அத்தியாயம் 15
மகாதேவனுக்கு இரவு நெருங்க நெருங்க திக் திக் என்ன இருந்தது, மகள் என்ன பதில் சொல்வாளோ என்று!!
ஏற்கனவே ஆதனியுடன் மகதியின் நெருக்கத்தைக் கண்டு பயத்தில் அவருக்கு வயிற்றில் புளியக் கரைத்தது. மதியம் போல பாஸ்கரன் மற்றும் அவரது மகன் ஹர்ஷத்தை ரிசீவ் செய்வதற்காக வாசல் வரை சென்று வரவேற்றார். அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே வரும்போது, மகதி யாரோ ஒருவரிடம் பேச ஏதோ பேஷண்ட் போல இல்லை பேஷண்டோட ரிலேஷன் என்று நினைத்துதான் அருகில் வந்து மகளை பாஸ்கரனிடம் அழைத்து செல்வதாக வந்தவர், அவர் ஆதினியின் தாத்தா என்பதை அறிந்து மனம் பக்கின்றானது!!
'எங்க இருந்துடா வருவீங்க நீங்க எல்லாம்? ஒவ்வொருத்தரா வரீங்க!! இப்பதான் டா... என் மாப்பிள்ளை கொண்டு வந்து இறக்கி இருக்கேன்... அதுக்குள்ள அடுத்த பாண்டிங்க ஒட்ட வைக்கிறானுங்களே??? எம்பொண்ணும் பெவிகால் இல்லாம போய் ஒட்டிக்கிறாளே இவங்களோட... இவளைஈஈஈ…." என்று பற்களை நரநரவென கடித்துக் கொண்டார்… உள்ளுக்குள் தான்!! வெளியே சிரித்தப்படி மகதியிடம் வந்தவர், பேசிவிட்டு அவர் மனதில் எதுவும் இந்த மாதிரி எண்ணம் இருந்தால் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று தான் வலிய ஹர்ஷத்தை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்.
மகாதேவன் எண்ணம் கண்கள் கருத்து எல்லாமே ராமஜெயம் மீதே இருந்தது. அவர் முகத்தில் தொணித்த அந்த இருளே அவருக்கு அவர் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டுக் காட்ட... "அப்பாடா நம்ம முந்திக்கிட்டோம்!! இனி எப்படி என் பொண்ண தூக்குறீங்க என்று பார்க்கிறேன் டா…" என்று மனம் குதூகலமிட்டது.
ஆனால் மகாதேவன் மகளின் முகம் மாற்றத்தை கவனிக்க மறந்தார். ராமஜெயம் சென்றதும் மகளை அழைத்துச் சென்றவர், "மீட் மை டாட்டர் மகதி ஸ்ரீ பிடியாட்ரிஷன்" என்று அவனிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் ஹர்ஷத்!! கைனகாலஜிஸ்ட்... ஸ்பெஷாலிட்டி இன் இன்பெர்டிலிட்டி.. அதுவும் யுஎஸ் ரிட்டன்" என்றதும் மகதி ஸ்ரீ பெரிதாக எதுவும் அவருக்கு ரியாக்ஷன் செய்யவில்லை.
"ஹாய்…" என்று ஸ்ருதி போன குரலில் அவள் கூற.. மகதி அருகில் நெருங்கிய மகாதேவன் "கொஞ்சம் ஹாப்பியா தான் அந்த ஹாய சொல்றது? ஏன் இப்படி மூஞ்சி உர்றுனு வலச்சிட்டு சொல்ற?"
"என் மூஞ்சே அப்படித்தான்!! என்ன பண்றது எங்க அப்பா மாதிரி நானு!!" என்று உதட்டை சுழித்தாள்.
"ம்ப்ச்… வந்த கெஸ்டு கிட்ட ஒழுங்கா பேசு மகதி!! ஏன் இப்படி பேசுற?" என்று அடி தொண்டையில் அவர் சீற..
