மயக்கம் 6

 

(@thadathagainovels)
Member Moderator
Joined: 6 months ago
Messages: 9
Thread starter  

மயக்கம் 6

 

 

கிருத்தி முகம் தகதகவென கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அருகிலோ வேலன் சற்றே பயத்தில் கையை பிசைந்தவாறு அசட்டு சிரிப்போடு நின்று கொண்டிருந்தான். 

 

“அது வந்து டி.. அக்கா டி..” என்று அவன் இழுக்க..

 

“பிச்சுடுவேன் பிச்சு.! வாய தொறந்தியோ பாத்துக்கோ..! கொஞ்சம் கூட பேச கூடாது வாய தொறந்த நீனு.. அவ்வளோ தான்.!” என்று கடுப்படித்து கொண்டே தன் முன் இருந்த லேப்டாப்பில் ஏதோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள்.

 

“நிஜமா இப்படி ஆகும்னு தெரியாதுடி கிருத்தி.. என்னை நம்பு ப்ளீஸ்..” என்று அவன் கெஞ்ச..

 

தம்பியை உக்கிரமாக முறைத்தவள், 

“உன்ன வாய தொறக்க கூடாதுன்னு சொன்னேன்ல டா.. சுப்..!” என்று அவள் அந்த வீடு அதிர கத்த, அப்பொழுது தான் ஒரு வாடிக்கையாளருக்கு துணியை கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த சிவகாமி, 

 

“ஏன்டி கத்திட்டு இருக்க? உன் சத்தம் வீட்டு வாசலை தாண்டி தெரு வரைக்கும் கேக்குது?” என்றபடி காலணகயை வெளியில் விட்டு விட்டு உள்ளே வந்தவர், இருவரின் ரூமுக்கு வந்து என்னவென்று பார்க்க..

 

மகனோ திருத் திரு என்று முழித்திருக்க..

மகளோ செவ செவென கோபத்தில் சிவந்திருக்க..

 

அதிலேயே புரிந்தது, அவன் தான் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்று..! 

 

“என்னடா பண்ணி வச்ச?” என்று சைகையால் அவர் கேட்க.. வேலனோ உதடு பிதுக்கி தலையைக் கவிழ்ந்து கொண்டான்.

 

“கை ஜாடையால பிள்ளை கிட்ட பேசாத மா..! என்னன்னு என்கிட்ட பேசு” என்று இவள் சற்று கடுப்போடு பேச..

 

“நீ தான் ஒன்னும் சொல்லாம அந்த லேப்டாப் உள்ள தலையை விட்டுட்டு இருக்கியே அதான் அவன் கிட்ட கேட்டேன்” என்றவாறு அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தார் சிவகாமி. 

 

“ஆனாலும் உனக்கு இவ்வளவு சாவகாசம் ஆகாது மா..? நான் எவ்ளோ பெரிய டென்ஷன்ல இருக்கேன். நீ இப்பதான் ஆற அமர உக்காந்து என்ன ஆச்சுன்னு கேக்குற?” என்றாள் ஆத்திரத்தோடு..!

 

‘போச்சு..! இவளுக்கு இன்னைக்கு சாமி வந்துருச்சு..! ஒரு ஆட்டம் ஆட்டி மல ஏறாமல் இறங்க மாட்டாளே?? இவன் ஏதோ கிருத்தவத்தனம் பண்ணி வச்சிருக்கான் போலயே?? இன்னிக்கு நான் மாட்டுனேனா?’ என்றபடி பார்த்தவர்,

 

மகளை பார்த்து “என்னடா கண்ணு ஆச்சு?” என்று அன்பாக கேட்டார். 

