தோகை 5

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

அத்தியாயம் 5

 

தோல்வியடைந்து வீழ்வதும், துரோகத்தால் உடைந்து போவதும், 

கூனி குறுகுவதும் 

எவ்வளவுக்கெவ்வளவு உண்மையோ 

அவ்வளவுக்கவ்வளவு உண்மை 

அதன் பின்… வீறுக் கொண்டு உயர்வதும், வலிகளை கடந்து வருவதும்.... ஆனால் ரணங்கள்? அவை வடுக்களாய் மாறி உள்ளுக்குள்ளே இருக்கும்!! 

அவற்றை கொடுத்தவர்களை மறக்காது!! மறக்க விடாது!!

 

ருத்ரனுக்குள்ளும் அப்படித்தான் இருந்தது. அதுவும் மூன்று வருடங்களாக அவை அனைத்தையும் அவன் மறந்துவிடவில்லை!! மறைத்து வைத்திருந்தான் இதயத்தின் ஓரத்தில்... சென்னை வந்தவுடன் மறைத்து வைத்தவை எல்லாம் மீண்டும் தலை தூக்கி ஆட்டம் போட... இப்போதெல்லாம் இரவு தூக்கம் தூர போனது அவனுக்கு!!

 

அதற்காக எல்லாம் அவன் சோர்ந்தோ.. வீழ்ந்தோ போய்விடவில்லை!! இதோ

உடைந்து சில்லு சில்லாய் ஆனாலும் அதெல்லாம் ஒன்றாகி நிமிர்ந்து எழுந்து வந்து விட்டான் அல்லவா? அதுவும் அனைவரும் மதிக்கும் மாவட்ட கலெக்டராக!!

 

அந்த ரணங்களோடு ரணங்களாக நந்தினியின் நினைவுகளும்!!

 

நந்தினி… துடிப்பான துள்ளலான பெண்!! அதுவும் அன்னையாகி அவனை மடித்தாங்கிய நேரங்கள் ஏராளம் ஏராளம்!! 

 

அவன் முகத்தைப் பார்த்தே அவன் மனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் அழகிய நங்கை!!

 

எப்பொழுது சலசலக்கும் ஓடை போல பேசிக் கொண்டே இருப்பாள். அவளுக்கு ஈடாக அவள் கண்களும் அபிநயங்களை பிடித்துக் கொண்டே இருக்கும்!! 

 

இன்று எல்லாம் கானல் நீராய்!!

 

"ஏன் டி விட்டுட்டு போன? என்னைப் போலவே என் மகளையும் தாய் இல்லாத பிள்ளையா ஆகிட்டியேடி!! தாய் இல்லாமல் நான் பட்டப்பாடு கஷ்டம் அனைத்தும் தெரிந்தவள் தானே நீ? அப்புறம் எப்படி உன்னால் முடிந்தது எங்கள் இருவரையும் அனாதையாக்கி விட்டுச் செல்ல?" என்று தங்கள் அறையில் இருந்த அவளின் சிரிக்கும் புகைப்படத்தை பார்த்து ஆத்திரத்தோடு அவன் கத்த… தூக்கத்திலிருந்தோ ஆதினியோ அந்த சத்தத்தில் சிணுங்க ஆரம்பித்தாள்.

 

சட்டென்று தனது கோபத்தை குறைத்து மகளிடம் விரைந்தவன், அவள் அருகே அணைவாக அமர்ந்து தட்டிக் கொடுக்க மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆதினி!!

 

மகளை அணைத்தவாறே இப்பொழுது நந்தினியின் புகைப்படத்தை பார்க்க… அவனைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரிப்பது போலவே இருந்தது அவளது புகைப்படம்!!