"உங்களுக்கு தெரியாது.. நான் ஏன் இப்படி பேசுறனு? மீறி ஏதாவது பேச சொன்னீங்கன்னா... நான் ஏதாவது எக்கு தப்பா பேசுவேன்!! இஸ் இட் ஓகே பார் யூ?" என்றதும் அவ்வளவுதான் மகாதேவன் கப்சிப்…
அப்பாவும் மகளும் தங்களுக்குள் ரகசிய குரலில் வழக்கடித்து கொண்டிருந்ததை கண்ட ஹர்ஷத்துக்கு இளமுறுவல் தோன்றியது. எப்பொழுதும் அவனது தொழிலையும் அதுவும் யூஎஸ் வேலை என்றதும் எல்லோரும் ஒரு பிரமிப்பாக அவனிடம் பார்த்து பழகி இருக்க... இவளின் இந்த அசுவராஸ்யமான பார்வை ஏனோ அவனுக்கு சுவாரஸ்யமானது!!
அவளை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு அவனிடம் சம்பரதாயமாக இரண்டு ஒரு வார்த்தை பேசி விட்டு "எனக்கு பேஷண்ட்ஸ் இருக்காங்க.. லெட் மி கோ" என்றவள் இருவரிடம் தலையசைத்து விட்டு சென்று விட்டாள். துர்காவை பார்த்து பேச சென்றார்கள் இவர்கள் மூவரும்.. தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க துர்காவோ கணவரை பார்த்து அப்படி ஒரு முறை!!
வெளி பார்வைக்கு தெரியவில்லை என்றாலும் மனைவியின் கோபம் புரிந்த மகாதேவன் "ஹர்ஷத்.. மீட் மை வைஃப் துர்கா... நீங்க வரத சொல்ல மறந்துட்டேன் வேலை டென்ஷன்ல.. பாப்பா கிட்ட ஏதாவது மாப்பிள்ளை தனியா பேசணும்னா பேசட்டுமே.." என்றதும், பாஸ்கரன் புரிந்து கொண்டு விட்டார் மனைவியை சமாதானப்படுத்த போகிறார் என்று!!
ஹர்ஷத்துக்குள் ஒரு சுவாரசியம்.. வித்தியாசமான இந்த பெண் பார்க்கும் முறையில்… அதுவும் அவள் எப்படி மருத்துவம் செய்கிறாள் பிள்ளைகளுக்கு என்று பார்க்க.. சரி என்று ஹர்ஷத் கிளம்பி விட, பாஸ்கரன் ஆச்சரியமாக தன் மகனை பார்த்தார். முக மலர்ச்சியுடன் மகாதேவனிடன் தலையாட்டி விட்டு அத்தளத்திற்கு சென்றார் மகனின் பின்னே...
பிறகு என்ன அவர்கள் அந்த பக்கம் சென்றதும்.. இந்த பக்கம் மனைவியின் காலில் விழுந்தே விட்டார் மகாதேவன்!!
சிம்மவாகினியாக அவர் முறைத்து நிற்க... சிம்மமாக எதிர்த்து கர்ஜிக்க முடியாமல் அடிபணிவதே மேல் என்று அவருக்கு வாகனம் ஆகி அடிபணிந்தவரை தண்டிக்க எங்கே மனம் வந்தது மனைவிக்கு. கணவன் சரணடைந்து விட்டால் பின் எங்கனம் மனைவி தண்டிக்க… காலில் விழுந்த கண்வன்மார்களை மன்னிக்கும் பெரும்பாலான மனைவிகள் போலவே துர்காவும் மன்னித்துவிட்டார் அவரை!!
"வந்தது வந்துட்டாங்க… ஆனா உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நாங்கள் ஆட முடியாது!! மகதிக்கு இந்த அலையன்ஸில் விருப்பம் இருந்தா மட்டும்தான்!! அது ஞாபகம் வச்சுக்கோங்க!! அதுக்குள்ள மாப்பிள்ளைனு உறுதி கொடுத்தீங்க…" என்று அவர் கண்களை உருட்டி மிரட்ட சரிம்மா சரிம்மா என்ற தலை ஆட்டினார்.
