வீராசாமி இந்த விஷயத்தை அப்படியே விடவில்லை போலீசிடம் போய் தனக்கு எதிராக வாதாடியவன் யார் என்று தெரியவேண்டும் அவனை போட்டுதள்ளவேண்டும் என்று கூற போலீஸ் மறுத்துவிட்டது
சார் அந்த இடம் ரொம்ப பெரியஇடம் அதுல சிக்குனா கண்டிப்பா வெளியே வர முடியாது
இது பாருயா எவ்வளவு பணம்வேணும்னாலும் கொடுக்கிறேன் சொன்னவேலய ஒழுங்கா முடி எனக்கு எதிரா வாதாடின அந்தவக்கீல் யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும் வீராச்சாமி உறுதியோடு கூற அவருக்கு பின்னால் நின்றிருந்த சூர்யா தம்பியை பார்த்து முறைத்தான்
அவனோ கண்டுகொள்ளாமல் வாய்க்குள் எதையோபோட்டு மென்றுகொண்டிருந்தான்
அப்பா நாமதான் அன்னிக்கே சொல்லிட்டோமே யாரோ எப்படியோபோனா நம்மளுக்கு என்ன நம்ம விட்டாளுங்களோ நம்ம இருந்துக்கலாம் பா தேவையில்லாத ஊர் பிரச்சனை எதுக்கு
ஊர்பிரச்சனைக்கு நான்போகலடா நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சொல்றேன் இனிமேல் ஊரு விஷயத்துல நான் தலையிடபோறதில்லை ஆனால் எனக்கு எதிரா நிக்கிற வக்கீல் யாருன்னு தெரியனும் அதான்
இந்த பிரச்சனையை விடுங்கப்பா எத்தனை வருஷம் கோர்ட்டுக்கு வீட்டுக்கு அலைஞ்சோம்
இனிமேலாவது நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம் எப்போதும் அடிதடியில் நிக்கும் அழகர் இப்படி கூறவும் அவருக்கே அதிர்ச்சி தான்
சரிப்பா நீ சொல்லி நான் கேட்காமலா இருப்பேன் நீசொன்ன மாதிரியே இருக்கலாம்
ஆனால் நமக்கு எதிராவந்திருக்கிற புது எதிரி யாருனு தெரியவில்லை அவனை பார்க்காமவிடமாட்டேன் இதோபாரு இன்ஸ் எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்கோ அந்த வக்கீல் யாரு
அவன்கிட்ட புகார் கொடுத்தவன் யாருன்னு எனக்கு தெரியனும் கூறிவிட்டுகிளம்ம அப்பாவை தொடர்ந்து சென்றான் அழகர் அப்பாவும் மகனும் காரில் வர அண்ணன் தம்பி இருவரும் ஒரேபைக்கில் வந்தனர் தம்பிபைக் ஓட்ட அவனுக்கு பின்னால அமர்ந்திருந்த சூர்யா லூசுபயலே ஏதாவது ஏடாகூடமா செஞ்சுவைக்குறது பொழப்பா போயிடுச்சா அந்தாளு எப்படி பேசிட்டு போறான் பாரு
நீதான்னு கண்டுபிடிச்சுட்டா என்னடா பண்ணுவ
ப்ரோ என்னோட பேர் எதிலும் சிக்காது என்னோட ஜீனியர்கிட்ட இதைபத்தி சொல்லி பேசவைத்தேன் அவங்க தேடினாலும் கண்டிப்பா சிக்கமாட்டாங்க நீங்க ஒன்னும் கவலைப்படாத எவ்வளவு பார்த்தோம்
இதை பாத்துக்க மாட்டோமா
நெக்ஸ்ட் என்னென்ன பண்ணுவாங்கன்னு தெரியாமலா போகும் நான்பார்த்துக்குறேன் அண்ணனுக்கு தைரியம் கூறி வீட்டுக்கு வர
தாராவின் தாய் மாமன் அமர்ந்திருந்தார் கண்ணகியும் கணவனை எதிர்பார்த்து அமர்ந்திருப்பார் போல வந்ததும் முகம்கொள்ளா புன்னகையோடு கணவனை வரவேற்றார் காலைகழுவிக்கொண்டு வந்த வீராசாமி
வாங்க மச்சான் ஊர்ல எல்லாரும் சௌக்கியமா
