அழகர் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நிலையிலிருந்து இறங்கிகொண்டிருந்தான் அவனையும் அறியாமல் மனிஷாவை தீண்டபோகும்போது அவன் ஒருவன் பதறியடித்து ஓடிவந்தான்
பதற்றத்தோடு ஓடி வந்தவன் அழகர்சாமி அருகே ஒரு பெண்ணை பார்த்ததும் அதிர்ந்துதான் போனான் எப்போதும் அழகருக்கு அருகில் எந்த பெண்ணும் நிற்ககூட மாட்டான் அப்படிப்பட்டவன் அருகே ஒருபெண் அதுவும் நெருக்கமாக நின்றிருக்கிறாளே என்று அதிர்ச்சியில் வாயை பிழந்துகொண்டிருந்தான்
டேய் அழகு சத்தமாக அழைத்ததும் அவளை நெருங்கபோன அழகு சுதாரித்து விலகிவிட்டான்
ஒரு பக்கம் கடுப்புதான் வந்தது நல்ல நேரத்தில் நந்தியாக வந்து கெடுத்து விட்டானே என்று
எரிச்சலாக அவனைப்பார்த்தவன் என்னடா கடுப்பாக கேட்க
பக்கத்து ஊர் பையன் நம்ம ஊரு பொண்ணு விரும்புறானாம் அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த காலல நிக்குறான் நாங்க எவ்வளவு திட்டினாலும் அவன்கேட்கல அந்த பொண்ணு அவன்தான் வேணும்னு உறுதியா இருக்கா பஞ்சாயத்து வேறு கூடிருக்கு அவனோட ஊர்காரங்களும் வந்திருக்காங்க
அப்பா மறுத்துட்டுஇருக்கார் என்னனு வந்து பாருடா
வேகமாக எழுந்தவன் தொட்டிக்குள் இருந்து வெளியே குதிக்க அவனைத்தொடர்ந்து மனிஷாவும் கீழே இறங்கமுயற்சிக்க அவள் எந்தநிலையில் இருக்கிறாள் அவனுக்கும் தெரியுமே சட்டென திரும்பி பதறிவந்தவன்மேலே ஏறப்போனவளை தடுத்து உள்ளே இருக்க சொல்லிவிட்டு கரையில் கிடந்த துண்டையெடுத்து வந்து அவள்தோளில்போட்டு விட்டு
அதற்குப்பிறகு கை கொடுத்து அவளை வெளியேகொண்டுவந்தான் இதையெல்லாம் வாயை பிளந்தவரே பார்த்துக்கொண்டிருந்தான் அழகர்சாமியின் நண்பன் அப்பு
எனக்கு முக்கியமான வேலை இருக்கு நீ உன் அண்ணன்கூட வீட்டுக்கு போறியா அவன்கேட்டதும் அவள் மறுத்துவிட்டாள்
இல்ல நானும் கூட வருவேன் அது என்ன பிராப்ளம்னு நான்பார்க்க வேண்டாமா வாங்க போகலாம்
உடலோடு ஒட்டிய ஆடைகளை பார்த்து அவளை அழைத்துக்கொண்டு போக அவனுக்கு மனம் வரவில்லை அவளை வேறு யாரும் பார்த்துவிடக்கூடாதென அவளை வீட்டுக்கு போகசொல்ல அவள் கேட்கவில்லை
வாயில்ஜொள்ளு வடிய பார்த்துக்கொண்டிருந்த அவன் நண்பனை தீயாகமுறைதான்
டேய் விஷயத்தை சொல்லியாச்சுல
நீ போ நான் வரேன் அவனைஅனுப்ப
மச்சி இந்த பொண்ணு யாரு டா ரொம்ப அழகா இருக்குடா அப்படியே மொசுமொசுனு ஐவுளிகடைபொம்மை மாதிரி இருக்கு எப்படிடா உனக்குபழக்கமாச்சு நம்ம படிக்கும்போது கூட இப்படி ஒருத்திய பாத்ததில்லையே ஆச்சரியமாக கேட்க
