மோகங்களில்… 20
அடுத்த வாரம் இவன் கோயிலுக்கு செல்ல சசிகலாவால் அப்பொழுது அங்கே கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 50 பெண்களை வந்து இருக்க.. ஒருவர் வரவில்லை. முன்னமே அந்த பெண்ணுக்கு பிரசவம் நிகழ்ந்துவிட்டது.
“வெறும் 50 கணக்கில் எப்படி செய்வது? ஒத்தப்படையில் தானே செய்ய வேண்டும்?” என்று கோவில் தர்மமகர்த்தாவிடம் நின்று பேசிக் கொண்டிருந்தவரின் பின்னால் “ஆன்ட்டி.. “ என்று உற்சாகமாக அழைத்துக் கொண்டே வந்து நின்றாள் அனுப்ரியா.
அனுவை பார்த்த தர்மகர்த்தா “மேடம் இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்டார்.
சசிகலாவும் ஆமாம் என்று ஆமோதிக்க “அப்ப இவங்களையும் 51வது ஒரு பெண்ணா உட்கார வைக்கலாமே மேடம்?” என்றார். அதில் திடுக்கிட்ட சசிகலா அவரை பார்த்தவர் “இல்லங்க.. அவங்க வீட்ல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க! அதுவும் இல்லாம இந்த பொண்ணு என் பையனோட பிரண்டோட பொண்டாட்டி. நான் எப்படி இந்த பொண்ணுக்கு இங்க இப்படி செஞ்சேன் தெரிஞ்சுது.. அவ்வளவு தான்.. என் பையனே என்னை பேசி பேசி ஒரு வழி ஆக்கிடுவான்!” என்று தர்மகர்த்தாவிடம் மெல்லிய குரலில் கூறினார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது ஒன்று கூட அனுவுக்கு புரியவில்லை. ஏதோ சங்கடமான சூழ்நிலை போல என்று நினைத்து அமைதியாக பார்த்திருந்தவள் “நீங்க ஏதும் முக்கியமான பேசுறீங்க.. நான் அப்புறம் வரேன் ஆன்ட்டி சரியா?” என்று அவள் நகர அவள் பின்னே அவளுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த செவிலியர் வைதேகியும் சாதாரண உடையில் பின் தொடர்ந்தாள்.
வீட்டில் இருக்கும் போது பெரும்பாலும் சீரூடையில் தான் இருப்பாள். இவள் தான் “அக்கா வெளில போறோம் நீங்க இப்படி என் கூட வந்தீங்கன்னா பாக்குறவங்க நம்ம ரெண்டு பேரையும் ஒரு மாதிரியா பாப்பாங்க.. சேரியில வாங்க அக்கா” என்று அவளல வற்புறுத்தி புடவை அணிய வைத்தே அழைத்து வந்திருந்தாள் அனு. அவளுமே அன்று துருவ் முதன் முதலாக எடுத்துக் கொடுத்த புடவையில் மெல்லிய அலங்காரத்தில் அழகாக இருந்தாள்.
“எங்கு சென்றாலும் எனக்கு தகவல் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும்! அது முக்கியமான விஷயங்களுக்கு மட்டும்தான் நீ தனியாக செல்ல வேண்டும்..” என்று கட்டளையிட்டே சென்று இருந்தான் துருவ்.
அதனால் வரும் பொழுது “இங்க கோயிலுக்கு போறோம். மதியம் போல வீடு வந்து விடுவோம்” என்று சொல்லிவிட்டு தான் வந்திருந்தாள் அனு.
சுகன் இவர்களோடு தான் வந்திருந்தான். ஆனால் அவன் கோவில் உள்ளே வரமாட்டான். வெளியில் காரில் தான் அமர்ந்திருந்தான். ஏனென்றால் சுகனை துருவோடு பார்த்தவர்கள் அனுவோடு பார்த்தால். ஏதேனும் தப்பர்ததம் கற்பித்துக் கொள்வார்களோ என்ற பயம்!
சுகனுக்கு “இந்த பாஸ் ஏன் இன்னும் இவங்களை கல்யாணம் பண்ணிக்காம இருக்காரு? மனம் நிறைய ஆசை பாசம் காதல் அன்பு எல்லாம் இருக்கு. இருந்தும் ஏன் இப்படி பண்றார்னு தெரியலையே?” என்று புலம்பி கொண்டு இருப்பான் தன் மனதோடு தான்! அதை கேட்கும் துருவிடம் தைரியம் தான் இவனிடம் இல்லையே.