 

'சற்றுமுன் என்னிடம் கத்திய கத்தல் என்ன? இப்பொழுது பெண்ணிடம் அமைதியாக இருப்பது என்ன?' என்ற கேள்வியும் அந்த கண்களில் கண்டவன் சிரித்துக்கொண்டு "சரிதான்.. போடி!! அவ என் பொண்ணு!! என் பட்டு!! என் ஏஞ்சல்!!" என்று தூங்கும் பூஞ்சிட்டை அழகாக கொஞ்சியவாறே தன் மார்பின் மீது போட்டுக்கொண்டு, தூரம் போன தூக்கத்தை துரத்திச் சென்றான் ருத்ரன்!!

 

இவன் மட்டும் தூங்காமல் உறங்கும் சென்னை மாநகரத்தை வெறித்துக் கொண்டிருக்கவில்லை. இவன் இருக்கும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்த பங்களாவின் முதல் மாடியில்.. சொகுசு அறையில் இருந்த.. மகாதேவனின் லிட்டில் பிரின்சஸ் மகதி ஸ்ரீயும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டுதான் இருந்தாள். அதுவும் சும்மா இல்லை கோபமாக அங்கும் இங்கும் நடந்தப்படி!! 

 

கண்ணாடி முன் நிற்பதும்.. தன் கன்னத் தடயத்தை பார்ப்பதும்.. பின் ட்ரெஸ்ஸிங் டேபிள் இருந்த மேக்கப் ஐட்டத்தில் சிறிது எடுத்து கன்னத்தில் போட்டுக் கொண்டு முன்னைக்கு இப்போது பரவாயில்லையா என்றா ஆராய்வதும்.. பின் தீவிரமாய் சிந்தித்தப்படி நடப்பதும்.. அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் கண்ணாடி முன் நிற்பதும்.. இப்பொழுது அத்தடயம் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்ப்பதுமாகவே இருந்தாள்!!

 

முதலில் லேசாக தான் இருந்தது அவனது கைத் தடயம் அவளது அழகு கன்னத்தில்!!

அன்று வைத்தியத்திற்கு வந்திருந்த குழந்தைகளை எல்லாம் பார்த்து அனுப்பி விட்டு, அந்த தளத்தில் அவளுக்கு என்று இருக்கும் அறையில் சென்று அமர்ந்து விட்டாள். பெரும்பாலும் வெளி நோயாளிகளை அவள் அந்த பெரிய ஹாலில் பார்த்தாலும் சில குழந்தைகளுக்கு தனியாக சிகிச்சை தேவைப்படும் என்பதால் இந்த தனி அறை!!

 

அதுபோல மாலையும் எனக்கு வேலை இருக்கிறது என்று வெளி நோயாளிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டாள்!!

 

பெற்றோர் இருவரும் இரவில் தான் வந்தது. மகள் வந்துவிட்டாளா? சாப்பிட்டாளா? என்று வழக்கம் போல் வேலைக்கார அம்மாவிடம் விசாரித்துவிட்டு தங்கள் அறைக்கு சென்று விட.. இவளோ சாப்பிட்டதாக பெயர் பண்ணி கொண்டு கோபத்தோடு கொதித்து இருந்தாள்.

 

"எப்படி அவன் அடிக்கலாம் என்னை? நான் என்ன அவன் பொண்டாட்டியா? சேச்சே.. இப்ப எல்லாம் பொண்டாட்டிய கூட எவனும் அடிக்கிறது இல்லை. இவன் மோசம்!! நிஜமாகவே இவன் மனைவி பாவம்தான்!!" என்று வருங்காலத்தில் அவனுக்கே மனைவியாக போகிற தன்னை நினைத்தே பாவப்பட்டு கொண்டாள் அந்த அர்த்த ராத்திரியில்...

 

அதிலும் அவன் சொன்ன "நெவர் எவர் ட்ரை டு டச் மீ!!" என்ற வார்த்தை தான் அவளுக்கு அத்துணை கொதிப்பு கொடுத்திருந்தது!!

