தோகை 20

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 20

 

"டேய்… ப்ரதாப்… டைம் ஆச்சுடா… இன்னைக்கு வைவா வேற இருக்குடா.. சீக்கிரம் வந்து தொலைடா!!"என்று புலம்பிய நந்தினி, தீனதயாளன் ரூபிணி தம்பதியரின் ஒரே செல்ல மகள்!!

தந்தையும் தாயும் வருடத்தில் பாதி நாட்கள் சிங்கப்பூரில் உள்ள தொழிலை பார்க்க சென்று விடுவதால், இங்கே பாட்டியோடு ஒரு அப்பார்ட்மெண்டில் தான் நந்தினி ஜாகை!! எதிர் அபார்ட்மெண்டில் இருக்கும் ருத்ர ப்ரதாப்பின் க்ரைம் பார்ட்னர்.. வில்லி.. தோழி.. சண்டைக்காரி.. ஃபினான்சியர் எல்லாம் அவள் தான்!! அவள் மட்டுமே தான்!!

ருத்ர ப்ரதாப்பின் தந்தை ராகவன் ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர், அவனது அம்மா ரத்னாவும் அங்கேயே செவிலியராக பணிபுரிந்தவர். இருவரும் மன ஒப்பி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடமையையும் காதலையும் இரு கண்களாகக் கொண்டவர்கள். 

ருத்ர ப்ரதாப் மூன்று வயதில் இருக்கும்போது எல்லை பாதுகாப்பில் ஏற்பட்டு சண்டையில், அதற்கு தலைமை பொறுப்பேற்ற அவனின் தந்தை உயிர் நீத்தார் நாட்டுக்காக!! ருத்ரனின் அம்மா ரத்னா, அச்செவிலியர் பணியை விடாமல் கணவனின் நினைப்பில் மகனை வளர்த்து வந்தார். கூடவே நாட்டுக்கான‌ பணியை எவ்விதத்திலும் விட அவருக்கு மனதில்லை!! இந்த நாட்டுப்பற்று தானே இருவரையும் இணைத்தது என்று தனிமையில் கண்ணீரில் கரைவார் கணவனை நினைத்து..

ஆனால் விதி மீண்டும் ருத்ரனின் வாழ்வில் விளையாடியது. தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிபட்ட ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய சென்ற மருத்துவக் குழு ஊர்தியும் குண்டு எறிந்து தகர்க்கப்பட்டது. பலர் அதில் உயிர் துறக்க.. அதில் ருத்ரன் தாயாரும் ஒருவர். விஷயம் கேள்விப்பட்டு விரைந்து ஓடி வந்த அவரின் அண்ணன் ராமஜெயம் தங்கையின் மகனை தன் மகனாகவே ஸீகாரம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

ராமஜெயம் தன் நண்பர்களோடு சேர்ந்து கார்ட்ஸ் என்ற தனியார் பாதுகாப்பு மையம் ஒன்றை நடத்தி வந்தார். திருமணத்தில் பெரிதாக அவருக்கு நாட்டம் எல்லாம் இல்லை. அதனால் எவ்வித பிரச்சனையின்றி ருத்ரனை அவரால் வளர்க்க முடிந்தது.

ஆனால் அவனுக்குத்தான் சட்டென்று மாமாவிடம் ஒட்ட முடியவில்லை. சென்னைக்கு வந்த புதிதில் ஐந்து வயது பாலகனான ருத்ரன்.. அன்னையின் அன்பினையும்.. தந்தையின் அரவணைப்பையும்..

எதிர்பார்த்தான். முழு நேரமும் அவனிடம் செலவிட முடியாமல் ராமஜெயத்தின் வேலை இழுத்துக் கொண்டது. அப்போதுதான் எதிர் வீட்டில் இருக்கும் வேதம்மாள் அவருக்கு ஆதரவு கரம் கொடுக்க, பிரதாப்பும் அவர்களுக்கு பேரனான்.

முதலில் விலகி விலகி இருந்தவனை நந்தினியின் துருதுருப்பும், குறும்பும், பட்டாம்பூச்சி என ஓர் இடத்தில் இல்லாமல் துள்ளித் திரியும் அவளது வேகமும் தான் நட்பினை இறுக்கியது!!

அன்று முதல்... 

