ஆருயிர் 10
அரவிந்துக்கு தாறுமாறாக கோபம் வர.. அதை அவன் வண்டியில் காட்ட… வண்டியோ மெட்ரோ ரயில் போல சீறிக்கொண்டு போனது. அவனோ பின்னே வரும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகனங்கள் எதையும் கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு சீற்றம்!!
பயம் பதட்டத்தோடு யாழினியின் கண்களை கண்டவனுக்கு அந்த பயம் பதட்டத்திற்கு காரணமானவனை அடித்து வெளுக்கும் வேகம்!! தோளோடு அவளை அணைத்து நின்றாலும் அவளது நடுக்கம் நன்றாகவே தெரிந்தது அவனுக்கு.
'எப்படி அவளை ஒருத்தன் சீண்டலாம்? பயம் காட்டலாம்? அதுவும் நான் இருக்கும் போது!!' என்று அவளுக்கு அரணாய் நின்றவன்.. அவளுக்கு பாதகம் செய்வதற்கு அரனாய் இருந்தான்.
"அந்த வெள்ள பன்னிக்கு நான் யாருன்னு காட்டுறேன்! வரேன் டா!"
என்று அதிரதன் தன் காதலை யாழினியிடம் சொன்னானோ அன்றே அவனைப் பற்றி அனைத்து விவரங்களையும் அறிந்து விட்டான் அர்விந்த்!!
ஒரு ஹைபை சொசைட்டியில் வாழும் நபர் எப்படி இருக்க வேண்டுமோ.. அப்படி இருந்தான் அதிரதன்!! பெரிதாக கெட்டவன் என்றெல்லாம் இல்லை. ஆனால் தன் வழியில் வருபவர்களை தகர்த்து எறிந்து விடுவான் அதிரதன் என்று கேள்வியுற்றான்.
இது தொழிலதிபர்களுக்கு எல்லாம் அவர்களது தொழில் தர்மமாய் போய்விட்ட நிலையில்.. இதை பெரிது படுத்தவும் மனதில்லை அரவிந்துக்கு!!
ஆனால் அத்தனையும் அவன் மனதோடு மட்டுமே!! அவனைப் பற்றி எதுவும் அவளிடம் பகிர்ந்து கொள்ள அரவிந்துக்கு விருப்பமில்லை. உண்மையிலேயே அவள் அதிரதன் மீது காதல் கொண்டால்.. மனதில் துளிர்த்த காதல் எதையும் சமாளிக்கும்!! காதல் கொண்ட கண்களுக்கு மற்ற காரண காரியங்கள் தெரியாது.. புரியாது!!
பெரிதாக கெட்டவன் இல்லை என்றாலும் ரொம்பவும் நல்லவனும் இல்லை. இப்போது உள்ள கலிகாலத்தில் முக்கால்வாசி பேர் இல்லை இல்லை 90% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். என்பதால் தன் மனது படி அவள் முடிவு எடுக்கட்டும் என்று இவன் அமைதியாக இருந்தான்.
ஆனால் இன்று அவளை பயத்தோடு பார்த்ததும் அப்படி ஒரு கோபம் ஏன் வெறி என்றே சொல்லலாம் அரவிந்துக்கு!!
வேகமாக வண்டியில் வந்தவன், பள்ளியின் இரும்பு கேட்டை வண்டியால் ஒரே மோது மோதி திறந்தவன் அதைவிட வேகமாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போக…
அப்போதுதான் அதிரதன் கார் கதவை திறந்தவன், அதிக சத்தத்துடன் கேட் திறப்பதை பார்த்து யார் என்று திரும்பிப் பார்க்க.. வந்த அரவிந்தோ எதுவும் கேட்கவில்லை அவனை இடது கையால் திருப்பி வலது கையை முஷ்டியாக மடக்கி ஒரே குத்து மூக்கில்.. பொல பொலவென இரத்தம் மூக்கில்!!
