மோகங்களில்… 17
“ராட்ஷசி.. சொல்லுவியா சொல்லுவியா?” என்று அவள் அவன் முடியை பிடித்து ஆட்ட..
முகத்தை திருப்பித் திருப்பி அவன் தப்ப முயல.. அப்போதும் அவள் ஓய்வதாக இல்லை. சாதாரணமாக இருந்திருந்தால் கண்டிப்பாக அனு இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க மாட்டாள். ஆனால் அவள் மனதின் அழுத்தமும், கர்ப்பகால ஹார்மோன்களின் சதிராடலும் அவளை பொங்கி எழு செய்திருந்தது.
கூடவே இவளோ அவனை அவ்வளவு தேடி இருக்கும் போது அவனோ அவளை சீண்டி விதமாய் பேசியது அவளுக்கு ஆத்திரத்தை மூட்டியது.
கூடவே அவனின் அந்த ரகசிய சிரிப்பும்.. சீண்டலும்.. தான் அவளை அலைக்கழித்து இவ்வளவு கோபம் ஆக்கியது.
“இவ்வளவு ஆவேசம் இந்த நேரத்தில் ஆகாதடி!” என்று அவன் கூறியும் அவள் காதில் வாங்கவில்லை
“போச்சு.. ஆரம்பிச்சிட்டா! இனி அடங்கமாட்டா..! ரொம்ப சீண்டிட்டோமோ?” என்றவன் அவளை அடக்க தீண்டலானான் அவனது இதழ்கள் கொண்டு!!
அவளது வெல்வெட் உதடுகள் அவனின் அழுத்தமான உதடுகளில் பொருந்தி அழுந்தியது. அவளோ அதை உணரவேயில்லை… அப்போதும் அவனைக் அடிப்பதிலேயே குறியாக இருந்தாள். துருவ் கையில் பிடித்திருந்த அவள் கைகளை விட்டு தாடையை பாந்தமாக பிடித்தவன், அவளது உதடுகள் இரண்டையும் தன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சத் தொடங்கினான்.
அவ்வளவுதான்.. அதற்கு மேலும் அவனால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!! அவளை பாதி உடம்பை மட்டும் தன் மார்பில் படர வைத்து, அவளது கால்களை தன் கால்களோடு பின்னி பிணைத்துக் கொண்டான்.
அவளது மெல்லிய இதழ்நீரை உறிஞ்சி சுவைத்துக் கொண்டே, அவளது முகத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் இரு கைகளால்...
அனுவும் அவன் மீது இருந்த கோபம் மறந்து கிறங்கியபடி அவனின் இதழணைப்பில் மூழ்கினாள். அவளின் சிறு அசைவு கூட அவனைப் பெருதாய் பாதிக்க.. அவளை அசைய விடாமல் பிடித்துக்கொண்டு அவளது உதட்டு அமுதம் அருந்தினான் துருவ் வல்லப்!! இருவரும் சிறிது நேரம் தங்களை மறந்து அம்முத்த யுத்தத்தில் கரைந்து கிறங்க.. மூச்சு முட்டி மெல்ல தன் உதடுகளை பிரித்தாள் அனு!!
இதழ்கள் தான் பிரிந்ததே தவிர அவர்களின் இணைவுகள் பிரியவில்லை.. இணைந்தே கிடந்தனர்!!
“இவ்வளவு தூரம் உன்னை தேடி வந்திருக்கேனே அதிலே தெரியவில்லையா பெண்ணே என் மனதை?” என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தான்!!
அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்! எவ்வகையான அன்பு? புரியவில்லை இருவருக்கும்.. புரிந்து கொள்ளவும் இப்பொழுது மனம் இல்லை!!
“தூக்கம் வருது சார்.. கால் இரண்டும் ரொம்ப வலிக்குது..” என்றவுடன் அவன் எழுந்து அவளுக்கு கால்களை அமுக்க செல்ல..
“வேணாம்.. வேணாம்.. உங்க காலை போடுங்க.. நீங்களும் டயர்டா இருப்பீங்க” என்றதும் அவள் கால்கள் மீது தன் கால்களை போட்டுக் கொண்டவன், ஒரு பக்கமாக அவளை அணைத்த வாக்கில் உறங்கினான். அவளும் மூன்று நாள் அலைக்கலைப்பு போக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்.
