தோகை 17

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 17

 

 

"ஏய்… என்ன... மஹதி என்ன பண்ற? சர்ஜிகல் நைஃப் தள்ளுபடி லைட்ட கீறினா போதும்.. அவ்வளவுதான்!! நான் மர்க்கையா தான்!! எதா இருந்தாலும் பேசி தீத்துப்போம் மகதி!!" என்று ஆடாமல் அசையாமல் ஏன் விழி இமை கூட சிமிட்டாமல் அட்டென்ஷன் பொஷிஸனில் நின்று பயத்தை கண்ணில் தேக்கியப்படி கூறிய இந்த சீனியர் ரீவாவை பார்க்க பாவமாக தான் இருந்தது மகதிக்கு.

 

பொதுவாக காலேஜில் சீனியர் ஜூனியர் ராக்கிங் எல்லாம் நடக்கும் அதில் ரீவாவும் இவளை ராக் செய்தவள் தான். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மகதியின் சுட்டித்தனம் பிடித்து விட நட்பாகி விட்டாள். அதனால்தான் சீனியர் ஜூனியர் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு நட்பு இன்று வரை மிளிர்ந்து கொண்டிருந்தது. அத்தனையையும் ருத்ரன் தவிடு பொடியாக்கி சென்று விட.. இதோ தன் நட்பின் கழுத்தில் கத்தி வைத்திருந்தாள் மகதி.

 

மகதி ரூபாவை முறைத்தவள்,

"அவன் டேட்டிங் கூப்பிட்ட நீ உடனே போயிடுவியா.. உன்னை தொலைச்சிருவேன்" என்று‌ மிரட்டினாள் மகதி.

 

"நானா போறேன்னு சொன்னேன் அவரு தாண்டி என்னை கூப்பிடறாரு" என்று இன்னும் அதே அட்டென்ஷன் பொசிஷனில் நின்று பயத்தோடு கூறினாள் ரீவா.

 

"அவன் கூப்பிடுவான் தான். அதுக்கு நீ உடனே போவேன்னு சொல்லுவியாடி?" என்று மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது...

 

"இது என்னடி அநியாயமா இருக்கு கூப்பிட்டது அவரு... நீ என்னை கத்திய வச்சு மிரட்டுற? ரெண்டு பேருமே மிரட்டுவதுல ஒரே மாதிரி தான் அன்னைக்கு கூட அவர் யாரையோ இப்படித்தான் மிரட்டிட்டு இருந்தாரு!!" என்று அதைக் கூட ரசித்து கூறினாள் ரீவா.

 

"அப்படித்தான் மிரட்டுவேன்!!" என்றவள், "அவரோடு நீ போகக்கூடாது… தட்ஸ் இட்!!" என்றாள் அழுத்தமாக..

 

அவளின் இந்த உரிமையான மிரட்டலில் ஏதோ புரிந்து கொண்ட ரீவா "என்ன டி.. ரூட்டு மாறுது? ஏற்கனவே உனக்கு அலையன்ஸ் பார்த்து இருக்காங்க தானே?" என்றாள் யோசனையாக!!

 

"அதுக்கு… நீ போவியா அவர் கூட? தொலைச்சிருவேன் பார்த்துக்கோ!!"

என்று‌ மிரட்டினாள்.

 

"ஏய் மகதி.. அவரை நீ லவ் பண்ணிறியா என்ன?" அதிர்ச்சியோடு கேட்டாள் ரீவா!!

 

"ச்சே.. நான் அவர லவ் பண்ணல..!!" என்றாள் அவசரமாக!!

 

தன் கழுத்துக்கடியில் இருந்த கத்தியை தள்ளியவள் "அதான் நீ லவ் பண்ணல இல்ல. அப்புறம் என்ன?" என்றாள் கண்ணடித்து உற்சாகத்தோடு ரீவா.

 

"நான் தான் பண்ணல.. பட் ஜி லவ்ஸ் மீ!! நான் லவ் பண்லேன்னா நீ பண்ணிருவியா? " என்று கண்களை உருட்டி மிரட்டினாள் மகதி.

