தோகை 23

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 23

 

 

 

அன்று காலை எழுந்தது முதலில் ருத்ரனுக்கு ஏதோ மனது தவிப்பாகவே இருந்தது பெண்ணின் நினைவை தாண்டியும்!! ஏதோ விரும்பத்தகாதது நடக்க போவது போலவே என்றும் இல்லாமல் மனது ஒரு விதமாக தவித்துக் கொண்டிருந்தது. இடது நெஞ்சை நீவிகொண்டே தூங்கும் மகளை ஆதூரமாக பார்த்தவன், இன்று அவனே அனைத்தும் செய்து மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தான்.

 

ராமஜெயம் அவனிடம் பேசுவதற்காக காத்திருந்தார். மருமகன் முகம் நேற்றைய விட இன்றைக்கு தெளிந்திருந்ததை கண்டவர் அவனே சொல்லட்டும் என்று அமைதியாக காத்திருக்க.. அவனது கண்களோ மாமனை நேர் கொண்டு பார்க்க தயங்கி, இங்கும் அங்கும் சுற்றி அலைய.‌.. ஆனால் ராமஜெயமோ தீவிரமாக அவனை தான் பார்த்திருந்தார், கொஞ்சம் கூட கண்களை சிமிட்டாமல்!!

 

அதில் வெட்கம் கொண்டு "மாமா… ப்ளீஸ்…" என்று சத்தமாக சிரித்தவன் முகத்தில் இதுவரை இல்லாத தேஜஸ்!! அதிலேயே புரிந்து போனது அவருக்கு அனைத்தும் சுகமாய் முடிந்தது என்று!!

 

மூன்று வருடங்களாக மருமகன் தவித்த தவிப்பு தெரிந்தவர், இதற்கு மேல் அவனை கேள்வி கேட்டு சங்கடப்படுத்தாமல் அவன் தலையில் கை வைத்து "நல்லா இரு ப்ரதாப்பா… நல்லா இரு!!" என்று கண்கள் கலங்க ஆசீர்வாதம் கூறியவர் "எனக்கு இன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு கோவில் போகனும் போல இருக்கு. நான் போயிட்டு வரேன்!!" என்று கிளம்பி விட்டார்.

 

"தனியா வேண்டாம் மாமா!!" என்றவன் சொர்ணம்மா மற்றும் அவரது கணவரையும் மாமாவோடு காரில் துணைக்கு அனுப்பி வைத்தான்.

 

என்னதான் நேற்று அனைத்தும் தெளிவாக பேசி விட்டாலும் மனது ஏனோ குழப்பமாகவே இருக்க… இன்று வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு!! காலையில் மகதிக்கு ஒரு குட் மார்னிங் மெசேஜ் போட்டு விட்டான் என்றும் இல்லாமல் இன்று!!

 

"என்ன ஆச்சரியம்??? கலெக்டர் சார் குட் மார்னிங் மெசேஜ் எல்லாம் போடுறாரு!!" என்று பதில் அனுப்பினாள் பெண்!!

 

"இன்னைக்கு ஆபிஸ் போல.. கலெக்டர் வெட்டியா தான் இருக்கார் அதுதான் கொஞ்சம் கடலை வறுக்கலாம் என்று…" கண்ணடிக்கும் ஸ்மைலியோடு அனுப்பி வைத்தான்.

 

அவன் கடலை வறுக்க மெசேஜ் அனுப்ப.. அவளோ காதலை வளர்க்க நேராக கிளம்பியே விட்டாள்.

 

அதுதான் அவ்வளவு துள்ளலாக அவள் கிளம்பி வர காரணம்!! ஆனால் அதை ருத்ரனிடம் கூறவில்லை.

 

இவன் கேஸ் எந்த நிலையில் போகிறது என்று நிலவரம் கேட்க சூரிய பிரகாஷுக்கு கால் செய்தான்.

 

"எஸ்பி... அந்த ஈசிஆர் கேஸூல ஒரு கேங்க பிடிச்சோமே அவன் கிட்ட இருந்து ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சுதா? இப்ப திரும்பவும் அந்த ஜங் ஃபுட்ஸ் வைத்து உள்ள வந்திட்டான். வேற ஏதாவது விவரம் கிடைத்ததா?" என்றதும்..

