Share:
Notifications
Clear all

மோகங்களில் 13

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

மோகங்களில்… 13

தூக்கம் வருவதாக இல்லை அனுவிற்கு. வயிற்றில் இரவு சாப்பிட்டதும் செரித்திருக்க.. உணவு வேண்டும் என்று மெல்ல உதைக்கத் தொடங்கினர் இருவரும்!!

சூல் கொண்ட மாதுக்கோ இன்னும் முழுதாக தாய்மை உணர்வு வரவில்லை பிள்ளைகளிடம். அவர்களை பத்திரமாக.. பாதுகாப்பாக.. வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கடமை உணர்வு மட்டுமே!!

சின்ன பெண் தானே? சொல்லி தர சொந்தங்களும் இல்லை!! பெற்றவர்களும் இல்லை!! தன்னைத்தானே செதுக்கி கொண்டு சிற்பி போன்றவள் அவள்! 

இரவில் தூக்கம் பாதியில் கலைந்ததில் அவளுக்கு ரொம்ப அலுப்பாக இருந்தது. எழுந்து சென்று பால் கலந்த குடிக்க வேண்டுமே என்று சோம்பல் கொண்டாள். இதே சாவித்ரி அம்மா இருந்தால் ஃபோன் செய்ததும் அறையில் இருந்து பதறி எழுந்து வந்து இவளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு மறுபடியும் தூங்க செல்லுவார்.

நிறைய முறை அவளும் அவளது அறையிலேயே படுத்து தூங்குங்கள் என்று கூறி பார்த்து விட்டாள். ஆனால் அவர் சம்மதிப்பதில்லை. இவளும் விட்டுவிடுவாள். 

“இப்பொ பசிக்குதே என்ன‌ செய்ய?” வயிற்றில் மெல்ல தடவி படி அமர்ந்திருந்தவள், “பிள்ளைகளா பசிக்குதாடா? ஏன்டா இப்படி பண்றீங்க? உங்களுக்கு நடு இராத்திரியில தான் பசி வரணுமாடா? மீ பாவம் டா” என்று சிணுங்கியப்படி கதவை திறந்து பார்க்க ஒரே கும் இருட்டு வெளியே. 

“ஹேய்.. பிள்ளைகளா இந்த கும்மிருட்டுல போய் அம்மா கஷ்டப்படட்டுமாடா?” என்று கேட்க.. “போ..!” என்று சொல்வது போல மீண்டும் ஒரு உதை அவள் வயிற்றில்!

“ரெண்டு உதை வரல.. ஒரு உதை தான் வந்திருக்கு. அப்போ.. ஒருத்தன் தான் அடாவடியா இருக்கான்! இன்னொருத்தன் சாது போல.. யாராட்டாம் இருப்பான்? கண்டிப்பா அவனுங்க அப்பனாட்டம் தான் இருப்பான்! யோவ்.. துருவா பிள்ளைய கூட உன் போல கொடுத்து இருக்கயா” என்று துருவை திட்டியப்படி வெளியில் வந்து நிற்க.. அங்கே ஒரு ட்ரேயில் ப்ளாஸ்க் இருந்தது. இரண்டு கப்புகளோடு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் இருந்தது.

“தேவனே! என்னை மன்னிப்பீராக! நான் துருவை திட்டியதை மன்னிப்பீராக!!” என்று நடுராத்திரியிலும் பாவ மன்னிப்பை கேட்டவள் அவசரமாக ட்ரேயை எடுத்துக் கொண்டு சென்று, அந்த பிஸ்கட்டையும் பாலில் தொட்டு தின்று நொறுக்கிவிட்டு பாளையம் குடித்துவிட்ட பிறகு தான் வயிற்றில் உதைப்பது நின்று இருக்க.. “அட! பார்றா உநைக்கிறத நிப்பாட்டிடான்..! சோத்துக்கு பிறந்தவனே!” என்று திட்டியவள் அறியவில்லை, இதுவரை அவளை படுத்திய குழந்தை அப்படியே அவளின் வாரிசு என்று! அதன் பிறகு போன உயிர் திரும்பி வந்தது. உள்ளே சென்ற இளம் சூடான பால் ஆசுவாசத்தை கொடுக்க, தூக்கம் வர எங்கே படுக்கையில் படுத்தால் இதுவும் வெளிவந்து விடுமோ என்று பயந்து அங்கிருந்த நீள் இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள் கால்களை நீட்டி…

கண்கள் என்னவோ எதிரில் இருந்த ஜன்னல் வழியே ஊடுருவி பார்க்க‌. அங்கே மெல்லிய வெளிச்சத்தில் தோட்டம் தெரிந்தது.

