மோகங்களில்… 16
இடது கண்ணோரம் ஒரு துளி கண்ணீர் தேங்கி நிற்க “எப்போ வருவீங்க?” என்று கேட்டவளை கண்டவன், “சீக்கிரம் வர பார்க்கிறேன் அனு” என்று ஃபோனை வைத்திட்டான் தான். ஆனால் அவளின் அந்த கலங்கிய முகமும் தழுதழுத்த குரலும் அவனை இம்சித்துக் கொண்டே இருந்தது. சற்றே இனிமையாய்…
கொஞ்சம் அவஸ்தையாய்…!!
இடைவிடாத கன மழையினால் இன்னும் விமான போக்குவரத்து முடங்கி தான் இருந்தது சென்னையில். ஆனால்.. துருவால் அங்கே இருக்கவே முடியவில்லை. சுகனிடம் “சென்னைக்கு உடனடியாக போக வேண்டும்! எந்த வழியில் போகலாம்னு பாரு” என்று அவசரப்படுத்தினான், அவனை துரிதப்படுத்தினான்.
நேற்று இரவு தன் பாஸின் அந்த அலறலையும்.. அதற்கு பின்னால் அவனின் தேடலையும்.. கேட்டால் கெட்ட கனவு என்று சமாளித்தலையும்.. கண்டு ஓரளவு விளங்கியது துருவின் மனது! ஆனால் விளங்கியது தான் விகற்பமாக இருந்தது. இது சாத்தியமா? நடக்குமா? என்று தெரியவில்லை!!
ஆனால் தன் பாசமிகு பாஸ் குடும்பம் பிள்ளைகள் மனைவி என்று சந்தோஷமாக இருந்தால்.. தனக்கும் சந்தோசம் தான் என்று நினைத்தவன் பல டிராவல்ஸை நாடினான் பணத்தை பாராமல்.. சென்னைக்கு போவதற்கு ஏற்பாடு செய்ய சொன்னான்.
சிங்கப்பூர் மட்டுமல்லாமல் சென்னையில் இருக்கும் டிராவல்ஸிலும் சிங்கப்பூரிலிருந்து வருவதற்கு ஏற்பாடு செய்ய எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி “இப்போது விமான சேவை.. சென்னைக்கு இல்லை! சாரி சார்” என்றனர்.
“சார் டேரக்ட்டா சென்னை போக இப்போது விமானசேவை இல்லை தான். ஆனா.. திருச்சி பெங்களூர் திருப்பதி இதில் ஏதேனோ ஒன்றுக்கு சென்று.. அங்கிருந்து சென்னை போக ஏற்பாடு செய்யலாம்” என்று ஒரு டிராவல்ஸில் மட்டும் ஆலோசனை கூற… திருப்பதிக்கு இரண்டு டிக்கெட் பதிவு செய்துவிட்டு வந்து துருவிடம் அனைத்தையும் கூறினான்.
சுகனின் இந்த புத்திசாலித்தனத்தை கண்டு புகழ்ந்தான் துருவ். ஒரு வழியாக சிங்கப்பூரில் இருந்து திருப்பதி வந்து சேர்ந்து விட்டனர். ஆனால் அங்கிருந்து வெறும் 150 கிலோமீட்டர் கூட இல்லாத சென்னைக்கு வர தான் பெரும் பாடுபட்டனர்.
சென்னை வரும் வழியெல்லாம் தீராத மழை.. தேங்கிய வெள்ளம்!!
அதனால் சாலைகள் வழித்தடங்கள் தெரியாமல் தண்ணீர் தேங்கி நின்று வழியே தெரியாமல் ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு பக்கமும் சாலைகளை மூடப்பட்டு வழித்தடங்கள் மாற்றப்பட்டு காவல்துறையால் வேறு வழியில் அனுப்பப்பட… சுற்றி சுற்றி சுழன்றனர். அத்தனையையும் துருவ் தாங்கிக் கொண்டே பிடிவாதமாக பயணத்தை தொடர்ந்தான்.. அனுவின் அந்த குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது! அவனை துரத்திக் கொண்டே இருந்தது!!
