கோகிலமே 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

 

3

 

பின்னிருந்து அணைத்து தன்னுடைய வன் இதழ்களுக்குள் அவளுடைய இதழ்களை ஒளித்து வைத்து விளையாடும் இந்த திருடனை... காதல் திருடனின் முகத்தினை பார்க்க அவள் எத்தனிக்க.. இதழ்களோடு இதழ்கள் ஒட்டியிருக்க.. இதழணைப்பு முற்று பெறாமல் நீண்டு கொண்டிருக்க... அவன் கண்களை மட்டுமே அவளால் காண முடிந்தது. அதுவும் கரை காணா காதல் அதில் வழிந்து ஓட.. கூடவே தாபமும் மோகமும் கலந்து பிரவாகம் எடுக்க.. அக் கண்களை விட்டு இவளால் கண்களை சிறிது நகர்த்த முடியவில்லை. 

 

யார் இவன்!!

கந்தர்வனா இல்லை யட்சனா!!

என் காதல் கண்ணனா!!

இல்லை..

என்னை கொள்ளை கொண்டு

போக வந்த ராட்சசனா!!

 

என்று கண்களில் கேள்விகளை தேக்கி அவனை பார்க்க... ஒன்றும் புரியாமல் தன்னை யாரென்று தெரியாமல் பார்க்கும் அந்த பாவையவளை பார்த்தவன்... சட்டென்று இதழ்களை பிரித்து..  

அவனது இறுக்கத்தை மிகுத்து..‌ பின்னிருந்தே அணைப்பை வலுத்து.. 

காது மடல் கடித்து..

கண்டு கொள்வாயடி உன்

கண்ணாளனை வெகு சீக்கிரமே!! 

என்றவன் அவள் திரும்பிப் பார்க்குமுன் சடுதியில் மறைந்து விட்டான்.

 

திரும்பிப் பார்த்த வர்த்தினியின் கண்களுக்கு யாரும் தெரியாமல் போக நடந்தது கனவா? நினைவா? என்று ஒன்றும் புரியாமல் விழிக்க , ஆனால் அவள் உதட்டில் இருந்த அவனின் எச்சத்தின் மிச்சம் சொன்னது அனைத்தும் நினைவே என்று!!

 

 

சட்டென்று அவளை யாரோ உலுக்க கண்விழித்தவளுக்கு அப்போது தான் புரிந்தது தான் கனவு கண்டோம் என்று. 

கனவின் தாக்கம் நினைவில் தொடர பேந்த பேந்த விழித்தபடி தன்னை எழுப்பிய மாதுரியை பார்த்தாள். சட்டென்று தூக்கத்திலிருந்து அவளை எழுப்பி விட்டோம் என்று புரிந்துகொண்ட அவரோ "ஒன்றுமில்லை வர்த்தினி சாப்பாடு எல்லாருக்கும் கொடுக்கிறாங்க.. அதான் உனக்கு எப்படி சொல்லலாம்னு கேட்கிறதுக்காக எழுப்பினேன். சாரிடா நல்ல தூக்கத்தில் இருந்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று அவர் கேட்க..

 

"இல்லைக்கா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. திடீர்னு முழிச்சதுனால எங்க இருக்கேன்னு தெரியாத ஒரு திகைப்பு அவ்வளவுதான்.. வேற ஒன்றும் இல்லை" என்று ஒரு வழியாக தன்னை சமாளித்துக் கொண்டு அவரை பார்த்தாள். அவர் மீண்டும் அவளையே பார்த்து "என்ன சொல்ல" என்று கேட்க அப்போதுதான் அவளது மூளைக்கு அவர் கேட்ட கேள்வி புரிந்து "எனக்கு வெஜிடேரியன் சொல்லுங்க அக்கா" என்றாள்.

 

ஓகே என்று கூறிய மாதுரி விமானப் பணிப்பெண்ணிடம் இருவருக்குமே வெஜிடேரியன் உணவு என்று கூறிவிட்டு வர்த்தினியை பார்த்து.. "இங்கே இப்போது கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக்கோ. பிடிக்கலைனாலும் பரவாயில்லை. இனி ஏர்போர்ட் போய் செக்கிங் எல்லாம் முடிஞ்சு நாம வெளிய வரத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடும். அதனால இது இப்போதைக்கு சாப்பிட்டுக்கோ" என்று கூறினார்.

