அத்தியாயம் 18
"பரவாயில்லையே.. இவ்வளவு தைரியமா இந்த குழந்தையை உன் குழந்தை என்று சொல்லிவிட்டு இந்த ஊரிலேயே சுத்திக்கிட்டு இருக்க.. ம்ம்ம்.. இல்லீகல் சைல்ட்!! அதுவும் என் மனைவிக்கு உனக்கும் பொறந்தது.." என்று இளக்காரமாக கூறியவனின் வார்த்தைகளை கேட்டு, "ஹர்ஷத்…!!! என்று கர்ஜித்தவன் ருத்ரனாக மாறி அவனின் கழுத்தை ஒற்றை கையால் இருக்கியவன் மறுக்கையால் தன் குழந்தையை இறுக்க பற்றிக் கொண்டான்.
'அய்யய்யோ.. என்னது எப்படி சொல்கிறானே? அதுவும் கலெக்டரை பார்த்து?' என்று அதிர்ச்சியாகி நின்றார் மகாதேவன் ஒருபுறம்..
ஆதினியின் உடல் நலத்தை தெரிந்து கொள்ளலாம் என்று மற்ற குழந்தைகளின் ஃபைல்களையும் கையோடு கொண்டு வந்திருந்த மகதி, ஹர்ஷத்தின் வார்த்தைகளைக் கேட்டு ஸ்தம்பித்து கையில் இருந்து கோப்புகளை நழுவ விட்டாள்.
"ஜஸ்ட்.. ஸ்டாப் ஆப் யுவர் ரப்பிஷ் டாக்!! இனி ஒரு முறை.. ஒரு முறை என் பொண்ண இல்லீகல் சைல்ட்ன்னு சொன்ன உன் உடம்புல இந்த உயிர் இருக்காது!! என்னை அப்ப பார்த்த அதே பிரதாப்னு நெனச்சியோ? நான் ருத்ர பிரதாப்!! கலெக்டர் ஆப் த சிட்டி!! உரு தெரியாம உன்னை அழிச்சிடுவேன்!!" என்று உறுமினான்.
"நீ என்னை என்ன மிரட்டினா நடந்தது இல்லை என்று ஆகுமா? இல்லை நீயும் என் வைஃப் எனக்கு செய்த துரோகம் தான் மறக்குமா? சொல்லு டா? எப்படிடா உங்களால எப்படி நடக்க முடிஞ்சது? எனக்கு துரோகம் பண்ண முடிஞ்சுது?" என்று ருத்ரனின் கை அவன் கழுத்தை இறுக்கியிருந்தாலும் அதை மீறி பேசிக்கொண்டே தான் இருந்தான் ஹர்ஷத்.
"உண்மை என்னன்னு உனக்கும் தெரியும்!! எனக்கும் தெரியும்!! நீ வச்சிருக்க சர்டிபிகேட்னால மட்டும் நீ சொல்றது உண்மைன்னு ஆடாது ஹர்ஷத்.. இவ்வளவு நாள் இதை பத்தி கவலை கொள்ளாமல் இருந்தேன். ஆனா இனி அப்படி கிடையாது. அப்ப வேணும்னா இந்த பிரதாப்புக்கு ஆள் இல்லாமல் இருக்கலாம்... எதுவும் தெரியாமல் இருக்கலாம்... உன் முகத் திரையை நான் கிழிக்கிறேன் டா!!" என்றவன் திரும்பி மகாதேவனையும் மகதியையும் ஒரு ஒரு பார்வை பார்த்தான். அதிலும் மகதியை இன்னும் கூர்ந்து பார்த்தவன், எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டான்.
"எப்படி அங்கிள் இவன் கலெக்டரா? சொல்லுங்க அங்கிள்?" என்று மற்றதை விட்டு உண்மையில் இவன் கலெக்டராக இருப்பானோ என்று சந்தேகம் ஹர்ஷத்திடம்!!
