அத்தியாயம் 12
தன் இடையே கட்டிக்கொண்டு மௌனமாக குலுங்கி அழகும் கலெக்டரை கண்கள் விரிய பார்த்தாள் நம்ப முடியாமல் மகதி!!
பெரும்பாலும் இம்மாதிரி ஆண்கள் அழுது எல்லாம் மகதி பார்த்ததே இல்லை. அவளது அப்பாவே அழுது பார்த்ததில்லை. அவர் இத்துறையில் இருப்பதால், பெரும்பாலும் அனைத்தையும் பார்த்து பழகி விட்டதால் வந்திருந்த மனம் சுணக்கமா அல்லது இதுவரை இம்மாதிரி பாதிப்பு ஏற்படாமையா? ஏதோ ஒன்று.. ஆனால் தன் நெருக்கமானவர்கள் அழுகை எல்லாம் அவள் உணர்ந்ததே இல்லை.
பிள்ளைகள் உடல் நிலைக்காக அன்னை கண்ணீர் விட்டு கதறுவது போல் எல்லாம் தந்தை அழுது அவள் பார்த்ததே இல்லை!! சோகமான முகத்தோடு மனைவிக்கு ஆறுதல் அளித்தப்படியோ.. இல்லை மருத்துவரான இவளிடம் கெஞ்சியப்படியோ சில சமயங்களில் கோபத்தில் கத்தியப்படியோ இருப்பார்கள்!!
இன்று தான் முதல் முதலாக தன் பிள்ளைக்காக கண்ணீர் விடும் ஒரு தந்தையை காண்கிறாள். அதுவும் கலெக்டரான இவன்!! முதல் முறை இவனின் ரௌத்திரத்தை பார்த்த நொடியா? அல்லது ருத்ரன் கோபத்தில் அடித்த அடியா? ஏதோ ஒன்று அவனை மிகவும் இறுக்கமானவான ஆத்திரக்காரனாக காட்டியிருந்தது அவளிடம்!!
ஆனால் இப்படி ஒரு நாள் தன் இடையை கட்டிக்கொண்டு குழந்தை போல தன் மகளுக்காக அழுவான் என்றெல்லாம் அவள் கற்பனையில் கூட எண்ணி பார்த்திராத சம்பவம்!!
அவள் கண்முன்னே அவை காட்சிகளாக விரிய... அவனை விலக்கி விடாமல் இன்னும் அரவணைத்துக் கொண்டாள் அன்னையாய் தன் வயிற்றோடு!!
"சார்... சார் ப்ளீஸ் கண்ட்ரோல்… கண்ட்ரோல் யுவர் செல்ஃப்..பேபி நல்லாகிடுவா!!" என்று மந்திரமாய் ஜெபித்து அவன் முதுகை நீவி விட்டவாறு அவள் கூற.. இன்னும் இன்னும் இடையை இறுக்கி அவளின் வயிற்றில் முகத்தை புதைத்தவனை விலக்க முடியாமல்.. விலக்கத் தோன்றாமல்.. இறுக்கிய அணைப்பில் கட்டுண்டு நின்றாள் மகதி!!
"முடியல மதி… என்னால முடியல.. நந்து என்னை.. என்னை நம்பி ஆதினிய விட்டுட்டுப் போனா.. ஆனா.. ஆனா.. நான் அவளை சரியா கவனிக்கல.. இப்போ பிழைப்பாளா இல்லையா? பிழைச்சாலும் பின்னாடி ஏதும் ஹெல்த் பிராப்ளம் வருமான்னு ஒன்னும் தெரியாம அல்லாடுறேன் மதி... தனியா விட்டுட்டு அவ மட்டும் நிம்மதியா போயிட்டா மதி.. இந்த நந்தினி!! எவ்வளோ.. எவ்வளோ.. செல்ஃபிஷ் இந்த நந்தினி.." என்று அழுது கொண்டே பேசினான்.
முகத்தை அவளிடம் காட்டாமல் சிறு சிறு பிள்ளையாய் அவளின் இடையில் முகத்தை தேய்த்து தேய்த்து.. அவ்வப்போது மூக்கை உறிஞ்சி… அவனின் இந்த அழுஞ்சேட்டையில் 'இவன் என்ன கலெக்டரா? இப்படி அழுகுறானே சிறு பிள்ளை போல.. க்ரெயிங் கலெக்டர்!!' என்று அவள் யோசித்து நிற்க…
"என்ன இந்த கலெக்டர் எப்படி மூக்கு உறிஞ்சி உறிஞ்சி அழுவுறானேனு யோசிக்கிறியா?" என்று மீண்டும் அழுத்தமாக அவனது முகத்தை அவளது வயிற்றில் அவன் துடைக்க… அவனுக்கு எப்படியோ அவளுக்கோ உணர்வுகள் எட்டு திக்கும் நரம்புகளில் படர்ந்து பாய்ந்து சென்றது.