அழகருக்கு கடுப்புதான் வந்தது
போதாகுறையாக மனிஷாவும் கை நீட்டி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முயற்சிக்க
அழகின் நண்பனோ 32 பல்லை காட்டி இளித்தவன் தன் கையை சட்டையில் துடைத்துக்கொண்டு அவள் கையை பிடிக்கபோக நீட்டியவன் கையை அழகர் பிடித்துக்கொண்டான் பாவம் நண்பனின் முகம்வாடிபோனது
அழகு தனக்கு நண்பராக இருப்பவன் காதலிக்கக்கூடாதென கண்டிஷன் போட்டிருப்பவன் இப்போது முதல் முறையாக ஒரு பெண்ணோடு இருக்கிறான்
கிடைத்தவரை லாபம் என்று அவன் நண்பன் நினைத்து கை நீட்ட
அழகுபெண்ணின் கையைகூட பிடிக்க விடாமல் கடுப்பேற்றினான் அழகர்
அந்த பொண்ணே எனக்கு கைகொடுக்குது உனக்குஎன்ன வந்தது கடுப்பாக திட்டி விட்டு மறுபடியும் கை கொடுக்கபோக மறுபடியும் அவன் கையை இழுத்துபிடித்தான்
டேய் உன்கிட்ட என்னசொல்லிருக்கேன்
பொண்ணுங்கள தொட்டு பேசறது பிடிக்காது சொன்னேன் ல
எவ்வளவு தைரியமா எனக்கு முன்னாடி கைகொடுக்கிற கைய ஒடச்சுருவேன் போடா கோபமாக நண்பனை திட்ட
நாங்க கை கொடுக்ககூடாது ஆனா இவர் மட்டும் கட்டிபிடிக்கலாமா ஒன்னாகுளிக்கலாமா வாய்க்குள் புலம்பினான் வாய்திறந்து சொல்ல முடியவில்லை
அவனை அனுப்பி விட்டு வைதேகியை தேட அவளோ விபியோடு வெகுதூரம் நடந்துவிட்டாள்
தோட்டததை சுற்றிக்காட்டுகிறாள் என்று நினைத்து மனிஷாவை அங்குபோகசொல்ல நான்போகவே மாட்டேன் ஏதோ ப்ராப்ளம் நான் என்னன்னுபாக்கணும் உறுதியாக கூறி விட வேறுவழியில்லாமல் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்
ரோட்டில் போகும்வரும் அத்தனைபேர் பார்வையும் அழகர்மேல்தான் விழுந்தது
அழகரு வண்டியில ஒருபெண்ணா ஆச்சர்யமாக பார்த்தனர்
பைக் கூட்டத்தின் பின்னால் நின்றதால் பைக்கில் ஏற்றிக்கொண்டு வந்த மனிஷாவை அவன் அப்பா பார்க்கவில்லை
இங்கேயே இரு உள்ள வராத கூறிவிட்டு கூட்டத்துக்குள்போனவன் அப்பாவுக்கு அருகில் அமர்ந்துகொண்டான்
கூட்டத்தில் ஒரு பெருசு ஆரம்பித்தது
அதாவது நம்மூரு பொண்ண பக்கத்து ஊரு பையனும் விரும்புறான்
ரெண்டுபேரும் ரெண்டுவீட்டிலயும் பேசி முடித்து திருமணத்திற்கும் சம்மதம் சொல்லியாச்சு ஆனா வீராசாமிதான் அதெப்படி வேற ஜாதிகாரனுக்கு பெண்ணை கொடுக்கலாம்னு சண்டைபோட்டு பஞ்சாயத்தை கூட்டியிருக்காரு
இதோ பாருங்க அப்பா சொன்னுகேட்டுத்தான் ஆகணும்
