தோகை 22

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 22

 

 

சில நேரம் அவளின் முறைப்பு...

சில நேரம் செவ்விதழ்களின் சுழிப்பு...

சில நேரம் அவளின் நகையொலி...

சில நேரம் அவளின் மெல்லிய கொலுசொலி...

பலநேரங்களில் அவளது 

உடை...

இடை...

நடை...

அப்பப்பா...

அவளின் அத்தனையும் ஆயுதம்!!

 

என்னை கொல்லும் ஆயுதம்!!

பெண்ணே ஆணை வதைக்கும் ஆயுதம் தானே!!

 

மகதியை நினைத்துக் கொண்டே பால்கனியில் நின்று புகைத்துக் கொண்டிருந்தான் ருத்ரன் வெகு நாளைக்கு பிறகு… கல்லூரி நாட்களில் அவ்வப்போது புகைப்பது வழக்கம். ஆனால் நந்தினி அருகில் இருக்கும் போது தொட கூட மாட்டான்!! 

 

அதன் பின் தன்னை முழு முயற்சியாக குரூப் ஒன் எக்ஸாமுக்காக அவன் தயார் செய்த போதும் அவன் சிகரெட்டை தொட்டதில்லை. பொதுவாக எல்லோருக்கும் அழுத்தம் துக்கம் என்றால் தான் புகைப்பிடிப்பார்கள் என்றால், இவன் சந்தோஷம் ஏற்படும் நேரங்களில் மட்டுமே அதைத் தொடுவான். 

 

அதிலும் கடந்த மூன்று வருடங்கள்.. அவன் வாழ்வில் இருண்ட தருணங்கள்!!

அதன் ஒளி நிலவாக ஆதினி மட்டுமே!!

 

ஹர்ஷத்தைப் பார்த்ததும் பழைய கோபம் முகிழ்த்தாலும், எங்கே இவனது பேச்சை ஒரு கணம்.. ஒரே ஒரு கணம்.. மகதி நம்பி விட்டால் என்ற பயம் கலந்த எண்ணமுமே அவனை அலைகழிக்க, அது அத்தனையும் வீணென்று தகர்த்து விட்டு சென்றிருந்தாள் பெண்!!

அவனது பெண்!! அவனுக்கான பெண்!!

 

சிறுபிள்ளைத்தனமான அவளது நடவடிக்கைகள் பின்னே தான் எத்தனை முதிர்ச்சியான அணுகுமுறை.. அழுத்தமான காதல்.. ஆழமான நம்பிக்கை என்று இன்னும் அசந்து தான் போனான் மகதியை நினைத்து!!

 

அவளின் மென்மையான ஸ்பரிசமும்.. செவ்விதழ்களின் ஈரமும்.. இன்னும் அவனை பித்து பிடிக்க செய்தது!! கொள்ளை கொள்ளையாய் காதல் கொள்ள செய்தது!! காதல் மேவுறு தருணங்கள் அவை!!

 

கையில் இருந்த சிகரெட் கரைய துவங்கியது. உதட்டில் வைக்க மறந்தான். “எனக்கு மட்டும் தான் இப்படி ஒரு பீலிங்ஸா? இல்லை அவளுக்கும் என் மீது இப்படிப்பட்ட ஃபீலிங்க் வருமா? என்னை நினைத்துக் கொண்டிருப்பாளா?" என்று எண்ணியப்படி, மெதுவாக அறைக்குள் நுழைந்தான்.

 

கையில் போனை எடுத்தவன் நேரத்தை பார்க்க அதுவோ பதினொன்றை தாண்டி இருந்தது. "தூங்கி இருப்பாளா? அழைக்கலாமா?" என்று புதுதாய் காதல் கொண்ட டீன் ஏஜ் பையனாக படபடத்தது ருத்ரனின் இதயம்!!

 

"இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் எனக்கு வராமலே போயிருந்திருந்தால்... உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்… என் வாழ்வில் சிறு கீற்று புன்னகைக்கும், உள்ளார்ந்த காதலுக்கும் இடமே இல்லாமல் போயிருந்திருக்கும்!!" என்று தனியாக புலம்பும் வண்ணம் காதலில் மூழ்கி அவள் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். ஒரு வழியாக அவளுக்கு அழைத்து விட இரண்டு ரிங்களிலேயே எடுக்கப்பட்டது அப்பக்கம்!!

