Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 20

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

வெளிநாடுகளில் எல்லாம் திருமணம் செய்துகொள்வது கிடையாது பிடித்தால்வாழலாம் பிடிக்கவில்லையென்றால் விலகலாம் அவ்வளவுதான் நம் நாட்டில் இருப்பதுபோல் கட்டாயப்படுத்தியோ அதட்டிமிரட்டியோ குடும்பவாழ்க்கைக்குள் தள்ளிவிடவும் முடியாது 

ஐயோ காதலிச்ச கழட்டி விட்டுட்டுபோயிட்டானே 

என்னைவிட்டுட்டு இன்னொருருத்தி கூட போயிட்டானே  நம்நாட்டில் சண்டைபோடுவதுபோல் அங்குபோட முடியாது

திருமண கட்டுப்பாடுகள் எல்லாம் நம் நாட்டில் மட்டும்தான் வெளிநாட்டில் இந்த கட்டுப்பாடு இல்லை அந்த நாட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவனுக்கு

வைதேகி காதலைபற்றி கூறியதும் என்ன சொல்வான்  மனதில் பட்டதை தான் கூறினானே தவிர அவள் மனம்வருத்தப்பட வேண்டும் என்று அவன் கூறவில்லை

 

 

அவள்மேல் சின்னதாக  ஈர்ப்பு மாமன்மகள் என்ற பாசம் அதையும் தாண்டி காதல்கருமாரி எல்லாம் கொஞ்சம் வரவில்லை

இத்தனைக்கும் வீபிக்கும் கேர்ள்நிரெண்ட்ஸ் நிறையஉண்டு 

கல்லூரி படிக்கும் காலத்தில் டேட்டிங்கூட போயிருக்கிறான் அதை அம்மாவுக்கும்  குடும்பத்துக்கும் தெரியாமல் மறைத்திருக்கிறான் தமிழ்நாட்டு பாரம்பரியம் திருமணத்தைப்பற்றி எல்லாம் அவனுக்கு தெரியாது அழகி சொல்லியிருந்தாலும் அதைபற்றி  யோசிக்கும் நினைப்பெல்லாம் அவனுக்குஇல்லை

 

 

வைதேகி  அழுதுகொண்டிருக்கிறாள் 

இன்னொரு பக்கம் தாரா கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் 

சூர்யாவை மாமனார் எங்கேயும் நகரவிடவில்லை எங்குபோனாலும் இழுத்துக்கொண்டு போகிறார் இப்போதெல்லாம் தாராவோடு சரியாக பேசமுடியவில்லை

மனைவிக்கு ஆறுதல் சொல்லமுடியவில்லை

இதுவும் போதாதென மச்சானின் ஊருக்கு அழைத்துபோய் ஜாதகம்பார்க்க

  என்முன்னாடியே என் பொண்டாட்டிக்கு ஜாதகம் பார்க்குறீங்களா கோவம்தான் வந்தது கோவப்பட்டு ஏதாவது பேச சண்டை வந்துவிட்டால் என்ன செய்வது மனைவியோஅப்பா அம்மாவேண்டும் 

அவர்கள் சம்மதத்தோடு ஊருக்கு வருவேன் என்கிற்ளே 

இந்த லட்சணத்தில் எப்படி மாமனாரை எதிர்த்துபேசி சண்டை போடுவதென அமைதியாக அமைந்திருந்தான் 

 

பெரியார்கள் வீட்டுக்குள் பேசிக்கொண்டிருக்க குடும்பஜோசியர் வந்தா வீட்டுக்குள் அழைத்து வருமாறு சூர்யாவிடம் கூறிவிட்டு வீராச்சாமியும் அவர்களோடுபேச அமர்ந்து விட சூர்யா கண்ணில்மின்னல் அடித்தது குடும்ப ஜோசியரும் வந்துவிட்டார் 

பணத்தை கொடுத்து பேசி கரைக்கபார்க்க அவரோ நேர்மையானவர் போல அவனை திட்டிவிட்டார் இதெல்லாம் வேலைக்காகாது

தன் திருமணத்தைப் பற்றியும் தன்மனைவிக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி திருமணத்தை நிறுத்துமாறு பணிவோடு வேண்டிநிற்க  அந்த பணிவு நன்றாகவேவேலை செய்தது 