என் மாப்பிள்ளைங்க மருமக எல்லாரும் நல்லாஇருக்காங்களா ஊருபக்கம் வர்றதேகிடையாது சாப்பிட்டீங்களா கேட்டவர் அருகில் வந்து அமர
எல்லாரும் நல்லாருக்கோம் மச்சான் தோட்டத்துல வேலை அதிகம் அதனால் இந்த பக்கம் வர முடியல இருந்தாலும் அடிக்கடி ஃபோன் போட்டு தங்கச்சிகிட்ட உங்களை விசாரிச்சிட்டுதான் இருக்கேன் எவனோ ஒருத்தன் நமக்கே எதிரா கேஸ் போட்டானாமே யாரு அது
அதை விடு மச்சான் கண்டகழிச்சடைங்க நமக்குஎதிராதான் இருக்கும் பார்த்துக்கலாம் இந்தஊருக்காக பாடுபட்டு உழைச்சா கடைசில நம்மள தூக்கி போட்டுட்டு போறாங்க யாரு எக்கேடுகெட்டுபோனா நம்மளுக்கு என்ன
அதுங்களை விட்டுட்டு நம்மபுள்ளைங்க நம்மபொழப்பு மட்டும்தான் பார்க்கணும் அடுத்தவன் எப்படி போனா நம்மளுக்கு என்ன வீராச்சாமி கூறவும்
அதுவும் சரிதான் மச்சான் பொண்ணுக்கு வயசாகுது
மாப்பிள்ளை பார்க்கலாம்னே இருக்கேன்
ஒருவார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன்
நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொன்னா மாப்பிள பாக்குற வேலையை ஆரம்பிக்கலாம் மச்சான்ட்ட கேக்காம புள்ளங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க இஷ்டமில்லை பசங்க வேற கல்யாண வயசுல இருக்காங்க பொண்ணுங்கள காலாகாலத்துல கட்டிகொடுத்தா தானே பசங்களுக்கு கல்யாணம்காட்சி பார்க்க முடியும் வெள்ளச்சாமி கூற
என்ன மச்சான் நீ இப்படிசொல்லிட்ட
நம்மூட்டல ரெண்டுபொண்ணுங்க ஒரு பையன் சிங்கம்மாதிரி பெத்துவச்சிருக்கேன் வெளிய மாப்பிள்ளை பாக்குறியா என்புள்ளைங்க இருக்கும்போது அதெப்படி பார்க்கலாம் என் மாப்பிள்ளை மருமகளை நான் எப்படி விட்டுக்கொடுப்பேன்
கோவமாக வீராசாமி கூற
இது ஒன்று போதாதா கண்ணகிக்கு அதானே
என் வீட்ல அழகுராசாவா மாப்பிள்ளை இருக்கும்போது என்னத்துக்கு வெளியபார்த்துட்டு இருக்க
சொந்தத்துக்குள்ள எல்லாம் முடிச்சுட்டா
நாளைக்கு நதம்ம சொந்தம்விட்டு போகாது
சொத்துபத்தும்பிரியாது
என்னங்க நான் சொல்றது கண்ணகி கேட்கவும் வீராசாமி ஆமாம்போட இளசுகள் அத்தனைபேருக்கும் அதிர்ச்சி
வைதேகி கலவரமாக வீபீஷைபார்க்க தாராபயத்தோடு சூர்யாவை பார்த்தாள்
மனிஷா அழகரை எள்ளலாக பார்த்தாள்
அன்னிக்கு வண்டிவண்டியா வசனம்பேசிட்டு திரிஞ்சியே இப்ப பேசு டா பாக்கலாம் என்ற ரீதியில் அழகரை பார்த்தாள்
மச்சான் மூத்தவனுக்கு வெளிய பொண்ணு பாக்கலாம்னு தோணுது சங்கடமாக வெள்ளைச்சாமி கூற
ஏன் வெள்ளையா
என் புள்ளயகடத்திட்டு போயி மூணுமாசம் கழிச்சு வந்துட்டானு சங்கடப்படுறியா
அவன் வேணும்னானே போகல மச்சான் கடத்திட்டுபோயிட்டானுங்க தப்பிச்சு வந்துருக்கா
சரி விடு மச்சான் உனக்கு விருப்பமில்லாட்டி வேணாம்
அட என்ன மச்சான் நீங்க நான் உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருந்தேன் கழுத சொல்லாம ஓடி போயிட்டான் அந்தவேதனை இன்னும் என்நெஞ்சில் நிக்குது மச்சான் நம்ம செல்வி அதுமாதிரி இல்ல