 

"ஷ்யூர்.. ஷ்யூர்… எனக்கு எல்லாம் இப்படி ஹாண்ட்ஸெம் பாய் கிடைச்சா லவ்வு என்ன லவ்வு.. கல்யாணமே பண்ணி குழந்தையே பெத்துப்பேன்!!" என்றாள் கண்களில் கனவு மின்ன..

 

"வாய மூடு.. மேல ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை.. பேசின.. கொன்றுவேன்.." என்று காதை பொத்திக்கொண்டு கத்தினாள் மகதி.

 

தோழிகள் இருவரும் தன்னால் சண்டையிட்டுக் கொள்வதை சிரித்தபடி ரசித்து வேடிக்கை பார்த்தப்படி கதவின் ஓரத்தில் தோளை சாய்த்து பாக்கெட்டில் இருகைகளையும் விட்டபடி ஸ்டைலாக நின்று கொண்டிருந்தான் ருத்ரன். இவர்கள் இருவரும் தங்களுக்குள் போட்ட சண்டையில் அவன் இருப்பதை கவனிக்கவே இல்லை.

 

உண்மையில் ரீவாவின் முகத்தில் ஆசையும்.. மகதியின் முகத்தில் பொறாமையும் பளிச்சிட்டது.

 

"அதான் நீ லவ் பண்ணலேனு சொல்லிட்டேல... அப்புறம் நான் லவ் பண்றது இல்ல உனக்கு என்னடி பிரச்சனை? இல்ல கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை? அவரோட குடும்பம் நடத்தினா உனக்கு என்ன பிரச்சனை?" என்று ஆச்சரியமாக கண்களை விரித்து அப்பாவியாக கேட்ட ரீவாவை கையில் வைத்திருக்கிற சரஜிக்கல் கத்தியாலே சரக்கு சரக்கு என்று குத்தும் வேகம் அதிகரித்தது மகதிக்கு. "இவனால சீக்கிரமே நான் கொலைகாரியை மாறிடுவேன் போல..!!" என்று கத்தியை கையில் இருந்து தூக்கி எறிந்தவள்.

 

"ஐ லவ் ஹிம்!! ஐ லவ் தட் இடியட்!! ஐ லவ் தட் ஃபுல்!! ஐ லவ் தட் கலெக்டர் காட்டான்!! போதுமா??" என்று அவள் கத்தி சொல்ல…

 

"அப்பாடி மெஷின் கம்ப்ளீட்டட்!! கலெக்டர் என் ஜோலி முடிஞ்சுது நான் கிளம்புறேன்!!" என்ற அவள் கூற.. என்ன சொல்கிறாள் இவள் என்று திரும்பிப் பார்த்த மகதியின் அதிர்ச்சியில் விரிந்த கண்கள்...

வெடித்த சிரிப்பை மீசைக்குள் அடக்கியபடி கண்களில் குறும்பும் மின்ன.. முகத்தில் காதல் மின்ன.. நின்றிருந்த ருத்ரன் மேல் நிலைத்தது.

 

ருத்ரன்‌ ரீவாவைப் பார்க்க..‌ அவள் சிரித்தாள்.

 

"தேங்க் யூ ஸோ மச் ரீவா" என்றான் ஆத்மார்த்தமாக..

 

"இட்ஸ் ஓகே சார்!! ஜஸ்ட் ஒரு ஹெல்ப் தானே.. அவளுக்கு உங்க மேல பயங்கர லவ் இருக்கு.. என்னை கொல்ற அளவுக்கு துணிச்சிட்டா.. அந்த அளவு உங்க மேல வெறித்தனமான லவ் அவளுக்கு. ஆனா உங்ககிட்ட அதை ஏன் சொல்ல மாட்டேங்குறா.." என்று இருவரையும் பார்த்த ரிவா.

 

"அதான் இப்ப சொல்லிட்டாலே.. விதவிதமா வெரைட்டியா!!" என்றவனின் கண்கள் அணு அணுவாக தன்னவளைத்தான் ஆராதித்துக் கொண்டிருந்தது.