 

 

கவலைப்படாதீங்க தம்பி நான்போய் பேசுறேன்

இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தமில்லை அதோடு அவள் கணவனேடுதான் வாழ்முடியும் வேறு யாரையும் திருமணம்செரய்துகொள்ள முடியாது 

ராசிகட்டம்  அதைதான் சொல்கிறதென என்று கூறி திருமணத்தை மறுத்தார் 

 

சரிங்க ஒரு மூணுமாசம் போகட்டும் கட்டம் மாறுமானு பாக்கலாம் 

மத்தவங்களுக்கு ஜாதகம் பாருங்க 

இளையமகன் மகள் ஜாதகத்தை கொடுக்க இரண்டுமே வீராசாமிபிள்ளைகளோடு பொருந்தவில்லை 

 

மூணுமாசம் கழிச்சு கட்டம்மாறினாலும் மாறும் அப்போ கூட பாத்துக்கலாம் வெள்ளைச்சாமி கூறியதும் மச்சானும் சரி என்று தலையாட்ட  திருமணம் பேச்சு வார்த்தை தள்ளிவைக்கப்பட்டது என் மகனுக்கு உங்க பொண்ணு முடிவாகிட்டா  வீட்டுக்குகூட்டிட்டு போறேன்  மச்சான் ரெண்டுபேரும் பேசி ஒத்துபோனா ஜாதகம் பார்க்காமலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம் வீராசாமி கூற 

அவருக்கும் சரியெனதோன்ற 

மருமகளை அழைத்துச்சென்றார் 

மருமகன்கள் வருவதாக அனுப்பிவைத்தனர் 

அவர்களுக்கு தேரோட்டும் சாரதியாக சூர்யா

 

 

கண்ணகிக்கு  அண்ணன்மகளை பார்த்ததும் உற்சாகம் தொற்றிகொண்டது பநாட்டுக்கோழி ஆடு  மீன்  என்று அமர்க்களமாக சமைத்து பரிமாற 

சூர்யா பிரதர்ஸ்க்கு வயிறு எறிந்தது

 

அவளோட பொறந்தவீட்டு சொந்தங்களையெல்லாம் வீட்டுக்கு வரவழைச்சு உபசரிக்கிறான் 

ஆனா கூடபொறந்த தங்கச்சியமட்டும் 

தூக்கி விட்டுட்டான் 

காளியாத்தா புலம்ப 

 

 

கண்ணகி அதற்கும் இடித்தார்  மாமியாரே உன் மக  என்அண்ணனை  கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டு ஓடிபோனாளே அதனாலதான் இவ்வளவு அனுபவிச்சிட்டு இருக்கோ என் அண்ணனை  கல்யாணம் பண்ணிருந்தா  ரெண்டுவீட்டுக்கும் ராணிமாதிரி இருந்துருப்பா  நானும் வகைதொகையா  விருந்து வச்சிருக்கமாட்டேனா உங்க பொண்ணு ஓடிப்போனதுக்கு 

நாங்க என்ன பண்றதாம் 

நான் ஏதோ கவனிக்காதமாதிரியே பேசிட்டுஇருக்கீங்க

உங்க பொண்ணுக்கு கொடுத்து வைக்கல முகத்தைவெட்டிக்கொண்டு போக காலியாத்தாவுக்கு தான் மகள் நினைப்பில  கண்ணீர் முட்டியது

 

 

அம்மாவைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக மாமியாரை பின்தொடர்ந்துபோனால் மனிஷா

 

ஆன்ட்டி கிராண்ட் பாவோட பொண்ண உங்களுக்குபிடிக்காதா 

 

இல்லையேமா யாருபிடிக்காதுனு சொன்னது அந்த பொண்ணு நல்லபொண்ணு தான் எனக்குரொம்பவே பிடிக்கும் ஓடிபோறதா இருந்தா