இருவரும் ஒன்றாக சென்றதை அதிரதன் காதல் மனது ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் நட்பை தாண்டி அவர்களிடம் எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக நம்பியவன் சற்றே நிதானம் அடைந்தான்.
ஆனாலும் ஆசை ஆசையாய் யாழினியிடம் காதல் சொல்லி அந்த காதலுக்கு எதிர்பார்ப்போடு அவன் இருக்க.. தன்னவளோ அவனை தள்ளி நிறுத்தியது அவனுக்கு கடுப்பை கிளப்பியது. வேலை வேலை என்று ஓடி என்ன செய்வது ஒரு பெண்ணின் மனதை சீக்கிரம் நம் பக்கம் திருப்பும் முடியவில்லையே என்று தன் மீது அவனுக்கு எரிச்சல்!! அதிலும் அவனுக்கு நேரமோ வெகு குறைவு!!
எப்படி அவளை தன்னிடம் இழுக்கலாம் என்று அடுத்த காயை அவன் நகர்த்துவிட்டு இங்கே வீட்டுக்கு செல்ல வண்டியில் ஏற எத்தனிக்க… திடீரென்று படார் என்று திறக்கும் சத்தம்!!
' யார் அது? இந்த நேரத்தில் பள்ளிக்கு? அதுவும் இப்படி திறந்து கொண்டு?' என்று அவன் கோபத்தோடு திரும்பினான். எப்பொழுதும் இவனோடு இருக்கும் பவுன்சர்கள் பள்ளி என்பதால் வேண்டாம் என்று தவிர்த்து வந்து விட்டான்.
வந்தவன் திடீரென்று தன்னை தாக்குவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிரதன் ஒரு நிமிடம் தள்ளாடி மூக்கு பிடித்துக் கொண்டு நின்றவன்.. கைகளில் லேசாக ரத்தம் வர.. அந்த இருளிலும் பிசுபிசுத்த கையும் அந்த வாடையுமே சொன்னது அது ரத்தம் தான் என்று..
"ஹேய்.. இடியட்.. பாஸ்டெர்ட்.. ஹவ் டேய் யூ?" என்று கத்தியவன், மற்றொரு கையால் எக்கி அரவிந்தன் சட்டையை பிடிக்க எத்தனித்தான்.
அந்த முரடனோ.. எத்தனை எத்தனை ஊர் வம்பை விலைக்கு வாங்கி இருப்பான். எத்தனை எத்தனை பேரை அடித்து துவைத்திருப்பான் அவனுக்கா தெரியாது.. அடுத்து அவனின் மூவ் என்னவென்று.. சட்டென்று நகர்ந்தவன், அடுத்து அவனை நெருங்க.. அதிரதனும் அதற்குள் சுதாரித்து கொண்டவன், அவனை தாக்க.. வெறும் தற்காப்பை மட்டுமே கையில் எடுத்த அரவிந்த்.. ஒரு கட்டத்தில் அவனை கிடுக்கு பிடி பிடித்தான். அதிரதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
"இங்க பாரு.. என்ன நடந்ததுனு முழுசா தெரியாததால் தான். வெறும் மூக்கு மட்டும் உடைஞ்சிருக்கு.. என்ன நடந்துச்சுனு மட்டும் தெரிஞ்சிச்சு.. நீ அவ்வளோ தான்!! மித்து வாய் திறக்காம இருக்குற வரை நீ தப்பிச்ச.. அவ வாய திறந்தா நீ..??" என்று உதட்டை மடித்து கடித்து தலையை துண்டாக்குவது போல சைகை செய்து விட்டு வந்ததை விட வேகமாக சென்றான்.
மூக்கில் ரத்தம் வர இடது கையில் அதை அழுத்து கர்சிப்பால் பிடித்தபடி நின்றிருந்தவனின் கண்கள் ரத்தத்தை விட சிவந்து போனது கோபத்தில்.. ஆத்திரத்தில் ரௌத்திரத்தில்!!