கூடவே அனு பற்றிய விவரங்கள் அவள் எப்போது அப்சராவுடன் இந்த ட்ரீட்மென்ட்டுக்காக வந்தாள்.. என்னென்ன ட்ரீட்மென்ட் தாரதி கொடுத்தாள்.. என்பதை பற்றி விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டிருந்தான் சுகன் இந்த நாட்களில்..
அவன் ஆட்களோடு மூலம் அன்றும் அதுபோல ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இவன் காரிலேயே இருக்க.. “அண்ணா சார்.. நீங்க வரலையா?” என்று கேட்டதும் “இல்லம்மா எனக்கு பெருசா அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை! நீங்க போயிட்டு வாங்க!” என்று அனுப்பி வைத்தான். இத்தனை நாட்களில் மேடம் என்பதை விட வைத்திருந்தாள் அனு.
“ஏன் கா உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?” என்றதும் அவளோடு வந்த வைதேகி சிரித்தாள்.
அவள் ஏழ்மை குடும்பத்தின் முதல் வாரிசு. அதனால் கடமைகளும் கட்டுப்பாடுகள் மட்டுமே அவளது தலையின்.. ம சுகங்களும் செலவினங்களும் இவளோடு பிறந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது. இன்னும் அந்த குடும்பத்திற்கு உழைத்து போடும் ஏடிஎம் மிஷின் ஆகத்தான் இருக்கிறாள் வைதேகி.
“சம்பளம் இரட்டிப்பு வைதேகி.. அந்த குடும்பத்தை பற்றி எனக்கு தெரியும் தைரியமாக போகலாம்” என்று தாரதி சொன்னதால் தான் வந்தாள். இரண்டு நாட்களில் இவர்களைப் பற்றி ஒரு அளவு அனுமானித்து விட்டாள். ஆனால் ஒரு வார்த்தை கேட்க மாட்டாள். தன் முக பாவனையால் கூட காட்ட மாட்டாள். சில சமயம் அனு உரிமையாக பேசினால் கூட இவளுக்கு மனசு விட்டு பேச துடிக்கும். ஆனால் எதுவும் தவறாகிப் போகுமோ என்று அமைதி காத்தாள்.
இப்பொழுது அனு கேட்டவுடன் “கடவுள் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா மேடம்? அப்படி இருந்தால் என்னைக்கோ என்னுடைய பிரச்சனையை தீரத்திருப்பார் தானே?” என்று விரக்தியாக சிரித்துக்கொண்டாள்.
“ஏன் அக்கா இப்படி பேசுறீங்க?” என்றதும், அனுவின் அன்பான அணுகுமுறையாலும்.. கோயில் வந்திருக்க மனம் அமைதியாய் இருக்க.. மெல்ல தன்னை பற்றி கூறிக் கொண்டே வர, இருவரும் பிரகாரத்தில் சுற்றி வந்தனர்.
‘தன்னிலும் கேடு உலகத்தில் கோடி போல!’ என்று நினைத்துக் கொண்டாள் அனு.
யாருமே இல்லை என்று இவள் ஏங்கி ஏங்கி தவிக்க.. அத்தனை உறவுகளும் இருந்தும் அவளை பயன்படுத்திக் கொள்ளும் உறவுகளை எண்ணி எரிச்சலாக இருந்தது அனுவிற்கு.
“அக்கா கேக்குற எனக்கே இவ்வளவு எரிச்சலா கோபமா இருக்கு. நான் கூட நிறைய நேரம் யோசிச்சுயிருக்கேன், அம்மா அப்பா தான் இல்ல கூட பிறந்தவங்க யாராவது இருந்திருக்கலாமேன்னு.. உங்க கதையை கேட்கும் போது எவ்வளவு சுயநலமா இருக்காங்க எல்லாரும். அதுக்கு நான் இப்படி தனியா இருக்கிறதே தேவலாம் போல..” என்று கோபமாக பேசிவளின் கையை பிடித்து “நீங்க ஏன் டென்ஷனா ஆகுறீங்க மேடம். அப்புறம் பிபி சூட் அப் ஆகிட போகுது.. ப்ளீஸ் ரிலாக்சா இருங்க அப்புறம் சார் என்னை தான் திட்டுவார்” என்ற வைதேகி, “எதுவுமே நம்ம வளர்ப்பில் தான் மேடம் இருக்கு” என்றாள்.