மூன்று மணி நேரத்தில் செல்லக்கூடிய சென்னைக்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களாக பயணித்தனர் துருவும் சுகனும்.
அதிலும் எத்தனை எத்தனை தடைகள்!! சில இடத்தில் இவர்கள் வந்த வண்டி இதற்கு மேல் முடியாது என்று சொல்லி விட.. இறங்கி சிறிது தூரம் அந்த மழையையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் நடந்தே வந்தனர் இருவரும். இன்னும் சில இடங்களில் ஆட்டோ டாக்ஸி என்று கிடைத்தவற்றில் எல்லாம் பயணம் செய்து ஒரு வழியாக சென்னைக்குள் நுழைந்ததும் தான்… அதுவரை முட்டிக் கொண்டிருந்த சுவாசம் சீரானது துருவுக்கு.
“ம்ம்ம்… சென்னை வாசம்!!”
சுகன் இங்கு வந்தால் எப்போதும் தங்கும் பவுன்சர்களுக்கு என்று இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தங்க சொல்லிவிட்டு.. இவனிடம் இருக்கும் சாவியை கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் துருவ்.
என்னதான் உடைக்கும் மேலே ஜெர்கின் போட்டு இருந்தாலும் அனு பற்றிய சிந்தனையில் பல நேரங்களில் அதை சரியாக போடாமல் இருக்க.. மழையில் நனைந்து தான் இருந்தான்.
வீட்டில் அம்மா அப்பாவிடம் தான் வந்ததை கூறாமல் உள்ளே வந்தவன், அனுவின் அறை நோக்கி தான் மெல்ல நடந்தான். மனதின் உள்ளே மெல்ல தடதடத்தது! முப்பத்தி ஐந்து வயது ஆண் மகன் ஏதோ பருவ வாலிபன் போல நாணம் கொண்டான்.. தயங்கினான்!! ஆனாலும் மனதின் ஆசை அவனின் கால்களை வழி நடத்தியது!!
அர்த்த ராத்திரியில் இந்த பெண்ணின் அறைக்குள்ளே நுழைந்தால் அம்மா என்ன நினைப்பார்கள்? அப்பா அவனிடம் கோபப்பட மாட்டார்களா? என்றெல்லாம் எண்ணம் இல்லை!! ஏன் பெற்றோரின் எண்ணமே இல்லை! பெற்றோரிடம் அவள் நண்பனின் மனைவி என்று கூறி வைத்திருந்ததுமே அப்பொழுது மறந்துவிட்டது!
அவனது நினைவு எல்லாம் “ஐ மிஸ் யூ!” “எப்ப வருவீங்க நீங்க?” என்று தழுதழுத்த குரலில் கலங்கிய கண்களுடன்.. கண்ணில் தேங்கியிருந்த கண்ணீர் விழவா என்று பார்த்திருக்க.. கசங்கிய முகத்துடன் அவனை ஏக்கத்தோடு பார்த்திருந்த அனு.. அனு..! அனு..!! அனு மட்டுமே..!!
உள்ளே படுத்து இருந்த அனுவுக்குமே அன்று ஏனோ தூக்கம் வரவே இல்லை!
“எப்போது வருவீங்க என்று கேட்டதற்கு சீக்கிரம் வருகிறேன் என்று சொன்னார். ஆனா.. அதன் பின் எனக்கு அவர் ஃபோன் செய்யவே இல்லை! காலையில் தான் உருக உருக பேசினாரு. இப்பொழுது பாரு.. பேசவே இல்லை! அதுக்கு அப்புறம் திரும்பவும் வேலைனு போய்ட்டாரு போல.. அவரோட எக்ஸ் மேலேயே அவருக்கு அக்கறை இருந்தது இல்ல.. நம்ம மேல மட்டும் புதுசா வந்தா குதிச்சிடவா போகுது?” என்று புலம்பியப்படி படுத்திருந்தவளுக்கு ஏனோ அன்று தூக்கம் பிடிப்படவே இல்லை.
