அத்தியாயம் 16
ருத்ரனின் அணைப்புக்குள் முழுமையாக வந்திருந்தாள் பெண்!! மன்னவனுக்கு தயக்கம் உடைந்தது. அவளின் தயக்கத்தையும் தடைகளையும் முறியடித்து.. அவள் உதடுகளை கவ்விக் கொண்டு உறிஞ்சிலானான்.
நீண்டி நெடிய முத்தம்!!
உயிர் உறியும் ஒற்றை முத்தம்!!
வன் முத்தங்கள் கூட காதலின் சொச்சங்கள் தானாம்!!
இது நாள் வரை அவன் மனதில் இருந்த குழப்பம் வேதனை வலியெல்லாம் இந்த ஒற்றை முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தது போலவே உணர்ந்தான் ருத்ரன்!! அவன் தேடி அவனுக்கே அவனுக்கான இடம்.. இதயம்… கிடைத்ததாகவே உணர்ந்தான்!!
அவளின் அருகாமையும், ஸ்பரிசமும் எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது. அவன் உடம்பு பஞ்சு போலாகி காற்றில் பறந்து.. மேகத்தில் மிதந்து.. வானில் உலா வந்தது போல உணர்ந்தான். கண்களை மூடி அவ்வுணர்வுகளை ரசித்தான்!! மனதுக்குள் ஆர்ப்பரித்தான்!!
அவளின் தேனிதழ்களின் காதல் இரசத்தை கவ்வி உறிய உறிய அது அமுதத்தை வழங்கிக் கொண்டே இருந்தது. அவளது மூச்சுக் காற்றும் அவனது மூச்சுக் காற்றும் சூடாக முகத்தில் அறைய மிக ஆழமாக முத்தமிட்டு கொண்டே இருந்தான். இனிய இத்தருணம் நீள வேண்டும் முடிவே கூடாது என்று!!
மெல்ல அவனது முகத்தை பிரித்தெடுத்தவன் அவளை தான் பார்த்தான்.
கண்கள் சிவக்க..
கன்னங்கள் கனிய...
உதடுகள் துடிக்க…
மூக்கு விடைக்க..
இதழ்கள் இரண்டும் அவனது முத்தத்தால் பளபளவென்று இருக்க…
மார்புகள் விம்மி தணிய..
அவனைத் தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் மாது!! அவளது முறைப்பையெல்லாம் இவன் கருத்தில் கொள்ளவே இல்லை. காதல் மட்டுமே கொண்டிருந்தான் காரிகை மீது!!
முத்தத்துக்குப் பின் முறைத்துக் கொண்டு நின்ற அவளின் கோபத்தை அவ்வளவு ரசித்தான்.
"மகி…" என்று குழைந்து வந்தது அவனது வார்த்தை.
ஒற்றை விரல் கொண்டு அவள் போட்டிருந்த ஜிமிக்கியை காது மடலோடு மெல்ல வருடினான். அதில் அவள் கூசி சிலிர்க்க…
முகத்தில் பரவி.. வியர்வையில் விரவி.. ரவிவர்மன் ஓவியமாய் கலைந்திருந்த அவளது காதோர உதிரி முடிகளை மெதுவாக இழுத்து சுருட்ட, அவளின் தேகம் தகிக்க..
அவளது குட்டி மூக்கின் முனையை வருட அவள் மூக்கை உறிஞ்சி திருப்ப..
துடித்துக் கொண்டிருந்த உதடுகளை தடவினான் கிறக்கமாக.. அவளோ சட்டென்று அக்கோவை இதழ்களை உள்ளிழுத்துக் கொள்ள..
சின்ன சிரிப்புடன் அவள் மோவாயில் நிமிண்டி விட்டு சங்குகழுத்து வழியாக அவ்விரலை கொண்டு சென்றவன், பிறந்த குழந்தையை வருடுவது போல அவளது சங்கு கழுத்தை நீவி விட, அவனது விரல் நடத்தும் நர்த்தனங்களின் உணர்வுகள் தாங்க இயலாமல் மகதி நயனங்களை மூட...
