தோகை 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 6

 

இப்படி சாரி கேட்க வந்து, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டோமே என்று சற்று மனம் சங்கடப்பட்டவன், 'எப்படி நம் கால் வழுக்கியது?' என்று ஆராய்ந்தான். கலெக்டர் அல்லவா? எல்லா புறமும் அவன் கண்கள் சுழன்று என்ன காரணம் என்று அலசியதில் ஆராய்ந்ததில்... அவன் மேட்டில் கால் வைத்தவுடன் தான் வழுக்கியது ஞாபகம் வர... சற்று அவனுடன் பயணித்து நின்றுவிட்ட அந்த மேட்டை அவன் திரும்பிப் பார்த்தான். அதற்கு கீழ் சில மணிகள் உருண்டோடியது.

 

காலால் அந்த மேட்டை திருப்பி போட அதிலுள்ளும் சிறு சிறு மணிகள் கிடைக்க... அவ்வளவுதான் ஏற்கனவே ருத்ரமாக ஆடுபவன், இப்பொழுது நரசிம்மனாக தன் எதிரே இருக்கும் பெண்ணை பார்த்து முறைத்தான்!!

 

"இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்ணி இருக்க? அப்படி என்ன என்கிட்ட நீ எதிர்ப்பார்த்த? இதில் நான் வழுக்கி உன் மேல விழுந்து… ச்சீ... நீ எல்லாம் ஒரு டாக்டரா?" என்று அவனுக்கு ஏற்கனவே ஏற்பட்ட சில பல அனுபவங்களின் வாயிலாக அவள் செய்ததை முற்றிலும் தவறானதாகவே முடிவு செய்தவன், அவளை வார்த்தைகளால் வாள் வீச்சினான்.

 

அவன் கணித்ததில் ஆச்சரியமானவள் பிற்பகுதி தன்னை தப்பாக முடிவெடுத்து பேசுகிறானே என்று அவள் பேச வர.. சட்டென்று கையை உயர்த்தி அவளை தடுத்தான்.

 

அவன் பார்வை அவள் கண்களில் இருந்து மெல்ல மெல்ல அவளது கழுத்துக்கு கீழே இறங்கியது. அவன் பேச்சில் உண்டான பய உணர்ச்சியில் விம்மி கொண்டிருந்த அவளது மென்மைகளின் மேல் நங்கூரமிட்டு நிலைத்தது.

 

அவள் விடும் மூச்சுக் காற்றில் குபீர்.. குபீர் என எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன அவளது செழித்த இளமைக் கலசங்கள்!!

 

மகதிக்குள் படபடவென ஒரு தடுமாற்ற உணர்ச்சி அலை வீசத் தொடங்கியது. அவள் உடம்பெல்லாம் சூடாக ரத்தம் பாய.. முகமெல்லாம் சிவந்து ஜிவு ஜிவுக்க.. அவளது இதயம் தட்.. தட்… என்று வேகமாக துடித்தது.

 

'' ம்ம்.. அவ்வளோ க்ரெஷா இல்லை வளைத்து போடும் எண்ணமா?" அவளின் உணர்ச்சிப் போராட்டம் புரியாமல், வார்த்தைகளை விட்டவன், தடித்த சற்றே கருமை உதடுகள் விரிய மெல்லிய இகழ்ச்சி புன்னகையுடன் அவளை நெருங்கினான் ருத்ரன்!!

 

"இதைத்தானே எதிர்பார்த்து இப்படி ப்ளான் செய்தே… இந்தா வாங்கிக் கொள்!!" என்றவன் மீண்டும் அவளது இதழ்களுக்கு புதைத்தான் அவனது இதழ்களை.. இம்முறை சற்று அழுத்தமாக!!

 

அவ்வளவு தான்!! நல்ல நாளிலேயே அவனுக்கு நிதானம் என்பது கிடையாது!! இப்பொழுது வேண்டும் என்று அவள் செய்தால் என்று கண்டவுடன், தன் நிலை மறந்து, பதவி மறந்து, தான் தகப்பன் என்பதை மறந்து.. பறந்து போக...

 

அவன் சட்டென பாய்ந்து அவளைக் கட்டிப் பிடித்தவன், தன் கைகளால் அவளது இடையை வளைத்து இறுக்கிக் கொண்டான். அவன் என்ன செய்யப் விழைகிறான் என்பதை உணர்ந்து அவள் அவன் அணைப்பைத் தவிர்க்க முயற்சி எடுக்கும் முன்... அவன் அவளது சற்றே தடித்த கீழுதட்டைக் கவ்வியிருந்தான். சர்ரென இழுத்து அவளை சுதாரிக்க விடாமல் உறிஞ்சத் தொடங்கினான்.