ஒரே பள்ளி ஒரே வகுப்பு!!

பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளியில் நந்தினிக்கு பாதுகாவலன் அரண் எல்லாமே ருத்ரன் தான்!!

பெண் பிள்ளையின் வளர்த்தி பீர்க்கன் வளர்த்தி என்பார்கள்... அதுபோல ஒன்பதாவது படிக்கும்போதே ருத்ரனை விட வளர்த்தியாக இருந்த நந்தினி ருத்ரனை "குள்ளா…."என்று கூப்பிட, இவனோ பாய்ந்து பாய்ந்து அடிக்க துரத்துவான். இருவரின் விளையாட்டை ரசித்துப் பார்ப்பார் நந்தினி என் பாட்டி வேதம்மா...

ஆனால் பத்தாவது பின் ருத்ரனிடம் வளர்ச்சி கூடவே செக்யூரிட்டி போர்ஸ்க்காக மாமா செய்யும் உடற்பயிற்சிகளை பார்த்து தானும் தன் உடம்பை மெருகேற்றிக் கொண்டான். பன்னிரெண்டாவது படிக்கும் போது, வகுப்பிலேயே அவன் தான் உயரமாகவும் புஜ பலத்தோடு இருந்தான்.

ராமஜெயத்திற்கு மருமகனையும் அவன் தந்தை போல அவன் அன்னையின் ஆசை கொண்டு மிலிட்டரியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்!! ஆனால் ருத்ரனுக்கு அதில் துளி கூட விருப்பமில்லை.

அதற்காக பயிற்சி செய் என்று ருத்ரனிடம் ராமஜெயம் கூற மறுத்து விட்டான். அவர் உடனே நந்தனியின் உதவியை நாட… அவள் தான் அவனிடம் பேசினாள்.

"எனக்கு மிலிட்டரியில வேலை செய்ய பிடிக்கல நந்து.. அதற்காக ராணுவத்திற்காக தியாகம் செய்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை. நாட்டுக்காக உழைப்பவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் பிள்ளைகளை பின்னால் இந்த நாடு பார்க்கிறதா என்ன? இல்லை தானே!! ஏதோ எனக்கு என் மாமா இருந்ததால் பிழைத்தேன்!! சொந்தம் பந்தம் இல்லை என்றாலோ.. அப்படி சொந்தங்கள் சரியாக இல்லாத பிள்ளைகளின் நிலை எல்லாம் என்ன? அது என்னன்னு பார்க்க வேண்டும் அல்லவா? இந்த அரசாங்கம் என்னதான் செய்கிறது அவர்களுக்கு?"என்று எப்பொழுதும் போல அரசாங்கத்தை இவன் குறை சொல்ல..

"டேய்... சும்மா சும்மா கவர்மெண்ட்ட குறை சொல்லாதே!! வேணும்னா கவர்மெண்ட்டை நீ மாத்து!! நீ அரசியல்வாதியாக வா"என்றதும், பெரிய கும்பிடு போட்டான்.

"பரவால்லடா.. இப்பவே கும்பிடலாம் போட்டு ட்ரை பண்ற போல"என்று அவள் நக்கல் அடிக்க…

"போடி அரசியல்வாதியாக எல்லாம் எனக்கு விருப்பமே இல்லை"என்று முகத்தை திருப்பிக் கொண்டவனின் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பிவள், "அரசியல்வாதிகளுக்கு அஞ்சு வருஷம் தாண்டா ஆயிசு!! ஆனா அதிகாரிகளுக்கு… ஆயுசு பூரா ஆயுசு தான். அதனால நீ படிச்சு கலெக்டர் ஆயிட்டா... உன்னால முடிந்த அளவுக்கு இது மாதிரி கஷ்டப்படுற பிள்ளைகளுக்காக ஹெல்ப் பண்ணலாம். அவர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்கலாம்!!"என்று சொல்லிக் கொண்டே சென்றவளின் வார்த்தைகள் கல்வெட்டில் செதுக்கியது போல அவன் நெஞ்சில் பதிந்தது அன்றே!!

