மனிஷா விப்ஷ் இந்தியாவந்து விட்டனர் சென்னைக்கு வந்து போன்போட்டு அழகரிடம் அவன் ஊரை விசாரிக்க அவன் இதை எதிர்பார்க்கவில்லை
என்ன நிஷா திடீர்னு வந்துருக்கீங்க மனிஷாவை அவன் சுருக்கி இப்படி அழைப்பதுதான் வழக்கம்
நானும் என்னோட ப்ரோவும் ஒரு மாசம் இந்தியாவுக்கு டூர் வந்திருக்கோம் எங்கபோய் தங்குறது தெரியலை எனக்கு இந்தியாவுல பிரெண்ட்ஸ் யாருமில்லை நீங்கதானே என்னோட முதல் பிரண்டு அவள் கூறியதும்
என்னசொல்றீங்க இந்தியாவா அப்போ நீங்க இந்தியால இல்லையா எங்கருந்து வந்திருக்கீங்க அவன் கேள்வியை ஆரம்பிக்க நாக்கைகடித்துக்கொண்டாள்
நாங்க பெங்களூர்ல இருக்கோம் பெங்களூர்லஇருந்து சென்னைக்கு வந்திருக்கோம் இங்க யாரும் பிரண்ட்ஸ் இல்லை அதைத்தான் நான்அப்படி சொன்னேன் நீங்க தப்பா நினைச்சுட்டீங்க போல
சரி சரி ஷாக்காகிட்டேன் நீங்க வெளிநாடு பாரின்ல இருந்து வந்துருப்பிங்களோனு
எதுக்கு அப்படி பாரீன்ல ஃப்ரெண்டஸ் இருக்ககூடாதா
அதெல்லாம் அப்படித்தான் நீங்க வெளிநாடுலயோ பாரீன்லயோ இருந்தா எங்கஊருல கால்வைக்கமுடியாது உயிரோட ஊர்போய்சேரமாட்டிங்க அதனாலதான் கேட்டேன் அழகு கூற
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் எப்படி சமாளிக்கபோறோமோ தலையை ஆட்டிக்கொண்டனர்
ஓகே ஓகே எங்களுக்கு தங்கறதுக்கு வீடு ஏற்பாடுசெஞ்சுகொடுக்க முடியுமா
இங்க யாரையும்தெரியாது
நீங்க *** ஊருக்கு வாங்க அவர்களுக்கு அட்ரஸ் சொல்லி வரவழைத்தவன் பெரியரெஸ்டாரண்டில் இருவரையும் வரசொல்லியிருந்தான் அவர்களும் அவனுக்காக காத்திருந்தனர்
இதோ வெள்ளை வேட்டியை தூக்கிமடித்தாவாறே உள்ளே வந்தான் பேஸ்புக் டிபியில் இருந்ததைவிட நேரில் கட்டழகனாக இருந்தான் வெள்ளை வேட்டிசட்டையில் முறுக்கியமீசையை முறுக்கியபடியே நடந்துவந்தவனை இமைகொட்டாமல் பார்த்தாள் ஆணழகனாக அவள் கண்ணுக்கு தெரிய கன்னத்தில் கைவைத்து ரசித்து கொண்டிருந்தாள்
அவர்கள் அருகில் வந்து அமர்ந்தும் அவள்பார்வை மாறவில்லை
அவனுக்குதான் கூச்சம் பிடுங்கிதின்றது அங்குமிங்கும் தலையை திருப்பி வெட்கத்தை மறைக்க முயற்சித்தான்
தங்கை வெளிப்படையாகவே ஜொள்ளுவிடுவதை பார்த்து கர்சிப் எடுத்து அவள் வாயைதுடைத்துவிட்டான் விபி அதன்பிறகே அவளுக்கு புரிந்தது சைட் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்று அண்ணனை பார்த்து முறைத்தவள் அழகரை பார்த்துசிரித்தாள்
நான்கூட நம்மூரு பொண்ணுமாதிரி இருப்பிங்க நினைச்சேன் ஆனா பாருங்க பார்ன்பொண்ணு மாதிரி இருக்கீங்க அவன்ஆச்சரியமாகக் கேட்க
மனிஷாஅப்பாவின் ஜாடை என்பதால் அவள் அப்படி தெரிந்தாள்
ஆன்ல் தலைமுடி கருமைதான் அதனால் தப்பித்தாள்
நீங்க தப்பா நினைச்சுட்டீங்க வொய்ட்டா இருந்தா பாரீன்லதான் இருப்பாங்கனு நினைக்கக்கூடாத
என் அம்மா அப்பா ரொம்ப பெரிய பணக்காரங்க வெயில்படாம வளர்ந்ததால நான் இப்படி இருக்கேன் மத்தபடி நான் இந்தியாதான்