 

"எஸ் சார்!! அது சம்பந்தமாக மேலும் ஒருத்தனை எங்க டீம் அரெஸ்ட் பண்ணி இருக்கோம். அவனுக்கு கொடுக்கிற கொடுப்பில் எப்படி இந்த வீக்குள்ள இந்த ஏரியாவுக்கு சப்ளை பண்றவன பிடிச்சிடலாம்!! ஆனா இது செயின் ப்ராசஸ் சார். நம்ம ஏரியாவுல நாம் எவ்வளவு தீவிரமா புடிக்கிற மாதிரி எல்லா ஏரியாலையும் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா சார்?" என்ற எஸ்பி கூறியதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது ருத்ரனுக்கு.

 

"புரியுது எஸ்பி!! ஆனா.. நம்ம முதலில் ஒழுங்கா இருந்தா நம்ம சுற்றியுள்ளவனும் நம்மளை பார்த்து ஒழுங்கா இருப்பாங்க இல்லையா? இது ஒரு சின்ன முயற்சி!! நம்மால் இயன்ற நல்லதை நம் நாட்டுக்கு செய்தோம் என்பதை விட நாம் நம் வருங்கால சந்ததிக்கு செய்தோம் என்பதே நிறைவு!! இதே சமூகத்தில் தானே நம் பிள்ளைகளும் வாழப் போறாங்க? அவங்க கொஞ்சமாச்சும் நிம்மதியா வாழ முடிந்த அளவு நம் களை எடுப்போமே எஸ்பி!!" என்றதும் வழக்கம் போல ருத்ரனின் பேச்சு எஸ்பிஐ கவர்ந்தது!!

 

"எஸ் ஸார்… ஆபிஸ்க்கு ஒரு 11:00 ஓ கிளாக் போல வரவா சார்?" என்று எஸ்பி அனுமதி கேட்க..

 

"இல்லை.. நான் இன்னைக்கு ஆபீஸ் வரல எஸ்பி" என்றான் சிறு தயக்கத்தோடு.

 

"வாட்?? கலெக்டர் சார் ஆபீஸ்க்கு போகலையா? அதிசயம் தான்!!" என்று சற்று உரிமையாக கேட்ட எஸ்பி ருத்ரனின் முகத்தில் தெரிந்த பாவனை பார்த்திருந்தால் கண்டிப்பாக கண்டுபிடித்திருப்பான் கலெக்டரும் காதலில் கவிழ்ந்து விட்டான் என்று!!

 

"ஓகே சார்.. நாம நாளைக்கு பாக்கலாம்!!" என்றதும் தான் மகதி அவனிடம் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வர "எஸ்பி.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. பர்சனலா!!" என்றதும் "பேசலாமே சார்!!" என்றான் எஸ்பி.

 

கொஞ்சம் முதலில் தயங்கியவன், பின் தனது கல்லூரி காலத்தில் ஆரம்பித்து ஹர்ஷத் நந்தினியின் சந்திப்பு, பின் அவர்களது காதல் கல்யாணம்.. இடையில் நந்தினியின் கர்ப்பம் என அனைத்தையும் இவன் கூறி முடிக்க, பொறுமையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான் சூரிய பிரகாஷ்.

 

"சார்.. அந்த ஹர்ஷத்தால உங்க பிரண்டுக்கோ அவங்க குழந்தைக்கோ ஏதாவது ஆபத்தா? அதுக்கு நான் எதுவும் பண்ணனுமா?" என்றான் கலெக்டரின் நீண்ட அமைதியில்…

 

ஒரு பெருமூச்சை விட்டவன் "அதுக்கு அவசியமில்லை எஸ்பி!! நந்து.. நந்தினி இப்போ உயிரோடு இல்லை" என்றதும் அவனது கலங்கி குரலே நந்தினி அவனுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதை கூறியது.

 

"ஆனா ஆதினி…" என்றவன் எஸ்பி இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று புரியாமல் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு "என் குழந்தை!!" என்றதும், எஸ்பியுமே திகைத்து "புரியவில்லை சார்!!" என்றான் புரியாமல்..