மருமகனின் எண்ணத்தை புரிந்து கொண்ட ராமஜெயம் அவனை மாற்ற முயற்சி எடுக்க.. அவனோ தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தான். "அப்புறம் உனக்கு எதுக்குடா இவ்வளவு பிட்னஸ்? எதற்கு இதெல்லாம் பண்ற?"என்று கேட்ட மாமனை பார்த்து மாயக்கண்ணனாய் சிரித்தவன், "இது எனக்காக இல்ல மாமா!! நந்துக்காக.. அவளை யாரு பார்த்துக்கிறது? நான் இப்படி ஹல்க் மாதிரி அவ பின்னாடி நின்னா தான் எவனும் அவள் கிட்ட வம்பு பண்ண மாட்டானுங்க!!"என்று தன் தோழிக்காய் அவன் தன் உடலை பேணுவதை கண்டு பேசற்று நின்றார்.

நட்பின் இலக்கணமாய் இருப்பவர்களை கண்டு அவருக்கு மகிழ்வே!!

ஒற்றைப் பிள்ளையாய் இருப்பவர்கள் இப்படி தங்களுக்குள் நட்புணர்வை புரிந்து தங்கள் காலத்திற்குப் பின்னும் இதே நட்பாய் இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினார்.

ஆனாலும் பாவம் அவரது வேண்டுதலை அந்த ஆண்டவன் செவி சாய்க்கவில்லை!!

இப்படியாக இவர்கள் பள்ளி வாழ்க்கை முடிந்து, கல்லூரிக்கு அடி எடுத்து வைக்க.. நந்தினி அவளது விருப்பம் போல் மருத்துவத்தை தேர்ந்தெடுத்தாள். ருத்ரன் அரசியல் மேலாண்மையில் இளங்கலை முடித்தவன், அதிலேயே பல பட்டய படிப்புகளையும் படித்தான். சட்ட நுணுக்கங்களுக்காக அதிலும் பல பட்டய படிப்புகளையும் பகுதி நேரமாக படித்து தேர்ந்தான். 

அவளது பாதுகாப்புக்கு என்று தன் உடலை பராமரிப்பவன் அவள் சொன்ன வார்த்தை கேட்காமல் போவானா என்ன? குரூப் ஒன் எக்ஸாமுக்கு கல்லூரி காலத்திலிருந்து தயாராக ஆரம்பித்தான். இவன் தன் முதுகலை படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது தான் நந்தினி தன் நான்காவது வருடத்தில் இருந்தாள்.

அது மிகப்பெரிய கேம்பஸ் அதில் இல்லாத கோர்ஸ்களே இல்லை என்கின்ற போது.. பணத்தைப் பற்றி கவலைப்படாத நந்தினியின் பெற்றோர் அவளை அதில் சேர்ந்தனர். ருத்ரனை பொறுத்தவரை நந்தினி அளவுக்கு அவனுக்கு படிப்பு செலவில்லை என்றாலும் ராமஜெயமும் தன்னால் முடிந்த அளவு செய்ய, மீதி வழக்கம் போல நந்தினி தான் அவன் படிப்புக்கு செலவு செய்தாள். நந்தினி பெற்றோரோ இதை பெரிதாக கண்டு கொள்வது கிடையாது. முன்னைவிட இன்னும் தங்கள் தொழிலில் தான் அவர்களது கவனம் இருந்தது.

இப்படியான காலம் செல்ல... மதிய வேளையில் அன்று கேண்டினில் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நந்தினியை சில முதுகலை பயிலும் மாணவர்கள் கிண்டல் அடித்து கலாய்த்து பேசி கொண்டிருந்தனர். இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் தன் முன்னே இருக்கும் புக்கில் ஆழ்ந்த படி உணவை உட்கொண்டு இருந்தான் ஹர்ஷத். அவன் முதுகலை படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருந்தான். 

ஒரு கட்டத்தில் அவர்களின் சத்தம் அதிகமாக "டேய் கலாய்க்கிறது என்றால் வெளிய போய் ராக் பண்ணுங்கடா.. ஏன் டா என்னை டிஸ்டர்ப் பண்றீங்க?"என்று இவன் அங்கிருந்தே சத்தம் கொடுக்க.. சீனியரின் சத்தத்தை கண்டு அவர்கள் சென்று விட்டனர். அதில் நந்தினிக்கு அவ்வளவு கோபம்.