 

"அதனாலதான் உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன். ஃப்யூச்சர்ல உங்களுக்கு இந்த மாதிரி எந்த ஹெல்ப் பண்ணாலும் அடியேன் செய்ய காத்திருக்கிறேன்" என்று குறும்பும் மின்ன கூறும் இந்த கலெக்டரின் புது அவதாரத்தில் சற்றே ஜெர்க்கான ரீவா பெரிதாக கையெடுத்து கும்பிட்டு "ஐயா சாமி வேணவே வேண்டாம்!! இப்ப கூட நான் பேசினதை மறந்தால் உங்களுக்கு புண்ணியமாக போகும்‌. பேச்சுக்கு சொன்னதுக்கு இவ கத்தி எடுத்து நிக்குறா.. நாளைக்கு உங்க பொண்டாட்டியாகி உங்களை நான் இந்த மாதிரி எதுக்காவது ஹெல்புக்கு கூப்பிட்டேன்னு தெரிஞ்சா.. என்னை க்ளோஸ் பண்ணிடுவா உங்க ஆளு!! எனக்கு இருக்கிறது ஒரே ஒரு உயிர்.. அது முக்கியம் பிகிலு!!" என்று சிரித்தபடி அவள் வெளியேறி விட்டாள்.

 

"நைஸ் கேர்ள்!!" என்று போகும் ரீவாவை பார்த்து சொன்னவன் உதடுகள் அடுத்த நிமிடம் அழுத்தமாக கடிக்க பட்டிருந்தது அவனின் செல்ல ராட்சசியால்!!

 

"ஆஆஆஆ… ராட்சசி!!" என்று வலித்த உதடுகளை அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கியவன் "நான் திரும்பி ஆபீஸ் போகணுமடி.. இப்படி கடிச்சியிருக்க" என்றான் உதடுகள் விலகினாலும் உடல்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டுதான் இருந்தது.

 

"வலிக்கட்டும்!! நல்லா வலிக்கட்டும்!! எனக்கும் இந்த மாதிரி எத்தனை தரம் கடித்து வைச்சிருப்பீங்த? அப்பொழுது எல்லாம் யோசிச்சு பாத்தீங்களா? ஏன் உங்களுக்கு மட்டும்தான் ஆபீஸ் இருக்கா? எனக்கு ஹாஸ்பிடல் இல்லையா?" என்றவளை சிரித்துக் கொண்டவன் காயம் பட்ட அவனது உதட்டை மெல்ல தன் நாவினால் ஈரப்படுத்த அதுவும் எரிய ஆரம்பித்தது.

 

"எரியுதடி..!!" என்றவன் நெருங்கி அவளிடம் காட்ட அவளின் பற்தடம் நன்றாக அவனது கீழ் உதட்டில் அழுத்தமாக பதிந்திருந்தது.

 

அவளுக்கே சற்று சங்கடமாகத்தான் போனது. யாரும் பார்த்தால் கண்டிப்பாக கேள்வி கேட்பார்கள்? இதுவே பெண் என்றால் அது தெரியாமல் இருக்க மேக்கப்போ அல்லது லிப்ஸ்டிகோ போட்டுக் கொள்ளலாம். பொறுப்பான பதவியில் இருப்பவன் என்ன செய்வான்? அவசரப்பட்டு விட்டோமோ? என்று தவித்தவளுக்கு.. அந்த ரணகரத்திலும் அவன் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டால் எப்படி இருப்பான் என்று மனதில் தோன்ற வெடித்து சிரித்தாள் மகதி.

 

"நிறுத்து.. நிறுத்து.. இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற நீனு?" என்று அதட்டலுடன் கேட்டவனை பார்த்தவள் கண்ணில் குறும்பு வழிய.. இரு பக்கமும் தலையாட்டி சொல்ல முடியாது என்றாள். ஆனாலும் உதடும் கண்களும் அவ்வளவு சிரித்தது அவளுக்கு.