அவள் கழுத்தில் இருந்த செயினை வருடி அதன் விளிம்பில் விரலிட்டு கொண்டான் உரிமையாய்!! அவளது சிலிர்ப்பை ரசித்துக் கொண்டே.. மூடியிருந்த நயனங்களுக்குள் கருவிழிகள் கயலாய் இங்கும் அங்கும் அலைந்தது!!
உச்சப்பட்ட உணர்ச்சி பெருக்கில் தகித்து தவித்து அதை தாங்க இயலாமல் விரல்களால் உள்ளங்கையில் இறுக்க மூடியப்படி நின்றிருந்தாள் மகதி!!
*மகி.. மகி…" என்றவன் அதி மென்மையாக அழைத்தான்.
அவ்வார்த்தையின் குழைவில் அவள் உள்ளம் பாகென கரைந்து வழிய… ஆனால் இழுத்துப் பிடித்து நிறுத்தினாள் பெண்!!
ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு.. அது அவனின் இந்த நெருக்கத்தால் அல்ல!! அந்த நெருக்கத்திற்கான மனதை திறக்காமல் இருப்பதால்… 'பெரிய அலாவுதீன் குகை பூட்டி வச்சுருக்கார்!!' இவ்வளவு நெருக்கத்திற்கு பிறகும் மனதைத் திறக்காமல் இருக்கும் ருத்ரனின் மீது அவ்வளவு ஆற்றாமை கோபம் வலி எல்லாம் கலந்து அவற்றை கண்களில் தேக்கி அவனை பார்த்தாள்.
பெரும்பாலும் பெண்களின் மனதினை அக்காலம் தொட்டு இக்காலம் வரை படித்த முழு ஆண்மகன் எவனுமே கிடையாது!! எகாலத்திலும் கிடையாது!! அவர்கள் மனதினை உள்ளத்தினை காதலைப் பூட்டி காமத்தை ஏற்றி மோகத்தை கலந்து ஒற்றை முத்தத்தில் சொல்லிவிடுவார்கள்!!
பேதைப் பெண்ணவள் மனது முத்தத்தை தாண்டியும் வார்த்தையால் கேட்க விரும்பும்!! அவன் காட்டும் உணர்வுகளில் கட்டுண்டாலும் அவற்றை வாய் வார்த்தையால் கேட்க தவிக்கும்!! எதிர்பார்க்கும்!!
ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய.. பெரும்பாலான ஆண் மகன்கள் தவறி விடுகிறார்கள். ருத்ரனை போல…
இவ்வளவு உரிமையாய் மனதினை காட்டியும் இவள் விலகி நிற்கிறாளே என்று வருத்தம் கொண்டது ருத்ரனின் மனது. ஒருவேளை இரண்டாவது என்று நினைத்து கவலை கொள்கிறாளோ? என்ற நினைத்த மாத்திரத்தில் சற்றே அவளிடம் இருந்து விலகி நின்றவன், "மகி… நான் செகண்ட்ஹாண்ட்னு நினைத்து…." என்று அவன் முடிக்கும் முன் அவன் கன்னத்தில் பட்டு என்று ஒரு அறை விட்டாள்.
"ஆதனி இருக்கானு எதுவும் நினைக்கிறாயா?" என்று அடித்த கன்னத்தைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அவன் தவிப்போடு கேட்க.. இப்பொழுது மற்றொரு கன்னத்தில் பட்டு என்று ஒரு அறை விட்டாள்.
"இல்லை நந்தினி மனதில் வைத்துக் கொண்டே உன்னோடும் குடும்பம்…" என்று மீண்டும் எப்படி விளக்குவது என்று புரியாமல் இரு கன்னங்களையும் இரு கைகளை பொத்திக்கொண்டு அவளை பார்க்க.. இப்பொழுது பட்டு என்று வாயில் ஒன்று கொடுத்தாள்.
அவளின் அடியில் இருந்து தான் தவறாக பேசுகிறோம் என்பது அவனுக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் மனதின் மூலையில் இருக்கும் அந்த கேள்விகளை கேட்டு தெளிய வேண்டும் என்று நினைத்தான்.
