சேன்.. அதுவும் முடியல! ஏன் இவன் விஷயத்தில் மட்டும் எல்லாமே தப்பாவே போயிட்டு இருக்கு.. எனக்கு எப்பவும் தப்பாகாதே!!” என்று யோசித்து கொண்டு இருந்தான் அதிரதன்.
தொழில் போட்டியில் அவன் போட்ட கணக்குகளும் அதற்கு உபயோகப்படுத்தும் அவன் பணமும் இல்லை என்றால் அதற்கு ஈடான பொருளும்.. சரியாக இலக்கை அடித்து தூக்கி அவனை வெற்றியின் பாதையில் கொண்டு சென்று இருக்கிறது.
ஆனால் மனிதர்கள் மனமும் அவர்களின் உணர்வுகளும் விற்பனைக்கு அல்லவே!!
அதை அதிரதன் புரிந்து கொள்ளும் காலமும் வரும்!!
யாழினி சென்றவுடன் அட்லீஸ்ட் அவனையாவது விடுவித்து இவளின் வேலை விடுமுறையை ரத்து செய்து தன் அருகிலேயே வைத்துக் கொள்ள ஆசை கொண்டது அவன் காதல் கொண்ட மனது!!
ஆனால் வெறும் அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டு.. தன் இஷ்டப்படி அவளை ஆட்டி வைக்க நினைப்பதெல்லாம் உன்னத காதலில் சேருமா? இல்லை இல்லை சாதாரண காதலில் சேருமா என்ற அரிச்சுவடி கூட இந்த பெத்த தொழிலதிபனுக்கு தெரியவில்லை!
காதலின் அரிச்சுவடி அன்பு அல்லவா? அதை அவன் சிறு வயதிலிருந்து அனுபவித்து இருந்தாலோ இல்லை யாரிடமாவது காட்டி இருந்தாலும் தெரிந்து இருக்கும்.
அவனை பொறுத்தவரை காதல் என்பது அவனின் இணை கண் காண்பவற்றை எல்லாம் இல்லை என்காமல் வாங்கி குவித்து அவளை வசதியில் திக்கு முக்காட வைத்து எப்பொழுதும் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு.. தன் உயர்வை காட்டி, தன் தொழில் வெற்றியை சிலாகித்து அவளை எப்பொழுதும் ஆச்சரியத்தில் வைப்பதே…!!
சாதாரண மேல் தட்ட வர்க்கத்தின் எண்ணம். அப்படியொன்றும் சொல்லி விட முடியாது. ஒரு சில மேல் தட்டு வர்க்கத்தின் காதலுக்கான விளக்கம் மட்டுமே இது!
ஆனால் அது பாசம்.. விட்டுக்கொடுத்தல்.. பிறரிடம் தன்னவனை விட்டுக் கொடுக்காமல் இருத்தல், இதெல்லாம் அவன் அறிந்திருக்கவே இல்லை! அவன் அறியாதவற்றை எல்லாம் எங்கணம் யாழினியிடம் அவன் காட்ட…?!
“ஷிட்!! முதல்ல இந்த அரவிந்தனுக்கு ஒரு வழி பண்ணனும்!” என்று முடிவெடுத்தான்.
இதுவே அவனது எதிரியாக இருந்தால்.. இந்நேரம் அரவிந்த் புதைத்த இடத்தில் புல் என்ன மரமே முளைக்க வைத்திருப்பான்.. அதிரதன் வர்மா!!
ஆனால் அவனுக்கு அரவிந்தையும் தெரியவில்லை! யாழினியையும் தெரியவில்லை! இவர்களுக்கு இடையே இருக்கும் அந்த ஆழமான அன்பையும் தெரியவில்லை..!!
ஃபோனை போட்டான் அரவிந்தை அடைத்து வைத்திருக்கும் தலைக்கு!!
“ஹேய்.. அவன விட்டுடு. ஆனால் எங்க யார் கடத்தினாங்க என்ன ஏதுன்னு அவனுக்கு எதுவும் தெராய கூடாது! எந்த சந்தேகமும் என் மீது வரக்கூடாது.. விடறதும் ஆந்திரா பக்கத்துல எங்கேயாவது நடு ரோட்ல ஆளில்லாத இடமா.. வேணா.. வேணா ஆளில்லாத இடம்னா இவன் தேடி கண்டுபிடித்து ஊரு வந்து சேரவே ரெண்டு நாள் ஆயிரும். நல்ல கூட்டமா இருக்குற இடத்துல விட்டுட்டு வந்துருங்க.. வேற எதுவும் பேசக்கூடாது” என்றான்.