 

மகதி அவனிடம் இருந்து இப்படி ஒரு ஆவேசமான தாக்குதலை சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. 

திணறி தான் போனாள் பாவையவள்!!

திமிறி தன்னை விடுவித்துக் கொள்ள தான் போராடினாள்!! 

 

ஆனால் அவள் முகத்தை ஒரு இஞ்ச் கூட அசைய விடவில்லை. அவளை சிறைப்பிடித்தான் அரக்கனாய்!!

 

இங்கே சிறைப்பட்டது என்னவோ அவளது இதழ்களே!!

 

அவன் கவ்விய அவளது உதடுகளை விடாமல் தின்று‌ தீர்த்தான் அவன்!! அவள் கைகள் இப்போது பலமுடன் அவனை விலக்கப் பார்க்க.. ம்ஹீம் முடிந்தால் தானே?? அவனோ சட்டென அவளை பின்னால் தள்ளி கபோர்ட்டில் சாய்த்து அழுத்திக் கொண்டான்!!

 

மெய்யோடு மெய் சேர்த்து!!

 

அவளது செழித்த இளம் செழுமைகளை தன் நெஞ்சில் நசுங்க அழுத்திக் கொண்டு..

''இதுக்கு தானே.. இதுக்கு தானே.. இந்த வேலை செய்தாய்? கொஞ்சம் பார்க்கிற மாதிரி ஆளும் அதிகாரமும் இருந்தால் அவனை மயக்க என்ன வேணும்னாலும் செய்து விடுவீர்களா? இனி உன் வாழ்வில் இது போல் எவனிடமும் நீ நடக்கக்கூடாது!!" என்றவன் மீண்டும் அவளது இதழ்களில் தன் இதழ்களை புதைத்தான்!!

 

"இந்தா… இதையும் வாங்கிக்கோ…!!" என்று அவளது கீழ் இதழை பற்களிடையே நசுக்கி கொண்டே கூறியவன், சட்டென்று விடுத்து அவளது முகம் எங்கும் பாய்ந்து பாய்ந்து முத்தம் கொடுத்தான்.

 

''சார்... என்ன பண்றிங்க..? ச்சீ..விடுங்க.. விடுங்க என்னை!!" அவன் சிறிது பலம் குறைத்த வேளையில் சட்டென அவன் நெஞ்சில் கைகளை வைத்து பின்னால் தள்ளி விட்டாள் மகதி!!

 

ஒரே எட்டில் அவளது கைகளைப் பற்றி பிடித்துக் கொண்டவன்,

 

''என்ன திடீரென நல்லவ வேசம் கட்டுறியா?" என்று அவன்‌ சீற…

 

''அய்யோ.. சார்... விடுங்க எதையாவது உளறாதீங்க? நீங்க போய்... திடீர்னு.. இப்படி… என்னை… யாராவது வரப் போறாங்க தள்ளிங்க…" என்று அவன் பிடியிலிருந்து கைகளை விடுவிக்க போராடி திக்கத்திணறி மெலிதாக வந்தது மகதியின் வார்த்தைகள்.

 

''அது எப்படி வருவாங்க டாக்டரே? அதான் நான் வந்து போகும் வரை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தியே? எல்லாம் உன் பிளான் படி தானே நடக்குது. என்ன நான், உன்‌ நல்லவ வேஷத்தை நம்பாமல், நான் உன்னை கண்டுபிடித்து விட்டேன்!!" என்று கோணலாக சிரித்தான் கலெக்டர்!!

 

அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மீண்டும் அவளை நெருங்கினான். தன் முகத்தை அவள் கழுத்தருகே கொண்டு போய் அவளது வாசணையை ஆழமாக முகர்ந்தவன். "சும்மா சொல்ல கூடாது சும்மா கிர்ரென ஏறுது.. நீ நச்சு ஃபிகர் தான்!!" என்றான் எள்ளலாக!!

 

''அச்சோ விடுங்க.. நீங்க ஒரு மாவட்ட கலெக்டர்.. நீங்க இப்படி... இல்ல வேணாம்..! நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்..! என்னை விடுங்க.. ப்ளீஸ்..!!'' என்று பெண்ணவள் கெஞ்ச...