"போயா…" என்று அவள் விலகி செல்ல முனைய... எட்டி அவள் கைகளை பிடித்து கண்களில் இறைஞ்சதலோடு அவன் பார்க்க.. அவள் மசியவே இல்லை. முகத்தை திருப்பி கொண்டு நின்றாளே தவிர அவனை திரும்பி பார்க்கவே இல்லை.
"நாளைக்கு ஆதினிக்கு டிஸ்ஜார்ஜ் டி.. அதுக்கு அப்புறம் உன்னை பாக்கறது ரொம்ப கஷ்டம்" என்றவன் நொடி பொழுதில் பின்னிருந்து அவளை இறுக்கமாக அணைத்து இருந்தவனின் தாடை அவள் தோளில் தஞ்சம் அடைய.. அவனின் மூச்சுக்காற்று அவளது காது மடலை தகிக்க வைத்தது.
'இப்பவும் இவன், இவனைப் பற்றி தான் நினைக்கிறான். என் மனதை பற்றி கொஞ்சம் கூட கவலையே படவில்லை. இவன் எல்லாம் என்ன மனிதன்? இதில் ஒரு மெச்சும் கலெக்டர் வேறு!!' என்று பற்களை நறநறவென்று அவள் கடிக்கும் சத்தம் அவன் காதில் கேட்க..
"என்னமோ என்னை தான் பாசமா திட்றேன்னு மட்டும் புரியுது. ஆனா எதுக்கு திட்டறன்னு தான் புரியல?" என்றவன் இப்போது தாடையை மற்றொரு தோளுக்கு மாற்றி வைத்து அழுத்தமாக அவளது கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.
"ஆபீஸ் வேலைய மட்டும் தான் இந்த ஆண்கள் சும்மா பிரிச்சு மேய தெரியும். குடும்ப சிக்கல்கள் அரசியல்கள் எல்லாம் புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டமடி!! அதுவும் அம்மா அப்பா இல்லாமல்.. குடும்ப சூழ்நிலை இல்லாமல் வளர்ந்தவன் நான்!! என் பொண்ணும் என்னை மாதிரி தான்…" என்றவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் முள்ளென தைத்தது.
அவனின் வருத்தத்தில்.. வலியில் தான் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் தான் நினைக்கிறாள். ஆனால், அதை அவன் உணர வேண்டும் அல்லவா? 'கடந்து நல்லா அனுபவிக்கட்டும்!! ஒரு நாலு நாள் தனியா தவிச்சா தான் இவனுக்கெல்லாம் புத்தி வரும்' என்று நினைத்தவள், அவன் கையை விலக்கி விட்டு "ஆதினி தனியா இருப்பா… கிளம்புங்க!!" என்றாள்.
'இவ்வளவு ஹாட் பர்பாமென்ஸ் பண்ணியும் இவ என்ன இன்னும் விரைப்பாக நிற்கிறா?' என்று நினைத்தவன், "ருத்ரா உன் பர்ஃபார்மன்ஸ் பத்தலடா!! எதுக்கும் கிளம்பும் போது உனக்கு ஹெவியா கொடுத்துட்டே கிளம்பு!!" என்று மனசாட்சி கூற.. அவளது முகத்தை தன் புறம் இழுத்து அழுத்தமாக அவள் இதழில் தன் தடயத்தை பதித்து விட்டே ஒரு குட் நைட்டோடு சென்றான்.
"ராட்சசன்.. ராட்சசன்.. எப்படி கடிச்சு வச்சிருக்கான் பாரு?" என்று மீண்டும் கண்ணாடி முன் நின்று புலம்பினாள். அவனுக்கு பதில் குத்தி கிழிப்பதற்கு இன்று பொம்மை இல்லை. அது வீட்டில் அல்லவா இருக்கிறது? என்று நினைத்தவள், சிரித்துக்கொண்டே "அங்கிள் அனுபவிக்கட்டும் அப்பதான் ஆள் மனசுல இருக்குற காதல் பொங்கி வந்து வாய் வார்த்தையா விழும்!!" என்று அமைதியாக இருந்தாள் அடுத்து வந்த பத்து நாட்களும்..