பொண்ணுக்கு புடிச்சாலும் நம்ம ஊருக்கு இது சரிப்பட்டுவராது
தப்பானவனா இருந்தாலோ அல்லது உன் பொண்ணா கொன்னுபோட்டுட்டாளோ என்ன பண்றது இது சரிவராது நம்மூரு பக்கம் மாப்பிள்ளையா கிடைக்காது அழகு கூற
இல்லங்க என் பொண்ணோட வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம்
பொண்ணு மனசார விரும்பிட்டா புள்ளையோட மனசை கொன்னுட்டு வேற ஒருத்தனுக்கு கட்டிவச்சுட்டு என்னால நிம்மதியா இருக்கமுடியாது அவளுக்கு பிடிச்சவாழ்க்கை இது
என் குடும்ப விஷயத்துல தலையிடாதீங்க பெண்ணை பெற்றவர்கள் உறுதியாக கூற
ஏய் என்னடா அப்பாவை எதிர்த்து பேசிட்டு இருக்க கோவமாக அருவாளை எடுத்த அழகு அவரை வெட்டபோக மனிஷா அதிர்ந்து அவரை இழுத்து காப்பாற்றினாள்
அவள் முகத்தில் அதிர்ச்சி திகைப்பில் எதுவும் பேசாமல் அவரே முறைத்தவாறு நின்றவன் மேற்கொண்டு அவனால் எதுவும் சொல்லமுடியவில்லை எதுவும் செய்யமுடியவில்லை
ஓங்கிய அரிவாளை மடக்கிகொண்டான்
இதோ பாருங்கய்யா வேற ஜாதிக்காரன் இழுத்துட்டுபோன உங்க மகளை கொல்லாம புருஷன்கூட வாழவும்விடாம வீட்ல வெச்சிருக்கீங்க நாங்க அப்படியெல்லாம் பன்னமாட்டோம்
என் பொண்ணு நல்லாருக்கனும் நினைச்சேன் வாழாவெட்டியா வீட்லவச்சுக்கல அவநல்லபடியா வாழணும்னு நினைக்கிறேன்
நீங்க சொன்னாலும் எங்களுக்கு கவலையில்ல ஊரைவிட்டு போகணும்னாலும் எங்களுக்குபிரச்சனை இல்லை கிளம்புறோம்
எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட மாப்பிளைதுணை வேண்டும்னூ எங்களுக்கு நல்லாவேதெரியும் உங்களோட கட்டுப்பாடை உங்க வீட்டோட உங்க பிள்ளைகளோட வச்சுக்கோங்க மத்தவங்கமேல திணிக்காதிங்க
உங்களால பலகுடும்பம் நாசமாகி பிள்ளங்களை இழந்துருக்கு
அவங்க விட்ட சாபம்தான் இன்னிக்கு உங்க பொண்ண வாழவிடாம வாழாலெட்டியா இப்படி கொண்டு வந்து சேர்த்துருக்கு இதுக்கு மேலயும் மத்தவங்களோட சாபத்தை வாங்கிக்காதீங்க
எங்க உயிரே போனாலும் சரி என் பொண்ணு நல்லாஇருக்கணும் அவளுக்கு புடிச்ச வாழ்க்கையதான் நான்
கொடுப்பேன்
ஊரை விட்டு தள்ளிவைத்தாலும் எனக்கு கவலை இல்லை நான் இந்தஊரைவிட்டு போறோம் கூறிவிட்டு பெண்ணைபெற்றவர் அந்தஇடத்தை விட்டு செல்ல அங்கிருந்து யாரும் மறுப்புகூறவில்லை வீராசாமிஎழுந்து செல்ல அழகர் எதுவும் பேசாமல் மனிஷாவை பார்த்துக்கொண்டிருந்தான் வீராசாமி எழுந்து நடக்க ஆரம்பித்தார்
கூட்டம் மொத்தமாக கலைய