 

இத்தனை நாளும் கதை கதையாக பேசியிருக்கிறார்கள் தான். ஆனால் இன்று உணர்ந்த அந்த உரிமை இத்தனை நாட்களில் இல்லை. அமைதியாக பெண்ணை பார்த்தவாறு பால்கனியின் இருளில் வெண்ணிலவின் மெல்லிய வெளிச்சத்தில் கண்கள் முழுக்க காதலை தேக்கி அவன் நின்றிருக்க…

 

முதலில் சாதாரணமாக தான் அழைக்கிறான் என்று எடுத்தவள் அவன் கண்ணில் தெரிந்த பாவனையில்.. முகம் சிவக்க தலை திருப்பி உதட்டை கடித்தபடி நின்று இருந்தாள்.

 

"மகி…!!" என்றவனின் குரல் குழைந்து வர…

 

"ம்ம்ம்..!!" என்ற சன்ன ஒலி மட்டுமே!!

 

அவனும் மகி என்று திரும்ப அழைக்க.. இவளும் இம் என்று கூற அடுத்தது என்ன பேசவென்று இருவருக்குமே தெரியாத மோனநிலை!!

 

ருத்ரன் மகதியை பார்ப்பதும்..

பின்பு மீசை முடிகளை கடித்தவாறு முகத்தை திருப்பிக் கொள்வதும்… சிகையை கோதுவதும்..

பின் அவளது ஆழ்ந்து பார்ப்பதுமாக இருந்தான்.

 

 மகதியோ அவன் பார்க்காத நேரத்தில் அவனையே ரசித்துக்கொண்டு அவன் பார்க்கும் நேரங்களில் நாணம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டும் இருந்தாள்.

 

"உன்னை ஸ்பரிசிக்கனும் போல இருக்கு!!" என்றான் மிக மெல்லிய தாபமான குரலில் ருத்ரன்.

 

அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க..

"என்னடி செஞ்ச என்னை? கெத்து கலெக்டரா சுத்திகிட்டு இருந்தவன் இப்ப மோகம் முத்தி போய் அர்த்த ராத்திரில உன்னோட ஸ்பரிசம் வேணும்னு என்னோட ஒவ்வொரு அணுவும் துடியாய் துடிக்கிற நிலையில் கொண்டு வந்து என்னை நிறுத்தி இருக்கிற…" என்று கொஞ்சம் சத்தமாக பேசியவன், பின் மெல்லிய குரலில்.. "அலோ மீ டியர்!!" என்று ஒற்றை விரலை அவள் பக்கம் நீட்டி திரையில் தெரிந்த அவளது மெல்லிய இதழ்களை அவன் வருட..

 

தொடு திரையில் தொட்ட விரல் இங்கே உண்மையாய் தொட்டது போல சிலிர்த்து சமைந்து நின்றாள் பெண்.

 

"ம்ம்ம்.!!" என்ற ஒற்றை சொல்லே போதுமா இருந்தது அவனை பித்தம் கொள்ள செய்ய…

 

அவனின் நாணம் கொண்ட சிவந்த கன்ன கதுப்புகளே போதுமாக இருந்தது அவனை தாபம் கொள்ளச் செய்ய…

 

தழைந்த பார்வையும் குனிந்த தலையுமே போதுமாய் இருந்தது அவனை காதல் கொள்ளச் செய்ய...

 

நொடிக்கு நொடி ஆயிரம் வர்ணஜாலங்களை காட்டி அவனை ஆட்கொண்டாள் மாயவனின் ஆண்டாள்!!

 

"மகி…!!" மீண்டும் குரலில் காதலை ஏற்றி மோகத்தை குழைத்து.. தாபத்தை கலந்து.. காதலை கொட்டி... வந்து குரலில் பெண்ணவள் சட்டென்று வீடியோ காலை கட் செய்தாள்.

 

அவன் ஏற்றிவிட்ட உணர்வுகளின் தாக்கங்களில் மென்மைகள் விம்மி தணிய, அதன் அனலை தாங்க முடியாமல் குளியலறையில் புகுந்து ஷவருக்கு அடியில் நின்றாள் மகதி.