வழக்கம்போல வயிற்றை அவளுடைய தளிர்க்கரங்களால் தடவிக் கொண்டே பிள்ளைகளிடம் அவன் அப்பனை பற்றி புகார் கூறிக் கொண்டே இருந்தாள்.
அதில் ஒன்று மட்டும் லேசாக அவள் வயிற்றை முட்ட “உங்க அப்பன சொன்னா உனக்கு கோவம் வந்துடுமே? நீ அப்பா புள்ளையாடா? போடா டேய்.. உன் கூட நான் டூ!” என்று அசைவு வந்த எதிர்பக்கத்திலிருந்த மற்றொரு குழந்தையை வருடி கொடுத்து “நீ தான்டா அம்மா செல்லம்! குட் பாய்!!” என்று தன்னை அறியாமலேயே அம்மா என்ற பந்தத்திற்குள் மெல்ல அடி எடுத்து வைத்திருந்தாள் அனு.
இப்படியாக மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் பசி எடுக்க ஆரம்பித்தது. அவளுக்கு மட்டுமல்ல உள்ளே இருந்த ஜீவன்களையும் இவ்வளவு நேரம் இவள் தூங்கவிடாமல் செய்து, அவர்களையும் சேர்த்து விழிக்க வைத்திருக்க.. பசியில் இருவரும் முட்டினர்.
“டேய்.. என்ன அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்க? இப்ப தான் மணி பன்னிரெண்டு ஆகுது? உங்க வழக்கமான டைம் இது இல்லையே! உங்க அப்பா இருந்தா எனக்கு பிரச்சனையே இல்லை.. அவரே பால் ப்ரட் ஃப்ரூட்ஸ் எல்லாம் ரெடியா வச்சு இருப்பாரு.. இவங்க கிட்ட எனக்கு நைட் வேணும்னு கேட்க கூச்சமா இருக்கு!”
“வெயிட் பண்ணுங்க டா! கிச்சனுக்கு போகணும்.. அப்புறம் பால் காய்ச்சணும்.. எவ்வளவு பெரிய பெரிய ப்ராஸஸ்.. அட இருடா உன் அவசரத்துக்கு எல்லாம் நான் ஓட முடியாது! உங்க ரெண்டு பேரையும் வயித்துள்ள வச்சிருக்கேன். மெதுவா எழுந்து தான் போக முடியும்” என்று அவளது கர்ப்பையை சுற்றி உலா வந்து கொண்டிருந்த பிள்ளையை செல்லமாக கடிந்தப்படியே எழுந்து இவள் அறைக்கதவை திறக்க.. அப்போதுதான் அறையைத் தட்ட கையை தூக்கினான் துருவ்..!!
அவனுக்கு ஆனந்த ஆச்சரியம் எப்படி இப்படி சரியாக திறந்தாள் என்று!!
அவளுக்கோ அதைவிட ஆச்சரியம்! சீக்கிரம் வரேன் என்று சொன்னவன் இப்படி வந்து நடு இராத்திரியில் குதிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை!!
இரவு இவள் சோகமாக இருப்பதை பார்த்து சசிகலாவும் திருமலையும் அத்தனை ஆறுதலும் அறிவுரையும் கூறியிருந்தனர்.
“இப்ப இருக்குற மழைக்கு இங்கே ஏர்போர்ட் சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கு மா. எப்படியும் ரெண்டு மூணு நாள் ஆகும் உன் வீட்டுக்காரர் வர.. அதன் பின்பு கண்டிப்பா வந்துருவார் உன் வீட்டுக்காரர். அதுவரைக்கும் அவரிடம் சண்டை போடாமல் நல்ல பிள்ளையாக நடந்துக்கோ” என்று உறவின் அறிவுரைகளாக சசிகலா சொல்ல.. இங்கு இருக்கும் சிக்கல்களையும் நடைமுறை கஷ்டங்களையும் திருமலை எடுத்துரைக்க.. அப்பொழுது மனது சமாதானப்பட்டு இருந்தாலும், இவளுக்கு துருவின் அண்மையை தேட, தூங்காமல் தான் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
‘அங்கிள் அவ்வளவு சொன்னாரு இவர் வர மாட்டார்னு.. பின் எப்படி வந்தார்?’ என்று ஆச்சிரியத்தோடு அவனை பார்த்தாள். கசங்கிய உடை.. மழையில் நனைந்து தலையெல்லாம் களைந்து ஏதோ போல் நின்று இருந்தான்.