விடியலுக்கு முன் விழிப்பு வர விழித்து பார்த்தான் துருவ். அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தூங்கிக் கொண்டிருந்தாள் அனு!
தன் கை வளைவில் தூங்கும் பெண்ணை தான் கண்களில் கனிவோடு பார்த்தான் துருவ்.
இது எம்மாதிரியான நேசம்? என்று புரியவில்லை தான். ஆனால் இந்த உணர்வு பிடித்திருந்தது அவனுக்கு!!
இவ்வுணர்வுகள் ஏன் அப்சராவிடம் எழவில்லை? அனுவிடம் ஏன் எழுகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலில்லை அவனிடம்!
அப்சராவிடம் என்னதான் இல்லை? அழகு படிப்பு செல்வம் என்று அனைத்தும் இருந்தும் ஏனோ இருவருக்கும் ஈர்ப்பு இல்லை. இவனை மாற்ற வேண்டும் என்று அவளும் முயற்சியும் எடுக்கவில்லை! அவளோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் தோன்றவில்லை!!
அதிலும் ஒரு சுயநலம்தான் இந்த மேல் தட்டு வர்க்கத்திடம் இவர் அல்லது இவள் ஒத்து வரவில்லை என்றால் வேறு ஒருவனை பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பான எண்ணம்! ‘ஜஸ்ட் லைக் தட்’ பிடிக்கலைன்னா பிரிஞ்சு போயிடலாம்! என்று..
ஆனால் அதே ஸ்திரமான உணர்வை தன் இணையின் மீது வைக்க தவறி விட்டாள் அப்சரா. தவறு என்றால் அது இருவரிடம் தான்! அப்சராவை மட்டும் இங்கு குறை சொல்லி பயனில்லை தானே!!
ஒவ்வொரு முறையும் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்மை என்றே பேரியற்கையின் படைப்பு நிகழும். ஆனால், உலகச்சிக்கலில் அந்த ஒரு பெண் வேறொரு ஆணை திருமணம் செய்துகொள்கிறாள். அந்த ஒரு ஆணும் வேற ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். ஆனால்.. அவர்களுக்கு தெரியாத இருட்டின் பக்கங்களை அவர்களால் ஏற்க முடியாதபோது ஒருவரை விட்டு ஒருவர் விலகுகிறார்கள்..!! ஒத்து வரவில்லை என்று தோற்றத்துடன்!!
அவர்கள் சந்தித்தது அவர்களுக்கான ஆண் அல்லது பெண் என்றால் அவர் உங்களைவிட்டு விலகவேமாட்டார். விலகினாரென்றால் உங்களுக்கான இயற்கை தேர்ந்தெடுத்த இணை அவரில்லை. அதற்காக வருந்தும் தேவையும் உங்களுக்கில்லை என்பதை உணருங்கள் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.
“அன்பை.. காதலை..
பாசத்தை.. நேசத்தை..
ஒரு பேரரசனைப்போல
கொடுங்கள், பெறுங்கள்...
பிச்சைக்காரரைப் போலல்ல" என்பார் ரூமி.
நம் வாழ்வின் ஏதாவது ஒரு புள்ளியில்.. எப்போதாவதொரு நொடியில்.. நம் கண்களில் கண்டிப்பாக தென்படுவார். அப்படித்தான் துருவுக்கும் தோன்றியது.
வாழ்க்கை இனி அவர்களுக்கு என்ன வைத்து காத்திருக்கிறது என்று தெரியவில்லை. காலம் இவர்களுக்கு காட்டும் கணக்கையும் புரியவில்லை!!
ஆனால் இந்த கனம் பிடித்தது!!
அவ்வளவு பிடித்தது அவனுக்கு!!
தன் இணை..
தன் குழந்தைகள்..
தன் குடும்பம்…
தனக்கே தனக்கு!!
இவையெல்லாம் அம்மா சொல்லும் போது ‘சென்டிமென்ட் ஃபூல்ஸ்’ என்று சிரித்தான்!!
அப்பா அறிவுரை கூறும் போது ‘வேஸ்ட் ஆப் டைம்’ என்று நினைத்தான்!!
நண்பர்கள் சொல்லும் பொழுது ‘ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட்’ என்று தவிர்த்தான்!!