மேல் தளத்திற்கு சென்ற ஹர்ஷத் மெதுவாக நடக்க... "என்னப்பா மருமகள் எப்படி?" என்று கேட்டவரை திரும்பி பார்த்து சிரித்தவன் தலையாட்டி பேசாமல் சிரித்தப்படி அவருடன் சென்றான். வழக்கம் போல அவளது தனித்துவமான ட்ரீட்மெண்ட்டை கண்டவன் "வாட் அ ஹெல்!!" என்று அதிர்ந்து.. குழம்பி.. வியந்து... ஒரு கட்டத்தில் சிரிக்கவே செய்தான்.
"இன்ட்ரஸ்டிங்!! வெரி இன்ட்ரஸ்டிங்!!" என்று சிரித்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையை பார்த்து "எனக்கு ஓகே!! அவளுக்கு ஓகேனா? மேரேஜூக்கு ரெடி பண்ணுங்க" என்ற மகனை கட்டி அணைத்து தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தார் பாஸ்கரன்!!
இவர்களை தேடி வந்த மகாதேவன் இருவர் முகத்தின் மகிழ்ச்சியை கண்டதும் அவருக்கும் மகிழ்ச்சி தானாக தொற்றிக் கொண்டது.
பாஸ்கரனுக்கு மகனின் வாழ்வு மலர்ந்து விட்டதோ என்று ஏக எதிர்பார்ப்பு… "அங்கிள் எனக்கு உங்க பொண்ணு புடிச்சிருக்கு. அவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க!!" என்றவன் தந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
ஒருவேளை இந்த இடம் தகைந்தால் தங்குவதற்கு ஹோட்டலில் சரி படாது என்று நினைத்த பாஸ்கரன் லக்சரி அபார்ட்மெண்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கே இப்போது மகனை அழைத்து செல்ல "ஏற்படலாம் எல்லாம் பலமா தான் இருக்கு!!" என்று சிரித்துக் கொண்டான் மகன்!!
மகாதேவனுக்கு கை கால் புரியவில்லை. மகளை பார்த்து ஹர்ஷத்திடம் தான் எதிர்ப்பு வரும் என்று அவர் எதிர்பார்த்து இருக்க… அவனே சம்மதம் சொல்லிவிட மகளை தன் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று தீர்க்கமாக நம்பியவர், அவளுக்கு ஓபி முடிந்தவுடன் அவளிடம் சென்று பேசினார்.
ஆனால் வாய் வார்த்தையாக கூட ஆதினியை இதில் அவர் இழுக்கவில்லை. நாம் எதை செய்ய வேண்டாம் என்கிறோமோ.. அதை தானே மகள் செய்வாள்! அதனால் பக்குவமாக ஹர்ஷத் வாழ்க்கையில் நடந்த சில துரோகங்களை அநியாயங்களை கூறினார்.
"உன்னை போல ஒரு பெண் வந்தால் அவனது வாழ்வு மலரும் என்று எதிர்பார்க்கிறார்.. எனக்குமே உனக்கு அப்புறம் இந்த ஹாஸ்பிடல்ல பார்த்துக்கிறதுக்கும் ஒரு நல்ல ஆள் கிடைக்கும். உனக்கு தான் இந்த ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் பிடிக்கலையே... அப்பாவும் பாவம் தானே? இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த இந்த ஹாஸ்பிடல மொத்தம் எப்படி விடறது?" என்று பாசம் நேசம் சென்டிமென்ட் எல்லாத்தையும் கலந்து ஃபுல் ரீல் அவர் ஓட்டிக் கொண்டிருக்க... பார்த்துக் கொண்டிருந்த மகதிக்கு தான் தலைவலி அதிகமாகியது.
மகளின் முகத்தைப் பார்த்தவர்..
"சரி இப்போ ரொம்ப பேச வேண்டாம். நைட் வீட்ல பேசிக்கலாம். அதுவரைக்கும் நல்லா யோசிச்சு முடிவு சொல்லு…" என்று அவர் சென்றார்.
"என்னது இனிமேதான் பேச போறாரா? அப்போ இவ்ளோ நேரம் 70mm-ல நீங்க காமிச்சிட்டு இருந்து ஃபில்ம்மிற்கு பேரு என்ன கோபால்?" என்று நினைத்தவள் தலையை பிடித்துக் கொண்டாள்.