அந்தத் தோட்டத்தில் தான் மாலை இருவரும் சிற்றுண்டி சாப்பிடுவதும்.. டீ குடிப்பதும்!! அதற்கு பின்னே தான் அவளை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வான் துருவ்.

ஏதேதோ சொல்லுவாள் அவன்‌ கேட்டு கொள்வான். சில சமயம் தொழில்கள் பற்றி அவன் பேசும்போது ஆர்வமாய் கேட்டுக்கொள்வாள்‌ இப்படியாக அன்றைக்கு தன் தொழிலை பற்றி இவன் பேசிக்கொண்டிருக்க.. கண்கள் மின்ன ஆர்வத்தோடு கேட்டவளை கண்டவன் “ஆமா.. என்கிட்ட இருந்து பத்து இலட்சத்தை வாங்கி என்ன செய்ய போற?” என்று கேட்டான்.

“சார்.. சார்.. அது 10 லட்சம் இல்ல. ஏற்கனவே அம்பதாயிரம் செல்வி அக்கா பொண்ணுக்கு கொடுத்தாச்சு.. ஒரு லட்சம் சாவித்ரி அம்மா கிட்ட கொடுக்க சொல்லியாச்சு. சோ.. இப்ப மீதி என் கணக்குல எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தான் இருக்கும்” என்றதும் அவளை வியப்போடு பார்த்தான். 

அவன் பார்த்த பெண்களில் இப்படி தனக்கு வரும் பணத்தை தூக்கி கொடுப்பது அரிது என்றால்.. அதைவிடஇவ்வளவு நெருங்கி பழகும் தன்னிடம் அதிக உரிமையாக பணம் அவள் கேட்கவே இல்லை!! அது ஒரு நன் மதிப்பை ஏற்படுத்தியது அனுவின் மீது.

மெல்லிய புன்னகையோடு “சரி ஓகே.. எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் உன்னோட பணம் என்கிட்டே இருக்கு. மத்த விஷயம் சொல்லு. நீ என்ன தொழில் செய்ய போற? எதுல உனக்கு இன்ட்ரஸ்ட்? என்ன ப்ளான் வைச்சிருக்க?” என்று ஒரு தொழிலதிபனாக வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டே வந்தான் துருவ். அவளோ அவன் கேட்ட கேள்விக்கு ஒன்றுக்கு கூட பதில் தெரியாமல் விழித்தாள்.

“அடிப்பாவி நீ இன்னும் என்ன தொழில் என்று யோசிக்காமல் தான் என்கிட்ட பணம் கேட்டியா? இப்படி வாடகை தாய்க்கு ஒத்துக்கிட்டியா?” என்ற நக்கல் தெறித்தது அவன்‌ குரலில்.

அதில் அவளது தன்மானம் சீண்டப்பட.. சிலிர்த்து எழுந்தாள் சிங்க பெண்ணாய்?!

“அப்படி எல்லாம் நீங்க என்ன பத்தி தப்பா நினைக்காதீங்க! நான் தொழில் பண்ணி பெரிய தொழிலதிபியா ஆகணும்.. என்ன பிசினஸ் பண்ணனும்னு எல்லாம் அப்பவே யோசிச்சு வச்சுட்டேன்! இப்ப மக்கள் ஜாஸ்தி யூஸ் பண்றது என்ன?” என்று கேட்டவள், அவன் யோசிக்க.‌. “சோப்பு..!” என்றதும் அவனோ “எதே??” என்று பார்த்தான் அவளை.

“ஆமாம் சார்! ஏழை பாலையோ.. பெரிய பணக்காரனோ எவனோ ஆனா குளிக்கிறான்ல! குளிக்கிறது கண்டிப்பா சோப்பு தேவைப்படுமா இல்லையா?” என்றதும், அவளின் அறிவை மெச்சியவன் “சரிதான்..” என்று தலையாட்டிவிட்டு மேலே சொல் என்பது போல சைகை காட்டினான்.

“அதனால சோப்புலயே வெரைட்டி வெரைட்டியா செய்யலாம்னு இருக்கேன்!”

“வெறும் சோப்பு மட்டும் தானா? இல்லை..?” என்று அவன் இழுக்க..