 

இதுவரை அனுபவித்திறாத புதுவித உணர்வுகள் அவளை ஆட்கொண்டு இம்சித்தது. அவன் நேரடியாக கொடுத்த முத்தங்களை விட.. மெய்யோடு மெய் தீண்டும் போது ஏற்படும் தீப்பொறியை விட.. கண்களில் அனைத்தையும் கொட்டி அவளை நோக்கிய அந்த ஒற்றைப் பார்வையும்.. மகி என்ற சரசமான அழைப்புமே பெண்ணவளை தகிக்க வைத்தது.

 

மெல்ல குளித்து வந்தவள், தன் அலையலையான கேசத்தை விரித்த விட்டபடி பால் வீதியில் உலா போகும் நிலாவுக்கு துணையாக நின்றாள் பால்கனியில்!!

 

காதல் கொண்ட இரு கிளிகள் மட்டும் ராத்தூக்கம் இல்லாமல் தவிக்கவில்லை.. இவர்களின் காதலை தெரிந்த கொண்ட மகதியின் தந்தை மகாதேவனும், அவருக்கு ஏத்திவிட்ட ஹர்ஷத்தமே தூக்கம் வராமல் அவ்விரவை பலத்த சிந்தனையோடு நெட்டி தள்ளிக் கொண்டிருந்தனர்.

 

மகதி மாலை போல வீட்டிற்கு சென்று விட அதை தெரியாத ஹர்ஷத் மீண்டும் ஒருமுறை மகதியிடம் பேசி, அவள் மனதின் குட்டையை கிளப்பி விடும் எண்ணத்தோடு தான் ஹர்ஷத் அவளை தேடி வந்தான். ஆனால் அவள் கிளம்பி சென்று விட்டால் என்றதுமே ஏமாற்றமாக உணர்ந்தான்.

 

"ஏன் என்னவாயிற்று மகதிக்கு?" என்று கனத்த அக்கறையோடு மகாதேவனிடம் செல்ல.. அவருக்குமே மகள் போனது தெரியவில்லை.

 

"வொய் அங்கிள்? நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா? என் வாழ்க்கை நடந்த விஷயங்களைத் தானே நான் பேசினேன். அதுக்கு உங்க மகள் கோச்சிக்கிட்டாங்களா? ஆனா இதெல்லாம் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டியதுதானே!!" என்றதும் மகாதேவனால் சட்டென்று பதில் உரைக்க முடியவில்லை. துர்கா வேறு எச்சரித்து அனுப்பி இருக்க.. பொத்தாம் பொதுவாக தலையை மட்டும் தான் அசைத்தார்.

 

வந்தது முதல் இவர்தான் பெண்ணை கட்டிக் கொள்வதற்கு அத்தனை ஆதரவு கொடுத்து இருக்க.. இன்று அமைதியாக இருப்பவரை பார்த்து ஹர்ஷத்துக்கும் மனதில் மணி அடித்தது.

 

"ருத்ரன் பற்றி உங்களுக்கு இன்னும் சரியா தெரியல அங்கிள்!! அவனுக்கு ஒன்று வேண்டுமென்றால் எந்த எக்ஸ்டெண்டுக்கு போயாவது அதை வாங்கிடுவான். உதாரணத்துக்கு என் மேல் காதலாய் இருந்த நந்தினியின் மனதினை மாத்தின மாதிரி.." என்றதும்… விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் மகாதேவன்.

 

ஆம் என்பது போல தலையாட்டியவன் "நந்தினியும் என் மேல காதலாய் உயிராய் இருந்தவள் தான்!!ஆனால் எங்கள் காதலுக்கு முதலில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தது ருத்ரன் தான். அவன் ஒருவன் தான்!! உங்களுக்கு தெரியுமா கேம்பஸ்லே என்ன போட்டு அடிச்சவன்.. அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணினேனு? சரியான ரவுடிதான் அப்போவே அவன். நானும் கொஞ்ச நாள் ஒதுங்கி தான் இருந்து பார்த்தேன். ஆனாலும் நந்தினியை என்னால் மறக்க முடியாமல் தான் எங்க அப்பாவோட வந்து அவங்க அப்பா அம்மா கிட்ட முறையா பெண் கேட்டு கல்யாணம் பண்ணிட்டேன். ஆனா என் கேரீயரில் அது முக்கியமான தருணத்தில் நான் கான்ஃபரன்ஸ்காக அடிக்கடி போகும்போது கொஞ்சம் கொஞ்சமா நந்தனியை மாத்திட்டான். அவனை நம்பி.. விட்டுட்டு போனேன் அங்கிள்.