 

"இப்ப சொல்ல போறியா இல்லையா?" என்று அவன் ஒற்றை விரல் நீட்டி மிரட்ட..

 

"சொல்ல முடியாது கலெக்டர்!!" என்று சொல்லி முடிக்கும் முன் அவளது சிரிக்கும் உதடுகளை சிறை எடுத்தவன், அவனைப் போலவே அவளுக்கும் தன் தடத்தை அழுத்தமாக கீழே தட்டில் பதித்துவிட்டு விலகினான்.

 

"இப்ப சொல்லுடி? என்னடி நெனச்ச?" என்ற அவள் "உங்களை…" என்று சிரிப்புடன் அவன் அருகே வர இவனும் விடைத்த நெஞ்சுடன் அவளை எதிர் கொள்ள..

முன்னழில் கோலங்கள் அவன் நெஞ்சில் பட்டு அவனை தடுக்க.. "மகி படுத்தறடி.." என்று மனதுக்குள் புலம்பினான்.

 

"சொல்லு.. சொல்லு.. என்ன நெனச்சு சொல்லு!!" என்று விடாமல் கேட்க, சிரிப்பினோடு "எனக்கு இப்படி பண்ணா லிப்ஸ்டிக் போட்டு மறச்சுப்பேன்.. நீங்க லிப்ஸ்டிக்…" என்று சொன்னவுடன் அவள் காது பிடித்து திருகியவன் "உனக்கு கொழுப்பு டி!!" என்றவனுக்கு இப்பொழுது பெரும் யோசனை எவ்வாறு இந்த காயத்தை மறைக்க என்று!!

 

அருகில் உள்ள கண்ணாடியில் பார்த்தவன் "இப்ப எப்படி நான் ஆபீஸ்க்கு போவேன்? வெளியில ஆதினி வேற காட்ஸ் கிட்ட விட்டுட்டு வந்து இருக்கேன். இப்ப எப்படி எல்லாரும் முன்னாடியும் போவேன்.. உன்னை…" என்று வலிக்க அவள் கன்னத்தைக் கிள்ள…

 

ஆஆஆ என்று அவள் கத்தியவள் "இருங்க.. இருங்க நான் ஒரு ஏற்பாடு பண்றேன்" என்றவள் மாஸ்கை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

"இத போட்டுட்டு போங்க.. யாருக்கும் சந்தேகம் வராது!! எப்படி ஐடியா?"

 

"ம்ம்ம்… பரவால்ல உனக்கும் மண்டைக்குள்ள ஏதோ கொஞ்சம் சரக்கு இருக்கு!!" என்றவன் அவளை அணைத்து இரு கைகளிலும் அவளது கன்னங்களை தாங்கி, கண்களை ஆழ்ந்த நோக்கி "ஐ லவ் யூ மகி.. உனக்கு என்ன அன்னைக்கு அவ்வளவு கோபம்? வார்த்தையால் சொன்னால் தான் காதலா டி? வாழ்ந்து காட்டுவோமடி!!" என்றதும் ஏற்கனவே அவன் பால் விழுந்த மனது இன்னும் இன்னும் அவனின் அனுசரணையில் அரவணைப்பில் பித்தாகி போனது.

 

கண்கள் கலங்க நின்றவளை கண்டவன் இரு பெரு விரலால் அவளது விழி நீரை துடைத்து "நான் இருக்கும் வரை உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது சரியா?" என்று ஆணையிட்டான் ஆட்சியாளன்.

 

சிரிப்போடு தலையாட்டியவளை "பார்த்துக்கோ… பை!!" உள்ளங்கையை அவள் தலையை வைத்து ஆட்டியவன் நெற்றியில் முத்தமிட்டு "கொஞ்ச நாள் ஆகட்டும் உங்க வீட்ல வந்து பேசுறேன்.. ஒரு பெரிய கேஸ்ல மாட்டி இருக்கேன் அது எப்படியாவது சால்வ் பண்ணனும்!!" என்றதும் அவன் புஜத்தை பற்றியவள், சம்பந்தமாக தலையசைத்தாள்.