ஏன்.. காலமே இவனை இல்லற பந்தத்திற்குள் நுழைத்த போதும் வலுக்கட்டாயமாக ‘இட்ஸ் போரிங்’ என்று பிரிந்தான்!!
ஆனால்.. இன்று.. இப்போது.. இந்த நிமிடம்.. இவள் வேண்டும் என் குழந்தைகள் வேண்டும் என்று அவனின் மனது வேண்டியது!! ஆனால் நிதர்சனம்…???
மெல்ல அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் துருவ்! அவளோ.. “ம்ம்ம்… சார்..” என்ற
மோகன முணங்கல்களுடன் அவனது கழுத்தை அவள் கட்டிக் கொள்ள.. இச்செயல் அவனை மேலும் அவளின் மீதான போதையை ஏற்ற, துருவ் தன் முகத்தை அனுவின் கழுத்தில் அழுத்தி தேய்க்க ஆரம்பித்தான். மூன்று நாள் ஷேவ் செய்யாமல் மண்டிக் கிடந்த அவனின் மீசை முடிகள் அவளை சுகமாக இம்சித்தது!!
“ம்ம்ம்… தாடி குத்துது சார்” என்றாள் சிணுங்கலுடன்.
“ம்ம்.. குத்தட்டும்” என்றவன்
அவளின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு தன் கன்னத்தை தேய்த்தான்.
“இருங்க நானும்.. உங்களுக்கு..” என்றவள், தூக்கத்தில் கண்களை மூடியபடி அவன் கன்னத்தில் தன் மிருதுவான கன்னத்தை தேய்த்தாள். அவளது செவ்விதழ்கள் மெல்ல அவனை முத்தமிட்டன…!!
அதில் மயங்கிய மாயவனின் முரட்டு இதழ்களோ அவளது வெண் பட்டு கழுத்தில் அழுந்த கவ்வி இழுத்து சுவைத்தன. அவள் கழுத்தில் இருந்து வீசிய.. அவளுக்கே உரித்தான மணம் அவனை கிறங்க வைத்தது.
“அனு.. அனு.. சூப்பர் ஸ்மெல் நீ” என்றான் வாசம் இழுத்து..
“ம்ம்.. நேத்து குளிக்கல அது தான்” என்றாள் குறும்பாக..
“குளிக்கவே வேணாம்.. இப்படியே இரு என் பக்கத்துல.. இப்பவும்!! எப்பவும்!!” என்று அவளை அணைத்துக் கொண்டான்.
“போங்க சார்…” அவன் பேச்சு அவளுக்கும் கிறக்கத்தைக் கொடுத்து, அவனின் மீதான் ஈர்ப்பை பெருக்கியது!!
“நான் நெனச்சே பாக்கல” அவன் நெஞ்சின் கருகருத்த முடியினை தன் மெல்லிய விரல்களால் வருடியபடி மெல்லச் சொன்னாள்.
“நானும் நெனைக்கவே இல்ல.. இந்த வாயாடி மேல பைத்தியமா இருப்பேனு.. அவ கூப்பிட்டானு இந்த மழையில் வெள்ளத்துல அர்த்த ராத்திரியில சிங்கப்பூரிலிருந்து வருவேன்னு.. இப்படி அவள கட்டிக்கிட்டு ஒரே மெத்தையில படுப்பேன்னு..” என்றான்.
“ம்ம்ம்.. ஆஹான்..” பேசிக் கொண்டே அவனின் வெற்று மார்பைத் தடவினாள். ஆசையை அடக்க முடியாமல் அவன் நெஞ்சில் முகத்தை தேய்த்தாள். சில இடங்களில் தன் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தமிட்டாள். அவன் விரல்கள் அவளின் கலைந்த கூந்தலுக்குள் நுழைந்து கோதி விளையாடின!!
“விடிய போகுது.. உங்க ரூமுக்கு போங்க.. உங்க அப்பா அம்மா யாராவது பாத்தா தப்பா ஆயிடும்” என்றாள்.
“அதெல்லாம் அவங்க எழ நேரம் ஆகும். இன்னும் விடியவே இல்ல நீ தூங்கு” என்றதும் அவளும் இருந்த அசதியில் தூங்க.. இவனும் விழித்துக் கொண்டே இருந்தவன், எப்போது தூங்கினான் என்றே தெரியாது.