 

"ஏன்க்கா.. இங்கே சாப்பாடு எல்லாம் நன்னா இருக்காதா?" என்று விழிகள் விரிய ஒருவித பயத்துடன் அவள் கேட்க..

 

"முதல் முறை நானும் உன்னை மாதிரிதான் குழம்பி பயந்து ஒரு வழியா ஆனேன்" என்று அவர் முதல் விமான பயணத்தை சுவைபட அவளுக்கு சொல்ல, அதேநேரம் விமான பணிப்பெண் இவர்களுக்கான உணவை கொடுத்ததும் அதிலிருந்த உணவினை இருவரும் சிரித்துக்கொண்டே ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர்.

 

 

அடுத்த சில மணி நேரங்களில் லண்டன் விமான நிலையத்தில் வந்து இறங்கினாள் வர்த்தினி.

 

வித்தியாசமான மனிதர்கள்.. பலவித கலாச்சாரங்கள் என்று விரவி இருந்த அந்த லண்டன் கலாச்சாரத்தை பார்த்துக்கொண்டே தன் குழுவினரோடு சேர்ந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.

 

ஆண்கள் இருவரும் ஒரு அறையை எடுத்துக்கொள்ள, பெண்கள் இருவரும் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதலில் சென்று வேகவேகமாக குளித்து வேறொரு உடையை அணிந்து வந்த பின்னே சற்று ஆசுவாசமாக உணர்ந்தால் வர்த்தினி.

 

"ஏன் வர்த்தினி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போய் ரெஃப்ரஷ் பண்ணியிருக்கலாம் இல்ல" என்று மாதுரி கேட்க..

 

"இல்லக்கா எனக்கு அவ்வளவு நேரம் அதுல உட்கார்ந்துட்டு வந்ததே ஒரு மாதிரியா இருந்தது. இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கு குளிச்சிட்டு வந்த உடன்" என்று தன் நீள கூந்தலை காய வைத்தவாறே அவள் கூறினாள்.

 

 

"கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி.. அதற்கு பின் நாம நைட் சாப்பாட்டுக்கு வெளியில் போகும்போது கொஞ்சம் சுத்தி பார்த்திட்டு வரலாம்" என்று கூறிவிட்டு மாதுரி படுத்து விட்டார்.

 

 

இவளுக்கோ தூக்கம் வரவே இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் ஏற்கனவே தான் தயார் செய்து வைத்திருந்த பாட்டுக்கான லிஸ்ட் ஒரு முறை சரிபார்த்து, அவள் அங்கே நடக்கும் அந்த மூன்று நாள் நிகழ்வுகளில் எந்தெந்த நாட்களுக்கு எந்தந்த பாட்டு பாடுவது என்று பற்றி தனது போனில் நோட் பேட்டில் குறித்து வைத்திருந்தவற்றை ஒரு முறை சரிபார்த்து விட்டு, தலை காய்ந்த உடன் அவளும் மாதுரி அருகே சென்று படுத்து விட்டாள்.

 

7 மணி அளவில் அவள் விழிக்கும்போது மாதுரி குளித்துவிட்டு தயாராகி வந்தார். "சீக்கிரமே ரெடியாகி வா.. சாப்பிட போலாம்" என்று அவளை விரைவுபடுத்த "இதோ கா" என்று கூறி கொண்டே குளியலறைக்குள் புகுந்தாள்.

 

இளமஞ்சள் நிறத்தில் குர்தாவும் வெள்ளைநிற பட்டியாலா அதற்கு தோதாக டிசைன் செய்யப்பட்ட வெள்ளை நிற ஷாலை அணிந்தபடி ரெடியாகி வந்தவளை பார்த்த மாதுரிக்கு பெண் கொள்ளை அழகு என்று நினைக்க தோன்றியது.