வெறும் திருமணம் என்றால் சேர்ந்து வாழ்வது மட்டுமில்லையே?? அந்நியோனமான தாம்பத்தியம்.. புரிந்து கொள்வது.. விட்டுக் கொடுப்பது.. பாசம் நேசம் அனைத்தும் கலந்தது தானே!! ஏனோ ருத்ரனிடம் கண்ட அந்த ஈர்ப்போ பிடித்தமோ இந்த புதியவனை கண்டதும் அவளில் எதுவுமே ஏற்படவில்லை. சாதாரணமான பார்வைதான் பார்த்தாள்.
'அவன் ஏதாவது ஒரு துணுக்கு காட்டி இருந்தாலும் பரவாயில்லை... ஒன்றுமே காட்டாமல் கம்முன்னு இருக்கானே!! வரான்.. பேசுகிறான்.. அடிக்கிறான்.. அணைக்கிறான்.. நெருக்கமாக நெருங்கி நின்று அப்பப்போ கிஸ் அடிக்கிறான்... அதை தாண்டி.. அடுத்தது என்ன என்று இதுவரைக்கும் என்னிடம் பேசவில்லை.. இவனை நம்பி எப்படி நான் வாக்கு கொடுப்பது? முதல்ல இவனிடம் பேச வேண்டும்!!' என்று முடிவெடுத்தவளுக்கு அதில் செயல்படுத்த தான் முடியவில்லை.
நாமாக எப்படி சென்று பேசுவது என்று குழப்பத்திலேயே அன்று வீடு செல்லாமல் நைட் டூட்டி என்று அமர்ந்து விட்டாள். கூடவே பெற்றோருக்கும் அன்று அவள் நைட் டூட்டி பார்ப்பதாக அறிவித்து விட.. துர்காவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனாலும் மகளை கட்டாயப்படுத்த அவர் முனையவில்லை. கட்டாயப்படுத்தி படிக்க வைத்ததை போல கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா என்ன? என்று அமைதியாக இருந்தார்.
ஆனால் மகாதேவனுக்கு தான் இருப்பு கொள்ளாமல் மகளை ஒருதரம் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தார்.
மற்ற நேரமாக இருந்தால் இவர் அனுமதி கேட்காமலே வருவார். ஆனால் இரவு நேரம் மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாளா இல்லை என்ன செய்து கொண்டு இருப்பாளோ? தெரியாமல் எப்படி பெண் பிள்ளை தனியாக இருக்கும் அறையில் நுழைவது என்று தான் அவர் கதவு தட்டி அனுமதி கேட்டது. ஆனால் உள்ளே கேட்ட ஒரு ஆணின் சிரிப்பு சத்தத்தில் திக் என்றானது.
மகளை மத்தத்துக்காகவெல்லாம் கண்டித்தியிருக்கிறாரே ஒழிய காதல் அது ஒன்று மகளுக்கு வரும் என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்தது கூட இல்லை. இவளின் குணத்திற்கு கண்டிப்பாக செட்டாகாது என்று நினைத்திருந்தார்.
ஆனால் ஆதினி என்ற பிணைப்பு அவளை ருத்ரன் வரை கொண்டு செல்லும் என்பதை அவர் உறுதியாக நம்பினாரே ஒழிய… ருத்ரன் மீது காதல் என்றெல்லாம் நினைக்கவில்லை. திடீரென்று ஆணின் சிரிப்பு குரல் கேட்டது. என்னவோ ஏதோவென்று பயந்து "மகதிமா…" என்று கதவை திறந்து கொண்டு அவர் உள்ளே நுழைய…
வெளியே தந்தையின் குரல் கேட்டதும் இவள் நல்ல பிள்ளையாக எழுந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு பிரிஸ்கிரிப்ஷன் பேடில் எழுதுவது போல நடிக்க அப்படி ஒரு சிரிப்பு ருத்ரனின் முகத்தில்..