“இல்லை.. இல்லை.. ஒரு பிசினஸ் மட்டும் பார்த்தா எப்படி பெரிய தொழிலதிபியாக ஆவுறது? சோப்போட சேர்த்து சின்ன சின்னதாக மில்லட்ஸ் அரைத்து விப்பேன்.. அப்புறம் மசாலா பொடிஸ்…” என்று அவள் நீள நீளமாய் சொல்லிக் கொண்டே போக கடுப்பாகி விட்டான் துருவ்.

“அந்த பினாயில்.. அதெல்லாம் விட்டுட்ட…” என்று கடுப்பில் கத்த.. அதுவரை தன் கனவுகளை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று கண்கள் மின்ன சொல்லிக் கொண்டிருந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் வெறித்து நிற்க..

அதனை கண்டவன் “நான் உன்ன பிசினஸ் பண்ண சொன்னா கேட்டேன்! நீ குடிசைத் தொழில் பற்றி பேசுற?” என்றான் அவளை ஒரு மாதிரியாக பார்த்து..

அவள் சிறுவயதில் இருந்து தன்னை சுற்றி உள்ளவர்களை பார்த்து வளர்ந்தவள், அனுபவ அறிவு மட்டுமே!! அவளுக்கு அறிவுரை கூற.. இப்படி செய் அப்படி செய் இதனால் இந்த நிலைமை வரலாம் என்று எடுத்துக் கூறி வழிநடத்த ஆட்கள் யாரும் இல்லாதவள். 

அதனால் அவளை சுற்றி இருந்தவர்கள் எதை அதிகம் பயன்படுத்துகிறார்கள் அதை வைத்து தொழில் செய்யலாம் என்று கணக்கு போட்டாள். அவளை சொல்லியும் தப்பில்லை தானே? தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்ன தேவையோ.. அந்த தேவையை கொடுத்து தன் தொழிலை வளர்க்க முயன்றாள்.

அனுவின் கண்களின் பார்வையோ ஒரு குறுகிய வட்டத்தில் தன்னை சுற்றியுள்ளவர்களை மட்டுமே இருக்க.. 

துருவோ ஒரு வளர்ந்த தொழிலதிபன்! அவனது கண் பார்வையோ விசாலமாக உலகத்தையே ஒரு கிராமமாக பார்த்து. அதற்கு தக்கப்படி தொழில் செய்பவன் அல்லவா?

“ரொம்ப என்னை திட்டாதீங்க சார்.. இதெல்லாம் தான் என்ன சுத்தி இருந்த எங்க ஆட்கள் ஜாஸ்தி யூஸ் பண்றாங்க. திரும்ப நா அங்க தானே போகணும்! அதனால இதை இதெல்லாம் செய்யலாம்னு நான் யோசிச்சு வச்சிருந்தேன்” என்ற ‘அவளின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டினால் என்ன?’ என்று தான் தோன்றியது துருவிற்கு.

ஏன் கொட்ட கூட கையை தூக்கி விட்டான். அவள் கண்களை சுருக்கி பாவமாய் பார்க்க.. கையை இறக்கியவன் “இவ்ளோ பெரிய பிசினஸ்மேன் இருக்கேனே..?” என்றதும், “யாரு?” என்று அவள் சுற்றி முற்றியும் பார்க்க.. சங்கடமாகி போனது நம் துருவுக்கு.

அவள் வேண்டும் என்றே தான் கேட்டாள். அவனை தொழில் காந்தம் என்று கோபத்தில் திட்டுவாள் தானே? தன்னை அவன் கேலிப்பேசியத்திற்கு திரும்ப அவனை பேசிவிட்டோம் என்று நினைப்பு அவளுக்கு!

அதை புரிந்தவன் இடவலமாக தலையாட்டி விட்டு “நீ சின்ன சின்னதா ஆரம்பிச்சேன இந்த ஜென்மத்துல தமிழ்நாட்டு மட்டுமல்ல சென்னை கூட உன்னை திரும்பி பார்க்காது. ஏன் உங்க ஏரியா மக்களே உன்னை திரும்பி பார்க்க மாட்டாங்க. எப்பவுமே நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாமே பெரிதாகவும்.. பெரிய அளவிலும் இருக்கணும்” என்றவன் அவனுக்கு தெரிந்த அவன் வாழ்வில் கடைபிடித்த.. கடைபிடித்து கொண்டு தொழில் வெற்றி பெற்ற சில குறிப்புகளை கூற..

