காரிலிருந்து இறங்கியதும் அண்ணன் வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க மனீஷா அழகர் இருவரும் ஒருபேக்கை இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு கண்ணும்கண்ணும் நோக்கிக் கொண்டிருக்க யாருடா இந்தபுள்ள கேட்டவாறு அவன் அப்பாவை பெற்ற காளியாத்தா வந்தது
பாட்டியின் குரலை கேட்டதும் சிந்தை தெளிந்து என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாமல் யோசித்தான்
அவளை தோழியெனக் கூறினால் ஜாதி மதம் அத்தனையும் கேட்பார்களே என்ன சொல்வதென்று யோசனையில் இருக்க பாட்டி சந்தேகமாக பார்த்துக்கொண்டிருந்தார
வக்கீலின் தோளில் கைபோட்டான் அழகர்
அவனோ அருகில் ஓட்டி நின்றிருக்கும் மச்சானை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் முன்னாலிருக்கும் பாட்டியை பார்க்க
அப்பத்தா இது என்னோடதோஸ்த் என்கூடபடிச்சவன் படிச்சாமுடிச்சு பெரிய வக்கீலா இருக்கான்
லீவு சொல்லி நம்மூரை சுத்திபாக்கணும்னா வந்திருக்கான்
அவன் வரது தெரிஞ்சதும் அவனோட தங்கச்சியும் கூடவேவந்துருச்சு
அவன் தோளில் கைபோட்டபடி சிரித்தவனை லுக்கு விட்டான் வக்கீல் பொழச்சுருவடா நீ
காளியாத்தாவோ அதன்பின் சந்தேகமாக பார்க்கவில்லை ஆனால் வீபீஸை பார்த்ததும் ஏதோ உள்ளுக்குள் இனம்புரியாத பாச உணர்வு எட்டிப் பார்த்தது அருகில்வந்தவர் அவன்முகத்தை ஆழ்ந்துபார்த்தார்
மோனிஷா பாப்பாவின் சாயல் என்றால் விபீஷணன் அம்மாவை உரித்து பிறந்திருந்தான்
கண்ணீரோடு அருகில்வந்தவள் அவர்கன்னத்தை தொட்டு தடவி நெட்டிமுறித்தார் பாக்குறதுக்கு அப்படியே என் பொண்ணுமாதிரியே இருக்க முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொள்ள அண்ணன்தங்கை இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக்கொள்ள அழகர்தான் சத்தம்போட்டான்
இப்ப என்னத்துக்கு ஒப்பாரிவெச்சிட்டு இருக்க ஓடிப்போனவளப்பத்தி இங்கபேசக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் திரும்பதிரும்ப அவளைபத்தி பேசிட்டு இருக்க கண்டவன்கூட ஓடிப்போய் குடும்பகவுரவத்தையே குழிதோண்டி புதைச்ச உன்மகளை சும்மா....
கோபமாக பேசியவன் மனிஷாவின் கலங்கும் விழிகளை பார்த்து வாயைமூடிகொண்டான் கோபம் மொத்தமும் குறைந்துபோனது அவளைநேர்கொண்டு பார்க்கமுடியாமல் அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் அப்பத்தாவை பார்த்தவன் பெருமூச்சுவிட்டு அப்பத்தா உன் பொண்ண பத்தி பேசினா அப்பாவுக்கு பிடிக்காதுதெரியும்ல
அவங்களபத்தி பேசி கோபம்வர வைக்கிற நீபேசுறதை அப்பாமட்டும் கேட்டாஎப்படி எப்படி திட்டுவாரு எல்லாம் தெரிஞ்சும் எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க இனிமே அவங்களபத்தி பேசாத மனிஷாவையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவன் கூற மனிஷா முகத்தை திருப்பிக்கொண்டாள்
வீராசாமி சகோஸ் வந்துவிட்டார் அப்பத்தாவிடம் கூறியது போலவே அப்பாவிடமும் கூறினாரன் ரொம்ப சந்தோஷம்டா