 

 

ஹோட்டலில் இருந்த உணவகத்திலேயே இவர்கள் தங்களது உணவை முடிக்க.. அதன்பின் அருகில் இருக்கும் சில கடைகள் மால்கள் என்று நடந்தவாறே அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு பின் தங்கள் அறைக்கு திரும்பினர்.

 

மறுநாள் காலை நிகழ்ச்சிக்கு செல்ல காலையில் 10 மணி போல் இவர்களை அழைக்க வெங்கடேசன் நேரில் வந்திருந்தார்.

 

அனைவரையும் முறையாக வரவேற்று விட்டு வர்தினி அருகில் வந்தவர் "ஏண்டி குழந்த எங்க ஊரு உனக்கு பிடித்து இருக்கா? நேத்து நல்லா தூங்கினியோ? எந்த பிரச்சனையும் நோக்கு இல்லை இல்லையா? எதுவும் னா தரலாமா என்னான்ட போன் பண்ணி சொல்லனும். தயங்கப்படாது கேட்டியோ? இதுதான் என் நம்பர்" என்று தன்னுடைய விசிட்டிங் கார்டை அவளுக்கு கொடுக்க அதை வாங்கிக் கொண்டாள்.

 

 "ஒரு பிரச்சனையும் இங்கு இல்ல மாமா நேக்கு. எல்லாமே நன்னா இருந்தது. நன்னா சாப்பிட்டு தான் தூங்கினேன். இங்க இருக்கிறவா எவ்லோரும்‌ என்னை நன்னா தான் பார்த்துக்கிறா" என்று கூறினாள்.

 

ஒரு பெரிய விஸ்தாரமான மூண்றடுக்கு கட்டிடம் அது. அங்கேதான் இம்மாதிரியான சங்க விழாக்கள் எல்லாம் நடைபெறும்.

அந்தக் கட்டிடத்தை சுற்றி இருந்த பகுதியில் நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சிறுசிறு மாட்டுவண்டி போல் அமைத்து அதில் குழந்தைகளுக்கு விருப்பமான தின்பண்டங்கள்.. அதுவும் முறுக்கு, சீடை, தேன்குழல், மிட்டாய் வகைகள் என்று தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் ஒரு புறம் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.. ஒரு ஊரையும் விடாமல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு பிரசித்திபெற்ற உணவு வகைகளும் அங்கே இடம் பெற்றிருந்தன.

 

அவற்றையெல்லாம் ஆர்வமாக சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் வர்த்தினி. அவளுக்கு இந்த விழாக்கள் ஏதோ உள்ளூர் திருவிழாவைப் போல தான் இருந்தது பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இங்கே வாழும் மக்களுக்கும் இதுவே ஒரு பெரிய திருவிழாவைப் போல தான்.. நம்மூர் உணவு.. நம் மக்கள் என்று கடல் கடந்து வந்தும் இங்கே தங்களுக்கு என்று ஒரு உறவு முறையை நட்பைத் தாண்டி வளர்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இம்மாதிரியான விழாக்கள் எல்லாம் பெரும் பொக்கிஷமே..

 

 

அடுத்து அந்த அரங்கத்திற்கு உள்ளேயே உள்ளரங்கம் மாதிரி ஒரு பிரிவு இருக்கும். அதில் தான் கலை நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவள் சென்றபொழுது சிறுவர்கள் தங்கள் கலைத்திறனை காட்டிக் கொண்டிருக்க ஆர்வத்துடன் அதனை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.

 

அப்போது அவள் அருகே வந்த வெங்கடேசன் தன் மனைவி மற்றும் மகனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இவங்க தான் எங்க ஆத்து மாமி பேரு பத்மா.. நான் பத்து பத்துன்னு தான் கூப்பிடுவேன். ஆல் இன் ஆல் இவா தான்" என்று அவர் சொல்ல அந்த பத்மா மாமியும் தன் முழங்கையால் அவரின் இடுப்பை ஒரு இடித்துவிட்டு வர்த்தினியை பார்த்தவர் "நேரம் கிடைக்கும்போது எங்காத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா வரணும் மா நீ" என்று அழைப்பு விடுத்தார்.