நேராக எழுந்து அவன் முன் சென்றவள் "ராக் பண்ண கூடாதுன்னு சொல்ல தெரியல அது என்ன வெளியில போய் ராக் பண்ணுன்னு சொல்றீங்க? நீங்களெல்லாம் ஒரு சீனியர்!!"என்று முறைத்துக் கொண்டு கேட்க.. அவனும் அவளை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கவனம் செலுத்த.. அவனை மனதிற்குள் திட்டி விட்டு சென்று விட்டாள்.

அவ்வப்போது அதே கேம்பசில் ஹர்ஷத்தும் அவளது கண்களில் படத்தான் செய்வான். அப்போதெல்லாம் அந்த கேண்டின் சம்பவம் ஞாபகம் வர, இவள் வாய்க்குள்ளேயே முணுமுணுத்து திட்டுவாள். ஒரு நாள் இதை கவனித்துவிட்ட ருத்ரன் அவளிடம் என்னவென்று கேட்க.. அவளும் அனைத்தையும் ஒப்பவித்தாள். 

மறுநாள் மதியமே ஹர்ஷத்தும் ருத்ரனும் அந்த பெரிய க்ரௌவுண்டில் கட்டிப்பிடித்து உருண்டனர்!!

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த நந்தினி ருத்ரனை பிரித்தெடுத்து "அறிவு இருக்கா டா உனக்கு? எதுக்கு இவர அடி டா? அடிக்கும்னா ராக் பண்ணுனவங்கள அடி டா!!"என்று திட்டினாள்.

"வெளில போய் கிண்டல் பண்ணனு சொன்ன இவனுக்கே இந்த அடி விழுந்துச்சுன்னா.. உன்னை கிண்டல் பண்ணவங்களை எல்லாம் சும்மாவா விட்டுருப்பேனு நீ நினைக்கிறியா? போய் நம்ம கேம்பஸ் ஹாஸ்பிடல்ல பாரு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்களை எல்லாம் அள்ளிட்டு போனாங்க.."என்று ஹர்ஷத்தை நக்கலாக பார்த்தபடி கூறிய ருத்ரன் முறைத்துக் கொண்டே சென்றான் ஹர்ஷத்!!

அதன் பின் அவ்வளவாக இவர்களின் கண்பார்வையில் ஹர்ஷத் பாடவே இல்லை. "பாரு அந்த பயபுள்ள.. அன்னைக்கு என்கிட்ட அடி வாங்குன பயத்துல ஓடிட்டான்.. கண்ணுல படவே இல்ல"என்று இவர்கள் இருக்க, அவனோ தன் படிப்பினில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தான்.

மருத்துவ கல்லூரியின் இறுதி ஆண்டு இளங்கலை முதுகலை இரண்டுக்கும் சேர்த்து ஒன்றாக சென்ட் ஆப் பார்ட்டி வைக்க.. அப்பொழுதுதான் ஹர்ஷத் அவளிடம் வந்து தன் மனதில் இருந்த காதலை தெரிவித்தான்.

"உன் பாடிகாடு எல்லாம் ஒரு ஆளா? அவன் என்ன அடிச்சதுக்கு அவன என்ன வேணாலும் பண்ணி இருக்க முடியும்!! ஆனா உனக்காக.. நீ வருத்தப்படுவேனு ஒரே காரணத்துக்காக தான் அவனை இதுவரைக்கும் விட்டு வச்சேன். அவன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா போதும் அவன் ஃப்யூச்சர் பாயில் ஆயிடும். ஆனா நீ வருத்தப்படுவேன்னு தான் நான் கொடுக்கல"என்று இவளை முன்னிறுத்தி பேச பேச நந்தினி மனதிலும் மெல்லிய சாரல். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் இவள் அமைதியாக இருந்து விட்டாள்.

நந்தினி ஹவுஸ் சர்ஜனாக இருந்தபோது ருத்ரன் முதுகலை கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்க.. இப்பொழுது இருவருக்கும் ஒரு சிறு பிரிவு. இருவரின் இடம் வெவ்வேறாக இருந்தது.

அதே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்திருந்த ஹர்ஷத்தின் பார்வை நந்தினி மேல் இன்னும் அழுத்தமாக படிய.. அவனின் காதல் மொழிகளும்.. இவளின் மௌன மொழிகளும் ஊமை நாட்களாய் கடக்க...