“ஓகே சாரே.. ஒரு அரை மணி நேரத்தில் கூப்பிடுகிறேன்” என்றான் தலை.
“அப்பாடி அரவிந்தை விட்டாச்சு.. இனி யாழினியை நம்ம பக்கம் கொண்டு வர அடுத்து அடுத்து அதிரடியா எதாவது செய்ய வேண்டும்” என்று நிம்மதியாக திட்டம் வகுத்தான் அதிரதன்.
சொன்னது போல அரை மணி நேரத்தில் தலையிடமிருந்து ஃபோன் வந்தது. “என்ன நான் சொன்ன மாதிரி செஞ்சாச்சா?” என்று ஆர்வமுடன் கேட்டான் அதிரதன்.
அந்த பக்கம் தலை மௌனம் காத்தது.
“என்னடா நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. நீ பதில் சொல்லாம இருக்க?”
*ஐயோ சாரே..!! அவன் என்ன சாரே இவ்வளவு பிரச்சனையா இருக்காற்? எவ்வளவு அடி அடிச்சும்.. சாப்பாடு போடாம கொடுமை படுத்தியும் கொஞ்சம் கூட அசரமா இருக்கான் சாரே.. இப்ப என்னன்னா நீங்க சொன்ன உடனே ஆளை விட்டு அவனை கூட்டிட்டு வர சொன்னேன் அவன அடைச்சி வச்ச இடத்திலிருந்து.. அந்த பய வரமாட்டானாம்! அவன் மனச புண்ணா இருக்காம். அது ஒரு பொண்ணால புண்ணா போச்சாம்.. அதனை இங்கன இருந்து ஆத்திக்கிறேன்.. எனக்கு சரக்கு குடுனு கேட்கிறான் சாரே.. போ சொன்னா போகாம தரையில உட்கார்ந்து அழுச்சாட்டியம் பண்றான் சாரே..” என்றதும் “என்னது தலையில் உட்கார்ந்து போக மாட்டேனு சொல்றானா?” என்று அதிர்ந்து கேட்டான் அதிரதன்.
“அக்கஹான் சாரே.. அதே தான்
பண்றான் அந்த கசுமாலம்.
அதோட இருந்தா பரவால்ல சாரே.. பொண்ணால புண்ணான மனச ஆத்த ஆல்கஹால் வேணும்னு கேட்கிறான் சாரே.. எங்க கிட்ட அந்த கருமம் எல்லாம் ஏது சாரே? நாங்க சுண்ட கஞ்சியும்.. நாங்களே ஓனா காய்ச்சுன சரக்கையும் தான் குடிச்சிகினு இருக்கோம்.. இவன் பண்ற அலும்புக்கு.. வர்ற கோபத்துக்கு ஒரே போடா போடணும்னு கை கால் நரம்பு எல்லாம் துடியா துடிக்குது சாரே” என்றான் உணர்ச்சி பிழம்பாக அந்த தலை.
இவர்கள் சம்பாஷனையை எல்லாம் அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அரவிந்துக்கோ சிரிப்பு பொத்துக் கொண்டு வர வெடித்து சிரிக்க இருந்தவனை அருகில் இருந்த தலையின் அல்லக்கை ஒருவன் வாயை பொத்தி “ராசா.. தம்பி.. நைனா.. சிரிக்காத!” என்று கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆனால் அதை எல்லாம் தாண்டி உடம்பு அவனுக்கு சிரிப்பில் குலுங்கோ குலுங்கென்று குலுங்கியது.