ஆதினி இப்பொழுது முழுமையாக குணமடைந்து இருக்க.. சொர்ணாமாவின் கவனிப்பில் அரவணைப்பில் விட்டிருந்தாலும் ராமஜெயமும் எப்பொழுதும் கூடவே இருந்தார். அது மட்டும் அல்லாமல் இவர்களை தூரத்திலிருந்து கண்காணிக்க ஒரு காவல் ஆளையும் ஏற்பாடு செய்திருந்தான் சூரிய பிரகாஷ்.
பத்து நாட்களுக்கு கழித்து அடுத்த ரிவியூவுக்கு வர சொல்லி இருந்தார்கள் மருத்துவமனையில் ஆதினிக்கு. ஆனால் அந்த ஒரு வாரம் முழுவதும் ருத்ரனை அவன் வேலை இழுத்துக் கொண்டது முக்கியமாக இந்த போதை மருந்து கும்பல்..
எப்படி வலை விரித்தும் அவர்கள் சிக்கவே இல்லை. பெரும்பாலும் இதில் சிக்கியது எல்லாம் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் வேலை இல்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மட்டுமே!! அதுவும் அவர்களுக்கும் தெளிவாக தெரியவில்லை. 'இந்த இடத்தில் இந்த நபரிடம் கொடுக்க வேண்டும்!' என்கிற தகவல் மட்டுமே அவர்களுக்கு பொருளோடும் பணத்தோடும் வந்திருக்க… பணத்திற்காக அவர்களும் அவ்வேலையை செய்தனர். இதில் சில பேர் அப்போதைக்கும் அடிமையாகி அதை பெறுவதற்காகவே இவ்வேளையை செய்ய.. சூரிய பிரகாஷுக்கு தான் வேலை அதிகமாகியது.
சூரிய பிரகாஷ் ருத்ரன் முரளிதரன் இன்னும் இரு அதிகாரிகள் மட்டுமே இருக்கும் சீக்ரெட் மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க.. சூரிய பிரகாஷ் இதுவரை தான் கண்டுபிடித்த விஷயங்களை எல்லாம் கூற கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தித்திக்கின்றானது. மொத்தமாக எதிர்கால சமூகத்தை குறி வைத்து தாக்கும் இந்த கும்பலை எப்படி பிடிப்பது என்று பெரும் யோசனை கூடவே இதை எப்படி தடுப்பது என்றும்!!
முரளிதரனை பார்த்த ருத்ரன் "சார் சிட்டில இருக்கிற பிள்ளைகள் சாப்பிடற ஐஸ்கிரீம் பார்லர்.. ரோட்டில் ஐஸ்கிரீம் விக்கிறவன் இப்படி யார் கண்ணுல பட்டாலும் அவர்களை செக் பண்ண சொல்லுங்க… சந்தேகப்படம்படி யாரு நடந்தாலும் சரி, உடனே கைது பண்ண சொல்லுங்க" என்று அவருக்கு ஆர்டர் போட்டவன், அடுத்து சூரிய பிரகாஷ் பக்கம் திரும்பி "நீங்க ஒரு டீம் ஃபார்ம் பண்ணுங்க எஸ்பி!! அதுவும் வேலையில்லாம சுத்தற மாதிரி நம்ம டிரெயின்ட் பர்சன்ஸ் வச்சு.. அப்புறம் இப்ப மாட்டி இருக்கிற ஸ்டூடண்ட்ஸ் எந்தெந்த காலேஜ் விசாரிச்சு, அந்தந்த காலேஜ்லையும் என்சிசி என்எஸ்எஸ் ப்ரோக்ராம் ஸ்டுடென்ட்ஸ் இருப்பாங்க.. அவங்கள பிட் ஆனவங்களை கொஞ்சம் செலக்ட் பண்ணி அவங்க காலேஜ்ல நடக்குற விஷயங்களை நோட் பண்ண சொல்லுங்க!! அது தவிர இன்னும் சில பசங்கள இந்த ட்ரக்ஸ் எடுக்குற மாதிரியே நடிக்க சொல்லி அவங்களுக்கு வலை விரிப்போம்!!" என்றதும் சூரிய பிரகாஷூக்கும் இந்த யோசனை பிடித்து விட... "எஸ் சார்!!" என்று அவனும் அவ்வேலையை பார்க்க சென்று விட்டான்.
