அசுரன் 17
ஆருஷியின் வெண்பஞ்சு கலசங்கள் அவன் நெஞ்சில் பதிய அவளை அணைத்துக் கொண்டு அவள் கழுத்தில் தன் உதடுகள் கோலமிட்டான் ராவண்.
உள்ளே அவனது தீண்டலில் அவளின் காதல் மனது உருகி வழிந்தாலும் அதை சற்றும் காட்டாமல், அப்போதும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தாள் ஆருஷி.
அவளது கழுத்து இடைவெளியிலிருந்து மெதுவாக..
“பாப்பா…” என்றான்.
“ம்ம்…” என்றாள் அவன் புறம் திரும்பாமலே..
“லவ்.. யூ… டி..!” என்றான், தன் மொத்த காதலையும் தன் குரலில் காட்டி..
சட்டுன்னு அவனை தள்ளிவிட்டு முறைத்தவள், “தயவு செய்து அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத..! காதல் என்கிற வார்த்தையை கொச்சைப்படுத்தினவன் நீ.. காதலுல காமத்த காட்டி விளையாடி அதை பழிவாங்க பயன்படுத்திக் கொண்டவன் நீ.. உன் வாயால அந்த வார்த்தையை சொல்லாதே..! இட்ஸ் இரிட்டேட்டிங்..!” என்றாள் ஆத்திரம் மிக..!
அவள் கூறுவது அனைத்தும் சரிதானே அதனை மனதார ஏற்றுக்கொண்டு “ஆமா.. ஐ அக்செப்டட்..! தப்பு பண்ணிட்டேன்.
ஸாரி..” என்று அவள் முகம் பார்த்தான் மன்னிப்புக்காக.
அவளோ அன்று அவன் பேசியவற்றை நினைக்க நினைக்க அவள் கண்கள் மீண்டும் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது.
“ஏய்… பாப்பா.. ப்ளீஸ்… டி.. அன்னைக்கு நடந்தது ஏதோ இந்த டாக்டர் மரமண்டைக்கு காதல தெரியாம.. புரியாம பேசிட்டேன்னு
மன்னிச்சிடேன்” என்றவன் மிக மென்மையாக அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
மூக்கை உறிஞ்சியவளோ “பாவி… பாவி.. போடா..!! பேசுறதெல்லாம் இவன் பேசுவானாம், பழிவாங்குறதுக்காக எந்த எல்லைக்கும் இவன் போவானாம், இப்ப எல்லாத்தையும் மறந்துடு மன்னிச்சிடுன்னு சொன்னா.. நாங்க மன்னிக்கனுமாம்..! கெட் லாஸ்ட்..!’ என்று கத்தியவள், அவன் கைகளை தட்டி விட்டு தன் கன்னங்களை துடைத்துக் கொண்டாள்
அவனோ மெதுவாக “ஸாரி டி பாப்பா.. ப்ளீஸ்.. ப்ளீஸ் மன்னிச்சிடேன்” என்று விட்டு அவள் பட்டுக்கன்னத்தில் தன் உதட்டைப் பதித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.
இப்படியாக அவன் கொஞ்சினால் அவள் தன் மனதை மாற்றிக் கொள்வாள் என்று அவனது பழைய அனுபவம். ஆனால் இப்போது இருப்பவளோ ஆருஷி ஆயிற்றே, அவனது பாப்பா அல்லவே..!
அவளின் கண்ணீர் சுவையில் தன் நாக்கின் உவர்ப்பை உணர்ந்தவன், அவ்விடத்தை விட்டு நகராமல் அவள் கன்னத்தில் கோலமிட்டு கொண்டிருந்தான்.
அப்படியே நாவை மேலே நகர்த்தி அவளது கண்கள் வரை சென்றவன்,
அவளது இரண்டு கண்களையும் நாவேலேயே அவள் உவர் நீரை துடைத்தான்.
மனதில் அவன் பால் கொண்ட ஆழமான காதலோ இல்லை கர்ப்ப காலத்தில் கொண்ட ஹார்மோன்களின் சதிராடலோ அவனது அருகாமையை தீண்டலை ரசித்தது அவளது பெண்மை.
ஆனால் அதை காட்டிக் கொண்டால் இவன் இன்னும் தன்னிடம் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வான் என்று நம்பியவள்,
கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஆருஷி.
