அத்தியாயம் 25
மாமனிடம் பேசிய பிறகு அப்படி ஒரு புன்னகை ருத்ரனின் முகத்தில்!! ராமஜெயத்திற்குமே மருமகனிடம் பேசியது அத்தனை மன நிறைவு!! அதிலும் முன்னொரு முறை ஃபோனில் மகதியை அடித்த சமயம் "நீ என்ன ப்ரொபோஸ்சா பண்ணி இருப்ப? இல்ல கல்யாணம்தான் கட்டி இருப்பியா? உன் குணத்துக்கு அடிச்சு தான்டா இருப்ப!!" என்று சொல்லி கிண்டல் அடித்தவர், இன்று அதையே மருமகன் நடத்திக் காட்டியதும் பழசை நினைத்து சிரித்துக்கொண்டார்.
அன்றைக்கும் இன்றைக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம்… எத்தனை எத்தனை சந்தோஷம் அவனது குரலில்… அனைத்திற்கும் காரணம் மகதி என்ற அற்புதமான பெண் மட்டுமே!!
சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?
ஆவதும் பெண்ணாலே...
அழிவதும் பெண்ணாலே என்று!!
அழிவிலிருந்து அவனை அன்று காத்தவள் நந்தினி என்றால்.. நந்தினி போன பிறகு அவனை வாழ வைத்தவள் ஆதினி!! ஆனால் இன்று ருத்ரனை முழு மனிதனாக சந்தோஷத்தோடும் மன நிறைவோடும் வாழ வைக்கிறாள் மகதி!!
ஆக மூன்று பெண்களும் அவனின் வாழ்வில் முக்கியமானவர்கள்!! வாழ்வின் ஆதாரமானவர்கள்!!
ஆதினியை மகதி எப்படி நடத்துவாள் என்ற கவலை எல்லாம் ராமஜெயத்திற்கு இல்லை. மருத்துவமனையில் இருந்த ஒரே நாளிலேயே அவளது அன்பையும் அக்கறையும் தான் பார்த்து விட்டாரே!! அது இன்னொரு குழந்தை வந்தால் கூட மாறாது என்ற திண்ணம் அவருக்கு!! மனிதர்களை மிக எளிதாக கணித்து விடும் ராமஜெயத்திற்கு மகதியையும் புரிந்தது!!
ராமஜெயம் அதோடு மட்டும் நின்று விடவில்லை. தன் மருமகனுக்கு உறுதுணையாக நிற்க முடிவெடுத்தவர், இது நாள் வரை உதவி என்று கேட்டிறாத தான் வேலை செய்த எம்பியிடம் உதவி கோரினார்.
மகதியின் மனதில் எழுந்த குழப்பத்தை கணவனாக தீர்க்கும் பொறுப்பு ருத்ரனை சார்ந்தது. ஆதனி தன்னை ஏற்பாளா?
அதுவும் அன்னையாக இதுவரை நந்தினி இருந்திருக்க, புகைப்படத்தில் என்றாலும் அன்னை என்றால் அவள் தானே ஆதினியின் மனதில் ஆழ பதிந்திருக்கிறாள். இன்று திடீரென தன்னை அன்னை என்று முன் நிறுத்தினால் பிஞ்சு மனதில் என்னென்ன பாதிப்புகள் வருமோ? இல்லை ஏற்க முடியாமல் தவித்து தன்னை தவிர்ப்பாளோ? என்று பல யோசனைகளோடு அமர்ந்திருந்தாள் மகதி.
இந்நாள் வரை எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், போகிற போக்கில் கடந்து.. வாழ்வை அந்த நிமிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே வாழ்ந்தவள், இன்று ஏனோ ஆதினி தன்னை ஏற்க வேண்டும் என்று அத்தனை வேண்டுதல்!! பிரார்த்தனை!! கூடவே மனக்குழப்பம்!!
அவர்கள் கல்யாணம் நடந்ததே பெரும் குழப்பத்துக்கும் சச்சரவுக்கும் இடையில்... இதில் இன்னமும் அவள் அம்மாவிடம் பேசவில்லை!! ஆனால் என் குழந்தையின் அம்மா ஸ்தானத்தை பற்றி யோசிக்கிறாளே என்று நினைத்தவன் மனது அவள் மேல் கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டது!!