மனிஷா அழகரைதான் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் இடத்தைவிட்டு நகர வேகமாகவந்தவன் அவளை தடுத்து பைக்கில் அமரசொன்னான்
என்னோடு ஜாதி வேற எங்கபழக்க வழக்கம் வேற என்னை உங்க பைக்ல ஏத்தினா அதுவும்பிரச்சனையாகுமே உங்க உதவி எனக்குதேவையில்லை
எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க நீங்க நீங்களாவே இருங்க யாருக்காகவும் மாறவேணாம் நான்தான் தவறி வந்துட்டேன் நான் கிளம்புறேன் கூறிவிட்டு நடந்து வீட்டுக்குபோனாள்
ஊருக்கு போகிறேன் என்று கூறியவளை தாத்தா பாட்டி இழுத்துபிடித்தனர்
அதற்குபிறகு நாட்களில் அழகர்சாமி பலமுறை மனிஷாவை பார்க்கமுயற்சித்தான் பேசமுயற்சித்தான் அவள்தாத்தா பாட்டி அத்தை தாரா வைதேகியோடு பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டாள் அவன் முகத்தைகூட பார்க்கவில்லை
மனிஷா வாய்விட்டு திட்டியிருந்தால் கூட அமைதியாக இருந்திருப்பானோ என்னவோ அவள் ஒதுக்கத்தை இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
அவளின் அமைதியை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எவ்வளவு கெஞ்சிபார்த்தும் அவள் பேசவில்லை
அவன் முன்னால் வந்தால் தலைகுனிந்தவாறே
போவாளேதவிர அவனைநிமிர்ந்து பார்க்கவில்லை
வீட்டில் அப்பா இருப்பதால் அமைதியாக அடங்கியிருந்தான்
அப்பா அம்மா தாத்தா பாட்டி இல்லாத இடத்தில் அவள்கையை பிடித்து கெஞ்சியும் கூட அவள் மனம்இறங்கவில்லை
கிட்டத்தட்ட ஒருவாரமானது அவள்பேசி அவனால் தாக்குபிடிக்க முடியாமல் அன்று இரவே பூனைபோல் உள்ளே வந்தவன் விபீஷணன் தூங்கிவிட்டதை உறுதிசெய்துகொண்டு அவளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் தோட்டத்து பம்பு செட்களை மூடிவைககும் மோட்டார் ரூமுக்குள்கொண்டு போனான்
அவளோ திமிறிக்கொண்டு விலகபோக கையைபிடித்து இழுத்துதடுத்தவன் அதற்குமேல் முடியாமல் இழுத்து அணைத்துகொண்டான்
அவள் திமிற அவள்கழுத்தில் முகத்தைபுதைத்தான்
ப்ளீஸ் விலகிபோகாதடி என்னால முடியல எதாவதுபேசு திட்டு இப்படிஅமைதியாஇருக்காத எனக்குபைத்தியம் புடிக்குதுடி அவள் கழுத்தில் முகத்தைதேய்த்தவாறே கூற
நான் வேற கேஸ்ட் என்னோடமதமும் வேறமதம் என்னை இப்படி கட்டிபிடிச்சுருக்குறது உங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும்
அவள் கேட்டதும் சட்டெனபிரிந்தான்
என்னை லவ் பன்றியா இல்ல யாருக்கும் தெரியாம Girlfriend வைச்சுக்கலாம் நினைச்சுருக்கியா