 

“இங்க பாருமா நாளைக்கு ஒரு பிரசன்டேஷன் எங்க ஹோட்டல்ல.. அதுல செலக்ட் ஆனா எங்க கிரேடு இம்ப்ரூவ் பண்றேன்னு சொல்லி இருக்காங்க..! நாங்க புதுசா டிஷ் பிரிப்பர் பண்ணி போட்டோ எடுத்து பிரசன்டேஷன் பண்ணி காட்டணும். அதுல அவங்க செலக்ட் பண்ற டிஷை நாங்கள் செய்து காட்டணும்..!

அதுக்காக நான் அவ்வளவு டிஷ் பிரிப்பேர் பண்ணி எல்லாம் பக்காவா ஸ்லைடு பண்ணி அதுக்கான நேம் எல்லாம் யூனிக்கா வச்சு.. எவ்வளவு கஷ்டப்பட்டு தெரியுமா அந்த பிரசன்டேஷன் ரெடி பண்ணுனேன்.. இந்த பக்கி பைய அதை குணா நாதாரியோட சேர்ந்து ஏதோ கேம் இன்ஸ்டால் பண்றேன்னு சொல்லிட்டு ஸ்பேஸ் பத்தலன்னு அத டெலிட் பண்ணிட்டான்.. நானும் ரெக்கவர் பண்ண ட்ரை பண்றேன். முடியல நாளைக்கு காலைல வேணும்” என்று அழு குரலில் பேசிய மகளை கண்டவர், இப்பொழுது மகனை கண்டிப்போடு பார்த்தார் சிவகாமி. 

 

வேலை படிப்பு இப்படி எதிலுமே ஒன்றில் நுழைந்து விட்டால் தன் அர்ப்பணிப்பை முழுவதுமாக கொட்டி விடுவாள் கிருத்தி. 

 

அதற்காக தணிகைவேலன் அப்படி இல்லை என்று சொல்ல முடியாது அவனும் படிப்பில் கெட்டி தான் ஆனால் நண்பர்களோடு சேர்ந்தால் இந்த விளையாட்டுத்தனமும் துடுக்குதனமும் தலைதூக்கிவிடும்.

 

அக்கா சொன்னதும் தான் அவனுக்கும் தன் தவறின் வீரியம் புரிய “அந்த வீடியோ உனக்கு தேவைப்படும் எனக்கு தெரியாது டி அக்கா.. தெரிஞ்சு இருந்தா நான் அப்படி பண்ணி இருக்க மாட்டேன்” என்று உண்மையாக வருந்தியவனை அவளால் திட்டவும் முடியவில்லை, அதே நேரத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தாள்.

 

மகளின் அந்த நிலையை கண்டு பொறுக்காத சிவகாமி மகனின் தோளில் இரண்டு அடி போட்டு “எல்லாத்திலேயும் உனக்கு விளையாட்டு தான் இல்லையா? இப்ப பாரு அவ எப்படி அழுகிறானு? சர்வீஸ் சென்டர் கொடுத்து ரெக்கவர் பண்ண முடியாதா?” என்று மகளை பார்த்து கேட்க..

 

அவளோ உதட்டைப் பிதுக்கி “இன்னைக்கு சண்டே மா..!” என்று அழுகையோடு வெடித்தாள்.

 

ஓஹ்… என்ற சிவகாமியும் மகளின் இந்த உழைப்பை மகனின் அலட்சியத்தால் பரிபோனதை தாங்கிக்கொள்ள தான் முடிவு இல்லை. அதே நேரம் தெரியாமல் செய்ததற்கு என்ன செய்ய முடியும்?

 

மகனிடம் “கொஞ்சம் கூட உனக்கு சீரியஸ்னசே தெரியல இல்லையா? ஒன்னு டெலிட் பண்றதுக்கு முன்னாடி என்ன எதுன்னு அவ கிட்ட கேட்டு பண்ணி இருக்கலாம் தானே? அவளோட லேப்டாப் தானே அது? ஏதாவது முக்கியமா இருக்கணும் உனக்கு ஏன் தோணல? அப்படி என்ன விளையாட்டு முக்கியம் உனக்கு?” என்று அவனை கண்டிக்கவும் அவர் தவறவில்லை..!