மெதுவாக கையெடுத்து சிரிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தவுடன் அல்லக்கை கையை நீக்கிவிடு “அண்ணாத்த செமையா பர்ஃபார்மன்ஸ் கொடுக்குறாரு!! ஓரளவுக்கு நடிக்க சொன்னா இவர் உலக அளவுக்கு நடிக்கிறாரே சகோ. நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளுங்க.. இந்த தொழில் எல்லாம் விட்டுட்டு சினிமால போய் இது மாதிரி அடையாட்கள் இருப்பாங்க தெரியுமா.. அதுல போய் சேர்ந்துருங்க.. அண்ணன் தான் பக்க வில்லனா வருவாரு” என்று இவன் அல்லக்கைகளோடு தனி மாநாடு நடத்திக் கொண்டிருந்தான். இங்கே தலை அதிரதனோடு பேசுகையில்..
“இது என்னடா புதுப் பிரச்சனை..!” தலை வலித்தது அதிரதனுக்கு.
“என்னடா இவன் எந்த சைடு போனாலும் இப்படி நம்மளை இம்சை படுத்திறான்.. இவன யாரு என் யாழு பக்கத்து வீட்டில் பொறக்க சொன்னா.. இரண்டு பேரும் ஏன் பிரெண்டானங்க.. இப்ப எங்க காதலுக்கு இவன் தடையாக வந்து நிற்கிறான்.. தங்கச்சி இவகிட்ட வேற வேலைக்கு போயிருக்கா.. எங்க சுத்தாலும் என் குடும்பத்துடன் பைண்டி ஆகுறானே.. ஆண்டவா!” என்று அருகில் இருந்து டேபிளில் குத்த அந்த கண்ணாடி டேபிலோ சுக்கு சுகாகி போனது.
“டேய்.. எனக்கு நீ சொல்ற அம்புலி மாமா கதை எல்லாம் வேணாம். அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து போய் விட்டுட்டு வர்ற. அதுவும் காஞ்சிபுரத்தில் பக்கத்திலேயே விட்டுட்டு வா.. ஆந்திரா எல்லாம் வேணாம். இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள் அவன் வீடு போய் சேர்ந்துட்டாங்கற நியூஸ் எனக்கு வந்தே ஆகணும்! அப்பதான் உனக்கு பேமெண்ட் இல்லை பேமென்ட் கிடையாது ஒன்னும் கிடையாது” என்றதும் தலையோ அதிர்ந்து,
“ஐயோ சாரே.. அப்படி எல்லாம் என் வயித்துல அடிக்காதீங்க! என்ன நம்பி எத்தனை பன்னிக்குட்டிங்க இருக்கு தெரியுமா? அதுவும் பெருத்த பன்னிகுட்டிங்க.. எல்லாத்துக்கும் நான் போடுற அந்த தீனி தான். நீங்க தயவு செய்து பேமென்ட் ஜிபேயில் கூட அனுப்பிடுங்க.. இப்ப நான் ஜிபேயும் டவுன்லோடு பண்ணி வச்சிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல நீங்க சொன்ன இடத்தில இவனை விட்டு இருப்போம்” என்றான் அந்த தலை.
அதிரதனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன், “தம்பி இன்னிக்கு உனக்கு ரிலீஸ்” என்று சிரித்தான்
தலை.
“அப்படியெல்லாம் நான் போக மாட்டேன்.. நீங்க சொன்னதுல கொஞ்சமாதான் நான் செய்ய வேண்டாமா? அழுது அலுச்சாட்டியும் பண்ணி..” என்றதும் அவன் தோளில் தட்டிக் கொடுத்த தலையோ “முதல்ல நீ கிளம்பு தம்பி.. யாரோ ஒரு பொண்ணு உன்னை ஏமாத்துனதுக்காக இத்தனை வருஷமா அன்பு காட்டி வளர்த்த அப்பா அம்மாவை இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தலாமா? கண்டிப்பா உன்ன காணாம.. உன்ன பாக்காம அங்க ஒரு ஜீவன் சாப்பிடாமல் கொள்ளாமல் துடியா துடிச்சிட்டு இருக்கும்” என்றான் தலை.
அவன் சொன்னது என்னவோ அவனது பெற்றோர்களைப் பற்றிதான். ஆனால் தலை சொல்ல சொல்ல அவன் நினைவு அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது சங்கமித்ர யாழினி..!!