அவ்வளவு டிக்காக மடிப்பு கலையாமல் உடை போடுவன் இவன். ஆனால் இப்போது அவனின் தோற்றம்.. சற்று அசைத்துப் பார்த்தது அவளை!
‘அத்தனை தடைகளையும் தாண்டி நான் கூப்பிட்டதற்காகவா வந்தான்?’ அதற்கு மேல் தாளவே முடியவில்லை அதே கலங்கிய கண்களுடன் நின்றிருந்தவளின் வழி ஓரம் ஒரு துளி நீர் வைரமாய் மின்ன.. அதை துருவின் கரம் துடைப்பதற்கு முன் அவளது கனிந்த கன்னங்களில் வழிந்து ஓடியது கண்ணீர்..
கண்கள் கலங்க நின்றவளை கண்டவன் இரு பெரு விரலால் அவளது விழி நீரை துடைத்து "நான் இருக்கும் வரை உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது சரியா?" என்று ஆணையிட்டான்.
சிரிப்போடு தலையாட்டியவளின் தலையை உள்ளங்கையை வைத்து ஆட்டியவன் நெற்றியில் தயக்கமின்றி முத்தமிட்டான்.
அதற்கு மேல் முடியாமல் இவளே இரண்டு எட்டு வைத்து அவனை அணைத்து கொள்ள முனைய.. பெரிய வயிறு அதற்கு தடையாக இருக்க.. இரண்டு கைகளையும் அவன் முன்னை சுற்றிப் போட்டுக் கொள்ள முடியாமல் பாவமாய் பார்த்தவளை தோளோடு பக்கவாட்டாக வந்து அணைத்துக் கொண்டான்.
அவளை அணைத்தப்படியே நின்றிருந்தவன்.. “உள்ள வா..” என்று அறையினுள் அழைத்து சென்றவன், “உன் ஸ்பரிசம் வேணும்டி.. இப்படி தோளோடு அணைக்கவா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தேன்” என்றவுடன் மீண்டும் அவள் கைகளை தூக்கி கட்டிக் கொள்ள முடியாமல் நிற்பதை பார்த்து, அவளை முன்னிறுத்தி பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்தான் துருவ்.
அவளின் கழுத்தில் வாசம் முகர்ந்து, தோளில் தன் தாடையை வைத்து சிறிது நேரம் இருந்தான் துருவ்.
மெல்ல மெல்ல அவனது கைகள் அவளது பெரிய வயிற்றை தொட்டு வருடியது. அனுவோ அதில் மெல்ல சிலிர்த்தாள். துருவின் கைகளோ வருடலை நிறுத்தவே இல்லை. இப்பொழுது பிள்ளைகளுடன் தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்தார்களோ இல்லை பசியினால் அவளின் வயிற்றில் உதைத்தார்களோ.. அவர்கள் அசைவு தெரிய.. அந்த நிமிடம் இருவரும் திரும்பத் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள.. இருவரின் கண்களிலும் ஆனந்த வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.
கையணைப்பில் மனம் விரும்பிய பெண்.. அவள் வயிற்றில் அவனது சிசு.. அதுவும் அவனது ஸ்பரிசம் உணர்ந்து தன் இருப்பை காட்ட.. அந்த கணம் மிகவும் பொக்கிஷமாய் போனது துருவுக்கு..!!
ஆனால் மீண்டும் மீண்டும் அவன் வருட பிள்ளைகளும் முட்ட.. அவள் லேசாக அசைய.. “இவங்களுக்கு என்னாச்சு?” கேட்டான்.
“அவனுக்கு பசிக்குது போல” என்றாள்.
“பால் ஹார்லிக்ஸ் ஏதும் குடிச்சியா?” என்று அவன் அந்த அறையை கண்களால் துழாவ..
“இல்ல.. உங்க அம்மா கிட்ட கேட்க எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. நான் கேட்கல” என்றாள்.