 நீங்களே சொல்லுங்க.. யாராவது இப்படி ஒரு பிரண்டு கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு போவாங்களா? எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால்.. அவர்கள் இரண்டு பேரும் மேலயும் தனியாக விட்டுட்டு போவேன்? ஆனா.. நம்பிக்கை துரோகம் பண்ணிட்டான்…" என்று தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் டேபிள் மீது வேகமாக அடித்தவனை மகாதேவன் தான் பயந்து வந்து அவனுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினார்.

 

"மகதிக்கு ஆன்ட்டிக்கு புரியாது அங்கிள்.. ஆனா உங்களுக்கு என்னை நல்லா புரியும்!! எப்படி ஒரு பெண்ணோட மனசு ஒரு பெண்ணுக்கு புரியும் என்று சொல்கிறார்களோ.. அதே மாதிரி ஒரு ஆணோட ஃபீலிங்ஸ் இன்னொரு ஆணால தான் புரிஞ்சுக்க முடியும்!!

நாலு மாசம் கோர்ஸ் முடிச்சுட்டு ஆசை ஆசையா காதல் மனைவியை பார்க்க வந்தால்.. அவளோ கர்ப்பம்னு சொல்றா அங்கிள்?? கேட்ட எனக்கு எப்படி இருக்கும்?? அதுவும் சாதிக்கிறா என் குழந்தைனு… மனசே உடைஞ்சிடிச்சு!!" என்று அவன் கூறியதும் ஆறுதலாக அவன் தோளை தட்டினார் மகாதேவன்.

 

"நீங்க எங்க அப்பாவோட ஃப்ரெண்டுன்னு சொன்னாங்க அங்கிள்‌. ஆனா எவ்வளவு தூரத்துக்கு உங்க பிரண்ட்ஷிப் டீப்புனு தெரியாது!! உங்களை என் அப்பாவா நினைத்து என் அப்பா கிட்ட சொல்லாத ஒரு ரகசியம் சொல்றேன்.. லாஸ்ட் த்ரீ இயர்ஸ்ல ஃபோர் டைம்ஸ் நான் சூசைட் அட்டென்ட் பண்ணி இருக்கேன். ஆனால் என்னால்.. என்னால… முடியவில்லை அங்கிள்" என்று அப்படியே அந்த டேபிள் கவுந்து படுத்தவன் அழுக.. அதிர்ந்த மகாதேவன் "வாட்? சூசைட் அட்டெம்ப்ட் டா? ஒருத்தி உன்னை ஏமாத்திட்டு போயிட்டாங்கறதுக்காக இப்படி நீ உன்னையே தண்டத்துக்குவியா ஹர்ஷத்? அப்பாவை பத்தி எல்லாம் நினைச்சு பார்க்க மாட்டீயா? அவளோட உன் லைஃப் முடிஞ்சுதா? தப்பு ரொம்பத் தப்பு!!" என்று அன்போடு அவனைக் கடிந்தார்.

 

வெகு நேரம் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர் துர்கா வந்து அழைக்கும் வரை.. பேசிக் கொண்டிருந்தனர் என்பதை விட ஹர்ஷத் பேசி பேசி அவரை மாற்றிக் கொண்டிருந்தான் என்பதே உண்மை!!

 

துர்காவும் மகாதேவனும் வீட்டுக்கு திரும்புகையில் கூட அமைதியாக தான் இருந்தார். கணவனின் அமைதி அவருக்கு பயத்தை தர "என்னங்க ஆச்சு? ரொம்ப நேரமா ஹர்ஷத் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க?" என்று கேட்டார்.