முரளிதரனும் தன் காவல் துறையின் அதிகாரத்தை பயன்படுத்தி ருத்ரன் சொன்னவற்றையெல்லாம் செயல்படுத்தினார். அதில் அக்கும்பலும் சற்று தங்கள் வேலைகளை குறைத்துக் கொண்டு, ஐஸ்கிரீம் விடுத்து இப்பொழுது வேறு வழியை தேடினர். அதுவும் பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் பொருட்கள் எது வென்று…
எவ்வளவுதான் வேலை இருந்தாலும் இரவு வந்து தன் மகளுடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு தான் உறங்க செல்லுவான் ருத்ரன், ஏற்கனவே மகளின் மனதில் இருக்கும் அந்த தனிமையை விரட்ட…
இப்பொழுது ராமஜெயம் வந்திருந்ததால் குழந்தையை கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு அவர் பார்த்துக் கொள்ள சற்று நிம்மதியாக இருந்தாலும் மனதில் ஓரத்தில் அந்த சுண்டலி பிராண்ட தான் செய்தாள்.
பத்து நாளுக்கு கழித்து தானே அன்று மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ருத்ரன்.
அதற்குள் ஹர்ஷத் அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவராகவே மாறி இருந்தான். கைனகாலஜிஸ்ட்டான அவனுக்கு என்று தனியாக ஒரு கேப்பின் ஒதுக்கி கொடுத்திருந்தார் மகாதேவன் வருங்கால மாப்பிள்ளைக்கு என்று!! ஆனால் மகளின் முகத்தில் இருந்து அவரால் எதையும் கண்டு கொள்ளவே முடியவில்லை. சரி விட்டு பிடிப்போம் என்று அவரும் இருக்க… இனி பிடிக்கவே முடியாது என்று அவருக்கு தெரியாமலே போகப்போகிறது.
வழக்கம் போல மகதி தன் ஓபி எல்லாம் முடித்துவிட்டு அமர்ந்திருக்க "டாக்டர் இன்னைக்கு அந்த ட்ரக்ஸ்னால அஃபெக்ட் ஆகி குணமான குழந்தைகளை ரிவியூவுக்கு வர சொல்லிருந்தீங்க... அவங்க பேரண்ட்ஸ் எல்லாம் வெளிய வெயிட் பண்றாங்க.. நான் அனுப்பட்டுமா?" என்று செவிலியர் கேட்க..
"ஆமாம் இல்ல.. மறந்தே போய்ட்டேன்.. அனுப்புங்க சிஸ்டர்" என்றாள் மகதி!!
ஒவ்வொருத்தராக தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வர அனைவருக்கும் அனைத்து சோதனைகளையும் செய்து பார்த்தாள். கூடவே அவர்கள் எடுத்து வந்திருந்த லேப் ரிப்போர்ட்டையும் பார்த்தவள், "குழந்தைகள் ஆரோக்கியத்தில் நன்றாக முன்னேறி இருக்கிறார்கள். பயப்படத் தேவையில்லை. ஆனாலும் கொஞ்ச நாள் மாதத்துக்கு ஒரு முறை வந்து இதுபோல் காண்பித்து விட்டு செல்லுங்கள்" என்று அறிவுரை வழங்கினாள்.
இன்னும் ருத்ரனும் ஆதினியும் வரவில்லை. "எல்லாரும் வந்திட்டு போயிட்டாங்க.. என்ன இவங்கள காணும்?" என்று வாசலையும் வாட்ச்சையும் மாறி மாறி அவள் பார்த்து இருக்க, "மே ஐ கம் இன் டாக்டர்..?" என்ற ஆளுமையான குரலில் அத்தனை பரவசம் அவளுள்!!
அவனைப் பார்த்த பரவசத்தில் அவளின் கண்களின் ஓரத்தில் லேசான நீர் தேக்கம் உருவாவதை கவனித்தான். "ராட்சசி… மனதுக்குள் தவிக்கிறா.. ஆனால் ஒத்துக்க மாட்டேங்குறா!!" என்று முணுமுணுத்தான்.