இன்னும் இரு மாதங்களில் ஹவுஸ் சர்ஜன் முடிவுறும் நிலை அதேசமயம் ருத்ரனும் தனது கடைசி செமஸ்டரில் இருந்தான்.

ஒரு நாள் இரவு பணி நேரத்தில் ஒரு சிக்கலான பிரசவத்தை கையாண்டு முடித்து வந்த அமர்ந்த ஹர்ஷத் முன் சுட சுட டீயை இவள் வைக்க.. நன்றியோடு பருகியவன், "இப்போவாது எனக்கு ஓகே சொல்வாய் நந்து? உன்ன எப்படி பக்கத்துல வச்சுக்கிட்டு.. அதுவும் கையெட்டும் தூரத்தில்.. என்னால முடியலடி!!"என்று தன் மனதினை திறந்து அவன் பேச பேச மொத்தமாய் விழுந்தாள் நந்தினி.

காதல் புகுந்த உள்ளம்..

கள்ளம் கற்றது!!

பிடித்தம் என்கிற நிலையிலிருந்து மிகப் பிடித்தமாகி போனது. ஹர்ஷத்தின் மீது நந்தினிக்கு அதிலும் அவனது அலட்டாத தோற்றமும்.. அன்பாக நடக்கும் விதமும்.. குறிப்பாக நோயாளிகளை கையாளும் விதத்தில் மயங்கியே போனாள்.

வழக்கம் போல மொட்டை மாடியில் அமர்ந்து இருவரும் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ருத்ரன் முதுகில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவளின் எண்ணங்களோ புத்தகத்தில் இல்லை.

விண்வெளியில் தவழ்ந்து செல்லும் நிலாவின் மீதே இருந்தது. அன்று நிலவை உவமையாக கூறி ஹர்ஷத் காரிகை அவளை காதலி மொழி கூறி கவர்ந்திருக்க.. அதை இன்று நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்!! வெட்கப்பட்டாள்!! நாணம் கொண்டாள்!!

சற்று நேரம் அமைதியாக கழிய.. "சொல்லு நந்து.. யார் அவன்?"என்று ருத்ரனின் கணீர் குரலில் இவள் திடுக்கிட்டு நிமிர.. அவளது உடல் திடுக்கிடலே அவன் கேட்டது உண்மைதான் என்று உரைத்தது.

"அது இல்லை…"என்று தடுமாற..

"என்கிட்ட பொய் சொல்லுவியா நந்துமா?"என்று அவன் கலங்கிய குரலில் கேட்க.. அவனை தோளோடு அணைத்துக் கொண்டவள், கடகடவென்று ஹர்ஷத் காதல் சொன்னதில் ஆரம்பித்தது இன்று வரை நடந்தது அனைத்தையும் கூறிவிட்டாள்.

"உனக்கு இத்தனை பிடிச்சிருக்கு என்றால் நான் எதுவும் தடுப்பேன்னு யோசிச்சியா?"என்று கேட்டதும் இல்லை என்றாள்.

"இப்போ உனக்கு லாஸ்ட் செமஸ்டர் நடந்துட்டு இருக்கு. உன்னோட மைண்ட் டைவர்ட் பண்ண வேண்டாம் தான். நான் ஏதாவது அவனை பத்தி பேச பேச.. நீ உடனே அவன பத்தி விசாரிக்கிறேனு சொல்லிட்டு படிப்ப விட்டுட்டு அதுல இறங்குவ.. அதனாலதான் இன்னும் என் காதல கூட நான் உன்கிட்ட சொல்லாமல் இருக்கேன்"என்று நண்பனுக்காக பார்த்த தோழியின் அன்பில் கட்டுண்டவன், அவளுக்கு காதலுக்கு பச்சை கொடி காட்ட அடுத்த சில தினங்களில் தன் காதலை ஹர்ஷத்திடம் தெரிவித்தாள்.

இருவரும் தங்கள் படிப்பை முடித்ததும் அடுத்து என்ன என்ற நிலையில் ஹர்ஷத் பெண் கேட்டு தன் தந்தையோடு வந்து விட்டான்.

தீனதயாளனுக்கு பெண்ணை இன்னும் மேற்கொண்டு படிக்க வைக்க ஆசை.. ஆனால் காதல் என்று சொல்கிறாள் என்ன சொல்வது என்று யோசித்தாலும், மேத்தட்டு வகுப்பில் சீக்கிரம் பெண்ணை திருமணம் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தார்கள். அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் திருமணத்தை முடித்து விட்டனர். ருத்ரன் தான் தவியாய் தவித்தான் நந்தினி மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று!!