“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே அக்கா?” என்றதும் “கேளுங்க மேடம்” என்றாள் வைதுகி.
“இந்த மேடம்.. அது பிடிக்கல.. அனுனு கூப்பிடுறிங்களா?” வைதேகி சிரிப்போடு மறுத்தாள்.
“எப்படியோ போங்க.. உங்க வயசு என்ன?” என்று கேட்டு விட்டு ஏதும் தவறாக கேட்டு விட்டோமோ என்று நாக்கை கடித்து மூக்கை சுருக்கி கண்களால் கெஞ்சலாக அவளை பார்த்தவளை கண்ட வைதேகி “எனக்கு 30 வயசு ஆகுது மேடம்? நீங்க ரொம்ப அழகு..” என்று அவளது கன்னத்தை வருடி திஷ்டி எடுத்தாள்.
எதுவுமே பேசவில்லை. ஆனால் சிந்தித்தபடி வந்தவளின் மனதுக்குள் நிறைய கணக்குகள். “இந்த அண்ணா சாரும் ரொம்ப நாளா தனியா தான் சுத்திக்கிட்டு இருக்காரு.. நம்ம ஏன் இந்த வைதேகிய அவர் கூட கோர்த்து விடக்கூடாது?” என்று யோசித்தவள்,
“அக்கா.. ஒரு நிமிஷம்” என்று துருவுக்கு வாட்ஸ் அப்பில் இவள் நினைத்ததை மெல்லிய குரலில் பேசி அனுப்பி வைத்தாள்.
அதற்குள் இப்போதைக்கு ஆபத்துக்கு பாவம் இல்லை என்று தர்மகர்த்தாக அவ்வளவு சசிகலாவிடம் சமாதானப்படுத்தி 51 ஆளாக அனுவை அமர வைக்க சொல்ல வேறு வழியின்றி தலை அசைத்தார் சசிகலா.
எங்கே இது தடைபட்டால் மகனுக்காக தான் வேண்டியது தடைப்பட்டு விடுமோ? அவனின் வாரிசை தான் பார்க்காமல் சென்று விடுவோமோ? என்று சுயநலமும் அதில் உண்டு ஒரு பக்கம்!! மறுபக்கம் 50 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து நடக்கவில்லை என்றால் அந்த பெண்களுக்கும் ஒருவித மன கஷ்டம் தானே? என்று மனதை சமாதானப்படுத்தி அனுவுக்காக காத்திருந்தார்.
அதற்குள் இவர்கள் பிரகாரம் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர அதை பார்த்துவிட்டு சசிகலாவும் அவர்களிடம் வந்து தன் நிலைமை சொல்லி உதவி கேட்க “இப்போ சிம்பிளா பண்ணிக்கடா.. உங்க வீட்ல நீ பெருசா பண்ணிக்கும்போது பண்ணிக்கலாம்” என்றதும் அருகில் இருந்த வைதேகியை பார்த்தாள் அனு.
அனுவுக்கு தான் இதுபோல சம்பிரதாயம் எல்லாம் மருந்துக்கும் தெரியாதே!! அவள் அறிந்தது திருமணம் முடிந்தால் பிள்ளை பெறும் முன் வளைகாப்பு போடுவார்கள் என்று தான்!
ஆனால் ஒருத்திக்கு இருமுறை வளைகாப்பு போடலாமா என்பது பற்றி எல்லாம் அவளுக்கு தெரியாது. அதனால் வைதேகியை அவள் பார்க்க..
“மேடம்.. அப்படி எல்லாம் நான் வந்து உங்களை அலோ பண்ண முடியாது! சார் கிட்ட நான் கேட்கணும். பர்மிஷன் இல்லாமல் நானா எதுவும் செய்ய முடியாது” என்ற அவள் சசிகலாவிடம் கூறியவள், “நான் உங்களுக்கு கேட்டேகரா இருக்கேன் மேடம். சார் கிட்ட எதுவும் கேட்காமல் என்னால உங்களை அனுமதிக்க முடியாது” என்றாள்.