"நீ கொஞ்ச நேரம் தூங்குமா!!" என்று மனைவியை தன் தோளில் சாய்க்க அவளோ நிமிர்ந்து அவனை கேள்வியாக பார்த்தாள்.
"நான் எங்கேயும்.. ஏன் ஆபீஸ்க்கு கூட இன்னைக்கு போகல!! அதுவும் இன்னைக்கு நம்ம கல்யாணம் ஆன நாள் டி.. எப்படி போவேன்? இன்னும் எவ்வளவு காரியங்கள் இருக்கு ஆற்ற கணவனாக? நைட்??" என்று அவனின் கள்ளச் சிரிப்பை கண்டு கொண்டவள் முகத்தில் மெலிதாக வெட்க சிரிப்பு!!
"சும்மா சொன்னேன் டா… ஏற்கனவே காலையிலேயே உனக்கு அவ்வளவு குழப்பம்!! அதோட உன்ன விட்டு விடாமல் சும்மா சீண்ட தான் கிட்ட நெருங்கினேன். நெருங்கினவனை விளக்கை சுற்றி வரும் விட்டில் பூச்சியை கவர்ந்து கொள்வதை போல.. என்னை உள்ளே எடுத்துக் கொண்டாய்!!" என்று நல்லவனாய் சிரித்தவனை அவன் நம்பா பார்வை பார்க்க அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டவன், அவள் காதில் மெல்லியதாக "சத்தியமாக நம்ம ஃபர்ஸ்ட் நைட் இப்படி பிளான் பண்ணவே இல்லடி!! எப்படி எல்லாம் பிளான் பண்ணி இருந்தேன் தெரியுமா?" என்று அவன் கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டே விட்டத்தை பார்க்க..
"போதும்! போதும்!! இதுக்கு மேல அதை பத்தி பேசாதீங்க!!" என்றவள் முகம் அந்தி வானத்தை தத்தெடுத்தது நாணத்தால்!!
"ஓகே.. ஓகே.. பேசல!! செயல காட்டவா?" என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மீசையால் குறுகுறுக்க.. கிளுக்கி சிரித்தவள் "ருத்து.. ப்ளீஸ்!!" என்றவள் அவனைக் கிறக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் நாக்கை சுழட்டி தன் உதடுகளை தடவி ஈரமாக்கி அவளை காமத்தோடு அவன் பார்க்க...
வியர்த்த முகத்துடன் அவள் அவனைக் கிறக்கமாகப் பார்த்தாள்.
"ஏய் குட்டி ராட்ஸஸி ஏன்டி என்னை இப்படி கொல்லுற?" என்றான் அவள் மூக்கோடு மூக்கு இழைத்து..
"நானா கொல்லுறேன்? நீங்க தான்.." சிணுங்கினாள்.
"இல்லடி அழகி. நீதான் என்னை கொல்லுற.." சிணுங்கியவளின் இடையைச் சுற்றி வளைத்து அணைத்தவன், அவள் கன்னத்தில், மூக்கில், உதட்டில் முத்தமிட்டான்.
அவளும் கண்களை மூடிக் கிறங்கினாள். அவள் மெல்லிடையை இறுக்கி பிடித்தபடி அவளின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.கண்களை மூடியபடி அவன் கன்னத்தில் தன் மிருதுவான கன்னத்தை தேய்த்தாள். அவளது செவ்விதழ்கள் மெல்ல அவனை முத்தமிட்டன…
அதில் மயங்கிய மாயவனின் முரட்டு இதழ்களோ அவளது வெண் பட்டு கழுத்தில் அழுந்த கவ்வி இழுத்து சுவைத்தன. அவள் கழுத்தில் இருந்து வீசிய.. அவளுக்கே உரித்தான மணம் அவனை கிறங்க வைத்தது. அவள் இடுப்பை இறுக்க... அதில் கிளர்ந்தவளின் கை அவன் கையைப் பற்றி இறுக்கியது.