 

''வெரி சாரி!! உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சு.. இனி தப்பிக்க கெஞ்சலா… அதுவே கொஞ்சம் கொஞ்சலாக சொல்லு பார்ப்போம்!!" என்று சொல்லிக் கொண்டே தன் கைகளை மீண்டும் அவள் இடுப்பில் படர விட்டான்.

 

அவன் முகம் அவளது கழுத்துக்கு கீழே இறங்கியது. அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த அவளது பிறை நிலவை நோக்கி சரிந்தது. அவனைத் தள்ளி விட முயன்று தோற்று, அவன் கைகளை இறுக்க கிள்ளினாள்

 

''போதுமே.. இதுக்கு மேல என்னை எதுவும் பண்ணாதிங்க.. ப்ளீஸ்!!" என்று அவள் குரல் கெஞ்சியது.. சீறியது.. கோபப்பட்டது!! எதுவும் பலன் இல்லை!!

 

அவன் இரண்டடி பின்னால் சென்றவன், தன் கைகளை உயர்த்த அதில் சிறைப்பட்டிருந்த அவளது கைகளும் சேர்த்து உயர்த்தப்பட தன் கண் முன்னால் அவள் நின்ற கோலத்தை கண்டவன்‌ "இப்போ சிறை செய்யவா உன்னை?" என்றான் சரசமான குரலில்!!

 

அவனது குரலில் கூனிக் குறுகிக் போனவள், "ஆஆ.. வேணாம் !!'' என அலறினாள். அவனது பலமான அழுத்தத்தில் அவள் கை வலிக்க.. துடித்து விட்டாள்.

 

''ச்சீ விடுங்க… ஆமா நான் தான் செய்தேன். ஆனா உங்களை செட்டியூஸ் பண்ண கிடையாது! நேத்து நீங்க சொன்ன 'நெவர் எவர் டேர் டு டச் மீ' என்ற வார்த்தை என்னை இரவு முழுவதும் தூங்க விடவில்லை. எப்படி என்னை பார்த்து அதை சொல்லலாம்? என்று இன்றைக்கு உங்களுக்கு பாடம் புகட்ட தான் அந்த மாதிரி செய்தேன். ஆனால் நீங்க எப்படி … என்னை..‌ கிஸ்.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டவள் எரிச்சலுடன்!! 

 

"அப்படியா?" என்று நம்பாமல் ஒட்டி நின்றவனை.. "ஆமா..!!" என்றவள் அவனை பலமாகப் பின்னால் தள்ளி விட்டாள்.

 

அவனோ "இதெல்லாம் நம்பும்படியா இருக்கு? என்று அவளை மேலும் கீழேம் பார்க்க..

 

அவனின் அந்த அலட்சியத்தில் பொசு பொசுவென வேகமாக மூச்சு வாங்கியபடி அவள் கடுமையாக முறைத்தாள். அவள் கோபப் பார்வை அவனை குற்றவாளியாக்கியது.

 

''ச்சீய்.. போயிருங்க.. சரியான காட்டான்.. காட்டுமிராண்டி!! ப்ராப்பிஸம் நீங்க பண்ணுனத்துக்கு பேரு! என் கண்ணு முன்னாலயே நிக்காதீங்க.. இனி இந்த பக்கம் வராதீங்க!!" என மிகவும் இகழ்ச்சியாக அவள் சொல்ல.. சட்டென அவன் சுய மரியாதை தலை தூக்கியது.

 

"ஏய் என்னடி சொன்ன? காட்டுமிராண்டியா?" என்று மீண்டும் நெருங்க முயன்றவனை தடுத்தவள், விட்டாள் ஒரு அறை அவனது தாடியற்ற வழுவழு கன்னத்தில்!! 

 

சற்றும் இவன் அவளின் அடியை எதிர்பார்க்கவில்லை!!

 

"ஏய்… யார அடிச்ச?" தனது முரட்டு கரத்தால் அவளது மெல்லிய கழுத்தை அவன் நெறிக்க... "சும்மா கொதிக்காதீங்க!! நானா உங்கள பாக்கணும்னு சொன்னேன்? நானா உங்க கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன்? அப்படி சொல்லியிருந்தா.. நீங்க சொன்ன மாதிரி நான் பிளான் பண்ணுனேனு ஒரு அர்த்தம் இருக்கு!! நீங்களா தான் என்னை பார்க்க வரேன்னு சொன்னீங்க.. அதுவும் ஓபி எல்லாம் முடிஞ்சு.. அதனால் யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் நான் சொன்னேன். இதுக்கு உங்க இஷ்டத்துக்கு நீங்க கற்பனையை தட்டி விட்டு இருக்கீங்களா? கதாசிரியராக போங்க நல்ல சம்பாதிக்கலாம்!!" என்று ஏளனமாக உரைத்தாள் மகதி.