நம்ம பக்கம் வக்கீலேஇல்லை நினைச்சுட்டு இருந்தேன் அப்போ ஒரு மாசத்துக்குநம்மகூடவே இருந்துட்டா எவனும்நெருங்கமாட்டான் அதென்னப்ப நீ ஊரை சுத்திபாக்க வரும்போது பொண்ணுங்களையும் கூடவே கூப்பிட்டு வருவியா வீட்லஅப்பா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா படிக்கிறதுக்கு வேணும்னா அனுப்பலாம் தப்பில்ல சுத்திபார்க்கிறதுக்கு கூடவா பொண்ணுங்கள அனுப்புவாங்க
அப்பா நம்ம ஊரு கலாச்சாரம் வேற அவங்க பழக்கவழக்கம் வேறப்பா விட்டுருங்களே வீட்டுக்கு வந்தவர்களை இப்படி எல்லாம் பேசக்கூடாது மனிஷாவின் சோகமாக முகத்தை பார்த்து அவன் கூற
சரிப்பா காலம்கெட்டுபோய்கிடக்குல அதனாலதான் சொல்றேன் படிக்கிறதுக்கு அனுப்புனா தங்கச்சிய எவனோ தூக்கிட்டு போயிட்டான் அவளை கண்டுபிடிக்ககூட முடியல நம்மபொண்ணுமேல கைவச்சமாதிரி
இந்த பொண்ணுமேலயும் கைவச்சுருவாங்கனு பயம்தான் நம்மளலநம்பி வந்தவங்களாச்சே அதனாலதான் சொன்னேன் தங்கச்சி பத்தி ஏதாவது தகவல் வந்துச்சா
என் கண் முன்னாடியே அவளை தூக்கிட்டு போனான்
அவனை உயிரோடவே விடகூடாதுடா வீராச்சாமி கூற
தேடிட்டு இருக்கேன் பா அவன்யார் என்னான்னு எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு அவனை வெட்டி ஆத்துல தூக்கி எறிஞ்சிட்டு தங்கச்சியகூப்பிட்டு வரணும் கோபமாக கூறிவிட்டு அப்பாவிடம் கூறிவிட்டு இரண்டுபேரையும் அழைத்துக்கொண்டு போக இருவரும் பயத்தோடுதான் அவனுக்கு பின்னால சென்றனர்
அப்பாவின் தங்கைமகள் என்று தெரிந்தால் சும்மாவிடுவார்களா எப்போ உண்மை தெரிஞ்சு என்னபண்ண போறாங்களோ தெரியல இரண்டு பேருக்கும் வயிறு கலக்கியது
வீட்டுக்கு அழைத்து போய் மனைவி மகள் அத்தனைபேரிடமும் அறிமுகப்படுத்த அவர்களோ ஒருஎல்லையோடு தான் அவர்கள் நிறுத்திகொண்டனர்
காளியாத்தா பேச்சியப்பன் மகளை பார்ப்பது போல் இருக்க அவர்களுக்கு மட்டும் கண்ணீர் வந்தது
அவர்கள் வீட்டில் தங்கவைக்காமல் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் காலிவீட்டில் இருவரையும் தங்கவைத்தனர் வைதேகி இவங்களை பார்த்துக்கோ எனக்கு நெருக்கமானவங்கதான் வேலையாளுவச்சு பார்த்துக்குறது சரியாஇருக்காது சங்கடப்படுவாங்க அதனாலதான் உன்கிட்டசொல்றேன் பாத்துக்கோ வெளியே போயிட்டு வரேன் கூறிவிட்டு அழகர்சாமி வெளியேற அண்ணன் தங்கை இருவரும் பெருமூச்சு விட்டனர்
இவங்ககிட்ட எப்படி பேசி இரண்டு குடும்பத்தை சேர்க்க போறோம் தெரியல நொந்துபோயினர்
உங்க பேருதான் வைதேகியா மனிஷா கேட்க அவளும் ஆமாம் என்று தலையாட்டினாள்
இஷ்டமில்லாம உட்கார்ந்துருக்கிற மாதிரி தெரியுது அவங்க கட்டாயபடுத்தினதால இங்கஇருக்கீங்களா அவளின் முக வாட்டத்தை பார்த்து கேட்க
அதெல்லாம் ஒன்னும் இல்ல வேற ஆளுங்க யாரும் இங்க தங்க மாட்டாங்க என்குடும்பமே ஒரு ஏழரை புடிச்சு குடும்பம் என் அண்ணன் அறைகிறுக்கு அவனுக்கு போயி ஃப்ரெண்டா வந்துருக்கிங்களே இவன்கூட பிரண்ட்ஷிப் வசிக்கிறதுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ
இங்க எதுக்காக நீங்க வந்தீங்களோன்னு தான் பாத்துட்டு இருக்கேன் சோகமாக கூற
மனீஷா அவளோடு கதைகேட்க அமர்ந்துகொள்ள தன் குடும்பக்கதை மொத்தமும் கூறினாள்
தயவுசெஞ்சு இந்தஊரைவிட்டு போயிருங்க நானே எப்படா இந்த வீட்டைவிட்டு ஓடலாம்னு இருக்கேன் என்அத்தை அக்கா மட்டும் எங்க இருக்கான்னு தெரிஞ்சா
அங்க ஓடிருவேன் அவஎங்கஇருக்கா தெரியல
கண்ணீரோடு கூற அவளைபார்க்கவும் பாவமாகஇருந்தது அவள் குடும்பகட்டுப்பாடு அப்படி இருந்தது
வேறு ஜாதிகாரர்களாக இருப்பார்களோ என்றுதான் அவர்கள் வீட்டில் தங்கவைக்காமல் வேறு வீட்டில் தங்கவைத்திருக்கின்றனர் இப்படிப்பட்ட ஆட்களிடம் எப்படிபேசி குடும்பத்தை ஒன்று சேர்ப்பது
அந்த நேரம்தான் வீடியோ கால் செய்த அம்மாவை பார்த்துவிட்டு அவளும் அட்டென்ட் செய்தாள்
அம்மாவுக்கு அருகே தாராவும் அமர்ந்திருந்தாள்
ஹலோ மம்மி ஆங்கிலத்தில் காரசாரமாக பேசிக்கொண்டிருக்க எதிர்பக்கம் அழகி திட்டினார் தமிழில் பேசுமாறு
தாராதான் மொபைலை வாங்கி போனஇடம் எப்படிஇருக்கு? எங்க டூர் போயிருக்கிங்க விசாரித்துக் கொண்டிருந்தாள்
நானும் அண்ணனும் ஒன்னாதான் வந்திருக்கோம் நாங்க வந்திருக்கிற இடத்தை சொன்னா ரெண்டுபேரும் அதிர்ச்சியாகிருவிங்க தெரியுமா சிரித்தவ்று கூற
அப்படியா எந்த ஊர்னுசொல்லு பார்க்கலாம் தாரா கேட்டதும் வைதேகி முகம்தெரியுமாறு காட்ட அதிர்ச்சியில் மொபைலை நழுவவிட்டாள்
கீழே விழுந்த மொபைலை எடுத்து பார்த்த அழகி வைதேகி யார் என்றுதெரியாமல் முழித்துக் கொண்டிருக்க
அடிய்த்தே இது அழகியத்தைமாதிரில இருக்கு நான் போட்டோல பார்த்திருக்கேனே சந்தேகமாக பார்த்தவள்
அய்யோ அத்தை நீ அழகிதான வைதேகி பதற்றமாக கேட்க
ஆமா நீ யாருமா
ஐயோ கடவுளே ஊரைவிட்டுபோனாலும் போனீங்க அப்படியே இருக்கவேண்டியதுதானே உன் பிள்ளைங்களை எதுக்கு இங்க அனுப்பி விட்டிங்க
இது உங்கள் மகன்தானா அய்யோ கடவுளே அவள் தலையில் அடித்துகொள்ள
என்னடி இது யார் இந்தபொண்ணு
இப்படிபேசிட்டு இருக்கா ஒன்றும் புரியாமல் தராவிடம் விசாரிக்க
ஐயோ கடவுளே அத்தை அது என் தங்கச்சி உன் சின்னஅண்ணன் பொண்ணு உன்னோட பொண்ணும் மகனும் டூர் போனது எங்கஊருக்கு அவங்கஇருக்கிறது எங்கவீட்டுல தாரா கூறியதும் ஐயோ கடவுளே மொபைலை நழுவவிட்டவர் உண்மையிலேயே மயங்கிபோனார்
ஐயோ கடவுளே நானேபதட்டத்தில் இருக்கேன் இந்த மாமிவேற சும்மா சும்மா மயங்குது தண்ணீரை எடுத்து அழகி முகத்தில் ஊற்றிவிட்டு வைதேகியிடம் அவர்களைப்பற்றி விசாரிக்க
அக்கா இவங்க யாருன்னு இப்போவரைக்கும் இங்கயாருக்கும்தெரியாது
இப்போ போன்ல பேசினபிறகுதான் எனக்கே தெரிஞ்சது
அப்பாவும சித்தப்பாவும் அண்ணனுங்க உன்னைதூக்கிட்டு போனவரை வெட்டிகொன்னுட்டு உன்னைமட்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் சொல்லிட்டு இருக்காங்க நானும் இவங்ககிட்ட சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருந்தேன் இவங்க என்னன்னா நேரா உனக்கு போன் போட்டுட்டாங்க அப்போ அத்தையும்மருமகளும் ஒரே வீட்டுக்குதான் மருமகளா போயிருக்கீங்களா இவங்க ரெண்டுபேரும் தெரிஞ்சேவந்துருக்காங்களா அய்யய்யோ இது மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சா என்னாகும் அவள் பதற்றமாக கூற