அம்மா அப்பாவை பற்றி கூட அவனுக்கு கவலையில்லை. ஏனென்றால் அவனின் மித்து எதையாவது சொல்லி அவர்களை சமாளித்து வைத்திருப்பாள் என்று அவனுக்கு நிச்சயம்!!
‘ஆனால்.. தன்னை காணாமல் இவள் தான் தேடி எங்கெங்க தேடி அலைகிறாளோ? தலை சொன்னது மாதிரி தவிச்சு ஒய்ஞ்சு போயிருப்பா.. இப்படி அவளை மறந்து போனோமே!’ என்று குற்ற உணர்வு அவனை தாக்க.. அரவிந்த்துக்கு கண்கள் கலங்கிவிட்டன.
அவனின் கலங்கிய கண்களைப் பார்த்த அண்ணாத்தையும் “நான் சொன்னேன் இல்ல.. அம்மாவ நினைச்ச உடனே உனக்கு கண்ணு கலங்கி தண்ணி வருது பாரு” என்றதும் தலையாட்டி இல்லை என்றான்.
“எங்க அம்மா அப்பாவை மித்து கண்டிப்பா பாத்துக்குவா.. பார்த்து இருப்பா..” என்றதும் தலை புரியாமல் “யாரது மித்து?” என்று கேட்டான்.
சின்ன சிரிப்போடு கண்களின் தண்ணீரை உள்ள இழுத்துக் கொண்டவன் புறங்கையால் கண்களை தேய்த்து விட்டு “மித்து.. என் ஏஞ்சல்!” என்று அவனுக்கும் அவளுக்குமான அந்த ஆழமான அன்பை நட்பை அவன் விவரிக்க விவரிக்க அசத்து தான் போனான் அந்த தலை.
“அடப்பாவி.. கண்ணுக்கு பக்கத்துல அருமையான பொண்ண வச்சுக்கிட்டு.. கைக்கு எட்டும் தூரத்திலேயே பாசமும் நேசமும் அக்கறையும் காட்டுற பொண்ண வச்சுட்டு வேறு எங்கெங்கே தேடி அலைஞ்சிருக்கியாடா.. எப்பவுமே கையில் இருக்கிற கலாக்காயை தெரியாது. மரத்தில் இருக்கிற பலாக்காய் தான் நமக்கு பெருசா தெரியுமாம்!! ஆனா பலாக்காய் யாரோடதோ.. ஆனா இந்த கலாக்காய் உன்னோடுதான்!” என்று அவன் உள்ளங்கையை மடித்து அதன் மீது தன் கையை இறக்கியவன் “முதல்ல அந்த பொண்ண கலங்க விடாது.. நல்லா பாத்துக்கோ நைனா” என்றான்.
அவன் சொன்னது புரிந்தும் புரியாமலும் சற்று குழப்பத்தோடு தலையை பார்த்த அரவிந்தனின் கன்னத்தில் தட்டியவர், “எடுத்து சொல்லி புரிய வைக்க அன்பு ஒன்னும் அனா ஆவனா பாடம் இல்லடா தம்பி.. அதனை மனசால உணரணும்.. நீயும் உணருவ.” என்று அவன் நெஞ்சத்தை ஒற்றை விரலால் தொட்டு காட்ட.. குனிந்து அவரது விரலையும் அவரையும் பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டு அனைவரிடமும் பிரியாவிடை பெற்று வந்தான். வரும் பொழுது அவர்களுடைய நம்பரை வாங்கிக் கொண்டு தன்னுடையதை கொடுத்துவிட்டு வந்தான்.
அதிரதன் சொன்னது போல காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் அவனை விட்டார்கள். “அடப்பாவிகளா.. இங்கே விட்டதுக்கு கொண்டு போய் வீட்லயாவது விட்டிருக்கலாமில்ல..” என்று இவன் அல்லகைகளிடம் நக்கல் செய்ய..
“அட போங்க தம்பி.. பணம் கொடுத்த அந்த முதலாளி சொன்னதுல இதை மட்டுமாவது செய்வோமே” என்று சிரித்துக் கொண்டே அவர்கள் சென்று விட்டார்கள்.