'அதுவும் இப்படி ஒன்றும் இல்லாதவன் என்னை வந்து அடித்து விட்டு சென்றா விட்டானே?' என்று அந்த கோபம் எரிமலையாய் தகிக்க "கார்ட்ஸ்..!!" என்று அதிரும் வண்ணம் அலறினான் அதிரதன்!!
அங்கிருந்த வாட்ச்மேன்கள் ஓடி வர தண்ணீர் எடுத்து வர சொன்னவன் மூக்கை சுத்தப்படுத்திவிட்டு காரை வேகமாக மருத்துவமனைக்கு விரட்டினான்.
"டேய் அரவிந்த்.. இதை விட பல மடங்கு உனக்கு வலிக்க வைக்கிறேன் டா!! அரவிந்த் நீ அனுபவிப்ப… வலிக்க வலிக்க நீ அனுபவிப்ப.. வலிக்க வைக்கிறேன் கூடிய சீக்கிரம்!! மார்க் மை வோர்ட்ஸ்!! யூ ஷூட் பே ஃபார் இட் அரவிந்த்!!" என்று கர்ஜித்தவன் கைகளில் கார் பறக்க மருத்துவமனை முன்பு க்றீச்சிட்டு நின்றது.
மருத்துவர் அவனை சோதித்து "ஒன்னும் இல்லை சின்னி மூக்கு உடைஞ்சிருக்கு! இட்ஸ் ஹீல் சூன்! டோண்ட் வொர்ரி!!" என்று அவனை அங்கேயே ஓய்வு எடுக்க சொன்னார்.
அதிரதனை அடித்து விட்டு அதன் பின்னே மனம் சமாதான அடைய வீட்டிற்கு சென்றான் அரவிந்த். அதுவும் அவனுக்கு அப்பொழுது நல்ல பசி வேறு "ம்மா.. சாப்பாடு எடுத்து வை!" என்றபடி இவன் படியேறி செல்ல..
"அந்த பொண்ணு இன்னும் இருக்குடா நீ வருவேனு ஏதோ வேலை செஞ்சுகிட்டு இருக்கு" என்றதும் தான் இவனுக்கு ஆர்த்தியின் ஞாபகம் வந்தது.
"சிட்.. ப்ராஜெக்ட்டை ஒரு தடவ டெமோ ஓட்டி பார்க்கலாம் என்று நினைத்தோம்ல.. சரி மா சாப்பாடு குடு. நான் அங்க சாப்பிட்டுகிட்டே பார்த்துக்கொள்கிறேன்" என்று சுடச்சுட மூன்று தோசையை சுட்டு சாம்பாருடன் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.
"சாரி ஆர்த்தி! கொஞ்சம் லேட் வேலை இருந்தது" என்றபடி அவன் சாப்பிடுவதை பார்த்தாள் எதுவும் பேசாமல் அவன் அருகே வந்து நின்றாள்.
"என்ன ஆர்த்தி?" என்று தோசை வாயில் திணித்துக் கொண்டே அவன் கேட்க..
"இல்ல இன்னைக்கு நாம முதன் முதலில் நம்ம ப்ராஜெக்ட் முடிச்சு டெமோ பண்ண போறோம் இல்லையா? நல்லபடியா ஒர்க் அவுட் ஆகணும்னு கோயிலுக்கு போயிட்டு வந்தேன். அதான் உங்களுக்கு பிரசாதம்…" என்று அவள் திருநீரை நீட்டினாள்.
"நான் சாப்பிட்டு இருக்கேனே ஆரத்தி?" என்றான் அப்போது தோசையில் கவனமாய்!!
"நான்.. நான்.. வச்சி விடவா?" கண்களில் ஆர்வம் கேட்டாள் ஆர்த்தி.
"ஓகே.. ம்ம்ம் வச்சு விடு!" என்றான் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அரவிந்த்.
மெல்லிய உதடுகள் அழகாய் விரியப் புன்னகைத்தபடி அவள் வலது கையின் மோதிர விரலால் திருநீரை தொட்டு எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டாள் ஆர்த்தி!!
