அத்தியாயம் 9
ருத்ரன் கலெக்டராக இருப்பது போல இவனது மனைவியும் ஏதோ வேலையில் இருப்பாளாக்கும். அதனால்தான் குழந்தையை இவன் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்று சாதாரணமாகத்தான் நினைத்திருந்தாள் மகதி.
ஆனால் குழந்தை பேசியதும் அவளுக்கு பின்னே இப்படி ஒரு வருத்தம் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டாள் மகதி. இது குழந்தையின் மனநலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லையே என்று மருத்துவராய் அவளது மனம் பரிதவித்தது.
"உங்களுக்கு தெரியுமா டார்லிங்? ஈவினிங் ஸ்கூல் விட்ட உடனே எத்தனை பேர அவங்க அம்மா அழைச்சிட்டு போவாங்க?" என்றதும் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு "இல்லையே.. நிறைய பிள்ளைகள் வேனில் தானே போறாங்க.. அவங்க அம்மாவா வந்து அழைச்சிட்டு போறாங்க?" என்றாள் மகதி.
"அப்படியே வேனில் வந்து அழைச்சிட்டு போனாலும் அங்க வெயிட் பண்ணுவாங்க.. அவங்க கிட்ஸ் இறங்குனதும் தூக்கி போவாங்க.. இப்படி டைட்டா ஹக் பண்ணி கிஸ் பண்ணுவாங்க" என்று அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்த மகதியின் கழுத்தை தன் குட்டி கைகளால் மாலை போல கோர்த்து கட்டி, அவள் கன்னத்தில் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க.. குழந்தையின் அன்னைக்கான பரிதவிப்பில் உறைந்து தான் போனாள் மகதி!!
"அப்புறம் பார்க்கில் விளையாடும் போது அந்த பிள்ளை கூடயே விளையாடுவாங்க.. சிலைட் விளையாண்டா பக்கத்துல நின்னு பார்த்துப்பாங்க.. ஊஞ்சல் விளையாட பின்னாடி நின்னு ஆட்டி விடுவாங்க.. ஹைடன் சீக் விளையாடுவாங்க.. ஃபுட்பால் விளையாடுவாங்க.. இப்படி நிறைய விளையாடுவாங்க.. அம்மாவும் அப்பாவும் அவங்க கிட்ஸ் கூட…. ஆனால் எனக்கு யாருமே விளையாட இல்லை. அப்பாவும் வொர்க் போயிட்டு நைட்டு தான் வருவாங்க" என்றாள் ஏக்கத்தோடு பிள்ளை!!
மகதிக்கு அப்படியே சிறுவயதில் தன்னை பார்ப்பது போலவே இருந்தது. இவளுக்கு தாய் இல்லை.. மகதிக்கு தாய் இருந்தும் இல்லை!! 'இவளை போல தானே நாமும் ஏங்கினோம் ஒவ்வொன்றுக்கும்' என்று மருத்துவர் நிலையில் இருந்து மாறி, மகதியாய் அதுவும் சின்ன மகதியாய் ஆதினியை பார்த்த மகதிக்குள் அவளையும் அறியாமலேயே பாச ஊற்று ஒன்று ஊற ஆரம்பித்தது.
பிள்ளையின் ஏக்கத்தை ஆசையை அறிந்து கொண்டவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை!! எத்தனையோ ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளை ஈசியாக கையாண்டவளுக்கு இந்த அமைதியும் ஆழமும் கொண்ட பெண்ணை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை?
இவளுக்கு வேண்டியது இப்பொழுது மருந்து இல்லை!!
வேண்டியது எல்லாம்...
மடி தாங்க தாயின் மடி அல்லவா?
அணைத்து அன்பு மொழி பேச அன்னை அல்லவா?
அரவணைத்து விளையாட்டாய் மிரட்டி செல்லம் கொஞ்சும் அம்மா அல்லவா?
அதை எப்படி தர முடியும் இவளால்!!
தன் மனதில் உள்ளவற்றையெல்லாம் கூறிவிட்டு ஏக்கம் நிறைந்த விழிகளோடு பார்த்து நிற்கும் அந்த மழலையை கண்டவளுக்கு மனதில் மீண்டும் பிரவாகம் எடுத்தது அன்பு ஒன்றே!!
இறுக்க அவளை அணைத்து கொண்டாள் மகதி!!