"ம்ம்ம்ம்.." என்று கிறக்கத்துடன் சிணுங்கினாள். அவன் கையை இறுக்கி பிடித்து கொஞ்சம் நகர்த்தினாள். அவளின் மிருதுவான இடுப்பில் இருந்த தன் கையை மெல்ல நகர்த்தி முன்னால் கொண்டு வந்தவனின் விரலில் தட்டுப் பட்டது அவளது அழகிய நாபி சுழி!!
அதில் தன் விரலை விட்டு சுழற்றினான். அவள் சிலிர்த்தபடி முனகினாள். அவள் கழுத்தை சப்பியப்படி மார்பின் மத்தியில் முத்தமிட்டான். அவள் பிறை நிலவை மூடிய முந்தானையை தன் முகத்தால் தள்ளி மார்பு பரப்பில் முத்தமிட்டேன். அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைக்க... அவள் முகம் அவன் முகத்தில் மோதியது. அவளின் மென்மைகள் அவன் நெஞ்சில் அழுந்தின.. அவனின் இதழ்களும் விரல்களும் செய்த நர்த்தனங்களை கொண்டு அவனின் எண்ணத்தை கண்டு கொண்டவள் இரண்டிற்கும் விலங்கிட்டாள்!!
"ப்ளீஸ் ருத்து…"
"நீ ப்ளீஸ் பண்ணு குட்டிமா என்னை!!" என்றவனின் தாபம் நிறைந்த குரலில் இது வேலைக்காகாது என்று நினைத்தவள் "நான் பெட்ரூம்லே போய் தூங்குகிறேன்" என்றதும், "வெயிட் பண்ணுடி.. சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன்" என்று தன்னோடு நிறுத்திக் கொண்டான் அவளை!!
மதிய உணவு வந்தவுடன் அவளோடு பேசிக்கொண்டு உணவை உண்டு முடித்து அவளை தங்கள் அறைக்கு உறங்க அனுப்ப.. அவளோ மறுத்து அவனது கைவளைவிலேயே தலை சாய்த்து இருந்தாள்.
"என்னடா மா டயர்டா இருக்கா?" என்றதற்கு இல்லை என்று தலையாட்டினாள்..
"ஏற்கனவே அங்க இருக்கிறது கொஞ்சம் போல தான்!! அதில் இப்படி எல்லாம் நீ யோசிச்சிட்டு இருந்தேனு வை.. இருக்கிறது உருகி காது வழியாக ஊத்திடும்!! மூளையில்லா பொண்டாட்டியை வைத்துக்கொண்டு நான் என்ன பண்ண முடியும்? நானே பாவம்!!" என்றவன் அவள் தலையைப் பிடித்து ஆட்ட.. அவன் மார்பில் சாய்ந்தவாறு நிமிர்ந்து பார்த்தாள்.
"வாட் இஸ் ஈட்டிங் யூ மகி?" என்று ஆழ்ந்து கேட்டவுடன் "அம்மா கிட்ட பேசணும் ருத்து" என்றாள் கலங்கிய குரலில்.. கண்களை நீர் தழும்பி இருக்க.. இமைகள் அணையாக இருந்தன அவை வழிந்து விடாமல்…
அவன் புஜத்திலேயே முகத்தை புதைத்து தன் அழுகையை அவள் கட்டுப்படுத்த.. வலது கையால் அவளை இழுத்து தன் மார்பின் மீது சாய்த்து கொண்டவன் "நேரா போய் பார்த்து பேசிட்டு வருவோமா?" என்று கேட்டான்.
அவளும் அழுகையோடு தலையாட்ட "சரி வா.. கிளம்புவோம்" என்று அவளை அழைத்துக்கொண்டு துர்காவை காண சென்றான்.
ருத்ரன் வீட்டில் இருந்து சென்ற மகாதேவனும் ஹர்ஷத்தும் நேராக சென்றது என்னவோ துர்காவை பார்க்கத்தான். ஆனால் துர்காவை அவர்களால் அப்போது காண இயலவில்லை. காரணம் ஒரு சிசேரியனுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஏற்கனவே சிக்கல் உள்ள கேஸ் வேறு!!