ஆதினியின் மீது ஒரு அபிப்பிராயம் மகளுக்கு இருப்பது மகாதேவனுக்கு தெரியும். அதிலும் அவள் பிறப்பை இவன் தவறாக கூறுகிறான், கூடவே இவன் மனைவிக்கு பிறந்த குழந்தை என்கிறானே ஏதோ இவன் மனைவி இவனை விட்டுப் போய்விட்டாள் என்று தானே சொன்னார்கள்? என்னடா இது? புது புதுசா குழப்பம் வருது?' என்று யோசித்துக் கொண்டே மகாதேவன் நிற்க "அங்கிள்.. உங்ககிட்ட தான் கேட்டேன்!!" என்று அவரை உலுக்கி கேட்டான்.
"ஹாங்… ஆமா அவரு கலெக்டர் தான்!! ரீசெண்டா ஏதோ போதை மருந்து கும்பல கண்டுபிடிக்கும் போது சில குழந்தைகள் அஃபெக்ட் ஆகியிருந்தாங்க.. அதுல அவர் குழந்தையும்…" என்று பாதியில் நிறுத்தி ஹர்ஷத்தை மகாதேவன் பார்க்க..
"அது அவன் குழந்தையே தான் அங்கிள்!! என் மனைவிக்கு பொறந்ததுனால அது என் குழந்தையின் ஆகாது அங்கிள்!!" என்று வலியை மீறி அவன் சிரிப்பதை கண்டு மகாதேவனுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை.
மகதியால் இதை சிறுதும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. 'குழந்தையின் அம்மா நந்தினி என்று தெரியும். தந்தை ருத்ரன் என்றும் தெரியும்!! ஆனால் நந்தினி இவனோட மனைவியா?' என்று தலையை சுற்ற.. தள்ளாடி.. அருகில் இருந்த டேபிளை அவள் பிடித்துக் கொண்டாள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள…
"என்ன அங்கிள் நான் சொல்றது பொய் என்று நினைக்கிறீர்களா? ஒரு நிமிஷம் இருங்க.." என்றவன் தன்னுடைய ஃபோனில் மெயிலில் தேடி எடுத்து பழைய போட்டோக்களை எடுத்து காண்பித்தான். அதில் சிரித்து முகமாக நந்தினி மாலையோடு அருகில் ஹர்ஷத்!! அவர்களின் ரிசப்ஷன் போது எடுத்த புகைப்படம் போல இருந்தது.
"என் வைஃப் நந்தினி.." என்று மேலும் சில படங்களை காட்ட, அதில் நெருக்கமாக ருத்ரனும் நந்தினியும் அமர்ந்திருந்தது போல பல படங்களை காட்டினான்.
"இவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் என்று நம்பி கல்யாணத்துக்கு அப்புறமா இவங்கள நான் பழக விட்டேன். ஆனா அதுக்கு நல்ல எனக்கு பரிசு கொடுத்தாங்க.. துரோகம்!! நம்பிக்கை துரோகம்!!" என்று கண்களை மூடி அந்த வலியை போக்க பெரும் பாடுபட்டான் ஹர்ஷத்.
"நான் ட்ரைனிங்காக நாலு மாசம் வெளியூர் போயிட்டேன். வந்து பார்த்தா என் வைஃப் டை மன்த்ஸ் ப்ரக்னெண்ட்!! எப்படி இருக்கும் எனக்கு? யோசிச்சு பாருங்க!! ஆனாலும் அது என் குழந்தைனு சாதித்தா நந்தினி!! அப்புறம் குழந்தை பிறந்ததும் டிஎன்ஏ டெஸ்ட்ல தான் அது ருத்ரனுடைய குழந்தைனு தெரிஞ்சுது!! இந்த கொடுமை எல்லாம் பார்க்க என்னால முடியல.. அதான் நான் யுஎஸ் போயிட்டேன். அதுக்கப்புறம் நந்தினி இறந்துவிட்டதா செய்தி வந்தது. கொலை பண்ண கூட அவன் தயங்க மாட்டான் அவந்ன?" என்று இளக்காரமாக ருத்ரனை பற்றி பேச பேச..