 

"நீங்க கேட்டது சரிதான் எஸ்பி... அதுதான் இன்ன வரைக்கும் எனக்கும் புரியாத புதிர்!! ஆனால் நானும் குரூப்பும் எக்ஸாம் பிரிப்பரேஷன் அண்ட் ட்ரைனிங்கில் தான் இருந்தேன். இங்கே நந்தினி இருக்கும்போது ஹர்ஷத் எதுவும் விளையாண்டு இருக்கோனோ என்று நினைக்கிறேன். இடையில நான் ஸ்பேர்ம் டொனேட் பண்ணது ரீசண்டா தான் எனக்குமே ஞாபகம் வந்தது. எனக்கு இந்த இன்பர்மேஷன் எல்லாம் நீங்க அன்அபிஸியலா கலெக்ட் பண்ணி ஹர்ஷத் பத்தின டீடெயில்ஸ் எடுத்து கொடுக்கணும்" என்றான்.

 

"சார்.. அந்த ஹர்ஷத்தால இப்போ உங்க வாழ்க்கையில் ஏதும் பிரச்சனையா? அன்னைக்கு மகதிஸ்ரீ மேடம் வந்து இருந்தார்களே?" என்றதும் சிரித்துக் கொண்டான் ருத்ரன்.

 

எஸ்பியின் இந்த புரிதல் மட்டும் இல்லை மகதியை யார் என்றும் சரியாக கணித்து அவளின் பேரோடு சேர்த்து கூறியதை கேட்டு!!

 

"எக்ஸாக்ட்லி எஸ்பி!! ஹர்ஷத் தான் மகதிக்கு அவங்க அப்பா பார்த்திருக்கிற அலையன்ஸ்!! இப்போ எப்படி சிக்கி இருக்கு பார்த்தீங்களா என் லைஃப்" என்று சிரித்தான் ருத்ரன்.

 

ஆனால் எஸ்பிக்கு புரிந்தது இது சிரிப்பதற்கான நேரம் இல்லை என்று!!

 

இவ்வளவு பெரிய விஷயத்தை தன்னிடம் கூறுகிறான் என்றால் கண்டிப்பாக சிக்கலின் பிடி ரொம்பவும் இறுகி அவனை நெருங்கி விட்டது என்று அறிந்து கொண்ட எஸ்பி, "சார் இதை அஸ் சூனஸ் பாசிபிள் முடிச்சு கொடுக்கிறேன்!!" என்றான்.

 

"இல்லை எஸ்பி…" என்று ருத்ரன் தொடங்கும் போது…

 

"நாம பார்க்கிற கேசவிட இப்ப இந்த கேஸ் தான் ரொம்ப முக்கியம்!! உங்க லைப் சம்பந்தப்பட்டது. மூன்று வருடமாக இதை நீங்க இவ்வளவு இழுத்து இருக்க தேவையில்லை. அப்போதே கண்டுபிடித்து அவனை ஒரு வழி பண்ணி இருக்கலாம். விடுங்க... நான் பாத்துக்குறேன் அவனோட ஏ டு இசட் டீடைல்ஸ் உங்களுக்கு வந்து சேரும் சார்!!" என்றான்.

 

"தேங்க்ஸ் எஸ்பி.. இனி பர்சனலா பேசும்போது ருத்ரனே கூப்பிடுங்க!! யூ ஆர் சோ க்ளோஸ் டு மை ஹார்ட்!!" என்று உணர்ந்து கூறினான் ருத்ரன்.

 

"அச்சோ… சத்தமா சொல்லிடாதீங்க..

 என் வொய்ஃப் ரதி கேட்டா.. அவ்வளோ தான்!! பை ருத்ரன்!!" என்று சிரித்தபடி போனை வைத்தவன், அந்த நொடியே ஹர்ஷத் பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தான்.

 

எஸ்பிஐ நினைத்து ருத்ரனுக்கும் பெரும் ஆச்சரியம். அவ்வளவு பெரிய தொழிலதிபனின் மகன் எப்படி விரும்பி காவல்துறை ஆணையராக இருக்கிறான் என்பது!!

 

பெற்றோரின் நிழலில் இல்லாமல் தனித்து சுயம்புவாய் வளர்ந்து நட்சத்திரமாய் ஜொலிப்பது என்பது எல்லோருக்கும் கை வந்தது அல்ல!! அதில் சூரிய பிரகாஷ் ஒரு நட்சத்திரம் என்றால் ருத்ர பிரதாப்பும் ஒரு நட்சத்திரமே!!