 

"பார்க்கணும்னு சொன்னது நான்தான்!! ஆனா.. அதுல பிளான் பண்ணது நீ!!" என்று அவன் மேலும் அவளை நெருக்க...

 

"நீங்க பண்ணுனத்துக்கு பேரு என்ன தெரியுமா? இதுவும் ஹாரஸ்மெண்ட் தான்!! இருங்க இப்பவே 108 க்கு கால் பண்றேன்!!" என்றாள் ஆத்திரத்தோடு!!

 

அந்நேரத்திலும் அவனுக்கு மெல்லிய சிரிப்பு. லூசு 1091 க்கு 108னு சொல்லுறா என்று!! கலெக்டருக்கு தான் அத்தனை அவசர நம்பரும் அத்துப்படி ஆயிற்றே!!

 

அருகில் இருந்த ஃபோனை அவள் எடுக்க முயல.. பாய்ந்து சென்று அவளுக்கு முன்னால் அதை கைப்பற்றி இருந்தான். இந்த அரைவேக்காடு எதையாவது உளறி வைத்து விடுவாளா என்று பயந்து!!

 

"நான் உங்க மேல கம்ப்ளைன்ட் செய்யப் போகிறேன்! குடுங்க என் ஃபோனை!!" என்று அவள் அதிகாரமாக கேட்க...

 

"நான் இந்த டிஸ்டிக் கலெக்டர்!!" என்று பற்களை கடித்தான் ருத்ரன்.

 

"இருக்கலாம்!! ஆனா.. அதுக்காக என்கிட்ட முறை தவறி நடக்க உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா? டிஸ்ட்ரிக் கலெக்டர்னா இஷ்டத்துக்கு நடக்கலாமா என்ன? இருங்க இருங்க… உங்கள் உள்ள தள்ளி களி தின்ன வைக்கிறேன்!! 

கொடுங்க என் ஃபோனை…" என்று அவள் ஃபோனை பிடுங்க வர.. இவனும் அது அவள் கைக்கு எட்டாத வண்ணம் ஒரு கையால் பிடித்து மேலே தூக்கிக் கொண்டான்.

 

எக்கி எக்கி பிடுங்க முயன்றவளின் மெல்லிய தேகம் அவனின்‌ தேக்கு மர உடலோடு உரச...‌ சிக்கி முக்கி கற்கள் இன்றி பற்றிக் கொண்டது புத்தம் புது உணர்வு ஒன்று அவனுள்!! இவளோ இன்னும் ஃபோனிலே கவனமாய்!!

 

இந்த சில்வண்டு உரசி உரசி உசுப்பேத்துறா… ருத்ரா சிக்கிடாத!! என்று தனக்குத்தானே உரைத்துக் கொண்டவன் அசந்த சமயத்தில் ஃபோனை பறித்தாள்.

 

கண்மண் தெரியாது கோபம் அவளுக்கு. "போலீஸ்கிட்ட கம்பிளைன்ட் கொடுத்து உங்களை உள்ளே வைக்க முடியவில்லை என்றால் உங்க பொண்டாட்டி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன் நீங்க இங்க செய்ததை!! அவங்க ரொம்ப பெருமைப்பட்டுபாங்க புருஷன் செய்ததை நினைத்து!!"என்றதும் ருத்ரன் முகம் இறுகியது!!

 

"இந்த ஹாஸ்பிடல்.. இப்ப நீங்க நிக்குற இந்த ரூம் இதெல்லாம் என்னோடது!! என்னை பேசிய நீங்க இன்னும் ஒரு நிமிஷம் இல்லையில்லை ஒரு நொடி கூட இங்க இருக்க கூடாது!!" என்று அதிகாரமாய் அவள் கட்டளையிட..

 

அடுத்த நொடி செருப்பால் அறை வாங்கியவன் போல முகம் சிறுத்து சட்டென பின் வாங்கி வெளியேற போனவன், "நீ கோபப்படுறதனால செய்தது இல்லை என்று ஆகாது!! அதே மாதிரி உனக்கு ஒரு பாடம் புகட்ட தான் செய்தேனு தவிர நானும் விமனைஷர் கிடையாது" என்று அவன் வேகமாக வெளியேறி விட்டான்.