“லூசு..!” என்று அவளின் நெற்றியில் தட்டியவன் “வா..” என்று அவளை அழைத்துச் செல்ல கை பற்ற முயன்றவனை அவள் தடுக்க…
அவளது இடையை அவன் உள்ளங்கையால் சற்று அழுத்தி பிடித்து “ஏன்?” என்றான்.
"வி..விடுங்க.. உங்க ட்ரஸ் ஈரமா இருக்கு" அவள் உதடுகள் முணுமுணுத்து, அவனது விரல் தீண்டலை அவள் விலக்க பார்க்க., அவன் இரு கையும் உரிமையாக ஒரு சில வினாடிகளில் அந்த தாய்மை கொண்ட இடையை சுற்றி வளைத்தது.
“ஃபர்ஸ்ட் பால் குடிச்சிட்டு.. வா..!” என்று அழைக்க.. அவளோ அவன் கைகளில் இருந்து விடுபட்டு அவனை முறைத்தாள்.
“ஏற்கனவே மழையில நனைஞ்சு இருக்கீங்க.. அதுல ஈரத்தோடு இவ்வளவு நேரம் நின்னா என்ன ஆகும்? மொதல்ல டிரஸ்ஸ கழட்டுங்க!” என்று ஆணையிட்டாள்.
“டிரஸ்ஸ கழட்டுங்கனு நீ சொல்றது எனக்கு வேற அர்த்தத்துல கேட்குதடி” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
ரைட்டு.. ஹீரோவுக்கு இஸ்க்.. இஸ்க்.. புரிஞ்சிட்டு..!
"நீங்க ரொம்ப ஈரமாயிருக்கங்க சார்" என்றாள் முறைப்பை கை விடாமல்…
“வெயிட்..” என்றவன் சட்டையை கன நேரத்தில் அவிழ்த்து போட்டு விட.. அவளது சில்லென்ற தேகம் இப்போது அவளின் பெண்மை சூட்டோடு வெடவெடுத்து நின்றிருந்த தேகத்தின் பின் பக்கத்தில் நெருங்கி நின்றது.
“இப்போ ஓகே வா..” என்றவனின் வார்த்தைகள் அவளது காதில் மிக்ஜாம் புயலயாய் சுழன்று அடித்தது!
ம்ஹூம்.. என்றவள் அருகில் உள்ள கபோர்டில் தன்னுடைய டவலை எடுத்தவள் அவனை முறைத்துக் கொண்டே அவனின் தலையை துவட்ட பார்க்க… உயரமோ எட்டவில்லை!
கையில் துண்டை வைத்துக் கொண்டு உதட்டை பிதுக்கி கண்களில் கண்டனத்தோடு நிற்கும் காரிகையை கண்டவனின் தலை அவளுக்கு தலை வணங்கியது! அவளது அன்புக்கு முன் மண்டியிட்டது!!
இந்த ஆண்கள் எல்லாம் உள்ளுக்குள் உருகும் குழந்தைகளே!
இந்த பிஸ்னஸ் மேக்னேட்.. அரக்கன்.. அசுரன்.. இராட்ஷஸன்.. டீமன் எல்லாம் வெளி வேசங்களே..!!
அரட்டல் உருட்டல் எல்லாம் வெளியே தான்!!
உள்ளுக்குள்…
அன்புக்கு ஏங்கும்!!
மடி தாங்கிட வேண்டும்!!
பாசத்திற்கு பாகாய் உருகும்!!
தேசத்திற்கு கட்டுண்டு நிற்கும்!!
அதனின் கூட இப்படி அன்புக் காட்ட ஒரு அடிமை பெண் சிக்கி விட்டால் போதும்.. ஏகமாய் செல்லம் கொஞ்சும்!! அவளை தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள நினைக்கும்!!
துருவனும் அப்படியே…!!
அவள் தலையை துவட்டி விட.. அவள் அன்பில் கட்டுண்டு இருந்தான்.
மெல்ல அவனை நிமிர்த்தி தலை காய்ந்து விட்டதா என்று சோதித்தவள் அவளுக்கு சரி என்று தோன்றியதும் தான் விட்டாள்.