சிறிது நேரம் அவளை அணைத்த வாக்கிலே இருந்தவள், இதே மனநிலையோடு அவளை அழைத்துச் செல்ல விரும்பாமல் மீண்டும் அங்கிருக்கும் சிறு சிறு விளையாட்டு பொருட்களோடு அவளை விளையாட செய்தாள். அவள் கேட்டுக்கொண்டபடி ஊஞ்சலாடும்போது பின்னால் இருந்து மெதுவாக ஆட்டி விட்டாள்... ஸ்லைடில் சறுக்கி வரும்போது கைத்தட்டி ஆரவாரம் செய்தாள்.. அவளோடு சிறிது நேரம் ஹைடன் சீக்.. ஓடி பிடித்து என்று விளையாடினாள். அதன் பின்னே அவளை ருத்ரனிடம் அழைத்து சென்றாள்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் சென்றவர்கள் வராததால் யோசனையோடு வெளியே வந்தவன் பார்த்தது ஆதினி சிரிப்போடு ஸ்லைடில் சுற்றி சுற்றி இறங்கும் போது அருகில் நின்று கைதட்டி அரவாரம் செய்த மகதியை தான்.
"ஏதோ பேசணும்னு சொல்லி அழைச்சிட்டு போயிட்டு.. இங்கே என்ன அவ விளையாடுறத இவ வேடிக்கை பார்க்குறா?" என்று அவர்களை கூப்பிட ஒரு அடி எடுத்துச் சென்றவன்.. ஆதினியின் மலர்ந்த சிரிப்பிலும், ஒவ்வொரு முறை ஏறி இறங்கும்போதும் மகதியைப் பார்த்து புருவத்தை உயர்த்தி கண்களால் எப்படி என்று கேட்கும் அந்த அழகிலும், அப்படியே சமைந்து நின்றவனுக்கு மனதில் பல உணர்வுகள். எதையும் வெளிக்காட்ட இயலாமல் அமைதியாக சிறிது நேரம் அவர்களை பார்த்திருந்தான். மீண்டும் பழையபடி வந்து அமர்ந்து கொண்டான்.
ஒரு வழியாக இருவரும் வந்தனர்.
ஆரவாரத்துடன் பேசியப்படி வந்த இருவரையும் தான் ஆசை பொங்க பார்த்தான் ருத்ரன்!! அவனின் அந்த ஆசை பொங்கும் பார்வை எல்லாம் கூலருக்கு பின்னால் தான் மறைந்து விடுகிறதே… பிறகு எங்கு மகதி பார்க்க??!!
"சொல்லுங்க டாக்டர்... உங்க அனலைஸ் என்ன?" என்றான் வலது கையை டேபிளில் ஊன்றி அதில் தாடையை தாங்கியவாறு…
"இந்த போசுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று ப்ரிஸ்க்ரிப்ஷனை எடுப்பது போல முணுமுணுத்தது அவனுக்கு நன்றாகவே கேட்க..
"கேட்டுச்சு... கேட்டுச்சு!!" என்றான் அவன் நக்கலோடு..
"கேட்கணும்னு தானே முணுமுணுகிறது!!" என்றாள் இவளும் பதிலுக்கு..
"வாய்.. வாய்... அது மட்டும் இல்லைன்னு வச்சுக்கோ, உன்னை ஒரு எறும்பு கூட மதிக்காது!!" என்றான் இவனும் விடாமல்..
"அது எதுக்கு என்னை மதிக்க? நான் அதை மிதிக்காம இருந்தா பத்தாது?" என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தி...
இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வதை சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதினி!!
"இப்படியே பேசிக்கிட்டே இருந்தேனு வச்சுக்கோயேன் இழுத்து வைத்து…" என்று அருகில் மகள் இருப்பதை பார்த்து "சாரி சொல்லிடுவேன்!!" என்றான் இறுக்கமான முகத்தோடு!!
"செய்வீங்க.. செய்வீங்க.. அதுவரைக்கும் எங்க கை என்ன பூ பறிக்குமா? திரும்ப கடித்து வைத்துவிடுவேன்!!" என்றவள் அதற்கு பின் தான் அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிய சட்டென்று இரு கைகளாலும் வாயை பொத்திக் கொண்டாள்.
வெடித்து கிளம்பிய சிரிப்பை வழக்கம் போல மீசைக்கு அடியில் அடக்கியவன் "சொல்லுங்க டாக்டர்..!!" என்று ஆதினியின் தலையை வருடியவாறு கேட்க.. அவளும் மற்றதை மறந்து அவனைப் போல ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாள் ஆதினிக்கு புரியாதவாறு...