அவளோ வாயைத் திறந்து பார்த்தாள். எல்லாம் கூறி முடிக்கவும் அவள் முன் சொடுக்கிட்டு “என்ன இப்படி ஏதோ பேய் அடிச்ச மாதிரி நின்னு பாக்குற?” என்று சிரிப்புடன் கேட்டான்.

“நீங்க சொன்னீங்க இல்ல.. விசாலப்பார்வை.. ஏகாந்த தொழிலதிகாரம்.. இன்னும் என்னென்னவோ.. அதுக்கு எல்லாம் நிறைய நிறைய பணம் வேணும் சார்! ஒன்னு அந்த மாதிரி தொழில் பண்ண பணத்தை என் பாட்டன் பூட்டான் அப்பன் எல்லாம் சம்பாதித்து வைத்து இருக்கணும்.. நாமளே அன்னாடகாட்சி அம்மா அப்பா இல்லாத அநாதை! அப்புறம் எப்படி பணம்? இல்லையா எவனாவது ஒரு பணக்காரனை கல்யாணம் பண்ணிட்டு இதெல்லாம் செய்யணும்! ஆனா கல்யாணம்னாலே எனக்கு என்னமோ பிடிக்கவே இல்லை. அப்புறம் எங்கிருந்து இதெல்லாம் சாத்தியம்? விடுங்க துருவ் சார்.. நீங்க உங்க லெவல யோசிக்கிறீங்க..” என்று அவனது உயரத்தை காட்டியவள் தன்னுடைய உயரத்தை சிறிதாக காட்டி “நான் என்ன அளவு யோசிக்கிறேன்” என்றாள்.

அவள் சொல்லியது அவனுக்கு புரிய.. “நீ ரிஸ்க் எடுக்க பயப்படுற?” என்றதும்.. 

“உண்மை சார்! ஒரு சின்ன தொழில் தொடங்கவே இப்ப எல்லாம் அஞ்சில் இருந்து பத்து லட்சம் தேவைப்படுது. அதுக்கு கொடுத்து உதவவே எனக்கு யாரும் இல்லை. இதோ அதனாலதான் நான் எப்படி.. இதற்கே என்ன பேச்சு பேசினார்களோ தெரியுமா?” என்று கண்கள் லேசாக கலங்க முகத்தை திருப்பி புறங்கையால் துடைத்துக் கொள்ள..

அவளை தோளோடு அனைத்துவன் “ஹேய் கேர்ள்.. என்னது நீ பெரிய சண்டைக்காரி.. ரோஷக்காரி அப்படினு நினைச்சேன்! நீ என்ன புசுக்குனு எல்லாத்தையும் இல்லன்னு சொல்லிட்ட அழுகுற..” துருவ் இலகுவாக பேச அவளும் சிரித்தாள்.

“முதல்ல இந்த அப்பளம் விற்கிறது மசால் பொடி தயாரிப்பது ஊதுபத்தி சோப்பு தயாரிப்பேன் பினாத்துறத விடு! உன் கிட்ட என்ன திறமை இருக்குனு யோசி! இன்னும் உனக்கு நாட்கள் இருக்கு அதற்கு பின் என்ன தொழில் தொடங்கணும் என்கிட்ட வந்து சொல்லு.. உனக்கு தேவையான எல்லா உதவியும் நான் செய்கிறேன்” என்றதும் அவள் முறைத்து பார்க்க..

“அம்மா தாயே! பரதேவத!! நான் சொன்னது பணத்தை இல்ல.. பணத்தை தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. நீ இங்க போய் யாரை பார்த்து தேடி அலைவ.. அந்த மாதிரி விஷயங்களை நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன். புரியுதா?” என்றதும் அப்பொழுதுதான் அவள் முகம் தெளிந்தது.

அவன் சொல்வதும் உண்மைதானே! வீட்டு அளவில் ஒரு தொழில் செய்தால் அதற்கு பெரிய ஒப்புதல் அனுமதி பத்திரம் வாங்க தேவையில்லை. கொஞ்சம் பெரிதாக ஆரம்பித்தால் அதற்கு வாங்க வேண்டும் தானே? என்று யோசித்தவள் அவனுக்கு ஒப்புதலாக தலை அசைத்தாள் அதற்கு பின்னே அவர்கள் இருவரும் வீடு திரும்பினர்.

அதையெல்லாம் யோசித்துக் கொண்டே தான் அந்த நீள் இறக்கையில் படுத்து இருந்தால் அனு.