"ஸ்டாப்..!!" என்று கத்தி இருந்தாள் தன்னை அறியாமல் ருத்ரனை பற்றி பேசுவது பிடிக்காமல் மகதி.
கேட்டவளின் உடம்பெல்லாம் உதற.. உதடுகள் துடிக்க... கண்களில் கண்ணீர் கரை கட்டி நின்றது. அவளால் இந்த தருணத்தை எதிர்கொள்ளவே முடியவில்லை!! இங்க இருந்து சென்றால் தான் சுவாசிக்கவே முடியும் என்ற நிலை!! ஹர்ஷத் அவளின் நிலையை கண்டவன், மகாதேவனை கேள்வியோடு பார்த்தான்.
"அந்த பேபி ஆதனிய நம்ம மகதிக்கு ரொம்ப பிடிக்கும். இங்க ஹாஸ்பிடல்ல இருந்தபோது அவரால் ரொம்ப வந்து பாத்துக்க முடியலன்னு மகதி தான் ரொம்ப நேரம் அந்த பெண்ணை பார்த்துக்கொண்டாள். ஒரு அட்டாச்மெண்ட் அவள் கிட்ட.. நீங்க அந்த குழந்தையை பத்தி இப்ப சொன்னதும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படித்தானே மா?" என்று கேட்க பதில் உரைக்கும் நிலையில் மகதி இல்லை. அவள் அறையை விட்டு கிளம்ப எத்தனிக்க "ஒரு நிமிஷம் மகதி!!" என்று அவளை நிறுத்தினான் ஹர்ஷத்.
"நான் குழந்தையை பத்தி எதுவும் சொல்லல மகதி. பெரியவங்க பண்ணின தப்புக்கு குழந்தை என்ன பண்ணும்? பாவம்!! அவனுக்கு குழந்தையாக பிறந்ததே அது செய்த பாவம்!! ஆனா இது நம்பிக்கை துரோகம் இல்லையா? பெஸ்டி பெஸ்டி என்று சொல்லிட்டு அவன் கூடவே குடும்பம் நடத்தி.. அதுவும் கள்ள உறவு.. குழந்தை பெத்து.. அதை என் குழந்தைனு சாதித்தா!! நான் என்ன பண்ணியிருக்கனும் அப்போ? நான் பேசினது பண்ணுனது எதுவும் எனக்கு தப்பா தெரியல.. இத்தனைக்கும் நான் தான் அவங்களால ரொம்ப பாதிக்கப்பட்டது. சாரி டு சே திஸ் நீ அந்த பேபி கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கிறது தான் நம்ம லைஃப்க்கு நல்லது!! எனக்கு துரோகம் பண்ணவங்கள என்னால் மன்னிக்க முடியாது!!" என்று அவனின் பேச்சில் அதிர்ந்து நின்றாள் மகதி.
'என்னது நம்ம லைஃபப்பா?' என்று ஏற்கனவே கொடுத்த அதிர்ச்சி பத்தாது என்று இவன் வேறு கொடுக்குறான் என்று தந்தையை திரும்பி முறைத்தாள். அவரோ கண்களால் கெஞ்சி அப்புறம் பேசிக்கலாம் என்றார்.
அதுவும் மகதி எப்போது இருக்கிற நிலைமையில் சற்றும் அவளால் இவனுக்கு சரியாக நின்று பேச முடியாது. முதலில் இது உண்மையா இல்லையா? யோசனை தேவையில்லை... கண்டிப்பாக பொய்யாக தான் இருக்கும்!!
ருத்ரனால் இப்படி ஒரு துரோகத்தை எந்நாளும் யாருக்கும் செய்ய முடியாது!! ஆனால் ஹர்ஷத்தின் கூற்றும் பொய் இல்லையே? எது உண்மை? எது பொய்? என்று தெரியாமல் தலை சுற்ற... அவளுக்கு தேவை இப்பொழுது தனிமை!!
தனிமையில் அமர்ந்து யோசித்தால் மட்டுமே தனக்கு தெளிவு வரும் என்று நினைத்தவள் "நான் என் ரூமுக்கு போறேன்" என்று அங்கிருந்து வேகமாக தன் அறைக்கு வந்து விட்டாள்.