அவளின் அமைதியை அவனுக்கு சாதகமாகாக்கிக் கொண்ட இந்த நல்லவனோ..
அவள் கண்களை விட்டு தன் நாவை நகர்த்தி அவளது குமிழ் போன்ற ரோஜா மொக்கு மூக்கில் மெல்ல கடித்தான். அவள் ஸ்ஸ்ஸ் என்று முணக, அவளது மூக்கின் நுனியை நாவால் வருடினான்.
அவனின் தீண்டலுக்கு இன்னும் உருகி நிற்கும் அப்பெண்ணின் மீது இன்னும் காதல் பெருகியது இக்கோமகனுக்கு..!
தன் மீது அவள் கொண்ட காதல் என்றும் கரையவில்லை கலையவில்லை..! ஆனால் அவள் காதலுக்கு நான் நேர் செய்யவில்லை.. என்று வருந்தியவன்,
‘இனி எப்படி என் காதலை காட்டுகிறேன் பாரடி பெண்ணே’ என்று முடிவு எடுத்துக் கொண்டான்.
சிறிது நாட்கள் அவளுக்கு ஸ்பேஸை கொடுத்தான்.
‘அவனை ஏமாற்றி அவன் கண்களில் மண்ணை தூவி தெரியாத இடத்துக்கு வந்து விட்டோம். இனி அவள் கண்ணில் பட மாட்டோம். அவன் தன்னை தேடி அலையட்டும்.. அவனை நாம் ஜெயித்து விட்டோம்’ என்ற உணர்வை கொடுத்தான்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளை அப்படியே அவனால் விட்டுவிட முடியவில்லை. அவளும் வேண்டும் அவன் பிள்ளையும் வேண்டும் அவனுக்கு. அதனால்
இப்பொழுது அவளை தேடி வந்திருக்கிறான்.
அவளிடம் முட்டி மோதி வீண் வாதம் செய்ய அவன் முன் வரவில்லை..!
அவள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு தன் காதலை காட்டிவிடும் முனைப்பிலேயே வந்திருக்கிறான்..!
முன்பு காதலை அழித்து அசுரனாய் அவள் கண்களுக்கு தெரிந்தவன்,
இன்று காதலையே அசுரத்தனமாக காட்டிவிடும் காதல் அசுரனாக உருவெடுத்து வந்திருக்கிறான்..!
‘அது என்ன… காதல் அசுரன்? முன்பு வேண்டுமளவு அவளை புண்படுத்தி வார்த்தைகளால் வதைத்து விட்டு இப்பொழுது மன்னிப்பு கேட்டால் சரியாக விடுமா?’ என்று கேட்கும் சமூகத்திற்கு…
ஆகாது தான்..!
ஆனால்.. நாம் எல்லாம் மனித பிறவி அல்லவா? தவறு செய்யாதவன் எவன் இருக்கிறான்? ஆனால் அந்த தவறை தகுந்த நேரத்தில் திருத்திக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்பவனே மனிதனாக மிளிர்கிறான்..!
ராவணன் வேண்டுமென்று இவளை தேடி சென்று தன் தாய்க்கு நேர்ந்ததற்கு பழிவாங்க துடிக்கவில்லை. அவன் போல அவன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சிறு புயலாக உள்ளே நுழைந்து இவனை சாய்ந்தவளை.. இனம் கண்டு கொண்டவன், போகிற போக்கில் அப்படியே அவளுக்கு கட்டம் கட்டி தன் தாய்க்கு நேர்ந்ததற்கு பழி வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டான். ஆனால் உண்மையில் அவன் பழிவாங்க வேண்டிய ஆளோ வேறு அல்லவா?
அன்னையின் பேச்சும்.. தந்தையையும் தாயையும் உணர்ந்து கொண்டவன், அவர்களின் காதலை அறிந்து கொண்டவன், தான் செய்த முட்டாள் தனத்தை உணர்ந்து நொந்துக் கொண்டான்.
இப்பொழுது தன்னவளிடம் தன் செயலுக்கு மன்னிப்பையும் கூடவே அவள் உள்ளத்தில் புதைக்கப்பட்ட காதலையும் வேண்டி நிற்கிறான்..!!