லவ்பன்னி மேரேஜ் பன்னிகிறவங்களை எதிரியாபாக்குற நீங்ககண்டிப்பா என்னை லவ்பன்னிருக்கமாட்டிங்க
இது வெறும் லஸ்ட்தானே
ஆமா அப்படிதான் இருக்கும்
மனிஷா கூறியதும் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று அழகருக்கு தெரியவில்லை
இல்லம்மா அப்படியெல்லாம் நினைக்கல நெஜமாவே உன்னை நான் விரும்புறேன் என்னைநம்புமா கெஞ்சும் நிலைக்கு வந்திருந்தான்
சரி நம்புறேன் உங்கப்பா சம்மதிக்காட்டி என்னபண்ணுவீங்க எத்தனைபேரோட காதலைபிரிச்சு அவங்க வாழ்க்கைய கெடுத்துருக்கீங்க நீங்க இப்போ அதே தவறை செய்யலாமா
காதல் என்று ஒன்று வரும்வரை மற்றவர்களின் வலியும் வேதனையும் எதுவும் அவளுக்கு புரியவில்லை இப்போது அனுபவ ரீதியாக உணர்ந்தபிறகுதான் தான்பிரித்துவிட்டவர்கள் எவ்வங துடித்திருப்பார்கள் என்று புரிந்தது தவறைஉணர்ந்தவன் தலைகுனிந்தான்
மணி இதனால்வரைக்கும் நான் யாரையும் விரும்புனதில்லை அதனாலேயே காதலோட வலி எதுவும் எனக்கு தெரியல இப்போ அனுபவிச்சு உணர்ந்தபிறகுதான் மத்தவங்களோட வலியும்வேதனையும் எனக்கு புரியுது நிறைய தப்புசெஞ்சிட்டேன் அதுக்கு எப்படி பரிகாரம் பண்ணபோறேன் தெரியல உன்னை உண்மையாவே விரும்புறேன் கடைசிவரைக்கும் என்னோட வாழ்க்கை துணையா நீவரணும்னு நினைக்கிறேன் ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ என்னைவெறுக்காத கெஞ்சுதலாக அவன்கூறியதும் கைதட்டி சிரித்தாள்
அடேங்கப்பா பலபேர் காதலை பிரிச்ச உனக்கு உன்னோட காதலை காப்பாத்துறதுக்கு எப்படி தைரியம் வரும் சரி நீஎன்னை உண்மையா விரும்புற நான் ஒத்துக்குறேன் கடைசிவரைக்கும் நான் உனக்கு வாழ்க்கை துணையா வரணும்னா உங்கப்பாவோட சம்மதத்தோட என்னை கல்யாணம் பன்னிக்கோ
அதுவரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத
மணி அப்பா சம்மதிக்கமாட்டார் அவரபத்தி உனக்கு தெரியுமே நாம யாருக்கும் தெரியாம....
சொல்லுங்க யாருக்கும் தெரியாமா திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டு திருட்டுவாழ்க்கை வாழசொல்றீங்களா நீங்கசெய்ற திருட்டுத்தனம் தெரியாமா உங்கப்பாவும் வேற பொண்ண பார்த்து உங்களை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கசொல்லிட்டா அப்பாவுக்காக தாலிகட்டதானே செய்வீங்க அப்போ அவபொண்டாட்டி உங்களை திருட்டுதனமா கல்யாணம் பண்ணிகிட்ட நான் வப்பாட்டியாகிடுவேன் இதுதான் உங்க ஆசையா அவள் கேட்டதும் கலங்கிபோனான்
இல்லம்மா நான் அப்படியெல்லாம்...