ஆனால் சசிகலாவோ யாசகமாக பார்க்க.. தங்கள் வீட்டில் ஒரு வாரம் வைத்து யார் என்று தெரியாத பெண்ணை அவ்வளவு நல்லா பார்த்துக் கொண்ட அந்த பெண்மணிக்கு தான் என்ன செய்ய முடியும்? அதனோடு கூட அவருடைய வேண்டுதலுக்காக தானே கேட்கிறார்!! அந்த வேண்டுதலும் யாருக்காக? துருவுக்காக தானே!! என் துருவுக்காக தானே!! என்று
கேள்வியும் அவளே! பதிலும் அவளே!!
பின் வைதேகி கையை பற்றியவள் “அக்கா நான் போய் கலந்துகிறேன்” என்றாள்.
“இல்ல மேடம்.. அது வந்து..” என்று ஆரம்பிக்க..
“பேசாதீங்க கா..” என்றவள், பெரும் தயக்கத்துடன் “ஓரளவு எங்கள் வாழ்க்கை முறையை உறவு முறையை நீங்கள் கணக்கிட்டு இருப்பீங்க.. எனக்கு இந்த மாதிரி வளைகாப்பு எல்லாம் நடக்குமானு தெரியல.. ப்ளீஸ் நான் கலந்து கொள்கிறேனே..” என்று கெஞ்சலாக கேட்டவளை மறக்க முடியாமல் தலையாட்ட.. பின் சசிகலாவோடு அனு ஆசையாக செல்ல, வைதேகியும் பின்னால் சென்றாள்.
அதேநேரம் வேலை முடித்து இலகுவாக அமர்ந்திருந்த துருவ் வாட்ஸ் அப்பில் அனு அனுப்பியதை கண்டு அவனுக்கு சிறு சிரகப்பு வேற.. “எந்த சிறுசுக்கு பாரு தேவையில்லாத வேலை! சோசியல் சர்வீஸ் பண்றா.. ஆனாலும் அவள் சொல்றது ஒரு விதத்தில் நியாயம் தான்! நம் கூட தானே இவனும் சுற்றிக் கொண்டிருக்கிறான். நமக்கு இப்பொழுது குடும்பம் பிள்ளைகள்னு இருக்கும்போது அவனும் இருப்பது நியாயம் தானே!” என்றவனுக்கு அனுவை தன் மனைவி ஸ்தானத்திலேயே வைத்து பார்த்திருக்க.. ஆனால் நிதர்சனம் புரியாமல் போனது.
மனைவி என்று நினைத்த உடனே அவளை பார்க்க அவனுக்கு ஆவல் தூண்டியது. ஆவல் பெரும் தவிப்பாய் மாற.. அதற்கு பின்னே துருவ்வை தடுப்பது யார்?
கிளம்பி விட்டான் அனுவை பார்க்க கோவிலுக்கு…
முதலில் சுகனுக்கு அழைத்து அவன் எங்கே இருக்கிறான் என்று விசாரிக்க..
“பாஸ்.. நான் கோவில் வெளியில் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். மேடம் கூட வைதேகி இருக்காங்க.. கோவில்ல நிறைய பேர் இருக்காங்க அதனால அவங்களோட போகாம வெளியில வெயிட் பண்றேன்” என்றதும் புரிந்து கொண்டவனை “சரி அங்கே வெயிட் பண்ணுங்க.. நான் வந்துட்டு இருக்கேன்” என்றதும் சரி என்றான் சுகன்.
அதற்குள் “நல்ல நேரம் முடிவதற்குள் பெண்கள எல்லாம் மனையில் உட்கார வைங்க..” என்று ஐயரின் குரலில்.. அனைத்து பெண்களும் அங்கே போட்டிருந்த மேடையில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்
அவர்கள் பக்கத்தில் நலுங்கு வைக்க என்று அவர்கள் சொந்தக்காரர்கள் நிற்க.. வளைகாப்பு வைபவம் அழகாக ஆரம்பமாகியது.