அவளின் கண்கள் என்னதான் அவனை கோபத்தோடு பார்த்தாலும்.. அவன் கண்களோ மோகத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன..!
அழுததினால் மிளிர்ந்த அவள் கன்னங்களின் கதுப்பும் ..! மூக்கின் நுனி சிவப்பும்..! அவன் முத்தமிட்ட உதடுகளின் ஈரமும்..! சற்றே சதைப்போட்ட அவளின் சங்கு கழுத்தும்..! முன்னைவிட செழுமையான மென்மைகளும்..! அவனின் விழிகளுக்குள் அவளை நிறைந்துணையாய் நிறைத்தன..!
அவன் கண்கள் சென்ற திசையை அறிந்த அவள் கண்கள் அவனை கோபத்தோடு பார்த்து வேறுபுறம் திரும்பிக் கொண்டன..!
அவளின் இமைகளின் துடிப்பை மட்டுமல்ல இதயத்தையும் துடிப்பையும் துல்லியமாக அவன் அன்றி யார் அறிய முடியும்?
“ஐ நோ யூ டி பாப்பா” என்று அவன் அவள் தாடையை மெல்லமாக உயர்த்தி கண்களுக்குள் அவளை ஆழ்ந்து பார்க்க, அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் மொத்தமும் வேர்த்து விதிர்த்திருந்தது. அவள் மனம் மீண்டும் அவன் பால் சரிவதை உணர்ந்தாள். அதன் விளைவாய் அவள் மனம் நிலையற்று தவித்தது..!
அவள் தொடையில் கையூட்டு அவளை அவன் தூக்க, உடல் விரைக்க விதிர்த்தாள். அவள் உடலில் சிறு நடுக்கம் எழுந்தது. மென்மைகள் விம்மித் தணிய நீளப் பெருமூச்சு விட்டாள். அவன் பார்வை அவளின் பக்கவாட்டு செழுமைக குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின..!
“என் பிள்ளையை விட உன்னோட வளர்ச்சி தாண்டி அபரிமிதமாக இருக்கு” என்று அவனிடமிருந்து எதிர் பாராத வார்த்தை இது.
“பேச்ச பாரு பேச்ச..! ஷட் அப்..!” என்று எகிறினாலும் பக்கவாட்டில் தெரியும் அவன் முகம் பார்த்து நாணினாள். அவனிடமிருந்து துள்ளிக் குதிக்க அவர் முற்பட..
“பிடிக்கல புடிக்கல.. வேணாம் வேணாம்னு சொல்லிட்டு ஏன் இந்த அவசரம் டி பாப்பா..” என்று அவன் கொடுப்புக்குள் சிரிக்க..
“என்னை இறக்கி விடப் போறியா இல்லையா?” என்று பெரும் வயிற்றை பிடித்துக் கொண்டு அவள் துள்ள..
“இரு டி.. வயித்துல புள்ள இருக்கு.. நானே உன்ன பெட்ல விட தான் போறேன்” மென் குரலில் சொல்லி அவளை பெட்டில் விட்டவன், ஒரு நொடியில் முன் சென்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ப்ச்ச்.. !!”
“சச்ஈ. !!” கோபத்தில் முகத்தை பின்னிழுத்தாள். அவளின் கன்னத் தசைகள் அதிர்ந்து இறுகின.
அவன் கை அவள் தோளை வளைத்தது. விரல்கள் மெல்ல அவளது தோள் பகுதியை வருடின.
“இவ்வளவு நாள் நான் உன்னை விட்டு தள்ளி இருக்கல.. உன்னை வாட்ச் பண்ணிட்டு தான் இருந்தேன். நான் உன்னை பாக்கறதே இல்லேனு இல்ல.. இவ்வளவு நாளும் மனதால நெனைச்சிட்டு தான் இருந்தேன். இனி.. உன் கூட தான் நான்..! யார் தடுத்தாலும் என்னோட பிரசன்ஸ் உன்னருகே.. ஐ மீன் என் பிள்ளையோட இருக்கத்தான் செய்யும்” என்றவன் வந்த வேகத்திலேயே சென்று விட்டான்.
அவளுக்கு ஒரு பெரும் புயல் தன்னை தாக்கி சென்றது போல உடலும் மனமும் அத்தனை சோர்ந்து போனது. மீண்டும் உடலை சுருக்கிக் கொண்டு படுக்கையிலேயே இருந்தாள்.