 

 

சரி மாமி என்று வர்த்தினி கூற.. ஏற்கனவே அவளது அழகில் கட்டுண்டு இருந்த அவரது மகன் அவளது குரலைக் கேட்டவுடன் சுத்தமாக வீழ்ந்து விட்டான். "இவன் என் பையன் பிரதீபன் மா.. எங்கே படிச்சிட்டு இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டு இருக்கான்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நிமிர்ந்து பார்க்காமலே கைகளை கூப்பி வணக்கம் ஒன்று வைத்து அவளின் அந்த பண்பாட்டு கலந்து நளினம் பிரதீபனை மிகவும் ஈர்த்தது.

 

 

தாய் அறியாத சூழல் உண்டோ!! மகன் கண்கள் சென்ற திசையை பார்த்த பத்மாவிற்கு வர்த்தினியை பிடித்துதான் இருந்தது. ஆனால் செல்வநிலை என்று ஒன்று இருக்கிறதல்லவா எதுவும் சட்டென்று முடிவு செய்ய வேண்டாம் என்று மனதில் ஓரத்தில் குறித்து மட்டும் வைத்துக் கொண்டார்.

 

 

அருகே இருந்த மாதுரியே இவள் அழைக்க வெங்கடேசன் குடும்பமும் மாதுரியிடம் முறையாக அறிமுகம் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 

அப்போது வர்த்தினி "மாமா என் நிகழ்ச்சி எப்போ? நீங்க அதை பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லையே?" என்று அவள் கேட்க..

 

"அச்சோ.. பார்த்தியா மறந்தே போயிட்டேன்" என்று அவர் தலையில் அடித்துக் கொண்டு அங்கே நிகழ்ச்சி நிரலுக்காக இருந்த பத்திரிக்கை போன்ற ஒரு காகிதத்தை அவளிடம் கொடுத்தார்.

 

"வர்த்தினி இதுல இந்த மூன்று நாள் நடக்க போகிற எல்லாம் நிகழ்ச்சிகள் பத்தின எல்லா விபரங்களும் இதில் இருக்கு. உன்னோட நிகழ்ச்சி இதுல எப்பவும் வருதுன்னு நீ கொஞ்சம் பாத்து குறித்துகோ. ஆனா இன்னைக்கு சாயங்காலத்தில் தான் உன்னோட முதல் நிகழ்ச்சி இருக்கு" என்று அவர் கூற..

 

 

அதை வாங்கிப் பார்த்தவளின் கண்கள் மகிழ்ச்சியிலும் துள்ளியது. "சந்தோஷ மாமா நானே பாத்துக்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதேள்" என்று விட்டு மாதுரியுடன் அந்த நிகழ்ச்சியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். வெங்கடேசனும் தன் மனைவியுடன் அருகிலிருந்த நண்பர்களை பார்த்து விட்டு அவர்களுடன் பேச சென்றுவிட்டார்.

 

பிரதீபன் தன் விழிகளால் அவள் செல்லும் இடங்களை எல்லாம் தொடர்ந்து கொண்டிருந்தான் மயக்கம் பொங்க..

 

அதேநேரம் விஸ்வாஸ் நிவாஸ்..

 

"வினய்.. கம் டு மை ரூம்" என்று செல்பேசியின் வழியே அதே வீட்டில் இருக்கும் தன் மகனுக்கு அழைத்து விட்டு தன் அறையில் காத்துக் கொண்டிருந்தார்.

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர் அறை கதவை தட்டிக் கொண்டு உள்ளே வேக நடையுடன் நுழைந்தவன் அப்பாவின் இருக்கைக்கு எதிரே தோரணையாக அமர்ந்து "எஸ்ஸ் டாட்.." என்றான் வினய் விஷ்வேஷ்வரன்.

 

மகனின் இந்த கம்பீரமும் அவனின் அமர்த்தலான நடவடிக்கைகளும் தோரணையும் எப்பொழுதும் போல இப்பொழுதும் தரணீஸ்வரனுக்கு ஒரு கர்வத்தை கொடுத்தது எனலாம். அவனின் மற்ற பழக்கவழக்கத்தை எல்லாம் அவர் பெரிதாக கண்டு கொள்ளமாட்டார் ஒன்று பணம்.. மற்றொன்று இங்கே இருக்கும் கலாச்சாரம்..