பின் அவள் முகத்தை அவனுக்கு பக்கத்தில் கொண்டு வந்து உதடுகளைக் குவித்து ஊத போனாள்.
"வேண்டாம்" சட்டென்று முகத்தை திருப்பினான்.
"நான் ஒண்ணும் முத்தம் குடுக்க வரல" வாய்க்குள் முணகியவள், "அட.. காட்டுங்க!!" என்றாள்.
அவன் முகத்தை இழுத்து பிடித்து சிவந்த உதடுகளை மீண்டும் குவித்து உப்பென ஊதினாள்.
அவளின் அருகாமை ஏதோ செய்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்று முடித்துக் கொண்டான்.
"நோ மென்சன்"என்றாள் உதட்டை சுழித்தப்படி!!
"ஆமா.. கோவில்ல என்ன சாப்பிட்டே.. புளியோதரை யா?" என்று கேட்டான்.
"எப்படி தெரியும்?" என்று அவள் ஆச்சிரியத்தோடு கேட்க..
"உன் மூச்சுல வாசம் மணக்குதே .." என்றான் மூச்சை இழுத்து..
"ஆமா.. கோவில் புளியோதரைனா எனக்கு பிடிக்கும். இன்னிக்கு செம டேஸ்ட்டா இருந்துச்சு.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் எனக்கு பிடிக்கும். என்னை மாதிரி வறுமையில் வாழ்பவங்களுக்கு இதெல்லாம் தான் பெரிய சந்தோஷம்!!" என்றாள் சந்தோஷத்தோடு.
அவளையே சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தான் அரவிந்த். "இனி புளியோதரை சாப்பிடும் போது எனக்கு ஒரு பார்சல் கொண்டு வந்து விடனும். ஓகே?" என்றபடி தட்டை ஓரமாக வைத்து கை கழுவிட்டு வந்தான்.
இருவரும் சேர்ந்து அந்த ப்ராஜெக்ட்டின் டெமோ ஓட்டி பார்க்க ரிசல்ட் அவ்வளவு துல்லியமாக வந்தது. அதுவும் இவர்கள் கொடுக்கப்படும் கணக்கிற்கு விடைகள் எல்லாம் ஸ்டெப்பை ஸ்டெப் வந்தது. ஆங்கிலம் பட்டனை அழுத்தும் போது அந்த கணக்கின் விளக்கத்தை கம்ப்யூட்டர் பெண் ஆங்கிலத்தில் விவரித்தாள்.
"வாவ்.. வாவ்.. பிரபா வீ டன் இட்!! வீ டன் இட்!!" என்று அவர்கள் சாதித்த மகிழ்ச்சியில் அருகில் இருந்தவனை அணைத்துக் கொண்டாள் ஆர்த்தி.
ஆர்த்தியை பொறுத்தவரையில் அவன் காதலன் தான். அதனால் அவனை அணைத்துக்கொள்வதில் பெரிதாக தவறு ஏதும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அரவிந்த் தான் துடித்து போனான். இன்னும் காதல் என்ற ஒன்று அவள் மீது முழுதாக வந்திருக்காத நிலையில், மெல்லிய ஈர்ப்பு மட்டுமே பெண்ணின் மீது அவனுக்கு!! அதுவும் அவள் அவனையே சுற்றி சுற்றி வருவதனால்..
அதை வைத்துக்கொண்டு உறவாட முடியுமா? என்று அவன் அவளிடம் இருந்து மெல்ல விலக.. ஆர்த்தியின் கைகளோ அவனை தன்னோடு இறுக்கியது.
அவள் முகம் அவன் முகத்துடன் ஒட்டிக் கொண்டது. அவளின் பவழ இதழ்கள் அவன் மெல்ல உதடுகளை உரசியது. அவள் விட்ட மூச்சுக் காற்று மெல்லிய வெம்மையோடு வந்து அவன் முகத்தில் மோதி விலகிப் போக.. இவனுமே அவளை விட்டு விலகிப் போனான்!!