செவிலியரை அழைத்தவள் "சிஸ்டர் ஈவினிங் ஓபி இருந்தால் கேன்சல் பண்ணிடுங்க.. எனக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸூ" என்றதும் அவர் முகத்தில் இருந்தே "தலைவலியா டாக்டர்? நான் வேணா காஃபி கேண்டினில் ஆர்டர் பண்ணட்டுமா?" என்று அக்கறையை கேட்ட, அந்த செவிலியரிடம் வேண்டாம் என்றதோடு நிறுத்திக் கொண்டாள். 'இப்போது எனக்கு தனிமை மட்டும் தான் வேண்டும்!' என்று கத்த வேண்டும் போல இருந்தது.
அவளின் முகத்திலிருந்து ஏதோ பெரும் பிரச்சனை போல என்று நினைத்த செவிலியரும் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். சாதாரண தலைவலி உடல்நிலை கோளாறுக்கெல்லாம் இப்படி சுணங்கி அமரும் ரகம் இல்லையே மகதி!! அதை அறிந்ததனால் அவரும் அமைதியாக சென்று விட்டார்.
மதிய உணவின் போது துர்காவை சந்தித்த மகாதேவன் அங்கு நடந்த அனைத்தையும் கூறிவிட, ஏற்கனவே மகளின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தார். "இவ்வளவு குழப்பம் இருக்கும் நிலையில் நாம் சற்று யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு எதுவும் முடிவு செய்யாதீங்க!!" என்றார்.
"ஏய் துர்கா.. இதுல என்ன யோசிக்க வேண்டியது இருக்கு? துரோகம் பண்ணது அவருக்கு.. இரண்டு பேரும் சேர்ந்து!! இதுல மாப்பிள்ளை…" என்றவர் முடிக்கும் முன் துர்காவில் உக்கர பார்வையை பார்த்து, "இதுல ஹர்ஷத் மேல் என்ன தவறு? அவரே பாவம்!!" என்றார்.
"துரோகம் செஞ்சவன் நெஞ்சை நிமிர்த்தி என்னைக்கும் பேசவே மாட்டான்!! அதுவும் அந்த குழந்தையை இப்படி எல்லோருக்கும் நேராக தன் குழந்தை என்று சொல்லவே மாட்டாங்க.. அது ஏன் உங்களுக்கு புரியல?" என்ற துர்கா கேட்ட கேள்வியும் சரியாகத்தான் இருந்தது.
அதுவும் இல்லாமல் ருத்ரனை பற்றி அவருக்கு கேட்ட விசாரித்தவரையில் என்றும் தப்புக்கு துணை போகாதவன். அதனால் அனேகமாக இந்த மூன்று வருடத்தில் நிறைய டிரான்ஸ்பர்களை சந்தியிருந்தான். இப்பொழுதும் இங்கே ஏதோ போதை கும்பலை பிடிப்பதற்காக தானே அலைந்துக் கொண்டு இருக்கிறான். அவன் எப்படி தப்பானவன் ஆக இருக்க முடியும்? இதில் யார் சொல்வது உண்மை? யார் பொய்? என்று பெரும் யோசனை மகாதேவனுக்குள்ளும்!!
"இங்க பாருங்க இப்போதைக்கு நீங்க மண்டையை போட்டு எதுவும் குழப்பிக்காதீங்க.. பாவம் ஏற்கனவே அங்க நாலு முடி தான் இருக்கு!! அதுவும் கொட்டிடுச்சுன்னா சுத்தமா சொட்டை.. மொட்டை ஆயிடும்!!" என்று சிரிப்பை அடக்கியப்படி துர்கா அவரை வார..
"வாட்?? நாலு மட்டும்தான் இருக்கா?? நல்லா பாருடி முன்பக்கம் மட்டும் தான் இல்லை. பின் பக்கம் எப்படி கத்தை கத்தையா இருக்கு பாரு!!" என்று அவர் காட்ட..