 

ஹர்ஷத் பத்தி இவனும் தனக்கு தெரிந்த பழைய கல்லூரி நண்பர்களிடம் கேட்கலாம் என்று அவர்களின் விவரங்களை வெகு நாளைக்கு பிறகு எஃப் பியில் தேடிக் கொண்டிருந்தான்.

 

காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை என்பதை வயிறு சத்தமிட்டு காட்ட மெல்ல சமையலறை நோக்கி சென்றவன் முன் திடீரென குதித்து ப்பே என்றாள் மகதி!!

 

அவனோ அதிராமல் அசராமல் அவளை ஒரு பார்வை பார்க்க "இதற்குத்தான் இப்படி பாடி பில்டர் வச்சிருக்கரவனுங்கள லவ் பண்ண கூடாதுனு சொல்றது… செல்லமா பயமுறுத்துன பயப்படுறாங்க இல்ல.. அட்லீஸ்ட் பயப்படுற மாதிரியாவது நடிக்கிறீங்களா? ம்ஹூம்!!" என்று அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அருகில் இருந்த சோபாவில் அமர…

 

அவளின் சிறுப்பிள்ளைதனத்தை ரசித்தவன் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்தவளின் அழகில் ஆதினியை கண்டான்.

 

"இப்ப என்ன? நீ பயமுறுத்தணும்? நான் பயப்படணும்? அவ்வளவு தானே? சரி வா... இன்னொரு தடவை செய் நான் பயப்படுறேன்!!" என்றவனின் இதழ்களில் கள்ளப் புன்னகை நெளிந்தது மெல்லிய கீற்றாய்!!

 

அவனின் கள்ளத்தனம் புரியாமல், வெகுளியான சந்தோஷத்தோடு "நீங்க இப்படி திரும்பி நின்னுக்கோங்க.. சரியா?" என்று அவன் முதுகு பின் நின்றவள், "ப்பே….!!" என்று அவன் முன்னால் குதித்து எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்க்க.. அவனோ அவளது கன்னங்களை இரு கைகளால் தாங்கி முத்தமிட்டு கொண்டிருந்தான் வெகு நிதானமாக!! 

 

"இனி இது போல நீ செய்தாய் என்றால்... சுற்று முற்றும் யாரும் இருக்காங்களானு நான் பார்க்க மாட்டேன். நானும் இப்படி செய்திடுவேன்!!" என்று குவிந்திருந்த அவளது இதழ்களை சுண்டி விட்டுப்படி அவன் சமையலறை நோக்கி சென்றான்.

 

அவன் விட்ட இடத்திலே மகதி நகராமல் விறைத்து நின்றிருந்தாள். ருத்ரன் வருவதை பார்த்த மகதி, தண்ணீரை எடுத்து மட மடவென குடிக்க, அவன் அவள் எதிரே வந்து நின்றான். அவன் கண்களை பார்க்காமல் தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள். சற்றும் முன் லேசாக தீண்டிய லிப்ஸ்டிக் போடாத அவளின் ஈர இதழ் அவனை பாடாய் படுத்த, பாட்டிலை வாங்காமல் ருத்ரனின் கை மகதியின் இடையை அழுத்தி பிடித்தது.

 

டைனிங் டேபிளில் சாய்ந்து இருந்த மகதியின் பின் கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து… உமிழ் நீரில் நனைத்த அவளின் இதழ்களை ருத்ரன் நெருங்க… ஜிவ் என்று சிலிர்க்க ஆரம்பித்தது மகதியின் உடல்!! அவளின் புடவை மறைக்கா தேகங்கள் எல்லாம் வியர்வையில் நனைந்து உடம்போடு ஒட்டிக் கொள்ள.. நெஞ்சு துடிப்பு லப் டப்… லப்டப்… என்று எகிறுவதை உணர்ந்தாள்.

 

அவளின் மென்மைகளுக்கும்.. ருத்ரனுக்கும் வெறும் இரண்டு இஞ்சு இடைவெளி.. அவள் பின்னோக்கி நகர நகர.. “ஏய்.. என்னாச்சு.. பிடிக்கலையா?” என்றவன், அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட…

 

“ஒன்னும் இல்ல.. அது.. ருத்து… ” என்றவள், குதிரைவால் கூந்தல் ஆட.. தலையை ஆட்டி… கீழ் உதட்டை கடித்தாள்.