“முதலில் சுமங்கலி பெண்கள் அம்மா அல்லது மாமியார் போட்டு விடுங்க” என்றதும் அனுவோ சசிகலாவை பார்த்தாள்.
“நம்மால் தான் இவளுக்கு சொந்தக்காரர்கள் யாருமின்றி இருக்கிறாள்” என்று அவரே முதல் வளையலை அவளுக்கு போட்டு விட்டார். கூடவே தன் கையில் இருந்து பொன்வளையலையும் அவளுக்கு போட்டு விட்டார்.
வைதேகி இடம் போட்டோ எடுங்க அவள் காட்ட இங்கே நடக்கும் ஒவ்வொன்றையும் அனுவின் விருப்பத்திற்காக போட்டோ வீடியோ என்று எடுத்துக் கொண்டிருந்தாள் வைதேகி.
வைதேகி அனுவுக்கு போட்டு விட அடுத்தது அங்கிருந்து பெண்களை எல்லாம் அனுவுக்கு போட்டு விட செல்ல.. அனுவின் வளைகாப்பு இனிதே நடந்துக் கொண்டிருக்க, அப்போது துருவின் கார் உள்ளே நுழைந்தது.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போட்டுவிட்டு அடுத்து கணவனை அருகில் வைத்து இருவருக்கும் சேர்த்து ஆலம் சுற்ற வேண்டும் என்பதுதான் அடுத்த சம்பிரதாயம்!
அதை சொன்னவுடன் நிதர்சனம் பொட்டியில் அறைந்தது மாதிரி இருந்தது அனுவுக்கு. எங்கே போவாள் கணவனுக்கு என்று! தவித்து போனால் பெண்ணவள்!
அதுவரை சந்தோஷமாக இருந்தவள் இப்படி கணவன் என்று ஒரு சொல்லில் தவிக்கிறாளே என்று வைதேகின் மனம் வருத்தப்பட்டது.
“இதற்காக தானே வேண்டாம்னு அவ்வளவு சொன்னேன்! இந்த பெண் புரிந்து கொள்ளவே இல்லையே.. இப்போ தான் கஷ்டப்படுறாளே?” என்று அவளுக்காக வருத்தப்பட்டவள், சுகனை அழைத்தாள். இங்கிருந்து உடனே செல்லலாம் என்று கூற..
அவள் ஃபோனை எடுத்து அழைக்க டயல் செய்ய, அதற்குள்ளே அங்கு வேக நடையோடு வந்து கொண்டு இருந்தான் துருவ் பின்னே சுகனோடு!
“என்ன கோயில ஒரே விசேஷமா இருக்கு” என்று வழியில் போகிறவரிடம் துருவ் கேடாடான்.
“இன்னைக்கு ஒரு அம்மா அவங்க பிள்ளைக்காக வேண்டி அம்பத்தோரு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துறாங்க சார்.. அந்த வைபவம் தான் நடக்குது சார். வளைகாப்பு முடிஞ்சுது.. அதுதான் கூட்டம் கலைஞ்சிட்டு கூட்டமா இருக்கு” என்று ஒரு பெண்மணி கூறிவிட்டு செல்ல வளைகாப்பு என்றவுடன் தான் இரு ஆண்களும் ஒருமுறை ஒருவர் பார்த்துக் கொண்டனர், “ஒருவேளை இவ.. அனு.. ஷிட்..!” என்று வேகமாக விரைந்தனர் அங்கே!!
அப்பொழுது கடைசியாக இரு பெண்மணிகள் ஆலம் எடுக்க அனுவிடம் வந்து “உன் புருஷன் எங்கே மா?” என்று கேட்க கண்கள் கலங்க தவிப்புடன் அவள் அமர்ந்திருந்த விதம் துருவின் மனசை வீழ்த்தியது.
இப்படி ஒரு நிகழ்வை அனுவிற்கு அவன் நினைத்து பார்க்கவே இல்லை! ஆமாம் அவளுக்கும் ஆசை இருக்கும் தானே? என்று நினைத்தாலும்.. அதை தன்னிடம் அல்லவா சொல்ல வேண்டும்?
‘என் கிட்ட சொல்லாமல் இப்படி அவளாகவே வந்து போட்டுக் கொள்வாளா? இவளை..’ என்று பற்களை கடித்தவனுக்கு கோபம் முகிழ, விருட்டென்று அணிந்திருந்த கோட்டை கழட்டி சுகனிடம் கொடுத்துவிட்டு அவளை நோக்கி சென்றான் துருவ்.