வெளியில் பலமாக கதவு தட்டும் சத்தம் கேட்டு மெல்ல விழித்து பார்த்தவன், தன்னருகே சுருண்டு படுத்திருந்து அனுவுக்கு நன்றாக போர்த்தி விட்டு வெளியில் வந்தான். ஏசியை மெலிதாக ஓடிக் கொண்டிருந்தது. குளிர் ஏகமாக இருந்தது.
“அனுமா.. அனுமா..” என்று மெல்லிய குரல் கதவுக்கு அந்த பக்கம் கேட்டது.
வேறு யாரு சசிகலா தான். இன்னும் அனு எழுந்து வரவில்லையே என்று கதவை தட்டிக் கொண்டிருந்தார். “மணி பத்தாவது என்ன இந்த பொண்ணு இன்னும் தூங்குது? வயித்துப் புள்ளத்தாச்சு பசிக்காது” என்று வருத்தத்தோடு.
துருவும் ஏதோ உணர்வில் கதவை திறந்து விட்டான். ஆனால் அங்கு வெளியே நின்றது சசிகலா!!
அன்னையை இவன் எதிர்பார்க்கவில்லை. கதவை திறந்தவன் கையில் கதவின் பிடியை பிடித்துக்கொண்டே மூட கூட தோன்றாமல் அதிர்வில் நின்றான்.
, கலைந்த தலை.. சரியாக தூங்காமல் சிவந்த கண்கள்.. வெற்று உடம்போடு ட்ராக் பேண்ட் சகிதம் தன்னை அனுவின் அறையில் அதுவும் இந்த கோலத்தில் பார்த்தால்… அவ்வளவுதான்..
என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திருத்தான்!
நல்ல வேளை கடவுள் என்னும் அவன் பக்கம்தான் போல… இவன் கதவு திறந்த அதே நேரம் வீட்டுக்குள் நுழைந்து இருந்தான் சுகன், பாஸ் என்ற குரலோடு..
அவன் உள்ளே நுழைவதையும் அவன் குரலையும் கேட்ட சசிகலா “என்ன சுகன் வந்திருக்கான்? அப்போ துருவ்? அவனும் வந்தாட்டானா என்ற? எனக்கு ஒரு ஃபோனும் பண்ணவே இல்லையே..!!”என்றப்படியே துருவ் கதவு திறந்ததை பார்க்காமல் சுகனை நோக்கி தன் மொத்த கவனத்தையும் திருப்பினார் சசிகலா.
“அப்பாடி.. தப்பிச்சேன்…” என்று இவன் அவசரமாக மெதுவாக கதவை சாத்திவிட்டு கதவுக்கு பின்னாலே நின்று இருந்தான் மூச்சு வாங்க…
எம்மாடி எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பிருக்கிறேன் என்று நினைத்து!!
மாற்றான் மனைவி என்று அறிமுகப்படுத்தப்பட்ட பெண்ணின் அறையில் இருந்து, இவன் இப்படி அறையும் குறையுமாக வெளியே வந்தால்.. பார்த்த யாராகிலும் ஏன் அன்னையாய் இருந்தால் கூட இஸ்க்கு இஸ்காக தோன்றுமா இல்லையா??
“என்று நான் செய்த புண்ணியமோ.. இன்று என்னை காப்பதிட்டிச்சு” என்று இவன் ஆழ்ந்த மூச்சு விட்டுக் கொண்டிருக்க.. அந்த மூச்சுக்கு ஆயுள் கம்மி தான் என்பது போலவே வெளியே அவர்களின் உரையாடல் இவன் காதில் விழுந்தது.
“என்ன சுகன்? எப்ப வந்திங்க? எங்க துருவ்? என்கிட்ட யாரும் ஒன்னும் சொல்லவே இல்லையே? இவ்வளவு மழையில உங்களை யார் இப்போ கிளம்பி வர சொன்னா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சசிகலா செல்ல.. அப்போதுதான் சுகனுக்கு புரிந்தது “இன்னும் பாஸ்.. வந்ததை வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை” என்று.