முதன்முறையாக ஆண் மகனின் உரிமையான அழுத்தமான தீண்டல் மென் இடையில்... அவளை உணர்வு குவியலில் தள்ளியது!!
புத்தம் புதிய மலரில் வீசும் மணமாய்...
மெல்லிய மடலின் மென்மையாய்…
சிறிது சிறிதாக பொழிந்து கொண்டிருக்கும் பனித்துகளின் குளிரச்சியாய்..
அவளது உள் மலரை சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது அவனது தொடுகைகள்!! அவளை ஆட்கொண்ட அப்புதிய உணர்வு !!
நரம்பு மண்டலங்களில் படர்ந்து..
புது இரத்தம் பாய்ச்சி..
அவளை சிறு துகளாக மாற்றி மிதக்க வைத்துக் கொண்டிருந்தது புரியாத.. பெயர் சொல்லத் தெரியாத இவ்வணர்வு!!
ஆனால் அந்த உணர்வை புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை.. ஏன் அவன் இருக்க விடவே இல்லை!! அவனின் இறுகிய அணைப்பு மட்டுமே அப்பொழுது அவளை வன்மையாய் அவனுள் இழுத்துக் கொண்டு இருந்தது.
அதனோடு கூட, அவள் உடம்பில் எழுந்த மெல்லிய நடுக்கம், மெலிதான படபடப்பு, பதட்டம் என எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனின் எண்ணம் எல்லாம் அப்போது இந்த க்ரெயிங் கலெக்டரை தேற்றுவதில் தான் இருந்தது!!
ஆனால் அவனை தேற்ற முடியும என்று அவளுக்கு தோன்றவில்லை அதனால் அவனை மாற்ற எண்ணம் கொண்டவளின் நாவில் அப்போது சனீஸ்வரர் வந்து அமர்ந்தார் போல, "இப்படியே என்னை ரேப்பிங் எதுவும் செய்யப் போறீங்களா பிரதாப் சார்.. இப்படி விடாம புடிச்சு வைச்சு இருக்கீங்க… அதுவும் பூட்டுன அறையில" என்று விளையாட்டாக தான் கேட்டாள்.
ஆனால் திகதிகு என்று கன்னம் எரிந்ததிலும் கண்கள் இரண்டும் திறக்க முடியாமல் பூச்சிகள் பறப்பதிலும் தான் தெரிந்தது அவன் தன்னை அடித்திருக்கிறான் என்று!!
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க முடியாமல் தள்ளாட்டியவள் அருகில் இருந்த நாற்காலியை பிடித்துக் கொண்டு நின்று அவனை பார்த்தால் குற்றம் சாட்டும் பார்வையில்…
ஆனால் அவன் தான் அவளைத்தான் ருத்ரம் மூர்த்தியாக மாறி கொல்ல காத்திருந்தான்.
"அறிவு இருக்கா... அறிவு இருக்கா உனக்கு? என்ன பேச்சு பேசுற? நீ எல்லாம் ஒரு டாக்டரா? ஆமா கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன் தான். அது உன்னால தான் எடுத்துக்கிட்டேன் நான். என்னை கட்டுப்படுத்திக்கிட்டு தான் உட்கார்ந்து இருந்தேன் .நீதான் இழுத்து இழுத்து சாயச்சி கிட்ட...
இறுக்கி இடுப்போடு அணைச்சுகிட்ட.. அதனால கொஞ்ச நேரம் நானும் என்னை மறந்து அப்படியே இருந்திட்டேன். அதுக்குன்னு இப்படி பேசுவியா யூ டேமிட்!! அப்படி என்ன என் மேல உனக்கு ஒரு நல்லெண்ணம்?? இனி நீ வாய தொறந்த நீனு… கொன்றுவேன் டி!!" என்று அறை கதவை படார் என்று சாத்திவிட்டு வேகம் நடையோடு கீழே சென்று விட்டான்.