"அவளுக்கு இப்போதைக்கு தேவைப்படுறது. அவளுக்கு வேண்டியது.. என்னோட கவுன்சிலிங்கோ மெடிசினோ கிடையாது ப்ரதாப் சார். அவளுக்கு தேவை…' என்று சற்று இடைவெளி விட்டு அவனை பார்க்க அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க "அம்மா..!!" என்றாள் சற்றே தழுதழுத்த குரலில்!!
அதுவரை அவளோடு சீண்டி கொண்டு அவ்வப்போது கண்களால் தீண்டிக்கொண்டு மீசைக்கு அடியில் மறைக்கப்பட்ட புன்னகையோடும்.. கூலருக்கு பின்னால் மறைக்கப்பட்ட ரசனையோடும் அமர்ந்திருந்தவன் அவளின் அந்த ஒற்றை வார்த்தையில் சட்டுனு எழுந்து திரும்பி நின்று கொண்டான்.
அவனால் அந்த கனத்தை தாண்டி வர முடியவில்லை. நந்தினி இல்லாதது அவனாலே இன்னும் ஏற்க முடியாத பட்சத்தில் குழந்தையை எப்படி ஏற்க சொல்ல முடியும்?
"எங்க இரண்டு பேருக்கும் அவ்ளோ பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டாம் நந்தினி நீ!!" என்று அந்த நிமிடம் அவள் குழந்தையை இப்படி ஏங்க வைத்து விட்டாளே என்று அத்தனை கோபம் அவனுள்!! அதனை காட்ட முடியாமல் சிறு தூரம் சென்றவன், அங்கிருந்து சுவற்றில் உள்ளங்கையால் தட்டி தட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள முயன்றான்.
"ப்ரதாப் சார்….!!" என்று அவள் அழைக்க… அதுவரை இருவரும் பேசிக் கொண்டிருந்தவர்கள், தந்தை சட்டென தனியாக எழுந்ததை பார்த்ததும் ஆதினியின் முகம் மாறியது அழுகைக்கு!! அதை கவனித்து விட்ட மகதி "ஆதினி.. உங்களை வாட்ச் பண்றா சார். ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்!!" என்றவுடன் திரும்ப நின்றவரே முகத்தை சரி செய்தவன் புன்னகையோடு திரும்பினான்.
ஆதினியும் தந்தையின் சிரிப்பு முகத்தை பார்த்ததும் அவளும் புன்னகைக்க.. அவளை வாரி அள்ளிக் கொண்டவன் "இப்போதைக்கு... அதுவும் பட்டு முன்னாடியே என்னால எதையும் கேட்க முடியாது.. இன்னொரு நாள் வரேன்" என்று தனது பர்சனல் நம்பரை கொடுத்தவன், " நீங்க ஃப்ரீயா இருக்கும்போது இதுக்கு கால் பண்ணுங்க.. அப்புறம் ஒரு நாள் சந்திந்து பேசலாம்" என்று ஆதினியின் தந்தையாக அவன் பேசவும், இவள் சரி என்று ஒத்துக் கொண்டாள்.
வரும்பொழுது எல்லாம் நந்தினியின் தாக்கம் அதிகம் அவனுள்!! அதுவும் ஆதரவற்ற உயிர்களிடமே அத்தனை அன்பு காட்டும் நந்தினி இன்று மகள் அன்னையில்லாமல் தவிக்கிறாள் என்று தெரிந்தால்… "மேலுலகத்தில் கூட நிம்மதியாக இருக்க முடியுமா டி உன்னால்? கிராதகி!! எங்களை பாடாய்ப்படுத்துற டி" என்றவன் அன்று முழுவதும் மகளை விட்டு பிரியவே இல்லை. மகளின் மனதில் துளிர்க்கும் இந்த அன்னையின் ஏக்கத்தை விருட்சமாய் வளர விடாமல் எப்படி கலைவது என்று தீவிர சிந்தனையில் ருத்ரன்!!
கொஞ்சம் கொஞ்சமாக மகளை அணைத்தவரே கண் அயர்ந்தவன் காலையில் விழித்ததும் "இனி பட்டுவோடு அதிக நேரம் டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டும்" என்று நினைத்தவன், மாலையில் முடிகிறதோ இல்லையோ காலையில் முடிந்த அளவு செய்வோம் என்று முடிவு எடுத்தான்.