 

"என்னைப் பற்றி என்னை நினைத்துக் கொண்டான் அந்தக் காட்டான்? கலெக்டராக இருந்தால் இவன் மேலே போய் விழுந்து பழகுவதற்கு நாங்க இங்க ஏங்கிக்கிட்டு இருக்குமா என்ன? எப்படி அவன் சொல்லலாம்? அதுவும் என்னை பார்த்து? இந்த டாக்டர் மகதிய பார்த்து எப்படி சொல்லலாம்?" என்று தனக்குத்தானே கண்ணாடி முன் கேள்வி கேட்டுக்கொண்டவளுக்கு, அந்த விரல்களின் தடயம் தெரிய அதற்கு தான் இந்த இரவு நேர மேக்கப்!!

 

முதலில் தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டவள், "நாம ஏன் நம்ம கிட்டயே கேள்வி கேட்கிறோம்? இந்த கேள்வியை அவன் கிட்ட தானே கேட்கணும்?" என்று அவளுடைய பெத்த அறிவு வேலை செய்ய.. "கரெக்ட் அவன் கிட்ட தான் கேட்கணும்!!" என்றவள், கபோர்ட்டில் எக்ஸ்ட்ராக வைத்திருந்த தலையணையை எடுத்து கட்டி உருவம் போல் செய்தவள், அவன் மூஞ்சை எப்படி வரைவது என்று யோசித்து "நம்ம இஷ்டத்துக்கு வரைவோம்… எவன் கேட்பது நம்மை?" என்று தனது ஐ லைனரை எடுத்து அவளுக்கு தெரிந்த படி அவனது முகத்தை மிக மிக கோரமாக வரைந்து வைத்திருந்தாள்.

 

அதன் பின் அங்கே அவனுக்கு அவளுடைய கல்லூரி வைவாவில் கேட்டதை விட.. அதிக கேள்விகளை கேட்டு தொலைத்தெடுத்து.. அதற்கும் பதில் தராமல் அமைதியாக இருக்கும் அந்த காட்டானுக்கு சில பல ஊசிகளை குத்தி, அதிலும் அமைதியாக இருந்தவனை கண்டு கொதித்து எழுந்து, கடைசியாக சர்ஜிக்கல் கத்தியால் ஆங்காங்கே குத்து கிழித்தாள்!!

 

தன் ஆத்திரம் தீரும் வரை குத்தி கிழித்தவள்… கடைசியாக முன்னால் விழுந்த முன்னுச்சி முடியை இல்லை குவித்து ஊதி தள்ளி பார்க்க… பொம்மை கலெக்டர் டார்டாராக கிடந்தான்.

 

"அய்யய்யோ.. ஒரு டாக்டர கொலைகாரி ஆக்கிட்டானே இந்த காட்டான் கலெக்டர்…!!" என்று அந்த சர்ஜிக்கல் கத்தியை திரும்பவும் அந்த தலையணை பொம்மைலையே குத்தி வைத்து விட்டாள்.

 

அதன் பின் தான் ஓரளவு சாந்தி அடைந்தாள். எப்பொழுது அவனை நேரில் காண்கிறோமோ இந்த கேள்வியை அவனைக் கேட்டே ஆக வேண்டும் என்று சங்கல்பம் செய்து விட்டே உறக்கம் கொண்டாள்!!

 

முதல் நாள் ராமஜெயம் அவ்வளவு எடுத்து சொன்னதாலும் அவன் மனது இடித்து உரைத்ததாலும் அன்று அவளிடம் மன்னிப்பு கேட்க என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கினான் கலெக்டர்.

 

அதுவும் வெளிநோயாளிகளை எல்லாம் பார்த்து முடிந்து டாக்டர் கிட்ட பேசணும் என்று இவன் நேரடியாகவே பேச.. அதுவும் கலெக்டர் பேசுகிறேன் என்றதும் "அந்த ரிஷப்ஸனிஸ்ட் இருங்க சார் மேடம் கிட்ட கேட்டு சொல்றேன்" என்று பதட்டமாகி, மகதியை தொடர்பு கொண்டு கேட்க..