தூக்கிட்டு போய் தாலிகட்டிருக்கான்
என் மருமகளை தூக்கிட்டுபோயிட்டான்னு நெஞ்சே வேகுது மச்சான்
மூத்தவனுக்கு கல்யாணம்கி பொண்டாட்டி இல்ல செத்துப்போயிட்டா உங்கமூத்தமகளும் புருசன் வேணாம்னு வந்துட்டா ரெண்டுபேரையும் சேத்துவச்சுட்டா சந்தோஷமா இருந்துட்டுபோகும் நமக்கு புள்ளைங்க சந்தோஷமா இருந்தா போதும்ல
என் மச்சான் கேட்டு நான் மறுப்பேனா
பலே வெள்ளயா என்னோடகஷ்டம் தெரிஞ்ச எனக்குஆதரவா நிக்கிற இந்தமனசுதாண்டா உன்கிட்டபிடிச்சது
அந்த சிறுக்கிமவ உன்னைவிட்டுட்டு போயிட்டாளேனு இப்பவரைக்கும் அவமேல கொலவெறியில இருக்கேன் எப்படிப்பட்ட தங்கமான மாப்பிள்ளைய வேணாம்னு விட்டுட்டு போயிட்டாளே நாசமாபோவா அவ எப்போ கையில் சிக்கினாலுமீஅ
என் கையாலதான் அவளுக்குசாவு
அது போகட்டும் கழுதை நம்மபொண்ணு கொடுத்து பொண்ணெடுத்துக்கலாம் என்னைக்குமே இந்த சொந்தம் பிரியாதமாதிரி பாத்துக்கலாம் கவலைவிடு மச்சான் வீராசாமி கூற
இருவரும் கட்டிக்கொள்ள காளியாத்தாவுக்கு கோபம்தான் வந்தது காலம்கடந்து திரும்பி இந்தகொலைவெறியெல்லாம் தேவையா என்று
மகனை எதிர்த்து பேசமுடியவில்லை வயதானகாலத்தில் தான் சொல்வதை கேட்பானா என்றுசங்கடம்
மச்சான் இந்த ரெண்டுபசங்களும் யாருனு சொல்லவே இல்லை புதுசாஇருக்காங்க பாக்குறதுக்கு பணக்கார வீட்டு பிள்ளைங்கமாதிரி இருக்கு
டஇவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே சந்தேகமாக அண்ணன் தம்பி முகத்தை பார்க்க
விபீஷணன் அங்குமிங்கும் திரும்பி தலையை சொரிந்து சங்கடத்தோடு பார்த்தான்
அந்த வெள்ளையா இருக்கான்ல அந்த பையன் நான் அழகருக்கூட புடிச்ச தோஸ்த் வெளியூர்லருந்து வந்திருக்காரமாம் பெரிய வக்கீலாம்
இந்தபையன் தெலுங்குகார பையன் என்ன பத்துபேர் அடிக்க வந்தாறுங்க
அவங்க அத்தனைபேரையும் ஒருத்தனைனா அடிச்சபோட்டு என்னை ஆஸ்பத்திரியில் சேத்துவிட்டான் பாக்குறதுக்கு நல்லபையனா இருந்தான்
சரி வேலையில்லாமல் அடிதடிதெரிஞ்சபையன் எதுக்காக விடணும்னு
நானே கூட வேலையில் சேர்த்துக்கிட்டேன் நாம்அழகர்கூட தோட்ட வேலை பார்த்துட்டு இருக்கான்
சூர்யாவை அறிமுகப்படுத்த வெள்ளைச்சாமிக்கு அண்ணன் தம்பி இருவரையும் சுத்தமாக பிடிக்கவில்லை
மச்சான் பார்த்தா சரியில்லாதமாதிரி என் மனசுக்கு தோணுது இருந்தாலும் வீட்டில் இடம்கொடுத்து தங்க வைக்கிறது சரியில்ல யாராஇருந்தாலும் நாளுநாள்ல அனுப்பிவிட்ருங்க தங்கறதுக்கு வீடா இல்ல வெளிய தங்கிக்காசொல்லுங்க வீட்லஎல்லாம் சேர்த்துக்கவேண்டாம் எந்தபுத்துல என்ன பாம்பு இருக்கும்னு கண்டுபிடிக்க முடியாதுல்ல சந்தேகமாகபார்த்தவாறு கூற அண்ணன் தம்பி இருவரும் பல்லை கடித்தனர்
சரிதான் மச்சான் கொஞ்சம் தள்ளிதான் வச்சிருக்கேன்
கவலபடாத சரி சாப்பிட்டாச்சா வீட்ல அத்தைமாமா கிட்ட சொல்லிரு நம்மவீட்ல பொண்ணு மாப்பிள்ளை இருக்கும்போது வேறஇடத்தில பொண்ணு பார்க்ககூடாதுன்னு மீறி பார்த்தீங்க அப்புறம் நம்ம உறவை வெட்டிவிட்டு போகவேண்டியதா இருக்கும் சொல்லிட்டேன்