 

“ஏன் கிருத்தி முன்னெல்லாம் ரெஸ்டாரண்ட்ல நம்ம புதுசா ஏதோ செய்யணும்னு அதை செஞ்சு காட்டனா ருசி பாப்பாங்க சரி..! இதெல்லாம் பிரசன்டேஷன்ல கூட கேப்பாங்களாடி?” என்று கேள்வி கேட்ட அம்மாவை முறைத்தவள்,

 

“நீ எந்த காலத்துல மா இருக்க? இப்ப உள்ளது எல்லாமே டெக்னாலஜிக்கலா கொண்டு வந்துட்டாங்க. நாங்க கிட்டத்தட்ட ஜூனியர்ஸே பன்னிரண்டு பேர் இருக்கோம். என்கிட்டேயே கிட்டத்தட்ட ஒரு இருபது டிஷ் இருக்கு.. அப்போ மொத்தம் எத்தனை டிஷ் யோசிச்சு பாரு? அவ்வளவு டிஷ்ம் அவங்களுக்கு செஞ்சு கொடுத்து, டேஸ்ட் பண்ண அவங்களுக்கு டைம் இல்ல..! என்ன மாதிரி உள்ள ஜூனியர்ஸ்ட்ட எங்களுடைய பெஸ்ட் எதுன்னு பார்த்து அதை செலக்ட் பண்ணி அதை செய்ய சொல்லுவாங்க..! இப்ப நான் எப்படி நாளைக்கு பிரசன்டேஷன் செய்வேன்?

எல்லாரும் என்னை சீரியஸா எடுத்துக்கணும்னா, இந்த பிரசன்டேஷன்ல நான் ஷைன் ஆகணும்” என்ற அவசரம் அவளை அழுத்திக் கொண்டே இருந்தது.

 

“சரி சரி கவலைப்படாத எப்படியும் கிடைச்சிடும்..!” என்று அவளுக்கு ஆறுதல் அளித்தவர் எப்பொழுதும் போல மகளுக்கு சூடாக காபி போட சமையலறை சென்றார்.

 

வேலன் என்ன செய்வது என்று தெரியாமல் அக்கா அருகில் நின்றால் இன்னும் அவள் கோபப்படுவாளே என்று அவன் வீட்டு வராண்டாவில் நடந்து கொண்டிருந்தான்.

 

அவளோ லேப்டாப் ஸ்கீரினுக்கு முன்னால் மணி கணக்காக அமர்ந்திருந்தாள். அவளிடம் எடுத்த போட்டோக்கள் இருக்கிறது அதை திரும்பவும் செய்ய முடியும் தான். ஆனால் அவசரத்தில் செய்வதற்கும் ஆர்வமாக செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? 

 

அப்படியும் சும்மா இராமல் ஏதோ செய்து கொண்டுதான் இருந்தாள்.

ஆனால்.. அவள் டிசைன் பண்ணினது நிறைய மிஸ் மேட்ச் ஆக வந்தது.

 

சில நேரங்களில் அவசரத்தில் அவளுக்கு ரெசிபியில் உள்ள இன்கிரிடியன்ஸும் மறந்து போனது. 

 

தலையை பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

 

வராண்டாவில் நடந்து கொண்டிருந்த வேலன் மாடியிலிருந்து இறங்கி வந்த பவனன் மீது மோதிக்கொண்டான். 

 

“ஹேய் பார்த்து..” என்றபடி அவனை பிடித்து ஒரு மென்சரிப்போடு வாயில் கேட்டை திறக்க செல்ல.. அப்பொழுதுதான் வேலன் மண்டையில் மணி அடித்தது. அதற்குள் பவனன் கேட்டை சாற்றிவிட்டு சாலையில் நடக்க ஆரம்பித்து விட.. அவனை என்ன சொல்லி அழைப்பது என்று முதலில் தடுமாறியவன், பின் சார் சார் என்று கூப்பிட்டப்படி அவன் பின்னாலேயே ஓடினான்.