அவன் சென்று சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த வர்ஷா,
“ஆரு.. அவரு..” என்று சற்று நிறுத்த தன் முன்னே பெருத்திருந்த வயிற்றை மெல்ல வருடியவள் “என் குழந்தையின் அப்பா” என்றாள்.
“ஓஹ்..! காலை மதியத்துக்கு சமைச்சு வச்சிருக்கேன் நீ சாப்பிடு எதுனா எனக்கு போன் பண்ணு” என்று அவள் வேலைக்கு சென்று விட்டாள்.
“ஏன்டா உன்னோட அப்பன் இப்படி இருக்கான்?எல்லாத்துலயுமே அத்தம் தான் அவனுக்கு. காதலை கொட்டுவதிலும் சரி.. வார்த்தைகளை கொட்டுவதிலும் சரி.. இப்பொழுது மன்னிப்பை கேட்பதிலும் சரி.. சரியான இம்சை அரக்கன் டா அவன்.. ஆனாலும் நான் ஆருஷி வள்ளியம்மை..! என்னை அசைக்க முடியாது சொல்லிவை உன் அப்பாகிட்ட..!” என்று புலம்பியவள் மெல்ல எழுந்து வர்ஷா சமைத்து வைத்த உணவு உண்டவள், மறக்காமல் காலையில் போட வேண்டிய மாத்திரைகளை போட்டு கொண்ட பின்பு அங்கேயே சிறிது நேரம் நடைபயிற்சி செய்தாள்,
பின் சோர்ந்து சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
பின் தன் லேப்டாப்பை எடுத்து சுக்ரேஷ் அனுப்பி வைத்த சில கணக்குகளுக்கு எல்லாம் பார்த்தாள். சில டாக்குமெண்ட்களுக்கு அவளின் கருத்துக்களை பதிவு செய்தாள்.
“நீ எங்கிருந்தாலும் சரி.. இது எல்லாம் உன்னோடது. இதையெல்லாம் நீ தான் பார்க்கணும். ஃப்ரீ டைம்ல உக்காந்து பாரு.. சும்மா தேவையில்லாததெல்லாம் நினைச்சுக்கிட்டு இருக்காத. வாழ்க்கையோட அடுத்த ஸ்டெப்பை நோக்கி போ.. ஜஸ்ட் மூவ் ஆன்..!” என்று அவன் வற்புறுத்தி இருக்க,
சோம்பியிருக்கும் மனதை சாத்தானின் உலைக்கலம் என்பது போல.. சும்மா இருந்தாலே அவன் நினைப்பு வந்து இவளை ஆட்கொள்ள அதையெல்லாம் தவிர்த்து வேலையில் மூழ்கினாள் ஆருஷி.
“கண்டிப்பா நான் ஸ்ட்ரென்த் ஆக இருக்கணும்..! யாரை நம்பியும் இருக்கக்கூடாது. இதெல்லாம் என் சொத்து.. இதை நான் பராமரித்து என் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்..!” என்ற தீர்க்கமாக முடிவும் சில நாட்களாக அவளுக்குள் உருவெடுத்துக் கொண்டிருக்க.. அதன் விளைவாக தீவிரமாக வேலையை செய்து கொண்டிருந்தாள் ஆருஷி, மணியை கவனிக்காமல்..!
எவ்வளவு நேரம் வேலையில் இருந்தாளோ அப்போது காலீங் பெல் அடித்த சத்தத்தில் ‘யார் இந்த நேரத்தில்?’ என்று யோசித்தவள், ஜாக்கிரதையாக பிளாக் போட்டபடி கதவை திறந்து பார்க்க.. யாரும் தெரியவில்லை..!
‘என்னடா இது.. யாரையும் காணோம்?’ என்றபடி கதவை அடைத்து விட்டு அவள் திரும்ப மீண்டும் மணி அடிக்க..
“டேய் எவன்டா அது விளையாடுறது? வந்தேன் வெளுத்திடுவேன்..!” என்று குரலை உயர்த்தி கதவை திறக்க அங்கே புன்னகையோடு நின்று கொண்டிருந்தான் ராவண்.