 

மெல்லிய ஒளியில் அவள் பொன் மேனி தகிக்க... ருத்ரன் அவளின் மேல் உதட்டுக்கு மேல்.. அவளின் மூக்கு துவாரத்துக்கு அருகே… அழுத்தி முத்தமிட்டான். அவளின் துரு துறுப்பான கருவிழிகள் அகண்டு விரிய… கடித்து இருந்த கீழ் உதட்டை மெதுவாக வெளியே விட்டாள். அவளின் சூடான மூச்சு காற்று ருத்ரனின் முகம் முழுதும் பரவியது.

 

விரிந்த அவளின் உதட்டை கவ்வியவன், சப்பி சுவைக்க சுவைக்க சுவைக்க.. மகதியின் உடல் நெருப்பாய் கொதிக்க... 

என்ன நடக்கிறது என்று மகதி உணர்வதற்குள், ருத்ரன் மகதியின் ரோஜா நிற இதழை விழுங்கியிருந்தான். அவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் அகண்டு விரிந்தது. மகதி மூச்சற்று நிற்க, ருத்ரனின் கைகள் அவளின் மெல்லிடையை கசக்க, மகதி மூச்சு விட முடியாமல் வாயை திறக்க, அவளின் இதழோடு இதழ் சேர்த்தவன் அவளின் மேல் உதட்டை கவ்வி சுவைக்க, மகதி கையில் இருந்த பாட்டில் தரையில் விழுந்து சத்தத்தோடு உருண்டு ஓட, அவளின் கை ருத்ரனின் மார்பில் பாய்ந்தது. முழு பலத்தில் அவனை தள்ளிவிட்டு திரும்பி நின்றுக் கொண்டாள் மூச்சு வாங்கியப்படி!!

 

அவ்வளவுதான் மகதிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது.. அவனின் இதழ் நெருக்கத்தில் அது கொடுத்த ஸ்பரிசத்தில்...

 

 

மொபைல் சவுண்டில் தான் அவள் நிகழ் உலகத்துக்கு வர, மகாதேவன் தான் மகதிக்கு அழைத்திருந்தார். இப்பொழுது போனை அட்டென்ட் செய்தால் தந்தையிடம் பொய் உரைக்க வேண்டுமே என்று நினைத்தவள், யோசனையாக உதட்டை கடித்தவாறு மொபைலை பார்த்துக் கொண்டிருக்க.. அவள் பின்னால் இருந்து போனை எட்டிப் பார்த்த ருத்ரன், இடை வழியே கையை விட்டு ஃபோனை வாங்கி அமர்த்தி வைத்தான்.

 

“அது.. ருத்து.. நான் இங்க வரேனு அப்பா கிட்ட சொல்ல…." என்று மகதி இழுக்க...

 

“ஏன் சொல்லல?" என்றான் அவள் தோள் வளைவில் முகம் வைத்து..

 

“அது.. அவரு முகத்த பார்க்க கூச்சமா.. பயமா.. இருக்கு.." என்று பரிதவிப்போடு அவனைப் பார்த்தாள்.

 

“எனக்கு மட்டும் என்னவாம்? நான் மட்டும் ஒழுங்கா? நானும் காலைல இந்த மாதிரி மாமா முகத்தை பார்க்க முடியாமல் கொஞ்சம் சங்கடம் தான் பட்டேன்" என்றான் சிரிப்போடு.. "விடு விடு இதெல்லாம் காதல் அரசியலில் சகஜமப்பா!!" என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

 

"பசிக்குதுங்க..!!" என்றாள் சிணுங்கியப்படி..

 

“சாப்பிடலையா நீ? ஸாரி… ஸாரி… 

நான் கேட்கலை பாரு… வா சாப்பிடலாம்!!" என்று சமையலறையை நோட்டமிட்டான்.

 

"ஆமா… ஏன் சாப்பிடல நீ? அப்படி என்ன முக்கியமான வேலைக்கு சாப்பிடுவதை விட?" என்று காலை உணவு சொர்ணம்மா என்ன செய்து வைத்திருக்கிறார் என்று பார்த்தபடி அவளிடம் வம்பு வளர்த்தான்.