"நீங்க லவ் சொல்லல.. அதனால நீங்க என்ன கட்டி பிடிக்க வேண்டாம் பிரபா! கிஸ் பண்ண வேணாம்!! ஆனா.. நான் உங்களை அவ்வளவு லவ் பண்றேன். இதெல்லாம் நான் பண்ணிக்குவேன்! முடிஞ்சா கோ ஆப்ரேட் பண்ணுங்க இல்லன்னா பொத்திகிட்டு இருங்க" என்று ஆக்ஷனில் செய்தவள் அடுத்து ஆக்ஷனை தனதாக்கி கொண்டாள்.
அழுத்தமாக அவன் இதழில் ஒரு முத்தத்தை பதித்து விட முதல் பெண்ணின் ஒரு ஸ்பரிசம் அவனும் சில ஹார்மோன்களை உயிர்த்தெழ செய்ய… அவன் இடுப்பில் கையைப் போட்டு வளைத்து அவனை மொத்தமாக உள்ளே இழுத்து அணைத்தாள்.
அவள் பூ முகம் காதலோடு அவன் முகத்தை நெருங்கியது. அவன் முகம் பயத்தோடு மெல்லப் பின் வாங்கியது. அவளோ அவன் இடுப்பை இறுக்கி.. முகத்தை எக்கி அவனது உதட்டில் முத்தமிட்டாள்.
ஒரு சில வினாடிகளுக்கு மேல் அவனால் அவளோடு ஒன்று முடியவில்லை.
சட்டென்று அவளை பிரித்தெடுத்தவன் திரும்பி நின்று கொண்டு அவளுக்கு தெரியாமல் புறங்கையால் தனது உதட்டை துடைத்துக் கொண்டான். பின் அவள் பக்கம் திரும்பி "யூ ஆர் ரைட்!! உனக்கு என் மேல் காதல் இருக்கலாம். ஆனா அதே பீலிங்ஸ் எங்கிட்டயும் வரணும் இல்லையா ஆர்த்தி? அதுக்கு கொஞ்சம் டைம் கொடு!! நான் இன்னும் சாதிக்கவே ஆரம்பிக்கல.. இதுக்கிடையில் இந்த காதல் எல்லாம் என் மனசுல இல்லவே இல்லை! சோ.. கீப் டிஸ்டன்ஸ் ஆர்த்தி!" என்று அவ்வளவு தன்மையாக அவளை வருத்தி விடக்கூடாது என்று உரைத்தான்.
அவனின் வார்த்தையில் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. "பிரபா.. நான் தப்பான பொண்ணு எல்லாம் இல்லை.. அந்த அர்த்தத்தில் எல்லாம் அப்படி செய்யல! ஏதோ உரிமையா.. உங்கள் மேல் உள்ள காதலால…" என்று சொல்ல முடியாமல் அவள் உதட்டை கடித்து விசும்ப…
"ஹே.. ஹே.. ரிலாக்ஸ்!!" என்று அவள் கையைப் பிடித்து புறங்கையில் லேசாக தட்டிக் கொடுத்தவன் "நான் உன்னை தப்பா மீன் பண்ணல ஆர்த்தி.. பீலிங்ஸ் ஆர் டிப்ரண்ட்!! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இல்லையா? அதை தான் சொன்னேன்" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
அவள் முகம் சற்று தெளிந்தது போலிருக்கு "ஏ பொண்ணே.. இப்படியே போகாத. எங்க அம்மா அவ்வளவுதான் என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்க. கொஞ்சம் சிரிச்ச மாதிரியே போ! அதுக்கு முன்ன ரெஸ்ட் ரூம் போயிட்டு மூஞ்செல்லாம் நல்லா தொடச்சிக்கிட்டு போ" என்றவன் அவளுக்கு தனிமை கொடுத்து சிறிது நேரம் வெளியில் போய் நின்று கொண்டான்.
சிறிது நேரத்தில் வெளியில் வந்தவள் முகம் தெளிவாக இருக்க.. தலையசைத்து விட்டு கிளம்பி சென்றாள். இவனும் அந்த மொட்டை மாடியில் நின்று கொண்டு இருள் வானில் உலா வரும் நிலாவை தான் பிடரியை கோதிக் கொண்டே பார்த்தான்.