ஆலம் எடுத்து முடித்தவர்கள் ஒவ்வொருவராக சென்று சசிகலாவிடம் சீரை பெற்றுக் கொண்டிருக்க அவரால் இங்கே வர முடியாமல் போனது அந்நேரம்.
“எங்க மா கேக்குறோம் இல்ல.. உன் வீட்டுக்காரர் எங்க? வரலையா.. இல்லை..” என்று அவர்கள் ஒரு மாதிரி அவளை பார்த்தனர். அதுவும் கழுத்தில் தாலியும் இல்லை! காலையில் மெட்டியும் இல்லை! வகுட்டில் குங்குமம் இல்லை!
இவளோ தவிப்போடு அமர்ந்திருக்க “கேட்கிறாங்கள.. நான் இங்கே தான் இருக்கிறேன் சொல்ல வேண்டியது தானே!” என்றபடி அருகில் நின்று துருவ்வை இவள் ஆனந்த அதிர்ச்சியோடு பார்க்க..
வழக்கம்ஸபோல அவளின் அந்தப் பார்வையில் விழுந்தவன்
அவளின் நெற்றி முட்டி.. “லூசு..” என்று அதட்டி, “நீங்க எடுங்க” என்றான்.
‘ஆலம் எடுத்தவர்களுக்கு பணம் வைக்க வேண்டும்” என்று வைதேகி கூட தன் வாலேட்டில் இருந்து இரண்டு 500 ரூபாயை வைத்தவன் வா என்று அவளை அழைத்து சென்றான்.
இணக்கமாக அவளோடு நடந்து வந்தாலும் அவனுக்குள் இருக்கும் பிணக்கத்தை கண்டு கொண்டாள் அனு. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. அவனுடைய அந்த இறுகிய முகபாவம்
“மேடம்.. எல்லா பெண்களும் வாங்கிட்டாங்க. நீங்க கூட்டிட்டு வந்து பொண்ணு மட்டும் தான் இன்னும் சீர் வாங்கல” என்று தர்மகர்த்தா கூற.. “எங்கே அவள்?” என்று பார்த்தவர் கண்ணில் விழுந்தது அவர்களின் பின்புறம் தான்.
“அனு..” என்று இவர் அழைக்க கூட்டத்தில் அவர்களுக்கு அது காதிலேயே விழவில்லை. அதனால் பின்னே வேகமாக வந்தவர் கண்களில் அவளை அணைத்தபடி செல்லும் மகனும் சற்று தள்ளி வரும் சுகனும் தான்!
அவர் அதிர்ச்சியோடு பார்க்க… ஆலம் எடுத்த பெண்மணி “மேடம் அந்த பொண்ணோட வீட்டுக்காரர் பெரிய பணக்காரர் போல.. பாருங்க ஆலம் எடுத்து எங்களுக்கே 500 ரூபாய் நோட்டு கொடுத்திருக்கிறார். அதனால இந்த சீர்வரிசை எல்லாம் அந்த பொண்ணுக்கு தேவை படாது நீங்க வாங்க மேடம்” என்று கூறிவிட்டு செல்ல..
“என்னது புருஷனா??” என்று அதிர்ச்சி விலகாமல் செல்பவர்களையே வெறுத்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தார் சசிகலா..??
அய்யா தெரிஞ்சி போச்சி....இனி என்ன பண்ண போறாங்க சசி??????
ஒரு வேலை அந்த அப்ஸரா பிள்ளையை கூட்டி வந்துடுவாங்களோ????
ஏன்னா, இன்னும் அவளை மருமகளா தானே பார்க்கிறாங்க.....
இந்த surrogacy பத்தி தெரியாம, இந்த அம்மா அனுவை தப்பா நினைச்சிருமா????
அப்படினா....அச்சோ அனு🥺🥺🥺🥺🥺🥺
@gowri வெயிட்டுங்க.. வெயிட்டுங்க டியர்.. நீங்க கேட்ட எல்லாமே ஒன்னு ஒன்னா வரப் போகுது.. என்ஜாய் 😜😜😜