 

அதன்பின் ஒவ்வொரு மாதமும் அவர்கள் காதல் அலைபேசியில் வீடியோ காலாகவும்.. ஆடியோ காலாகவும் வளர்ந்து கொண்டே இருந்தது. 

 

இரவின் மடியில்… 

வெண்ணிலவின் ஒளியில்… கடற்கரை மணலில்…  

கடல் அலையின் ஓசையில்… 

மழையின் சலசலப்பில்… 

குளிர் காற்றின் நடுக்கத்தில்… 

 

அவர்கள் காதல் என்னும் பிறை நிலா மெல்ல மெல்ல வளர்ந்து முழு பௌர்ணமியாய் ஜொலித்துக் கொண்டிருக்க… அதை காரிருள் ஆக்க ஒருவன் இருப்பது அறியாமல் இன்னும் இன்னும் தங்கள் அன்பின் நேசத்தை.. காதலின் ஆழத்தை.. ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருந்தனர்.

 

ருத்ரன் எவ்வளவு வேலையில் இருந்தாலும், மதிய உணவு வேளையின் போது "சாப்பிட்டாயா மகி?" என்று போன் செய்து விடுவான். 

 

மாவட்ட ஆட்சியரே மறக்காமல் மதிய உணவு எடுத்திருக்க.. மருத்துவர் இவளோ பல நேரம் பசியினை மறந்து வேலையை ஆற்றி கொண்டிருக்க.. ஒரு நாள் போனிலேயே அவன் வாங்கு.. வாங்கு என்று வாங்கி விட்டான்!! 

 

அதன் பிறகு சரியாக..

ஒரு மணி அடித்தால்.. 

கண்ணே உன் ஞாபகம்.. என்று அவன் போன் கால் வந்துவிடும்!! ஒன்று அவனுடன் பேசிக்கொண்டு உணவை முடித்து விடுவாள். அல்லது சாப்பிடுகிற மாதிரி ஒரு செல்பி எடுத்தாவது அவனுக்கு போட்டு விட்டு விடுங்கள் அவனின் வேலையை புரிந்து..

 

இப்படியாக இவர்களின் புரிதலும் நேசமும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருந்தது வைரமென.. அந்த வைரத்தின் திண்மையை சோதிக்க என்று அடுத்தடுத்த நிகழ்வுகள்??

 

சோதனையை தங்களின் படிக்கட்டுகளாக மாற்றி காதல் வாழ்வில் வெல்வார்களா? அல்லது அச்சோதனையின் கணத்தை தாங்க முடியாமல் வீழ்வார்களா!

 

ஹர்ஷத் அந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. முதலில் மகதியை இம்ப்ரஸ் செய்ய வேண்டுமென வேலையை ஆரம்பித்தவன், அவனது வேலையில் ஒன்றி விட கிடைக்கும் நேரத்தில் தான் அவளை பார்த்தான்.

 

மகதியின் மனதில் முழுவதுமாக நீக்கமற ருத்ரன் நிறைந்து விட்டதால் ஹர்ஷத்தை அவள் கண்டு கொள்ளாமல் வெறும் ஹாய் பாயிலேயே சென்றுவிடுவாள்.

 

பெற்றோர்களுக்கும் பிடித்து விட்டது இவளுக்கு வேறு எந்த ஆஃப்ஸ்னும் இல்லை. கிட்டத்தட்ட இது ஒரு அரேஞ்ச்ட் மேரேஜ்!! கண்டிப்பாக முடியும் என்ற நம்பிக்கையில் தான் பாஸ்கரனும் ஹர்ஷத்தும் இருந்தார்கள்.

 

மகாதேவனின் மனதுதான் பக் பக் என்றது. எந்த நேரத்தில் அவரது லிட்டில் பிரின்சஸ் குட்டையை குழப்புவாளோ.. நமக்கு நாமத்தை சாத்துவாளோ என்று பயந்தே சுற்றிக் கொண்டிருந்தார். அதிலும் அதிகமாக ஹர்ஷத்தை மகதிடம் அண்டவிடாமல் செய்த புண்ணியம் அவரையே சாரும்!!