அன்று இரவு முழுவதும் உறங்காமல் யோசித்துக் கொண்டிருந்த அதிரதன் தனது பிஏ மூலம் யாழினிக்கு தான் மருத்துவமனையில் இருப்பதாகவும்.. அதுவும் அரவிந்தன் உபயத்தால் என்ற செய்தியை காலையில் அனுப்பி வைக்குமாறு கூறியவனுக்கு அதற்கு பின்னே தூக்கம் வந்தது.
மறுநாள் காலையில் வழக்கம் போல மணி பார்க்க மொபைலை எடுத்த யாழினி அதிரதனின் பிஏயை அனுப்பிய மெசேஜை கண்டு அதிர்ந்து போனாள்.
அதுவும் அரவிந்தின் உபயோகத்தால் என்றதும் அவளுக்கு இன்னும் பயந்து வந்தது. அத்தனை பெரும் தொழிலை கட்டிக் காப்பவன்.. அவன் மேல் கை வைத்தால்.. சும்மாவா இருப்பான்? ஏன் இந்த அர்விக்கு இவ்வளவு கோபம் வருது? எதுக்காக அவரை போய் அடித்தான்? லூசு பையன்.. லூசு பையன்!!" என்று திட்டிக் கொண்டவளுக்கு அப்போதுதான் புரிந்தது. நேற்று தன்னிடம் அதிரதன் ஏதோ தவறாக நடந்து விட்டான் என்று தான் அடுத்திருக்கிறான் என்று!!
"ஐயோ!! இதுக்கு நானே அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் போலயே!! ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் அவனிடம் சொல்ல வரல.. அதுக்குள்ள இந்த பக்கி இவ்ளோ பிரச்சனை இழுத்து வச்சிருக்கானே? எப்படியாவது அதிரதனின் கோபத்தை குறைத்து அரவிந்தை அவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்" என்று துடித்தாள்.
அதிரதன் தான் எது நினைத்தாலும் செய்து முடிப்பானே என்று பதறியவள், அவசரமாக குளித்து சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு வேகமாக விசுவநாதன் வீட்டை நோக்கி வண்டியை விரட்டினாள்.
மாடியில் நேற்று ஆரத்தி கொடுத்த முத்தத்தை நினைத்துப்படி இருந்த அர்விந்துக்கு அதுவே கனவாக வர…
கனவில் ஆரத்தியோடு டூயட் பாடி கொண்டிருந்தவன் மீது ஒரு பக்கெட் தண்ணீர் விழ.. "அச்சோ சுனாமி.. வா ஆர்த்தி.. ஓடிடலாம்!" அதிர்ந்து எழுந்து பார்த்தவனை, விட்டால் கன்னத்தில் ஒன்று யாழினி!!
"அறிவு இருக்கா அர்வி உனக்கு? எதுக்குடா அவனை போய் அடிச்ச? எதா இருந்தாலும் என்னை கேட்டு தொலைய வேண்டியது தானே!!" என்று அவள் பதட்டத்தோடு பேச..
அவனோ வெகு சாதாரணமாக முகத்தில் இருந்த தண்ணீரை அவளது ஷாலால் வழித்துவிட்டு "நீ சொல்லி இருந்தா நான் ஏன்டி அவனை போய் அடிக்க போறேன்?" என்றான் நிதானமாக..
"கூமுட்டை.. கூமுட்டை.. என்ன பண்ணி வச்சிருக்க தெரியுமா? அவன் எவ்வளவு பெரிய உயரத்துல இருக்குறான் தெரியுமா? ஒரே ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும்!! உன்னை.. உனக்கு…" என்று பதைபதைத்தாள் அவனின் எதிர்காலத்தை எண்ணி..