“போதுமா? இப்ப போகலாமா? வா…”
என்று அந்த வெற்று உடம்போடு தான் அவளை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றான். இவனே பால் காய்ச்சி ஆற்றிக் கொடுக்க..
அதை அவள் குடிக்க மறுத்து, பால் க்ளாஸை அவனது வாய்க்கருகே கொண்டு சென்றாள். அவன் அதிர்ச்சியோடு அவளை பார்க்க..
“எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தீங்களோ? கண்டிப்பா எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க! நீங்க இத குடிங்க.. மீதி இருக்கிறத நான் ஆத்தி குடிக்கிறேன்” என்றாள் பாவை கண்களிலே கனிவோடு!
அவனுக்கும் பசி தான்! ஆனால் அவளை பார்க்கும் வரை அது வெளியே வரவே இல்லை. இப்பொழுது அவள் கூறியதும் அதை உணர்ந்தவன் மறக்காமல் வாங்கி கண்களால் அவளை பருகிக் கொண்டே பாலையும் பருக.. இவள் அடுத்த கிளாஸில் தனக்கும் ஊற்றிக் கொள்.. இருவரும் அந்த சமையலறையிலேயே பாலை குடித்து விட்டு வெளி வந்தனர். மெல்ல அவளை தோளோடு அணைத்துக் கொண்டே அறைக்கு வந்தான்.
அறை கதவை தாழிட்டவன், மீண்டும் அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
அதி இறுக்கமாக..
பெரும் ஆவலாக..
நனி நேசமாக..
துளி காதலாக…!!
அவனது அன்பை காட்ட.. நேசத்தை புரிய வைக்க.. ஒரு நுழைவு புள்ளியை எதிர்பார்த்து கொண்டிருந்தான். இந்த மழை அதற்கான அச்சாரத்தை போட்டு விட்டது இருவருக்குள்ளும்!!
அவளை அணைத்த அவனது கைகள் இப்பொழுது அவள் இடையை மெல்ல வருட தொடங்கியது. டாப்ஸை மெல்ல ஒதுக்கி அவளின் வெண்பட்டு இடையை தொட்டு தடவினான்.
இப்போது என்ன செய்வது? என அவள் விழிக்க., அவளது இடுப்பைப் பிடித்திருந்த அவனது கைகளோ இடுப்பை வருடி தடவ ஆரம்பித்தன. அவளது மெல்லிடையை மெதுவாகத் தடவி விட்டு பின்பு கொத்தாக பிடிக்க.. அவள் நடுக்கத்துடன் அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் . தனது இடையை விட்டு அந்த கைகளை விலக்க முயல, அவனது இரு கைகளும் அவளது டாப்ஸூக்குள் நுழைந்து அவளது ஆலிலை வயிற்று முழுவதும் அலைந்து திரிய ஆரம்பிக்க.. அவளுள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள் தலைத் தூக்க…
அவனது பத்து விரல்களும் அங்குமிங்கும் அசைய அவன் மூச்சு காற்று பலமாய் அவள் காது மடலில் பட்டு காதுக்குள் சுழல… அவளால் அந்த பத்து விரல்கள் உடன் சண்டை போட வலுவில்லாமல் இருக்க..
அவன் தன் முகத்தை அவளது பின் கழுத்தில் தேய்த்து அவளது வாசம் பிடித்தான். பின் குட்டி குட்டி முத்தங்கள் இட்டான்.
அவன் கைகளோ அவள் டாப்ஸூக்குள் ரகசியமாய் விளையாடி கொண்டிருக்க..
அவன் மெதுவாக அவளது இடைக்கு இருபக்கமும் கைகளை வைத்து பிடித்தபடி அவளை தன் முன் பக்கம் இழுக்க ஆரம்பித்தான்.
“நிஜமா இந்த பூமர் அங்கிள மிஸ் பண்ணுனியா அனு ?” என்று கேட்க..