அதுவும் திருமணம் முடிந்தவுடன் ஹர்ஷத் அவளை மேலே படிக்க வைப்பதாக கூறியிருக்க அதுவே ருத்ரனுக்கு போதுமானதாக இருந்தது.

அதே சென்னையில் வேறொரு அப்பாட்மெண்டில் கணவனுடன் புதுக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தாள் நந்தினி. பெரிதாக காதலில் விழுந்து புரளவில்லை என்றாலும் சராசரியான தம்பதிகளாய் தான் இருவரும் இருந்தனர். அவ்வப்போது இவன் அ கான்பிரன்ஸ் மீட்டிங் என்று வெளி மாநிலங்களுக்கு சென்றான். சிறிதாக சிறிதாக அவனது கேரியரில் அவன் முன்னேற வெளிநாடுகளுக்கும் சென்றுவர வாய்ப்புகள் கிடைத்தது. அப்போதெல்லாம் நந்தினிக்கு துணையாக ருத்ரன் தான் வந்து இருப்பான்.

ருத்ரன் முற்றும் முழுவதாக இப்பொழுது குரூப் ஒன் எக்ஸாமில் நுழைந்து விட.. அதற்கு தன்னை தகுதிப்படுத்தி சிறப்பு வகுப்புகள் லைப்ரரி என்று கிடையாய் கிடந்தான் அவன்.

இப்படியாக ஒரு வருடம் சென்றபின் குரூப் ஒன் எக்ஸாமை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேர்முகத் தேர்வுக்காக ருத்ரன் காத்திருந்த காலம் அது!!

"அப்பாடி எக்ஸாம் நல்லா முடிச்சுட்டேன் டி"என்று பத்து நாட்கள் வராமல் இருந்த தோழி வீட்டுக்கு வந்து அவன் கூற.. நந்தினி முகமும் வித்தியாசமாக இருந்தது. 

கண்களில் கருவளையம்.. ஆளே இளைத்தாரற போன்ற தோற்றம்.. முகம் வாடி போய் இருக்க "என்னடி இப்படி இருக்க?"என்று கேட்டவனுக்கு சிரிப்பை ஒன்றே பதிலாக அளித்தாள் வேறு ஏதும் காரணம் கூறாமல்…

"ரிசல்ட் வந்துவிட்டது என்றால் இன்டர்வியூக்கு டெல்லி போகணும் அப்புறம் டிரெய்னிங் பீரியட் அப்படி இப்படின்னு ஒரு வருஷம் ஓடிரும் டி…"என்று நண்பியை பிரிந்து இருக்க முடியாமல் அவன் குழம்பிக் கொண்டிருக்க... இவளோ யோசனையோடு அமர்ந்திருந்தாள். 

"உன் ஆள் இல்லாம நீ ரொம்ப டல்லா இருக்கே.. சரியா கூட என்கிட்ட பேச மாட்டேங்குற.. என்ன நந்து ஒரே ட்ரீம்ஸா?"என்றதும் நந்தினியின் முகத்தில் மென்னகை மட்டுமே..

இடையில் ஊரிலிருந்து வந்த ஹர்ஷத் ட்ரீட் என்று ருத்ரனையும் அழைக்க.. மூவரும் சேர்ந்து அடுத்து வந்த விடுமுறை நாளை மகிழ்வோடு கழித்தனர். இப்பொழுது நந்தினி முகம் பிரகாசமாக இருப்பதை கண்ட ருத்ரன், கணவன் ஊரில் இல்லாதல் அவளுக்கு பசலை நோய் போல என்று தனக்குள்ளே முடிவெடுத்துக் கொண்டான்.

இதற்கு இடையில் இரண்டு மூன்று முறை பிளட் டோனேட் என்றும் வேறு சில உதவிகளுக்காகவும் தான் வேலை பார்த்து மருத்துவமனைக்கு ருத்ரனை ஹர்ஷத் அழைத்து சென்றான்.