கல்யாணத்துக்கு ரெண்டுமூணு நாலு முன்னாடியே போயிருக்கலாம் அத விட்டுட்டு எங்கண்ணனுக்கு பேசி முடிச்சு கல்யாணத்தன்னிக்கு  வீட்டைவிட்டு  ஓடிருக்கா அது என் குடும்பத்துக்கு எவ்வளவு அசிங்கமா இருந்திருக்கும் கொஞ்சமாவது நினைச்சுபார்த்தாங்களா என்அண்ணன் எத்தனைபேருக்கு முன்னாடி தலை குனிஞ்சுருப்பார் என்குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டாங்களே  எனக்கு கோபம் வருமா வராதா வேற ஒருத்தரூ பிடிச்சிருந்தாலும் கல்யாணத்துக்கு சம்மதிக்காமபோராடிருக்கனும்  அதை விட்டுட்டு கல்யாணம்வரைக்கும் வந்து ஓடி போயிட்டாங்க என் அண்ணன் எத்தனை பேருக்கு முன்னாடி அசிங்கப்பட்டு நின்னாரு 

அவங்கமேல தனிபட்டமுறையில கோபம் இருக்கு 

ஆனா அதுக்காக மொத்தமா தூக்கி எறியல 

இப்பவும் ஒன்றும் குறைஞ்சுபோகல என்புருஷன்தான் இவ்வளவு பிடிவாதமா இருக்காரு அவங்களுக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கே அவங்களும் வந்தா நான் கவனிக்காமல் தூக்கி எறிஞ்சிடவாபோறேன் அவங்கவராம இருக்குறதுக்கு நான் என்ன செய்யறது இந்தகிழவி ஏதோ நான்தான் தூக்கி  போட்டமாதிரி எப்படிபேசிட்டு இருக்கு அவரும் கோபமாக கூறிவிட்டு செல்ல 

கண்ணகி மற்றவர்களை போல் மோசமானவர்கள் இல்லை என்று அவளுக்குபுரிந்தது 

 

 

வெள்ளைச்சாமி மகன்கள் இருவரும் இன்றைய நவநாகரிகத்திற்கு தகுந்தது போல் அழகாகத்தான் இருந்தனர் மூத்தவன்கூட நல்லவன்தான் ஏனோ மணவாழ்க்கை அவனுக்கு தங்கவில்லை 

அவன் கொடூரமானவன் அதனாலதான் மனைவி இறந்துபோனாள் என்று சிலர் ஊருக்குள் கதைட்டி விட்டிருந்தனர்

 

கண்ணகியின் அண்ணன் மகளான அருந்ததிக்கு மாமன்மகன் அழகரை ரொம்பவே பிடித்துப்போனது 

அழகரைதேடி போய் அவனிடம் பேசுவாள் பார்த்து பார்த்து பரிமாறுவாள்

என்னை பிடிக்கும் என்று கேட்டு அவளே சமைத்துக்கொடுப்பாள்  தோட்ட்த்தில் வேலைசெய்வதாக இருந்தாலும் அவளே சாப்பாடு போட்டுகொண்டு போவாள் 

 

 

அருந்ததியை பார்க்க பிரமிப்பாக இருக்கும் அவனுக்கு பிடித்த அத்தனையும் பார்த்து பார்த்து பரிமாறுவதை சமைப்பதையும் ஆச்சரியமாக பார்ப்பாள் மனி

மனிஷாவுக்கு சாப்பிடதெரியுமே தவிர சமையல் பற்றி எதுவும்தெரியாது 

அழககூட பலமுறை அவளை சமைக்கசொல்லி திட்டிருக்கிறார் அவளோ அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் சுற்ற‌ அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போதுதான் புரிந்தது அதிலும் அருந்ததி அவனுக்காக சாப்பாடு பிரியாணி பலவிதமாக சமைத்தாள் 

அழகரும் சாப்பாடு பிரியன்

வீட்டுசாப்பாடை விரும்பிசாப்பிடுவான் 

 

மனிஷாவுக்குள் தாழ்வுமனப்பான்மை உருவானது எதுவும் தெரியாத என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒவ்வொருதடவையும் லஞ்சுக்கு கஷ்டப்படுறதைவிட எல்லாம் தெரிஞ்ச அந்தபொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா அவர்சந்தோஷமா இருப்பார்