 

ருத்ரன் சென்றவுடன் வீட்டுக்கு இவளும் சென்று விட்டாள். "என்னென்ன பேசிட்டான் காட்டான்…" என்று லிட்டர் லிட்டராய் தண்ணீர் குடித்து தன் கோபத்தை தவிப்பை அடக்க.. அது அடங்கவில்லை.. அவளை மாதிரியே!! 

 

ருத்ரன் நினைப்பது போல தான் அப்படிப்பட்ட பெண் இல்லை.. சாதாரண தொடுதலில் என்ன பெரிதாக ஆக போகிறது என்று அவனுக்கு புரிய வைக்க என்று அவள் செய்த திட்டம் அவளுக்கே ஆப்பாய் முடிந்தது!!

 

என்னவோ செய்ய போய்.. அது எதிலோ சென்று முடிவடைந்து விட்டதே என அவளின் மனசாட்சி இப்போது அவளைப் போட்டு வாட்டி வதைத்தது. இவன் இவ்வளவு அசிங்கப்படுத்தி விட்டானே என்று வேதனையாக இருந்தது. கொஞ்ச நேரம் நிலை இல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டே இருந்தாள்!!

 

'நான் அவன் பொண்டாட்டி கிட்ட சொல்வேனு பயமுறுத்துனது மாதிரி.. அவன் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவானோ? அய்யோ..!! மகாதேவன் மகா கதாகாலசேபம் ஆரம்பித்து விடுவாரே?' என்றெல்லாம் நினைத்து பயந்து கொண்டிருந்தாள். "அவன் எல்லாம் சொல்ல வேண்டாம்.. சின்னதாக அவன் கோடு போட்டாலே போதும்... மகாதேவன் ரோடே போட்டு அதில் அட்வைஸை லாரி லாரியாய் ஏற்றி, சீக்கிரம் ஏதாவது ஒரு டாக்டரை பார்த்து கல்யாணத்தை முடித்து வைத்துவிடுவாரே… ஐயோ.. இப்படி சொதப்பலா போய்விட்டதே!!" என்று மீண்டும் தவியாய் தவித்தாள்.

 

எல்லாம் உன்னால்தான் என்று மீண்டும் அந்த தலையணை பொம்மைக்கு உயிர் கொடுத்தவள், இன்று சர்ஜிகல் கத்தியின் எண்ணிக்கை இரண்டாகியது ருத்ரனாக பாவித்த பொம்மையின் கழுத்தில்!!

 

பேசிவிட்டு சென்றவன் மட்டும் மனம் நிம்மதியோடு இருந்து விடவில்லை. அன்று இரவே ராமஜெயம் மன்னிப்பு கேட்டாயா என்று கேட்டதும்... இவன் அமைதியா இருக்க.. அதிலே புரிந்தது அவருக்கு!!

 

"அப்போ… மன்னிப்பு கேட்கல? அப்படித்தானே!!" என்றதும், "ம்ம்..!!" என்று மெதுவாக அவனது சத்தம் வர, 'பயப்புள்ள பம்முதே! இன்னும் ஏதோ இருக்கு போல!' என்று எண்ணியவர், "என்னடா... பண்ணி தொலச்ச!!" என்று கேட்டார்.

 

எப்படி சொல்வான் அவன் செய்த செயலை? அப்பொழுது கோபத்தில் அறிவிலீயாய் செய்து விட்டாலும்.. அதன் பின் யோசிக்க… 'ச்சீ.. அவளுக்கு போய் முத்தம் கொடுத்தோமே!' என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டிருந்த நேரம் தான் அதிகம்!!

 

அந்த வாரம் முழுவதும் அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான். அவன் அடைந்த மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல.. 

"நந்தினியை தவிர வேற பெண்ணுடன் எப்படி நான்?" என்று நினைக்கவே அவனுக்கு தன் மேலேயே ஆத்திரம் வந்தது!!

 

அதுவும் இன்றி ஆத்திரத்தில் சிவந்த அவளது கண்களும்.. விடைத்த மூக்கும் அவள் பொய் சொல்லவில்லை என்று நிதர்சனத்தை உரைக்க.. மனம் ஒத்துக் கொண்டாலும், அறிவு முறுக்கிக் கொண்டது!! கூடவே அவள் அடித்த அந்த அடி!! 