'ம்ப்ச்... மகதி இப்படி செதப்பிட்டியே? உனக்கு அறிவே கிடையாது!! இந்த வார்த்தையா யூஸ் பண்ணுவ? மனுஷன் பாவமாக இருந்தார். இப்ப நம்ம பாவமாகிட்டு போயிட்டாரு!! ஸ்ஸ்ஸ்… அப்பா... என்ன அடி? என்ன அடி? இந்த ஆளுக்கு கைல எலும்புக்கு பதில் இரும்பை வைத்து படைச்சிட்டானா அந்த ஆண்டவன்? அடுத்த முறை அடிக்கட்டும் கையை உடைத்து சோதனை பண்ணி பார்த்திர வேண்டியது தான்!!' என்று தனக்கு தானே பேசியவளுக்கு புரிந்து தான் இருந்தது, இன்று பேசிய பேச்சுக்கு தான் வாங்க வேண்டியது தான் என்று!!
ஏதோ அவன் மூடை மாற்றுவதற்காக பேச போய் இப்படி ஒரேடியாக அவனையே மாற்றி வைத்து விட்டாள் மகதி. "நம்ம டிசைன் சரியில்ல!! எல்லாம மேனுஃபாக்சரிங் டிபெஃக்ட்!! எதற்கும் மகாதேவனை ஒரு முழு செக் அப் பண்ணி பாக்கணும்!!" என்று இவள் செய்த சேட்டைக்கும் பேச்சுக்கும் தந்தையே காரணம் என்று யோசிக்க தொடங்கினாள்.
கீழே சென்றவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. சும்மா இருந்தவனை சீண்டி விட, அவன் இப்போ சுளுக்கு எடுத்துட்டான். "என்ன கேக்குறா ராட்சசி? கொழுப்பெடுத்தவ... பைத்தியக்காரி.. லூசு…" என்று தம் போக்கில் பேசிக்கொண்டு அங்கு நின்றிருந்தான் சற்றும் கோபம் குறையாமல்..
அவன் அருகில் சற்று தள்ளி நிறைந்த டவாலி மற்ற காவல்துறை அதிகாரிகளும் "கலெக்டர் சார் ரொம்ப கோவமா இருக்காரு!! எல்லாம் அந்த போதை மருந்து கொடுத்தவங்க மேலதான். அவனுங்க கையில மட்டும் கிடைச்சானுங்க... சார் இருக்கிற கோபத்திற்கு அவனை சல்லி சல்லியா நொறுக்கிடுவாரு!!"
"சார் என்ன நொறுக்குறது? என் கையில் கிடைச்சா நானே நொறுக்கிடுவேன்? பாவம் சின்ன பிள்ளைங்க... இந்த பிள்ளைங்களுக்கு என்ன தெரியும்னு ஐஸ்ல கலந்து கொடுத்திருக்கான். எடுபட்ட பயலுவோ.. அவனை எல்லாம் நடுரோட்டில் போட்டு கல்லால் அடித்தே கொல்லனும். கலெக்டர் சார் கோபப்படுவதிலும் ஆத்திரப்படுவதிலும என்ன தப்பு இருக்கு? நம்ம சட்டம்தான் நம்ம கையெல்லாம் கட்டி போட்டு இருக்கு. இது உடைச்சிட்டு வெளியில வந்ததா தான் இந்த மாதிரி பாவிகள் எல்லாம் அடக்க முடியும்" என்று ருத்ரனின் கோபம் எதற்கு என்று தெரியாமல் அவர்கள் தங்கள் போல பேசிக் கொண்டிருந்தனர்.
உண்மையில் ருத்ரனுக்கு இப்பொழுது போதை கொடுத்தவனை விட அவனுக்கு போதையே ஏற்றியவள் மீதே அதீத கோபம்!!
"ஆமா கொஞ்சோண்டு கொஞ்சம் அந்த இல்லா இடையை கட்டி புடிச்சிட்டு.. என் மனசு விட்டு கொஞ்சம் அழுதுட்டேன்!! அதுக்குன்னு எல்லை மீறிடுவேன்னு எப்படி பேசுவ நீ.. பைத்தியக்காரி? ஒரு நல்ல பெரிய ஊசியா எடுத்து அவ வாயிலேயே போடணும்!! இனி இது போல பேசாத பேசாதனு…" என்று மீண்டும் மீண்டும் அவளது ரேப்பிங்லேயே இவனது எண்ணம் சுழன்று கொண்டிருக்க.. அவனையும் மீறி அப்படி நடந்திருந்தால்… என்று எண்ணம் போனபோக்கில் தலையை உலுக்கி எண்ணவோட்டத்தை தடை செய்தான்!!