அறுவை சிகிச்சை அறைக்கு சற்று தள்ளி இருக்கும் அறையில் அவர் தயாராகிக் கொண்டிருக்க.. மகாதேவன் அந்த தளத்திற்கு வரும்போது டாக்டர் எங்கே என்று கேட்டுக் கொண்டே வந்தவர், அவர் அந்த அறையில் இருக்கிறார் என்றதுமே.. அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்தவர், "துர்கா உன்கிட்ட பேசணும்!! மகதி விஷயம்!! அவசரம் வா" என்று அங்கிருந்த செவிலியர்களை கண்டு விஷயத்தை கூறாமல் அவரை அழைத்துச் செல்ல முயன்றார்.
துர்காவுக்கோ கடும் கோபம்!! ஒரு மருத்துவராக இருந்து கொண்டு
ஸ்டெர்லைசிங் ரூமுக்குள் இப்படி வந்து நிற்கிறாரே என்று!!
அதைவிட என்ன ஏது என்று கூறாமல் இப்படி அவசரமாக தன் கையைப் பிடித்து இழுப்பவரை கண்டு ஆத்திரம் மிக.. கையை உதவியவர் "எனக்கு இப்போ ஒரு சிசேரியன் இருக்கு!! என்னால வர முடியாது" என்றார் திடமாக...
மகாதேவன் அந்த நேரம் மருத்துவராய் இல்லாமல்... மகதி என்ற பெண்ணுக்கு தந்தையாகவும் துர்காவிற்கு கணவன் என்ற முறையில் மட்டுமே இருந்தவர் மற்றதை கவனிக்க தவறினார்.
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்!! இல்லனா வேற டாக்டர அட்டன் பண்ண சொல்லு!! என் கூட வா.. முக்கியமான விஷயம் பேசணும்!! அதுவும் மகதி பத்தி…" என்று அவரை கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்துவிட சற்று தள்ளி நின்றிருந்த ஹர்ஷத்தை பார்த்ததும் ஓரளவுக்கு விஷயம் பிடிபட்டது துர்காவிற்கு.
ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் முதலில் இவர்களைக் கொண்டு கேட்க அவர் விரும்பவில்லை. மேலும் இப்பொழுது உலகுக்கு வர துடித்துக் கொண்டிருக்கும் அந்த புது உயிரை காப்பது மட்டுமே அவருக்கு தலையாய கடமையாகப்பட்டது.
"மகதியே ஆனாலும்.. யார் பத்தினாலும் இப்ப என்னால கேட்க முடியாது!!" என்றவர் இருவரையும் அழுத்தமாக பார்த்துவிட்டு "துர்கா... துர்கா.." என்று அழைத்த கணவனின் குரலுக்கு சிறிதும் செவி சாய்க்காமல் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்து விட்டார்.
பொதுவாக சில சிக்கலான அறுவை சிகிச்சைகளில் துர்கா கூடவே அனுபவம் மிகுந்த மருத்துவர் ஒருவரை உடன் வைத்துக் கொள்வார். அதிலும் குழந்தை மருத்துவரான மகதி எப்பொழுதும் கூடவே இருக்க வேண்டும். ஆனால் இன்று இந்த அறுவை சிகிச்சை முன்னமே குறித்ததில்லை.
கர்ப்பிணி பெண்ணுக்கு பனிக்குடம் எதிர்பாராமல் உடைந்ததினால் இந்த அறுவை சிகிச்சை திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் மகதிக்கும் அவரால் தெரியப்படுத்த முடியவில்லை. வேறொரு மருத்துவரை இதே நேரத்தில் வரவழைத்து விட்டார்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்கள் போராடி வெற்றிகரமாக குழந்தையை பிரசவித்தனர். அன்னையையும் மகவையும் நல்லபடியாக பிழைக்க வைத்தனர் துர்கா மற்றும் அவரது மருத்துவக் குழு!!
அசதியாக வெளியே வந்தவரை அழுத்தமான முறைப்போடு எதிர்கொண்டார் மகாதேவன். அவருக்கு சலிக்காத முறைப்பை பதிலளித்துவிட்டு "கம் டு மை கேபின்.. பட்.. ஆஃப்டர் 15 மினிட்ஸ்!!" என்று அதிகாரமாய் உரைத்து தன் அறைக்குள் புகுந்து கொண்டவர் "யாரையும் இப்போதைக்கு அனுப்பாதிங்க சிஸ்டர்!!" என்று காவலுக்கு செவிலியரையும் வைத்து விட்டார்.