 

என்ன டா ஆடு தானா வந்து பிரியாணி போடுனு சொல்லுது? வா.. வா… கலெக்டரே.. ஐ அம் வெயிட்டிங்!! என்று குதூகலித்தவள், "ஆஃபட்டர்நூன் இரண்டு மணிக்கு மேல வரச்சொல்லுங்க!!" என்று அதிகாரமாக ஆணையிட்டாள் மாவட்ட ஆட்சியருக்கே...

 

அவனும் வருவதாக சொல்லி வைத்து விட்டான்..‌ 

 

இன்று அவனை விடக்கூடாது!! எப்படியும் இன்று அவனாகவே தொடுவது போல் செய்ய வேண்டும்!! என்ன செய்வது? எப்படி செய்வது? என்று அவள் டாக்டர் மூளையை எவ்வளவு யோசித்தும் ஒரு ஐடியா கூட வரவில்லை!! உடனே கூகுள் ஆண்டவரை சரணடைந்து சில பல தமிழ் படங்களை அவள் பார்க்க…

 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவள் பார்த்த காட்சிகள் அனைத்திலும் ஒரே மாதிரி சீனே வந்திருக்க... "அட என்னங்கடா… எல்லா சீனுலையும் வழுக்கி இல்ல விழப்போகிற ஹீரோயினை ஹூரோ டான்னு வந்து காப்பாத்துற மாதிரியே கொடுத்தறுக்கானுங்களே!! 

நாம ஹீரோஸ் எல்லாம் இதுக்காவே வெயிட் பண்ணிட்டு இருப்பானுங்களோ? வேற வேலையே இல்லையா? நாமும் இதை ட்ரை செய்வோமா?" என்று யோசித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் அந்த ஹீரோயின் வழுக்கி விழும் சீனையே கண்கள் சிமிட்டாமல் பார்த்தாள் டாக்டர்!! 

 

ஹீரோயின் விழ... எங்கிருந்தோ வந்த முரட்டுக்கை ஒன்று ஹீரோயின் இடுப்பை வளைத்து பிடிப்பது போலவோ அல்லது இருவரும் சேர்ந்தே விழுவது போலவோ இருந்தது. ஆனால் அப்படி அணைத்து விழுதலின் முடிவில் இதழ்களோடு இதழ்கள் சங்கமமாகி இருக்க… 

 

"விழுந்தா இடுப்பை பிடிக்கறது கூட ஒரு நியாயம் இருக்கு டா!! அது எப்படி டா லிப்பும் லிப்பும் லிப்பாலஜி படிக்க போகும்?" என்ற தீவிர சிந்தனைகள் இல்லை இல்லை ஆராய்ச்சியில் நம் மருத்துவர்!!

 

"எதுவா இருந்தாலும் இன்னைக்கு கலெக்டர் வரட்டும்... அவரை வைத்து டெஸ்ட் பண்ணி பார்த்து விட வேண்டியது தான்!!" என்று கலெக்டரை சோதனை எலியாக்கிட முடிவு செய்தாள் மகதி!!

 

அவன் சோதனை எலியா? இல்லை சூரப்புலியா? என்று இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

 

"டாக்டர் மாதிரியா இருக்கா? சரியான சில்வண்டு!!" என்று நினைத்தாலும், தான் அறைந்ததும் தவறு.. அதுவும் இல்லாமல் இப்பொழுது மகளின் பிரச்சினையை தீர்ப்பது தான் முக்கியம் என்று அனைத்தையும் யோசித்து இரண்டு மணிக்கு மேல் புறப்பட்டான். அஃபிசியலாக பயன்படுத்தும் வண்டியை விடுத்து தனியாக கேப் வரைவழைத்து சென்றான்!!