ஆங்குதோதான உடம்பும்.. தலை கொள்ளா முடியும்.. முகம் கொள்ளா தாடியும் மீசையும்.. அவ்வப்போது பாக்கு போட்டு எச்சில் துப்பியவாறு அழுக்காக பயங்கரமாக இருக்கும் இவர்களுக்குள் மனதில் இருக்கும் அந்த நல்ல மனத்தை கண்டு சிலிரத்துதான் போனான் அரவிந்த்.
‘எல்லா மனிதர்களிடமும் ஒரு குழந்தை மனமும் நல்ல மனம் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான் போல.. ஆனால் இந்த கலியுகத்தில் அவர்கள் பெரும்பாலும் உறங்கிக் கொண்டே இருப்பது தான் வேதனை!’ என்று சிரித்தவன் வீட்டுக்கு செல்லவில்லை. ஏனோ மனதை மீண்டும் வெறுமை பூசிக் கொண்டது.
இந்த முறை ஆராத்யா என்கிற ஆர்த்தி அவன் நினைவிலும் மனதிலோ எங்குமே இல்லை. அவள் செய்த துரோகத்தின் வடு மட்டுமே அவன் நெஞ்சில் இருக்க அதை பற்றி நினைக்கக்கூட மறந்தவனுக்கு இப்பொழுது மனதெல்லாம் யாழினி பற்றி தான்.
தலை சொன்னது போல அவளது அன்பு அளப்பரியது!! பாசம் போற்றுதலுக்குரியது!! நேசமும் நெடுங்கடல் போன்றது!! அதை எல்லாம் நினைக்க பூரித்துக் கொண்டது மனம். ஆனால் இப்படிப்பட்ட அருமையான பெண் அந்த அதிரதனை விரும்புகிறாளே.. அவனோடு இவளால் ஒத்து வாழ முடியுமா? குடும்பம் பாசம் அன்பு நேசம் என்று சுற்றி சுற்றி இதையே பார்க்கும் இந்த பெண்ணுக்கும்.. பணம் தொழில் தான் என்ற ஆணவம் கொண்ட அவனுக்கும்.. எந்த வகையில் ஒத்து வரும்! ஒரு வேலை காதல் இதை எல்லாம் சாத்தியமாக்கலாம் என்று நினைத்திருந்தான்.
அவன் நினைத்த அளவு காதல் என்று இல்லை ஈர்ப்பு கூட அதிரதனிடம் யாழினிக்கு இருந்ததில்லை. சிறு சலனம் மட்டுமே! அவளை சுற்றி சுற்றி பார்த்து அவளகடம் பேசிய அதுவும் தைரியமாக காதலை சொன்னவனை கண்டவளுக்கு ஒரு மெல்லிய சலனம் மட்டுமே!!
அதுவும் பாசிக் கொண்ட குளத்தில் கல்லை எடுத்து விட்டெறிந்தால் வருமே அதுபோல மெலிதாக.. ஆனால் அதுவும் அரவிந்தை காணவில்லை என்றதுமே மீண்டும் அந்த தெளிந்த நீரானது பாசியை போர்த்திக் கொண்டது போல அவளது மனம் அதிரதனை விட்டு அர்வியை மட்டுமே தேடித்தேடி சோர்ந்து போனது.
அதிரதனை பார்த்து பேசி விட்டு வந்த யாழினி, வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தலைக்கு ஊற்றி விட்டு காஞ்சி வரதராஜனை காண புறப்பட்டு விட்டாள்.
கூட வருறேன் என்று சொன்ன மல்லிகாவை வேண்டாம் என்று தடுத்தவள் “நானே போயிட்டு வந்துடறேன் மா.. கொஞ்ச நேரம் இருந்துட்டு தான் வருவேன் சரியா?” என்றதும் மகளே ஒரு மார்க்கமாக பார்த்த தாயோ “வர வர உன் நடவடிக்கை எல்லாம் சரியில்லை” என்றார் பெண்ணை முறைத்துக் கொண்டே..