‘இவ்வளவு தூரம் அவன் கைகளில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறேன் அப்பொழுது என்னை மிஸ் பண்ணினாயா என்று கேள்வி கேட்கிறான் பார்! இவனை..’ என்று அவனை முறைத்தவள் அவள் தோளில் இருபுறமும் போட்டு இருந்த அவன் கைகளை தட்டி விட்டு “இல்லை..!” என்று முறைப்போடு மெத்தையில் அமர்ந்தாள்.
“அப்படியா? நீ என்னை மிஸ் பண்ணலையா? ஃபோன்ல ஒரு குழந்தை அழுதுச்சே ஐ மிஸ் யூ ன்னு? அப்போ அது நீ இல்லையா..? வேறு யாரா இருக்கும்?” என்று சீண்டினான் அவளை.
“யாரு? நான் குழந்தையா?” என்று தன் வயிற்றை சுற்றி காட்டியவள் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்று தன்னை அவன் சீண்டுவது தெரியாமல் இவள் கோபம் கொண்டு முறைத்தாள் அவனை.
அவனுக்கு தெரிய வேண்டியது அனு அவனுள் வந்து விட்டாள் என்பது அவனுக்கு ஓரளவு திண்ணம்!
ஆனால் முறையற்ற இந்த உறவு நிலை.. முறையான உறவு நிலையாக நிலைக்க வேண்டுமானால், அதற்கு அவள் மனதில் தான் இருக்க வேண்டும்! தன் மீதான ஆசை நேசம் பாசம் அன்பு எல்லாம் இருக்க வேண்டும்!!
இரண்டு நாள் பிரிவில் அதனை முழுதாக உணர்ந்து விட முடியாது அல்லவா? அதனால் அவள் மனதில் இருப்பதை வெளிக்கொணர சீண்டி அவளை கோபப்படுத்திக் கொண்டே கேட்டான்.
“நீ தான என்ன வர சொன்ன? அப்போ நீ மிஸ் பண்ணலைனு தெரிந்திருந்தா.. இன்னும் இரண்டு நாள் குஜாலா சிங்கப்பூரில் இருந்துட்டு வந்து இருக்கலாம் போலையே?” என்றவன் அவள் அருகே மெத்தையில் படுத்தான் குறுக்காக..
“எது குஜாலாவா?”’என்று அவள் ஆத்திரமாக கேட்டாள். அவளே அறியாமல் அவன் மீது உரிமை உணர்வு எழுந்தது.
“ஆமா இங்க தான மழை வெள்ளம் எல்லாம்! அங்க கிளைமேட் சூப்பரா இருந்தது. பப் பார்ட்டி போய் குஜாலா இருந்திருக்க வேண்டியவன் இப்படி வந்து மாட்டிக்கிட்டேன்! அதுவும் கொஞ்சம் கூட ரசனையோ இல்லை கலகலப்போ இல்லாத ஒரு அக்மார்க் ராட்சசி கிட்ட!” என்றான்.
அதுவரை அவளோடு சீண்டி கொண்டு அவ்வப்போது கண்களால் தீண்டிக்கொண்டு மீசைக்கு அடியில் மறைக்கப்பட்ட புன்னகையோடும்.. கண்களில் மறைக்கப்பட்ட ரசனையோடும் படுத்திருந்தான்.
அவளோ “இவனுக்காக நான் ஏங்கி ஏங்கி நேற்று எல்லாம் அழுதால்.. இவன் நம்மை பார்த்து ராட்சசி என்கிறான்! டேய் பூமர் அங்கிள்.. மாட்டுன டா என்கிட்ட..” அவனின் அந்த வார்த்தைகளில் சட்டென்று அவன் மீது பாய்ந்து விட்டாள் அவள் கர்ப்பம் என்பதையும் மறந்து..
அவன் முயன்றால் வேகமாக அவளை பிரட்டி கீழே தள்ளிவிட்
டு எழ முடியும். ஆனால் துருவோ அவளை ரசித்தான்.
அவளின் கோபத்தை..
அவளின் அருகாமையை…
அவளின் உரிமையை…
அவளின் ஸ்பரிசத்தத்தை..
அவளின் நெருக்கத்தை..
அவளின் மொத்தத்தையும்!!