என்று நினைத்தாள் 

அவள் சமைத்த உணவை சாப்பிட்டு புகழாமல் இருக்கமாட்டாள் 

மனம்விட்டு  புகழ்வாள்  அருந்ததியோ வெட்கத்தோடு அவளை பார்த்துவிட்டு எல்லாம் மாம்வுக்காக கத்துக்கிட்டேன் நிஜமாவே எனக்கு சமைக்கதெரியாது வெட்கத்தோடு கூறுவாள் 

அவள் வெட்கத்தையும் அழகரையும் பார்த்துவிட்டு அமைதியாகி விடுவாள் மனி

 

அவர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை இயல்பிலேயே நல்லவர்கள்தான் அவர்களுக்குள் விட்டுக்கொடுக்காத மாமன்மச்சான் உறவுஇருக்கும்

அவர்களை  தவறாகநினைப்பதற்கு காரணம் எதுவும் இல்லை இரண்டு  குடும்பம் ஒன்றுசேர்ந்தா எப்பவும் ஒன்னா சந்தோசமாதானே இருப்பாங்க இப்படித்தான் நினைத்தாள் 

 

 

வெள்ளைச்சாமி  சூர்யா மனி விபியாடம் கடுகடுவென இருப்பார் 

அதற்கு எதிர்மாறாக பிள்ளைகள் மூவரும் இவர்கள்மேல் பாசமாகதான் இருப்பார்கள் அதிலும் அருந்ததி மனிஷாமேல்  இன்னும் பாசமாகவேஇருப்பாரள் வைதேகி போல் அவளும் நெருக்கமாகிவிட்டாள் 

 

 

உங்களுக்கு மாமாவை எப்படி பழக்கமாச்சு மாமாவை பற்றி தெரிந்துகொள்ள அவளிடம் கேட்பாள் 

மனிஷாவோ அழகரோடான  இந்த உறவு எப்படிப்பட்ட உறவு என்று உறுதியாகதெரியாததால் அண்ணாவின் நண்பன் என்று சொல்லி வைப்பாள் 

 

 

அவரு என்கூட பேசவேமாட்டேங்குறாரு நீங்கதான் அவரோட ஃப்ரெண்டாச்சே கொஞ்சம் எனக்காக அவர்கிட்ட பேசுங்களேன் சின்ன வயசுல இருந்தே மாமாவா எனக்குரொம்ப பிடிக்கும் கண்கள் மின்ன கூறியவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் சரியெனதலையாட்டுவாள் 

 

 

அம்மாவை ஒதுக்கி வைத்தது ஒன்றுதான்  இங்கு பிரச்சனையே தவிர இந்த உறவுக்குள்  வேறு எந்தசிக்கலும் இல்லை அப்பாஅம்மா வீட்டைவிட்டுபோன நேரத்தில்

ஆறுதலாகவும் அனுசரணயாகவும் இருந்தது இந்த வெள்ளைச்சாமி குடும்பம்தான் 

இந்த உறவுக்குள்  நம்மால் எந்த பிரச்சனையும் வரவேண்டாம் நினைத்தவள்  அழகரிடம் பேசாமல் மொத்தமாகஒதுங்கி விட்டாள் அவன் முகத்தைகூட  பார்ப்பதுகிடையாது 

 

 

அவனோ அவனுக்காக காத்திருக்கும் அருந்ததியை ஒதுக்கிவிட்டு மனிஷாவைதான் தேடிக்கொண்டிருக்கிறான்

 

தாராவின்  திருமணவிஷயம் தெரிந்து அருந்ததியின் தோழி இரண்டுபேர் அந்த ஊருக்கு வந்திருந்தனர்

வீராசாமி ஊரில்தான் வேறுஆட்கள் வீட்டுக்குள் வர  அனுமதி மறுக்கப்படும் அருந்ததியின் ஊரில் அதெல்லாம் இல்லை எல்லோரும் சகஜமாக மற்றவர்களிடம் பேசலாம் அந்தசுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது

இப்போதைய இருப்பதே வீராசாமி வீட்டில் அல்லவா உள்ளுக்குள் கொஞ்சம்பயமாக இருந்தது அத்தை கண்ணகியிடம் தன் தோழிகள் வந்திருக்கும் விஷயத்தை கூற அவரோ மாமா வரதுக்குள்ள பேசி அனுப்பிடு உன்மாமாவைபத்தி தெரியும்ல்ல பிடிக்காத எதையாவது செஞ்சா கோபப்படுவார்