ஆனால் மகளின் மனம் புரிநாத தந்தையோ “நீயே சும்மா அவள போட்டு திட்டுற.. பத்திரமா போய்டு வா டா.. இல்லனா எனக்கு ஃபோன் பண்ணு நான் வந்து உன்னை கூப்பிட வரேன்” என்றவர் மகளோடு வாயில் வரை வந்து “சும்மா அர்விய நினைச்சு மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே! கண்டிப்பாக கிடைச்சிடுவான். எங்க போய்ட போறான் நம்மள எல்லாம் விட்டுட்டு.. அந்த பயலுக்கு அப்பவே கேம்பஸில் வெளிநாட்டு போக எவ்வளவோ சான்ஸ் கிடைச்சும் நம்மள விட்டுப் போக மனசு இல்லாம தான் இங்கேயே சுத்தி சுத்தி கடந்தான். இப்ப மட்டும் நம்மள எல்லாம் விட்டு போயிடுவானா என்ன? நீ சொன்ன மாதிரி எங்கேயாவது மனசு சரியில்லாமல் இருந்துட்டு வர போயிருப்பான் வந்துருவான்” என்றார்க்ஷ
மகள் வண்டி எடுப்பதை பார்த்து அவர் தடுக்க, “இல்ல பா.. உங்களுக்கு தான் அலைச்சல். நீங்க ரெஸ்ட் எடுங்க.. நான் வண்டிலேயே போயிட்டு வரேன் பா” என்று சென்று விட்டாள்.
செல்லும் அவளை ஆசுவாசத்தோடு பார்த்தார். “அர்வின் மீது இவ்வளவு பாசமும் அன்பும் வச்சிருக்கா.. ஆனா நாளைக்கு அவனுக்கு கல்யாணம் ஆனாலோ.. இவளுக்கு வேற இடத்தில் கல்யாணம் ஆனாலோ இதையெல்லாம் தொடர முடியுமா? அப்போ மனசு கஷ்டப்பட போறா! என் பொண்ணுக்கு அப்படி ஏதும் கஷ்டத்த கொடுக்காதடா வரதா.. என் பொண்ணு எது நல்லதோ அதை நீயே பார்த்து பண்ணு!” என்று பெருமூச்சோடு உள்ளே சென்று விட்டார்.
மனதில் உள்ள குமறல்களையும் அழுத்தங்களையும் பாரங்களையும் அந்த வரதனின் காலடியில் சேர்த்து விட்டு அமைதியாக ஓரிடத்தில் வந்து அமர்ந்திருந்தாள் யாழினி.
தூண் மண்டபத்தின் இரண்டாவது படியில் அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் சற்று இரவு விளக்கின் வெளிச்சம் படாமல் இருக்க.. தன் அழகையை யாருக்கும் தெரியாமல் இருக்க அங்கே வந்து அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் அழுதாளோ.. அந்த வரதனுக்கே வெளிச்சம்!!
விசும்பிக் கொண்டே இருந்தவளின் காதுகளில் அந்த குரல்..
“ஏம்மா.. நானே நிம்மதியா தூங்கலாம்னு தான் இங்கே வந்தேன் பக்கத்துல உக்காந்துட்டு மூக்க உறிஞ்சிக்கிட்டே இருக்க.. தள்ளிப் போ மா” என்ற அந்த குரல்.. அது அர்வி.. அர்வியின் குரல் அல்லவா? என்று அழுகை சுவிட்சை ஆப் பண்ணது போல் நின்று விட.. திரும்பிப் பார்த்தாள் யாழினி.
அங்கே ஒரு உருவம் கைக்குட்டையை முகத்தில் மூடிக்கொண்டு படுத்திருந்தது. கலங்கிய கண்களுக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை மீண்டும் கண்களை துடைத்துக்கொண்டு பார்த்தாள். முகம் பார்த்து தான் அவளின் அர்வியை அறிந்து கொள்ள வேண்டுமா என்ன?
அது அவன் தான்.. அவனே தான்!! என்று நினைத்த மாத்திரத்தில் “அர்வி...” என்று பரவசத்தோடு கலங்கிய கண்ளோடு அவள் அழைக்க.. சற்றென்று முகத்தில் இருந்த கைக்குட்டையை எடுத்துவிட்டு அரங்கநாதனை போல திரும்பி படுத்தவன் கண்களில் விழுந்தாள் அவனின் மித்து.
ஓய்ந்து ஆய்ந்து போன முகத்தோடு.. கண்களில் கருவளையத்தோடு.. கன்னங்கள் ஒட்டி எத்தனை நாட்களில் அவனின் பிரிவு அவளை எப்படி வாட்டி இருக்கிறது என்பதை கண்கூடாக கண்டவன் “மித்து..” என்று ஒரே பாயச்சலில் எழுந்து அவள் அருகே வர..