கணவனாக அவர் வீட்டில் எப்படி நடந்து கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் இங்கு அதி முக்கிய பணியில் இருக்கும் போது இப்படி இடைப்பட்டு அழைப்பது.. முறைப்பது.. கடிந்து கூறுவது.. இது எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை அவரால்.
சில விஷயங்களை.. சில நேரங்களில் ஆறப் போட்டாலே அமைதி கிட்டும்!!
அது மகாதேவனுக்கு புரியவில்லை. அதை புரிந்தவர் அமைதியை கையில் எடுத்துக் கொண்டு வழக்கம் போல தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவர் செவிலியர் கொடுத்து டீயையும் அருந்தி கொண்டே மகளுக்கு அழைத்தார்.
அப்போதுதான் காரில் வந்து கொண்டிருந்த ருத்ரனும் அந்த அழைப்பை பார்க்க... பயத்தோடு என்ன செய்வது என்பது போல் கண்களால் கணவனிடம் மகதி கேட்டாள்.
"இங்க கொண்டா…" என்று வாங்கிய ருத்ரன் "ஹலோ ஆன்ட்டி என்றான்.
மகளின் ஃபோனில் ருத்ரன்.. அதுவும் உரிமையுடன் ஆன்ட்டி என்கிறான்.. அப்பொழுது பிரச்சனை பெரிது தான் என்று புரிந்தவர் "மகதி இல்லையா?" என்று கேட்க..
"நாங்க உங்கள பாக்க தான் வந்துகிட்டு இருக்கோம் ஆன்ட்டி!!" என்றான், "வாங்க.. வெயிட் பண்றேன்!!" என்றதோடு அவர் வைத்து விட்டார்.
ரிசப்ஷனுக்கு போன் செய்து மகதியும் கலெக்டரும் வந்தவுடன் தன் அறைக்கு அனுப்புமாறு கூறி வைத்தார். சரியாக 15 நிமிடங்கள் கழித்து மகாதேவனும் ஹர்ஷத்தும் உள்ளே நுழைய அவர்களுக்கு எதிரில் இருந்து இருக்கையை காட்டினார்.
மனைவியின் இந்த நிதானம் மகாதேவனுக்கு மகா கோபத்தையும் உளைச்சலையுமே தந்தது. "இங்கே என்ன நடந்துகிட்டு இருக்கு தெரியுமா? என்ன நடந்தது தெரியுமா? நீ பாட்டுக்கு ஆபரேஷன் தியேட்டர் குள்ள போயிட்ட? வேற யாராவது அட்டன் பண்ண சொல்ல வேண்டியது தானே?" என்று கர்ஜித்தார்.
அயலான் முன்னாடி தன்னை பேசும் கணவனை கண்ட துர்காவிற்கு "இது ஹாஸ்பிடல்!! நான் டாக்டர்!! எனக்கு தான் தெரியும் என் பேஷண்டுக்கு என்ன செய்யணும் என்று!!" என்ற துர்காவின் அழுத்தமான குரலில் சற்றே தன்னை நிதானித்தார் மகாதேவன்.
"அதில்லம்மா விஷயம் இவ்ளோ பெரிய சீரியஸா போயிட்டு இருக்கு தெரியுமா? காலையில நான் கலெக்டர் வீட்டுக்கு போன போது அங்கே என்ன நடந்தது தெரியுமா? நானே இத பத்தி கமிஷனர் கிட்ட கம்பளைன் பண்ணிடலாம்!! ஆனா உன் கிட்ட கலந்துக்காம சொல்ல எனக்கு பிடிக்கல" என்றார்.
"அப்போ காலையில என்னிடம் கேட்டு தான் நீங்க அங்க போனீங்களா?" என்றார் துர்கா நெத்தியடியாய்!!
"அது.. ம்ப்ச்… நான் என்ன சொல்றேன் நீ என்ன கேட்கிறாய்?" என்று அவர் சலித்துக் கொள்ள..