"பரவால்ல நந்து மா... உன் புருஷனுக்கு உடம்பு ஃபுல்லா மூளை தான் போல… முன்ன பார்த்தவருக்கும் இப்போ இருப்பவருக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!! எவ்வளவு பிஸியா இருக்காரு தெரியுமா? அதுவும் அந்த ஹாஸ்பிட்டல இவருக்கு எவ்வளவு மரியாதை!! க்ரேட்!!"என்று கணவனை பெருமையாக கூறும் நண்பனை பார்த்து மகிழ்ந்தாள் நந்தினி.

அடுத்த வாரம் ருத்ரன் டெல்லியில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்காக சென்று விட்டான். நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக முடிக்க அடுத்து வந்த ரிசல்ட்டில் இந்தியாவின் டாப் டென்னில் ருத்ரனும் ஒருவன்!!

தன் மகிழ்ச்சியை முதலில் தோழியோடு பகிர்ந்து கொள்ள ஆனந்தத்தில் துள்ளி குதித்தாள் நந்தினி!!

ருத்ரனின் பல நாள் கனவு வெற்றியடைந்ததை நினைத்து அவ்வளவு சந்தோஷம்!! அதுவும் அவனின் நந்துமாவின் வார்த்தை அல்லவா? இதோ ருத்ர பிரதாப் சப் கலெக்டர்!!

அதன்பின் அவனுக்கு வடநாட்டிலேயே சப் கலெக்டராக உத்தரவு வர.. அதற்கு முன் ஒரு முறை ஊருக்கு வந்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றான்.

அவன் சென்ற இரண்டாவது மாதமே தன் கர்ப்பமாக இருப்பதாக கூறி தங்கள் புதுவரவை ஹர்ஷத்திடம் கூறி மகிழ்ந்தாள் நந்தினி. கூடவே ருத்ரனுக்கும் கூற.. அவனுக்கு இன்னும் கொண்டாட்டம்தான்!!

ஆனால் இப்போது உன்னை நேராக பார்க்க வர முடியாது என்று அவன் கலங்கி குரலில் கூற..

"பரவாலடா கலெக்டரே... என் வளைகாப்புக்கு வந்துரு!!"என்றாள் அவளை தேற்றியப்படி!!

ஆனால் வளைகாப்பிற்கு அவனுக்கு அழைப்பு வரவே இல்லை. இவனுக்கோ முன்னை போல அடிக்கடி அவளோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் நந்தினியின் பாட்டி தான் எடுத்தார்கள். இப்போது அவளின் துணைக்காக அவரும் அங்கே தான் இருக்கிறார் என்பதை ருத்ரன் அறிவான்.

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடந்து விட.. "கண்டிப்பாக நந்துவை பார்த்தே ஆக வேண்டும். இது அவளுக்கு டியூ மன்த்!!"என்று விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தவன், பார்த்தது மரணத் தருவாயில் குழந்தையை ருத்ரன் கையில் கொடுத்து "என்னை மன்னித்துவிடு ப்ரதாப்!! நான் ஒரு பாவியை கட்டிக்கிட்டு... உன்.. உன்.. வாழ்க்கையை சேர்த்து அழிச்சிட்டேன்!! இந்த... இந்தக் குழந்தைக்கு அம்மா நான். ஆனா… அப்பா... அப்பா.. நீ.. அப்படின்னு அவன் சொல்றான் டா!!"என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் மூச்சு திணற.. சுத்தமாக தனது மூச்சை நிறுத்தி விட்டாள் அபாண்ட பழியிலிருந்தும்.. இவ்வுலக நரகத்திலிருந்தும்... முழுவதுமாக விடை பெற்று சென்று விட்டாள் நந்தினி!!

அப்போது மருத்துவமனைக்கு வந்த ப்ரதாப்பும் அவனது தந்தையும் ஏற்கனவே வந்திருந்த தீனதயாளன் ரூபிணி அனைவருமே இவனை தான் குற்றவாளி ஆக்கினர்.

ஒருபுறம் நந்தினியின் திடீர் மறைவு.. மறுபுறம் அவள் குழந்தைக்கு எப்படி நான் அப்பா ஆவேன்? என்ற அதிர்ச்சி.. என்று அடுத்தடுத்து அதிர்ச்சியில் நிலை கலங்கி போய் அமர்ந்திருந்தான். அவன் கலங்கும் நேரத்தில் கலங்கரை விளக்கமே அவள் தானே!! அவளே இல்லை என்ற போது எங்கனம் தாங்குவான் ருத்ரன்?