 

 மகளிடம் பேசினால் அவளது விருப்பமுமின்மையை கண்டு கொள்வாரோ என்று!! எப்படியாவது மகளை பல சென்டிமெண்ட் டயலாக் பேசியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் இருவருக்கும் இடையே அவர் வேலியை தடையாக போட்டு வைக்க‌‌.. அது வசதியானது அவரது வருங்கால மருமகன் ருத்ர பிரதாபுக்கு!!

 

இடையில் இரண்டு முறை ஆதினியை அழைத்து வந்து செக்கப்பும் செய்து விட்டான். அவளது உடல்நிலையில் எந்த பின் விளைவுகளும் இல்லாததால் குழந்தை ஆரோக்கியமாகவே இருந்தாள். போதாக்குறைக்கு தாத்தாவின் அன்பும்.. அடிக்கடி பேசும் மகதியின் அக்கரை கலந்த கவனிப்பும்.. தந்தையின் அரவணைப்புமே.. அவளை பழைய கவலைகளை மறக்கச் செய்து பட்டாம்பூச்சி என பறக்கச் செய்தது, அவளது குழந்தைகளின் உலகில்…

 

வீட்டில் நிம்மதி மாதிரி இருந்தால் ஆண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பெரும் நிம்மதி!! இப்பொழுது ஆதினியை பற்றிய கவலையை அறவே இல்லாமல் ஆகிருந்தார்கள் மகதியும் ராமஜெயமும். கூடவே இவனும் அவ்வப்போது அவளை வெளியே கூட்டி சென்றான்.

 

ஏதோ எதேச்சையாக வந்தது போல மகதியும் வந்து சேர்ந்து கொள்வாள். இந்த கள்ள பீஸ்களின் கள்ளத்தனத்தை அறியாமல் மகளும் மகதியைக் கண்டு சந்தோஷ கூத்தாடுவாள். பிறகு என்ன குடும்பமாய் சுற்றி விட்டு மாலை போல திரும்புவார்கள்.

 

"ருத்து.. இந்த மாசம் பேபிய செக்கப் அழைத்துவிட்டு வரும்போது அப்பாவிடம் ஒரு ஒப்பினியன் வாங்கிடுங்க.. மறக்காம.. சரியா? நான் மத்த பிள்ளைகளோட பேரன்ட்ஸ்க்கும் இன்பார்ம் பண்ணிட்டேன்" என்று அவள் போனில் சொல்ல..

 

"ஓகே. ஓகே!!" என்றவுடன் குரலில் இருந்த மாறுபாட்டை கவனித்து "என்ன ருத்து வேலை அதிகமா?" என்று கேட்க..

 

"ம்ம்ம்... இப்போ ஒரு கேஸ் சொன்னாலே.. அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. போன முறை ஐஸ்கிரீம்.. எந்த முறை பாக்கெட் ஐட்டம்ஸ் மாதிரி வைச்சிட்டானுங்க.. கொஞ்சம் பெரிய பிள்ளைங்க ஒரு அஞ்சு பேரு இதுல அஃபெக்ட் ஆகி இருக்காங்க.. வேற ஏரியால இன்னைக்கு தான் நியூஸ் வந்தது. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றான்.

 

"கவலைப்படாதீங்க!! சீக்கிரமே அவங்கள கண்டுபிடிச்சிடலாம்.. போன முறைக்கு இந்த முறை அலார்ட்டா இருந்ததால் தானே அந்த குழந்தைகளை சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டீங்க.. இல்லன்னா வெயிட் பண்ணி இருந்தா.. இந்த குழந்தைகளோட நிலைமை? அதை நினைச்சு சந்தோஷப்படுங்க. நீங்களும் உங்க டீமும் ஃபுல் ஃபார்ம்ல தான் இருக்கீங்க!!" என்று அவள் சிரித்து கண்ணடிக்க வீடியோ கால் வழியே அவளின் சிரிப்பும் அவனைத் தொற்றிக் கொண்டது.