"பின்பக்கம் இருந்து என்ன பிரயோஜனம்? சொட்டை சொட்டை தானே!! இன்னும் யோசிச்சு அந்த பின்பக்கம் இருக்கிற நாலையும் இழந்துறாதீங்க…" என்று சூழ்நிலை இலகுவாக்கினார்.
"கொஞ்ச நாள் இது அப்படியே இருக்கட்டும். இந்த விஷயம் ஆற போடுங்க!! ரிலாக்ஸ்ங்க!!" என்றதும் சரி என்றவர், "நீனும் மகதி கிட்ட இதைப்பற்றி எதுவும் கேட்காதே!!" என்றார். அவரிடமும் ஆதினி மகதியின் பிணைப்பை கூறியிருந்தார்.
ஆனால் மகளிடம் இதைப் பற்றி பேசிய ஆக வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் துர்கா.
அவளின் கேபின் வெளியே இருக்கும் ரிசெப்ஷன் பெண்ணிடம் ஃபோன் செய்து கேட்க "மேடம் ஈவினிங் ஓபியை கேன்சல் பண்ணிட்டாங்க டாக்டர்.. உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க" என்றதுமே துர்காவினுள் பல யோசனைகள்!!
வெறும் ஆதினியால் மட்டுமே இந்த தலைவலியா? இல்லை ஹர்ஷத் பற்றி மகள் குழம்புகிறாளா? என்று யோசித்தவருக்கு ருத்ரனை பற்றிய எண்ணமே இல்லை.
சரி என்று மகளை விட்டு பிடிக்க நினைத்தார். மாலை போல வீட்டிற்கு சென்ற மகதியோ அறையை விட்டு வெளியே வரவில்லை.
முழுக்க முழுக்க யோசனை கண்களை மூடி யோசித்தாள். அவளின் ருத்ரனுடனான முதல் சந்திப்பில் இருந்து யோசிக்கும்போது அவன் சொன்ன "ஐ ஹேட் கேர்ள்ஸ்!!""டோன்ட் எவர் டச் மீ!!" சாதாரணமாக பெண் மோதியத்திற்கு சாரி சொல்லி விலகாமல் அவனின் அந்த உக்கிரம் ஆத்திரம் என்று அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு ருத்ரன் மீது எந்த தவறும் இருப்பதாக படவில்லை.
ஹர்ஷத்தை தெரிந்தவரையில் இதுவரை தவறுதலாகவும் அவன் யாரிடமும் நடந்ததில்லை. மூன்று வருடங்களாக மனைவி பிரிந்து துக்கத்தில்.. அவள் செய்த துரோகத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்ததாக அவள் கேள்வி உற்றாள். ஆனால் அது உண்மைதானா? என்று அவளுக்கு தெரியாது அல்லவா?
கண்ணுக்கு முன் தெரிந்த பழகிய ருத்ரனை விடவா அவன் நல்லவனாக இருந்து விடப் போகிறான்? அப்படியே இருந்தால் தான் என்ன? இவர்கள் இருவருக்கும் தெரியாமல் வேறு ஏதாவது நடந்து இருக்கலாம் அல்லவா? அதிலும் ஆதனி அப்படியே ருத்ரனின் வார்ப்பு!!
அவனிடம் பேசியாக வேண்டும் என்று போன் செய்ய.. போன் அந்த பக்கம் ரிங் போய்க்கொண்டே இருந்தது தவிர எடுத்த பாடில்லை!! இரண்டு மூன்று முறை தொடர்ந்து அவள் முயற்சி செய்ய ரிங் போய்க்கொண்டே இருந்தது. உடனே சொர்ணமாவுக்கு போன் செய்து "ஆதினி எங்கே?" என்று விசாரித்தாள்.
"பாப்பா அப்பவே ஹாஸ்பிடல் போயிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களே அம்மா. சார் தான்… ஆபீஸ்ல இருக்காங்க இன்னும் வரல" என்றார்.
நொடி கூட யோசிக்காமல் புறப்பட்டு விட்டாள் கலெக்டர் ஆபீசுக்கு ருத்ரனை பார்க்க அவனின் நாயகி!!