அன்றே ஆதினியை எழுப்புவதில் இருந்து குளிக்க வைத்து உடைமாற்றி உணவு கொடுத்து என்று அனைத்து வேலையையும் தனதாக்கிக் கொள்ள சொர்ணமா ஒரு நொடி ஏனென்று அதிர்ந்து பார்த்தாலும், பின்பு அவனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் அமைதியாகிவிட்டார்.
ஆதினிக்கு கொள்ளை சந்தோசம்!! இதெல்லாம் பெரும்பாலும் சொர்ணமாவை செய்துவிட, இன்று அப்பா ஒவ்வொன்றும் தனக்காக செய்வது அவள் முகத்தில் அதன் பிரதிபலிப்பாய் சந்தோஷம் மின்னலாய் தெரிய.. மகள் தனக்காகவும் எவ்வளவோ ஏங்கி இருக்கிறாள் என்று புரிந்து ருத்ரனுக்கு மனம் பிசைந்தது.
"இனி என்னால் முடிந்த அளவு உன்னோட டைம் பண்றேன் பட்டு" என்று அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தம் இட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்தான்.
மாவட்ட ஆட்சியருக்கு வேலையில் குறைவா என்ன? எப்போதுமே அவனை விழுங்க காத்துக் கொண்டிருக்கும் வேலையில் சிறிது நேரம் தப்பித்து காலை நேரத்தை மகளுக்காக கொடுத்தவன், மீண்டும் அவ்வேலையில் அமிழ்ந்துக்கொள்ள.. மாலை 5 மணி போல அறியாத நம்பரில் இருந்து அவனுக்கு போன்!!
அவனது மொபைலில் இரண்டு சிம்மில் இருக்கும் ஒன்று அபிஷியல் மற்றொன்று பர்சனல். பெரும்பாலும் அவனுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்க... இதில் யார் அழைப்பது என்று யோசனையோடு எடுத்து காதில் வைத்தவனுக்கு "பிரதாப் சார்…" என்ற குரலில் 'சில்வண்டு எதுக்கு கூப்பிட்டு இருக்கா?' என்று யோசித்தவனுக்கு அவன் தான் நம்பர் கொடுத்து ஞாபகம் வந்தது. "அட மறுத்தே போயிட்டேனே…" என்று இடது பெரு விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
"சார்.. ஃப்ரீயா இருக்கும்போது ஆதினி பற்றி பேசலாம்னு சொன்னீங்க? நீங்க ஃப்ரீயா இப்போ?" என்று கன அக்கறையாக மருத்துவராய் அவள் கேட்க…
"ஃப்ரீ தானே.. ஆகிடுவோம்! ஆகிடுவோம்!" என்றவன் மூளையில் மீண்டும் டிராகுலா இடம் பிடித்து தனது இரு கோரப் பற்ளை வெளியில் காட்டி பெண்ணவளுக்கு லவ் பைட்ஸ் வழங்க தருணம் பார்த்து காத்திருக்க... இத்தருணத்தை அழகாக மாற்றிக் கொண்டான் ருத்ரன் காதல் ட்ராகுலாவாய்!!
"டாக்டர் ஒரு சின்ன ஹெல்ப்.. கொஞ்சம் அர்ஜென்ட் மீட்டிங்ல இருக்கேன். உங்களால ஒரு ஹாஃப் அன் ஹவர் எனக்காக ஸ்பென்ட் பண்ண முடியுமா?" என்றதும் அவளும் அவனின் கடமை உணர்ந்து "ஓகே பிரதாப் சார்.." என்க, தன் அலுவலகத்திற்கு வர சொன்னான்.
'அய்யய்யோ இவன் இடத்துக்கா? வேண்டாம் வேண்டாம்.. நாமளே போய் இவன் வலையில விழ வேண்டாம்! பேசிய சமாளித்து விடுவோம்' என்று நினைத்தவள் "சார் நான் கலெக்டர் ஆபீஸ் வந்தா அவ்வளோ சரியா இருக்காது. இங்க தான் இருப்பேன்.. நீங்க ரிலாக்ஸா வாங்க பேசலாம்!!" என்று தப்பிப்பதாய் நினைத்து, அவன் விரித்த சிலந்தி வலையில் நன்றாக சிக்கிக் கொண்டாள்.