அவள் மொபைலை பிடுங்கிய மனிஷா நான் தெரிஞ்சேதான் வந்துருக்கேன்
பிரிஞ்சிபோனா நம்ம குடும்பத்தை ஒன்னுசேர்க்கணும்ல அதனாலதான் வந்துருக்கேன் நாங்க யாருன்னு சொல்லாம எப்படியாவது குடும்பத்தை ஒன்னுசேக்கனும் அம்மாவை இங்ககூட்டிட்டு வரணும் பழையபடி இந்த வீட்டுபொண்ணா எங்கம்மா உரிமையோடு இருக்கணும்
அம்மா அவங்க குடும்பத்தை நெனச்ச ரொம்ப பீல்பண்ணாங்க அதனாலதான் அம்மாவோட ஆசைய நிறைவேத்துறதுக்காக நாங்க இங்க வந்துருக்கோம் நிறுத்திநிதானமாக மனிஷ் கூற
மாமியாருக்கும் மருமகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்தது இரண்டுபேரையும் திட்டினார் அண்ணன்கள் என்னசெய்வார்களோ என்று பயமானது வைதேகிக்கோ கைகால்களெல்லாம் நடுக்கமெடுத்தது அய்யோ அப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் அழுதுவிட்டாள்
மனிஷா மனச கொண்டிருந்த அம்மாவை சமாதானப்படுத்தியவரு வெளியே நடந்தாள் அம்மாவிடம் பேசியவாறு வீடியோ காலை கட்பண்ணாமல் வாசலில் நின்று அந்த வீடு தோட்டத்தை எல்லாம் காட்டினாள்
தூரத்தில் சட்டையில்லாமல் கழுத்தில் துண்டை மட்டும் போட்டுக்கொண்டு வேலை செய்பவர்களை திட்டிக்கொண்டிருந்தார் பேச்சியப்பன்
அவருக்கு அருகில் காதில் பெரிய தண்டாட்டி தொங்க கூரைபுடவை கட்டி கை நிறைய வளையல்போட்டு காலில் பெரிய காப்புபோட்டு இடுப்பில்கை வைத்தவரே மாட்டிற்கு தீவனம் அள்ளி போடசொல்லி ஒருவனை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் காளியாத்தா
எங்கம்மா அப்பா அழகிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது போனிலேயே அம்மாவின் முகத்தையும் அப்பாவையும் வருடி கொடுத்து கண்ணீர் விட்டார்
மாம் கிரமா இயர்ல ஏதோ தொங்குதே அது என்ன
அதுவா தண்டட்டி நீ காதுல போட்டுருக்கியே கம்மல் அதுமாதிரி வயசானவங்களுக்கு அதுதான் கம்மல்
முன்னாடி கல்லுவச்சு சின்னகம்மல்தான் போட்டுருந்தாங்க இப்ப ரொம்ப வயசாயிடுச்சுல்ல அதனால தண்டடி போட்டுருக்காங்க
எனக்கு சின்ன வயசா இருக்கும்போது எங்கம்மா எங்க அப்பாகிட்ட தண்டடி கேட்டுட்டு இருந்தாங்க அப்பா திட்டினாரு அப்படியே வாங்கிகொடுத்தாலும் அந்த தண்டாட்டி உனக்கு அடுத்து என் மகளுக்குதான் போகணும் சொன்னார் தெரியுமா
அம்மா சொல்வதை கேட்டபடியே காளியாத்தா அருகில் போனவர் கிரேன்மா இந்த தண்டடி எனக்குகுடுப்பிங்களா ரொம்ப அழகா இருக்கு
அவள் கேட்டதும் மகளை நினைவு வந்துவிட்டது
அதுக்கென்னம்மா வாங்கிக்கோ சிரித்தவாறே கூற இது என் மம்மிக்கு ரொம்ப புடிச்சிருக்காம் உங்ககிட்ட பேசணும் சொன்னாங்க கூறியவள் மொபைலை காளியம்மாவிடம் குடுக்க
அழகி கையில் இருக்கும் மொபைல் மறுபடியும்நழுவியது
அய்யய்யோ கிழவி என்னை பார்த்தா எங்கப்பா கிட்ட போட்டு கொடுத்துடுமே கூறிவிட்டு எழுந்து ஓடிவிட்டாள் தாரா
- நன்றி சிஸ்டர்