எங்கே சந்தேகப்பட்டு தன்னை துருத்திவிடுவானா என்ற பயம் அதுவுமில்லாமல் நேரில்பார்த்ததும் முறுக்குமீசை கருவாயனை ரொம்பவே பிடித்துப் போனது
மாமாமகன் எவ்வளவு அழகு எவ்வளவு கம்பீரம் உள்ளுக்குள் மெச்சிகொண்டாள்
அழகு இந்த சிட்டியில ரூம் கிடைக்குமா மனீஷா கேட்க
அழகர்சாமி யோசித்தான் அருகில் இருப்பவனை பார்த்து இவரு உங்க அண்ணனா
ஆமா என்னோட ப்ரோ அட்வகேட் விபீஷணன் அண்ணனைஅறிமுகப்படுத்த இருவரும் கைகுலுக்கிகொண்டனர் வீஷ்க்கு தாராளமாக தமிழ்வராமல் இருந்ததால் எதுவும் பேசவில்லை ஆங்கிலத்தில் பேசி தன்னை கண்டுபிடித்து தலையை எடுத்து விடுவார்களோ என்று பயம்
அதைவிட அழகர்சாமியின் கம்பீரமும் தெனாவெட்டும் அச்சத்தைதான் கொடுத்தது
மனிஷாவும் விபீஷ் அண்ணன் தங்கையாக இருந்தாலும் அவனிடம் இவளைவிட அழகுக்கு விருப்பமில்லை அவன் சாதிகொள்கை ஜாதிபழக்க வழக்கம் எல்லாம் இந்த நிமிடத்திலேயே மறந்துபோனது
நீங்க நம்ம வீட்டுக்கு வாங்க நம்ம வூர்ல நமக்கு நிறையவீடு இருக்கு அதுல ஒரு வீட்ல தங்கிக்கோங்க
அச்சோ என்ன இப்படிசொல்றீங்க நீங்கதான் அடிக்கடி உங்க பேமிலிபத்தி சொல்லுவீங்களே
உங்க ஆளுங்களைதவிர மத்தவங்களை ஏத்துக்கமாட்டாங்களே
நீங்க கூட்டிட்டு போய் உங்கப்பா ஏதாவதுபண்ணிட்டா என்னபண்றது உங்க வீட்டுக்குவர பயமா இருக்கு
மனீஷா பதற்றமாக கூற
தன் குடும்பத்தினரை நினைத்து பயப்படுகிறாளே என்று முதல்முறை குற்றவுணர்வு வந்தது
இல்ல இல்ல அதெல்லாம் இல்ல நான்கூட இருக்கேன்ல நான் பாத்துக்குறேன்
அழகர் தைரியம் கூற கொஞ்சம் பயத்தோடுதான் அவனோடு சென்றனர்
விபீஷணன் அழகர்சாமி அறியாதவாறு நம்ம யாருனு தெரிஞ்சுருச்சுபோல சத்தமில்லாம கூட்டிட்டு போய் தலையை எடுக்கபோறாங்களோ என்னமோ எனக்கு பயந்துபயந்து வருதுடி எனக்குமட்டுமே ஏதாவது ஆனா என்சாவுக்கு நீதான் காரணம்னு எழுதிவச்சுட்டுதான் சாவேன் தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்து என்னையும் சிக்க வச்ச கொல்லபோற கொலைகாரி
ஆங்கிலத்தில் திட்ட
அழகு படித்திருந்தாலும் கூட சாரமரியான ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்னசொல்றாரு அவரு இங்கிலீஷ்ல பேசிட்டு இருக்காரு காரை ஒட்டிக்கொண்டிருந்தவன் திரும்பி மனிஷவிடம் கேட்க
அது ஒன்னும் இல்லையே அண்ணன்கிட்ட உங்களபத்தி உங்க பேமிலிபத்தி சொன்னேன் அதான் அவருக்கு கொஞ்சம் பயம் இன்னும் இந்தபழக்க வழக்கம் எல்லாம் இருக்கான்னு கேட்கிறார் சிரிப்பாக சமாளிக்க அழகர்எதுவும் கூறவில்லை அமைதியாக காரை ஓட்டினான்
மியூசிக் பிளேயரை ஆன்செய்ய பாடல் ஓடியது
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
பாடல் ஓடியதும் அழகர் முன்பக்க கண்ணாடியில் மனிஷாவை பார்த்தான்
அவளும் கண்ணாடியில் அவனை பார்த்து தலைகுனிந்தாள்
உயிரில் பூப்பறித்த காதலியும்நீதான்
உள்ளம் தேடிவரும் தேவதையும் நீதான் அவளை பார்த்தவாறே காரோட்டியபடி அழகர் வாயசைத்து பாட
இரவில் மிதந்துவரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்..