"அய்யய்யோ... இவளால நானுமே தப்பு தப்பா யோசிக்கிறேனே!!" என்று தலையைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்து இருக்கையில் அமர்ந்து விட்டான்.
"மகதி... மகதி…" என்று அழைத்துக் கொண்டே வெளியில் வந்த மகதியின் சீனியர் ரிவா அங்கு கலெக்டரை பார்த்ததும், "சார் இப்ப கொஞ்சம் பிள்ளைங்க வைட்டல்ஸ் எல்லாம் ஸ்டேபிள்தான் இருக்கு. உடம்புல பிளாட்டில அந்த போதை மருந்து ரொம்பவே கலக்காமல் கட்டுப்படுத்திட்டோம். ஆனாலும் டாக்டர் சொன்ன 24 மணி நேரம் போகணும். என்ன கேட்ட 50% இப்பவே எல்லாரும் ஓகே தான் சொல்லுவேன்!!" என்று அவனின் பயந்திருந்த மனதினை ஆற்றினாள் அந்த டாக்டர்.
"அப்பா..!!" என்று பெரு மூச்சு விட்டான் ருத்ரன். மனதில் இருந்த பெரும் கவலை ஆதவனை கண்ட பனித்துளியாய் மறைந்து போக.. மனம் இன்னும் இன்னும் ஆதவன் வெளிச்சத்தில் பொலிவுற்ற பூமி தனை போல நிர்மலமானது.
"ரொம்ப.. ரொம்ப நன்றி டாக்டர்!!" என்று ரீவாவுக்கு நன்றி கூறினான்.
"இட்ஸ் ஓகே!! இட்ஸ் அவர் டூட்டி!! மகதி எங்க சார்? அவ கேபின்ல தான் இருந்தீங்க…" என்று ரீவா கேட்க..
எப்படி சொல்லுவான்? அவள் பேசிய கிறுக்குத்தனத்தில் அவளை அறைந்து விட்டு கோபத்தில் வந்து விட்டேன் என்று!!
"எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் கால் அதான் வந்துட்டேன்!!" என்று தன் நெஞ்சற்க பொய் உரைத்தான்.
"எஸ் நீங்க கலெக்டர் இல்லையா? ஆல்வேஸ் பிஸி.. அதிலிருந்து இப்போ இந்த கேஸ் வேற" என்று மெலிதாக புன்னகைத்தவள், "சரி நான் அவள போய் பார்க்கிறேன்" என்று லிஃப்ட்டை நோக்கி சென்றாள் ரீவா.
"இல்லை டாக்டர்!! இப்ப நான் அங்க தான் கொஞ்சம் ரெஸ்ட்ரூம் போறேன் நான் அவங்ககிட்ட சொல்லிடுறேன். நீங்க குழந்தைகளை பார்த்துக்கோங்க" என்றதும் தகப்பனாய் அவனின் பயம் புரிந்தது மருத்துவருக்கு.
"கவலைப்படாதீங்கடா கலெக்டர் சார்!! கிட்டத்தட்ட நாங்க ஆறு டாக்டர் இருக்கோம். பத்து சிஸ்டர்ஸ் வார்ட்பாய்ஸ் இருக்காங்க.. எல்லா எமர்ஜென்சி மெடிசினும் கையில இருக்கு. விட்டு விட மாட்டோம். தைரியமா இருங்க!!" என்று நம்பிக்கை அளித்து சென்றவளை நன்றியோடு பார்த்தான் ருத்ரன்.
மனநிலை இப்பொழுது சற்று ஆசுவாசமாக நிம்மதியாக உணர்ந்தான் ருத்ரன். அப்போதுதான் அவளை அடித்தது ஞாபகம் வந்தது.
"இந்த லூசு தான் பேசுதுன்னு நாமளும் அடிச்சியிருக்க கூடாது. அது என்ன ருத்ரா ஆவுன்னா பொம்பள புள்ள மேல கை வைக்கிற பழக்கம்?" என்று தன்னை தானே கடிந்து கொண்டவன், ரீவா கூப்பிட்டதாய் அவளை பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றான்…
அவளை சென்று பார்ப்பதற்கு ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தெரியாமல் அடித்து விட்டேன் எப்படி இருக்கிறாய் என்று பார்க்க வந்தேன் என்று வெட்கத்தை விட்டு.. ஈகோவை விட்டு சொல்லவா முடியும்? அதிலும் ஹீரோ கொஞ்சம் கர்வம் பிடித்த கலெக்டர் ஆயிற்றே!!