 

 

அதனால் அவருக்கு கலாச்சார சீர்கேடு ஒரு பெரிய விஷயமாக தெரியாது மற்றவர் என்றாலே, அதுவும் மகன் என்றால் அனைத்துமே நியாயம் என்ற எண்ணம் எப்பொழுதும் உண்டு. மகன் தொழில் எடுத்த முதல் அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கும் தங்கள் தொழில். அதற்கு அவனின் ஆளுமை கலந்த அறிவாற்றலே காரணம் என்பது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் மகன் மீது ஒரு பாசம் கலந்த வெறியே இருக்கும் அவருக்கு.

 

 

ஆனால் மஞ்சுளாவுக்கு அப்படி எல்லாம் கிடையாது. எதையும் அலட்டிக்கொள்ளாத சுபாவம். முதலில் இவ்வூரில் வாழ ஆரம்பித்த புதிதில் சில விஷயங்கள் அவரால் சகிக்க முடியாமல்.. நம் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக இருப்பதை உணர்ந்து கணவனுக்கு அவர் போதித்தார். அதையெல்லாம் காதில் வாங்காத லண்டன் வாசியாக முற்றிலுமாக மாறி இருந்தார் தரணீஸ்வரன். அதனால் முற்றுமாக கணவனை திருத்துவதை விட்டுவிட்டு அவருக்கு என்று ஒரு நண்பர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் கோவில்கள்.. விழாக்கள்.. கிளப்புகள் என்று தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்.

 

 

மகனாவது தன்போல் வருவான் என்று பார்த்தால் வினயோ தந்தையை மிஞ்சிய தனயனாக எல்லா விஷயங்களிலும் அவன் இருக்க, இருவரையும் தண்ணி தெளித்து விட்டு விட்டார். ஆனால் தாய் மனது அவனிடம் நேரடியாக பாசத்தை காண்பிக்கா விடினும் தான் செய்யும் புண்ணியங்கள் அவனை நல்வழிப்படுத்தும், நல்வாழ்கையை அமைத்து தரும் என்று ஒரு நப்பாசை அவருக்கு. 

 

அவர் அறிவுரை என்று தொடங்கி விட்டால் "மாம் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்.. வாட் த ஹெல் திஸ் ஆர்.." என்று ஆரம்பித்து அவருக்கு புரியாத ஸ்லாங்கில் ஆங்கிலத்தை நாக்கை குழைத்துக் குவித்து இழுத்துப் பேசி அரை மணி நேரம் அவருக்கு பாடம் எடுத்து சென்று விடுவான். அதனால் தாயாக அவனது செயல்களை அவதானித்து பாரத்து இருப்பாரே ஒழிய தலையிட மாட்டார்.

 

 

இன்றும் அவர்கள் அறையில் வந்து அமர்ந்து இருக்கும் மகனை பார்த்துக்கொண்டே மற்றொரு இருக்கையில் அமர்ந்து கையில் ஒரு மெகசினை வைத்திருந்து அதன் மீது பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் முழு கவனமும் பிள்ளையின் மீதே..

 

"டூ ஒன் பேபர் பார் மி வினய்.." என்று தரணீஸ்வரன் கேட்க..

 

தந்தையை கூர்ந்து பார்த்த அளவிலேயே வார்த்தைகள் வெளிவரவில்லை அதிலேயே சொல்லுங்க என்று பொருள் இருந்தது.

"இன்னிக்கு ஈவினிங் ஒரு ஃபங்ஷன் ஒன்னு நம்ம தமிழ் சங்க க்ளப்பில் இருக்கு. அதுக்கு நீ அட்டென்ட் பண்ணனும். சீஃப் கெஸ்டா போகணும்" என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே சட்டென்று எழுந்தவன்..

 

"வெரி சாரி டேட்.. இந்த மாதிரி பங்க்ஷனுக்கு எல்லாம் என்னால போக முடியாது. டோன் கம்பல் மீ" என்றவாறு தன் அப்பாவைத் தாண்டி செல்ல முயன்றான்.