டிஎன்ஏ சர்டிபிகேட்டை அவன் கண் முன்னால் தூக்கிப் போட்ட ஹர்ஷத் "நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்களே டா? உன்னை நம்பி தானே என் வீட்டுக்குள் விட்டேன். ஆனால் என் பெட்ரூம் வரைக்கும் போய் எனக்கு துரோகம் பண்ணிட்டியே டா!!"என்று ருத்ரனின் சட்டையை பற்றி உலுக்கினான் ஹர்ஷத்.

அவன் பேச்சில் அதிர்ந்து நிலை குலைந்து போன ருத்ரனுக்கு பேச்சே வரவில்லை. ஆனாலும்.. வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

"இங்க பாரு ஹர்ஷத்… நானும் அவளும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்!! இப்படி ஒரு நினைப்பு எங்களுக்கு இருந்தால் நாங்களே கல்யாணம் பண்ணி இருந்திருப்போம். இப்படி அசிங்கமான கள்ள உறவு எல்லாம் எங்களுக்குள்ள கிடையவே கிடையாது"என்று ஆணித்தரமாக கூற...

டிஎன்ஏ சர்டிபிகேட்டை எடுத்துக்காட்டியவன் "அப்போ இதுக்கு பேர் என்ன சொல்லுடா? அவ சொன்ன கணக்குப்படி.. நான் அப்போ ஊரிலேயே இல்ல. நாலு மாசம் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா இவ டூ மன்த் ப்ரக்னெண்ட் சொல்றா... எப்படி டா? எப்படி?"என்று அவன் கேள்விக்கு பதில் ருத்ரனுக்கு தெரியவில்லை. 

அவன் அமைதியாக இருக்க.. அந்த அமைதியை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்ஷத் இருவரும் பேரிலும் சேற்றை வாரி தூற்றிவிட்டு குழந்தையை கண்ணால் கூட காணாமல் தந்தையோடு சென்றுவிட்டான். அப்போது சென்றவன் தான் அதன் பிறகு அப்படியே வெளிநாட்டுக்கு சென்று விட்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் நந்தினிக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்த தீனதயாளனும் ரூபிணியும் இவனை அற்ப புழு போல் பார்த்துவிட்டு "எங்களுக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தமில்லை!!"என்று சிங்கப்பூருக்கு விமானம் ஏறி விட்டனர்.

இவன் வட இந்திய பக்கம் சென்றவுடன் தன் செக்யூரிட்டி போர்ஸ்க்காக முன் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு ராமஜெயமும் மும்பைக்கு சென்றுவிட்டார். அதனால் இங்கே நடந்தது அவருக்குமே தெரியவில்லை. விஷயம் கேள்விப்பட்டு வந்தவர் இருவரையும் தன்னுடனே அழைத்து சென்றார்.

"எப்படி? எப்படி ருத்து?"என்று அதிர்ச்சியோடு கேட்டாள் இதுவரை அவன் சொன்னவற்றை கேட்டுக் கொண்டிருந்த மகதி.

"எனக்குமே தெரியல.. மகி!! எங்க எப்படி என்ன தப்பு நடந்தது என்று ஒன்றும் தெரியவில்லை. நானும் திரும்பவும் ஆதினிக்கும் என்க்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அதுவும் சேம் ரிசல்ட் தான் வந்தது. நந்தினியோட அப்பாவும் அம்மாவும் அந்த குழந்தையை எங்க குடும்ப வாரிசு இல்லைன்னு சொல்லி வேண்டாம் என்று சொல்லி போய்ட்டாங்க!! ஒரு மாசம் முன்னாடி தான் பாட்டி இறந்திருக்காங்க.. அதுவுமே எனக்கு தெரியாது!! மூன்று நாள் கை குழந்தையை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது நான் தவித்த போது தான் மாமா எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் ஒருத்தர் தான் எங்க ரெண்டு பேரையும் நம்பியது!!"என்று இரு கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவனின் வலியை புரிந்தவள், அவனை தன் வயி

ற்றோடு அணைத்துக்கொண்டாள், அன்னையாக.. அரவணைப்பாக.. என்றும் தான் இருப்பேன் என்பதாக!!

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top