மெல்ல கதவை திறந்து அவன் செல்ல கண்ணாடி முன் நின்று தனது கன்னத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"போன வாரம் போய்தான் பட்டி டிங்கரிங் எல்லாம் பார்லர்ல ஐயாயிரம் ரூபாய்க்கு பண்ணிட்டு வந்தேன். இப்படி பஞ்சர் பண்ணி வச்சுட்டானே இந்த காட்டன்!! இதுல இவன் கலெக்டர் வேற? இதே பொழப்பா போச்சு இவனுக்கு!! இனி இன்னொரு ஐயாயிரம் ரூபாய் செலவு பண்ணனும் பார்லருக்கு!! அடுத்த முறை அடிக்கட்டும்…" என்று நிறுத்தினாள், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆர்வமோடு காதை தீட்டி.. கண்களை கூர்மையாக்கி அங்கே பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
"அடிச்ச... அவரு கைய பிடிச்சு…" என்றதும்
'திருப்பி நம்மை அடித்து விடுவாளோ, அவ்வளவு வலு இருக்கா அவளுக்கு?' என்று யோசித்தவன், தன் முகத்தை அவள் இறுக்கி பிடித்து இடையோடு அழுத்துக்கொண்டது ஞாபகம் வர.. "சரியான வசம்பி!!" என்று கூறிக் புன்னகைத்தான்.
"அவன் கைய புடிச்சு அடுத்த மாசம் பார்லருக்கு பட்டி டிங்கரிங்க்கு பிளஸ் பைனோட பத்தாயிரம் பிடுங்கிடணும்!!" என்று சிரிக்காமல் கொள்ளாமல் சீரியஸாக அவள் சபதம் எடுத்தவாறு.. வலித்த கனத்தை வருடியவாறு அவனை வறுத்து தாளித்துக் கொண்டு இருந்தாள் மகதி.
அவளின் இந்த பேச்சில் இதழ் கடையோரம் மெல்லிய புன்னகை ருத்ரனுக்கு!!
மெல்ல திரும்பி காரிடரை நோட்டமிட்டான் கலெக்டர் கள்வனாக.. வெளியில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, வேண்டுமென்றே அறை கதவை ஒற்றை விரலை மடிக்கி தட்டினான்.
சிறிது நேரத்திற்கு பிறகே கதவு திறக்கப்பட… எஸ்.. என்று வந்து நின்றாள் மகதி. அவள் கதவை திறந்ததும் சாவதானமாக உள்ளே சென்று கதவை அடைத்தான் ருத்ரன்.
அவனின் இந்த இலகுவான அணுகுமுறையில் அவள் அதிர்ச்சியில் நிற்க, ருத்ரன் மெதுவாக அவளை நெருங்கினான். “இ..இங்க என்ன பண்றிங்க ப்ரதாப் சார்? கீழே பேபிய பார்க்க போகல?" என்று அவள் கேட்க, உடனே தனது விரலால் அவளது வாயை மூடியவன், அவளை நெருங்கி நிற்க.. அவளோ அவனிடம் இருந்து பின்னால் நகர.. அந்த ஒற்றை விரலால் இன்னமும் அவளது அதரங்களில் ஒய்யாரமாய் அவளது மென் இதழ்களின் ஈரத்தில் நனைந்தப்படி!!
எட்டி நின்றவன், மீண்டும் அவளை நெருங்கினான் நெருக்கமாக…
அவள் அவனது மார்பில் கை வைத்து தடுக்க அவனோ அவளது கைகளை மற்ற கையால் வருட.. அப்படியே தனது கை அவளது தோள் வரை சென்று அழுத்தமாக பற்ற, அவளது கை வலு இழந்தது.