 

 

"வினய்.. எனக்கு இன்னைக்கு கொஞ்சம் ஜெர்மனி ஸ்டீல் ஃபேக்டரிஸ் ஓனர் ஜோன்ஸ் கூட டிஸ்கஷன் இருக்கு. நீதான் அந்த ஜெர்மனி பார்ட்டியின் கையில் அகப்படாமல் ஓடுற.. பின்னை யார் தான் பார்க்கிறது? சொல்லு.. அப்ப நீ எந்த ஜெர்மனி பார்ட்டி கூட டின்னர் போ.. நான் எந்த ஃபங்ஷனுக்கு போறேன்"

 

 

"தமிழ் சங்க பேரவை நடத்தும் இந்த பங்ஷனுக்கு போனால் ரொம்ப நாள் கழிச்சு என் பிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தா மாதிரி இருக்கும். நானும் கொஞ்சம் ஃப்ரீயா ரிலாக்ஸாக பீல் பண்ணுவேன். அதை விட உங்க அம்மாவுக்கு அந்த பங்க்ஷன் ரொம்ப பிடிக்கும். அதனால நாங்க ரெண்டு பேரும் பங்ஷனுக்கு கிளம்பிடுறோம். யூ ஹவ் டின்னர் வித் தட் ஜெர்மனினி பார்ட்டிஸ்" என்று தன் மகனை பார்த்து கொண்டே அவர் கூறினார்.

 

அந்த ஜெர்மனி பாட்டியின் மகள் லீனா வினய் மீது தீராத மோகம் கொண்டவள்.

ஒருமுறை அவளுடன் இவன் டேட்டிங் சென்று பார்த்து தலை தெறிக்க ஓடி வந்துவிட்டான்.

அவளின் அதீத காதல் என்ற பெயரில் அவள் செய்த லூட்டியில்.. அன்று முதல் அந்த ஜெர்மன் ஸ்டீல்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து பார்த்துக் கொள்பவர் தரணீஸ்வரன் தான். இது அவருக்கும் தெரியும். இன்று கரெக்டாக தன்னை கார்னர் செய்யும் தந்தையைப் பார்த்து இவன் முறைக்க.. தன் இரு கைகளையும் விரித்து "வாட் டூ டு வினய்?" என்று சொல்லும் தந்தையை பார்க்க அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

 

 

"போய் தொலையுறேன்" என்று அவன் கூறி விட்டு கதவை திறக்க லாக்கில் கை வைக்க..

 

 

"எங்க பார்ட்டிக்கா? ஃபங்ஷனுக்கா?" என்று கேட்டவரிடம்..

 

"ஃபங்ஷனுக்கு தான்" என்று கோபத்துடன் பற்களை கடித்துக் கொண்டே கூறிவிட்டு அவ்வறையை விட்டு வேகமாக சென்றான்.

 

தன் மனைவியை பார்த்தவர் "மஞ்சு உன் ஐடியா சூப்பராக ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அவனுக்கு பொண்ணு பார்க்கணும்னு சொன்னா இவன் போகமாட்டான் அந்த ஃபங்ஷனுக்கு போக சொல்லுங்க, நம்ம ஊரு சேர்ந்த நிறைய பொண்ணுங்க அங்கு வரும். அதுல ஏதாவது அவனுக்கு புடிச்சிருந்தா பார்க்கலாம்னு என்று நீ அசொன்ன ஐடியா வொர்க் அவுட் ஆகுமா? ஆனாலும் இது கூட அந்த ஜெர்மன் பார்ட்டியை பற்றி பேச சொன்னா பத்தியா அங்க தான் நீ நிக்கிற மஞ்சு" என்று மனைவியின் இந்த நுண்ணறிவை கண்டு வியந்து கூறினார்.

 

 

"நான் அவனுக்கே அம்மாவாக்கும். வீட்டிலேயே இருந்தா வெளியில நடக்கிறது எதுவும் எனக்கு தெரியாதுனு நினைச்சிங்களா?" என்ற கூரிய மஞ்சுளாவின் கண்கள் தரணியை துளைத்தது.