தன்னிடம் துருவ் நடந்து கொள்ளும் முறை ஒரு சாதாரண பெண்ணின் மீது காட்டும் கரிசனை என்று அறிவுக்கு புரியத்தான் செய்கிறது. பெருமூச்சு விட்டாள் அனு. வறண்டிருக்கும் உதடுகளை நாவால் தடவி ஈரம் செய்து கொண்டாள். சில நாட்களாய் அவளைப் படுத்தி எடுக்கும் எண்ணங்களையும் உணர்ச்சித் தூண்டல்களையும் அதனால் இன்று கண்டு விழித்தெழுந்த கனவையும் ஒரு நொடி அவனிடம் சொல்லி விடலாம் என நினைத்தாள்.

ஆனால் சட்டென தன்னுணர்வு மீண்டு சொல்ல வேண்டாம் என தடுத்தது. அமைதியாக கண் மூடி படுத்திருந்தாள். 

அந்த உணர்வுகளை இதழ்களில் நெளியும் சிறு புன்னகையில் மறைத்தாள். 

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவள் மனது திக் திக்கென்று அடித்தது. மீண்டும் கதவு மூடும் சத்தம் கேட்க..

“யாரு இந்த நேரத்தில் என் அறையில்…” என்று யோசனையோடு

கண்ணை கொஞ்சமாய் திறந்து பார்த்தாள், துருவ் தான் உள்ளே வந்து கதவை சாற்றினான். வந்தவன் அவளை மெத்தையில் காணாமல் தேடி நீள் இருக்கையின் அருகில் அமர்ந்தான்.

இவன் ஏன் இப்போ இங்க வந்தான் என்று அணுவின் மனம் திக்கென்று ஆனது. அதிலும் அவள் கண்ட கனவு வேறு நேரம் கெட்ட நேரத்தில் வந்து கண்முன்னே உலா போக… அவளின் உடல் நடுங்கியது.. மூச்சு வேக வேகமாக வந்தது.. உடல் வேர்த்தது.. அவன் என்ன செய்கிறான்? என்ன செய்ய போகிறான்? என்கிற எதிர்பார்ப்பு எகிற, கொஞ்சமாய் லேசாய் கண் திறந்து பார்த்தாள். அவன் அவளின் அருகில் நின்று கொண்டு அவளை தான் பார்த்திருந்தான்.

சட்டென கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். நீள் இருக்கையில் அவள் அருகில் கையை ஊன்றிக்கொண்டு அவள் முகம் அருகில் வந்து அவளை பார்த்தான் துருவ்.

அவன் விடும் மூச்சு அவளின் முகத்தில் பட்டு சுவாசித்தில் கலந்தது. அவளோ பயத்தில் பதட்டத்தில் உடலை அசைக்காமல் அப்படியே படுத்திருந்தாள். அருகே நின்றிருந்தவனின் உடல் வாசம் அவளின் நாசியை நிறைத்தது!!

அது வேறு அவளின் இள மனதில் ஏதோ வித உணர்வுகளை தோற்றுவித்து மாயம் செய்தது!! அவளின் உணர்ச்சிகளை அது சீண்டியது!! அவனின் மூச்சுக்காற்று இப்போது அவள் முகத்தில் தீண்டியது!! தீயென தகித்தது அனுவிற்கு உள்ளே..

அப்படியே மூச்சை பிடித்து உள்ளிழுக்க.. அவனின் ஆண்மையின் வாசம்.. “அப்ப்பா இதை நுகர வேண்டும்.. சுவாச்த்தில் நிரப்ப வேண்டும்.. சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்று தோன்றியது அவளின் சலன மனதின் எண்ணங்கள்!!

மீண்டும் அவனின் மூச்சுக்காற்று அவளின் சுவாசத்தின் அருகே.. திரும்ப திரும்ப அவர் வாசனையை உள்ளிழுத்து முகர்ந்தாள். வேகமாக மூச்சு விட்டு, அதிகமாக அவனின் வாசத்தோடு மூச்சு உள்ளிழுத்தாள். 

“ஏய் ப்ராடு.. முழிச்சிட்டு தானே இருக்க! பின் ஏன் தூங்குற மாதிரி நடிக்கிற?” என்று அவன் சிரிக்க.. சட்டென்று கண்ணை திறந்து அவள் எழ முயல குனிந்து இருந்தவனின் இதழ்களோடு அவள் இதழ்கள் கோர்த்தது!! 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top