 

தோட்டத்து பக்கம் அழைத்துக் கொண்டு போய் தோழிகளிடம் பேச 

ஏய் அரு என்னடி உன் சேரன் அண்ணனுக்கு  தாராவை கட்டி கொடுக்கபோறதா சொல்லிட்டுஇருக்காங்க

 

அவருக்கும் வயசாகுதுல எத்தனை வருஷத்துக்கு தனியாஇருப்பார் தாரா அண்ணியும்  அவரைமாதிரிதான் இருக்காங்க அதனாலதான் ரெண்டுபேருக்கும் பேசி முடிவு பண்ணிட்டாங்க நீ எதுக்கு மஞ்சு சோகமா இருக்க

 

 

ஒன்னும் இல்ல சும்மாகேக்கணும் தோணுச்சு உங்க தோட்டத்துக்குதானே வேலைக்கு வறேன் பேச்சுதுணைக்கு ஆளுங்க இல்ல  ஊருக்கு எப்போ வருவ உன்னோட ரெண்டு அண்ணன்களும் இங்கதான் இருப்பாங்களா மஞ்சு கேட்க 

 

 

தெரியல மனசு ஒத்துபோய் இரண்டுபேரும் சேர்ந்து வாழணும்னு நினைக்கிறாங்க அண்ணனும் அண்ணியும் பேசிக்கிட்டா நல்லாஇருக்கும்னு தான் இங்ககூட்டிட்டு வந்தாங்க ஆனா அவங்க ரெண்டுபேரும் பேசிக்கிறதே இல்ல எப்படி இவங்க கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தபோறாங்க தெரியல

எனக்கு மாமா ரொம்ப பிடிச்சிருச்சு கல்யாணமாகுறவரைக்கும் அவர் கூட இருக்கனும்னு ஆசை 

அதான் நானும் இங்கேயே இருந்து மாமனை பார்த்துட்டுஇருக்கேன்  வெட்கத்தோடு கூற 

மஞ்சுவுக்கு ஏமாற்றமாகஇருந்தது

 

 

மஞ்சு அந்த ஊரில் அடிதடட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவள் ஒரேதங்கை கூலிவேலைசெய்து பிழைப்பு நடத்தும் குடும்பம் பள்ளி படிப்புபாதியில் தடைபட்டதால் சேரன் அவள் அம்மாஅப்பாவிடம் பேசி அவர்கள் படிப்பதற்கு உதவிசெய்தான் அதிலிருந்துமஞ்சுவுக்கு சேரனை பிடித்துபோனது

அவனை விரும்பினாள் 

அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது சேரனுக்கு 28 வயது

அப்போதுதான் அவன்திருமணமும் நடந்தது 

 மஞ்சுவால் அவன் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கதறிஅழுது துடித்து தற்கொலை செய்யகூடபோனாள் காரணம்தெரியாத பெற்றவர்கள் அவளை அடித்து எவ்வளவுகேட்டும் அவள் வாய் திறக்கவில்லை

இரண்டு வருடத்தில் சேரன் திருமணவாழ்க்கையும் முடிந்துபோக அவனைவிட மஞ்சுதான் துடித்துபோனாள் 

இரண்டு வருடம் மனைவியோடு இருந்தவன் அதற்குப்பிறகு ஏங்கிபோய் வீட்டுபக்கம் போவது கிடையாது எப்போதும்தோட்டத்தில் தான் கிடப்பான்

மஞ்சு பள்ளிமுடித்து கல்லூரிபோவதற்கும் அவன்தான் உதவிசெய்தான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை கிடைத்தும் கூட வீட்டிலிருந்தபடியே வேலைசெய்து கொடுப்பாள்

அவனை பார்ப்பதற்காகவே தினமும் கூலி வேலைக்கு வருகிறாள் 

 சேரனுக்கு வடிகளாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் வேலைக்குபோவாள் ஆனால் சேரன் கண்ணுக்கு அவள் சிறுபெண்ணாகதான் தெரிவாள்  

ஒருநாளும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது கிடையாது 

 இப்போது திருமணபேச்சு வார்த்தைஆரம்பிக்க மறுபடியும் அழுது சோர்ந்துபோய் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கிறாள் 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top