 

தன் இரு கைகளையும் தூக்கி சரண்டர் என்று நகைத்துக் கொண்டார் தரணி.

 

 

"ஏன் மஞ்சு? அவனை மட்டும் ஃபங்ஷனுக்கு அனுப்பினா, அவனுக்கு எந்த பொண்ணு புடிக்குதா இல்லையான்னு நாம் எப்படி தெரிஞ்சுகிறது? நாம் போகாமல் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?" என்ற யோசனையுடன் கேட்டவரை பார்த்து...

 

"போகலாம் நாமும. எப்படியும் ஃசீப் கெஸ்டா போனா ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறது ஆறிலிருந்து எட்டு மணி வரைக்கும் உட்கார வச்சிருவாங்க. நீங்கதானே சொன்னீங்க டின்னர் வித் ஜோன்ஸ்னு.. அவங்க கூட ஜஸ்ட் ஒரு காபி மட்டும் சாப்பிட்டு சரியாக நாம ஏழு மணிக்கு மேலே பங்ஷன் நடக்குற இடத்துக்கு போகலாம்.. மீட்டிங் அட்டென்ட் பண்ண மாதிரி இருக்கும் பங்க்ஷன் அட்டென்ட் பண்ண மாதிரி இருக்கும்" என்று அவர் கூற..

 

இந்தப் பெண்கள் தான் எத்தனை நுட்பமானவர்கள்.. சகலத்தையும் யோசித்து சடுதியில் தீர்வுகாணும் தன் மனைவியை விழி விரியப் பார்த்து "தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன்" என்றார்.

 

"என்ன? நீங்க பண்ண தப்பு எல்லாம் இப்பதான் உங்களுக்கு ஞாபகம் வருதா?" என்று அவர் திருப்பி அடிக்க...

 

இளமையில் ஆடிய ஆட்டத்தை தான் அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்தாலும் "நான் அத சொல்லல மஞ்சு" என்று அவர் இழுக்க...

 

"அப்போ அது தப்பு இல்லை அப்படித்தானே.."

 

"நான் அப்படி சொல்லல.."

 

"அப்போ தப்புன்னு ஒத்துக்கிறீங்க.."

 

"விட்றுமா உன் வார்த்தைகள் விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேணாம். அந்த அளவுக்கு ஆழ்ந்த அறிவு எனக்கு இல்லை.. எனக்கு தெரிந்தது பிசினஸ் பிசினஸ் பிசினஸ் மட்டும்தான். நான் சொன்ன தப்பு.. உன்னையும் இந்த பிசினஸ்ல கொண்டு வந்திருக்கலாம்.. அதுதான் சொன்னேன்" என்று கூற..

 

 

"தாராளமா கொண்டு வந்து இருந்தா.. உங்களைப் போல, பிசினஸ் டின்னர் பார்ட்டி பப்புனு ஊரெல்லாம் சுத்திட்டு நைட் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து இருந்திருக்கலாம். உங்களுக்காக காத்து இருக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்காது. உங்கள் அருகாமையை எனக்கான உங்கள் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி இருக்காது" என்று மஞ்சு பேசிக் கொண்டே செல்ல.. சிக்குச்சி ஆடு இன்று என்று...

 

 

 

"இயலாமையுடன் பார்த்து இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறோம்" என்று அமைதியாக எழுந்து சென்றுவிட்டார் தரணி.

உங்கள் திறமை எல்லாம் தொழிலில் மட்டும் வைத்துக்கோங்க.. வீட்டில் வைத்து கொள்ளாதீர்கள் தரணி சார் ஆப்பு ரிப்பீட் ஆகும்.

 

மாலை 6 மணி..

 

வண்ணமயமாக கோலாகலமாக தமிழ் சங்க பேரவை திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்குள்ள தமிழ் தொழிலதிபர்களை சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் வரவழைத்து இருந்தனர். அதில் ஒருத்தர் தான் தரணீஸ்வரன். அதைக் கேட்டதும் இந்த வாய்ப்பை மகனுக்காக மாற்றி திசை திருப்பி விட்டு விட்டார் மஞ்சுளா..