எஸ்கியூஸ் மீ ப்ரோ வேற சாங்இருந்தா போட்டுவிடுங்களேன் இந்த சாங் ஹேட்டாகுது விபீஷ் தனக்கு தெரிந்த தமிழில் கூற
கரடி பாட்டு எவ்வளவு சூப்பரா ஓடிட்டு இருக்கு நடுவுலநந்திமாதிரி வந்து கூவிட்டு இருக்கான் நானேபாட்டு கேக்குறது அதிசயம் இன்னைக்குதான் ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா கேட்டுட்டு இருக்கேன் கரடிமாதிரி உள்ள வந்து கத்திட்டு இருக்கான் காட்டேரி உள்ளுக்குள் அவனை திட்டிக்கொண்டிருந்தான் அழகர்சாமி
வேறுபாட்டும் போட்டு விட அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை வெளிநாட்டில் ஆங்கில பாடல்கள் படங்கள் பார்த்து பழக்கமானதால் அவனுக்கு தமிழ்பாடல்கள் பிடிக்காமல்போனது
அழகரும் எவ்வளவுநேரம் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டிருப்பான் ஒரு கட்டத்தில் காரைநிறுத்தியவன் சீட்டுக்கு கீழே இருந்த அரிவாளை உருவியவன் அவன் அருகில் இருந்த விபீஷணன் கழுத்தில் வைக்க பயந்துபோனான்
என்னடா நானும் அப்போருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவரா
ஆட்டம் காட்டிட்டுபோற போடுற பாட்டை கேட்கமாட்டியா அதுபுடிக்கல இது பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்க பெரிய வெள்ளைக்காரதுரை போடுறபாட்டு எல்லாத்தையும் புடிக்கலன்னு சொல்லி கடுப்பேத்திட்டு இருக்க அதெல்லாம் எவ்வளவு அழகான பாட்டு தெரியுமா இந்தப்பாட்டு பிடிக்காட்டி
அவுத்துபோட்டு ஆடுறகில்மாபாட்டு புடிக்குமா கடுப்பாக கேட்க
பையன் பயந்து போனவன் கடைசியில் கில்மா என்றதும் அவனுக்கு புரியவில்லை அவன்தான் வெளிநாட்டுக்காரனல்லவா கில்மா என்றால் அதற்குஎன்ன மீனிங் என்று தெரியவில்லை
கழுத்தில் இருக்கும் அருவாளை நகர்த்திவிட்டு காரிலிருந்து இறங்கியவன் பின்சீட்டு கதவை திறந்து மனிஷாகையை பிடித்து வெளியே இழுத்து பேக்கைஎடுத்து தோளில் மாட்டிக்கொண்டான்
எங்களுக்கு இது எதுவும் பழக்கம் இல்லாததால் தான் உங்ககிட்ட பேசிட்டு வந்தேன் ஆனா நீங்க எங்களை கொல்லபாக்குறீங்க ஐ ஹேட் யூ
உங்ககூட வர முடியாது நாங்க எங்க பிளேசுக்கு போறோம் தமிழில் அவனுக்கு புரியும்படி கூறிவிட்டு மனிஷா கையைபிடித்து அழைத்துசெல்ல அவளோ சோகமாக அவனைபார்த்தவாறு சென்றாள்
தலையில்அடித்துகொண்டவன் காரில் ஒரு குத்துவிட்டு அவளை பார்த்தான்
கண்ணில் டஜன் கணக்கில் ஏக்கத்தைவைத்தபடி அவனை திரும்பிபாரத்தபடி நடந்தாள்
பின்னந்தலையை தேய்த்தவாறு தன்னை அடக்கிவைத்தவன் விபீஷிடம்போய் அவனுக்கு முன்னால் நிற்க அவனோ முகத்தை திருப்பிகொண்டான்
இடுப்பில் கைவைத்து இழுத்துமூச்சுவிட்டவன் என்னைமன்னிச்சிருங்க தெரியாம பண்ணிட்டேன் அதுவந்து எனக்கு ரொம்பகோபம் வரும் எரிச்சல்வர்றமாதினி என்னநடந்தாலும் சட்டுனு இப்படி பண்ணிடுவேன் சோ சாரி வாங்க போகலாம்