அட என்ன மச்சான் நீங்கசொன்னபிறகு மறுப்போச்சு ஏது
புள்ளங்க ஜாதகத்தை பார்த்துட்டு மேற்கொண்டு என்ன பேசணுமோ பேசலாம் நீங்க அனுப்பிவைக்கிறீங்களா நானே கொண்டுவந்து கொடுக்கட்டுமா வெள்ளைச்சாமி கேட்க
வேணாம் வேணாம் பிள்ளைங்களோட ஜாதகத்தை எடுத்துட்டு நானே வரேன் ரெண்டுபேரும் சேர்ந்து போய் பாத்துட்டு வரலாம் வீராசாமி கூற வெள்ளைச்சாமி தலையாட்டிவிட்டு கிளம்ப கண்ணகியை கையில் பிடிக்கமுடியவில்லை இரண்டுமகள்களுக்கும் திருஷ்டி சுத்தி அன்று நாட்டுகோழி குழம்பு வைத்து அசத்திவிட்டார் தான் பிறந்தவீட்டுக்கு தன் மகள்கள் மருமகளாக போகும் சந்தோஷம்தான்
ஆனாலும் அம்மாவின் சந்தோஷத்திற்கு மாறாக அக்கா தங்கை இரண்டு பேர் முகமும் சோகமாகவேஇருந்தது
இரவு விபீஷணன் அறைக்கு வந்திருந்தாள் வைதேகி
அப்பா அம்மா கல்யாணம் பண்ணிவைக்கபோறதா சொல்லிட்டு இருக்காங்க நீங்கஎதுவும் சொல்லல அமைதியா இருந்தா என்னஅர்த்தம்
உனக்கு மாப்பிள்ளை பார்த்தா புடிச்சாமேரேஜ் பண்ணிக்கோ இல்லாட்டி நோ சொல்லு இதுல நான் என்னசொல்றது நான்என்ன பண்றது விபீஷணன் கேட்க
வைதேகி மனதளவில் அடிபட்டாள்
" மாமா... நான்.. உங்களை ..விரும்புறேன் மாமா."
என்னைகல்யாணம் பண்ணிக்கோங்க மாமா அழுதவாரு கூற சட்டுனெனா எழுந்த விட்டான் ஆரம்பத்தில் தோன்றியதெல்லாம் வெறும் சலனம் என்று இப்போதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறான் திடீரென திருமணம்பற்றி பேசினால் அதிர்ச்சியாக இருக்காதா திருமணம் என்று ஒன்றையே அவன் நினைத்துகூட பார்க்கவில்லை
"ஏய்.. என்ன.? ப்ளேபண்ணிட்டு இருக்கியா எவ்வளவு பிரச்சனை இதுல காதல்வேற கேக்குதா உங்கப்பா உன்கல்யாணத்தை நல்லபடியா நடத்திமுடிக்கணும்ன்னு என்கிட்டயே சொல்லிட்டு இருக்காரு நீ என்னன்னா இப்படி சொல்லிட்டு இருக்க
நான் உன்னை மட்டும் இல்ல யாரையும் நான்விரும்பமாட்டேன்
எங்க நாட்ல மேரேஜ் பன்னிக்கிறதே அதிசயமாதான் பிடிச்சா லிவிங்டூகெதர் அன்ட் டேட்டிங்க
இந்த தாலி செண்டிமெண்ட் பிசிக்கல்ரிலேஷன்ஷிப் எங்களுக்கு செட்டாகாது
அப்பா அம்மா மாதிரியெல்லாம் எங்களால் ரொம்ப வருஷத்துக்கு இருக்கமுடியாது
இந்த லைஃப் ரொம்ப கஷ்டமானது
இதுல என்ன சேர்த்துவிட்டு கஷ்டப்படுத்தணும்னு நினைக்காத எனக்கு இந்த லைஃப் பிடிக்காது
அதிலும் உன்னை லவ் ஓஓசேட் நோ நோ இதையெல்லாம் என்னால நினைச்சுகூட பாக்கமுடியல
வேணும்னா ஒன் மன்த் லிவிங்கல இருக்கலாமா அப்புறம் செட்டாச்சுனா மேரேஜ் பத்தி யோசிக்கலாம்
அவன் சாதரணமாகதான் கூறினான்
அது அவனுக்கு சாதாரணம். ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெண்ணால் அந்தவார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை
அழுதபடி ஓடிவிட்டாள்