அவள் கையை அழுத்தி ஆறுதல் அளித்து, அவளை இழுத்து நெஞ்சுடன் சேர்த்து இறுக்கி அணைத்து தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஒரு தாபம் அவன் நெஞ்சில் மூண்டது.
அவன் நெஞ்சில் ஓடிய அதே எண்ணங்கள் தன் நெஞ்சிலும் ஓடியதைப் போலவே அவன் கண்களை ஆழமாகப் பார்த்து சிலிர்த்து நின்றாள் மகதி.
பத்து நாள் பார்க்காததினால் சோர்வுடன் சற்றே இளைத்து காணப்பட்ட அவளின் சோபை தோற்றத்தை ரசித்தது அவனது காதல் மனம்!!
பெண்மைக்கே உரித்தான உடலின் வளைவுகளும்.. நெளிவுகளும்.. அவனின் மோகத்தை ஏற்ற "யப்பா..!! எப்படி இருந்தாலும் ஆளைக் கொல்லுறா.. ராட்சசி!!" என்று மனதினில் கொஞ்சிக் கொண்டே அவளை நெருங்கினான் அருகில் ஆதனி.
"ஹாய் டாக்டர்…!!" என்று இவன் பார்முலாக அழைத்து இருக்கையில் அமர.. ஆதினியும் சிரிப்புடன் ஓடி சென்று அவள் அருகில் நிற்க.. இவள் பேபி என்று அழைத்து தூக்கி கொண்டாள். நேரில் பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஆதினியோடு இவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது ருத்ரனுக்கு தெரியும்.
இங்கேயும் அவன் அழைத்ததை கவனிக்காமல் இவள் ஆதினியோடு தான் கதைத்துக் கொண்டிருந்தாள். தங்களின் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இரு ஜீவன்களையும் தொண்டையை கணைத்து நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தான் கலெக்டர்.
"நானும் இங்கே தான் இருக்கேன்!!" என்றான்..
"சோ வாட்?" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில் பின்பு ஹை ஃபை கொடுத்துக் கொள்ள..
"நாளைக்கு என் பாடு கொஞ்சம் கஷ்டம் தான் போல.." என்று சத்தமாகவே முணுமுணுத்தான் அவள் காதில் விழ வேண்டும் என்றே..
"இட்ஸ் ஆல் ஃபேட்!!" என்று அவளும் சத்தமாக முணுமுணுக்க..
"அப்படியெல்லாம் தனியாக இருக்க மாட்டேனாக்கும். நாங்களும் எங்களுக்கு ஆள் ரெடி பண்ணி போக்குவோமில்ல?" என்றதும் அவள் முறைத்தாள்.
அவன் சொன்னதோ இன்னொரு குழந்தையை பற்றி அவள் எண்ணியதோ வேறொரு ஆளை அவன் கரெக்ட் செய்து கொள்வான் என்று நினைப்பில்.."எதற்கு திடீர்னு முறைக்கிறாள்? ஓஹ்.. கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தையை பற்றி பேசியதுக்காக முறைக்கிறாளாக்கும்!!" என்று இவன் சிரித்தான்.
அதன் பிறகு ஆதினியை பரிசோதித்து "ரொம்ப ஹெல்த்தியா இருக்கா!! ஆனாலுமே கொஞ்ச நாளைக்கு மன்த்லி ஒன்ஸ் செக்கப் கூட்டிட்டு தான் நீங்க வரணும். ஓகே பேபி?" என்று அவனில் ஆரம்பித்து ஆதினியில் முடிக்க ஓகே டாக்டர் என்று அவன் கிளம்ப..
அவள் முகத்தில் பெரும் தவிப்பு உடனே கிளம்புகிறாயா என்று!!
"இப்படி பார்த்தால் எப்படி டி போறது?" என்று இருக்கையில் அமர இவளோ ஆதினியை தான் மடியில் அமர்த்தி பேசிக்கொண்டிருந்தாள் இவர்களுக்குள் ரகசிய சிரிப்பும் அவ்வப்போது வெடித்தது.