ஐ அம் சாரி இப்போகோபம்வந்த மாதிரி உங்க வீட்டுக்குபோன பிறகு கோவம் வந்து அங்க என்னைபோட்டு அடிச்சுட்டா என்னபண்றது
ஏற்கனவே உங்க ஃபேமிலி கொலவெறி புடிச்ச பேமிலி உங்களநம்பி வரமுடியாது
மறுபடியும் தங்கை கையைபிடித்து
இழுத்துக்கொண்டு நடக்க
வேகமாக அவனுக்கு முன்னால்போய் நின்றவன் பின்னால் நடந்தவாறே
சாரி கேட்டுட்டேனே
வீட்டுக்குபோன பிறகு கண்டிப்பா யாரும்கோபப்படமாட்டாங்க உங்களை நல்லபடியா பார்த்துப்பாங்க அதுக்கு நான் வாரண்டி கொடுக்கிறேன் எங்களால உங்களுக்கு உங்கசிஸ்டருக்கும் எந்தபிரச்சனையும் வராது ப்ளீஸ் என்ன நம்புங்க வாங்க அழகர்சாமி கெஞ்சலாக சுயத்தை இழந்து அழைத்தான்
அழகருக்கு கெஞ்ச தெரியாது ஒரே வெட்டில் தலையை துண்டித்துவிட்டு போறவன் இப்போது அவனையும் மீறி கெஞ்சி கொண்டிருக்கிறான் எல்லாம் மனிஷாவால்தான்
மனிஷாவும் அண்ணனிடம் பார்வையால் கெஞ்ச
ஓகே நீங்க எவ்வளவு சொல்றீங்க அதான்ல வர்றேன் உங்க வீட்டுக்கு போனபிறகு இப்படி ஆங்கிரியாவோ வெப்பன்ஸ்வச்சுட்டு மிரட்டிட்டு இருந்தீங்க என்னோட சிஸ்டரை அழைச்சுட்டு போயிட்டே இருப்பேன் கோபமாக கூற
யாருக்கும் அடி பணியாதவன் இப்போது முதல் முறையாக ஒரு பெண்ணுக்காக அடிபணிந்து தலையாட்டினான்
சும்மாவா பெரியவர்கள் பழமொழி கூறினார்கள் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று
யாருக்கும் அடங்கி பணிந்துபோகாத காளையை இப்போது தன அண்ணன்முன்னாள் பணிய வைத்துவிட்டாள்
எப்படியோ ஒரு வழியாக சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துவந்தான் வரும்போதே மச்சான்மேல் அழகருக்கு அவ்வளவு கோபம் தன்னை கெஞ்சவைத்துவிட்டானே என்று
ஆனாலும் எதுவும் சொல்லமுடியவில்லை காரணம் மனீஷாதான்
கோபமாக இருப்பான் போல அவன்கோபம் காரோட்டுவதில் தெரிந்தது
அவளோ கண்ணாடியிலே கண்ஜாடைகாட்டி மன்னிப்பு வேண்ட
உக்கிரமாக இருந்தவன் அவள் யாசிப்பில் உருகிபோனான்
இதோ வீடுவந்துவிட்டது அந்த ஊரிலேயே இவர்கள் வீடுதான் முற்றம் வைத்த பெரியவீடு
வீட்டுக்கு முன்னால் நீளமாக பெரியதிண்ணை வேறு
வீட்டுக்கு பின்னால் கண்ணுக்கெட்டும்வரை தோட்டங்களும் வயல்கள்வெளிகளிகளும் பார்க்க அழகாக இருந்தது
காரிலிருந்து இறங்கிய விபீஷ் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டான்
ப்யூட்டிபுல் வில்லேஜ்
நாலாபக்கமும் சுற்றிபார்த்தபடி கூற
மனீஷா பேக்கை தூக்கி தோளில் மாட்டிகொண்டு அவளும் சுற்றிபார்த்தாள்
அழகர் அவளுக்கு தோள்வலிக்குமோ என்று அந்த பேக்கை அவன் வாங்க ஒருபக்கம் அழகரும் ஒருபக்கம் மனிஷாவும் பேக்கை பிடித்தபடி கண்ணும் கண்ணும் நோக்கிகொண்டிருந்தனர்
அழகரோட அப்பா வீராசாமி இதைபாத்தா என்ன செய்வாரு?????