“வேண்டாம்…..” என்று அவள் மெல்லமாக முனங்க, அவனோ கையை எடுத்து அவளது விரல்களை தனது வாயில் வைத்து சப்ப, மகதி தனது கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவளை மீண்டும் நெருங்கி நின்றான், காற்றுக்கு கூட இடம் அளிக்காமல்... அவளது காதருகில் "நீதானே கேட்ட… ரேப்பிங் பண்ண போறிங்களானு? எடுத்த உடனே அட்வான்ஸ்டா போக முடியுமா என்ன? பேஸிக் கத்துக்கிட்டு தானே அங்க போக முடியும்!! முதலில் டச்சிங்… டச்சிங்!! பிறகு டேட்டிங்… அதுல கொஞ்சம் கிஸ்ஸிங்… நிறைய நீ ப்ளஷிங்!! கடைசியா ஒரு வொய்ல்டு ரேப்பிங்!! எப்படி?" என்று அவள் காதில் மீசை முடிகள் குத்த குத்த அவன் பேச… அவளோ மீளா உணர்வில் சிக்குண்டு தவித்தாள்.
அவளது உதடுகளை ஏதோ சொல்ல முயற்சி செய்து முடியாமல் நடுங்கிக் கொண்டு இருந்தது. அதன் நடுக்கத்தை குறைக்க, அவன் தனது உதடுகளை அதன் மீது பதித்து அரணாக வைக்க… வெறும் அவனது டச்சிங்கிலேயே மகதி மதியிழந்து போனாள்!!
“என்ன மதி… அடுத்து போகட்டுமா? உன்னை அழைத்து போகட்டுமா?” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்க… அடுத்து என்றால்.. என்ன? அழைத்து என்றால்... எங்கே அழைத்துப் போக போகிறானாம்? என்று அநேக கேள்விகளோடு படபடப்பாக உணர்ந்தவள், முகத்தை சட்டென்று திருப்பிக் கொண்டாள்.
மெல்ல அவளை நெருங்கியவன் விரலால் அவன் அடித்த அவளது கன்னத்தை வருட..
பச்சை மிளகாயை அரைத்தது போல் காந்தல் எடுத்து சிவக்க மகதியின் கண்கள் கலங்கியது.
"வலிக்குது தள்ளுங்க…" என்று அவனது விரலை தட்டி விட இப்பொழுது அவளின் பின் கழுத்தை இறுக்கி பிடித்து தன்னை நோக்கி அவளை இழுத்தவன், அடித்த இடத்தில் நாக்கை படர விட்டான்,
அதி மென்மையாக…
துளி மோகமாக…
சூரியன் சுட்டு எரிக்கும் போது.. மழை வந்தால் ஏற்படும் உணர்வு அவள் கன்னப்பரப்பு முழுவதும்!! அவள் உடல் சிலிர்த்து சிணுங்கி விறைக்க ஆரம்பித்தது.
"அம்மம்மா.… கொல்லுறானே இவன்!!" என்று அவள் முணுக..
அவனது நா ஊர்வலம் நின்ற பாடில்லை!!
ஒரு சில சமயம் அவனை வேண்டாம் என்று தள்ளி நிறுத்த தான் பார்க்கிறாள். ஆனால் சில சமயங்களில் அவளை அறியாமல் அவளுள் அவன் நிரம்பி வந்து விடுகிறான்!!
மிக நெருக்கமாக…
பெரும் பரபரப்பாக…
நனி விருப்பமாக!!
எப்போதுமே பெண் என்பவள் விசித்திரமானவள் வித்தியாசமனாவள். இந்த உலகில் பெண் என்பவள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் தெரிந்தாலும்… அவளின் உணர்வுகளும் ஊமை மொழிகளும் பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும்!!
சில சமயம் தானே அரவணைத்து செல்ல துடிக்கும்.. சில சமயம் அரவணைப்புக்க்க தேடி வந்தததை உதறிவிட்டுச் செல்லும்!!
சல சமயம் கெஞ்சும் போதும் மிஞ்சும்.. சில சமயங்களில் மிஞ்சும் போது கெஞ்சும்!!
அன்பை அள்ளி அள்ளி கொடுத்து அடிமை ஆக்கும்… அதை அன்பிற்காக ஏங்கி ஏங்கி அடிமையாய் கிடக்கும்!!
ஆக இப்பெண்களும்... அவர்களின் மனங்களும் வித்தியாசமானவை!! விசித்திரமானவை!!
அந்த விசித்திரத்துக்கு மகதி ஒன்னும் விதிவிலக்கு அல்ல!!
அன்று வந்திருந்த மகாதேவனின் நண்பன் பாஸ்கரனின் மகன் வந்து இறங்கினான் அடுத்த வாரத்தில் மகதியை தூக்கிச் செல்ல…. சும்மா இல்லை வெளிநாட்டில் இருந்து!