"இதுல அங்கிள் மேல எந்த தவறும் இல்லை ஆன்ட்டி!! எல்லாத்துக்கும் காரணம் ருத்ரன் தான். அப்போ என் வாழ்க்கையே அழித்தான். இப்போ உங்க மகள் வாழ்க்கையின் அழிக்க ஆரம்பிச்சிட்டான். எவ்வளவு சீக்கிரம் மகதிய அவன்கிட்ட இருந்து மீட்க முடியுமோ அவ்வளவு நல்லது!! மகதிக்கு மட்டுமல்ல உங்களுக்கும்தான்!!" என்றான்.
"எக்ஸ்க்யூஸ் மீ?" என்றார் புரியாமல் துர்கா.
"அவன் கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது ஆன்ட்டி!! எங்க முன்னாடியே அப்படி பண்ணுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை ஆன்ட்டி!! பாவம் அங்கிள் தான் பரிதவிச்சு போயிட்டாரு!! ஆனால் எங்கள அங்க நிக்க கூட இல்லாமல் விரட்டி விட்டுட்டான் போலீசை வைத்து" என்று மகாதேவனுக்காக அவன் உருக்கமாக பேச.. துர்காவிற்கு தலை விண் விண்ணென்று வலித்தது. என்ன நடந்தது என்று தெரியாமல் இவர்கள் இருவரும் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு…
"ஜஸ்ட் ஸ்டாப் இட்!! அங்க என்ன நடந்தது முதல்ல சொல்லுங்க!! அதுக்கப்புறம் உங்களோட புலம்பலை சொல்லுங்க" என்று அவர் கத்தி விட…
"அது.. நான் காலையில மகதியை ஃபாலோ பண்ணிட்டு கலெக்டர் வீட்டுக்கு போனேனா.. அங்க நான்…" என்று மகாதவன் ஆரம்பிக்க..
" என்னது உங்க பொண்ண ஃபாலோ பண்ணிட்டு போனீங்களா?" என்று முகத்தில் அசூசை காட்டி வினவினார் துர்கா.
"அது... அது…" என்று தயங்கிய மகாதேவன் "இப்ப அதுவா முக்கியம்? நான் அங்க போனதுனால தான் அவனைப் பத்தி தெரிஞ்சுக்க முடிந்தது? என்ன நடந்தது தெரியுமா அங்க?" என்று மனைவியிடம் எகிறினார்.
"மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்களே தவிர.. ரெண்டு பேரும் இதுவரைக்கும் அதைப் பற்றி எதுவுமே சொல்லல" என்றார் கோபத்தோடு துர்கா!!
"ருத்ரன் வலுக்கட்டாயமாக உங்க பொண்ணு மகதி கழுத்துல தாலிய கட்டிட்டான் ஆன்ட்டி!!" என்று குண்டை தூக்கி போட்டான் ஹர்ஷத்!!
"என்னது வலுக்கட்டாயமாக வா?" என்று அதிர்ந்தது துர்கா மட்டுமல்ல மகாதேவனும் தான். அவருக்கு தான் அங்கு நடந்த உண்மை தெரியுமே!! ஆனால் அதை கூறவிடாமல் ஹர்ஷத் கண்ணை காட்டி விட.. அமைதியாக இருந்து விட்டார் மகாதேவன். ஹர்ஷத் கூறியது உண்மை என்பது போல…
அதே சமயம் உள்ளே நுழைந்தனர் ருத்ரன் மற்றும் மகதி!!
கணவர் சொன்னதை நம்ப முடியாமல் உள்ளே நுழைந்து மகளை ஆராய்ச்சியாக பார்த்தார். ஹர்ஷத் சொன்னது உண்மைதான் என்பது போல கலங்கிய மகளின் முகம்.. அழுது அழுது வீங்கிய இமைகள்.. சிவந்து கிடந்த கன்னங்கள்.. அலுங்கிய தோற்றம்... நலுங்கிய உருவமாய்... கண் முன்னே மகள்!! அதைவிட அவள் கழுத்தில் உரிமையோடு தொங்கிய மஞ்சள் கயிறு!!
பார்த்த துர்காவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் வேகமாக மகளை தன்னோடு இழுத்து அணைத்து "என்ன பண்ணி வச்சிருக்கீங்க ருத்ரன் என் மகளை?" என்று ஆங்காரமாக ருத்ரனிடம் கேட்டார்!!