 

ரெண்டு மணிக்குள் எல்லாரையும் பார்த்து முடித்திருந்தாள் மகதி. இன்று சற்று பதட்டத்தோடு ஒருவித சுறுசுறுப்போடு அனைத்து குழந்தைகளையும் பார்க்க…

"என்ன டார்லிங் எப்போதையும் விட நீங்க இன்னைக்கு ரொம்ப எனர்ஜிடிக்கா இருக்கீங்க?" என்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை கேட்க..

 

"அப்படியா இருக்கேன்?" என்று அக்குழந்தையிடமே கேட்டவள் "நீங்களும் என்னை மாதிரி இருக்கணும் சரியா?" என்று வாய்க்கு வந்ததை கூறி சமாளித்து அனுப்பி வைத்தாள். 

 

'எப்பா அப்படி அப்பட்டமாக தெரியுது? நான் அவருக்காக வெயிட் பண்றது? நண்டு சிண்டு கூட நம்மள கரெக்டா கண்டு பிடிக்குதே? மகதி பர்பாமென்ஸ் பத்தல.. பத்தல.. பீ கரெக்ட்!' என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அவளுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.

 

 சில சமயம் மதியம் வீட்டிற்கு செல்வதும் உண்டு. இங்கேயே உணவை முடிப்பதும் உண்டு.

ஏனோ இன்று வீட்டிற்கு செல்லவும் தோன்றவில்லை, உணவு உண்ணவும் பிடிக்கவில்லை. ஒரு வித பதட்டம்!!

 

தான் செய்வது சரியா? தவறா? என்று பெரும் குழப்பம்!! இந்நாள் வரை பெரிதாக ஆண்களின் மேல் எந்தவிதோ அட்ராக்ஷன் அவளுக்கு இருந்தது கிடையாது. பள்ளி கல்லூரி என இவள் கடந்து வந்த அத்தனை பேரிலும் இவளுக்கு ப்ரபோஸ் செய்தவர்களும் உண்டு உருகி பின்னாடி அலைந்தவர்களும் உண்டு!!

 

அனைவரையும் ஒரு எல்லைக்குள்ளேயே வைத்து, அதற்கு மேல் அவர்களின் நினைப்பு தன்னை பாதிக்காதவாறு கடந்து வந்தவள், இன்று ஏனோ கலெக்டரின் அந்த பேச்சு மட்டும் காதுக்குள்ளையே ஒலித்துக் கொண்டிருக்கிறது இடைவிடாமல்.. இம்சையாய்!!

 

"எப்படி அவரை டச் பண்ண வைக்கிறது?" என்றவாறு யோசித்து கொண்டு இருக்க.. 'எப்படியும் உள்ளே வந்து அவன் பேசுவான். அதற்கு முன் அவனிடம் நாம் நம் வேலையை காட்டி இருக்க வேண்டும்' என்று யோசித்தவள்.. கதவை திறந்தவுடன் அவன் வழுக்கி விழுற மாதிரி செய்து, அருகில் இருக்கும் கபோர்ட்டில் இவள் ஏதோ பைல் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அவன் வழுக்கி இவளை நோக்கி தான் விழ வேண்டும். 

 

"அதுபோதுமே... அது போதுமே!! அவன் என்னை தொட வேண்டும். நான் திரும்பி அவன் சொன்ன வார்த்தைகளை நறுக்கு நறுக்கு என்று அவனையை திருப்பி கேட்க வேண்டும்!!" என்று சபதம் எடுத்தவள், அதன் போலவே மேட்டுக்கு அடியில் சில பல குட்டி குட்டி மணிகளை போட்டு வைத்தாள்.

ரிசப்ஷனுக்கு போன் செய்து யாரையும் தன் அறைக்குள் வர விட வேண்டாம் என்றும் கலெக்டர் வந்தால் நேரடியாக அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டாள்.

 

"அப்பாடி பிளான் சக்சஸ்!! யாரும் வர மாட்டாங்க.. கரெக்டா அவர் வரும் நேரத்தை கணக்கிட்டு நாம போய் அந்த கபோர்டு பக்கம் நிக்க வேண்டும்…" என்று எல்லாம் பக்காவாக தான் இருந்தது முதலில்!!