 

தூங்கும் மகளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், பின்பு அவளை பார்க்க அந்தப் பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள் "கடமையில் இருந்து காதலுக்குத் தாவிட்டார் கலெக்டர்!!" என்று அவளுக்கு கிண்டல் அடிக்க..

 

அவனும் இரு கைகளையும் ஊன்றி அதில் தாடையை தாங்கியவாறு அவளை தான் இமைக்காமல் ஆழமாக பார்க்க.. அந்த கண்களில் இருந்து வந்த காதல் அவள் உள்ளத்தை அதிர செய்ய "ப்ளீஸ் வேணாமே..!" என்றாள் நாணத்தோடு.

 

"ப்ளீஸ் வேணுமே..!!" என்று ஒற்றை விரலை அவள் புரம் நீட்ட.. அவன் முகத்தில் கொட்டி கிடந்த காதலில் அசையாமல் பார்த்து இருந்தாள் மகதி.

 

"மகி…!!" என்று குழைந்து வந்த வார்த்தையில் மெதுவாக தலைநிமிர்த்தி பார்த்தாள், இன்னும் ஒரு விரல் அவளை நோக்கிப்படியே இருக்க.. மறுக்கிறத்தால் தனது முகத்தை தேய்த்துக் கொண்டான் ருத்ரன்.

 

அவளோ உதடு கடித்து சுவாரசியத்தோடு அவனை தான் பார்த்திருக்க.. "ம்ப்ச் மகி…" என்றவன் இரு கைகளாலும் சிகையை அளந்து தேய்த்து விட்டுக் கொண்டான். அவனின் இந்த செயல்களே அவன் அதிகமாக உணர்வு பிடியில் சிக்கித் தவிக்கிறான் என்பது மகதிக்கு தெளிவாக புரிந்தாலும், இந்நிலையில் என்ன செய்ய முடியும் என்று அமைதியாக பார்த்திருந்தாள்.

 

"இப்பவே வந்து உன்னை தூக்கிட்டு வந்து விடவா?" என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டவனை, கேள்வியாய் அவள் பார்க்க.. அவளின் இந்த பாவனையில் முழுதாய் தொலைத்தவன், அவளை நெருங்க முடியாமலும். விலகி இருக்க முடியாமலும் அவஸ்தைக் கொண்டான். 

 

அவனின் இந்த அவஸ்தையை கண்டு மகதி உள்ளுக்குள் தவித்து போக.. அவளின் தவிப்பை கண்கள் விழியே படித்தவன் மனதில் பனிச்சாரல்!!

 

"எப்ப வந்து உங்க அப்பாகிட்ட பேச?" என்றவனை அவள் நாணத்தோடு பார்க்க..

 

"ஏற்கனவே மாப்பிள்ளைனு ஒருத்தன கொண்டு வந்து உங்க அப்பா வச்சிருக்கார். என்னால ரொம்ப நாள் எல்லாம் தாங்க முடியாது. சீக்கிரம் வந்து நான் பேசுறேன்.. ம்ம்ம்!!" என்றான் ஒரு முடிவு எடுத்தவனாய்…

 

"நான் உங்களுக்கு பார்க்கிறதா? வீட்டுக்கு என்று பார்க்கிறதா? நான் அப்பாகிட்ட மெதுவா பக்குவமா சொல்றேனே" என்றாள் வருத்தமாக…

 

"நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா மகி?" என்று கேட்டவனை கண்டவள், முதலில் இல்லை என்றும் ஆமாம் என்றும் எல்லா பக்கமும் தலையசைக்க அதில் வாய்விட்டு சிரித்தான்.

 

அவனின் இந்த முழுமையான சிரிப்பை வெகு சில நாட்களாக தான் காண்கிறாள் மகதி. உள்ளிருக்கும் விரைப்பு அவனின் சிரிப்பை அவளை கட்டிப் போட்டது.