"அடியே பிராடு டாக்டர்.. இம்மாம் பெரிய உருவம் படுத்து கிடக்க.. நீ மட்டும் போய் அங்க போய் உட்கார்ந்து இருந்தேன்னா.. உன்னை நம்பிடுவாரா உங்க நைனா? சரி அதையும் தான் பார்ப்போமே!!" என்று திருவரங்கநாதனை போல இவன் ஒற்றை கையை தலையில் தாங்கிக் கொண்டு பள்ளி கொண்டு படுத்திருக்க.. அப்பொழுதுதான் மண்ட மேலிருந்த கொண்டையை மறந்து விட்டோமே என்று அதிர்ந்தவள், அவனை கை கூப்பி "ப்ளீஸ்.. ப்ளீஸ்" என்று கெஞ்ச…
"நம்ம ரெண்டு பேரையும் நைட்ல... அதுவும் என் ரூம்ல பார்த்தா இந்த நினைப்பாங்க.. தயவு செய்து போங்க ப்ளீஸ்.." என்று அவள் கெஞ்ச..
"என்ன நினைப்பாங்க?" என்றவன் இப்பொழுது நன்றாக சாய்ந்து படுத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு காலை ஆட்டிக் கொண்டே அவளை தான் பார்த்து கேட்டான்.
"ப்ளீஸ் ருத்து.. ப்ளீஸ்…" என்று மீண்டும் அவள் கெஞ்ச..
"சரி போ.. ஏதோ செல்லப்பேரு எல்லாம் வச்சு கூப்பிடுற.. அதனால நான் உன்னை மன்னித்துவிடுகிறேன்" என்றவன் சட்டென்று உருண்டு அவள் நோயாளிகளை படுக்க சொல்லி பார்க்கும் கட்டிலுக்கு கீழே மறைந்து கொண்டான்
போன உயிர் அப்போதுதான் அவளுக்கு திரும்பி வந்தது. "வாங்கப்பா…" என்று இவள் நிற்க.. அவளை பார்த்தவர் அறையை சுற்றி மற்றும் பார்த்து "என்னமா.. ஏதோ சிரிப்பு சத்தம் கேட்டதே?" என்றார்.
இவள் தந்தை பார்த்து முறைக்க "அச்சச்சோ தப்பா எல்லாம் இல்லம்மா!! நான் பயந்துட்டேன்.. காலம் கெட்டு கிடக்குது இல்லையா? எந்த உருவத்தில் யார் இருக்காங்கன்னே சொல்ல முடியாது!! அதுக்கு தான் சீக்கிரமே உன்னை ஒருத்தன் நான் கையில பிடிச்சு கொடுக்கணும் பார்க்கிறேன்" என்று வழக்கமான பெற்றோர் கவலையை அவர் முன்னுறுத்தி வைக்க..
அதையெல்லாம் தூசு போல தட்டியவள் "யூடியூப்ல வடிவேல் ஜோக் பாத்துட்டு இருந்தேன்!! என்னை சுத்தி இருக்கிறவங்க என்னை எப்போதும் டென்ஷனாவே வைக்குறாங்க.. அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆக.." என்றதும் ஏற்கனவே மகள் டென்ஷனில் இருக்கிறாள் நாம் எதுவும் கேட்டு வைக்க வேண்டாம் என்று "சரிமா.. குட் நைட்!!" என்றவர் கிளம்பி விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரம் பிறகு இவள் கட்டிலின் அடியில் சென்று பார்க்க.. அவன் அங்கு இல்லை!! அவளுக்கு திக் என்று ஆனது.
"அதுக்குள்ள எங்கே மாயமாய் மறைந்து போனான்?" என்று இவர் சுற்று முற்றும் பார்க்க.. அவள் காதுக்கு அருகே "என்னையா தேடுற?" என்ற குரலில்.. பயந்து அலறி அவள் கீழே விழுக அவனின் முரட்டுக் கரங்கள் அவளை தாங்கிக் கொண்டன, மகதி பார்த்த தமிழ் சினிமாவில் வந்ததைப் போல...
இருவர் விழிகளும் மற்றவர் விழிகளோடு கலந்து பல கதைகள் பேச…
அவ்விழி விலங்கில் இருவருமே கட்டுண்டு இருக்க…
உரிமையான தீண்டலில்லை.. ஆனாலும்..