 

"எப்பா… ஆளு பொசுக்குனு தானா இருக்கா..‌ ஆனா வசம்பி!! என்னா அடி!!" என்று தனது இடது கன்னத்தை வருடிக் கொண்டான் சன்ன சிரிப்போடு!!

 

இரவில் தூக்கத்தின் இடையில் அவளின் இதழ் ஸ்பரிசம் சட்டென்று ஞாபகம் வர.. அந்த மென்மையும் அதன் சுவையும்… திடுமென விழித்துக் கொண்டவன், எழுந்து தண்ணீர் குடித்து விட்டு படுத்தும் தூக்கம் வராமல் நீண்ட நேரம் படுக்கையில் புரண்டான். ஆனாலும் தூக்கம் தூரமே!! அவனின் வேலைக்கு மன அமைதி மிக முக்கியம்!! ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் அது எங்கே அவனுக்கு பாக்கியம்?

 

இரவு பத்து மணி வரை வெளியே சுற்றி விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான் சிறிது நாட்களாக... மன உளைச்சலோடு... உணர்வுகளின் பிரவாகம் தாங்க முடியாமல்!! வெகு நாளுக்கு பிறகு இரவின் தனிமையில் தன்னை ஆல்கஹாலுக்கு ஒப்பு கொடுத்தான்!!

 

தண்ணீர் அடித்ததால் இரவு ஆதினியை சொர்ணமா அறையிலேயே படுக்க வைத்து விட்டு தூர இருந்தே பார்த்து விட்டு வந்து விட்டான்.

 

இப்படியாக மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில்.. ஏனோ சென்னை வந்தது முதல் உள்ள தாக்கமும்.. நந்தினியின் நினைவும்.. சில்வண்டின் சில்மிஷ சண்டையின் தாக்கமாய் ஆல்கஹாலை அதிகம் தேடியது அவனது மனம்!! வார நாட்களில் கூட வேலை பளுவை போட்டுக் கொண்டவனுக்கு.. வார இறுதியில் கண்டிப்பாக இவற்றை மறக்க ஆல்கஹால் தேவைப்பட படையெடுத்தான் பப்புக்கு!! ஒவ்வொரு வார இறுதியில்.. ஒவ்வொரு பப்பில்!!

 

எப்பொழுதும் ஆபீசியலாக கூலரோடு அரசாங்க வாகனத்தில் வலம் வந்தவன் இரவில் வீ நெக் டீசர்ட்.. த்ரீ போர்த் பேண்ட் என்று அறியா வண்ணம் வலம் வந்தான். இந்த புது அவதாரத்தில் இளமை பொங்க கவர்ச்சியோடு வளைய வருபவனை பப்பில் இளம் பெண்கள் ஆடுவதற்கு அழைக்க.. 

 

அவர்களைக் கூர்ந்து பார்ப்பவன் "நாட் இன்ட்ரஸ்ட்!!" என்று அவர்கள் கையை உதறி விட்டு தனி இடத்தில் அமர்ந்து கொள்வான் யார் கண்ணிலும் படாதவாறு!!

 

அன்று சனிக்கிழமை.. ஒரு பிரபலமான பப்பில் யாரும் அறியாதவாறு இருளில் அமர்ந்து மகதி என்ற பெண்ணால் மெல்ல மெல்ல உள்ளிருந்து ஆடும் மிருகத்தை தணிக்க.. தடுக்க.. தண்ணீரை தாரை வார்த்துக் கொண்டிருந்தான் குப்பி குப்பியாக...

 

எதிர் இருக்ககையில் யாரோ வந்து அமர.. இவனோ தன் கையிலிருந்த குப்பியில் கவனமாக இருந்தான்!!

 

சற்று நேரத்தில்...

''இந்த ஆம்பளைங்க மாதிரி ஒரு சுயநலக் கூட்டத்தை நான் பாத்ததே இல்லை டி… பொம்பளைங்கன்னா.. அவனுங்களுக்கு எல்லாம் வெறும் சதை மட்டும்தான் இல்ல..? ப்பா..! நினைச்சாலே படு கேவலமா இருக்கு டி!! இவனுங்க மாதிரி ஆட்களை எல்லாம் நடு ரோட்டுல வைச்சு சுடனும் டி!!" என்று கீச்சு குரலில்

பேசிக் கொண்டே சென்றவளின் ஃபோன் சட்டென்று பறிக்கப்பட… அதிர்ந்து திரும்பியவள், அருகே இருந்தவனை பார்த்து பயத்தில் வாயை பிளந்தாள்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top