 

அது போல் சரியாக இரண்டு மணிக்கெல்லாம் ருத்ரன் வந்துவிட்டான்‌. கீழே ரிசப்ஷன் இடம் அவன் நெருங்கி வரவுமே அந்த பெண் "சார்... டாக்டர் மேடம் உங்களுக்காக மேல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க போலாம் சார்" என்று அவள் பவ்யமாக கூற, மெல்ல தலை ஆட்டலுடன் தனது கூலரை இம்முறை கையில் சுழற்றிக்கொண்டே லிப்ட்டுக்குள் நுழைந்தான்.

 

இருவரும் இரு வேறு மன நிலையில்!!

 

இதுவரை யாருக்குமே இப்படி சட்டென்று சாரி சொல்லாதவன் என்று இறங்கி வந்து சாரி சொல்ல போகிறோமே என்று ஒரு சிறு குறுகுறுப்பில் ருத்ரன்!!

 

'நீ எல்லாம் ஒரு டாக்டரா? இதெல்லாம் உனக்கு தேவையா? ஏதாவது தப்பா ஆக போகுதுடி!' என்று உள்ளுக்குள் பயந்தாலும், அது எப்படி அவர் கலெக்டராக இருக்கலாம்.. பெரிய பதவில இருக்கலாம்.. அதுக்காக என்னை இப்படி சீப்பா சொல்லலாமா? இல்லை என்று அவனுக்கு நிரூபித்து ஆக வேண்டும் என்ற பதட்டத்தில் மகதி ஸ்ரீ!!

 

 

இவன் லிஃப்டுக்குள் ஏறியதுமே ரிசப்ஷன் பெண் மகதிக்கு போன் செய்து "டாக்டர் கலெக்டர் சார் வந்துட்டாங்க.. உங்கள பாக்க தான் வந்துகிட்டு இருக்காங்க" என்று உரைத்து விட, அவளின் பதட்டம் இன்னும் கூட... 

 

"ரிலாக்ஸ்!! ரிலாக்ஸ்!!" என்று தனக்கு தானே அத்தனை முறை கூறி, தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவளின் உதடுகளுக்கு மேல் அத்தனை வேர்வை பூக்கள்!! சட்டென்று ஷாலை எடுத்து துடைக்கும் முன் அவன் வந்து விட்டால் என்று வேகவேகமாக இவள் பிளான் செய்தது போல கதவுக்கு சற்று தள்ளி இருக்கும் கபோர்டில் ஏதோ புக்கு எடுத்து பார்ப்பது போல புக்கை எடுத்தவள், மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டாள். 

 

முதல் முறையாக செய்யும் இம்மாதிரியான குறும்பு.. குறும்பு என்பதை விட தவறு என்றே சொல்லலாம். அதனால் சற்று அலைக்கலைந்தது அவளது மனம்!!

 

டிக் டிக் என்று கடிகார ஓசையும்.. அவளது லேப்டாப் ஓசையுமே பெரும் சத்தத்தோடு அவளது காதுகளில் ஒலிக்க.. ஷூ சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கவனித்தவள்,

 

"மக்கு.. மக்கு.. நேரான பாத்தீனா அவன் கண்டுபிடித்துவிட மாட்டானா? திரும்பி நில்லு!!" என்று சட்டென்று திரும்பி அவள் நின்று புக்கை விரித்து வைத்தது போல இருந்தாலும், அதில் ஒரு வார்த்தை கூட அவரது கண்களிலும் கருத்திலும் படவில்லை!!

 

அதே நேரம்… கதவைத் திறந்தவன் உள்ளே அடி எடுத்து வைக்காமல் முதலில் பார்க்க.. அங்கே கபோர்டு ஓரம் நின்றிருந்த மகதியை பார்த்தவன், ஒரு பெருமூச்சு இழுத்துவிட்டு "ஹலோ டாக்டர்.." என்ற படி மேட்டில் கால் எடுத்து வைத்தது தான் தாமதம்… சர் என்று வழிக்கியது அந்த மேட்!!