அவளின் அத்தனை பயத்தில் இருக்கும் அவனிடம் எதிரொலி எதுவுமே இல்லை. இன்னும் விஸ்தாரமாக அதே பாயில் படுத்து கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டபடி ஆட்டியவன்.. அவளை தலை மட்டும் திருப்பிப் பார்த்து "அப்படியெல்லாம் யாரும் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது! நான் அவனை அடித்ததற்கான சாட்சி கூட இல்லை. நான் என்ன அவன்கிட்ட வேலை பார்க்கிறானா? அவன் டிஸ்ப்ளனரி ஆக்ஷன் எடுத்து என்னை வேலையை விட்டு தூக்க? நான் சுயமாக நிற்கிறேன்!! சொந்தமாக வேலை செய்கிறேன். அவன் வந்து என்னத்த பண்ண போறான்?" என்று நக்கலாக பதில் அளித்தான் அரவிந்த்.
"லூசு பயலே.. அவர் லீகல் ஆக்சன் எடுப்பார்னு யார் சொன்னா? இல்லீககளா ஏதாவது பண்ணா? ஏற்கனவே பேங்க்ல கடன் வாங்கி வைத்திருக்கோம். அதுல ஏதாவது கோளார் பண்ணினா? எனக்கு பிரச்சனை கொடுப்பது மூலம் உனக்கு கொடுத்தா… இல்ல சாமி அவன் வேற மாதிரி பொறுக்கிய ஆளாய் இருந்து ஆட்களை அனுப்பினால்? என்ன பண்ணுவ டா? இப்படி எல்லாம் யோசிக்கிற மாதிரி வேற ஏதாவது பெருசா பண்ணுனா?" என்றவள் பட்டியல் இட.. அவனோ அவளை முறைத்து பார்த்தான்.
யாழினி அவனை விடாமல் திட்டி திட்டியே குளிக்க கூட இல்லாமல் வேறு உடையை மட்டும் மாற்றி இழுத்து சென்றாள் அதிரதன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நோக்கி…
யாழினி கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்து முகத்தில் டன் கணக்காக சோகத்தை வழிய விட்டு வலிப்பதுபோல அவ்வப்போது நடித்து பழகிப் பார்த்து தயாராக இருந்தான் அதிரதன். ஆனால் யாழினியோடு வந்த அரவிந்தை சற்று எதிர்பார்க்காமல் அவன் உம் என்று முகத்தை திருப்ப..
"நீ என்னவோ செய்து கொள் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!" என்று அரவிந்தும் அமைதியாக நின்றான்.
யாழினி தான் பதறிப் போனாள். ஒரு பக்கம் கட்டு இருந்தது அதிரதனுக்கு. தோளோடு சேர்த்து கைக்கும் அவன் கட்டு போட்டு இருக்க..
அரவிந்தோ "நாம மூக்குல தானே குத்தினோம்? இவன் என்ன கையில் கட்டு போட்டு இருக்கான்?" என்று தீவிர யோசனையில் அர்வி!!
"மித்து.. நான் அவன் மூக்குல மட்டும் தான் குத்தினேன் டி! கையெல்லாம் ஒன்னும் பண்ணல டி.. இவன் ஏன் அங்க எல்லாம் கட்டு போட்டு வைச்சிருக்கான்?" என்று இவன் அவளிடம் குசு குசுக்க.. அதிரதன் முறைக்க..
"சாரி கேளு.. அர்வி!" என்று இவள் அடிக்குரலில் சீற.. தன் தோழிக்காக அவள் கண்களை பார்த்துக் கொண்டே "சாரி!!" என்று விட்டு வெளியே சென்று நின்று கொண்டான் அரவிந்த்.
"சாரி.. சாரி.. சார்! இவனுக்காக நான் சாரி கேட்டுக்குறேன் எனக்காக மன்னித்துவிடுங்க சார்" என்று அத்தனை சாரி அத்தனை மன்னிப்பு!!
கண்களில் அத்தனை பரிவு காட்டி மன்னிப்பு கேட்பவளை மறுக்க முடியாமல் "உனக்காக மட்டும் யாழ்!" என்றான் கண்களில் காதலை தேக்கி..