“ஓஓஓ.. நீ தானா? நான் ஏதோ புதிய பிசாசுனு பார்த்தேன். ஆனா.. பழைய பேய் தான் வந்திருக்கு” என்று முறைத்தபடி,
“என்ன வேண்டும்?” என்று கேட்க
“நீதான்..!” என்றவன் அவளை மெதுவாக தள்ளி இவனும் உள்ளே வந்து எதோ உரிமை பட்டவன் போல சமையலறை சென்று இரண்டு கிளாஸில் அவன் வாங்கி வந்த மாதுளை சாற்றை ஊற்றி ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
“ஜூஸ் குடிக்கிறதை விட மாதுளம் பழத்து உதறி போட்டு அதுல லைட்டா பேப்பர் போட்டு சாப்பிட்டா ரொம்ப ஹெல்த்துக்கு நல்லது..! நாளைக்கு அந்த மாதிரி செய்யலாம் என்ன? இன்னைக்கு ஜூஸா குடி” என்றதும் இடுப்பில் கைவைத்து அவள் முறைத்து நிற்க..
“ரொம்ப முறைக்காதடி இது உனக்காக இல்ல..! என் பிள்ளைக்காக நீ சாப்பிட்டது எப்பவோ செரிச்சு இருக்கும். அவனுக்கு அடுத்து பசி வந்து இருக்காது? சீக்கிரம் குடி..” என்று அவன் வற்புறுத்த..
அதை வாங்கியவள் ஆத்திரத்தில் கீழே போட்டு உடைத்தாள்.
“என்ன ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறியா? அப்பவே சொல்லிட்டேன்..! உனக்கும் எனக்கும் எந்த டேஸூம் கிடையாது. நான் இந்த குழந்தை பிறந்தவுடன் நெஜமா சுக்ரேஷை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அவ என்னையும் என் குழந்தையும் நல்லாவே பாத்துப்பான்.. பாதில விரட்டி அடிக்க மாட்டான்” என்றதும் இம்முறை கோபம் கொண்டு அவள் கழுத்தை எல்லாம் இவன் பிடிக்கவில்லை.
மாறாக பொறுப்பான கணவனாக அங்கே சிந்தியவற்றையெல்லாம் மாப்பு கொண்டு துடைத்து விட்டு உடைந்த கண்ணாடி டம்ளர் துகள்களை அள்ளிக் கொண்டு போய் குப்பையில் போட்டவன், அடுத்த கிளாஸ் ஜூஸையும் எடுத்து வந்து “குடி பாப்பா.. என்ன திட்டி திட்டி ரொம்ப டயர்டு ஆயிட்ட” என்றான் மென்மையாக..!
“இவ்வளவு சொல்றேன் கேட்கிறான் பாரு?” என்று அவள் அதனையும் தட்டி விட முயல “ஆஹா..! நோ.. நோ..! என்னிடம் நடக்காதடி பெண்ணே” என்று அதை பின்னுக்கு இழுத்தவன்,
“இப்படி எல்லாம் சொன்னா நீ கேட்க மாட்ட இல்ல.. உன்ன எப்படி குடிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் டி பாப்பா” என்றவன் அந்த ஜூஸை கடகடவென்று இவன் வாயில் ஊற்றி இடது கையால் அவளது தலையைப் பற்றி தன்னை நோக்கி இழுக்க…
அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்றதை உணர்ந்து தற்காத்துக் கொள்ள முயன்றவள், முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, மதுர மாதுளை சாறு கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அதிமதுர இதழ்கள் வழியே உள்ளே இறங்கி கொண்டு இருந்தது..!!
அந்நேரம் பார்த்து “ஆரு எனக்கு மனசே சரியில்ல உன்னை இங்க விட்டுட்டு போய்.. அதுவும் அவனைப் பார்த்ததிலிருந்து..! உன்னை ஏதாவது.. ஏதாவது…” என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைந்த சுக்ரேஷோ,
அங்கே அவன் கண்ட 11 மணி காட்சியில் என்ன வினையாற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றான்..!
எவனிடமிருந்து தன் மாமன்
மகளை காக்க வேண்டும் என்று இவன் போன சுருக்கில் திரும்ப வந்தானோ..
இப்பொழுது அவன் இதழணைப்பில் இறுக்கமாக நின்றிருந்நாள் பாவை..!!
தொடரும்..