ஆனால் கண்கள் அவனை தான் தழுவி தழுவி மீண்டது.
"பத்து நாளைக்கு அப்புறம் பார்க்கிறோம் அப்பையாவது ஏதாவது சொல்றாளா பாரு?" என்று ருத்ரன் தனக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது மகதியின் சீனியர் டாக்டர் ரீவா அங்கே வர..
ருத்ரன் ரீவாவைப் பார்த்து சிரித்து நலம் விசாரித்தான். அவளும் சிரித்து பேச.. ஓரக்கண்ணால் மகதியை பார்த்துக்கொண்டு இவனும் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
பொதுவாக இப்படி யாரிடமும் பேசாதவன்.. பேச விரும்பாதவன் அவன்!! ஆனால் ஆதினியை பார்த்துக் கொண்ட பொறுப்பில் இப்பொண்ணிற்கும் பங்கு உண்டு அல்லவா? அந்த மரியாதை நிமித்தம் பேச.. அவ்வப்போது மகதியின் கண்களில் வந்து சென்ற அந்த பொறாமையை கண்டு இன்னும் பேச்சை வளர்த்தான்.
மகதியோ குழப்பமான மன நிலைமையுடன் அவர்களின் உரையாடல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுள் ரகசிய சிரிப்பு ஒன்று மீசைக்கு அடியில் நெளிந்தது.
"மிஸ் ரீவா.. உங்களை நான் ஒண்ணு கேக்கணும்?"
"ம்ம்.. கேளுங்க?"
"உங்களுக்கு பாய் பிரெண்டு இருக்காரா?"
அவன் ரீவாவைக் கேட்ட அடுத்த நொடியே 'பக்' கென திரும்பி பார்த்தாள் மகதி, 'இப்போ இதை தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்?' என்ற கேள்வி அவளது கண்களில்...
"ஏன் இப்படி கேக்கறீங்க சார்?" என்று ரீவா புரியாமல் விழிக்க…
"எனக்கும் கேர்ள் பிரெண்டு இல்ல.. அதான்…" என்றான் சோகமான குரலில்.
"அப்ப.. ஆதினி.. அம்மா…" என்று ர்வா இழுக்க..
"நந்தினி… ஷி இஸ் நோ மோர்!!" என்றான் வருத்தமாக..
"சோ.. சாரி!!" என்று ரீவா வருத்தமாக கூற, பொச பொசவென பொசசிவ்னஸ் பொங்கியது மகதிக்கு.
"இப் யு டோன்ட் மைண்ட்.. ஒரு டேட்டிங் போலாம் தான் கேட்டேன்.. பிடிச்சிருந்தா.. ஃபர்தரா பிராசஸ் பண்ணிக்கலாம்!!" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு ருத்ரன் கேட்க..
ரீவா உடனே மலர்ந்தாள்.
"எனக்கு பாய் பிரெண்டெல்லாம் கிடையாது சார். நோ ப்ராப்ளம்… எனக்கும் இந்த டீலிங் பிடிச்சிருக்கு" என்று சிரித்தாள் அவள்.
"அப்போ கம்மிங் சண்டே நான் ஃப்ரீ தான்… நீங்க ஃப்ரீயா?" என்று கேட்டான் ருத்ரன்.
"கலெக்டர் நீங்களே ஃப்ரீயா இருக்கும்போது நான் ஆல்வேஸ் ஃப்ரீ.. அதுவும் உங்களுக்காக!!" என்று கண்ணடித்தவளை கண்டு மகிழ்ந்தவன், "அப்போ சன்டே மீட் பண்ணலாம்.. பை!!" என்று கிளம்பினான்.
தன் அதிர்ஷ்டத்தை நம்பவே முடியாமல் வாயெல்லாம் பல்லாக நின்
றிருந்த ரீவாவின் கழுத்தினில் என்னமோ தட்டுப்பட.. என்ன என்று குனிந்து பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்!!
மகதி தான் கத்தியை அவள் கழுத்துக்கு நேராக பிடித்திருந்தாள்!!