"படுத்துகிட்டு போத்திக்கிட்டா என்ன.. போர்த்திக்கொண்டு படுத்துக் கொண்டால் என்ன? போர்த்திக் கொள்வது தான் முக்கியம்!!" என்றவன் சொன்னது அவளுக்கு புரியவில்லை.
அவள் இங்கு வரவில்லை என்றதற்கு சொன்னேன் என்று சமாளித்தான். சிறிது நேரத்தில் கிளம்பி விட்டான் அவளைக் காண…
ஆதினிப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தாள் மகதி. "பிரதாப் சார் வேற வேலை ஜாஸ்தின்னு சொன்னாரு.. இங்க வந்து பேச முடியலன்னா... இந்த பைலை கொடுத்து வீட்ல போய் படிச்சிக்க சொல்லலாம்" என்று அவளிடம் தான் கண்டவற்றை கூறி, அதற்கு எவ்வாறு ஆதினியின் மனதை மகிழ்ச்சியாக வைக்கலாம் என்றும் எழுதி வைத்திருந்த ஃபைலை ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டு ருத்ரனுக்காக காத்திருந்தாள் மகதி!!
ஏழு மணி ஏழரை ஆகியது... ஏழரை எட்டாகியது... எட்டு எட்டரை ஆகி ஒன்பதும் ஆக... அவன் வந்த பாடு இல்லை…
அதற்குள் துர்கா மகளுக்கு போன் செய்து "இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலையா? ஏழு மணிக்கே உன்னோட ஓபி முடிந்து விடுமே?" என்றதும்,
"இல்லமா.. கொஞ்சம் வேலை இருக்கு" என்றாள் மகதி.
"ஆமா இவ பெரிய கலெக்டர்!! சும்மா கார்ட்டூன் பார்த்திட்டு இருக்காமா கிளம்பு!" என்று ஏற்கனவே அவன் மேல் இருந்த கடுப்பை துர்காவும் ஊதிவிட்டார்.
"ச்சே… இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு எல்லாம் பஞ்சுவாலிட்டியே தெரியல!! டைம் மேனேஜ்மென்ட் சுத்தமா தெரியல!! பெரிய கலெக்டர்.. என்னத்த வெட்டி முறிக்குறாரு" என்ற புலம்பிக்கொண்டே அவள் அறைக்குள்ளே குட்டி போட்ட பூனையாக நடந்து கொண்டிருந்தவள், கையில் கட்டி இருந்த வாட்சையையும் கதவையும் மாறி மாறி பார்க்க… ஒன்பதை மணி தாண்டிவிட, "இனி வெயிட் பண்ணுறது வேஸ்ட்!! கிளம்பலாம். எவ்வளோ நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டான்" என்று இவள் கோபமாக கதவை திறந்து வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டாள்.. வேக நடையோடு வந்தவன் அன்று போலவே அவளது இடுப்பை இறுக்க பற்றியவாறு உள்ளுக்குள் நுழைந்து கதவடைத்தான்.
பின் மெல்ல அவளிடம் இருந்து பிரிந்தவன் கதவோரம் சாய்ந்து நின்று புருவங்களை உயர்த்தி சிரித்தான். அவளோ கோபப் பார்வைப் பார்த்தாள்.
"என்ன பண்ணுறிங்க நீங்க? எப்ப வர சொன்னேன் உங்களை? நீங்க எப்ப வந்து இருக்கீங்க? நான் என்ன வெட்டியா இருக்கேனா? உங்க வேலை உங்களுக்குனா.. என் வேலை எனக்கு" என்று ஏதோ ஷாப்பிங் போக லேட்டாக வந்த கணவனை கோபித்துக் கொள்வது போலவே இவள் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற பார்த்தாள்.
"கொஞ்சம் லேட்டாகிடுச்சு!! திடீரென்று வேலை…" என்றவன் அவள் கோபத்தோடு வெளியே செல்ல போக, நல்லப் பையன் போல விலகி வழி விட்டான். அவள் கதவின் தாழ்ப்பாளை திறக்கப் போகும் நேரம் பார்த்து அவளை கதவிலே சாய்த்து சிறை வைத்தான் ருத்ரன்!!
அவளின் இடை வளைத்து இறுக்கியவன் அவளின் காதுகளில் தன் கற்றை மீசை முடிகள் குத்த.. "சாரி.. லோட்டாகிடிச்சு!! கிளம்பும் நேரம் அர்ஜெண்ட் வொர்க்…" என்றான் சரசமான குரலில்!! அவன் முரட்டு கைகளில் மாட்டிக்கொண்ட மங்கையவள் தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள்.