 

அதேசமயம் அவனது ஹலோ டாக்டரில் வந்துட்டானா என்று திரும்பிய மகதி முன்னால் தட்டு தடுமாறி நின்றவன், அவளை பிடிமானத்திற்காக பிடிக்க.. அவன் பிடிப்பான்.. அதற்குப் பின் கேள்விகள் கேட்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தவளுக்கு அத்தனையும் அந்த நொடி மறக்க.. "ஐயோ பார்த்து கலெக்டரே…!!" என்றாள் பதட்டத்தோடு தன்னை அறியாமல்…

 

"சாரி.." தடுமாறியவனின் இதழ்கள் பிளந்த வாயை திறந்த படி நின்றியிருந்த மகதியின் தேன் சிந்தும் இதழில் தஞ்சம் அடைந்தது. இதழுக்குள் இதழ்… ஆண் ஸ்பரிசம் இதுவரை உணர்ந்திராத அவளின் ஆரஞ்சு சுளை இதழ்கள் இப்போது வன் இதழ்களை உணர... 

 

இதுவரை இல்லாத புது உணர்வோடு விடுபட மனமில்லாமல் சிக்குண்டு இருந்தாள் மகதி!!

இருவரின் சுவாசத்தின் வாசம் பழகிய ஸ்பரிசத்தின் மின்னலாய்... இதழ்கள் வழி உயிரை உயிரோடு கோர்ப்பதாய்!!

 

மகதி தான் புரியாத உறவில்.. இனம் புரியாத உணர்வில் சிக்குண்டு கிடந்தது. அடுத்த நிமிடமே சுதாரித்த ருத்ரன் அவளை விட்டு விலகி நின்றவன், ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு "எப்படி இப்படி வழுக்க முடியும்?" என்று யோசித்தவனுக்கு, மேட்டில் கால் வைத்ததும்தான் என்ற நினைவு வர. அருகே திரும்பிப் பார்க்க அந்த மேட்டுடன் அவனோடு பயணித்த சிறிது தொலைவில் நின்றுவிட்ட அந்த மணிகள் எல்லாம் கண்ணில் பட திரும்பி உக்கிரமாக முறைத்தான் பெண்ணவளை!

 

அவ்வளவுதான்… ஏற்கனவே நிதானம் என்பது பிரதானம் இல்லை அவனிடம்!! இப்பொழுது இந்த செயலை கண்டவனுக்கு நரம்புகள் எல்லாம் புடைக்க அவ்வளவு கோபம்!!

 

நிதானம் இழந்தவன் சட்டென பாய்ந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தன் கைகளால் அவளது இடையை வளைத்து இறுக்கிக் கொண்டான்.

 

"எதுக்குடி இப்படி பண்ணுன? ஏன்‌ பண்ணுன? நீ ஏன் பண்ணுனேன்னு நான் சொல்லவா? இதுக்கு தானே?" என்று உதடுகளில் இருந்து வார்த்தைகளை கடித்து துப்பியவன், அவளை நெருக்கமாக நெருங்க...

 

அவன் என்ன செய்யப் போகிறான் என உணர்ந்தவள் அவன் அணைப்பைத் தவிர்க்க முயற்சி எடுக்கும் முன் அவள் அவளது சற்றே தடித்த கீழுதட்டைக் கவ்வியிருந்தான். சர்ரென இழுத்து அவளை சுதாரிக்க விடாமல் உறிஞ்சத் தொடங்கினான். 

 

"இதைத்தானே எதிர்பார்த்து இதை செய்தே

… இந்தா வாங்கிக் கொள்!!" என்றவன் மீண்டும் அவளது இதழ்களுக்கு புதைத்தான் அவனது இதழ்களை..

 

புதைத்தது இதழ்களை மட்டுமா? அவன் இதயத்தையுமா? 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top