 

உணர்வுகள் தவிப்பு எல்லாம் குறைந்தாலும் அவளின் காதலை.. மனதினை.. அறிந்த பின்னால் அவளிடமிருந்து தள்ளி இருப்பதும், அவளையும் தள்ளி வைப்பதும் பெரும் அவஸ்தியாக இருந்தது ருத்ரனுக்கு.

 

முடிந்தளவு தன் உணர்வுகளை அவளிடம் காட்டாதிருக்க.. முயன்று தோற்றான். அதேசமயம் பிடிவாதமாக அவளை தன்னருகில் எடுத்துக் கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் நினைக்க மட்டும் தான் முடிந்தது. நினைவுக்கும் நிகழ்வுக்கும் இடையே அல்லாடி தவித்து போனான் ருத்ரன்.

 

இருவரது வாழ்வும் எந்தவித சங்கடமும் பிரச்சனையும் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு…

 

தானும் வருந்தி அவளையும் வருத்த வைக்க பிடிக்காதவனாய், காதலனாய் மாறி அவளை வீடியோ காலில் கொள்ளை கொள்ள ஆரம்பித்தான் ருத்ரன். சிறு சிறு பேச்சுகளும்.. சீண்டல்களும்.. சிணுங்கல்களும் என்று அவர்களது இரவை நீடிக்க செய்தது.

 

நாட்கள் இப்படியே நகர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் விதி தன் விளையாட்டை ஆரம்பித்து வைக்க.. அடுத்த முறை ஆதினி அழைத்துக் கொண்டு செக்கப் சென்றவன் மகாதேவனிடமும் குழந்தையை காட்டினான். அவரும் ஆதினியை செக்கப் அப் பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் தட்டி "சூப்பரா இருக்கா பாப்பா.. இனி சிக்ஸ் மந்த் ஒன்ஸ் வந்தா போதும்" என்றார்.

 

அதே நேரம் அங்கிள் என்று உள்ளே நுழைந்த ஹர்ஷத் ருத்ரனை எதிர்பார்க்கவில்லை அதுவும் கையில் குழந்தையோடு!!

 

ருத்ரனுமே ஹர்சத்தை கண்டு கோபத்தை அடக்கி கொண்டு இருந்தான். அதிலும் அவனின் உரிமையான அங்கிள் என்று அழைப்பு.. ஒருவேளை இவன்தான் மகதிக்கு பார்த்த மாப்பிள்ளையோ? என்று எண்ணம் தோன்ற.. அதுவே அவனை இன்னும் வெறியாக்கியது ஹர்ஷத்தின் மீது!!

 

ருத்ரனின் கோபத்தைக் கண்ட ஹர்ஷித் எள்ளலாக "ஓ.. நீ இன்னும் இந்த சென்னையில் தான் சுத்திகிட்டு இருக்கியா?" என்று அவன் அருகே நெருங்கி ஆதினியை பார்த்தவன் "உன் பொண்ணா?" என்று கேட்டதும், ஆதினியை இறுக பற்றிக் கொண்டான் ருத்ரன்.

 

"எப்படிடா? இப்படி கூச்சமே இல்லாம பப்ளிக்கா இது என் குழந்தைனு சொல்லிக்கிட்டு திரியுறா? அதுவும் என் மனைவிக்கு பிறந்த உன் இல்லீகல் கிட்!!" என்றதும்.. 

 

"ஹர்ஷத்.. யூ ஸ்கவுண்ட்ரல்!!" என்று அவன் சட்டையை பிடித்து விட்டான் ருத்ர பிரதாப் ருத்ரனாக…

 

மகாதேவன் அதிர்ந்து நிற்க..

"அப்பா…" என்று உள்ளே நுழைந்த மகதி, இவற்றை கேட்டுவிட்டு கையில் இருந்த கோப்புகளை தவற விட்டாள்!!

 

தவறவிட்டது கோப்புகளை மட்டுமா இல்லது ருத்ரனுடன் ஆன காதலையுமா??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top