 

தன்னைத்தான் வேலன்னு கூப்பிடுகிறான் என்று கிஞ்சித்தும் எண்ணம் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தான் பவனன்.

 

மாலை போல அப்படியே நடந்து சென்று இரவு உணவை முடித்துவிட்டு வரலாம் என்று அவன் சென்று கொண்டிருக்க.. வேகமாக ஓடி வந்தவன் அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி மூச்சு வாங்கினான்.

 

யார் என்று அதிர்ந்து பார்த்தவன் அங்கே வேலன் மூச்சு வாங்கிக் கொண்டு இருக்க.. 

 

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. என்ன ஆச்சு? அப்போ என்னதான் கூப்பிட்டியா நீ?” என்று பவனன் கேட்க..

 

வேலன் மூச்சிரைக்க “ஆ..ஆமா..” என்று தலையசைத்தவன் ஒரு நிமிஷம் என்று இடுப்பில் கையை வைத்து தன் மூச்சை சீராக்கிக் கொண்டவன் “நீ..நீங்க.. ஐ..ஐடி த்த..தானே..” என்று மூச்சு வாங்க கேட்டான். 

 

“ஆமா.. ஐடில தான் ஒர்க் பண்றேன்” என்று அவனின் கேள்வி எதற்கு என்று புரியாமல் நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தான் பவனன். 

 

“சார்.. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? ஒரு.. ஒரு ஃபைல் டெலிட் ஆயிடுச்சு.. அ..அது ரெக்கவரி பண்ணி தர முடியுமா?” என்று இன்னும் மூச்சு வாங்கியபடியே கேட்டான். 

 

சிறிது யோசித்தவன் “ட்ரை பண்ணி பாக்குறன்” என்றவன்,

 

யாரது என்னாச்சு என்று விவரம் கேட்க, “கொஞ்சம் வாங்க என் கூட” என்று அவன் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக அவனும் குணாவும் செய்த வேலையை செய்ய சொல்ல பவனனுக்கு புரிந்தது கிருத்தியின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் என்று..!

 

“ஆனாலும்.. தப்பில்லோ..! அக்கா ஆபிஸுக்காக வச்சிருக்கிற லேப்டாப்ல நீ இந்த மாதிரி செய்யலாமா? இது தப்பில்லோ?” என்று கண்டித்தான்.

 

பவனனை பாவமாக பார்த்து “நான் வேணும்னே செய்யல..!” என்று மன்னிப்புக் குரலில் கேட்ட வேலனை திட்டாமல், அவனோடு நடந்து சென்றான். 

 

அக்கா அம்மா மாறி மாறி கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தவனை இப்பொழுது கோபமாக பார்த்த கிருத்தி “என்னடா உனக்கு பிரச்சனை? நானே மறுபடியும் செய்ய ஏதோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. கத்தி என்னை டென்ஷன் ஏத்தாத” என்று அவள் கத்த, 

 

“ஏ கத்தாதடி கத்தாதடி..” என்று வேலன் அவளை அடக்க..

 

இருவரின் சம்பாஷனையை அமைதியாக கேட்டுக் கொண்டு அவர்கள் வீட்டு ஹாலில் நின்று இருந்தான் பவனன். 

 

“உஷ்..! உஷ்..! நம்ம மாடி வீட்டுல இருக்கார்ல சார்.. அவர் வந்து ஐடில தான் ஒர்க் பண்றார். நான் அவர்கிட்ட பேசி இப்பதான் கூட்டிட்டு வந்து இருக்கேன். ஒரு வேலை அவரால் ரெக்கவர் பண்ண முடிஞ்சா.. பைலை எடுத்துரலாம்ல?” என்றவன் அவளிடம் கேட்காமலே அந்த லேப்டாப்பை தூக்கிக் கொண்டு ஹாலில் நின்றிருந்த வாகீஸ திரிபுரபவனனிடம் கொடுத்தான்.