 

“உங்களை கொல்ல போறேன் பாருங்க… நைட்டே அப்படி பேசி என்னை பார்க்கும்னு.. ஃபீல் பண்ணனும் சொல்லி அவ்வளோ பிட்டு போட்டு… காலையில் அந்த பீலிங்க்ஸ்ல ஆபீஸ் போகலன்னு வேற சொல்லி மெசேஜ் போட்டீங்கன்னு அரக்கபறக்க சாப்பிடாம ஓடி வந்தா... இதுவும் கேட்பீங்க? இன்னமும் கேப்பீங்க?" என்றாள் இடுப்பில் இரு கைகளையும் வைத்து முறைத்தப்படி..

 

பத்து நிமிடத்தில் ருத்ரன் சொர்ணமா செய்திருந்த இடியாப்பம் மற்றும் பால் குருமாவை கொண்டு வந்து டைனிங் டேபிள் வைத்து அவளை சாப்பிட சொன்னான். அவளும் முறைப்பைக் கைவிட்டு இடியாப்பத்திற்கு ஆதரவு கொடுத்தாள். ருத்ரன் அருகிலேயே அமர்ந்திருந்தான் பார்த்தப்படியே...

 

அதிலும் அவனின் அந்தப் பார்வை விடாமல் அவளை துரத்த.. எங்கனம் சாப்பிடுவாள் பெண்?

 

“ம்ப்ச்.. இப்படி பேசாம அமைதியாக இருந்தா எப்படி? இல்ல நான் கிளம்பிருவேன்…” என்று மகதி பாதியில் எழும்ப, அவளின் கையை அழுத்தி பிடித்தான். அவன் பிடித்த அடுத்த நொடி, “ஜில்” என்று இருந்த அவள் உடல், “ஜிவ்” என்று சூடு ஏற ஆரம்பித்தது. அவள் மெதுவாக மீண்டும் அமர, அவன் கையை விட்டான். “இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சிட்டு இருக்க மாட்டானா?” என்று அவள் உள் மனம் ஏங்கியது.

 

"நீங்களும் சாப்பிடுங்க..!!" என்று அவன் புறமும் தட்டை வைத்து இடியாப்பத்தை பரிமாறினாள்.

 

இருவராலும் சாப்பிட முடியவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு எழுந்தார்கள். கை கழுவ அவள் சின்க் முன்னால் நிற்க.. அவளுக்கு பின்னால் உரசியப்படி ருத்ரன்!!

 

அருகே நெருங்கிய ருத்ரனின் அந்த ஸ்பர்சமில்லா ஸ்பரிசம் பெண்ணவளின் பருவ உணர்வுகளின் இதழ்களை விரிக்க செய்தது.. ஒரு உரிமையான ஆணின் ஸ்பரிசம் பெண்ணிற்கு என்னன்ன உணர்ச்சிகளை தூண்டுமோ அதையே தான் மகதிக்கும் ருத்ரனின் அந்த ஸ்பரிசம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சூழலில் விட்டு வெளியே வர இயலாமல்.. விரும்பாமல் அமைதியாகவே அப்படியே நின்றிருந்தாள் மகதி!!

 

மெதுவாக அவள் இடையின் இரு‌பக்கமும் கைகளை விட்டு தன் கைகளை கழுவியவனின்

ஒரு கை... அவளை பின்னாலிருந்து இடையை வளைத்து அணைத்திருக்க.. இன்னொரு கை அவளின் வயிற்றைத் தடவி அணைத்தது. அதில் பெண்ணவள் கிறங்க.. மெல்ல அவன் கை அவளின் ஆலிலை வயிற்றை தடவியது. அவளுக்கு உடல் உஷ்ணம் கிடுகிடுவென உயர.. உடல் சொக்கியது. மூச்சு படபடப்பானது. மெல்லிடையாளை இடுப்போடு அணைத்தப்படி தூக்கி சமையலறை திண்டில் அமர வைத்தான். இருவரின் பார்வைகளும் ஒன்றை ஒன்று கவ்வி தின்றது. காதலில் இத்தனை இன்பங்களா அதிசயிக்க இருவரும் அச்சொல்லவெணா உணர்வுகளின் பிடியில்!!