"சார்.. வேணா.. விடுங்க!!" என்று!!
அவன் விடுவதாய் இல்லை அவளை. இன்னும் இறுக்கினான் அவனின் பிடியை... உடும்புப் பிடியாய்...
"இட்ஸ் ஹெர்டிங்.. சார்.. நாம ஆதினி.. பத்தி.. இன்னொரு நாள் பேசுவோம்.. எனக்கு டைம் ஆச்சு…" என்றவள் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவித்தது. முன்புறம் கதவு பின்புறமும் ருத்ரன் இடையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தாள் சிறைப்பாவையாய் மகதி!!
அவனோ அவள் சொல்வது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளின் கழுத்து வளைவினில் முகம் புதைத்தான்… மூச்சை இழுத்து சுவாசித்தான். ஆனால் முத்தமிடவில்லை!! உதடுகள் உரசி உரசி உன்மத்தம்.. அதனை ஏற்றியது பெண்ணவளுக்கு!!
கழுத்தில் கோலமிட்ட அவனது உஷ்ண உதடுகள் மெல்ல மெல்ல உயர்ந்து அவளின் காதை அலங்கரித்திருக்கும் சின்ன ஜிமிக்கியை பற்கள் கொண்டு கடித்து இழுக்க.. அவ்வுதடுகளின் உஷ்ணமும்.. பற்களின் கவ்வலும்.. எச்சிலின் ஈரமும் பெண்ணவளை வேற உலகத்துக்கு இழுத்து சென்றது!!
"செம டென்ஷன் ஆஃபிஸ்ல.. இங்க வந்தா நீயும் என்னை டென்ஷன் படுத்திட்டு கிளம்புற… அவ்வளோ கொழுப்பா உனக்கு!! ஒரு கலெக்டர் வரும் வர உன்னால வெயிட் பண்ண முடியாதா? நீ ஃப்ரீயா தானா இருந்த" என்று அவளின் முகத்துக்கு நேராக அவனின் முகம் கொண்டு வந்தவன், அவளின் கண்களை பார்த்து குற்றம் சாட்டினான்!! அவனின் முகமோ அவளின் முகத்தோடு இழைந்தது!!
ருத்ரனின் இடதுக் கரமோ அவளின் இடுப்பை இறுக்கியப்படி மெல்லமாய் வருடிக் கொண்டிருந்தது. வலதுக் கரமோ முன்னேறி பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்திருந்தது.
மகதியும் அவளையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் ருத்ரனிடம் தொலைந்துக் கொண்டிருந்தாள். அவனின் சூடான மூச்சுக் காற்று.. பின்னங்கழுத்தின் பிடி, இடை வருடிக் கொண்டிருக்கும் விரல்கள் இப்படி அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். ஆனாலும் அவனின் அந்த கலெக்டர்.. நீ ஃப்ரீயா இருந்த.. போன்ற வார்த்தைகள் அவளின் கோபத்திற்கு நெய் ஊற்ற…
"சும்மா.. சும்மா… என்னை சொல்லாதிங்க!! நீங்க ஆன்டைம் வராதது உங்க மிஸ்டேக்!! என்னை ப்ளேம் பண்ணாதிங்க!! கெட் லாஸ்ட்!!" என்று அவள் ஆத்திர மிகுதியில் கத்த.. சட்டென்று அவளிடமிருந்து பிரிந்து நின்றான்.
"இது ஆதினி ரிப்போர்ட்ஸ்!! படிச்சு பாருங்க…" என்று கையில் அந்த ஃபைலை திணித்தாள்.
அதை வாங்கியவன் பார்வையோ அவளைத்தான் துளைத்தது. அவளை ஒதுக்கி கதவைத் திறந்தவன், கதவுக்கும் சுவற்றுக்கும் இடையில் நின்றவளை சடுதியில் நெருங்கி.. "சாரி.." என்றான் அவனது பிரத்யேக ஸ்டைலில் இதழ்களால் இதழ்களில்…
விட்டு விலகியவன் கோபத்தில் மின்னலென சென்று விட்டான்.
கோபத்துடன் சென்றவன் இரண்டே நாளில் மீண்டும் அவளின் உதவியை தான் நாடினான்!!