 

ஒருவித அலட்சிய தோரணையுடன் தன் கம்பீரமும் மிடுக்கும் சற்றும் குறையாமல் அக்கட்டிடதத்திற்குள் வினய் நுழைய.. அவனை எதிர்கொண்டு வரவேற்றனர் அச்சங்க முக்கிய உறுப்பினர்கள்.

 

இவனுக்குத்தான் யாரையும் தெரியவில்லை.‌ஆனால் பெரும்பாலும் அங்குள்ளவர்கள் வினய் மிக பிரபலம். இவன் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு இதுவரை எல்லாம் வந்ததில்லை என்று அவர்களுக்கும் தெரியும். அவனே இன்று சீஃப் கெஸ்டாக வந்ததும் அவர்களுக்கெல்லாம் தாங்கமுடியாத ஒருவித மகிழ்ச்சி. அவனை விஐபிக்கான முதலில் இருக்கையில் சென்று அமர வைத்தனர்.

 

எப்படி இரண்டு மணி நேரத்தை கடத்த என்று எண்ணி.. முயன்று அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு தோற்று.. பின் தன் போனையும் கையிலிருக்கும் வாட்சையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வினய்.

 

ஒவ்வொரு நிகழ்ச்சியினையும் அங்குள்ள தொகுப்பாளினி சொல்லிக்கொண்டு இருக்க அடுத்து திருவையாறில் இருந்து ஹம்சவர்த்தினி என்று அப்பெண் கூறிவிட்டு நகர சேலையில் கொள்ளை கொள்ளும் பூஞ்சோலையாக வந்தாள் அவள்!!

 

முதலாவதாக 

சின்னஞ்சிறு கிளியே.. கண்ணம்மா!!

என்ற பாரதியாரின் பாட்டை அவள் தன் தேன் குரலில் பாட அந்த குரல் செய்த மாயத்தில் கை செல்போனில் ஒரே ஒரு விநாடி தமாதித்து பின் தன் போல விளையாடி கொண்டிருந்தது.

 

 

அடுத்தடுத்து என்று மூன்று கீர்த்தனைகளை வர்த்தினி பாடி முடிக்க.. அரங்கம் கரவோசத்தில் நிறைந்தது. வினயோ அச்சத்தத்தில் தன் ஒற்றை விரல் கொண்டு காதை கொடைந்தான் வெகு அலட்சியமாக.. மேடையில் ‌அமரந்து இருந்த வர்த்தினி கண்களுக்கு தப்பாமல் இவை பட.. மனது சற்றே சுணங்கியது அவளுக்கு.. ஏனிந்த அலட்சியம்? அவ்வளோ மோசமா நம்ம‌ குரல்? இல்லை பாடல் தேர்ந்தெடுத்து சரியில்லையா? என்று தன் போல மனது யோசித்து கொண்டிருந்தது வர்த்தினிக்கு. 

 

சிறப்பு விருந்தினரான‌ அவனை வர்த்தினியை‌ பாராட்ட‌ அழைக்க.. இது வேறையா என்ற‌ பாவனையுடன் எழுந்து சென்றான்.

 

அவன் கையில் கொடுத்த பூங்கொத்தை அவளிடம் நீட்ட.. அமைதியாக அவனிடம் வாங்கியவள், "என்‌ பாட்டுக்கு இப்படியொரு செயலை நீங்க செய்திருக்க கூடாது சர்" என்று புன்னகை முகமாக மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவள் கூற..

 

இது ஒன்று போதாதா அவனுக்கு?? "ஆஹான்.. அப்படியா?" என்று கண்களில் கனலை கக்கி அவன் கேட்க... அதில் மிரண்டு அவள் பார்க்க.. அலட்சிய கலந்த மென்னகையுடன்‌ நிற்கும் அவனை கண்டு‌ தொண்டை வறண்டது அவளுக்கு...

 

மனத்தில் அவள் மேல் வஞ்சினத்தோடு மேடை விட்டு இறங்கினான் வினய் விஷ்வேஸ்வரன்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top