அடுத்த நிமிடம் பாய்ந்து அணைத்துக் கொண்டாள் அரவிந்தை யாழினி. அந்த அணைப்புக்கு பின்னே இருந்தது காமமோ மோகமோ காதலோ இல்லை!!
அது ஆழமான அன்பையும்.. எல்லையில்லா நேசத்தையும்..
பங்கு போடாத பாசத்தை மட்டுமே கொண்டது! இவனும் ஒற்றைக்கையால் அவளை தோளோடு அப்படியே அணைத்து கொண்டிருந்தவன் கண்களிலும் கண்ணீர்..
ஏற்கனவே அழுது கரைந்து ஓடாகிப் போனவளை திரும்பும் வருத்த மனம் இல்லை அவனுக்கு. தனக்கு நடந்தது எதையும் கூறக்கூடாது என்று முடிவெடுத்து இருந்தான்
“ஏய்.. மித்து..அது நாலு குளிக்காமல் போட்டு இருந்தா அழுக்கு சட்டை டி! அது இன்னும் அழுக்கு பண்ணாதே டி” என்று அவன் கிண்டல் அடிக்க.. கோபத்தோடு நிமிர்ந்து அவனை முறைத்தவள், அடுத்த நிமிடம் விட்டாள் அறை ஒன்று அவனது கன்னத்தில்…
அவன் அவளின் பலத்தில் தாடையை ஒரு முறை சரிபார்த்து “பாவி.. பாவி.. பார்க்க தான் ஒல்லிக்குச்சி மாதிரி இருக்க.. ஆனா அடி ஒன்னும் இடி மாதிரி இறங்கி இருக்கு.. கடத்திட்டு போனவன்கூட இப்படி எல்லாம் அடிச்சு கொடுமைப்படுத்தல டி.. நீ தான் இப்படி அடிச்சி…” என்று வாய் தவறி அவன் வார்த்தைகளை கொட்ட..
“என்ன கடத்தினாங்களா??” அவள் அதிர்ந்து கேட்கவும் தான் வாய்விட்டதே உணர்ந்தவன் வலது கையால் நெற்றியை தேய்த்துக் கொள்ள.. சற்று என்று அவனது வலது கையை பிடித்தவள் அதன் தனது தலையில் வைத்து “உண்மையை சொல்லு அர்வி.. உன்னை யார் கடத்துனது? என் மேல சத்தியம்! பொய் சொல்ல மாட்டேனு நினைக்கிறேன்” என்றதும் அவன் எவ்வளவுக்கு எவ்வளவு அவள் தலையில் இருந்து தன் கையை அவன் பிடுங்க பார்க்க.. அவ்வளவுக்கு அவ்வளவு அவளின் பிடி இன்னும் வலுவானது! அதைவிட அவளது கண்கள் கூர்மையானது!! அவள் நின்ற விதமே நீ இப்பொழுது உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கட்டளையிட்டது.
“உன் கண்ணுல மாட்டக்கூடாதுனு தான் இந்த கோயில்ல வந்து.. அதுவும் இந்த தூட் மண்டபத்தில் வந்து யாருக்கும் தெரியாம படுத்திருந்தேன். பாரேன் விதி எப்படி என்னை சிக்க வைச்சிருக்குனு.. அதுவும் சரியா உன்கிட்டேயே??” என்று சிரித்தவன் விஷயத்தை மறைக்க பார்க்க..
“மழுப்பாம.. பேச்சை டைவர்ட் பண்ணாம.. சொல்லு! யாரு உன்னை கடத்துனா சொல்லு??” என்று அவளின் அழுத்தத்தில் “எல்லாம் உன் லவ்வர் தான்..” எ
ன்று அதை வேடிக்கை போல அர்விந்த் சொன்னான்.
இதை அதிரதனிடம் எதிர்பார்க்காமல் ஷாக் அடித்தது போல அதிர்ந்து நின்றாள் யாழினி!!
ஐ அர்வி கிடைச்சிட்டான்🤩🤩🤩🤩🤩