 

அவனோ லேப்டாப்பை வாங்காமல் கிருத்தியை பார்க்க.. இப்போதைக்கு இவனால் உதவி செய்த முடிந்தால் அதைவிட அவளுக்கு வேற என்ன வேண்டும் என்று எண்ணியவள், எங்கே எந்த போல்டரில் அவள் வைத்திருந்தாள், அதைப் பற்றிய தகவலை கொடுத்து, “உங்களால் ரெக்கவர் பண்ணி தர முடிஞ்சா எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்?” என்றாள்.

 

அவன் சரி என்று மடியில் வைத்து அமர்ந்திருக்க மூவரும் மூன்று திசையில் இருந்து அவனை குறுகுறுப்பாக பார்க்க அவனுக்கோ என்னவோ போல் ஆனது. 

 

“யு டோன்ட் மைண்ட் இது நான் மாடியில் எடுத்து போய் ரெக்கவர் பண்ணி பார்க்கவா?” என்றதும் முதலில் யோசித்த கிருத்தி பிறகு சரி என்றாள்.

 

அரை மணி நேரத்தில் அவள் டெலிட் செய்தவற்றையெல்லாம் ரெக்கவர் செய்து கொடுத்தான். மேலும் அவளது பிரசன்டேஷனை பார்த்தவன், சில லேஅவுட்ஸ் மாற்றினான்.

சில கலர்ஸ், க்ராஃபிக்ஸ் எல்லாம் மாற்ற அவளது பிரசன்டேஷன் ப்ரொபஷனல் லுக்காக மாறியது.

 

வேலனையும் கிருத்தியையும் மாடிக்கு அழைத்து மாடித் திண்டுலேயே அவன் அதை காண்பிக்க ஆனந்த அதிர்ச்சியில் வாய் பிளந்தாள் கிருத்தி. 

 

“இவ்வளவு நீட்-ஆ சேஞ்ச் பண்ணிட்டீங்களா? நான் மூணு மணி நேரமா முயற்சி பண்ணேன். இட்ஸ் லுக் ப்ரொஃப்ஸ்னஸ். தாங்க் யூ சோ மச்” என்றாள் வெகு ஆனந்தமாக..!

 

பவனனோ கீற்றலான புன்னகையோடு “அதான் தெரியமே… போல்ட் கேர்ள்.. பட் டெக்-ல வீக் கேர்ள்..”என்றான்.

 

கிருத்தி சிரித்து “ என்னைய ஓட்டுறீங்க.. இதைப் பண்ணிக் கொடுத்தால தப்பிச்சுடீங்க.. எனிஹவ் தாங்க்ஸ்” என்றவள், குதித்தபடியே லேப்டாப்போடு கீழே இறங்கி ஓடினாள்.

 

அந்த இரவு, அவளின் நினைவு முழுமையாக பவனன் தான் ஆக்கிரமித்து இருந்தான்..!

 

இவன் எப்படிப்பட்டவன்? யார் இவன்? இன்று தன்னிடம் சிறிது சீண்டலாக பேசிய அவனின் இந்த குணம் நிஜமா? அல்லது யாருமே வேண்டாம் என்று ஒதுக்கமாக ஒதுங்கிக் கொள்ளும் குணம் உண்மையா? 

 

அவனை எண்ணியே உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள்.

அவள் மனசுக்குள், “யார் இவனோ? இவன் இல்லையெனில், நானே இப்போ செம டென்ஷனா நர்வஸாஆ இருந்திருப்பேன். இவன் மட்டும் இல்லனை.. இன்னைக்கு நான் அவ்வளவுதான்…! யாரோவா இருந்துட்டு போகட்டும்..

என் கனவுகள் கைகூட இவன் தான் காரணம்.” என்று யோசித்தவள் யார் இவன் என்று உண்மையாக.. அவள் உளமாற உணரும் நாளும் வந்தது..!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top