உயிர்ப்புகளுக்கு குறைவில்லை..
உரிமை ஏற்படுத்தவே முனைந்தான்..
உயிராய் அவளை..
உயிர் உறியும் முத்தங்களால்..
அவன் கண்கள் பேசின பாஷைகள் யாவும் பேதை அவளால் முழுவதுமாக புரிந்து கொள்ள இயலவில்லை. அவள் புரிந்து கொண்டதெல்லாம் இன்னும் தன் மனதை.. அதில் இருக்கும் விருப்பத்தை.. சொல்லாமல் அமைதி காத்திருக்கும் இந்த ஆணவன் கர்வம் கொண்டவன் என்றே!!
அவளோ அவனிடமிருந்து விலகி வேண்டாம் என்றாள் வெளிவராத குரலில்...
"ஏன்? உனக்கு வேனாமா?” என்றான் அவளை நெருங்கிக் கொண்டே...
“வே..வேனாம்ம்…” என்றாள் பின்னால் நகர்ந்து கொண்டே..
“என் கண்ணை பாத்து சொல்லு..” அவள் முகத்துக்கு அருகே வந்தவன், மூக்குகள் இரண்டும் உரசின.. அவன் மீசை முடி பட்டு இதழ்கள் காயந்தன.
அவள் அவன் கண்களை பார்த்து… தட்டு தடுமாறி.. திக்கி திணறி..
"வே.வே..ணாம்ம்ம்" என்றாள்.
“இது தான் வேணாம்னு சொல்லுது., இது வேணும்னு சொல்லுதே” என்றவன் இதழ்கள் அவள் இதழ்களில் வெறும் நூலிலை இடைவெளியில்...
“எது வேணும்னு சொல்லுது?" என்றாள் அவன் பார்வையை தவிர்த்தபடி..
“உன் அழகிய கண்கள்.. " என்றவன், பசக்கென்று அவன் அவள் கண்மலர்களில் முத்தமிட்டான்!!
அவள் அவனுக்குள் முழுதாய்..
“அ..அப்போ.. எ..து வேணாமுன்னு சொல்லுது?” அவள் கேட்டாள் உதடுகளை கடித்தப்படி.. தன் ஒற்றை விரலால் அவளது இதழ்களை வருடியவன், இது தான் என்றான் சரச குரலில்..
அடுத்த நிமிடமே அவள் முகத்தில் எண்ணிலா முத்தங்களை பொழியத் தொடங்கினான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனிடம் மறுக்கவும் இல்லை. அவனுக்கு இல்லாதது என்று தன்னிடம் எதுவும் இல்லை என்ற எண்ணம் பெண்ணுக்கு!! அவள் மனதில் தான் அவன் நிறைந்து இருந்தானே!!
அவளது நெற்றி, கண்கள், கன்னமெல்லாம் ஊர்வலம் வந்த அவனது இதழ்கள் அவள் தேன் இதழ்களில் புதைத்தபோது சட்டென கண்களை மூடிக்கொண்டாள்.
அவன் அவள் உதடுகளில் அழுந்த முத்தமிட்டான். அந்த ஆரஞ்சு உதட்டை வரிவரியாக நக்கினான் நாவினால்.. அவன் நாக்கின் சூட்டை தாங்காமல் அவள் உதட்டை திறக்க..
அவன் நாக்கை தூரிகை போல உள்ளே விட்டு அவள் ஈறுகளையும், பல்வரிசையையும் சுவைக்க ஆரம்பித்தான்.
சில முத்தங்கள் விருப்பமும் எதிர்ப்புமாய்!!
சில அசைவுகள் நெருக்கமும் விலகலுமாய்!!
சில தீண்டல்கள் கொஞ்சலும் கெஞ்சலுமாய்!!
சில தொடுகைகள் சீண்டலும் கிறக்குமுமாய்!!
அனைத்தும் தித்திப்பான அவளின் செவ்விதழ்
களில் வந்து முடிவுற்றது!!
இருவரின் எச்சில்கள் கூட அமிர்தத் துளிகளாய்!!
முத்தம்...
கலைகளின் உச்சம்...
சில கனவுகளின் மிச்சம்!!