 

பின்னால் தோட்டத்தில் இருந்து காற்றின் ஜாலத்தால் பெண்ணவளின் முந்தானை விலகி அவளின் இளமையின் செழுமையை விருந்தாக்க... 

 

செஞ்சாந்து நிற புடவையின் இடையில் எலுமிச்சை நிற மெல்லிடை எடுப்பாக நிறமாக பளிச்சென்று தெரிந்தது. மடிப்பில்லாத வயிற்றில் குட்டியான கவர்ச்சியான வைரக்கல் அழகு காட்டியது. அந்த குட்டி சுழியைச் சுற்றிலும் மெலிதான பூனை மயிர்கள் மினுமினுத்தது.

 

ருத்ரனின் ஆண்மை அதில் மயங்க... அவள் இடையை பிடித்தபடி சட்டென்று அவள் வயிற்றில் முகத்தை புதைத்தான். அவள் சிலிர்த்து சிணுங்க... அவள் வயிறோ நடுங்கியது!! முத்தத்தை புதைத்தவன் அதில் மூக்கை தேய்த்தான். குட்டியான அவளின் அழகு நாபி குழியை அழுத்தி முத்தமிட்டான். நாவினை தூரிகையாக கொண்டு காரிகையவளின ஆலிலை வயிற்றில் ஓவியம் தீட்டினான், 

அதில் மின்னிய வைரக்கல்லை நிரடகனான். பின் கவ்வி சப்பி சுவைத்தான்.

 

கூச்சத்தில் நெளிந்தாள் மகதி. 

"ருத்து… ப்ளீஸ்.. ப்ளீஸ்!!" என்று வார்த்தைகள் இன்றி வெறும் காற்று மட்டுமே வந்தது அவள் வாயில் இருந்து..

 

"ப்ளீஸ் தான் பண்ணிட்டு இருக்கேன் மகி!!" என்றான் கிறக்கமாக!!

 

கண்ணனவின் தாள முடியா இதழ் மீட்டலில் தாளம் தப்ப.. ஸ்ருதி விலக..

ராகம் இசைந்தாள் கோதை!!

 

தன் கைகளால் அவன் முகத்தை பிடித்து தூக்கினாள். அவன் முகம் தூக்கி அவள் முகத்தை காதலாகப் பார்த்தான். அவளின் முகத்திலும் அத்தனை காதல் கொள்ளை கொள்ளையாய் கொட்டி கிடந்தது!!

 

"அலொவ் மீ மகி!!" கிறக்கமாக கேட்டான்.

 

அதே நேரம் அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்றது மகாதேவனின் கார் அருகில் ஹர்ஷத்!!

 

அங்கிருந்த செக்யூரிட்டி இவர்களை கேள்வியாக பார்க்க..‌ "நான் மகதியின் அப்பா!! மகதி பார்க்க வந்தேன்" என்றார். சற்று முன் தான் மகதி அங்கு வந்தது செக்யூரிட்டிகளுக்கு தெரியும். அதனால் "சரி சார் உள்ள போங்க!!" என்று அனுமதி அளித்தார்கள்.

 

மகதியின் கார் கலெக்டர் வீட்டு வாசலில் நிற்பதை கண்ட ஹர்ஷத் அர்த்த பார்வை பார்த்தான் மகாதேவனை!!

 

இவர் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. கிஞ்சிற்றும் தன் மகளின் எதிர்கால வாழ்வை எண்ணாமல்.. தன் மருத்துவ பணியின் மகத்துவத்தை பாராமல்.. மாவட்ட ஆட்சியாளர் என்கிற மரியாதை இல்லாமல்... மகள் மீது கண்மூடித்தனமான பாசம் என்பதை விட, தன் கை மீறி சென்று விடுவாளோ என்ற பயத்தில் ருத்ரன் வீட்டு வாசலில் முன்னே நின்று கத்திக் கொ

ண்டிருந்தார் மகாதேவன்!!

 

காரின் உள்ளே முகத்தில் நயவஞ்சகத்தையும் உதட்டில் கோணல் சிரிப்பையும் கொண்டு அதை ரசித்து பார்த்திருந்தான் ஹர்ஷத்!!

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top