“அது ஒன்னும் இல்ல மேடம் இன்னைக்கு ஒரு இம்பார்ட்டண்ட் அக்ரிமெண்ட்ல கையெழுத்து போட்டு ஆக வேண்டிய நிலைமை! அதனால கிளம்பி வந்துட்டோம்”
“அப்படி என்ன பொல்லாத பிசினஸ்சோ? இந்த மழையில் எங்கேயாவது மாட்டி இருந்தா உங்களுக்கு தெரியும்?” என்று இருவரும் பத்திரத்தை பார்க்காமல் பிசினஸ் என்று அலைகிறார்களே என்று அத்தனை கவலை அன்னையாய் அவருக்கு.
“சரி சரி.. துருவ் எங்கே?” என்றார் அவர்.
சிறிது நாட்களாக துருவ் கீழேயே அனுவின் அறையில் உறங்குவது சுகனுக்கு தெரியும். வேறொரு கேர் டேக்கர் கண்டுபிடிக்கும் வரை இப்படிதான் என்று சொல்லியிருந்தான் துருவ்.
‘முதலில் ஒரு பெண்ணின் அறையில் பாஸா?’ என்று யோசித்த சுகனுக்கும் துருவ் சொல்வது சரியாக இருந்தது!!
அதிலும் இரண்டு நாட்களாக அவனின் தவிப்பை பார்த்துவிட்டு இதுதான் சரி என்று இப்போது தோன்றியது!!
“மேடம் ரூம்ல இருப்பாங்க சார்” என்றான் மனதை மறைக்காமல்.. துருவை மாட்டி விட்டதை அறியாமல்..!!
“எது மேடம் ரும்லையா?”
“ம்ம்ம்?”
“எந்த மேடம் ரூம்ல? அப்சரா வந்துட்டாளா?” என்று அவர் கேட்க..
அப்போதுதான் நிதர்சனம் நெற்றியில் அறைந்தது போல திடுக்கிட்டு பார்த்தான் சுகன். ஐயையோ உளறிட்டோமே என்று!!
இவர்களின் உரையாடல்களை அனுவின் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த துருவோ “போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு! இப்படி சொதப்பிட்டியேடா சுகன்” என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.
அதற்குள் சுதாரித்திருந்த சுகன் “மேடமா? நான் எப்போ அவங்க வந்தாங்கனு சொன்னேன்?”
“நீதான மேடம் ரூம்ல இருப்பாங்க சார்ன்னு சொன்ன” என்றார் சசிகலா புரியாமல்.
“அது அப்படி இல்லை.. மேடம், ரூம்ல இருப்பாங்க சார்னு சொன்னேன்” என்றான்.
“அதுக்கு அப்படியா அர்த்தம்’ என்று அவர் யோசிக்க…
“அப்படியே தான்! அர்த்தம் மேடம்!” என்று சாதித்தான் சுகன்.
“சரி.. உங்க பாஸீக்கு ஒரு ஃபோனை போடு!” என்று சசிகலா அடுத்த குண்டை போட..
எப்படியும் பாஸ் அவர் அறையில் தானே தூங்குவார் என்ற நம்பிக்கையில் சுகனும் ஃபோனை போட்டு விட்டான்.
ஆனால் ஃபோனோ அனுவின் அறையில் இருந்து ஒலித்தது!!
அச்சச்சோ என்று ஃபோனை எடுக்க துருவ் விரைய..
“என்ன ஃபோன் சத்தம் இங்க பக்கத்துல எங்கிருந்தோ கேட்குது?” என்று கேட்டார் சசிகலா.
துருவ் விரைந்து ஃபோனை எடுக்கும் முன் தூக்க கலக்கத்திலிருந்த அனுவோ.. ஃபோனை தூக்கத்திலேயே எடுத்திருந்தாள்.
மாட்டின டா துரு பையா🤣🤣🤣🤣
அது எப்படி தான், நம்ம ஹீரோ ஓட அம்மா எல்லாம் இப்படி லூசா இருக்காங்களோ 🤭🤭🤭🤭🤭
வர வர, சுகனை ரொம்ப பிடிக்குதே.....
நீங்க ஏன் நம்ம சுகனுக்கு ஒரு தர கூடாது😁😁😁😁😁
@gowri ஹீரோ இல்ல ஹீரோயின் அம்மா அப்படியிருந்தா தான் orae entertainment ஆ இருக்கும் டா 😁😁😁😜😜
சுகனுக்கு பேர் உண்டு டா