 

"ஒண்ணும் இல்லை.. ஜஸ்ட் ஜென்ரல் டாக்கிங் தான்!!" என்று நிதானமாக கூறிய இந்த கணவனை கண்டவருக்கு கொஞ்சம் திக்கு என்றிருந்தது. கோபம் வந்தால் கத்தியோ இல்லை சமாதானமாகவோ போய் தான் பழக்கம் மகாதேவனுக்கு!! இவரின் இந்த ஆழ்ந்த அமைதி என்னென்ன புயலை கொண்டு வரப் போகிறதோ மகளின் வாழ்க்கையில் என்று பெற்ற அன்னையாக பரிதவித்தார்.

 

வீட்டுக்கு வந்தவர் மகதி வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் முதலில் குழம்பினாலும் பின்பு கலெக்டரை தேடி தான் சென்றிருக்கிறாள் என்ற செய்தி ஹர்ஷத் மூலம் வந்ததும் கொதித்து எழுந்து விட்டார். 

 

"இப்ப எதுக்கு இவ அங்க போய் இருக்கா? அதுவும் ஆபீஸூக்கு தேடி போய் இருக்கா? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல!! ஒரு அம்மாவா நீ எல்லாம் கண்டிக்கிறது கிடையாதா?" என்று இதனால் வரை எத்தனையோ முறை இவர் கண்டித்த போது என் பொண்ணு என் பொண்ணு என்று தாங்கிய கணவனா இது என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தார் துர்கா.

 

"பாருங்க சும்மா எதாவது பேசிக்கிட்டே இருக்காதீங்க!! நீங்க தான் சொன்னீங்க.. மகதிக்கு ஆதினி மேல அவளுக்கு ஒரு பிடிப்பு இருக்குன்னு. நீங்க ஆதினி பத்தி தப்பா பேசுறதை அவளால எப்படி தாங்க முடியும்? அதான் அதை கேடக போகிருப்பா?" என்றார் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல்…

 

"அவளுடைய தொடர்பு குழந்தையோட மட்டும் என்றால் எனக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. அதை தாண்டி அவளது தொடர்பு போகுமானால்.. இந்த மகாதேவனோட இன்னொரு முகத்தை பார்க்கிற மாதிரி இருக்கும்" என்று கர்ஜித்துவிட்டு ஹாயில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டார். ஆண் சிங்கம் என கர்ஜித்தவரை கண்ட துர்காவோ பெண் சிங்கமென ஆழ்ந்து அமைதியாக அவரைப் பார்த்தார். 

 

பின் துர்கா பெண்ணை பற்றி எவ்வளவு சமாதான வார்த்தைகளை கூறினாலும்.. எதுவுமே எடுபடவில்லை மகாதேவனிடம்.

 

"எப்படியோ போய் தொலைங்க!!" என்ற துர்காவும் வேலை முடித்த அசதியில் சென்று படுத்து விட கிட்டத்தட்ட 10 மணிக்கு மேல் தான் கார் சத்தம் கேட்டு இவர் வெளியே வந்து பார்த்தார்.

 

சட்டென்று ஓடிப்போய் மாடியில் நின்று பார்த்தார் மகாதேவன். அவர்கள் வீட்டுக்கு வெளியில் தான் கார் நின்று கொண்டிருந்தது. யார் என்று அவர் உத்துப் பார்க்க அது கலெக்டர் கார் என்று புரிந்து கொண்டவர் முகத்தில் அத்தனை கடுமை. அதுவும் சிறிது நேரத்தில் புன்னகையோடு வெளிவந்த மகதி மீண்டும் ஜன்னல் அருகே குனிந்து ஏதோ சிரிப்பதும் பேசுவதுமாய் இருப்பதை கண்டவருக்கு இன்னும் தீயில் தகித்தது அவரது மனம்!!

 

பெண்ணின் இந்த திடீர் மாற்றத்துக்கு ஆதினி மட்டுமே காரணம் இல்லையோ என்று எண்ணம் தோன்ற. குனிந்து பேசிக் கொண்டிருந்த மகள் தலை சரேலென்று உள்ளே இழுக்கப்பட்டது கண்டதும் சே என்ற முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

அதன்பின் மெல்ல இறங்கியவர் ஹாலின் ஒரு மூளையில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார் மாகதேவன். இருளில் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு..