அதில் ஒரு சின்ன சலனமும் வந்தது யாழினி மனதுக்குள். தனக்காக செய்யும் அதுவும் தன் நண்பனை தவறை மன்னித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் இந்த அதிரதனை அவளுக்கு பிடித்தது. ஆனால் வெறும் பிடித்தம் என்பது வேறு.. உள்ளம் உருகி உடல் உருகி காதல் செய்து வேறு அல்லவா?
எதுவோ ஒன்று!! ஆனால் இதை தனக்கு சாதனமாக பயன்படுத்திக் கொண்டான் அந்த தொழிலதிபன் அதிரதன்.
"பார்க்க கூட ஆளில்லாமல் தனியா வந்து இப்படி கிடக்கிறேன்" என்று அவன் பெருமூச்சு விட..
தன் நண்பனால் தான் அதுவும் தன்னால் தான் என்று குற்ற உணர்வு மேலோங்க "நான் வேணா உங்களை பார்த்துக்கட்டுமா சார்?" என்று மென் குரலில் கேட்டாள் யாழினி.
"அதெல்லாம் வேண்டாம் உன்னை நான் யூஸ் பண்ணிகிட்ட மாதிரி இருக்கும். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் யாழ். யூ டோண்ட் வொர்ரி!" என்று மறப்பது போல் தன் நிலையை அவன் மீண்டும் மீண்டும் வலியுறுத்த.. கேட்ட பெண்ணுக்கு தான் அவன் மேல் பரிதாபம் பொங்க வம்படியாக நானே பார்த்துக்கொள்கிறேன் என்றாள் அடுத்த இரண்டு நாட்கள்!!
"அர்வி நான் இங்கிருந்து சார பாத்துக்கறேன். நீ வீட்ல அம்மா கிட்ட சொல்லிட்டு. நீயும் வந்து இரு. ஆனா உள்ள வரக்கூடாது. அங்க தான் இருக்கணும்" என்றதும் அர்விந்துக்கு கோபம் தலைக்கு ஏறியது.
ஆனாலும் யாழினிக்காக என்று கட்டுப்படுத்திக் கொண்டவன், "நான் போய் சார் கிட்ட இன்னும் இரண்டு சாரி சொல்லிட்டு வருகிறேன்!" என்று உள்ளே நுழைந்தான்.
அதிரதனும் அட்டகாசமான சிரிப்போடு வரவேற்று "வாங்க மிஸ்டர் ஹீரோ… எப்படி நீ போட்ட பாலில் நான் எப்படி சிக்சர் அடிச்சேன் பாத்தியா? எப்படி பால் போட்டாலும் அதைத் தனக்காக மாற்றிக் கொள்ளும் தி கிரேட் பிசினஸ் மாங்கனெட் அதிரதன் டா நான்!!என்று எள்ளலாக சிரித்தான்.
அரவிந்தோ ஒன்றும் கூறாமல் அவனை முறைக்க.. "ஆனா பாஸ் உங்களுக்கு நான் நன்றி சொல்லித்தான் ஆகணும்!! உங்களால தான் என் காதல் சக்சஸ் ஆயிடுச்சு" என்றான் இன்னும் நக்கலாக..
"அதோட மட்டுமல்ல.. நீ ஹீரோ பர்பாமன்ஸ் கொடுக்கலாம் நினைச்ச.. இப்ப பாரு ஊத்திக்கிச்சு!! எப்பவுமே ஹீரோவுக்கு இந்த மாதிரி வில்லத்தனம் எல்லாம் வராது. இங்கே வில்லனும் நான்தான் ஹீரோவும் நான் தான்!! உனக்கு வில்லன்.. அவளுக்கு ஹீரோ!!" என்று கூறியவனின் பின்னே என்ன குள்ளநரித்தனம் இருக்குமோ என்று முதல் முறை தோழியின் வாழ்க்கையை நினைத்து பயந்தான் அரவிந்த்!!
வெரி பேட் பெல்லோ இந்த அதி