அப்படி எதுவும் நடக்ககூடாதுல்ல அப்போ நான் சொல்றதை செய்யுங்க இனிமே இந்த ஊர்மடடும் இல்ல எந்த ஊர்லயும் யார்கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அதை பிரிச்சுவிட உங்கப்பாதான் முன்னாடிபோவார்
இனிமே உங்கப்பாவ தடுக்குறதுதான் உங்க வேலை
எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு அதுக்கப்புறம் என்னை கல்யாணம்பண்ணிக்கோ
அப்புறம் உங்களோட அத்தையும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவரையும் ஒதுக்கிவச்சுருக்குறதா சொன்னாங்களே
உங்களுக்கு தைரியமிருந்தா உங்க அத்தை மாமாவையும் வர சொல்லி எல்லாரும்முன்னாடியும் என்னை கல்யாணம்பண்ணிக்கோ அப்புறம் உன்னை நம்புறேன் கூறிவிட்டு செல்ல அழகருக்கு அவள் சொல்வதை கனவில்கூட நினைத்து பார்க்கமுடியவில்லை
அப்பா என்ன சொல்வாரோ ஊர்க்காரங்க என்ன பேசுவாங்களோ என்று பயமாக இருந்தது
எப்படி இது சரி செய்வது இதைப்பற்றி அப்பாவிடம் எப்படி பேசுவது யோசித்துயோசித்து மண்டை வெடிப்பதுபோல் இருந்தது நிம்மதியாக சாப்பிடமுடியவில்லை நிம்மதியாக தூங்கமுடியவில்லை பெரியஅவஸ்தையாக இருந்தது
பெரிய பாறாங்கல்லை தலையில் சுமப்பதுபோல்தோன்றியது
பக்கத்து ஊரில் முக்கியவேலையாக போகவேண்டும் என்று வீராச்சாமி காரில் போய்க்கொண்டிருக்க காரை வழிமறித்து நின்றனர் சிலர்
ஆருடா நீங்க கேட்டவாறே அரிவாளை கையில் எடுக்க
இவர் ஒருவர் எதிரில்இருப்பவர்கள் 10 பேர் 10 பேரும் சேர்ந்து ஒருவரைபோட்டுதள்ள எவ்வளவு நேரமாகுமாம் வீராச்சாமியை அடிபின்னியெடுத்தனர்
வாயில் ரத்தம் வடிய அவரை மண்டிபோட வைத்திருந்தது அந்தக் கூட்டம்
நாங்களே எங்க பையன் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லும்போது நீயாருடா அது தடுக்கிறதுக்கு அநியாயமா என் மகனை அடிச்சு உயிருக்கு போராடுறநிலலக்கு கொண்டு வந்துட்டியேடா பாவி
என் மகனை வெட்டிட்டாங்கனு என் மருமகளும் விஷம்குடிச்சுட்டா
ரெண்டு பேரும் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க எல்லாம் உன்னலதாண்டா பாவி அருவாளை ஓங்க போக அதை தடுத்தது வலுவான ஒருகரம்
அழுக்குசட்டை கச்ஙகியவேட்டி தலையில் முண்டாசு கட்டி முறுக்கி விட்ட மீசையை மறுபடியும் முறுக்கியவன்
கையில் பிடித்திருந்த அரிவாளை இழுக்க
அவன்மேல் விழுந்தவன் வயிற்றில் ஒரு குத்து குத்த அவன் அடித்த ஒரு அடியில் எதிரில் இருந்தவன் மயங்கிவிட்டான்
ஒருவன் அடி வாங்கியதும் மற்றவர்களும் ஓடிவிட லுங்கிகாரன் வீராசாமியை கைத்தாங்கலாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்துசிகிச்சை முடிந்ததும் தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் சேர்த்தான்
குடும்பத்தினரோ காயங்களைபார்த்து பயந்து போக அழகர் பதற்றமாக அப்பாவிடம் கேட்க அவரும்நடந்ததை கூறி முண்டாசுகாரனை அருகில் அழைத்து அவன் தோளில் கைபோட்டு இந்த பையன்தான் என்னை காப்பாத்துனான் பாக்குறதுக்கு நல்லா பையனா இருக்கான்
தம்பி உன் பேரு என்னப்பா எந்த ஊர்க்காரன் நீ
என் பேர் சூர்யாங்க படிப்பு இல்லன்னு யாரும்வேலைகொடுக்கல பொழப்பதேடி இந்த ஊர்பக்கம் வந்தேன் அப்பதான் உங்கள
பாத்தேன்ங்க
தம்பி தமிழ் சரியா வரமாட்டேங்குதே என்னாச்சு
நான் தெலுங்கய்யா தமிழ்
நல்லா பேசுவேன் ஆனா சரளமா வராது அவன் கூறிகொண்டிருக்கும்போதே
விபீஷ் மணி ஓடிவந்தனர்
தாராவும் அப்பாவை பார்த்து கண்ணீர் வடிக்க
சூர்யா சுற்றியிருக்கும் அத்தனைபேரையும் அழுத்தமாக பார்த்து வைத்தான்