 

அவர் காதில் ஹர்ஷத் பேசிய சொற்கள் மட்டுமே திரும்பத் திரும்ப எதிரொலித்து கொண்டிருந்தது. "நந்தினியாவது என்னை கல்யாணம் செய்திருந்தாள். ஆனால் மகதி வாழ வேண்டிய பெண்.. இன்னும் திருமணமாகாத பெண்.. அவளின் வாழ்வை வீணாக பாழடைத்து விடாதீர்கள் அங்கிள். அவன் கையில் சிக்கிய பெண்களின் நிலைமை எல்லாம் அதுதான்!! ஊர் ஊரா அவன் ட்ரான்ஸ்பர் எதனால் வாங்கினானு நினைக்கிறீங்க? வெறும் பணக்காரங்கள பகைச்சிக்கிட்டதனால மட்டும் அல்ல.. பல இடத்துல படுக்கையை போட்டதாலும்தான்!!" என்றவனின் வார்த்தையில் அதிர்ச்சியோடு அவர் பார்க்க.. ஆம் என்ற தலையசைத்தவன் "நான் வெளிநாட்டில் இருந்தாலும் அவனைப் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியும் அங்கிள். எனக்கு மகதியை கல்யாணம் செய்து கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.. அவள் வாழ்க்கை எனக்கு முக்கியம். பார்த்துக்கோங்க.. அவனிடமிருந்து தள்ளியே இருக்க சொல்லுங்க" என்றவனின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவர் காதுகளில் ரிங்காரம் இட்டு மனதில் பயத்தை ஏற்படுத்தியது.

 

அந்த பயம் உண்மை என்பது போல இதோ ஜோடியாக வந்து இறங்கியவர்களை கண்டு விரைவாக இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவர், இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

 

காலையில் சற்று தாமதமாகவே மகாதேவன் மருத்துவமனைக்கு கிளம்பினார். துர்காவையும் தன்னுடனே கிளம்ப சொன்னார்.

இத்தனை ஆண்டுகளில் கணவனை அறிந்திருந்த துர்காவும் 'அவசர கொடுக்கைத்தனமாக ஏதோ ஒரு விஷயத்தை முடிவெடுத்துட்டு நம்மளை அதுக்கு போர்ஸ் பண்ணப்போறார். இவரை வச்சுட்டு எப்படித்தான் காலம் தள்ள போறேனோ?' என்று மனதில் முணுமுணுத்துக் கொண்டே அமைதியாக கணவனை பார்த்தார்.

 

சாப்பாட்டில் கவனமே இல்லாமல் நொடிக்கு ஒரு முறை மாடியை பார்த்துக் கொண்டே இருந்த கணவனை பார்க்கும்போது சற்று பாவமாகவும் தான் இருந்தது. ஆனாலும் வீம்புக்கென்று செய்பவரை திருத்த முடியாமல் அமைதியாக இருந்து கொண்டார் துர்கா. அதற்காக மகளின் வாழ்க்கை இவர் கையில் எடுத்து இவர் ஆடும் ஆட்டத்தை பார்ப்பார் என்றெல்லாம் கிடையாது. விட்டுப் பிடிப்போம் என்றே இந்த அமைதி.. பெரும்பான்மையான மனைவிகளை போல!!

 

"மகதி அந்த கலெக்டரை காதலிக்கிறானு நினைக்கிறேன்" என்ற அதிர்ச்சியாக மகாதேவன் கூற.. துர்காவுக்கு அந்த அளவுக்கு இது அதிர்ச்சியான விஷயம் கிடையாது. அவர் ஓரளவு ஊகித்து தான் இருந்தார். அதனால் "அப்படியா? நல்ல விஷயம் தான்?!" என்றார்.

 

"எது? எது? நல்ல விஷயம்? எது நல்ல விஷயம்? அவனை காதலிக்கிறானு சொல்றேன்.. அது நல்ல விஷயம்னு சொல்ற?" என்று பாய்ந்தார் அவர்.

 

"ஏன் அவருக்கு என்ன குறைச்சல்? ஏற்கனவே உங்க மகள் டாக்டர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்கிறா.. கலெக்டர் ஆளும் பாக்க நல்ல ஜம்முன்னு இருக்கார். கூடவே மகதிக்கும் பிடிச்சிருக்கு!! வேற என்ன வேணும்?" என்றார் புரியாமல்!!

 

"அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு டி!!" என்று பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல மனைவியை குற்றம் சாட்டினார்.

 

"ஏன் நீங்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தது. அப்போது ஞாபகம் இல்லையா உங்களுக்கு?" என்று இவர் சற்று நக்கலாக கேட்க.. அதற்கு பதில் அளிக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டவர், "நான் பார்த்த மாப்பிள்ளை இரண்டாவதாக இருந்தாலும் இவள்தான் முதல் மனைவி போல.. ஆனால் இந்த கலெக்டருக்கு ஏற்கனவே ஒரு புள்ள இருக்கு ஞாபகம் இருக்கா?" என்றார்.

 

"முதல் போல தான்!! ஆனா முதல் இல்லை!! அப்புறம் அந்தப் பிள்ளையை எப்படி வந்தது தான் எப்போ பிரச்சனையே?" என்று உணவில் கவனமாக இருந்த துர்கா பின் கணவன் முகத்தை பார்த்து "ஒரு பக்கம் மட்டும் கேட்டு எந்த ஒரு முடிவுக்கும் நாம் வர முடியாதுங்க. இவருக்கு அவருக்குனு நான் சப்போர்ட் பண்ணல... எனக்கு என்னமோ கலெக்டர் தப்பு செய்த மாதிரி தெரியல.." என்றவரை முறைத்தார் மகாதேவன்.

 

"அவன் செஞ்ச தப்புதான் மூன்று வயசுல அவன் கூடவே இருக்கேடி" என்றதும் ஆழமாக பார்த்தார் துர்கா. சில விஷயங்களில் ஆண்களை விட பெண்களின் பகுத்துணர்வு முறை வெகு நுட்பமானது. அந்த நுட்பமான உணர்வுகளை பிரித்தறிய முடியாமல் தான் சிக்கி சின்னாபின்னமாகி போகிறார்கள் ஆண்கள் பெரும் இடத்தில்…

 

"தப்பு செஞ்ச வழியில வந்த குழந்தை எவனும் தூக்கி சுமக்க மாட்டான். என் குழந்தைனு பெருமையா சொல்லி சுத்த மாட்டான். அப்புறம்.. நீங்க ஹாஸ்பிடலை உங்களுக்கு அப்புறம் பாக்கறதுக்கு மாப்பிள்ளை தேடாதீங்க.. என் பொண்ணு கூட சந்தோஷமா வாழ போற மாப்பிள்ளையை பாருங்க!! உங்களால முடியலனா நானே பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர் வேகமாக எழுந்து அறைக்குள் சென்று விட்டார்.

 

சற்று நேரம் வெளியே உட்கார்ந்து சென்ற மனைவியையே பார்த்துக் கொண்டிருந்த மகாதேவன் தடதடவென்று மாடியில் வேகமாக இறங்கி வந்த பெண்ணை கவனித்து பார்க்க.. அவளோ இங்கே ஒருத்தர் அமர்ந்து இருப்பது அறியாதவளாய் வேகமாக சென்று காரால் ஏறி வெளியே புறப்பட்டாள்.

 

இவ்வளவு நேரம் துர்கா பேசிய பேச்சோ.. அவரின் அறிவுரையோ எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்க… மகள் வெளியே செல்ல ஆரம்பித்ததும்.. மகளை வேறு வழியில் மடக்க திட்டமிட்டார்!!

 

அதன்படி கையும் களவுமாக ருத்ரன் வீட்டில் இருக்கும் போது மகளை பிடித்து விட்டார் மகாதேவன் கூடவே ஹர்ஷத்!!

 

மகளின் வாழ்க்கையை காப்பாற்ற போகும் சூப்பர் பா

தராக மகாதேவன்.. தந்தையின் பேச்சை கேட்பாளா லிட்டில் பிரின்சஸ்!! 

 

இல்லை… நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவளை தன்னவளாக்கிக் கொள்வானாக ருத்ரன்?


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top